துளிர் 4;
ஷிவானி, கடைசி வருடம் மருத்துவம் படிக்கும் மருத்துவ கல்லூரி மாணவி . அப்பா கண்ணன் சிறந்த இருதய நிபுணர் . நகரில் பல கிளைகளை கொண்ட பெரிய மருத்துவமனைகளை உடையவர். சென்னையில், விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்காரர்களுள் ஒருவர். அவரை பற்றியோ , அவர்கள் மருத்துவமனையை பற்றியோ தெரியாதவர்களே கிடையாது. எபேர்பட்ட இருதய பிரச்சினை என்றாலும் அதை கழட்டி, சரி செய்து மாட்டும் வித்தை அறிந்தவர். இதனாலே கர்வம் கொண்டவர். கைராசியனவர் என்று புகழப்படுபவர்.
எந்நேரமும் பணம், புகழ் பின்னால் செல்பவர். வீட்டில் கொஞ்சம் கண்டிப்பு அதிகம் . வீட்டிலோ, அல்லது வெளி இடத்திலோ அவள் அப்பா கண்ணன் நினைத்ததையே சாதிக்கணும் என்ற எண்ணம் கொண்டவர். தொழில் துறை தந்த கர்வமோ? இல்லை பண திமிரோ? அவரை எதிர்த்தவர் ஒழுங்கா இருந்ததா சரித்திரமே இல்லை . ஷிவானியை பொறுத்தவரை ஒரு விதத்தில் வெள்ளை கோட்டு போட்ட ரவுடி தான் .
ஷிவானிக்கும், அவருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்து போனதே இல்லை .அவர் வடக்கே என்றால் இவள் தெற்கு. அவர் சொல்கிறார் என்கிற ஒரே காரணத்திற்காக ஷிவானி எதிர்த்து செய்வாள் .
இதனாலே ஷிவானிக்கும் அவருக்கும் சண்டை மூளும் . கடைசியில் அவள் அம்மா, பாட்டிக்காக தான் அடங்கி போக வேண்டியதாக இருக்கும் . அவள் மீது அவர் விருப்பத்தை திணிக்கும் போது எல்லாம் ஷிவானி வீட்டில் போர் மூளும் . இவர்கள் சண்டையை சமாதானபடுத்த ஊரில் இருந்து அவள் பாட்டி கோமதி தான் வர வேண்டியதா இருக்கும் .
அவர்கள் சண்டை இன்று, நேற்று அல்ல, பல காலமாகவே தொடர்கிறது ..உதாரணம் ஷிவானிக்கு வெள்ளை நிறம் தான் பிடிக்கும் என்றால் கண்ணனுக்கு பிடிக்காது .அவள் அந்த நிறத்தில் துணி கூட போட கூடாது. அவளுக்கு பிடித்த அந்த கலரில் கார் வாங்க கூடாது ஏகப்பட்ட கண்டிஷன் ……
நீங்க மருத்துவ தொழிலில் போடும் கோட் வெள்ளை என்றால் ஒத்துக் கொள்ள மாட்டார் . அவருக்கு பிடிக்காது என்ற ஒரே காரணத்துக்காக அவள் அறை முழுதும் வெள்ளை நிறத்தாலே அலங்கரித்து இருக்கிறாள் .
ஷிவானிக்கு கர்நாடக சங்கீதம் படிக்க சுத்தமா விருப்பம் இல்லை . கண்ணனுக்கு பிடிக்கும் என்றே ஒரே காரணத்துக்காக அவர் நண்பன் மனைவி காயத்ரியிடம் கர்நாடக சங்கீதம் பயில அனுப்பினார் . அவள் அப்பாக்கு பிடிக்கும் என்ற காரணத்தினாலே அவளுக்கு பிடிக்காமல் போனதோ ? அவளுக்கு சங்கீதத்துக்கும் வெகு தூரம் . பிளேன் ஏறி துரத்தினாலும் பிடிக்க முடியாது அளவிற்கு ஆனது.
ஷிவானிக்கு சங்கீதம் பிடிக்காத காரணத்தால் ஏகப்பட்ட காரணங்களை அடுக்கி அங்கு போவதை தவிர்த்தாள்.
போக தான காரணம் சொல்லற, வீட்டுக்கே வர சொல்லறேன் வரவழைத்தார். டீச்சர் பாட்டு சொல்லி தரும் போது இந்த பாட்டு பாடுங்க, அந்த பாட்டு நல்லா இருக்கும் என்று சொன்ன போது இவளுக்கு இத்தனை ஆர்வமா என்று சந்தோசம் அடைவதற்குள் விரித்த பாயிலே படுத்து உறங்கிவிடுவாள். பாட்டை நிறுத்தினால் தூக்கத்திலே பாடுங்க மிஸ் நிறுத்தாதீங்க, ப்ளீஸ் இப்ப தான் நல்லா தூக்கம் வருது கடுபேற்றுவாள்.
அந்த டீச்சரும் பல வழியில் அவளுக்கு கத்து தர முயன்றாள். பாடி தான் ஆகணும் , பாய் இருந்தால் தான படுப்பா என்று மொட்டை மாடிக்கு அழைத்து சென்றால் தண்ணீர் ,பாத்ரூம் என்று காரணம் சொல்லி கீழே ஓடிக் கொண்டே இருப்பாள் . இதை எல்லாம் பார்த்து நொந்து நூடில்ஸ் ஆன பாட்டு டீச்சர் காயத்ரி “உனக்கும் கும்பிடு ,உங்க அப்பாக்கும் ஒரு கும்பிடு” என்று ஓடிவிட்டார் .
எந்த வாத்தியார் வந்தாலும் இதே கதி தான் ..
அவள் அப்பாவை பார்க்கையில் ஒரு விதத்தில் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வரும் பிரகாஷ் ராஜ் காரெக்டர் தேவல என்று ஆகிவிடும்
இது எல்லாம் கூட பரவாயில்லை . அவள் கோபத்துக்கு முக்கிய காரணம்….
ஷிவானி பத்தாவது படிக்கும் போதே, அடுத்த வகுப்பில் பைன் ஆர்ட்ஸ் சம்மதமா குரூப் எடுக்கணும் அவளுக்கு எண்ணம். அவள் அப்பா பிடிவாதத்தை கண்டு முதல் க்ரூப் எடுத்தாள்.
பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த பின் அவளுக்கு சிங்கப்பூரில் இருக்கும் சிறந்த பல்கலைகழகம் NAFA சேர்ந்து பைன் ஆர்ட்ஸ் படிக்க வேண்டும் என்று நெடுநாளைய கனவு . அதற்காக அவளை தயார் செய்து கொண்டு இருந்தாள்.
சிறு வயதிலே மிக அழகாக ஓவியம் வரைவாள். ஒருத்தரை ஒரு முறை பார்த்துவிட்டால் அவர்களை அப்படியே துல்லியமா வரைந்து விடுவாள் . ஆல் இந்தியா அளவில் பல போட்டிகளில் கலந்து வெற்றி பெற்று இருக்கிறாள்.
நாபாவில் படிக்க அவளை தயார் செய்து கொண்டு வருகிறாள் என்று அவள் அப்பா கண்ணுக்கு தெரிந்து இருந்தாலும் அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் விட்டார். ஷிவானியும் தந்தை மனம் மாறி விட்டதாக கனவு கண்டு மேலும் முனைப்பாக அதில் அவளை ஈடுபடுத்திக் கொண்டாள். அப்படி அவள் அப்பா வெளிநாடு அனுப்ப ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் இங்கேயே மீடியா சம்மந்தமா கோர்ஸ் எடுக்கணும் முடிவு செய்தாள்.
பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பு முடித்தவுடன் சண்டை ஆரம்பமானது. கண்ணன் ஒரேடியாக அவள் மருத்துவம் தவிர வேற எதையும் படிக்க கூடாது சொல்லிவிட்டார்.
அவர் அப்படி சொன்னவுடன் அவள் கனவு கோட்டையே தகர்ந்து விட்டது போல உணர்வு .எப்போதும் அவளுக்கு துணையாக இருக்கும் அவள் பாட்டிக்கும் அந்த நேரத்தில் உடம்பு முடியாத காரணத்தால் ஷிவானி பேச்சு எடுபடவில்லை .
அவள் அம்மா நிர்மலாவும் உன் நல்லதுக்கு தான் சொல்லறாங்க புரிஞ்சுகோ என்று அவள் அப்பாவை ஒட்டியே பேசினாள்.
ஷிவானி என்ன சண்டை போட்டும், “நான் டாக்டர் , உங்க அம்மா டாக்டர் ,உங்க அண்ணா டாக்டர், நீயும் டாக்டரா தான் இருக்கணும், அது தான் எனக்கு பெருமை, டாக்டர் பெண் டாக்டரா தான் இருக்கணும்” தெளிவா சொல்லிவிட்டார்.
புதிதா எதாவது சட்டம் போட்டு இருக்காங்களா அப்பா ! எனக்கு பிடித்ததை செய்ய விடுங்களே! மனதுக்கு பிடித்த தொழிலை செய்தால் கண்டிப்பா அதில் முன்னேற முடியும் ,சாதிக்க முடியும் அப்பா .
“எதிர்த்து பேசாதே ! மனசு இருந்தால் எதில் வேண்டும் என்றாலும் சாதிக்கலாம் ஷிவானி . எப்போதும் நான் சொல்வது தான் இறுதி முடிவு” என்று கண்ணன் முடித்துக் கொண்டார்.
அப்போதில் இருந்து அவர் மீது அதிக வன்மம் தலை தூக்கியது .முதலில் போராடி பின்பு வேற வழியில்லாமல் அவளுக்கு பிடிக்காத மருத்துவ துறையிலே சேர்ந்துவிட்டாள். அப்படி டாக்டர் ஆனாலும் ,இந்த ஆளுக்கு தான் முதலில் வைத்தியம் பார்க்கணும், இதை வைத்தே அவரை பழி வாங்கறேன் என்று ஷிவானி உள்ளுக்குள் கருவிக் கொண்டாள். .
எப்ப எல்லாம் சமயம் கிடைக்குதோ அப்போது எல்லாம் கோபத்தை தீர்த்துக் கொள்வாள் .
ஒழுங்கா படிக்காமல் அரியர் வைக்கலாம் நினைத்தாலும் சிறுவயதில் முதல் ஸ்மார்ட் , அறிவாளியான அவளால் அது இயலாமல் போனது .
கண்ணனுக்கு வேண்டிய சில முக்கிய நபர்கள், அவர் நெருங்கிய நண்பர்கள் வீட்டு கல்யாணத்துக்கு, இல்லை விசேஷத்துக்கு நாலு பேரும் போகணும் என்றால் வேண்டும் என்றே ஷிவானி அன்று தான் மெதுவாக தாமதமாக கிளம்பி, இல்லை வந்து அவர் ப்ரசரை உச்சகட்டத்துக்கு எகிற வைப்பாள் .
அவள் அப்பாவை எப்படி இரிட்டே செய்ய ? என்று திட்டம் போட்டே பாதி நேரத்தை கடத்துவாள். பல நாளாக பொங்கிக் கொண்டு இருக்கும் கோப எரிமலை எப்போதும் , எப்படி வெடிக்கும் என்று தெரியாது .. அந்த நாளுக்காக காத்துக் கொண்டு இருக்கிறாள் .
ஷிவானி , அவள் அப்பாவிடம் மட்டும் தான் அப்படி.
குணத்தில் மிகவும் நல்ல பெண். பழக இனிமையானவள். பார்ப்பவர்களை மறுபடியும் திரும்பி பார்க்க தூண்டும் அழகு , துருதுருப்பு ,உதவி என்று வருபவருக்கு கையில் உள்ள அனைத்தையும் கொடுக்க தயாராக இருப்பவள் .
அவளை பார்த்தால் கண்ணனிடம் முரண்டு பிடிக்கும் அந்த ஷிவானியா இந்த ஷிவானி என்ற அனைவருக்கும் சந்தேகம் வரும் . அவளை அன்பால் அடக்கலாமே தவிர அதிகாரத்தால் அடக்கவே முடியாது .
ஷிவானி, அம்மா நிர்மலா , பொது மருத்துவர் . சேவை செய்யும் மனப்பான்மையில் சிறப்பு குழந்தைகளுக்காக பள்ளி கூடத்தை நிறுவி தன்னால் ஆன உதவியை செய்து வருகிறாள் . அவள் முழு நேரமும் அந்த குழந்தைகளுடனே கழிந்து விடும் .
அவள் அண்ணன் கருண் அப்பாவுடன் மருத்துவமனையை நிர்வாகித்து வருகிறான் . தாரா என்ற பல் மருத்துவரை மணந்து கொண்டு இருக்கிறான் .
கருணுக்கு தாராவுடனான இந்த கல்யாணத்தில் துளி கூட இஷ்டம் இல்லை! இருந்தாலும் அவன் அப்பாக்காக சரி என்று திருமணம் செய்து கொண்டான் .
ஷிவானி அழகை கண்டு ஏற்கனவே அவளை பல பேர் நீ, நான் போட்டி போட்டு பெண் கேட்டு வந்துவிட்டார்கள் . அதிலும் கருண் கல்யாணத்தில் கண்ணனை ஒரு வழி செய்து விட்டார்கள் .
ஷிவானி பல தலைமுறை கழித்து உதித்த செல்ல பெண் குழந்தை என்பதால் வீட்டில் அவள் பாட்டி, தாத்தா ,பெரிப்பா ,சித்தப்பா செல்லம் .
கண்ணன் மட்டும் சென்னையில் வசிக்கிறார். அவர் சொந்த ஊர் கோவை என்பதால் அவர் அம்மா கோமதி, அப்பா ரங்கா ராஜன் உடன் பிறந்த அண்ணன் ,தம்பி குடும்பத்துடன் அங்கேயே வசிக்கிறார்கள்.
ஷிவானிக்கு அவள் வீட்டை விட அவள் தாத்தா வீட்டை தான் ரொம்ப பிடிக்கும் .எப்போதும் செல்லம் கொஞ்சும் தாத்தா,பாட்டி, பெரிப்பா ,பெரிமா ,அவர்கள் மகன் மிதுன், நந்தினி ,சித்தி சித்தப்பா அவர்கள் பெண் நிலா என்று அங்கு சந்தோஷமாக பொழுது கழியும்.
கடந்த ஆறு மாத காலமாக ஷிவானி வீட்டில் அடுத்த பிரச்சினை தொடங்கி உள்ளது. அவள் என்ன மேல் படிப்பு எடுத்து படிக்க வேண்டும் என்று சண்டை .
கண்ணனுக்கு அவள் சிறந்த மகப்பேறு மருத்தவர் ஆகணும் என்ற எண்ணம் . மகளிடம், இப்போது எல்லாம் நாட்டில் குழந்தையில்லா பிரச்சினை தான் பெரும் பிரச்சினையா இருக்கு . இன்று அந்த துறையில் தான் நிறையா சம்பாதிக்க முடியும் .ஒரு குழந்தைக்காக காசை வாரி இறைக்கிறார்கள். பணக்காரன், ஏழை வித்தியாசம் இல்லாமல் எல்லாருக்கும் வரும் ஒரே நோய் தான் இந்த குழந்தை இல்லாத பிரச்சினை.
பைசா பார்க்கலாம். அதிலே மேற்படிப்பு படி. பிரேமா, கீதா கந்தன் தான் இதில் இப்போதைக்கு கைராசி டாக்டர் . அவங்களையும் இப்போது நம்ம மருத்துவமனைக்குள் வளைத்து போட்டாச்சு . நீ படிக்கும் கல்லூரியிலே தொடரலாம் . நிர்வாகி ராமனிடம் ஏற்கனவே சொல்லியாச்சு .
அவளுக்கு வந்த கோபத்தை அடக்கி “அப்பா, ஒரு மருத்துவரான உங்களால் எப்படி இப்படி பேச முடியுதோ ! மக்களுக்கு உதவ என்று சொல்லி இருந்தால் கூட கேட்டு இருப்பேனோ என்னமோ ,பணம் செய்யும் எண்ணத்தில் சொல்வதனால் கண்டிப்பா என்னால் அதில் மேல் படிப்பு படிக்க முடியாது .எனக்கு இந்த தொழிலே வேண்டாம்” என்று சண்டை தொடங்கியது .
என்ன நடக்கும் பார்க்கலாம்……
கடைசி மாத கல்லூரி வேலை பளுவால் ஷிவானி, ஷிவேந்தரை பற்றி சுத்தமா மறந்து போனாள். ஒரு சமயம் எதேர்ச்சையாக பூந்தமல்லி சாலையை கடக்கும் போது ஷிவேந்தர் , ஷிவானியை நினைத்து நிதானமாக பயணித்தான்.
அவளை பார்க்க கல்லூரிக்கே போய்டலாமா? போனாலும் எப்படி பார்க்க ?
வேலை முடித்து வெளியே வந்த ஷிவானி, செமினாரை நல்ல படியா முடித்த திருப்தியில் கையில் ஜுசுடன் ரோட்டை கடக்க முயன்று கொண்டு இருந்தாள்.
ஷிவானி , ரோட்டை கிராஸ் செய்யும் போது, ஷிவேந்தரை சந்தித்த இடத்திலே ஜெர்க் ஆகி நின்றாள் . அவள் xray கண்கள் பல கோணத்தில் சுழன்றது . ஆஹா அவனை எப்படி மறந்தேன். காமடி பீஸ். என்னமா வம்பு பேசினான் என்று தலை ஆட்டி சிரித்துக் கொண்டாள்.
தூரத்திலே ஷிவானியை கண்டு கொண்ட ஷிவேந்தர் ஆஹா, கும்பிட போன தெய்வம் நேரிலே காட்சி தருகிறதே !
அவனை தான் தேடுகிறாளா என்று உறுதி செய்ய அவளை நோட்டம் விட்டான் . வேண்டும் என்றே அவளை கண்டு, பைக்கில் இடிப்பது போல சென்றதும் பயத்தில் அவள் கையில் இருந்த ஜூஸ் சிந்தியது . straw berry மில்க் shake அவள் வெள்ளை கோட் மீது பட்டு சிகப்பு கலரானது .கோபப்படாமல் அவன் முகத்தை ஆராய தொடங்கினாள்.
அவனே தான், அதே ஹெல்மெட். அதே ரவுடி தான் .
ஷிவானி மனதில் think of the devil there he is …
இன்றும் அதே போல ஹெல்மெட் கழட்டாம ஆட்டம் காட்டி உயிரை வாங்கறானே என்று உள்ளுக்குள் திட்டி நீ இன்னைக்கு மாட்டி மகனே என்று பைக் நம்பரை நோட் செய்ய போகும் போது ஹெல்மெட் கண்ணாடியை மேல் தூக்கி விட்டு ” செல்ல குட்டி, நானே தான் ! உனக்கு சந்தேகமே வேண்டாம். பைக் ஓட்டுவது நான் தான் , ஆனா பைக் என்னுடையது இல்லை . உண்மையை சொல்லு என்னை தான தேடுன ?”
அவளை அவன் கண்டு கொண்டான் கோபத்தில் பற்களை கடித்து “இல்லை! நான் எதுக்கு மிஸ்டர் உங்களை தேடனும் .. எனக்கு வேற வேலையே இல்லையா? இப்ப எதுக்கு இப்படி இடிப்பது போல வந்தீங்க ! ரேசுக்கு போவதா நினைப்பா ? வண்டியை மெதுவாகவே ஓட்ட தெரியாதா ? என் கோட் எல்லாம் பாழ்! இடியட் ..”
“உன் வாய் தான் அப்படி பொய் பேசுது, கண்கள் காட்டி கொடுத்துவிட்டதே!” சிரித்துக் கொண்டு “என்ன ரெடியா ?”
ஷிவானி அவளை அறியாமல் “என்ன ரெடியா ?”
“ஐ லவ் யு” சொல்ல தான தேடற ?
“மண்ணாங்கட்டி ! இடியட் ! பக்கி ! கொழுப்பா மிஸ்டர் !”
“கொழுப்பு எல்லாம் இல்லை செல்லம் . என்னை பார்த்தால் எப்படி தெரியுது ? ஜிம் பாடி .எத்தனை கட்சிதமா மைண்டைன் செய்யறேன் பார்த்துக்கோ !சீக்கிரம் I love you சொல்ல ப்ராக்டிஸ் செய்துக்கோ, லவ் யு சோ மச் ! bye ஸ்வீடி குட்டி, சீக்கிரம் சந்திக்கலாம் ஷிவானி ” என்று முத்தத்தை பறக்க விட்டு வேகமெடுத்து கிளம்பினான் .
கண் முன்னால் வந்தும் அவனை ஒன்றும் செய்ய முடியாத கோபத்தில் “பொருக்கி ! உன்னை ஈவ் டீசிங் கேசில் உள்ள தள்ளாம விட போறது இல்லை !கம்பி என்ன ரெடியா இரு. இம்சை செய்யவே எங்கிருந்தோ வந்து குதிக்கிறான், குரங்கு, வாலில்லாத வானரம் ” என்று கத்தினாள் .
இத்தனை நேரம் இந்த ஹரியும் , ப்ரீதமும் கூட தான இருந்தாங்க. சரியா இந்த இம்சை அரசன் வரும் போது எங்க போய் தொலைந்தார்களோ என்று நண்பர்களுக்கு அர்ச்சனை தொடர்ந்தது .திரும்பி வருவானா என்று எதிர் பார்த்த போது அன்று போல யு டர்ன் போட்டு இவளை நோக்கி திரும்பி வந்தான் .
ஷிவானி உள்ளுக்குள் சிரித்து தொண்டைக்கு இதமான சில் குளிர் ஜூசை பருகிய படி அவனை சுவாரசியமாக பார்த்துக் கொண்டு இருந்தாள்.
ஷிவானி காரில் ஏறுவதை பார்த்து , அவள் மீது பைக்கை ஏத்துவது போல ஒட்டி நிறுத்தினான் .
ஒரு நிமிடம் பின்னால் துள்ளி குதித்த அவள் முகத்தில் கோவபாவனை இருந்தாலும் அவள் சிரித்த விழிகளை கண்டு “நிஜமா, நீ ரொம்ப அழகா இருக்க ஷிவானி! I love you ! I Love You டா !”
உனக்கு மட்டும் தான் டைலாக் பேச தெரியுமா டா ! ஆளும் அவனும் ! நானும் அதே படத்தை பார்த்து இருக்கேன் டா …
“அப்படின்னா என்ன mean பண்றே ?”
ஷிவேந்தர் சிரித்த படி “ஐ லவ் யூனா ஐ லவ் யு ! அப்படின்னா என்னன்னு சரியா தெரியாமையே உனக்காக என்னவேனா செய்வேன்னு அர்த்தம் “
ஷிவானி கூலாக “நடு ரோட்டில் போய் நில்லு?”
கன்னம் குழிய சிரித்தபடி “மாட்டேன் ! என்ன? என்னை போலவே மேடம் வசனத்தை மனப்பாடம் செய்து வைத்து இருப்பீங்க போல ! எனக்காக தான அலைபாயுதே படம் பார்த்த ! எத்தனை தடவை பார்த்த ? இதில் இருந்தே தெரியல ஷிவானி ”.
ரொம்ப உரிமையா பேரை சொல்லி கடுபேத்தறானே !
அவன் எதிர் பார்க்காத சமயத்தில் பைக் சாவியை எடுத்துக் கொண்டு, அழகிய பல் வரிசை தெரிய சிரித்து கையில் சாவியை ஆட்டிய படி “ நான் அழகா இருக்கேன் சொன்னதுக்கு thank you” காரில் பறந்து சென்றாள்.
“ஹே, ஹே என் சாவி ! கொடுத்திட்டு போ!”
இவளை எல்லாம் .. நிஜமா எடுத்திட்டு போயிட்டாளா.. அவள் கார் கண்ணில் இருந்து மறையும் வரை கத்திக் கொண்டு இருந்தான் .
திரும்பி வருவாளா என்ற நப்பாசையில் தலையில் போட்டு இருக்கும் ஹெல்மெட் கழட்டாம பார்த்துக் கொண்டே நின்றான் .. அவளாது வருவதாவது. இந்நேரம் அவ வீட்டுக்கே போய் இருப்பாள் .
இதற்கு தான் அப்படி சிரித்துக் கொண்டு நின்றாளா ? ராட்ஷசி ! போன ஜென்மத்தில் டிராபிக் சிக்னலில் இருக்கும் போலிஸ்காரியா பிறந்து இருப்பாளோ ! அப்படியா தான் இருக்கும் . இனி இங்க இருந்து வீட்டுக்கு எப்படி போக? நல்ல வேலை குணா பைக் எடுத்துக் கொண்டு வந்தேன் .
போன அவள் வண்டி நம்பரை நோட் செய்யலையே ?
அது எதுக்கு ! எப்படியும் எனக்கு தான் அவ வீடு தெரியுமே ! போய் நேரிலே வாங்கிவிட வேண்டியது தான். வரேன் டீ ! இப்ப வரேன் எண்ணியவுடன் நோ !நோ !நோ ! நேரில் போனா என்னை கண்டு கொள்வாளே ! அது கூடாது .ஏனோ அவளிடம் ஆடும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் அவனுக்கு பிடித்து இருந்தது .
சாவி வாங்கி வர வேற ஆளை தான் அனுப்பனும் ….சின்ன பசங்களை தான் அனுப்பனும் ..இல்லை என்றால் எனக்கே ஆப்பாகிவிடும் வழிந்து கொண்டான் .
அவள் திரும்பி வந்தால் அவனை கண்டு கொள்வாளோ என்ற எண்ணத்தில் ஹெல்மெட் போட்ட படியே நின்று கொண்டு இருந்தான் . இனி எங்க வர போறா ராட்ஷசி திட்டி , அதை கழட்டினவுடன் ஒரு பக்கெட் தண்ணீர் கவிழ்த்தது போல தலையில் இருந்து நீர் கொட்டியது !
இத்தனை நீரா ? இந்த லூசு வெய்யலில் நடு ரோட்டில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு நின்றால் ஜுசா கொட்டும் நினைப்பா என்று மனம் கேலி செய்தது .
தலை தொப்பலா நனைந்து இருந்தது. குளித்தால் கூட இப்படி தண்ணீர் வடியாது ! பழி வாங்கிட்டா ராட்ஷசி. அருகில் இருந்த ஜூஸ் கடை வரை தள்ளிய படி , வெயலில் இப்படி மண்டை காய விடறாலே ! இவளுக்கு வர போற புருஷன் பாவம்.
என்ன தம்பி பெட்ரோல் இல்லையா ? பங்க் அருகில் தான் இருக்கு என்று ஒரு சிலர் கூறி சென்றனர் ..
குணாக்கு அழைத்து “எங்க டா இருக்க மச்சி ! பைக் சாவி காணவில்லை”.
“என்னது காணோமா ? எப்படி டா ! நீ அந்த மாதிரி எல்லாம் தொலைக்க மாட்டியே ! உன் சட்டை பாக்கெட்டில் தான் இருக்கும் தேடி பாரு ! என் மாமனார் தலை தீபாவளிக்கு ஆசையா கொடுத்த பைக் டா !”
ஏசி ஹாலில் அமர்ந்து ஜூசை நிதானமா பருகியபடி ” அடபாவி, வரதட்சினை வாங்குனையா? சட்ட படி தப்பு தெரியும் ல !”
குணா கடுப்பாகி “ டேய், இருக்கும் பிரச்சினை போதாது என்று இல்லாததை கிளப்பறையா ? உனக்கு புண்ணியமா போகும் .. நிஜமா சொல்லறியா ? எங்க இருக்க சொல்லு.. என் பெண்டாட்டியை விட என் பைக்கை பத்திரமா பார்த்துக் கொண்டு இருந்தேன் . இப்படி செய்தால் எப்படி டா”
ஷிவேந்தர் நானே கடுப்பில் இருக்கேன் இவன் வேற !
“என் வாயில் ஏதோ வந்திட போகுது . அதை என்ன அதன் ஜோடியோட ஊர் மேயவா விட்டேன் . அதுக்கு ஒன்றும் ஆகவில்லை . உன் பைக் அப்படியே தான் இருக்கு . சாவி தான் காணோம் சொல்லறேன் !”
ஷிவேந்தர் உண்மையை சொல்ல முடியாமல் “எங்கயோ விழுந்திடுச்சு டா !” இடத்தை சொன்னவுடன் குணாக்கு எங்கயோ இடிப்பது போல இருந்தது . இந்த நேரத்தில் அந்த பக்கம் ..
குணா பேசுவதை கேட்டு பொறுமையில்லாமல் “ இப்ப வரையா? இல்லை எனக்கு என்ன என்று அப்படியே விட்டு கிளம்பட்டுமா? அடுத்த ஆப்ஷன் தான் சரி .ola cab புக் செய்துக்கிறேன் . இல்லை ராமை வர சொல்லறேன் .நீ வந்து உன் வண்டியை எடுத்திட்டு போ!”
குணா கெஞ்சியபடி “என்ன டா! நானும், நீயும் அப்படியா பழகி இருக்கோம் .. எதுக்கு மச்சி கோபம் . டேய், கொஞ்சம் புண்ணியமா போகும் . அங்கேயே நில்லு ! வந்திடறேன்”. நேரில் வந்து உன்னை கும்முற கும்மில் உண்மையை சொல்லி தான டி உனக்கு ஆகணும் மகனே! இதோ வரேன்” குணா கிளம்பினான்.
ஒரு வழியா வீடு வந்த ஷிவேந்தர் அவன் அறை பால்கனியில் நின்று கொண்டு,
ஷிவானியிடம் சாவியை எப்படி வாங்க ? அவன் பக்கத்துக்கு வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்த சுட்டீசிடம் உதவி கேட்டான் ..
அதுகளும் இவனுக்கு உதவுவதாக ஒத்துக் கொண்டது .
நேரத்திலே வீடு திரும்பிய ஷிவானியை வரவேற்ற அவள் வீட்டு வேலையாள் லக்ஷ்மி அம்மா “ஏன் பாப்பா , இப்படி தான் துணியில் சிந்திக் கொண்டு ஜூஸ் குடிப்பீங்களா? கரை விடவே விடாது. உடனே கழட்டி கொடுங்க ஊற போடலாம்” என்று அக்கறையாக பேசினாள்.
ஊரில் இருந்து பாட்டி, ஷிவானிக்கு துணையாக இருக்க லட்சமி அம்மாளை அனுப்பி இருக்கிறாள் .
அவள் துணி மீது இருக்கும் கரையை பார்த்து சிரித்து, கையில் உள்ள சாவியை பத்திரப்படுத்தி “அது ஒன்றும் இல்லை லட்சு, ஒரு பொல்லாத குரங்கு செய்த வேலை . பரவாயில்லை விடு ! டிவியில் சொல்வது உண்மையா என்று சோதனை செய்து பார்த்திடலாம் “
“என்ன சோதனை பாப்பா ! நான் பார்த்ததே இல்லையே ?”
“நீ என்னை பாப்பா கூப்பிடுவது தான் சோதனை ! என் பேரை சொல்லு எத்தனை தடவை சொல்வது ! டிவியில் நீ சர்ப் எக்செல் விளம்பரம் பார்த்தது இல்லை .கரை நல்லது லட்சு “.
“போ பாப்பா, சொல்பவருக்கு என்ன ? துவைக்கும் எனக்கு தான தெரியும் நல்லதா? கெட்டதா என்று ?”
மாலை நேரத்தில் பொழுது போகாமால் தோட்டக்காரன் வேட்டையனுடன் சண்டை போட்டு, அவள் ஆசையாக வளர்த்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியபடி, மனதுக்கு பிடித்த பாடலை பாடிக் கொண்டு இருந்தாள்.
“அக்கா , அக்கா ,உள்ளே விட சொல்லுங்க ! ப்ளீஸ் !”
வாசல் பக்கம் ரெண்டு மூன்று சுட்டி குழந்தைகள் குரல் ஒரே நேரத்தில் கேட்டது. பக்கத்தில் விளையாடிக் கொண்டு இருக்கும் சிறுவர்கள் பால் ஏதோ விழுந்திடுச்சா ? வாட்ச்மன் அங்கிள் விடலையா கேட் அருகே சென்றாள்.
காசுவலாக தூக்கி போடப்பட்ட கொண்டை, முகத்தில் அங்கங்கே விழுகும் முடி கற்றைகள் ஒதுக்கி , அழகான டி – ஷர்ட்,கப்ரி பண்ட்டுடன் வெளியே வந்த ஷிவானியை கண்டு ஷிவேந்தர் இமைக்க மறந்தான்.