லாவண்யா சுவேரா- கவின் திருமணத்தை பற்றி விண்ணரசி அண்ணனிடம் சொல்ல, அச்சோ..போலீஸ்கார் பாவமே அழகான பாவனையில் அவன் சொல்ல, லாவண்யாவும் மற்றவர்களும் சிரித்தனர்.
மனோகர் மனைவியிடம் அவன் சமிஞ்சை செய்து வெளியேற, அவர் வெளியே வந்தார். சாய் அவர்களை ஆழ்ந்து கவனித்தான்.
விண்ணரசியின் பதிலை அவன் சொல்லவும் லாவண்யா அதை கேட்டு குதித்தாள்.
“ஏய் லாவா, என்னாச்சு?” சாய் கேட்க, அதுவா அவள் சொல்லும் முன் பல்லை காட்டிக் கொண்டு அவள் வாயை அடைத்து அவளை அறையை விட்டு தள்ளி அழைத்து சென்றான் விண்ணரசியின் அண்ணன்.
லாவண்யாவிற்கு அழைப்பு வர, அதை எடுத்து காதில் வைத்தவள் மேலும் குதித்தாள்.
“ஏய், என்னாச்சு? திடீர் திடீர்ன்னு சாமியாடுற?” அவன் கேட்க, அதுவா, சுவா மேரேஜ் முடிந்த மறுமாதம் எனக்கும் ஆரவ்விற்கும் மும்பைல்ல மேரேஜாம் வெட்கமுடன் அவள் சொல்ல, என் முன்னாடி வெட்கப்படாதம்மா..உன்னோட ஆளு வந்து என்னை கொன்றுவான்.
“சாரி சார், நான் ஸ்வீட் வாங்கிட்டு வாரேன்” லாவண்யா வெளியே ஓடினாள்.
நாளை காலை நாம உங்க வீட்ல வச்சு பேசலாம் ராஜேஸ்வரி சொல்ல, ராஜூ பையனிடம் கேட்கலாமே!
கேட்கலாம். அவனுக்கு டாக்டர் பொண்ணை ஏற்கனவே பிடித்து தான இருக்கு. நாம ஆசைய காட்டிட்டு பிள்ளையை கஷ்டப்படுத்திறக் கூடாதுல்ல..முதல்ல பொண்ணு வீட்ல பேசலாம். அப்புறம் என்னன்னு பார்ப்போம் என்றார்.
நீங்க விண்ணாவை பார்த்துக்கோங்க. நான் கொஞ்ச நேரத்துல்ல வந்துடுறேன்..
எங்கப்பா போற? அலைபேசியில் என்ன இருக்கு? அதை பார்த்த பின் கிளம்புற” மனோகர் கேட்டார்.
எங்க வீட்டுல முடிவு செய்த டாக்டர் மாப்பிள்ளையின் வள்ளலை நான் வீட்ல காட்ட வேண்டாமா? அதுக்கு தான் போறேன்..
என்ன? ராஜேஸ்வரி கேட்க, அவன் குடிச்சிட்டு வேற பொண்ணு தோளில் கையை போட்டு அறைக்கு போற வீடியோ சிக்கி இருக்கு. இதை காட்டி இப்பவே என்னோட குடும்பத்தை அந்த இடத்திற்கு அழைச்சிட்டு போய் நிரூபிக்கணும்.
அதுக்குள்ள எப்படிப்பா?
ஆன்ட்டி, பசங்களுக்கு நினைச்சது கிடைக்கலைன்னா..அதுவும் இவன் போலுள்ள பணக்காரனுக்கு கிடைக்கலைன்னா டிரிங்க்ஸ் செய்வது சாதாரணம். அதான் என் ஆட்களை வைத்து அவனை கண்காணிக்க சொன்னேன். “சிக்கிட்டான் குமாரு” விண்ணரசியின் அண்ணன் சிரித்தான்.
“கையை கொடுப்பா” என்று ராஜேஸ்வரி அவன் கையை குலுக்கி “ஆல் தி பெஸ்ட் கண்ணா”.
“தேங்க்ஸ் ஆன்ட்டி” சொல்லி விட்டு அவன் வெளியே ஓட, ஸ்வீட் பாக்ஸூடன் வந்த லாவண்யா, சார் ஸ்வீட்..
நான் வந்து எடுத்துக்கிறேன் சொல்லி சென்றான். அவள் சாய்யிடம் விசயத்தை சொல்லி அவனுக்கு ஸ்வீட்டை கொடுத்து விட்டு குடும்பமாக நால்வரும் ஸ்வீட் உண்டனர்.
கதிரவன் தன் கதிர்களை உலகில் பரப்பி தீயவற்றை அழித்து நன்மையை நிலை பெற செய்ய ஒளி வீசி வந்தார்.
விண்ணரசி கண்களை கசங்கி எழுந்து அமர்ந்து, அவள் அண்ணனை தேடினாள்.
அவன் புன்னகையுடன் குளித்து வெளியே வந்தான்.
என்னடா இவ்வளவு காலையிலே குளிச்சிட்ட?
முக்கியமான வேலையா கிளம்பணும். நான் என்னோட ஹாஸ்பிட்டலில் உன்னை விட்டு செல்கிறேன்.
அம்மா, கால் எடுத்தாங்களா? வருத்தமுடன் அவள் கேட்க, அவன் பதில் சொல்லாமல் சென்றான்.
எங்க இவ்வளவு காலையில் போகிறான்? விண்ணரசி தயாராகி வெளியே வர, அவளிடம் ஸ்வீட் பாக்ஸை கொடுத்து லாவண்யாவும் அவளுடன் அமர்ந்தாள்.
என்ன மேம்? வேலைக்கு தயாராகிட்டீங்களா? ஆனால் மணி எட்டு தான ஆகுது.
“இப்ப தான் என்னோட டர்ன். நான் போகணும்” எழுந்தாள் விண்ணரசி. லாவண்யா அவள் கையை பிடித்து நிறுத்தி, சாய் உங்களை காதலிப்பது எனக்கு முன்பே தெரியும்?
“எத்தனை முறை நாம பேசி இருக்கோம்? நீ சொல்லவேயில்லை” விண்ணரசி கேட்க, சாரி மேம். காதலை அவன் தான் சொல்லணும்ன்னு நினைச்சேன். இவன் கிழவனாலும் சொல்ல மாட்டான் ஓரக்கண்ணால் லாவண்யா விண்ணரசியை பார்க்க, அவள் சிரித்தாள்.
உங்களுக்கு அவனை பிடிக்குமா? எப்படி உடனே சரின்னு சொல்லீட்டீங்க? அவனுக்கு இவன் பெட்டர்ன்னு நினைச்சீங்களா?
கண்கலங்க விண்ணரசி அவளை பார்த்து, நான் அவனோட, லாயர் சாரை ஒத்து பார்க்க வில்லை. அவன் யாருடனும் ஒப்பிட முடியாத ஜந்து..
அப்புறம் எப்படி உடனே சரின்னு சொன்னீங்க?
சாய் சார் பற்றி தான் எனக்கு எல்லாம் தெரியுமே! என்ன எங்க குடும்பம் என்ன சொல்வாங்கன்னு பயமா இருக்கு. அவரை ஏதும் கஷ்டப்படுத்திட்டால்..
ம்ம்..
என்னையே எங்க வீட்ல ரொம்ப பேசிட்டாங்க. அவரை என்ன சொல்வாங்களோ? ஆனால் அண்ணா பார்த்துக்கிறேன்னு சொல்லி இருக்கான்.
சரி, நீங்க போயிட்டு வாங்க. அதுவரை நான் அவன் அறையில் இருக்கேன்.
அவரிடம் அண்ணா பேசினானா? என்ன சொன்னார்? விண்ணரசி ஆர்வமுடன் கேட்க, தெரியல என்று விட்டேத்தியாக லாவண்யா சொல்லி செல்ல, இப்ப தான் நல்லா பேசினா. திடீர்ன்னு என்னாச்சு? விண்ணரசி குழப்பமுடன் அவளை பார்த்தாள்.
வெளியே சென்ற லாவண்யா சிரித்துக் கொண்டே சாய் அறைக்கு வந்தாள்.
தனியா சிரிக்காத லாவா. யாராவது பார்த்தால் பைத்தியம்ன்னு நினைக்கப் போறாங்க. உன்னோட மேரேஜூக்கு என்ன வேணும்? கேட்டான் சாய்.
எனக்கா? நக்கலாக லாவண்யா அவனிடம் கேட்க, உனக்கு தான் கேட்கிறேன்..
எனக்கு தானா? எனக்கு சந்தேகமா இருக்கு..லாவண்யா அவனையும் குழப்ப, சந்தேகமா உனக்கு என்னாச்சு? சாய் கேட்க, அறை கதவை தள்ளிக் கொண்டு விண்ணரசி உள்ளே வந்தாள்.
“வாங்க மேம்” சாய் அழைக்க, ம்ம் என்று லாவண்யாவை பார்த்து, “நீ என்ன பேசுற? நல்லா தான பேசிட்டு இருந்த? எனக்கு குழப்பமா இருக்கு” விண்ணரசி புருவ முடிச்சுடன் கேட்க, லாவா என்ன நடக்குது? சாய் கேட்டான்.
நாய் நடக்குது..பூனை நடக்குது..நான் நடக்கிறேன். மேம் நடக்குறாங்க.
உஃப் காற்றை வெளியே தள்ளிய சாய், சரி அவங்க எங்க? காலையிலிருந்தே காணோம்.
“இவன் ஒன்றுமே சொல்லாமல் ஏன் இப்படி செய்றான்? டைம் எடுத்து செய்ய வேண்டியதுக்கு எதுக்கு அவசரப்படுறான்?” விண்ணரசி லாவண்யாவை பார்த்து, “உனக்கு சீரியஸ்னஸ் புரியலையா?” விண்ணரசி திட்டினாள்.
அண்ணா, திட்டுறாங்க. என்னன்னு கேளு அவள் உதட்டை பிடிக்க, மேம்..என்று செவிலியர் உள்ளே வந்து..பேசண்ட்டை பார்க்கணும்.
ராகவ் சாரிடம் எனக்கு இப்ப முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லு என்று லாவண்யாவை முறைத்து அவள் திரும்ப, என்ன நடக்குது? நீங்களாவது சொல்லுங்க? சாய் கேட்க, அனைத்தையும் சொன்ன விண்ணரசி..உங்களை நான் திருமணம் செய்ய நேற்றிரவே ஒத்துக் கொண்டேன். ஆனால் உடனேன்னா எங்க வீட்ல இருக்கிறவங்க உங்களையும் மனோகர் சாரையும் தப்பா எடுத்துப்பாங்க. நானும் வீட்டுக்கு போயிட்டு வாரேன்..
உனக்கு தான் இவங்களை பிடிக்கும்ல்ல? அதான் கேட்கலை..
ஏய் லூசு லாவா, ஏற்கனவே இவங்க பியான்ஸேவை இவர் அண்ணன் அடிச்சிருக்கார். இப்ப போய் விசயத்தை சொன்னால் என்ன நினைப்பாங்க?
சோ..உனக்கும் ஓ.கே? லாவண்யா புன்னகைக்க, உன்னை என்று ப்ளவர் வாஷை எடுத்து அவள் மீது எறிய தயாரானான் சாய்.
ஆரவ்வும் ஆத்விக்கும் உள்ளே வர, “ஆரவ் இவன் என்னை கொல்லப்பார்க்கிறான். என்னன்னு கேளுங்க?” அவன் பின்னே ஒளிந்தாள்.
“கொலையா?” என்று ஆரவ் சாய்யை பார்க்க, அவன் சினமுடம் லாவண்யாவை பார்த்தான்.
“அவன் எதுக்கு உன்னை முறைக்கிறான்? நீ என்ன செஞ்ச?” ஆரவ் கேட்க, உதட்டை பிதுக்கிக் கொண்டு நான் எதுவுமே செய்யலை.
“வாய திறந்த நிஜமாகவே கொன்றுவேன்” என்ற சாய், உங்க அண்ணனாவது இதை சிந்திக்க வேண்டாமா? சாய் விண்ணரசியை பார்க்க, அதெல்லாம் ஏதும் நடக்காது லாவண்யா கூறினாள்.
நேற்றிரவே இவங்க அண்ணன் அவன் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி பறக்க விட்டுட்டார்.
என்ன சொல்ற? விண்ணரசி கேட்க, உங்க பேமிலியே அவன் மூஞ்சில காரி துப்பீட்டாங்கன்னு சொன்னேன்.
ஹ..
ஆமா..உங்க அண்ணா அவர் ஆட்களை வைத்து அவனை கண்காணித்து உங்க வீட்டினருக்கு தெரியப்படுத்திட்டார்.
அப்படியிருந்தாலும்.. சாய் விண்ணரசியை பார்க்க, நான் பார்த்துட்டு வரவா? சாய்யிடம் கேட்டாள் விண்ணரசி.
நிஜமாகவே உங்களுக்கு என்னை திருமணம் செய்ய விருப்பமா? எனக்கு அதிகமெல்லாம் சம்பளம் வராது..
டேய், நான் வர்றதுக்கு முன்னாடி கேஷ் அதிகமாக பார்க்காமல் இருந்தீங்க. அதனால சம்பளம் குறைவா இருக்கும். இனி உங்களுக்கு வேலையும் அதிகமா இருக்கும். சம்பளமும் வரும். உன்னை நீயே குறைவா மதிப்பிடாத ஆத்விக் சாய்யை திட்டினான்.
சாய் விண்ணரசியை பார்க்க, எதுவாக வேண்டுமானாலும் பிரச்சனையில்லை. எனக்கு உங்களை திருமணம் செய்ய விருப்பம் தான்.
லாவண்யா சாய்யை முறைக்க, எப்படின்னாலும் இப்ப உங்க பேமிலியை சமாளிக்கணுமே! அவன் காலை கீழே வைக்க, வேண்டாம். நான் பார்த்துக்கிறேன். அண்ணாவும் மனோகர் சார், மேம்மும் போயிருக்காங்க..
அதான் எனக்கு டென்சனா இருக்கு. என்னால அவங்கள யாரும் ஏதும் சொல்லி விட்டால் என்னால என்னை மன்னிக்கவே முடியாது..
யாரும் ஏதும் சொல்லாமல் பார்த்துக்கிறேன் என்று விண்ணரசி அவனருகே வந்து அவன் கையை பிடித்தாள்.
உங்களால தனியாக எப்படி சமாளிக்க முடியும்?
அதான் என் அண்ணன் போயிருக்கான்ல்ல. போயிட்டு வாரேன் என்று அவள் செல்ல, நானும் உங்களுடன் வாரேன் லாவண்யா அவள் பின் ஓட, அவளது துப்பட்டாவை பிடித்து அவளை தடுத்த ஆரவ், நீ சாய்யோட இரு. அவனுக்காக நாங்களும் போறோம் சொன்னான்.
சாய் கண்கலங்க அவர்களை பார்த்தான்.
சீக்கிரம் போங்க ஆரவ்..
ம்ம் என்று விண்ணரசி காரை நிறுத்தி ஆரவ்வும் ஆத்விக்கும் சென்றனர். மூவரும் விண்ணரசி அரண்மனை வீட்டிற்குள் நுழைய, அவன் அண்ணன் சத்தம் பெரியதாக கேட்டது. மூவரும் பதறி இறங்கி உள்ளே ஓடினார்கள்.
வீட்டினுள் விருந்து உபச்சாரம் நடந்து கொண்டிருந்தது. மூவரும் குழப்பமாக ஒருவரை ஒருவர் பார்த்தார்.
விண்ணா, வா..வா..அவள் அம்மா அவளிடம் ஓடி வந்தார். அனைவரும் அவர்களை பார்த்தனர்.
அம்மா, இங்க என்ன நடக்குது?
நான் சொல்றேன் என்று அவளின் சித்தப்பா மகன் ஓடி வந்து, அக்கா உன்னோட கல்யாண மாப்பிள்ளை மாறிட்டார்.
இவங்களை பெரியண்ணா அழைச்சிட்டு வந்து, அந்த லாயர் சார் உன்னை காதலிக்கிறார்ன்னு சொன்னாங்க. தாத்தா கோபமாக கத்தினார்.
இவங்க தான் பேசி சம்மதிக்க வச்சாங்கன்னு மனோகர் சாரையும் அவர் மனைவியையும் அவன் கை காட்டினான்.
வாம்மா..உட்காரு ராஜேஸ்வரி சொல்ல, அவள் தன் குடும்பத்தை பார்த்து விட்டு அவரிடம் சென்று, உங்களையோ அவரையோ ஏதும் திட்டுனாங்களா சார்? மனோகரிடம் கேட்டாள்.
அதனால என்னம்மா? பொண்ணை பெத்தவங்க பயம் இருக்கும்ல்ல. இனி சாய் எங்கள் மகன். உங்கள் திருமணத்தின் பின் எங்களுடன் தான் இருப்பீங்கன்னு சொன்னோம்.
பெத்தவங்க தன்னோட பிள்ளைகள் பாதுகாப்பா இருக்கணும்ன்னு எண்ணுவாங்கல்லம்மா?
விண்ணரசி அவள் குடும்பத்தை பார்த்து விட்டு அவரிடம், பாசம் மட்டும் போதாது அங்கிள். நம்பிக்கை இருக்கணும். அடுத்தவனை நம்புறவங்க அவங்க வீட்டு பிள்ளையை நம்ப வேண்டாமா? கேட்டாள்.
முடிந்ததை விடும்மா. நீங்க சென்ற பின் நேற்று யாருமே உணவுண்ணாமல் இருந்திருக்காங்க.
நாங்களும் தான் சாப்பிடலை. தூங்கலை அவள் அவளுடைய அண்ணனை பார்த்தாள்.
விடு விண்ணா. அதான் மேரேஜூக்கு ஒத்துக்கிட்டாங்கல்ல? அவன் சொல்ல, அதுக்கு?
அதுக்கென்னமா? வா என்று ராஜேஸ்வரி பொறுமையுடன் அவளை அழைக்க, அவரருகே வந்து அமர்ந்தாள் விண்ணரசி.
கோபப்படாதம்மா, பாட்டியை மன்னிக்க மாட்டீயா?
விண்ணரசி எல்லாரையும் பார்த்து விட்டு கோபமாக வெளியேற, விண்ணா நில்லு அவள் அப்பா சத்தமிட்டார்.
அவனை நாங்க மாப்பிள்ளையாக பார்க்க ஆரம்பித்து விட்டோம். பின் எப்படி அவர் கூறுவதை நம்பாமல் இருப்பது? லாயர் மாப்பிள்ளை உன்னை பற்றி பேசினாலும் நாங்கள் சிந்திக்க தான் செய்வோம்.
“சாய் சார் அவனை போல பேச மாட்டார்” விண்ணரசி சத்தமிட்டு, அவன் பார்வையை கூட உங்களில் ஒருவராலும் உணர முடியலை. சொன்னாலும் கேட்கலை. கேட்டால் மாப்பிள்ளையை எப்படி சந்தேகப்படுறதுன்னு கேக்குறீங்க?
தாத்தா, நீங்க என்னை நம்பலைன்னு கோபம் தான். தவறாக பேசி இருந்தா மன்னிச்சிருங்க என்று அவர் கையை பிடித்தாள்.
அவர் கண்கலங்க..உன் அண்ணன் மட்டும் அந்த பயல பத்தி நிரூபிக்கலைன்னா உன் வாழ்க்கை என்னாகி இருக்கும்? கண்கலங்க சொல்ல,
தாத்தா..போதும்..விசயத்துக்கு வருவோமா? விண்ணரசி அண்ணன் கேட்டுக் கொண்டே ஆரவ், ஆத்விக்கை பார்த்து, அவர்களை உள்ளே அழைத்து அமர வைத்தான்.
நாங்க சாய், லாவண்யாவை வளர்ப்பு பிள்ளைகளாக்கிட்டோம். அதுக்கான எல்லா ஏற்பாடும் ஆத்விக் சார் தயார் செய்வதாக சொல்லீட்டார். முதல்ல லாவண்யாவுக்கும் இதோ..ஆரவ் மாப்பிள்ளைக்கும் மேரேஜை முடிச்சிறலாம். பின் சாய் விண்ணரசியின் திருமணம் பற்றி பேசலாம். திருமணத்தின் முன் என்கேஜ்மென்ட் வச்சுக்கலாம் மனோகர் சொல்ல, அனைவரும் என்கேஜ் மென்ட்டிற்கான தேதியை குறித்தனர்.
லாவண்யாவிடம் ஆரவ் நடந்ததை சொல்ல, அவள் மகிழ்வுடன் சாய்யிடம் கூற, அவன் புன்னகைத்தான். அவனை பார்க்க விண்ணரசியின் மொத்த குடும்பமும் வந்தது.
நேசன் அவன் மாமா வீட்டிற்கு கனிகா மற்றும் அவன் தாயுடன் சென்று தெளிவாக பேசி, அவர்கள் அவன் அம்மா மனதை மாற்றாத அளவு பேசி விட்டு, பணத்தை கொடுத்து வந்தான்.
(மூன்று நாட்களுக்கு பின்)
நேசனின் என்கேஜ்மென்ட்டில் லாவண்யா ஆரவ்வுடன் வந்திருந்தாள். நேசன் எல்லாருக்கும் அழைப்பு விடுத்திருந்தான். சாய்யால் மட்டும் வர முடியவில்லை.
லாவண்யாவை பார்க்கவும் கனிகா முகம் வாடி நின்றிருந்தாள். அதை கணித்த நேசன் அவள் கையை பற்றி அவளை பார்த்து, இனி நீ கஷ்டப்படத் தேவையில்லை.
லாவண்யாவும் வெகு நேரமெல்லாம் இல்லை. வந்த அரை மணி நேரத்திலே கிளம்பி விட்டாள். கனிகா தோழி சாஃப்ஸூம் வந்திருந்தாள். விண்ணரசியும் அவள் அண்ணனும் வந்திருந்தனர். அவன் கவனம் அவ்வப்போது சாப்ஸை தொட்டு மீண்டது.
அடுத்த ஒரே வாரத்தில் நேசன்- கனிகா திருமணம் நடைபெற்றது. அனைவரும் கலந்து கொண்டு இருவரையும் வாழ்த்தினார்கள். நேசன் கனிகாவை புரிந்து கொள்ள தொடங்கினான். அவளும் லாவண்யாவுடன் சகஜமாக பழகினாள். சாய்க்கும் உடல்நிலை தேறியது.
நாட்கள் கடந்தது. அவினாஸை ஆசிரமத்தில் விசாரித்தும் எந்த சரியான ஆதாரமும் இல்லை என்பதால் அவன் செய்ய வாப்பில்லை என்று எண்ணினார்கள். அடுத்ததாக அவர்கள் கவனம் தமிழ்ச் செல்வனான டேவிட் மீது பாய்ந்தது. கவின், ஆரியன், சித்திரன் மூவரும் டேவிட்டை தேடும் முயற்சியில் இறங்கி இருந்தார்கள்.
கவின்- சுவேரா திருமணத்திற்காக ஷாப்பிங் சென்றிருந்தனர் இரு குடும்பமும். அப்பொழுது ஆரவ் மட்டும் ஷாப்பிற்கு வெளியே அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
அப்பொழுது அவனை ஒருவன் கடந்து செல்ல, முதலில் கவனிக்காத ஆரவ் அவனை கண்டு அதிர்ந்து, “ஹே…அவனை பிடிங்க” கத்திக் கொண்டே அவனை விரட்டினான்.
அங்கிருந்தவர்கள் பேசியதை கேட்ட கவின், ஆரியன், ஆத்விக் வெளியே வந்து பார்த்தனர். ஆரவ் அலைபேசி கீழே கிடந்தது.
ஆரியன் வெளியே பூக்கடை போட்டிருந்த அக்காவிடம் நடந்ததை விசாரிக்க, அவர் அலைபேசியை போட்டு அவன் யாரையோ விரட்டி சென்றதை கேட்கவும் பயந்து மூவரும் அவனை தேடத் தொடங்கினார்கள்.
கவின் சென்ற திசையில் முகத்தை மறைத்திருந்தவனுடன் ஆரவ் உருண்டு பிரண்டு சண்டை போட்டிருப்பதை பார்த்து கவின் அவனிடம் ஓடினான்.
ஆரவ் அவனின் மறைந்திருந்த முகத்தை அவிழ்க்க முயன்று கொண்டிருந்தான். கீழே கிடந்த கட்டையை எடுத்த கவின் முகத்தை மறைத்திருந்தவன் தலையில் அடிக்க, அவன் மயங்கினான்.
ஆரவ் கவின் செய்கையில்..ஓ…காட் என்ன பண்ணீட்ட? இவன்..இவன்.. மூச்சிறைக்க ஆரவ் சொல்ல வருவதை கவனிக்காத கவின் அவன் முகத்தை மறைத்திருந்த துணியை மறைத்து அவனை பார்த்து அதிர்ந்தான்.
டே..டேவிட்டா? ஆரவ்..இவனை தூக்கு என்று இருவரும் அவனை இழுத்து வந்தனர். அதற்குள் ஆத்விக்கும் ஆரியனும் அவர்களிடம் வந்தனர்.
இவன் தான டேவிட். என்னடா பண்ணீங்க? ஆரியன் சத்தமிட, மாம்ஸ் முதல்ல இவனுக்கு அடி பலமான்னு பார்க்கணும்..
“பக்கத்துல்ல பழைய கட்டிடம் கட்டாமல் அப்படியே போட்டு வச்சுருக்கானுக. நாம அங்க இவனை கொண்டு சென்று பார்க்கலாம்” ஆரியன் அனைவரையும் ஷாப்பிங் செய்ய சொல்லி, எங்களுக்கு வேலை இருக்கு என்று அலைபேசியில் கூறி, அவன் காரை எடுத்து வந்தான். டேவிட்டை ஆரியன் காரில் ஏற்றி அக்கட்டிடத்திற்கு அழைத்து சென்றனர்.
டேவிட் முகத்தில் கவின் நீரை சல்லென ஊற்றினான். பயந்து விழித்த டேவிட் நால்வரையும் பார்த்து திகைத்தான்.
நீங்க..என்றவனால் அசைய கூட முடியவில்லை. கை, கால், உடலை சேர்த்து கட்டிப் போட்டிருந்தனர்.
“எதுக்குடா ஏழு மாசத்துக்கு முன்னாடி போலீஸ்காரனாக பெயரை மாற்றி என்னுடன் வேலை செய்ய வந்த? வேலுவை கொன்றது நீ தானா? அந்த பத்துக் கொலைக்கான காரணம் நீ தானா? கொலையையும் செய்து அதை வெளியே தெரிய விடாமல் மறைத்து இருக்க?” கவின் சீற்றமுடன் கொலைவெறியில் கத்தினான்.
இல்ல..இல்ல..இல்ல..இல்ல..நான் யாரையும் கொலை செய்யலை.
“அப்புறம் ஏன் இதெல்லாம் செய்த?” ஆரவ் கேட்க, நான் செய்தது கவின் சாரை ஏமாற்றியதும், கொலையை வெளியே வராமல் செய்ததும் தான்.
“அதான் எதுக்கு செய்த? நீ கொலை செய்யலைன்னா வேற யாரு கொலை செய்தது? எல்லாவற்றையும் சொல்லு?” ஆரியன் தன்மையுடன் கேட்டான்.
ஆரியன் சார் எல்லாத்துக்கும் காரணம் உங்களது முதல் மனைவி சைந்தவி தான்.
வாட்? அவளா கொலைகாரி?
இல்ல சார், எங்க ஆசிரமத்தில் வளரும் குழந்தைகளுக்கு யாராவது ஒர் உறவேனும் இருப்பாங்க. ஆனால் பத்து குழந்தைகளுக்கு மட்டும் யாருமில்லை. அதில் நான், சைந்தவி, அவினாஸ்.. இன்னும் சிலர் இருந்தோம்.
அவினாஸ் தான் எல்லா கொலையும் செய்கிறான்..
வாய்ப்பேயில்லை. நான் விசாரித்தேன்..அவன் ரொம்ப நல்லவன். கவின் சொல்ல, அது அவனாக கிரியேட் செய்தது சார். நீங்க அடிக்கடி சென்று ஆசிரமத்தில் விசாரித்தது கூட அவனுக்கு தெரியும்.
தெரியுமா? ஆரவ் கேட்க, ஆத்விக் அமைதியாக அனைவரையும் அவதானித்துக் கொண்டிருந்தான். கொலை பற்றி அவனுக்கு தெரியாதில்லையா?
ஆமா சார், அவனுக்கு படிப்பு, விளையாட்டு எல்லாத்திலும் முதலிடம் பட் அழகில் இல்லை.
அழகா? என்ன சொல்ற? கவின் கேட்க, ஆமா சார் அவன் முகம் அழுகியது போல இருக்கும். அதனால் அவனிடம் யாரும் அருகே செல்ல மாட்டாங்க. பயப்படுவாங்க. இருட்டு அறையிலே தான் இருந்தான். அவன் அறையில் வெளிச்சம் இருந்தால் அவன் சாப்பிடுவான், இல்லை படிப்பான். மற்ற படி இருட்டாக இருக்கும்.
சையூ அவளது ஆறு வயதில் தான் எங்களது ஆசிரமத்திற்கு வந்தாள். அவன் மட்டும் அறையை விட்டு வெளியே வராமல் இருக்கவும் அவளுக்கு அவனை பார்க்க ஆர்வம் வந்தது.
யாருமில்லா நேரம் அவனறைக்குள் சென்றாள். அவன் தான் அவளை பார்த்து பயந்தான்.
சிறுவயதிலே எல்லாரும் அவனை பார்த்து பயப்படுவதும், கேலி கிண்டலால் முடங்கியவன் வெளியே வரவேயில்லை.
“அவினாஸ், உன்னை நான் பார்க்கலாமா?” சைந்தவி கேட்க, நோ..நோ..சுவற்றில் ஒட்டி பயந்து அமர்ந்தான் அவினாஸ்.
“அவி நாம ப்ரெண்ட்ஸ் ஆகிக்கலாம். பயப்படாத. இரு நான் லைட் ஆன் செய்கிறேன்” என்று விளக்கை போட்டு அவனை பார்த்து முகத்தை சுருக்கினாள். ஆனாலும் அவனருகே சென்று அவனை தொட, முதலாவதாக அவள் முகத்தை பார்த்தான் அவினாஸ்.
“அவி, எனக்கு இந்த கணிதப்பாடம் சுத்தமாக வராது. எனக்கு சொல்லித் தருகிறாயா?” அவன் கையை எடுத்து அவளது கன்னத்தில் வைத்து கேட்டாள்.
ம்ம்..என்றதை தவிர அவன் ஏதும் பேசவில்லை. அவளின் அமைதியான மென்மையான பேச்சு அவன் மனது லேசானது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“வா..நாம வெளியே சென்று விளையாடலாம்” அவள் அழைக்க, அவன் பயந்து அவளை தள்ளி விட்டான். அப்பொழுதும் விடாமல் அவினாஸை வெளியே அழைத்து வந்தாள் சைந்தவி.
அனைவரும் அவனை பார்த்து பயந்து விலக, அவள் மட்டும் அவனுடனே இருந்தாள். பள்ளிக்கெல்லாம் போக மாட்டான். காப்பாளருக்கு அவன் மீதுள்ள பரிதாபத்தில் அவனுக்கு புத்தகங்கள் வாங்கி தந்தார். அதனால் அவனாகவே அனைத்தையும் கற்றான்.
சையுவால்..முகத்தில் மாஸ்க் அணிந்து அவனும் எங்களுடன் பள்ளியில் சேர்ந்தான். அவன் வகுப்பு பசங்க அவங்க வீட்ல இவனை பற்றி சொல்லி பிரச்சனை செய்ய, அவனை கவனிக்கவென்று தனியே ஆசிரியர் நியமிக்கப்பட்டார். அவர் சண்முகம். எல்லா பாடமும் கற்று தேர்ந்த மேதை அவர்.
அவருக்கு அவனை பார்க்க பாவமாக இல்லை. இவனும் கல்வி கற்க வேண்டுமென்று எண்ணினார். அதனால் எங்களது பள்ளியின் வாயிலாக அவனுக்கு தனியே வகுப்புகளை எடுத்தார்.
நாங்கள் எட்டாம் வகுப்பு படிக்கும் போது சில நாட்களாக சைந்தவி அவியுடன் பேசுவதையே நிறுத்தி இருந்தாள். என்னவென்று அவன் அறிந்து கொள்ள அவளை ஒரு நாள் பின் தொடந்தான். அவள் ஒரு பையனிடம் பேசுவதை பார்த்தான். அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அவினாஸ் அவனை அறியாமலே சையூ மீது காதலில் இருந்திருக்கான். இப்பொழுது அது புரிய வந்தது. சைந்தவி அவனுக்கு மட்டும் தான் என்ற எண்ணம் அவன் மனதில் ஒட்டிக் கொண்டது.
மறுநாள் சைந்தவியுடன் பேசிக் கொண்டிருந்தவன் இறந்தது எனக்கு தெரிந்தது. ஆனால் இந்த விசயம் யாருக்கும் தெரியாது. அவனும் எங்க ஆசிரமத்தில் வளர்ந்தவன் தான் மகேந்தர். அவனை காணோம் என்று அனைவரும் தேடினார்கள். போலீஸ் கம்பிளைண்ட் செய்யப்பட்டு இருந்தது. அன்றிரவு எங்க ஆசிரமம் தீப்பற்றி எறிந்தது. அதில் மகேந்தரின் சடலம் கிடைக்கவும் நான் அவினாஸை பார்த்தேன். அவன் ஓரப்புன்னகையுடன் நின்றிருந்தான்.
“அவன் இறந்தது உனக்கு எப்படி தெரிந்தது?” ஆத்விக் கேட்க, “சொன்னால் நம்ப மாட்டீங்க. எனக்கு எதிர்காலத்தில் நடக்கும் வாழ்க்கையை மாற்றும் விசயம் தூக்கத்தில் தெரியும்” என்றான் டேவிட்.
வாட்? நால்வரும் அதிர்ந்தனர்.
ஆமா சார், அதனால தான் உங்களது ஸ்டேசனில் போஸ்ட்டிங் போட்டிருந்த ஒருவரை கடத்தி அவர் பெயரில் உங்களுடன் இருந்தேன்.
அப்படின்னா..அவினாஸ் பொன்னியை கொல்லப் போகிறான்னு தெரியுமா? கவின் கேட்க, பொன்னி மட்டுமல்ல அவன் பதினைந்து பொண்ணுங்களை கொல்லப் போறான்னு தெரியும்.
பதினைந்தா? கவின் அதிர்ந்து கேட்டான்.
ம்ம்..என்னை முழுதாக சொல்ல விடுங்க சார் என்ற அவன், மகேந்தரை கொன்றதும் சடலத்தை ஆசிரமத்தில் மறைத்ததும் அதில் தீப்பற்ற வைத்து விபத்தாக மாற்றியதும் அவன் தான்..
அப்படின்னா..சைந்தவி மீதுள்ள காதலால் சிறு வயதிலே கொலை செய்திருக்கானா?
ம்ம்..அப்புறம் சைந்தவியை தனியே விடவே மாட்டான். ஆனால் அவனுக்கு தெரியாமல் அவள் பசங்களிடம் பேசினாள். இவனுக்கு உள்ள பிரச்சனை போல அவளுக்கும் பிரச்சனை இருக்கு.
எங்க ஆசிரமத்துக்கு முன் அவள் எங்க வளர்ந்தான்னு தெரியுமா சார்? விபச்சார விடுதியில். அங்கு நடப்பதை பார்த்து ஆண்வாசத்திற்காக தான் பசங்களுடன் பழகினாள். ஆனால் சைந்தவியின் மென்மையான குணத்தை பார்த்த அவினாஸ் அவளது கடந்த காலத்தை கவனிக்க தவறி இருந்தான்.
பள்ளியில் இருந்தே இருவரும் காதலித்தனர். ஆனால் அவனுக்கு தெரியாமல் ஆண்களுடன் செல்லும் பழக்கம் விடவேயில்லை. அவள் ஆசிரமத்தை பொறுத்தவரை பூமா தேவி. வெளியே மோகன தேவி. சிரித்தே ஆண்களை மடக்கிடுவாள்.
நான் அவனிடம் சொல்ல எண்ணினேன். அவன் மனநிலை மாறிடுமோன்னு தான் அமைதியாக இருந்துட்டேன்.
கடைசி வருட பள்ளிப்படிப்பின் போது தான் என்னுடைய இந்த சக்தியால் சைக்காடிஸ்ட் ஆகி அவன் எண்ணத்தை மாத்தலாம்ன்னு படித்தேன்.
அவன் எனக்கு மாறாக சைந்தவி அருகே யார் சென்றாலும் கொல்லும் எண்ணத்தில்.. கொலையை மறைக்க எந்த இடம் ஏதுவானது என எண்ணி அட்டாப்சி மருத்துவருக்கு படித்தான். அப்பொழுதும் அவன் செய்த எல்லாம் சைந்தவி மீதுள்ள காதலால்.
என்னால அவனிடம் பேச முடியவில்லை. அவன் அந்நேரமே படிப்பில் வந்த ஸ்காலர்ஷிப்பிலும்..அவனுக்கு கிடைத்த உதவியையும் பயன்படுத்தி அவன் முகத்தை மகேந்தர் முகத்தை தனக்கு வைக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டான். காப்பாளரும் அவனின் திறமை, அவன் வாழ்க்கைக்காக உதவினார். ஆனால் அவன்..
சொல்லு? ஆரவ் கேட்க, அவன் அதை நல்ல வழியில் பயன்படுத்தி இருக்கலாம். கல்லூரியில் படிக்கும் போது சுற்றுலா போவதாக சொல்லி சைந்தவி ஒரு வாரம் வெளியே சென்றிருந்தாள். அவளுக்கு தெரியவில்லை. அதே இடத்தில் தான் முகாமில் உதவ அவனும் வந்திருக்கான் என்று கவனிக்கவில்லை.
சைந்தவி ஒருவனுடன் நெருக்கமாக இருப்பதை பார்த்த அவினாஸ் தனியாக எங்கோ ஓடினான். அது காட்டுப்பகுதின்னு நினைக்கிறேன். சினத்தில் ஏதோ பொருளால்..பொருள் என்னவென்று எனக்கு சரியாக தெரியாது. அதை வைத்து ஒரு மானை குத்தி கிழித்தான். அதன் இரத்தம் சிதற..பயங்கர கொடூரமாக அந்த மானை கொன்றான். இதையெல்லாம் கனவில் தான் பார்த்தேன். ஆனால் சைந்தவியிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல் பேசினான்.
நாட்கள் செல்ல, கல்லூரியை முடித்தோம். சைந்தவி திடீரென்று “ப்ரேக் அப்” சொன்னாள் அவினாஸிடம். அவனால் ஏற்றுக் கொள்ளவில்லை. அவளை பிடித்து தள்ளியவன், நீ என்னை விட்டு போன..நீ யாரிடம் போனாலும் கொல்லுவேன்.
இல்ல, நான் போகலை என்று அவனிடம் பாசமாக பேசுவது போல ஏமாற்றி அவனுடனும் ஒன்றாக இருந்தாள். ஒரு மாதம் கழித்து சொல்லாமல் கொல்லாமல் அவள் சென்று விட்டாள். எல்லா இடத்திலும் அவன் தேடினான். ஆனால் சைந்தவி கிடைக்கவேயில்லை.
பின் அவன் அவளை பார்த்தது வயிற்றில் குழந்தையுடனும் உங்களுடனும் என்று ஆரியனை பார்த்தான்.
“மாம்ஸை மட்டும் எப்படி அவன் விட்டு வைத்தான்?”
சைந்தவி பக்கம் எவன் சென்றாலும் வழிவானுக. அதை விட நெருக்கமா உரசிட்டு இருப்பானுக. ஆனால் ஆரியன் சார் வீட்டிலே இல்லை. என்றோ ஒரு நாள் தான் வந்தார். சைந்தவியும் உங்களை ஏமாற்றினாலா நீங்க அது தெரியாமல் அவி போல ஏமாந்ததாக எண்ணினான் அவன்.
சார், முதலில் உங்களை அவள் கணவனாக பார்க்கவும் சினமுடன் உங்களை கொல்ல உங்க வீட்டுக்கே வந்திருக்கான். ஆனால் உங்க அப்பா அழுது கொண்டே தனியே பேசுவதை கேட்டு மனநிம்மதியுடன் பெருமூச்சுடன் சென்று விட்டான். எனக்கு என்ன விசயம்ன்னு தெரியல..
எனக்கு தெரியும். நான் சைந்தவியுடன் வாழலைன்னு புலம்பி அழுதிருப்பார்.
ம்ம்..அவன் நேராக அவளை நேரில் சந்தித்தான். பேசினான். அவளோ வயிற்றில் வளர்வது உன்னோட குழந்தை அவி என்றவுடன் அவனுக்கு ஆசை வந்து விட்டது.
ஆனால் அது நிலைக்கவில்லை. அவன் குழந்தை இறந்து விட்டது.. இல்லை…சைந்தவி அவன் குழந்தையை கொன்னுட்டான்னு தான் இப்பொழுது நடக்கும் பிரச்சனைக்கு காரணம்.
சைந்தவி அவன் குழந்தையை கொன்னுட்டா. அவளும் மற்ற ஆண்களுடன் உறவு கொண்டும், அண்ணாவை திருமணம் செய்தும் அவனை ஏமாற்றி இருக்கா. அதனால தான் காதலித்து வேறொருவனை திருமணம் செய்யும் பெண், கர்ப்பமான நிலையில் கொல்றான் கவின் கேட்டான்.
ம்ம் என்ற டேவிட் கண்ணை அவன் நோண்டியதற்கு காரணம் அந்த பொண்ணு வேறொருவனை பார்த்ததற்காக, மார்பகத்தை கிழிப்பது குழந்தைக்கு கேவலமாக இவளில் தாய்ப்பால் குழந்தைக்கு வேண்டாமென்று.. விரலை வெட்டியது..அந்த விரலால் தான் மற்ற ஆண்களை தொட்டுருப்பாள்.
வயிற்றை அறுத்தது? ஆரவ் கேட்க, குழந்தையை அவன் பாதுகாக்க..
அவன் குழந்தையை கொல்ல தான செய்கிறான்? ஆரியன் கேட்க, சார் அவனை பொறுத்தவரை அவன் குழந்தை இறந்து விட்டது. அதே போல் எல்லா குழந்தைகளையும் கொல்றான். கடைசியாக நடந்த கேஷ் தான் எனக்கும் புரியலை. குழந்தை காலை எதுக்கு வெட்டி எடுத்தான்? டேவிட் சிந்திக்க, தெரியலையே! ஆரியனும் சிந்தித்தான்.
சார், இதுவரை பதினொரு பொண்ணுங்க..
இன்னும் நான்கு பேர் தான்.
யாருன்னு தெரியுமா?
முகம் சரியாக தெரியல சார். ஆனால் அவங்க ஆபத்துல்ல இருந்தால் அந்நேரம் நான் தூங்கினால் தெரிந்து விடும்.
சரி..எதுக்கு எல்லா கொலையையும் மறைக்கிற?
வெளிய தெரிஞ்சா அவனை பிடிக்க எல்லா போலீஸூம் தேடுவாங்க. அவன் இப்பொழுது பொண்ணுங்களை குறிப்பிட்டு செய்வது..விசயம் வெளிய தெரிந்தால் காட்டுப்பகுதியில் அப்பாவி மானின் கதை தான்..நம்ம நாட்டு பொண்ணுங்க கதி..
என்ன சொல்ற? அவன் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கான். அவனிடம் நாம உண்மையான பாசத்தை இனி காட்டினால் கூட அவனை வெளியே கொண்டு வர முடியாது. அவன் தான் கொலையாளின்னு உங்களுக்கு தெரிந்தது அவனுக்கு தெரியக் கூடாது. நீங்க வேற யாரிடமும் சொல்லி விசயம் வெளி வந்தது. அவனை கட்டுப்படுத்த யாராலும் முடியாது..
அவனுக்கு இப்பொழுது சைந்தவி கூட கண்ணுக்கு தெரியலை. பிறக்காத அந்த கரு மீது அவன் அவ்வளவு அக்கறை வச்சிருக்கான்.
அந்த குழந்தையே அவனுடையது இல்லைன்னு நாம நிரூபித்தால்? ஆரவ் கேட்க, அவனுக்கென இருப்பது அழிந்த கரு தான். அது அவனுடையதில்லைன்னா..அவன் ஆக்ரோசமாகிடுவான். அதை மட்டும் செஞ்சிறாதீங்க..டேவிட் எச்சரித்தான்.
எனக்கு தூங்கினால் தான் அவன் செய்வதை கண்டறிய முடியும். அவனருகே நானும் இருக்கணும்.
வாட்?
ஆமா சார், அவனுக்காக தான் அவன் வொர்க் செய்யும் மருத்துவமனையில் சேர்ந்தேன். அவன் நல்லவன் தான் சார். எனக்கு அவனை கொலைகாரன் என்பதை விட பாவமாக தான் தெரிகிறான்.
ம்ம்..ஆரியன் டேவிட்டை பார்க்க, அவன் உங்களுடன் பேசுவானா? ஆத்விக் கேட்டான்.
பேசுவான். அதிகமில்லை. கேஷ் விசயம்ன்னா தான்..
ஓ..
எல்லாரும் எதுக்கும் கவனமா இருங்க. ஏன்னா..உங்களுடைய காதலும் இரண்டாவதாக இருந்திருக்கு..
என்ன? கவின் கேட்க, ஆமா கவின் சார், நீங்க உங்க அத்தை பொண்ணை காதலித்து இவர் தங்கையை கைப்பிடிக்க போறீங்க. ஆரவ் சார் நீங்க துருவினியை..
யோவ்..அவளை நான் காதலிக்கவேயில்லை.
இல்ல பாஸ், வெளியே தெரியும் விசயம் தான் உண்மை. ஆரியன் சார்..நீங்களும்..நீங்க சைந்தவியை காதலிக்கலை. ஆனால் கல்யாணம் செய்திருக்கீங்க. அதுவும் அவன் காதலியை..பார்த்து..உங்களை கொல்லவும் அவன் தயங்க மாட்டான்.
என்னை பற்றி தெரிந்து என்று என்னை போட்டுத் தள்ளப் போகிறானோ?
ம்ம்..சரி..நீங்க கிளம்பு. பத்திரமா இரு. அடுத்து கொலை எதுவும் நடப்பது போல கனவில் தெரிந்தால் உடனே சொல்லு ஆரியன் டேவிட்டிடம் சொல்ல, கவின் அவனை இரத்தம் வரும் வரை அடித்து, நான் சொல்வதை கத்திக் கொண்டே ஓடு…
என்ன?
ஆமா, அவன் நம்மை கவனித்தால்..
இருக்கலாம் சார். எமகாதவன்..டேவிட் சொல்லி விட்டு கவின் கூறுவது போல சொல்லி ஓட நால்வரும் அவனை பிடிப்பது போல பாவலா செய்தனர்.
எல்லாரும் தனியா இருக்காங்க ஆத்விக் நடிப்பை அள்ளி தெளிக்க, தூரத்திலிருந்து அவினாஸ் இவர்களை பார்த்துக் கொண்டிருந்தான். அனைவரும் வேகமாக ஷாப்பிங் செய்யுமிடம் வந்து சீரியசாகவே எல்லாரும் நன்றாக இருக்கிறார்களா? சோதித்து நிம்மதியடைந்தனர்.