வல்லவன் 38

கவின்- சுவேரா திருமணம் நடந்து முடிந்தது.

முதலிரவு அறையில் கவின் சுவேராவிற்காக காத்திருந்தான். அவள் அவர்களின் பாரம்பரிய உடையில் தயாராகி வந்திருந்தாள். கவினிடம் வந்து அமர்ந்து, முக்காடை எடுக்க சொல்லி பணிவுடன் அவனிடம் பேசினாள். அவள் அமைதியில் அவனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

எடுங்க கவின்..

அவன் விலக்கி முகத்தை பார்த்து சிரித்தான்.

கவின்..

சரி..சரி..சிரிப்பதை நிறுத்தினான்.

எழுந்து அவன் காலில் பணிந்து வணங்கினாள் சுவேரா. சிரிப்பை உதட்டுக்குள் மறைத்து அவளை எழ வைத்தான்.

கவின் ரொம்ப சிரிக்காதீங்க. பாலை குடிங்க என்று நீட்டினாள்.

வாங்கி அவளை பார்த்து, என்ன பணிவு? என்ன பணிவு? நீ ரா தானா? கேட்டான்.

சுவேரா கண்ணை சுருக்கி அவனை முறைத்தாள்.

வா, உட்காரு..

அமர்ந்தாள்.

இருவரும் மௌனம் காத்தனர்.

அமைதியா இருக்க?

நான் ஆடையை மாத்திட்டு வரவா?

வேண்டாம்..வேண்டாம்..உனக்கு அழகா இருக்கு.

தேங்க்ஸ்..பல்லை காட்டினாள். அவன் உதட்டை மடித்து சிரிக்க, கவின் அவனை முறைத்து அடித்தாள். அவளை அவன் தன் பக்கம் இழுத்து தன்னுடன் இறுக்கிக் கொண்டான்.

அய்யோ, மூச்சு முட்டுது..

அவன் நகர்ந்து அவளை இமைக்காது பார்க்க, முதல் முறையாக கூச்சத்தை உணர்ந்தாள் சுவேரா.

எதுக்கு இப்படி பாக்குறீங்க? எனக்கு ஒரு மாதிரி இருக்கு முகத்தை தாழ்த்தினாள்.

வெட்கம் மட்டுமல்ல இந்த கூச்சம் கூட அழகாக இருக்கு என்று அவளுடன் படுக்கையில் விழுந்தான்.

அன்றிலிருந்து இருவரின் வாழ்வும் சண்டையுமாகவும், கொஞ்சலாகவும்..இடையிடையே அதிவதினி சுகுமாருடன் நேரமும் செலவழித்தான் கவின்.

விடிந்து விடியாத காலை நேரம்.

“அதி இன்னும் என்ன பண்ற? ஆரியன் சத்தம் கொடுக்க, ஆரு லாவண்யாவை தயார் செய்ய போனேன்ல்ல? நானும் தயாராக வேண்டாமா?

அதுக்காக இவ்வளவு நேரமா?

“அப்பா” பசங்களும் உத்தமசீலன், துருவினியும் வந்தனர்.

அனைவரும் மும்பையில் இருந்தனர். ஒரு வாரமாக ஆரியன் மும்பை, தமிழ்நாட்டிற்கு மாறி மாறி அலைந்து களைத்து விட்டான். கவின், சித்திரன் தவிர மற்ற அனைவரும் இங்கே தான் இருந்தனர்.

இன்று நம் ஆரவ்- லாவண்யா திருமணம். ஒரு வார சடங்குகளையும் சிறப்பாக நடத்தினார்கள். சாய், மனோகர் சார் அவர் மனைவி என்று அனைவரும் பிஸியாக இருந்தனர்.

ஆத்விக் ஆரவ்வுடன் திருமணத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தான். நேசன் கூட தன் குடும்பத்துடன் இதோ வந்து விட்டான்.

அதி, சீக்கிரம் வா. இன்னும் உள்ள என்ன தான் செய்ற? ஆரியன் சினமுடன் கேட்க, நான் வர மாட்டேன். நீங்க திட்டுறீங்க ஆரு. நீங்க மோசம் என்று அழுவது போல கூறினாள் அதியா.

அண்ணா, வழியை விடு. அதி கதவை திற. நான் உன்னை தயார் செய்கிறேன்.

யாரும் எனக்கு உதவ தேவையில்லை. நான் அப்பொழுதே தயாராகிட்டேன். ஆனால் வெளிய வர மாட்டேன்.

“தயாராகி எதுக்கு காக்க வச்சிட்டு இருக்க?” ஆரியன் கேட்க, “மெதுவா தான் பேசேன்டா” உத்தமசீலன் தன் மகனை அதட்டினார்.

அப்பா, அவளை வரச் சொல்லுங்க. பொண்ணும் மாப்பிள்ளையும் வந்திருவாங்க இவள் வருவதற்குள்..

பசங்க இருவரும் ஆரியனை முறைத்து பார்த்தனர்.

“எனக்காக எதுக்கு நீங்க காத்திருக்கணும்? போங்க ஆரு” அழுதாள் அதியா.

ஆத்தாடி, கிரையிங் குயின் ஆரம்பிச்சிட்டா. அண்ணா சும்மா தான் இரேன்.

“அதிம்மா, வெளிய வாங்க” உத்தமசீலன் அழைக்க, மாமா நான் சந்தோசமான விசயத்தை சொல்ல தான் ஆருவுக்காக வெயிட் பண்ணீட்டு இருந்தேன். அவர் என்னை திட்டுறார் மேலும் அழுதாள்.

“சாரி சொல்லுடா” உத்தமசீலன் ஆரியன் தலையில் அடிக்க, தாத்தா இந்த அடி அப்பாவுக்கு வலிக்காது பசங்க கூற, “எல்லாரும் அவள் பக்கம் தான? போங்க போங்க” ஆரியன் நகர, அதி வெளிய வா..துருவினி அழைக்க, அதியாவிடம் பதிலில்லை.

அதி..

மீண்டும் பதிலில்லை.

“அதி, ஏதாவது சொல்லு?” துருவினி கலவரத்துடன் கேட்க, ஆரியன் கதவருகே வந்து கதவை தட்டினான். அதியாவிடம் சத்தமில்லாமல் போக எல்லாருக்கும் பயம் சூழ்ந்து கொண்டது.

வேகமாக வெளியே ஓடிய ஆரியன் அவர்கள் இருந்த அறை சன்னல் இருக்கும் பின் பக்கம் சென்று பைப் செல்வதை பார்த்து அதில் ஏறினான். கட்டிடத்துடன் இணைக்கப்பட்டிருந்த திண்டில் ஏறி நின்று அறை சன்னலை தட்டினான். அப்பொழுதும் அதியா பேசாமல் இருக்க, அதி..அதி..அதி..கத்தினான்.

ஆட்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். புரியாமல் அவன் இருக்க, சுவேரா ஏறி அவனருகே வந்து மாமா கூப்பிட்டா வரலைன்னா அவள் வெளியே சென்றிருக்கணும் இல்லை அவளுக்கு ஏதாவது ஆகி இருக்கணும். ஏதாவது செய்து சீக்கிரம் திறங்க அவள் சொல்லிக் கொண்டிருக்க, கவினும் ஆத்விக்கும் சேர்ந்து கதவை குறைந்தது பத்து முறையாவது இடித்திருப்பர். பன்னிரண்டாவது இடியில் கதவு உடைந்து இருவரும் உள்ளே விழுந்தனர்.

ஆரியன் மேலிருந்து குதித்து வேகமாக அறைக்கு வந்தான். கவின் தண்ணீரை அதியா மீது தெளிக்க, அவள் விழித்தவுடன் ஆரியனை தான் பார்த்தாள்.

“என்னாச்சு அதி?” அவன் பதட்டமாக ஆத்விக்கிடம் இருந்து அவன் பக்கம் இழுக்க, அவள் படுக்கையை பார்த்தாள்.

“அங்க என்ன இருக்கு?” ஆரியன் கேட்க, கவின் படுக்கை அருகே சென்று அதியாவை விழிவிரித்து பார்த்தான்.

என்ன இருக்குடா? ஆத்விக் அருகே வந்து பார்த்தான். கிப்ட் பேப்பர்ஸ் நிறைய கிழித்து மலை போல் குவித்து வைத்திருந்தாள்.

“இந்த குப்பையை இங்க எதுக்கு போட்ருக்க? இதை பார்த்தா பயந்த?” ஆத்விக் கேட்க, உத்தமசீலன் அதை களைக்க கையை வைக்க சென்றார்.

“மாமா, தொடாதீங்க” அதியா அவரிடம் சொல்லி ஆரியனை பார்த்தாள்.

என்ன இருக்கும்மா? அவர் கேட்க, “மாமா ஆருவை பார்க்க சொல்லுங்க” என்றாள்.

நானே பார்க்கிறேன்ம்மா..

ஆரியன் அதியாவை பார்க்க, “எனக்கு ஒன்றுமில்லை. அவர் தான் மாமா பார்க்கணும்” என்று நகர்ந்து கொண்டாள்.

ஆரியன் அவளை பார்த்துக் கொண்டே அவள் போட்டு வைத்திருந்த பேப்பர்ஸை கலைத்தான். பேப்பருக்கு அடியில் ஒரு கிஃப்ட் பாக்ஸ் இருந்தது.

“அதி, என்ன இது?” ஆரியன் அதை கையில் எடுத்தான்.

அவள் ஏதும் சொல்லாமல் முகத்தை திருப்பினாள்.

புருவத்தை உயர்த்தி நெளித்தவன் அதை பிரிக்க எல்லாரும் எட்டிப் பார்த்தனர்.

அப்பாக்ஸில் குட்டி அழகான பாப்பா டாலும், உடன் பிரக்னன்சி கிட்டும் பாசிட்டிவ் அடையாளத்துடன் இருந்தது.

“அதிம்மா” ஆரியன் அழைக்க, அவள் கண்கலங்க அவனை பார்த்தாள்.

“ஹே, அதி கர்ப்பமா இருக்கா” சுவேரா கத்த, ஆரியன் அவளிடம் சென்று அவளை அணைத்துக் கொண்டான்.

“சாரி ஜில்லு. நான் இருந்த டென்சன்ல்ல நீயும் கதவை திறக்காமல் விளையாடுறன்னு..” என்று கண்ணீருடன் அவளை பார்த்தான்.

“பசங்க இருவரையும் பார்க்க, தர்சு, ஷனா பேபி உங்களுக்கு தம்பி பாப்பா வரப் போறாங்க” ஆத்விக் புன்னகையுடன் கூற, இருவர் முகமும் சோகமானது.

ஆரியன் அதியாவிடமிருந்து விலகி அவர்களை பார்த்தான்.

“எனக்கு தம்பி பாப்பா வேண்டாம்” தர்சன் ஆரியனை பார்த்து அழுது கொண்டே வெளியே ஓடினான்.

“தர்சா” உத்தமசீலன் அழைக்க, ஆரியன் அதியாவும் மற்றவர்களும் அவன் பின் சென்றனர்.

“அப்பா” ஆகர்ஷனா ஆரியனை கத்தி அழைத்தாள்.

எல்லாரும் நின்று அவளை பார்க்க, ஓடி வந்த ஆகர்ஷனா தர்சுவிடம் நான் பேசுகிறேன்.

“ஷனா உனக்கும் தம்பி பாப்பா வேண்டாமா?” ஆரியன் வருத்தமுடன் கேட்க, அவள் அவனை பார்த்து ஏதும் கூறாமல் தர்சனை நோக்கி ஓடி அவனை நிறுத்தினாள்.

தர்சு, எதுக்கு அழுற?

ஆகா, தம்பி பாப்பா வந்தால் அப்பா போல அம்மாவும் நம்முடன் விளையாட மாட்டாங்க. அவங்க பாப்பா கூட மட்டும் தான் பேசுவாங்க. நம்மை அவங்களுக்கு பிடிக்காமல் போயிடும்.

“இல்ல தர்சு, எனக்கு முதல்ல ஆகுவும் தர்சுவும் தான். பாப்பாவை என்னை விட நீங்க தான் பார்த்துக்கணும்” அதியா கண்ணீருடன் கூறினாள்.

அதிம்மா.. ஓடி வந்து அதியாவை அணைத்த தர்சன், “அதிம்மா பாப்பா வந்தால் என்னை மறந்துடுவீங்கல்ல? முதல்ல மாதிரி என்னோட விளையாட யாரும் இருக்க மாட்டாங்கல்ல?”

“நான் இருக்கேன் தர்சு” ஆகர்ஷனா சொல்ல, அம்மா, அப்பா எனக்கு வேணும்.

பாப்பாவை கொல்லணுமா தர்சு? அதியா கேட்க, அனைவரும் அவளை அதிர்ந்து பார்த்தனர். தர்சனும் இதை எதிர்பார்க்கலை.

அதிம்மா, கொல்ல வேண்டாம். ஆனால் பாப்பா வேண்டாம்..

பாப்பா உன்னோட அதிம்மா வயித்துல்ல இருக்கா. அவ போக மாட்டா. அவ போகணும்ன்னா அவளை கொல்லணும். கொல்லணுமா? அதியா கேட்க, ஆரியன் அவளை இழுத்து ஓங்கி அறைந்தான். கண்ணீருடன் அவள் ஆரியனை பார்த்தாள். அவள் வேதனை புரியாதவனா ஆரியன்? அவளை இழுத்து அணைத்தான்.

ஆரு தர்சன் பாப்பா வேண்டாம்ன்னு சொல்றான். வேற என்ன செய்றது?

“இருக்கு. நான் வேலையை விடுறேன்” ஆரியன் சொல்ல, “ஆரு…உங்களுக்கு ரொம்ப பிடித்த வேலைன்னு சொல்வீங்க?”

குடும்பத்தை விட எனக்கு எதுவும் முக்கியமில்லை..

“மாமா” ஆத்விக் அதிர, இதை கேட்ட ஆரியன் நண்பர்களும் கவினும் ஆரியனை திட்டினார்கள்.

பாப்பாவை கொல்ல வேண்டாம். பாப்பா வரட்டும். அதிம்மா முன் போல எங்களுடன் பேசணும், விளையாடணும்?

“தர்சு, நீ மாமா கூட வர்றீயா?” ஆத்விக் அவனை அழைக்க, எனக்கு அம்மா, அப்பா தான் வேணும். இப்ப தான் எனக்கு இருவரும் கிடைச்சாங்க. அத்த சொல்லுங்க. எனக்கு அம்மா அப்பா வேணும் துருவினியிடம் சென்று அவள் காலை கட்டிக் கொண்டு அழுதான் தர்சன்.

ம்ம்..உங்களையும் பாப்பாவை நான் சரிசமமாக தான் பார்ப்பேன் தர்சு கண்ணா. உங்களுடன் தான் இனி முழுவதும் நேரம் செலவழிக்க போறேன்.

“அதிக்குட்டி” சுகுமார் அழைக்க, மாமா அந்த கம்பெனி பொறுப்பு எதுவும் எனக்கு வேண்டாம். ஆரு அவர் வேலையை கவனிக்கட்டும். நான் வீட்டிலிருந்து பசங்களை பார்த்துக்கிறேன்..

“இல்ல அதி, நீ அந்த கம்பெனியை விட்டு வரக் கூடாது” என்றான் ஆரியன்.

ஆனால் ஆரு, இது எப்படி சாத்தியமாகும்?

“ஏன் சாத்தியமாகாது? நான் கம்பெனிக்கு தினமும் வருவேன்ல்லம்மா. உன்னை நான் பார்த்துக்கிறேன்” அதிவதினி சொல்ல, ஆத்விக் உடனே..நானும் வினுவும் உனக்கு குழந்தை பிறந்த பின் இங்கு வந்து தங்கிக்கிறோம். சீலன் மாமாவும் உன்னுடன் இருப்பார். வினுவும் வேலை முடிந்து வந்து பார்த்துப்பாள்.

குழந்தை பிறந்த பின் வது அத்தையும் சுகு மாமாவும் கம்பெனியை ஆறு மாதம் முழுப் பொறுப்பையும் எடுத்து பார்த்துக்கட்டும். அதன் பின் நடப்பதை பார்த்துக்கலாம். யாரும் வேலையை விட வேண்டாம். தர்சனுடனும் ஷனாவுடனும் நீ நேரம் செலவழிக்கலாம் ஆத்விக் கூறினான்.

“தர்சு, ஷனா, பாப்பாவுடன் விளையாட தயாரா இருக்கீங்களா?” சுவேரா கேட்க, அதிம்மா பாப்பாவுடன் சேர்ந்து விளையாடலாமா?

ம்ம்..விளையாடலாமே என்ற சுவேரா, லாவா மேரேஜ் நேரமே முடிஞ்சிரும் போல? சலித்துக் கொண்டாள்.

வாங்க வாங்க போகலாம் அனைவரும் உள்ளே செல்ல, வாயிலை பார்த்தவாறு அமர்ந்திருந்த ஆரவ் இவர்களை வருவதை புரியாமல் பார்த்தான்.

லாவண்யாவை துருவினியும் சுவேராவும் அழைத்து வந்தனர்.

உடலை மறைக்கும் நகைகளுடன் அழகான மும்பையின் பிரைடு ஆடையுடன் மேடையில் ஏறினாள் லாவண்யா. ஆரவ் அவளை கண்சிமிட்டாது பார்த்தான்.

திருமண சடங்குகள் நடந்து அவள் கழுத்தில் மங்கல நாணையிட்டு நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து லாவண்யாவை தன் மனைவியாக்கிக் கொண்டான் ஆரவ்.

ஆரவ் – லாவண்யா திருமணத்தின் மறுநாளே அனைவரும் கிளம்ப, கவினை சுற்றி சுற்றி வந்தாள் சுவேரா.

அறைக்குள் வந்த கவின், அவளிடம் புருவத்தை உயர்த்தினான்.

வந்து..வந்து..அவனை நெருங்கிய சுவேரா கவின் சட்டை பொத்தானை திருகி, நானும் இங்க இருந்துட்டு வரவா? கேட்டாள்.

நோ..நோ..கண்டிப்பாக முடியாது. நீ இல்லாமல் எனக்கு தூக்கம் வராது..

நான் என்ன உங்களுக்கு டெட்டியா? கட்டிபிடிச்சி தூங்க?

அதுக்கில்ல ரா. ஒரு மாதமாக நீ பக்கமிருந்துட்டு இப்ப இல்லைன்னா ஒரு மாதிரி இருக்குமே!

என்னை மிஸ் பண்ணுவேன்னு சொல்லுங்க..

அப்படிதான்னு வச்சுக்கோ. நீ எங்களோட வர்ற?

“ப்ளீஸ் கவின் சார்” அவன் கன்னத்தை பிடித்து இழுத்தாள்.

நோ வே ரா. கிளம்பு என்றான் கவின்.

ஐ ஹேட் யூ..

பட் ஐ லவ் யூ. நீ என்னோட வரலைன்னா உன்னோட அண்ணாவின் தனிமை உன்னால கெட்டு போயிரும்.

அவன் அப்படி நினைக்க மாட்டான்.

லூசு கிளம்பு கவின் திட்ட, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு தயாரானாள் சுவேரா. ஆரவ்- லாவண்யாவிற்கு தனிமை கொடுத்து அனைவரும் சென்றனர்.

“ஹலோ” டேவிட் அழைக்க, விரைந்து எடுத்த ஆரியன், “ஏதாவது கனவு வந்ததா? பொண்ணுங்க யாரு முகமும் தெரிந்ததா?” கேட்டான்.

சார், எதுவுமே தெரியல. அவினாஸ் இன்னும் கிடைக்கலை. நீங்க அவனை தேடிட்டு இருந்தீங்கல்ல? கிடைச்சானா?

இல்ல, நான் உன்னிடம் கேட்டால் நீ என்னிடம் கேக்குற?

சார், எல்லாத்தையும் மீடியாவிடம் சொல்லலாமா? அவனால யாருக்கும் ஏதும் ஆகிடுமோன்னு பயமா இருக்கு டேவிட் சொல்ல, அவசரப்படாத. அவனை கண்டுபிடிச்சிட்டு நானே உனக்கு கால் பண்றேன்.

ஓ.கே சார். பார்த்து..

ம்ம்..ஆரியன் அலைபேசியை வைத்து சிந்தித்தான்.

மாதங்கள் கடந்தது. ஆனாலும் அவினாஸ் யாரையும் கொலை செய்யவில்லை. எல்லாரும் புரியாமல் இருந்தனர்.

அதியாவிற்கு வளைகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

அதியா பட்டிலும் தாய்மையிலும் ஜொலிக்க, ஆண்மையின் ஜொலிப்போடு கம்பீரமாக பட்டுவேஷ்டி சட்டையில் ஆரியனும் வந்தான்.

இருவரும் ஜோடிப்பொருத்தம் அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது.

நல்லபடியாக வளைகாப்பு முடிய, அதியாவை அதிவதினி அவர் பொறுப்பில் தாய் வீட்டிற்காக அழைக்க, அவர் கையை தட்டி விட்டு அவள் கையை பிடித்தார் அதியா அம்மா பவானி.

“அம்மா” பயத்துடனும் பாசமுடன் அதியா அவரை அழைத்து ஆரியனை பார்க்க, ஆத்விக் தான் அழைத்து வந்திருந்தான். ஆத்விக்- துருவினிக்கும் திருமணமான நிலையில், அவர்கள் வீட்டில் தான் அவரும் வசித்து வந்தார்.

“என்னோட பொண்ணை நான் பார்த்துக்கலாம்ல்ல மாப்பிள்ள?” அவர் கேட்க, அதியா பயத்தில் அவர் கையை விட்டு ஆரியனிடம் வந்து, ஆரு நான் போக மாட்டேன். நான் நம்ம வீட்லயே இருந்துக்கிறேன்..

அதி, உங்க அம்மா முன் போல் இல்லை துருவினி சொல்ல, அவங்களுக்காக யாரும் என்னிடம் பேச வேண்டாம். ப்ளீஸ் ஆரு..நான் நம்ம வீட்ல இருக்கேன் இல்லை வது அத்தை வீட்ல இருக்கேன்.

அதியாவை தோளோடு அணைத்து அமரவைத்து, ஒன்பது மாதமாச்சுல்ல அதிம்மா. ஒரே மாதம் தான் ஓடிரும். அப்புறம் உன்னோட அம்மா வீட்ல நீ தனியா இருக்க மாட்ட. அத்துவும் துருவும் இருக்காங்க..

ஆமா அதி, மாலை ஐந்து மணிக்கே வீட்டுக்கு வந்துருவேன் துருவினி சொல்ல, இல்ல வினு..இவங்க எங்க பாப்பாவை ஏதாவது செஞ்சிட்டாங்கன்னா. பயமா இருக்கு..

பவானி கண்ணீருடன் அவளிடம் வந்து, என்னை மன்னிக்க மாட்டீயாம்மா? நம்ம ஆது மட்டும் இடையிடையே என்னை வந்து பார்க்கலைன்னா எனக்கு பைத்தியமே பிடிச்சிருக்கும். பின் தான் உன் நிலை புரிந்தது. எல்லாம் என் தவறு தான். என்னை மன்னிச்சிரும்ம்மா. என்னோட பேத்தியை நானே எப்படிம்மா கொல்வேன்?

அக்காவை அவன் கொன்றான்னு தெரிந்த பின்னும் சும்மா தான இருந்த? அதியா சினமுடன் கேட்டாள். அவர் ஆத்விக்கை பார்க்க, அவனுக்கும் அந்த ஆதங்கம் இருந்தது தானே! அமைதியாக இருந்தான்.

நான் அவனிடம் எப்படிம்மா சண்டை போடுறது?

எங்களிடம் நீ போடலையா? எங்களை கஷ்டப்படுத்தலையா?

ஆமாம்மா, பண்ணிட்டேன். மன்னிச்சிரு. நீங்க என் பசங்க. பேசவோ திட்டவோ எனக்கு உரிமை இருக்கு. ஆனால் அவன் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை மட்டுமல்ல..பெரிய இடத்து பையன். அவன் என்னையும் கொல்ல ஆள் அனுப்பி இருந்திருக்கான். என்னுடைய கார்ட்ஸ் இல்லைன்னா நான் இப்ப உயிரோட இருந்திருக்க மாட்டேன் அவர் அழுதார்.

அதியா அவர் கையை பிடிக்க, இனி ஏதாவது ஒரு தவறு செய்தால் கூட நீ என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கிறேன். மாப்பிள்ளையை போல எனக்கு வாய்ப்பு கொடும்மா..

அதியா ஆரியனை பார்க்க, அவன் கண்ணாலே பேசினான்.

ம்ம்..வாரேன். ஆனால் எனக்கு செல்வி அக்கா வேணும் என்றாள்.

வர வச்சிறலாம்மா..

ஆரு, நான் ஆகு, தர்சுவையும் அழைச்சிட்டு போறேன்.

அதி, அவங்க என்னோட இருக்கட்டும். நீ பத்திரமா இரு. போயிட்டு வா..பவானியை பார்த்து, மாலை மட்டும் நாங்க கொஞ்ச நேரம் வந்து அதியை பார்க்கலாம்ல்ல? கேட்டான்.

வாங்க மாப்பிள்ள..

அதியா அவள் அம்மாவுடன் ஆத்விக் வீட்டிற்கு சென்றாள். நாட்கள் செல்ல, கடைசி பரிசோதனைக்கு அவள் அம்மா, உத்தமசீலனுடன் ஹாஸ்பிட்டல் சென்றாள். மருத்துவரிடம் பரிசோதித்து அவளை அமர வைத்து விட்டு, இருவரும் பேசிக் கொண்டே மருந்து, மாத்திரையை வாங்கி வந்தனர். அதியா அங்கு இல்லை..

ஹாஸ்பிட்டல் முழுவதும் தேடியும் அவள் கிடைக்கவில்லை. இருவரும் ஆத்விக், ஆரியனை அழைத்து விசயத்தை சொல்ல, எல்லாரும் அவளை தேடினார்கள் கிடைக்கவில்லை. காலை சென்றவர்கள் மாலையாகியும் அவள் கிடைக்கவில்லை. சிசிடிவியிலும் இல்லை. ஆரியன் பைத்தியம் பிடித்தவன் போல கத்தினான்.

அதனை பார்த்த இரு விழிகளும் புன்னகைத்தன..

யாரென தெரியாத அலைபேசியிலிருந்து கால் வந்தது.

சார், உங்க மனைவி உயிருக்கு ஆபத்து..

“யார் நீங்க? அதி எங்க?” உடைந்த குரலில் ஆரியன் கேட்டான்.

அவன் பெயரை கேட்ட ஆரியன் அதிர்ந்து, அவினாஸ்..நீ..நீயா?

சார், நான் அவினாஸ் தான்..

ஏய், என்னோட அதியை என்ன செஞ்ச? அவன் கத்த, எல்லாரும் கலக்கமுடன் அவனை பார்த்தனர்.

கவின் அவசரமாக ஓடி வந்தான்.

அண்ணா..அவன்..அவன்..அந்த டேவிட்..டேவிட் தான் கொலைகாரன் சொல்லி முடிக்க, அதிர்ந்து கவினை பார்த்தான் ஆரியன்.

கவின், அவினாஸ்?

சார், நான் சையூவை காதலித்தேன். அவளது உண்மை பக்கம் தெரியவும் நான் அவளிடமிருந்து விலகினேன். பின் தான் அவள் உங்களிடம் வந்திருக்கா..

மகேந்தர் கொலை..

சார் கொலை செய்தது நானில்லை..அந்த டேவிட் தான்.

என்ன சொல்ற?

ஆமா சார், பிளாஸ்டிக் சர்ஜரியின் பின் நான் சையூவை பார்க்கவில்லை. அவளை மறக்கவும் இல்லை. அவள் உங்களையும் ஏமாத்துவான்னு நான் எண்ணவில்லை.

டேவிட் மனநல நோயாளி. அவன் ஒரு தலையாக சையூவை லவ் செய்திருக்கான். எங்களின் நெருக்கம் அவனுக்கு பிடிக்கலை..அதை விட மகேந்தருடன் அவள் நெருக்கமாக இருந்ததால் கொன்று விட்டான். நான் மகேந்தர் முகத்தை தான் சர்ஜரி செய்தேன். ஏன்னா..அவனுக்கென யாருமில்லை. அவனை தேடி..அதாவது அவன் முகத்தை பார்த்து அவன் என்று என்னிடம் யாரும் வர மாட்டாங்கன்னு தான் அவன் முகத்தை தேர்ந்தெடுத்தேன்.

டேவிட், மகேந்தர் இன்னும் சாகலை என்று எண்ணி என்னை மீண்டும் கொலை செய்ய வந்தான்.

அவன் சைக்காட்டிஸ்ட் தான?

ஆமா சார், அவனுக்கு விருப்பம்ன்னு படிக்கலை. அந்த படிப்பாலாவது சையூவை சரி செய்து அவளை தன்னுடன் வைத்துக் கொள்ள எண்ணினான். ஒன்றரை வருடத்திற்கு முன் அவனுக்கு ஒரு விபத்து நடந்தது. அதனால் அவனால் பின் நடக்க விருப்பதை அறிந்து கொள்ள முடியும். அதை நான் சில நாட்களிலே கண்டறிந்து விட்டேன். அவன் ரொம்ப டேஞ்சரானவன்.

இத்தனை நாள் அவன் கொலையை நிறுத்திய காரணமே நீங்க தான் சார். உங்களை அவனுக்கு பிடிக்கலை. அதுவும் அவனோட சையூவை நீங்க கல்யாணம் செய்தது. குழந்தை என்று..அவனால் ஏற்க முடியவில்லை. அவள் இறக்கவில்லைன்னு அவனுக்கு தெரியும். அவளுக்கு உதவியதே அவன் தான்.

அவன் காரில் செல்வதை பார்த்தேன். அவன் கண்ணில் இருந்த வெறியை பார்த்து, அவன் யாரையோ கடத்தி இருக்கான் என்று தான் பின் தொடர்ந்தேன். ஆனால் அவன் கடத்தியது உங்க மனைவியை..சீக்கிரம் வாங்க சார் அவன் சொல்லிக் கொண்டிருக்க காலடி சத்தம் கேட்டு அவினாஸ் அலைபேசி பயத்தில் கீழே விழுந்தது.

“யார்கிட்ட என்ன பேசிட்டு இருக்க?” சீற்றமான டேவிட் குரலில் குலை நடுங்கியது அவினாஸிற்கு.

டேவிட், நான் சாருவிடம் தான்..

சாருவா? என்று கேட்டுக் கொண்டே பக்கமிருந்த பெரிய கடப்பாரையை அவன் உள்ளங்கையில் இறக்கினான் டேவிட்.  அவினாஸ் அலறலில் ஆரியன் பயந்து விட்டான்.

“அவினாஸ், எங்க இருக்க? அதி அங்க தான் இருக்காலா?” பதற்றமுடன் தடுமாறினான் ஆரியன்.

அலைபேசியை அவன் பேண்டில் போட்டிருந்தான். அது கட் ஆகாமல் கேட்டுக் கொண்டிருந்தது..

உன்னோட அலைபேசி எங்க? அவனை இழுத்து தேடினான் டேவிட். கிடைக்கவில்லை. சிறிய கேப்பில் அதை எடுத்து அவனருகே இருந்த தூணின் பின் மறைத்து வைத்திருந்தான் அவினாஸ்.

ஏன்டா, அந்த போலீஸ் நாய்ங்க எல்லாத்தையும் கண்டுபிடிச்சிட்டானுக. நான் என் பாப்பாவை பார்க்க எவ்வளவு ஆவலாக இருக்கேன்..

உன்னோட பாப்பாவா? இல்லை அது அன்றே செத்து போச்சு..

ஆமால்ல…போச்சு..போச்சு..செத்து போச்சு..ஆனால் மறுபடியும் வரும். நான் வர வைப்பேன்..

வர வைக்க முடியாதுல்ல?

முடியாதா? பயங்கரமாக சிரித்தான் டேவிட்..

இத்தனை குழந்தைகளையும் எதுக்கு பத்திரமாக வச்சிருந்தேன்னு நினைக்கிற?

குழந்தையா? பத்திரமா? என்ன சொல்ற? அவினாஸ் கேட்டான்.

அவி, நீ பச்சப்பிள்ளையாவே இருக்க? உனக்கு தெரியாது. என்னோட பாப்பா வந்திருவா..

இல்லை..

வரு..வா..சீற்றமுடன் கத்தினான்.

அவினாஸ் தொண்டை வறண்டது. கை வலி வேற உயிர் போனது..

பதினொரு பேரை கொன்று அந்த பொண்ணுங்கள பழி வாங்கிட்டேன். ஆனால் பாப்பா..எனக்கு வேணும்ல்ல..அதான் ஃஃபிரீசர்ல்ல வச்சுருக்கேன். பாக்குறியா? என்று அவனை ஓரிடத்திற்கு தரதரவென இழுத்து சென்றான்.

அறை முழுவதும் பனியால் சூழ்ந்திருந்தது. அதில் சில பெட்டிகளை எடுத்தான். அதில் இறந்த குழந்தையின் தலை, கை, கால், உடல் என்று எல்லா பாகமும் ஐஸ்ஸில் வைத்து பராமரிக்கப்பட்டிருந்தது.

இதை பாரு..இன்று அந்த ஆரியன் குழந்தையின் உயிரை எடுத்து பாப்பாவை உருவாக்க போகிறேன் பைத்தியம் போல் பேசினான்.

அவினாஸ் உறைந்து வலியிலும் வேதனையிலும் இருந்தான். அப்பொழுது அவனுக்கு எதிரே நின்ற டேவிட்டின் பின் நின்ற தர்சனை பார்த்து, உஃப் உஃப் என்று கையை அவனது அலைபேசி பக்கம் நீட்டினான். பேசும் ஆர்வத்தில் இந்த கிறுக்கு டேவிட் தர்சுவை பார்க்கவில்லை. அவன் காட்டிய திசையை நோக்கி மெதுவாக சென்று அதை எடுத்து வெளியே சென்று ஆரியனிடம் பேச, ஆரியனுக்கு மேலும் பயம் கூடியது. ஆரியன் தர்சுவை உள்ளே போக வேண்டாமென்று சொல்லிக் கொண்டிருந்தான்.

அம்மாவை பார்க்கணும் போல இருந்துச்சுப்பா பள்ளியிலிருந்து யாருக்கும் தெரியாமல் ஹாஸ்பிட்டலுக்கு போனேன். அப்பா, அம்மாவை அவன் தூக்கி வந்ததை நான் பார்த்தேன். அதான் அவன் பின்னே வந்தேன். ஆனால் அவன் போயிட்டான். கண்டுபிடிச்சிட்டேன்ப்பா..அவன் மகிழ்வுடன், அம்மாவை நான் பார்த்துக்கிறேன்ப்பா..சீக்கிரம் வாங்க..அப்பா..அப்பா…லைன் கட் ஆனது.

ஏற்கனவே ட்ரேஸ் செய்து பசங்க எல்லாரும் வந்து கொண்டிருந்தனர் போலீஸிற்கு தகவலை மட்டும் கூறி. ஆரியன் பொறுக்க முடியாமல் அருகே வரவும் வேகமாக இறங்கி அவ்விடம் வந்தான். அலைபேசி கீழே கிடந்தது இரத்தக்கறையுடன்.

பயத்துடன் உள்ளே ஓடினான். அவன் சென்ற பின் தான் கார் வந்தது. ஆரியன் வேகம் அத்தகையதாக இருந்தது. அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.

தர்சன் டேவிட்டை தடுக்க, தர்சன் தலையில் இரும்பு கம்பியால் டேவிட் அடிக்க அதியா கத்தினாள்.

வயிற்றை பிடித்து அவள் எழ, சினமான டேவிட் அவளை கீழே தள்ளினான். அவளுக்கு வலி வந்து விட்டது. அவள் கத்தும் சத்தம் அவ்விடத்தை அடைக்க, சரியாக ஆரியன் வரும் போது டேவிட் கத்தியை அதியா அருகே கொண்டு சென்றான். அன்றிருந்த லாவண்யா நிலையில் இருந்தாள் அதியா. வலி தாங்க முடியாமல் மயங்கி விட்டாள்.

டேவிட்டை ஒத்தை ஆளாக ஆரியன் சமாளிக்க, இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்தனர். இருவருக்கும் இரத்தம் வந்தது. அதியா, தர்சனை காப்பாற்ற எண்ணிய ஆரியன் வேறு வழியில்லாமல் துப்பாக்கியை நீட்டினான்.

கொல்லு..கொல்லு..நீ உள்ள போயிடுவ. உன் குடும்பம் நாசமா போயிடும் அவன் சொல்ல,

நீ பைத்தியம் இல்லை.

ஆமா, நான் பைத்தியமும் இல்லை நல்லவனும் இல்லை. என்னோட பாப்பா போதும் எனக்கு. நீ போயிடு. உனக்கு ஷனா பாப்பா இருக்கா. போயிடு அவன் சொல்ல, ஆரியனுக்கு அவன் சொன்னதே நினைவுக்கு வந்தது. அருகே இருந்த பெட்டிகளை எட்டி உதைத்தான்.

“ஏய், என்னோட பாப்பா” டேவிட் அந்த சடல உறுப்புகளை எடுக்க, சரியாக போலீஸ் வந்து அவனை கைது செய்ய, அவன் அவர்களை தள்ளி விட்டு ஒருவரிடமிருந்து துப்பாக்கியை எடுத்து அவனை அவனே சுட்டுக் கொண்டான்.

ஆரியன் அதியா, தர்சுவை பார்த்து அவர்களிடம் ஓடினான். தர்சனை இரத்த வெள்ளத்தில் பார்த்த ஆரியன் கதறி அழுதான்.

ஆத்விக் தர்சுவை தூக்கி, அழைத்துக் கொண்டே ஓடினான். ஆரியன் கதறலுடன் தன் காதல் மனைவியை கையில் ஏந்த இரத்தம் வெளிப்பட்டது. ஆரவ் சீக்கிரம் காரை எடு கத்தினான். எல்லாரும் ஹாஸ்ப்பிட்டலில் அவர்களை சேர்க்க, தர்சன் மட்டும் சீரியசாக இருந்தான்.

அவினாஸை இறந்த நிலையில் போலீஸார் மீட்டனர்.

தர்சனை பார்த்து பயந்து மயங்கிய அதியா அவர்களில் ஆசைப்படியே பெண்குழந்தையை பெற்றெடுத்தாள். ஆரியன் அக்குழந்தையை தூக்கிக் கொண்டு தர்சனிடம் ஓட, ஆகர்ஷனா அழுது கொண்டிருந்தாள். ஆரவ் அவளை தன் பக்கம் இழுத்து அணைத்துக் கொண்டான்.

தர்சனுக்கு சிகிச்சை முடிந்து வெளியே வந்த மருத்துவர்கள், ஆழமான அடிப்பட்டிருந்தது. நேரத்திற்கு சேர்த்ததால் பிழைத்துக் கொண்டான்… அவனுக்கு வலி எல்லாம் இருக்கும். பக்கமிருந்து பார்த்துக்கோங்க..

சற்று நேரத்தில் அதியாவும் எழுந்து தர்சுவை பார்க்க வந்தாள். அவன் விழித்தவுடன் ஆரியனை பார்த்து கண்ணீர் வந்தது..

“அப்பா” பாப்பா கேட்க, அவன் கண்ணீருடன் குழந்தையை தூக்கி அவனிடம் காட்ட, “தர்சு கண்ணா..உனக்கு ஒன்றுமில்லை” அதியா அவன் நெற்றியில் முத்தமிட, ஆரியனும் அவன் கன்னத்தில் முத்தமிட்ட, “ரொம்ப வலிக்குதா தர்சு?”

“ஆமாப்பா, ரொம்ப வலிக்குது” அவன் அழ, ஆகர்ஷனா அவனுக்கு விபூதி வைத்து விட்டாள்.

“ஆகா…பாப்பா நம்முடன் விளையாட வந்துட்டா” மெதுவாக பேசினான்.

“பையன் அதிகமா பேச வேண்டாம்” செவிலியர் சொல்ல, எல்லாரும் அவனை சுற்றி அமர்ந்தனர்.

பதினொரு கொலையை கொடூரமாக செய்த டேவிட் இறந்தாலும்.. அவனை பிடித்ததற்காக கவின் சித்திரனுக்கு பதவி உயர்வை கொடுத்து பாராட்டையும் தெரிவித்தார் போலீஸ் கமிஷ்னர்.

கவினும் சித்திரனும் டேவிட்டை பிடிக்கும் முயற்சியில் பயங்கர எவர்ப்ட் போட்டிருந்தாங்க தான..ஆரியன் பெயர் இதில் வெளியே வராததில் கவினுக்கு வருத்தம்.

ஆரியன் தானே தனியே அந்த டேவிட்டை சமாளித்தான். ஆரியனுக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை.

அவன் குடும்பத்தை நல்ல படியாக காப்பாற்றிய நிம்மதி அவனுக்கு. வல்லவன் எப்போதும் வெளியே தெரிய வேண்டிய அவசியமில்லை. அதற்காக அவன் வல்லவன் இல்லை என்று சொல்ல முடியாது.

இவ்வுலகில் கண்ணுக்கு தெரியாத தவறு செய்யும் வல்லவனை பிடிக்கும் முயற்சி வல்லவன்களுக்கு மட்டுமே உண்டு. அதில் உள்ள “வல்லவனுக்கெல்லாம் வல்லவன் நம் ஆரியன்”

   (இரு வருடங்களுக்கு பின்)

“நித்து, இங்க வா ஒளிஞ்சுக்கலாம்” ஆகர்ஷனா தன் பாப்பாவை மறைய வைத்தாள். கையில் விளையாட்டு துப்பாக்கியுடன் தர்சன் ஆரியன் போல ஒளிந்து மறைந்து திருடனை பிடிப்பது போல செய்ய, அவனை பார்த்து புன்னகையுடன், “கண்ணா..அப்பா மாதிரி நீயும் சி ஐ டி தானா?” பவானி கேட்டார்.

பாட்டி, ஷ்..என்று அவன் செல்ல, எல்லா ஜோடிகளும் வந்தனர். சாய்- விண்ணரசிக்கு மகளும், நேசன்- கனிகாவிற்கு மகனும், சுவேராவும் லாவண்யாவும் கர்ப்பமாக இருந்தனர். போன வாரம் தான் லாவாவிற்கு வளைகாப்பு நடந்தது. துருவினி- ஆத்விக்கும் கையில் கைக்குழந்தையுடனும் வந்தனர்.

மாம்ஸ் எங்க? ஆரவ் கேட்க, அவரு வேலையா போயிருக்காரு அண்ணா. வந்துருவாரு..

வேலையா? சொல்லவேயில்லை கவின், ஆத்விக், ஆரவ் பார்த்துக் கொள்ள, ஏதோ கடத்தல் கேஷாம் இரவு கூட ஆகலாம்ன்னு சொல்லீட்டார் அதியா சொல்ல, கவின் தொலைக்காட்சியில் செய்தி பக்கம் சென்றான்.

ஆரியன் புகைப்படம் போட்டு, “குற்றவியல் புலனாய்வு துறையின் சிறந்த சி. ஐ. டி ஆரியன்” முக்கிய கொலையாளியாக தேடப்பட்ட ஹாசாரை கண்டறிந்து பதினாறு பெண்களை காப்பாற்றியுள்ளார் என்று போட்டுக் கொண்டிருந்தனர்.

அதான மாம்ஸ் கைக்கு கேஷ் போனால் முடித்து விட்டு தான மறுவேலை பார்ப்பார்.

போதும் கதை அளந்தது. மாப்பிள்ளை வந்திருவார் சாப்பிடலாம் அதிவதினி சொல்ல, ஆமா..ஆமா..செம்ம பசி அத்தை என்று கிச்சனுக்கு சென்ற சுவேராவை நிறுத்தி, இருன்னு சொன்னேன்..

அத்தை..பாப்பாவுக்கு பசிக்குது.

சாப்பிடலாம். இப்ப தான் சாப்பிட்ட..ஐந்து நிமிடம் கூட ஆகலை. கொஞ்ச நேரம் விட்டு விட்டு சாப்பிடு..

நல்லா சாப்பிடு. அப்ப தான் பூசணிக்காய் போல உருண்டையாகலாம் ஆரவ் கேலி செய்ய அனைவரும் சிரித்தனர்.

ஆரியன் சோர்வுடன் வீட்டிற்கு வர, எல்லாருக்கும் முன் முந்திக் கொண்டு அப்பா, “தூக்கு” நித்திரவஞ்சினி கையை தூக்கினாள்.

அம்மா..அதியா அழைக்க, ஓடி வந்து தன் பேத்தியை வாரி அணைத்த பவானி, “கிளி பார்க்கலாமா?”  வெளியே அழைத்து சென்றார்.

ஆரியன் எல்லாரிடமும் தலையசைத்து அறைக்கு செல்ல, அதியாவும் பின்னே ஓடி அவனுக்கு உதவ..இருவரும் வெளியே வந்தனர்.

பசங்க எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்து எழுந்து, காலை தூக்கி அடித்து சல்யூட் செய்து ஆரியனை பாராட்டியும் கேலி கிண்டலுடன் அழகான நாட்களை கழித்தனர்.

                (முற்றும்)