அன்று கூறினேனே! அந்த ரௌடியை உன் தங்கை திருமணம் செய்து கொண்டாள். சில நாட்கள் நன்றாக தான் இருந்திருக்கிறார்கள். அவன் செய்த தவறால் உன் தங்கை காயப்படக் கூடாது என்று விலகவே, அவள் வறுமையில் வாடி இருக்கிறாள். தங்க இடமும், சாப்பாட்டிற்கு கூட தவித்திருக்கிறாள் இருந்தும் அனைவரிடமும் திமிராக பேசியதால் சமூகத்தின் ஏளனப்பேச்சும், மற்றவர்கள் அவளை காயப்படுத்தவும்,தாங்க முடியாமல் தற்கொலை செய்திருக்கிறாள்.
அவன், அவள் இறந்த பிறகு பார்த்த போது கதறி அழுதான்.
காவலர்களிடம் விசாரித்தால் பெரிய இடத்து பெண்ணை கொலை செய்திருக்கிறான் என்றனர்.அவனிடம் பேச முயற்சி செய்தேன். ஆனால் சொந்தங்களுக்கு மட்டுமே பார்க்க அனுமதி கிடைக்கும் என்று கூறி விட்டார்கள். நீ பேசி பார்.
நான் எதற்கு அவனிடம் பேச வேண்டும்? பாலா கோபமாக கேட்க,
உங்கள் நிலை எனக்கு புரிகிறது? நடந்த எதுவும் முழுமையாக உங்களது தங்கைக்கு தெரியாது. அவளுக்காகவாது தெரிந்து கொள்வது அவசியம். அவர் மீது தவறில்லாமல் தண்டனை அனுபவிக்க கூட வாய்ப்புள்ளது தானே என்றவுடன் பாலாவும் சிந்தித்து விட்டு, பார்க்கிறேன் என்று கூறி சென்றான்.
வெளியே வந்து அத்தையிடம் சொல்லி விட்டு, மதுவிற்கு பை கூறி விட்டு சென்றான்.
ரகு வீட்டிற்கு சென்றான் பாலா. ரகு பாலாவிடம், ஸ்வேதாவை பற்றி விசாரித்தான். ராஜம்மாவும் அவளை பற்றி கேட்க, அவர்களிடம் பேசி விட்டு, ரகுவிடம் தனியாக பேச அழைத்து சென்றான். இருவரும் தோட்டத்திற்கு வந்தனர்.
எனக்கு சில பொருட்கள் கிடைத்துள்ளது என்று கேமிரா, மேக் அப் பொருட்கள், மோதிரம் ஒன்றை எடுத்து காண்பித்தான்.
அது….என்னுடையது தான். எங்களுடைய நிச்சய மோதிரம் என்றான் ரகு கண்கலங்கிய படி.
பாலாவும், ரகுவும் பேசிக் கொண்டிருக்க, தூரத்தில் இருந்து ஒருவன் ரகுவை துப்பாக்கியால் இரு முறை சுட்டான். முதல் தோட்டா அவனது கையை துளைக்க ரகு கீழே விழுந்தான். இரண்டாம் முறை சுடும் போது பாலா ரகுவை காப்பாற்றி விட்டான். துப்பாக்கி சத்தம் கேட்டு, ராஜம்மா காபி தம்ளரை நழுவ விட்டார். பின் ரகுவை பார்த்து,
அய்யோ தம்பி! உங்களுக்கு என்னாயிற்று? கத்திக் கொண்டே அழ, ரியாவும் வந்தாள். பாலா அவனை விரட்ட, கொலை செய்ய வந்தவனோ தப்பி ஓடி விட்டான்.
ரியா, அப்பா… அப்பா…அழ, அவளை அணைத்துக் கொண்டார் ராஜம்மா. இருவரும் ரகுவை பாலா வந்த ஜீப்பில் போட்டு ரியாவையும் அழைத்துக் கொண்டு ஸ்வேதா இருக்கும் மருத்துவமனையிலே சேர்த்தனர். ரகு வலியில் துடித்தான். மருத்துவர்கள் சிகிச்சையை ஆரம்பித்தனர்.
ரியா அழுவதை பார்த்து, பார்வதியம்மா சேதி அறிந்து வந்திருப்பார். அவர் அவளை கட்டிக் கொண்டு, அப்படியே ஸ்வேதா அறைக்கு அழைத்துச் சென்றார்.
ரியாம்மா எதற்காக அழுகிறீர்கள்? ஸ்வேதா கேட்க,
அப்பாவிற்கு இரத்தம்.
இரத்தமா? அம்மா என்ன ஆயிற்று அவருக்கு? எழ முயற்சி செய்தாள். அவரை பார்க்க வேண்டும் என்று தவித்தாள் ஸ்வேதா.
சிகிச்சை முடிந்து மருத்துவர்கள் வெளியே வந்து, தோட்டா கையில் மட்டும் பட்டதால் எந்தவொறு பாதகமும் இல்லை. அவரை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.கொஞ்ச நேரம் கழித்து உள்ளே செல்லுங்கள். அவர் நன்றாக தூங்கி எழட்டும் கூறி விட்டு சென்றார்.
அவர் செல்லவும், அங்கே ஒருவன் வந்து ரகுவின் அறையை நோட்டமிட்டு கொண்டிருக்க, அதை கவனித்த பாலா, அம்மாவிடம்
என்னம்மா, இப்படி கூறி விட்டார்கள். அவருக்கு பலமான அடி போல, காப்பாற்றுவது கடினம் என்று கூறுகிறார்களே! கண் சைகை காட்ட,
இப்பொழுது என்னப்பா செய்வது? அவன் மீது சாய, மெதுவாக அம்மாவிடம் நீங்கள் ரகுவை பார்த்துக் கொள்ளுங்கள்.
அவன் வேகமாக வண்டியை எடுத்துக் கொண்டு செல்ல, பாலாவும் அவனை பின் தொடர்ந்தான்.
அவன் ஒரு பெரிய வீட்டிற்குள் நுழைந்தான். அது ராசாத்தியின் வீடு. உள்ளே சென்று கொஞ்ச நேரத்தில் அவன் வெளியே வந்து வண்டியை எடுக்க, மீண்டும் பாலா அவனை பின் தொடர்ந்தான். மருத்துவமனை வந்தனர். பாலா அம்மாவிற்கு போன் செய்து ஏதோ கூறினான். அவன் நேராக ரகுவின் அறை அருகே செல்ல, அங்கே யாரும் இல்லை. இது பாலாவின் திட்டம் தான். உள்ளே சென்றவன் கத்தியை எடுத்து ரகு மீது வீச, பாலா கட்டிலின் பின்னே இருந்து அதை பிடித்து, அவனையும் பிடித்து கையை முறுக்கி,அவனை உட்கார வைத்தான்.
யார் நீ? எதற்காக ரகுவை கொல்ல வந்தாய்? ராசாத்திக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? அவன் அமைதியாக இருக்க, பாலா அவனை மிரட்டினான். உன்னுடைய குடும்பத்திடம் பேசுகிறாயா? ஸ்டேசனுக்கு போன் செய்து பேச வைக்கவும், அவன் உண்மையை கூற ஆரம்பித்தான். சத்தம் கேட்டு ரகு விழித்தான்.
என் பெயர் சமர். ராசாத்தியின் ரகசிய உளவாளி. எனக்கு வந்த வேலை அவரை கொல்வது. அவர் மதுரையில் ரயில் ஏறியதிலிருந்து பின் தொடர்ந்து வருகிறேன். முதலில் அந்த பெண்ணை தான் கொல்ல சொன்னார்கள்.
ஸ்வேதாவையா? ரகு கேட்க,
ஆமாம்.
அவளை எதற்காக?
காரணமெல்லாம் தெரியாது சார். ராசாத்தி மேடம் தான் கூறினார்கள்.
அவளுக்கும்,ஸ்வேதாவிற்கும் என்ன சம்பந்தம்?
அவளை முடித்தால் பத்து கோடி என்றனர்.
பத்து கோடியா? ரகு கேட்க,
ஸ்வேதா பெரிய இடத்து பொண்ணா? என்ன?
போலீஸ் சார், அன்று கூட அவளை காப்பாற்றினீர்களே! அன்றும் கொலை முயற்சி தான். ரகு சாருடன் அவள் வரும் போது தான், நாங்கள் நினைத்தது போலவே மாட்டினாள். அவரை காப்பாற்றுவதாக நினைத்து அவளாகவே கத்தி குத்தை வாங்கிக் கொண்டாள். ரகு மேல் மித்து வைத்துள்ள காதலை புரிந்து கொண்டான் பாலா.
அன்று சண்டை போடும் போது, எங்களை யாரையாவது பார்த்து இருப்பீர்களோ என்று தான் உங்களை கொலை செய்ய வந்தேன்.
மதுரையில் உள்ள எல்லா பணக்காரர்களையும் எனக்கு தெரியும். கொலை செய்ய சொன்னது யார்? என்று கூறு ரகு கேட்க,
யாரென்று எங்களுக்கு தெரியாது.
சரி, நீ கொஞ்சநாள் ஜெயிலில் இரு. அதுதான் உனக்கு நல்லது பாலா கூற,
சார், என்னை தயவு செய்து விட்டு விடுங்கள். நாங்கள் வேற ஊருக்கு சென்று பிழைத்துக் கொள்கிறோம். பாலா அவனை முறைத்தவாறு இருக்க,
எனக்கு இன்னொரு செய்தியும் தெரியும். நீங்கள் என்னை விட்டு விட்டால் நான் கூறுவேன் சமர் கூற,
என்னடா, பிளாக்மெயில் பண்றியா? உன்னை விட்டு விடுகிறேன். நீ மறுபடியும் அவர்களுடன் சேர்ந்தால் கொன்று விடுவேன் மிரட்ட,
கொலை செய்ய சொன்னவனுக்கு இவ்வூரிலும் கம்பெனி இருக்கிறதாம். இன்னும் இரண்டு வாரத்தில் அவன் சென்னை வர போகிறானாம். இவனை சாட்சியாக கருதி, நீ செல்ல நானே ஏற்பாடு செய்கிறேன் என்று அவனது குடும்பத்தை பேருந்து நிலையத்திற்கு வர வைத்து, பாலாவே அனுப்பி வைக்க, திடீரென பேருந்தை வழி மறைத்து, நீ எங்கேயும் செல்ல வேண்டாம் என்று மருத்துவமனைக்கே அவனையும், குடும்பத்தையும் அழைத்து வந்து, உடல் நலமில்லாதவன் போல் நடித்து இங்கேயே இருந்து கொள்ளுங்கள். இந்த அறையை விட்டு யாரும் வெளியே வராதீர்கள். உங்களுக்கு தேவையான அனைத்தையும் நானே கொண்டு வந்து தருகிறேன். மூன்று நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் அவ்வறையில் விட்டு சென்றான்.
ரகுவிடம் வந்து அவனது கையை பற்றி விசாரிக்க, வலி இருக்கிறது. நானும் அந்த கொலைகாரனை பற்றி கண்டறிய உதவுகிறேன் ரகு கூற,
வேண்டாம். நீங்கள் ஓய்வெடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்.
ரகு ஸ்வேதாவை பற்றி விசாரித்தான்.
அவளால் எழ முடியவில்லை. வலி இருக்கிறது. மெதுவாக பேசுகிறாள். ரகுவிடம் பேசி விட்டு, ரேணுவிற்கு போன் செய்து, உனக்கு எப்படி இருக்கிறது?
என் மேல் உங்களுக்கு என்ன அக்கறை? நான் கீழே விழுந்த போது அப்படி சிரித்தீர்கள்?
ஹே, நீ அதனை சீரியசாக எடுத்துக் கொண்டாயா? நான் சும்மா விளையாட்டிற்காக தான் சிரித்தேன்.
ஒருவர் கீழே விழுவதை பார்த்து விளையாட்டிற்காக யாராவது சிரிப்பார்களா?
அதை விடும்மா என்று மருத்துவமனையில் நடந்த அனைத்தையும் கூறினான்.
இதற்கு காரணம் திலீப்பாக தான் இருப்பான். அவனை சும்மா விடக் கூடாது. அண்ணா இப்பொழுது எப்படி இருக்கிறார்? என்று கேட்க,
வலியுடன் தான் இருக்கிறான். திலீப் தான் காரணமென்று கூற முடியாது. முதலில் அதற்கான சாட்சியை கண்டறிய வேண்டும்.
ரேணு உன்னால் மதுவுடன் ரியாவையும் சேர்த்து கவனித்துக் கொள்ள முடியுமா?
நான் பார்த்துக் கொள்கிறேன்.ஆனால் அண்ணா ஒத்துக் கொள்ள மாட்டாரே!
ரகுவை சம்மதிக்க வைப்பது என்னுடைய பொறுப்பு.
ரொம்ப சந்தோசம் பாலா. ரியாவுடன் பேசியே வெகு நாளாகி விட்டது. அவளுக்காக காத்திருப்பேன் ரேணு கூறினாள்.
இதுவரை என்னை சார் என்று தானே கூப்பிடுவாள். இப்பொழுது உரிமையாக பாலா என்று கூப்பிடுகிறாளே என்று மகிழ்ச்சியடைந்தான். இருவரும் பேசியவுடன் போனை துண்டித்து விட்டு, ரகுவிடம் பேச ஆரம்பித்தான் பாலா.
ரகுவோ யாரென்று தெரியாதவர்களிடம் ரியாவை எப்படி விடுவது? அவளை ராஜம்மா பார்த்துக் கொள்வார்.
அவர்கள் உங்களையும் பார்த்துக் கொண்டு, ரியாவையும் எப்படி பார்த்துக் கொள்ள முடியும்? இப்பொழுது நிலைமையும் சரியில்லை. எந்த நேரம் எவன் எப்படி வந்து தாக்குவான் என்று கூற முடியாது. நான் சீக்கிரமே பிரச்சனையை சரி செய்ய பார்க்கிறேன். அதுவரை அனைவரும் ஒன்றாக இருந்தால் தான் பாதுகாப்பாக இருக்க முடியும். ராஜம்மாவும் ரியாவுடனே இருக்கட்டும்.
அதுமட்டுமல்லாமல் மது பாப்பாவும் அங்கே தான் இருக்கிறாள். ரியாவிற்கு விளையாடவும் ஆள் இருக்கும். என்னுடைய அம்மாவும் இருக்கிறார். அவரும் பார்த்துக் கொள்வார் கூற, யோசித்து விட்டு சரி என்றான்.
நன்றாக பார்த்துக் கொள்வார்கள் தானே!
இரண்டே நாட்கள் தான். ரியாவிற்கு நான் பொறுப்பு.
என் உயிரே ரியா தான்.
நீங்கள் கவலைப்படாதீர்கள்! அவளை நன்றாக கவனித்துக் கொள்கிறோம்.
ரியாவை ரகுவிடம் அழைத்து வந்து காட்டி விட்டு, கிளம்புகிறோம் என்று அங்கிருந்து அழைத்துச் செல்ல, ரகு வருத்தத்துடன் இருந்தான்.
ரியாவையும், ராஜம்மாவையும் அவர்களது வீட்டிற்கு அழைத்து சென்று இரண்டு நாட்களுக்கு தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு, மகா வீட்டிற்கு வந்தனர்.
ரியா உனக்காக நான் ஒரு பரிசு வைத்திருக்கிறேன். நீ அதற்காக கொஞ்ச நாட்கள் காத்திரு. அது உனக்கு கிடைக்கும் பாலா கூற,
அங்கிள், என்ன பரிசு?
அது தான் ரகசியம் கூறிக் கொண்டே வீட்டினுள் நுழைய, ரேணு ரியா பார்த்தவுடனே அவளை அணைத்து ஆசை தீர முத்தமிட்டாள். என் செல்லமே ஆன்ட்டியை பார்க்க இத்தனை நாளா?
ரேணு ஆன்ட்டி,..நீங்களா? என்று ரியாவும் ரேணுவை அணைத்துக் கொள்ள, மது அங்கே வந்தாள். அவளை பார்த்தவுடன் ரியா மகிழ்ச்சியாக அவளை நோக்கி ஓடி வர, மதுவும் அவளை பார்த்து மகிழ்ந்தாள்.
ரியா, மதுவிடம் நீ ரேணு ஆன்ட்டியுடன் தான் இருக்கிறாயா?
ஆமாம், என்னுடைய அக்கா… கூற
அக்கா, அன்று மித்து ஆன்ட்டியை பார்க்க சென்றோமே! அன்றே நாங்கள் தோழிகளாகி விட்டோம். ரேணு இருவரையும் பார்த்து புன்னகைக்க,
அய்யோ! அவள் பெயர் மித்து அல்ல, ஸ்வேதா…. ரியா கூற,
இல்லை மித்து தான் என்று இருவரும் மாறி மாறி பேச,
சரி, சரி….சண்டை போடாதீர்கள். அவள் பெயர் ஸ்வேதா தான். அவளை மித்து என்றும் கூறுவோம் ரேணு கூற, ரியாவின் முகம் மாறியது.
அதை கவனித்த ரேணு, என்ன ஆயிற்று டா?
என்னுடைய அம்மாவின் பெயரும் மித்து தானே! உங்களுக்கு தெரியும் தானே ஆன்ட்டி கூற, அவளுக்கு என்ன கூறுவதென்று தெரியாமல் ரேணு கண்கலங்க, பாலா ரியாவை தூக்கிக் கொண்டு, உன்னுடைய அம்மா பெயர் அழகாக இருப்பதனால் ஸ்வேதா அவளது பெயரை மித்து என்று செல்ல பெயராக வைத்துள்ளாள் என்று கூறி சமாளித்தான்.
அப்படியென்றால் நான் அவளை மித்து என்று கூப்பிடவா? நீ ஸ்வேதா என்றே கூப்பிடு என்றான்.
உள்ளே வாருங்கள் என்று அனைவரையும் உட்கார வைத்து, ராஜம்மாவும், மகாலட்சுமியும் பேசி கொண்டிருக்க, குழந்தைகள் விளையாட, பாலா அங்கிருந்த சோபாவில் சாய்ந்து கண்ணை மூடி படுத்திருந்தான்.
குழந்தைகளுக்கு பாலை ஆற்றி கொடுத்து விட்டு, காபி போட்டு எடுத்து வந்து அனைவருக்கும் கொடுத்தாள். பாலா உறங்கி கொண்டிருக்க, அவனை எழுப்பாமல் அவனுக்கு எடுத்து வந்ததை உள்ளே எடுத்து செல்ல,அவளது அத்தை கவனிக்க, ராஜம்மாவும் கவனித்து சிறு புன்னகையை உதிர்த்தார்.
கொஞ்ச நேரத்தில் பாலா எழுந்திருக்க, நேரமாகி விட்டது. இப்படியா அயர்ந்து தூங்குவேன் மனதினுள் நினைத்தவாறு நான் கிளம்புகிறேன் ஆன்ட்டி கூற,
அவரோ, நான் ஒத்துக் கொள்கிறேன் என்று கூற, புரியாமல் விழித்தான் பாலா.
அன்று ரேணுவை பற்றி கூறினாயே! அதற்கு ஒத்துக் கொள்கிறேன் கூற, அவனுடைய காதலுக்கு ரேணுவின் அத்தை ஒத்துக் கொண்டார் என்று மகிழ்ச்சியுடன் அவரது காலில் விழ, எனக்கு இதெல்லாம் பிடிக்காது. யாருடைய காலிலும் விழாதே என்று கூற, மகிழ்ச்சியுடன் சரிங்க ஆன்ட்டி என்றான்.
ரேணு அங்கே வந்து, கிளம்பி விட்டீர்களா? காபி குடித்து விட்டு கிளம்புங்கள் கூற, அவனோ பல்லை காட்டிக் கொண்டே நிற்க, அவள் அவனை ஒருவாறு பார்த்து விட்டு,
எதற்காக இப்படி பல்லை காட்டுகிறீர்கள்?
அவன் ஏதும் கூறாமல் அமைதியானான். மற்றவர்கள் அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
பாலா காபியை குடித்து விட்டு,ரியாவிடம் வந்து, அப்பாவை பார்க்க வேண்டும் என்றால் ரேணுவிடம் கூறு. அவள் என்னிடம் கூறியவுடன் வந்து அழைத்து செல்கிறேன்.
தேங்க்ஸ் அங்கிள், பாலாவின் கழுத்தை கட்டிக் கொள்ள, மதுவும் அவளுடன் சேர்ந்து கொள்ள,பாலா அங்கிருந்து சென்றான்.
ரேணுவின் மாமா கூறியது போல கீதாவின் கணவரை சந்திக்க,ஜெயிலுக்கு சென்றான் பாலா. கோபத்துடன் அவனை முறைத்துக் கொண்டே நிற்க,
நீங்கள் என் மீது கோபமாக இருக்கிறீர்கள் போல. என்னை ரௌடி என்று தானே அனைவரும் கூறுகிறார்கள். அது உண்மையில்லை.நானும் சராசரி மனிதன் தான்.என்னை ஒரு பெண் காதலித்தாள்.ஆனால் எனக்கு கீதாவை தான் பிடித்தது.உங்களிடமும்,அம்மாவிடமும் பேச நினைத்தேன். அவள் தான் தன் வீட்டில் யாரும் தன்னை புரிந்து கொள்ள மாட்டார்கள். நம் காதலையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறவும் நாங்களே திருமணம் செய்து கொண்டோம். நன்றாகவே நாட்கள் நகர்ந்தது.
அப்படியொரு நாள் தான், கீதாவை யாரோ கொலை செய்ய போகிறார்கள் என்று என்னுடன் படித்த ஒரு பெண் கூறினாள். அதுபோலவே வீட்டிற்கு வெளியே ஆட்களை பார்த்தேன். வேண்டுமென்றே கீதாவுடன் சண்டை போட்டேன். இருவரும் ஒரு நாள் முழுவதும் பேசாமல் இருந்தோம். அப்புறம் யாரும் வீட்டருகே இல்லை. மீண்டும் சமாதானமாகி மகிழ்ச்சியாக இரண்டு நாட்கள் தான் இருந்தோம். வீட்டிற்கு வெளியே அதே ஆட்கள் கத்தியுடன் இருந்தனர். இதற்கு மேல் அமைதியாக இருக்கக்கூடாது என்று அவர்களிடம் சென்று பேசினேன். அவர்கள் கீதாவை விட்டு பிரிந்து செல்ல சொன்னார்கள்.
நான் முடியாது என்று கூறியவுடனே வீட்டிற்குள் கத்தியுடன் செல்ல, கோபத்தில் நானும் அவர்களுடன் சண்டை போட்டேன். கொலையும் செய்து கீதாவிற்கு தெரியாமல் மறைத்து விட்டேன்.
இதனை வீடியோ எடுத்து, என்னை காதலித்த பெண் என்னை மிரட்டினாள். அவளை திருமணம் செய்து கொள்ள சொன்னாள். என்னால் முடியாது என்று உறுதியாக கூற, கீதாவை கொலை செய்து விடுவேன் என்று கூறவே மனதை கல்லாக்கிக் கொண்டு, கீதாவுடன் இருக்க முடியாது என்று அவளை விட்டு சென்று தலைமறைவானேன்.
கீதா கஷ்டப்படுவதை தூரத்தில் இருந்து பார்த்தேன். எனக்கு அவளது உயிர் தான் முக்கியமாக பட்டது. அதனால் அவளருகே செல்லவில்லை. அவள் கர்ப்பமாக இருப்பது தெரிந்து தான் அவளை சந்திக்க மருத்துவமனைக்கு வந்தேன். அதற்குள் அவள் தவறான முடிவெடுத்து விட்டாள். அழவே ஆரம்பித்தான் அவன். அன்று என்னை போலீஸ் அழைத்து சென்றனர். அவளிடம் தான் அழைத்துச் சென்றனர். அவள் மறுபடியும் திருமணம் பற்றி பேசவே நான் வெறியாகி விட்டேன். நான் என் மனைவியை பறி கொடுத்து நின்றால், அவள் பேசியதை கேட்டு பொறுக்க முடியாமல் அவளை கொன்று விட்டேன்.
பாலாவே அதிர்ச்சியாகி விட்டான். அவளையும் கொன்று விட்டாயா?
ஆமாம்.
நான் நீ வெளியே வர ஏதாவது செய்கிறேன் பாலா கூற,
வேண்டாம். நான் சீக்கிரமே என் மனைவியையும், குழந்தையையும் சந்திக்க போகிறேன் அவன் கூற, பாலா கண்ணிலும் நீர் கசிய,
என்னை கீதாவின் கணவனாக ஏற்று கொள்வீர்கள் தானே?
என் தங்கைக்கான சரியான கணவன் நீ தான் அவன் கை மீது பாலா கை வைக்க,
எனக்கு ஒன்று மட்டும் செய்கிறீர்களா?
கீதாவின் சமாதி அருகே எனக்கும் சமாதி வைக்க வேண்டும் அவன் கேட்க, பாலாவால் தாங்க முடியாமல் அழுதான்.
அதற்குள் பாலாவை கிளம்ப சொல்லி அழைப்பு வரவே, கண்ணை துடைத்துக் கொண்டு வெளியே சென்றான்.
நேராக போலீஸ் ஸ்டேசன் சென்று, பிடித்து வைத்தவர்களை விசாரித்தான் பாலா.
சார், நீங்கள் என்ன தான் விசாரித்தாலும் அந்த பெண்ணை கொல்ல தான் போகிறார்கள்.
என் தங்கையவே கொல்வார்களா?
உங்கள் தங்கையா? அவளை அனாதை என்று கூறினார்களே!
அவள் அனாதையா? நான் இருக்க அவள் எப்படி அனாதையாக முடியும்?
பின் அவனை அவனே கட்டுபடுத்திக் கொண்டு, பத்து கோடி கொடுத்தது யார்?
எங்களால் எதையும் கூற முடியாது அவர்கள் கூறவே, துப்பாக்கியை எடுத்து நீட்டினான்.
சார், பூச்சாண்டி காட்டாதீர்கள் ஒருவன் கூற, அவன் கையிலே சுட்டான் பாலா.
அவன், அய்யோ! அம்மா! என்று கத்த,
இப்பொழுது எப்படி வசதி? பாலா மற்றவன் நெற்றி முன் நீட்ட, மற்றவர்கள் பயந்து கூறுகிறோம் என்றனர்.
மதுரை “ஆர். ஹச் சன்ஸ்” கம்பெனி முதலாளி ராமச்சந்திரன் கொலை செய்ய சொன்னார்.
பொய் கூறாதீர்கள், அந்த கம்பெனி ரகுவுடையது தானே!
முன்பு அவர் தான் இருந்தார். அவர் எப்பொழுது சென்னைக்கு கிளம்பி வந்தாரோ அப்பொழுதே அனைத்தும் மாறி விட்டது.
அப்படியென்றால் அந்த திலீப்?
அவனுடைய மருத்துவமனையையும் பிடுங்கி விட்டார்கள்.
யார் அந்த ராமச்சந்திரன்?
அனைவரும் தயங்க, கூறுங்கள் துப்பாக்கியை காட்ட,
நாங்கள் கூறினால், எங்களையும் கொன்று விடுவார்கள்.
நீங்கள் ஜெயிலுக்குள் பாதுகாப்பாக இருக்கலாம்.
சார், நாங்கள் என்ன செய்தோம்? உங்களிடம் சாட்சி உள்ளதா? கேட்க,
சரி,….சரி…. ஒருவனது தோளில் கையை போட்டு கொண்டு, உங்களது பாதுகாப்பிற்காக தான் சொல்கிறேன். அங்கு தான் பாதுகாப்பு மிக அதிகம். அதனால் தான் கூறினேன். நீங்கள் என்னுடன் இங்கே இருப்பது எப்படியும் அவர்களுக்கு தெரிந்திருக்கும். வெளியே சென்றால் உங்களை சும்மா விடுவார்களா என்ன! நீங்கள் எதையும் கூறவில்லை என்றால் நம்புவார்களா?
அவர்கள் யோசித்து விட்டு, நாங்கள் உள்ளே செல்கிறோம் கூற, கூறுங்கள் என்று பாலா கேட்க,
ஒருவன்…தயங்கிக் கொண்டு, மரகதம்மாவின் இரண்டாவது கணவர் என்றான்.
என்னடா கூறுகிறீர்கள்? அதிர்ச்சியோடு கேட்க,
அந்த அம்மாவின் முதல் கணவர் இருக்கும் போதே, இவருடனும் பழக்கம் இருந்தது. இருவரும் ரகசியமாக பார்த்துக் கொள்வார்கள். அந்த திலீப் ராமச்சந்திரனின் மகன் தான். அந்த அம்மாவும் சேர்ந்து தான் இந்த பெண்ணை கொல்ல கூறியது.
எப்படி கம்பெனி மாறியிருக்கும்?
ரகுவின் மனைவி இறந்த சமயம் பார்த்து, அவரிடம் ஏதோ கூறி அவருடைய கையெழுத்தை வாங்கிக் கொண்டார்கள்.
ஆனால் திலீப் தான் காரணமென்று ஸ்வேதா கூறினாளே!
அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. இதுவே மறைந்திருந்து தான் தெரிந்து கொண்டோம்.
போனை எடுத்து பாலா அவனது நண்பன் ராஜாவிடம், அந்த விடுதி பெண்ணை அழைத்து வாடா..கூறி விட்டு அவனது டேபிள் மீது காலை வைத்து கண்ணை மூடினான்.