அதன்பின் வந்த நாட்களில் ரூபனுக்கு தான் மனது ஒருநிலையில் இல்லை.மனம் முழுவதும் மதுவின் பின்னே செல்வது போன்ற பிரம்மை.கல்லூரி முடிந்து வரும் நேரம் அவனை அறியாமல் கண்கள் அவளை தேட தொடங்கியது.அவளிடம் இருந்து அழைப்பு வராதா என்று மனது ஏங்க ஆரம்பித்தது.அங்கு ரூபன் மதுவின் நினைவில் இருக்க மதுவோ தன் மனதை முழுவதும் கூறியபின் மனது சற்று தெளிந்திருந்தது.அதனால் அவள் இயல்பாக கல்லூரி படிப்பு,பின் தோழிகளுடன் அரட்டை என்று நேரத்தை போக்கினாள்.இவ்வாறு மூன்று நாட்கள் சென்ற நிலையில் மூன்றாவது நாள் ரூபனிடம் இருந்து அழைப்பு வந்தது மதுவிற்கு.அப்போது அவள் வகுப்பில் இருந்ததால் எடுக்கவில்லை அவனிடம்,
“என்ன…”என்று குறுஞ்செய்தி அனுப்ப அவனோ,
“போனை எடு…”என்று பதில் அனுப்ப மது முகத்தில் மலர்ச்சி.அதே மலர்ச்சியுடன்,
“நான் இப்ப கிளாஸ்ல இருக்கேன்…அப்புறமா கூப்பிடுறேன்…” என்று அனுப்பினாள்.அதன்பின் அவனிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.
“ச்ச…மது அத்தானே இப்ப தான் ஏதோ மனசு மாறி உனக்கு கால் பண்ணினார்…எடுத்து பேசறதுவிட்டுட்டு அவரோட விளையாட இது தான் நேரமா…”என்று தன்னை நொந்துக் கொண்டு வகுப்பில் அமர்ந்திருக்க,
“எஸ் க்யூஸ் மீ மேம்…”என்ற கம்பீர குரலில் அனைவரும் திரும்பி வாயிலை நோக்க மதுவோ ரூபனைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்திருந்தாள்.அவளின் பக்கத்தில் இருந்த பவித்ரா,
“ஏய் மது…ஏய் மது…”என்று உலுக்க அதில் உணர்வுக்கு வந்தவள்,
“என்னடி…”என்று கேட்க
“மேம் உன்னை தான் கூப்பிடுறாங்க…”என்று கூறவும் திருதிரு என்று முழித்தவாரே எழுந்து நிற்க,அவளது வகுப்பு பேராசிரியர்,
“மது யூ கோ…”என்று கூற அவளோ பேந்த பேந்த விழிக்க ரூபனுக்கு தான் சிரிப்பை அடக்குவது பெரும் பாடாகி போனது.அவள் தான் ரூபனைக் கண்டதிலிருந்து கனவில் இருக்கிறாளே ,இதில் சுற்றம் எங்கே புரியும்.அவளது தடுமாற்றத்தை உணர்ந்தவன்,
“பாட்டிக்கு கொஞ்சம் முடியல வா…”என்று கண்ணடித்து விட்டு செல்ல கீ கொடுத்த பொம்மை போல் அவனின் பின்னே சென்றாள்.
அவர்கள் சென்றது கடற்கரை ரூபனோ அவளையே பார்த்துக் கொண்டு நிற்க மதுவிற்கு தான் இப்போது சங்கோஜமாக இருந்தது.
“என்ன…”என்று அவளது விழிகளால் அபினயம் படிக்க எப்போதும் போல் மயங்கியவன் அவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு,
“இன்னும் இரண்டு நாள்ல என்னோட புராஜெக்ட் முடிச்சு நான் சப்மிட் செய்யனும்….”என்று கூற அவனை வெட்டவா குத்தவா என்று பார்த்த மது,
“அதுக்கு…”என்று கேட்க,
“அது அது வந்து…”என்று ரூபன் இழுக்க மதுவின் கோபம் எல்லை கடந்தது,
“யோவ்…என்னை என்ன நினைச்ச….”என்று அடிக்க ஆரம்பிக்க,அவளது கைகளை பிடித்து தன் கைகளுக்குள் வைத்தவன்,
“இருடி நான் சொல்றத முழுசா கேளு…நீ என்னை நைட் ரொம்ப டிஸ்ரப் பண்ணுற அதான் இரண்டு நாளைக்கு பண்ணாதனு சொல்ல வந்தேன்…”என்று கூற,
“விடு விடு போய்யா…போ…”என்று மது கத்த தான் கூற வருவதை அவள் கவனிக்கவில்லை என்பதை உணர்ந்த ரூபன்,
“விழி…”என்று அழைக்க அவனை ஏறிட்டவள் கண்களுடன் தன் கண்களை கலக்கவிட்டவன் ஆழ்ந்த குரலில்,
“இதே மாதிரி என் கூட சண்டை போட…அப்புறம் சமாதானம் செய்ய…வாழ்நாள் முழுக்க நீ வேணும்….ஐ லவ் யூ….”என்று கூற மது மனநிறைந்த மலர்ச்சியுடன் அவனை அணைத்துக் கொண்டாள். எவ்வளவு நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு நின்றனர் என்று அவர்களுக்கே தெரியவில்லை இருவரும் தங்கள் காதலை அவர்களின் அணைப்பில் தெரிவிக்க இதில் முதலில் நிகழ்வுக்கு வந்தது மது.தாங்கள் இருப்பது பொது இடம் என்பதை உணர்ந்து அவனது அணைப்பில் இருந்து விலக ரூபனோ அணைப்பை இறுக்கினானே தவிர தளரவிடவில்லை.அவனது கையின் அழுத்தை உணர்ந்த மதுவிற்கு தன் போல கன்னங்கள் செம்மையுற தாள முடியாத வெட்கத்துடன்,
“அத்தான்…”என்றாள் ஹஸ்கி குரலில் அழைக்க ரூபனுக்கோ அதெல்லாம் காதில் விழவேயில்லை.அவனது மனதை திறந்த மகிழ்ச்சி மற்றும் மதுவின் அணைப்பின் சுகம் என்று கனவில் மிதந்தவனை மதுமிதா உலுக்க அதில் தன் கலைந்தவன்,
“என்னடி…”என்றான் கிறக்கமாக.அவனுக்கு தன் கனவை கலைத்தது போல் உணர்வு அதில் கோபத்தை மதுவிடம் காட்ட அவளோ இவனது அணைப்பில் இருந்து விடுபட போராட அவளது செயலில் மேலும் கோபம் கொண்டவன்,
“ஏய் இப்ப எதுக்கு இப்படி நெளியிற…”என்று அவளது இடையை அழந்த பற்றி இன்னும் இறுக்க,அவனது கைகள் குறுகுறுப்பில் துளி விலகியவள்,
“அத்தான் இனி பக்கத்துல வந்தீங்க அவ்வளவு தான்…”என்று போலியாக மிரட்ட வாய்விட்டு சிரித்தான் ரூபன்.எப்போதும் போல் அவனது புன்னகை மயங்கியவள் ,
“இப்படி சிரிச்சிக்கேட்டே இருங்க அத்தான்….”என்று மனம் நிறைந்த மலர்ச்சியுடன் கூற ரூபனின் முகத்தில் சிரிப்பு மறைந்து சற்று இறுக்கம் பரவ மதுவிடம் திரும்பியவன்,
“உன்கிட்ட கொஞ்சம் பேசனும் விழி…”என்று கூற,
“அது என்ன விழி…என் பேரு மதுமிதா…”என்று மது கூற அவளைக் கண்டு மென்மையாக புன்னகை புரிந்தவன்.அவளது நயனமாடும் கண்களை நோக்கி,
“இந்த கண்ணு தான் என்னை உன் கிட்ட இழுக்குது….அதான் நான் உனக்கு வச்ச பேரு விழி…”என்று நீண்ட விளக்கம் தர,
“விழி…ம்ம்..நல்ல தான் இருக்கு…”என்று மது கூற அவளது கைகளை பற்றி தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு கடற்கரை மணலில் அமர்ந்தான்.அவனின் தோள்களில் சாய்ந்த மதுவிற்கு மனதில் இதுவரை இருந்த பாரம் எல்லாம் நீங்கியது போன்ற ஒரு உணர்வு.ரூபனும் அதே மனநிலையில் இருந்ததால் அவளது தலையின் மேல் தன் தலை சாய்ந்து அமர்ந்தான்.சிறிது நேரம் மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது.தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் பகிர்ந்துவிட வேண்டும் என்று ரூபன்,
“விழி….நான் உன்கிட்ட சில விஷயங்களை இப்பவே சொல்லிடுறேன்…”என்றவன் அவளை தன்னில் இருந்து பிரித்து அமரவைத்தான்.
“நான் உங்க தோள்ல சாஞ்சிக்கிட்டே கேக்குறேன் அத்தான்…”என்று மது சிணுங்க,
“நீ பக்கத்தில வந்தாலே நான் அவுட் ஆப் கன்ட்ரோல் ஆகிடுறேன்…இதுல நீ என் மேல சாஞ்சி…ம்ஹம் சரி வராது விழி…”என்று கூற மதுவிற்கு தான் முகம் செம்மையுற்றது அவனது பதிலில்.அவன் கூறியது போல் சற்று நகர்ந்து அமர்ந்தவள் அவனைக் காண,இப்போது அவனது முகத்தில் திவீரம் இருந்தது.
“விழி…நம்ம காதலுக்கு நம்ம வீட்டுல கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க….நாம தான் பேசி புரிய வைக்கிற மாதிரி இருக்கும்….அதனால முதல்ல நான் என்னோட புராஜெக்டை நல்லபடியா முடிச்சு ஒரு நல்ல வேலைக்கு போற வரைக்கும் நீ கொஞ்சம் பொறுமை காத்து தான் ஆகனும்….புரியுதா….”என்று ரூபன் கூற மது நல்ல பிள்ளை போல தலையாட்டினாள்.
“நீயும் உன்னோட சிஏ தேர்வுல நல்ல மார்க் எடுத்து நல்ல வேலைக்கு போகனும்…அதுவரை மத்த விஷயங்கள்ல உன் கவனம் சிதறாம இருக்கனும் புரியுதா….”என்று கூற அதற்கும் தலையாட்ட அவளது தலையை பிடித்து,
“தலையாட்டுறதவிட்டுட்டு நான் சொல்றத புரிஞ்சிக்க முயற்சி பண்ணு விழி….நீ எல்லா விஷயத்திலேயும் விளையாட்டு தனமா இருக்க….அதனால தான் சொல்லுறேன்…நான் ஓகே சொல்லிட்டேனு தினமும் காலேஜ் வந்து பாக்குறது,தேவையில்லாம மெஸேஜ் அனுப்புறது…இதெல்லாம் வேண்டாம்….நம்ம காதலை நாம தான் முதல்ல வீட்டுல சொல்லனும் வேறு யார் மூலமா விஷயம் போச்சுனா நல்லதில்லை பெரிய பிரச்சனை ஆகிடும்….அதனால நம்ம ரொம்ப கவனமா இருக்கனும்….இப்ப எனக்கு நல்ல வேலை ரொம்ப முக்கியம்….நான் நல்ல வேலையில இருந்தா தான் உன் வீட்ல பேசவே முடியும்…”என்று நீண்ட விளக்கம் கொடுத்துவிட்டு மதுவைக் காண அவளது முகமும் யோசனையில் இருந்தது.தான் கூறியதைப் பற்றி தான் யோசிக்கிறாள் என்று ரூபனும் அமைதியாக இருக்க மது,
“அத்தான் அப்ப நாம தினமும் பார்த்துக்க முடியாதா…”என்று அதி முக்கிய கேள்வியைக் கேட்க ரூபனுக்கு சுள்ளென்று கோபம் ஏறியது இவ்வளவு நேரம் சிறு குழந்தைக்கு கூறுவது போல கூறினால் இவள் இவ்வாறு கேட்கிறாள் என்று நினைத்தவன்,வேகமாக எழுந்து நிற்க,
“என்ன ஆச்சு அத்தான்…ஏன் எழுந்திட்டீங்க…”என்று கேட்டவாறு அவளும் எழ,அவளை முறைத்தானே ஒழிய எதுவும் பேசவில்லை.அவனது முகமே கூறியது அவன் கோபமாக உள்ளான் என்று.மதுவின் தலை தன போல் குனிந்தது.
“சாரி அத்தான்…என்னால உங்கள பார்க்காம இருக்க முடியாது அதான் அப்படி கேட்டேன்…”என்று கூற இப்பவும் அவன் முறைத்தானே ஒழிய பேசவில்லை,
“ப்ளீஸ் அத்தான் பேசுங்க…இப்ப தான் நமக்குள்ள எல்லாம் சரி ஆகிடுச்சினு நினைச்சேன்…இப்ப நீங்க கோபமா இருந்தா எனக்கு கஷ்டமா இருக்கு…”என்று கூற அவளும் வருந்துகிறாள் என்று உணர்ந்த ரூபினின் கோபம் சற்று தளர,
“எல்லா விஷயத்திலேயும் விளையாட்டு நல்லது இல்ல விழி….விளையாட்டு வினையா மாறி போச்சுனா நம்மளால ஒண்ணும் செய்யமுடியாது…அதுக்கு தான் உனக்கு இவ்வளவு பொறுமையா சொல்லுறேன்…புரியுதா…”என்று கூற இம்முறை,
“ம்ம் புரியுது அத்தான்…”என்று கூறியவள் அவனுடன் கைகோர்த்து நடந்தாள்.இவ்வாறு இருவரின் காதல் பயணமும் நல்ல முறையில் தான் தொடங்கி மூன்று மாதங்கள் வரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சென்றது.மதுவும் ரூபனின் பேச்சைக் கேட்டு நல்ல பிள்ளையாக நடந்துகொண்டாள்.ரூபனும் அவனது புராஜெக்ட்டை நல்ல முறையில் முடித்து சமர்பித்தான்.அவனுடைய புராஜெட்டிற்கு நல்ல வரவேற்ப்பும் கிடைக்க அவனை வேலைக்கு நேர்முக தேர்விற்கு அழைத்தனர்.அந்த சந்தோஷமான செய்தியை வீட்டில் சொல்ல அனைவருக்கும் மகிழ்ச்சி,மதுவிற்கும் கைபேசி மூலம் தகவல் சொன்னவனை மது பிடித்துக் கொண்டாள்.மது ஒருமுறை ரூபனைக் காண வேண்டும் என்று பிடிவாதம் செய்ய ரூபனிற்கும் அவளைக் காண வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.மாலை கடற்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.அதுவே அவர்களின் கடைசி சந்திப்பாகி போனது.