மயக்கும் மான்விழியாள் 18

கோவிலின் உள்ளே வந்த மதுவிற்கு மனதின் பதட்டம் குறையவேயில்லை.தான் செய்த செயலின் வீரியம் செய்யும் போது தெரியவில்லை ஆனால் இப்போது அவளது மனது சூறாவெளியில் சிக்கியதை போன்று தோன்ற ஒரு தூணில் தன்னை சாய்துக் கொண்டாள்.பார்த்த உடன் ஒருவனை பிடித்துவிடுமா என்ற கேள்விக்கு பதில் இல்லை அவளிடம் ஆனால் அவன் மீது ஒரு பிடித்தம் மனதில் ஏற்பட்டது என்வோ உண்மை.அதனால் தான் நிவேதா அவனை சாதாரணமாக கூறியதைக் கூட ஏற்க முடியாமல் அவளை விரட்டினாள்.

பின் அவனைத் தேடி கோவிலின் உள்ளே வர தன் தாயுடன் அவனைக் கண்டவுடன் அவள் மனதில் முதலில் தோன்றியது அவன் தனக்கு என்ன உறவு என்றே.தன் தாய்வழி பாட்டி மூலம் அவனைப் பற்றி அறிந்து கொண்டதும் அவள் மனதில் என்ன உணர்ந்தாள் என்று வரையறுக்க முடியவில்லை.அதுவரை அவன் மேல் ஒருவித விருப்பம் மட்டுமே இருந்தது தன் பாட்டி அவன் உன் சொந்த தாய் மாமான் மகன் கூறியவுடன் அவன் தனக்கானவன் என்ற எண்ணம் வலுப்பெற்றது.அவன் தனக்கானவன் என்று நினைத்த நொடி அவனை எப்படியேனும் சந்திக்க வேண்டும் என்றே தன் வீட்டில் உள்ளவர்களிடம் பொய் சொல்லி தான் அவனைக் காண வந்தாள்.ஆனால் அவன் தன்னை தரக்குறைவாய் பேசவும் மனது வலிக்க அவனிடம் தன் மனதில் உள்ளதை கூறியவள் கடைசியாக செய்த காரியம் தான் மனதை படபடக்கச் செய்திருந்தது.

“மதூ…மதூ…”என்ற தாயின் அழைப்பில் சுயத்திற்கு வந்தாள் மதுமிதா.தூண் மறைவில் இருந்து வெளி வந்தவள் தன் முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு அன்னை நெருங்கினாள்.

“ம்மா…நான் இங்க இருக்கேன்…ஏன் கத்துத்துரீங்க…”என்றபடி வந்தாள்.

“எங்கடி போன…”என்று கடுகடுத்தார் சுந்தரி.பின்னே அவரும் என்ன தான் செய்வார் தன் தாயிடம் மகள் பேசிக்கொண்டிருப்தைக் கூட பொறுக்க முடியாமல் பூமிநாதன் மகளை எதுவும் கூறமுடியாத காரணத்தால் அவரை வார்த்தைகளால் வாட்டினார்.எல்லாம் உன்னால் தான் நான் உன் அப்பா,அம்மாவை மட்டும் தான் அழைக்க சொன்னேன் நீ உன் அண்ணன் மகனையும் அழைச்சிருக்க எவ்வளவு தைரியம் உனக்கு என்று வார்த்தைகளால் சாட சுந்தரிக்கு மனதே விட்டு போனது.என்ன மாதிரி மனிதர்கள் இவர்கள் என்று தோன்றியது.இதில் ஒரே நல்ல காரியம் ரூபன் வந்தது அருணாசலத்திற்கு தெரியாது தெரிந்திருந்தால் அதற்கும் சேர்த்து பூமிநாதன் ஆடித்தீர்த்திருப்பார்.அதுமட்டும் கடவுளுக்கு நன்றி உரைத்தார் சுந்தரி.

திருமணம் முடிந்த உடன் பூமிநாதன் மதுமிதாவை தேட அவளோ அங்கே இருப்பதாக தெரியவில்லை அதனால் மேலும் சுந்தரிக்கு சில பல அர்ச்சனைகள் விழுந்தது.

“இங்க தான் மாப்பிள்ளை இருப்பா…போ சுந்தரி போய் கூட்டிட்டுவா….”என்று மகள் திட்டுவாங்குவது பிடிக்காமல் மோகனா தான் அவரை காப்பாத்தியது.செந்தில்நாதன் இதையெல்லாம் பார்த்தாலும் எதையும் கூறவில்லை தன் மகள் இவ்வளவு பொறுத்து போக வேண்டுமா என்று நினைத்தவர் அதை நேரிடையாக சுந்தரியிடம் கேட்க,

“ப்பா…நான் எது பேசினாலும் பிரச்சனை தான் வரும்…அதுக்கப்புறம் நான் அந்த வீட்டுல இருக்கமுடியாது…வெளில தான் வரனும்…வந்து உங்க கூட இருக்க முடியுமா…ப்ச் விடுங்க இதெல்லாம் எனக்கு பழகிடுச்சு….”என்று சுந்தரி கூற மகள் கூறுவதும் உண்மை தானே தாங்களே இப்போது மருமகளிடம் இருக்கும் போது தங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தவர்,

“ம்ம்…நீ சொல்ரதும் சரி தான் ஆனா உன்னை ரொம்ப கீழ் இறக்குறாங்கமா….”என்று தந்தையாக மனது வெதும்ப,

“ப்பா…எல்லா இடத்திலேயும் சண்டை போட முடியாது அமைதியா இருந்து தான் ஆகனும் அது நம்மை மட்டுமில்ல நம்மை சார்ந்தவங்களையும் காக்கும்…”என்று எடுத்துக் கூற தன் மகள் இவ்வளவு பேசுவாளா என்ற பிரம்மிப்புடன் பார்த்திருந்தார் நாதன்,

“போதும் உங்க பாச போராட்டத்தை நிறுத்திட்டு மதுவை தேடுங்க…மாப்பிள்ளை நம்மலேயே முறைக்குறாரு…போ சுந்தரி…”என்று மோகனா திட்ட மலர்ந்த முகத்துடன் தன் மகளை தேடி வந்தார் சுந்தரி.

“இங்க தான் ம்மா இருந்தேன்…நீங்க ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கீங்க…”என்று தாயின் முகத்தைக் கண்டு கேட்க என்னவென்று கூறுவார் உன் தந்தையின் அர்ச்சனைகளால் வந்த பதற்றம் என்றா.அவர் ஏதோ யோசனைக்கு போகவும் மது ,

“என்னம்மா…அப்பப்ப யோசனைக்கு போயிடுரீங்க…”என்று கேட்க சுந்தரி பதில் கூறும் முன்,

“ம்ம் உன்னை மாதிரி ஒன்னை பெத்தா அப்படி தான் இருக்கும்…”என்ற கடுகடுத்தபடி வந்தார் மோகனா.பேத்தியால் மகள் திட்டுவாங்கியது பொறுக்க முடியாமல் பூமிநாதன் மேல் உள்ள கோபத்தை அவர் மதுமிதாவிடம் காட்ட,

“அச்சோ பாட்டி பார்த்து வாங்க எங்கயாவது உருண்டுற போறீங்க…”என்று அவர் கோபத்தை கண்டுக்காமல் மது அவரின் பருமனான உடையைக் கிண்டல் செய்ய,

“உங்க அப்பா ரத்தம் உனக்கும் ஓடுதுல…அதான் பேச்சு எல்லாம் இப்படி இருக்கு…”என்று மோகனா எரிச்சல் அடைய மதுவோ,

“நான் பூமி பாதி சுந்தரி பாதி…”என்று கண்களால் அபிநயம் படிக்க மோகனாவிற்கு தான் தலை சுற்றியது.என்ன எல்லாத்தையும் இவ்வளவு விளையாட்டா எடுத்துக்குறா…ஆளு தான் வளர்ந்திருக்கா போல மூளை வளரவேயில்லை என்று வாய்விட்டே தன் கணவினிடம் புலம்ப,

“கொஞ்சம் சும்மா இரு மோகனா…”என்று அடிக்குரலில் சீறினார் நாதன்.அவரது கோபத்தில் மோகனா,

“இப்ப ஏன் என் கிட்ட கோபப்படுரீங்க…அஞ்சு நிமிஷத்துல வந்துடுவேன் சொல்லிட்டு போனவ வரலை..அதனால மாப்பிள்ளை என் பொண்ணை திட்டுறார்…இவ என்னடான விளையாட்டா பேசுறா…”என்று மீண்டும் ஆரம்பிக்க நாதன் முறைத்த முறைப்பில் அவர் தானாக வாய்மூடினார்.அதுவரை விளாயாட்டாக இருந்த மது தன் தாயை தந்தை திட்டினார் என்றவுடன்,

“சாரி ம்மா…நான் இங்க தான் பக்கத்துல தான் போயிருந்தேன்….சாரி…”என்று மன்னிப்பை வேண்டியவள் மோகனாவிடம்,

“சாரி பாட்டி…எனக்கு இப்படி ஆகும்னு தெரியாது சாரி…”என்று செல்லம் கொஞ்ச கரைந்து தான் போனார் மோகனா.சுந்தரிக்கு நெடுநாட்கள் பிறகு மகளை தன் பிறந்தவீட்டினருடன் சேர்த்து பார்த்தில் மனதில் நிம்மதி பிறந்தது.

“இனியாவது அம்மா கிட்ட ஒழுங்க சொல்லிட்டு போ…”என்ற செந்தில்நாதன் சுந்தரியிடம் திரும்பி,

“சரிம்மா நாங்க கிளம்புறோம்…”என்று கூற அதுவரை மலர்ந்திருந்த சுந்தரி முகம் வாடியது.இதன் பிறகு எப்போது தன் தாய்,தந்தை பார்க்க போகிறோம் என்ற ஏக்கம் அவர் கண்களில் வெளிபட இம்முறை மதுவிற்கு தாயின் மனநிலை புரிந்தது அதனால்,

“சரி தாத்தா…கூடிய சீக்கரம் பார்க்கலாம்…”என்று கூற அவளைக் கண்டு விரக்தி புன்னகை சிந்தியவர் கிளம்ப ஆயத்தமாக,

“கண்டிப்பா நாம எல்லாம் ஒண்ணா சேருவோம் தாத்தா….எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு…”என்று அழுத்தமாக கூறினாள் மது.சுந்தரிக்கு மகளின் பதில் சற்று அதிர்ச்சி என்றாலும் ஒரு பக்கம் மனது மகள் கூறியது போல நடக்காதா என்று நப்பாசைக் கொண்டது.செந்தில்நாதன்,மோகனா விடைபெற அவர்களை வழியனுப்ப மதுவும்,சுந்தரியும் கூடவே வர மோகனாவிற்கு தான் பயம் பிடித்துக் கொண்டது எங்கே மருமகன் பார்த்துவிட்டால் பிரச்சனையாகிவிடுமோ என்று அவரது பார்வை வைத்தே விஷயத்தை ஊகித்த மது,

“பாட்டி எப்படியும் இப்ப போய் திட்டு தான் வாங்க போறோம்…அதை உங்கள வழி அனுப்பிட்டு போய் வாங்கிக்கிறோம்…”என்று இலகுவாக கூற சுந்தரியோ,

“ம்மா…அதெல்லாம் ஒண்ணும் சொல்லமாட்டார்…நான் பார்த்துக்குறேன்…” என்று சமாதானம் செய்து வைத்து அனுப்பினார்.

தன் தாத்தா,பாட்டியை பார்த்தவுடன் காருடன் வந்த ரூபன் இறங்காமலே இருந்தான்.வரும் போதே பார்த்துவிட்டான் கூடவே மதுவும்,சுந்தரியும் வருவதை,ஏற்கனவே மதுவின் செயலால் கோபத்தில் இருந்தவனுக்கு மீண்டும் அவளைக் காண பிடிக்காமல் உள்ளே அமர்ந்திருக்க,பாட்டிக்கு உதவுகிறேன் என்ற பெயரில் அவரைக் காரில் ஏற்ற வந்த மது ரூபன் அமர்ந்த முன் சீட்டின வழியே,

“பத்திரமா போங்க தாத்தா,பாட்டி…”என்று அவனை சீண்டும் விதமாக செய்ய கோபத்தில் முகத்தை திருப்பினான் ரூபன்.அதில் மேலும் சீண்டப்பட்ட மது யாரும் அறியா வண்ணம் அவனது கைகளை கிள்ளிவிட்டு செல்ல,

“பிசாசு..பிசாசு…இதெல்லாம் எப்படி வீட்டுல வச்சுருக்காங்கனு தெரியலை…”என்று முனுமுனுத்துக் கொண்டே வண்டியை எடுக்க சொல்ல மதுவோ ரூபன் தன்னை காண்பானா என்று அவனையே பார்த்தபடி இருக்க அவனோ நிமிரவேயில்லை.அவளது கோரிக்கை கடவுளை எட்டியதோ இல்லையோ மோகனாவை எட்டியது போலும்,

“ரூபா…உன் அத்தை உன்னையே தான் பார்க்குறா…பாரேன்…”என்று கூற வேறு வழியில்லாமல் தன் அத்தையிடம் வருவதாக தலையசைக்க சுந்தரியின் பின்னால் நின்ற மது அவன் நிமிர்ந்தவுடன் கண்ணடித்து விட்டு இருபுருவங்களையும் உயர்தியபடி பார்க்க அவனது முகத்தில் சிறு மலர்ச்சி தோன்றி மறைந்தது.அதோடு அவர்கள் விடைபெற தாயும்,மகளும் பூமிநாதனிடம் சென்றனர்.அவரோ முறைத்தபடி இருக்க,

“ப்பா…நான் இங்க தான் பக்கத்துல இருந்தேன்…என்னோட படிச்சவ வந்தா அவ கூட பேசிட்டு இருந்தேன்…அதனால கொஞ்சம் நேரம் போனது தெரியல…சாரி…”என்று தன் தந்தைக்கு ஏகப்பட்ட ஐஸ்களை வைத்து அவரை மலையிறக்கினாள்.

இரவு மொட்டை மாடியில் நிலவை வெறித்தபடி இருந்தான் சிவரூபன் வானத்து நிலவில் மதுவின் முகமும் அவளது விழியசைவும் தோன்ற ரூபனின் முகத்தில் மலர்ந்த புன்னகை.கைகள் தன் போல தன் கன்னங்கள் வருடியது.தில்லு தான் அவளுக்கு எனக்கே முத்தம் கொடுத்துட்டு ஓடிட்டாளே என்று நினைத்தவனுக்கு அவளது அத்தான் என்ற அழைப்பும் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியது.

“ரூபா…”என்ற தாயின் குரலில் நிகழ்வுக்கு வந்தவன்,

“ஆங்…அம்மா…”என்று தடுமாற தேவகிக்கு ஏற்கனவே அங்கு விஷேஷத்தில் யாரவது ஏதாவது கூறியிருப்பார்களோ என்று அவனது சோர்ந்த முகத்தைக் கொண்டு ஊகித்தவர் அவனிடம் தனியாக பேசவே வந்தார்.தான் அழைத்தவுடன் மகன் தடுமாறவும் தேவகிக்கு கவலை அதிகமாக,

“என்னப்பா…உன்னை யாரவது ஏதாவது சொன்னாங்களா…ஏன் ஒருமாதிரி இருக்க…”என்று அவனது கேசம் கோதியவாரே கேட்க ரூபனுக்கு தான் மனதை அடைத்து அதுவரை இருந்த மது என்ற மாய வலை அருந்து விழுந்தது.

ச்ச என்ன எல்லாம் நினைச்சுட்டேன்….தன் தாயை ஒதுக்கியவர்களை தான் ஏற்பதா நடக்காது….”என்று மனதிற்குள் பேசியவன் தன் தாயின் கலங்கிய விழிகளை துடைத்தபடி,

“ம்மா…அதெல்லாம் ஒண்ணுமில்ல…நீங்க வீணா குழப்பிக்காதீங்க…”என்று ஆறுதல் கூற தேவகியின் முகம் தெளிந்தது போல தெரியவில்லை அவர் கலக்கத்துடன் மகனின் முகத்தையே ஆராய அதிலிருந்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியாதால் கண்களை துடைத்துவிட்டு,

“சரிடா…ரொம்ப நேரம் முழிச்சிகிட்டு இருக்காத படு…:”என்றுவிட்டு கீழே சென்றுவிட்டார்.தளர்ந்த நடையுடன் செல்லும் அன்னையைக் கண்டவனுக்கு மனதில் பாரமேறியது.சற்று முன் மனதில் தோன்றிய சஞ்சலங்களை அகற்றினான்.இனி இதுபோல் மடத்தனம் செய்யக் கூடாது என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.ஆனால் அவனை விடுவதில்லை என்பது போல அவனை சஞ்சப்படுத்தவென்றே வந்தாள் மதுமிதா.

சிவரூபன் கட்டிக் கலையில் பொறியியல் முடித்துவிட்டு இன்டீரியஸ் பற்றி சிறப்பு படிப்பு  படித்துக் கொண்டிருந்தான்.தான் பயின்ற கல்லூரியில் பகுதி நேர ஆசிரியர் பணிபுரிந்து மேல் படிப்பும் படித்தான்.அதனால் அவனுக்கு படிக்க தேவையான கட்டணத்தை தன் வருமானத்தைக் கொண்டு பாதி அடைப்பான் மீதி தன் தாயிடம் இருந்து பெற்றுக்கொள்வான்.தாயின் சுமையை முடிந்தளவு குறைத்துவிடுவான் ரூபன்.யாரிடமும் அனாவசியமாக பேசாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதால் ரூபனிற்கு தனி மரியாதை கல்லூரியில்.படிப்பிலும் சரி கற்பிப்பிதலிலும் சரி ஒரு தனித்துவம் இருக்கும் அவனிடம் அதனாலே மாணவர்களின் விருப்பமான ஆசிரியரும் கூட.

தன் கல்லூரி முடிந்து வெளியில் வந்தான் ரூபன்.அவனிடம் வாகனம் கிடையாது முக்கால் வாசி நடந்தே சென்றுவிடுவான்.முக்கிய வேலையிருந்தால் மட்டுமே ஆட்டோ அல்லது பஸ்ஸில் செல்லவது.அவனுக்கு நடந்தபடியே தன் கண்களில் விழும் கட்டிங்களையும் அதன் அமைப்புகளையும் ஆராய்ந்தபடி செல்வதில் அலாதி பிரியம்.

அன்றும் அதே போல் நடந்து கொண்டிருக்க அவனை உராய்ந்தபடி வந்து நின்றது ஒரு ஸ்கூட்டி யார் தன்னை இப்படி இடித்தபடி வருகிறது என்று திரும்பி பார்க்க மலர்ந்த முகத்துடன் நின்றாள் மதுமிதா.

“ஹாய் அத்தான்…எப்படி இருக்கீங்க….”என்று கேட்டபடி தன் புருவங்களை உயர்த்த ரூபனுக்கோ இவள் எங்கே இங்கு என்று தோன்ற அவளையே அதிர்ச்சி விலகாமல் பார்த்திருந்தான்.

“அத்தான் என்னை சைட் அடிச்சது போதும்…வாங்க நான் உங்கள வீட்டுல விடுறேன்…”என்று கூற வீடு என்றவுடன் சுயத்திற்கு வந்தவன் அவளைக் கண்டு கொள்ளாமல் நடக்க அவளும் வண்டியுடன் இவன் பின்னே வந்தாள்,

“அத்தான்…வாங்க நான் உங்கள விடுறேன்…ஏன் கிட்ட பேசமாட்டீங்களா…”என்று ரோடு என்று பாராமல் அவள் பேசியபடி வர ரூபனுக்கு தான் தலைவலியாகி போனது,

“இங்க பாரு கிளம்பு முதல்ல…ரொம்ப ஓவரா தான் போற…இனி இதுபோல வந்த உன் அப்பாக்கு தகவல் போகும்…”என்று அவன் எச்சரிக்க அவன் அப்பா என்றவுடன் சற்று ஜர்க் ஆனவள் பின் சமாளித்து,

“சரி வரல…அதோ அங்க தெரியுதே அந்த பார்கிற்கு வாங்க உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்…”என்று இவள் கூற ரூபனோ,

“ஏய் ஒரு தடவ சொன்னா உனக்கு புரியாது….போ இங்கிருந்து…”என்று தன் பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்ப,அவனது சிவந்த கண்களே அவனது கோபத்தின் அளவைக் காட்ட சற்று நிதானித்த மது,

“சரி சரி கோபப்படாதீங்க….நாளைக்கு நம்ம அந்த பார்க்குல இதே நேரத்திற்கு சந்திக்கலாம்…நீங்க வரனும்…இல்ல இப்படி தான் செய்வேன்….ஓகே பை…”என்றுவிட்டு நகர அப்போது தான் ரூபனுக்கு மூச்சே சீரானது.தன்னை மீறி மனது அவளிடம் செல்கிறதோ என்று நினைத்தவன் பின் தலையைக் குலுக்கி தன்னை நிலைப்படுத்தி வீடு அடைந்தான். நாளை அவளிடம் என்ன பேச வேண்டும் என்று மனதில் சில முடிவுகளை எடுத்த பின்னே  தான் இரவு உறங்க சென்றான்.