நீ நான் 18

வீட்டிற்கு வந்த விகாஸை அவன் பெற்றோர் வீட்டினுள் விடாமல் வழி மறித்து நின்றனர்.

“வழிய விடுங்க” அவன் கோபமாக பேச, “சுவாதி உன்னோட தங்கை இல்லையாமே!” என அவன் அம்மா கேட்டார்.

“அவனோ வழிய விடுங்கன்னு சொன்னேன்” பல்லை கடித்தான்.

சட்டென அவன் தந்தை அவனை வெளியே தள்ளி, என் பொண்ணை தப்பா பேசிய எவனுக்கும் என் வீட்டில் இடமில்லை என அவனது பொருட்களை எடுத்து வைத்த பைகளை வெளியே விட்டெறிந்தனர்.

டாட், “நான் தான் உங்களை கடைசி காலம் பார்க்கணும்” விகாஸ் சீற்றமுடன் கத்தினான்.

தேவையே இல்லை. நீ பார்த்து நாங்க வாழணும்ன்னு அவசியமில்லை என அவன் அம்மா கத்தினார் சீற்றமுடன்.

ஓ, உங்களுக்கு உங்க பொண்ணு தான் முக்கியம். நான் தேவையில்லை. அப்படி தான? அவன் கத்த..ஆமா நீ தேவையில்லை. வெளிய போ என அவன் அம்மா மீண்டும் கத்தினார்.

அவனும் அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்பி அவனது பாட்டி, தாத்தா வீட்டிற்கு வந்து கோபமாக அவர்களிடம் ஏதும் பேசாமல் சென்றான்.

பாட்டி பேரனின் பின் செல்ல, அவனிடம் பேசி புரிய வைக்க முடியாது. நீ அமைதியா இரு. அவன் இங்கேயே இருக்கட்டும் என தாத்தா பாட்டியை விகாஸ் அருகே செல்ல விடாமல் தடுத்து விட்டார்.

இரண்டு நாட்களாக யாரும் யாரிடமும் சரியாக பேசவில்லை.

புழலரசன் இறந்து மூன்று நாட்கள் கழிந்த நிலையில் முக்தாவுடன் மனீஷா இருந்தாலும் சாப்பிட கூட அவள் வெளியே வரவில்லை.

பொறுத்து பொறுப்பு பார்த்த ராணியம்மா அவள் அறைக்கு சென்றார். கண்களை மூடி படுத்திருந்த அவள் கையில் அழகான குட்டி டெட்டி இருந்தது. அவளின் நிலை புரிந்தாலும் அவளையும் ரோஹித்தையும் சேர்க்கவேண்டும் என எண்ணினார் அவர்.

முக்தா பாட்டியை பார்த்து அழைக்க, மனீஷா எழுந்து ராணியம்மாவை பார்த்துக் கொண்டே படுக்கையில் இருந்து எழுந்தாள்.

முகி, “வெளிய இரு” என முக்தாவை வெளியே அனுப்பி விட்டு மனீஷா அருகே வந்து அவளது தலையை கோதியவாறு அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அவளோ விழித்துக் கொண்டிருந்தாள்.

“இன்னும் எத்தனை நாள்ம்மா இப்படியே அடஞ்சு கிடக்கப் போற? என்னோட பேரனுக்கு உன்னோட சப்போர்ட் வேணும்மா” என்றார் இருவரையும் பழக வைக்கும் நோக்கமுடன்.

“நானா? நான் என்ன செய்வேன்?” என அவள் குரல் தாழ்ந்து கேட்க, அவன் பக்கம் நீ இருந்தால் போதும்.

எனக்கு புரியல.

ம்ம்..உன் கழுத்தில் தாலி கட்டிய பின் அவன் அவனாக இல்லைம்மா. நம்ம வீட்ல எல்லாரிடமும் சொல்லீட்டோம். அவனோட பெற்றோர் கூட பெரியதாக பிரச்சனையாக பேசல. மத்தவங்க ஏத்துக்கல. அதை விட ரோஹித் அண்ணனுக இருவர் இருக்காங்க..

இவன் கொஞ்சம் எல்லாருடனும் ஜாலியாக பேசுவான். உடல், மனம் அழுக்க வேலை செய்வதெல்லாம் அவனுக்கு பழக்கமில்லை. நமக்கு நிறைய கம்பெனிகள், உள்நாடு வெளிநாட்டிலும் இருக்கு. பெரியவன் அடிக்கடி வெளியே சென்று கவனித்துக் கொள்வான். சின்னவன் இங்கிருக்கும் எல்லாத் தொழில்களையும் குடும்ப நபர்களுடன் சேர்ந்து நன்றாக நடத்துவான். ஆனால் உன் கணவன் அப்படியில்லைம்மா. அவன் நண்பர்களுடன் சுற்றி திரிந்து பழக்கமானவன்.

அதனால் அவன் அண்ணன்கள் இவனை பெரிதாக மதிக்கவே மாட்டாங்க. அவனுக்கும் புரியும். ஆனால் அவனுக்கு பிடிக்கலை.

இங்கே அவன் வந்ததே அஜய்யுடன் சேர்ந்து தொழில் கற்று அவன் தந்தை நடத்தும் தொழிலை தனியே நடத்த வேண்டுமென்று தான். அதுவும் எங்களது கட்டாயத்தால் தான்.

ரோஹித் எப்போதும் குழந்தை போல் தான் நடந்துப்பான். இங்கே வந்த பின் யுகி, தியாவிற்கு நடந்த பிரச்சனையில் மனம் களைத்து போயிருக்கான். உன் கழுத்தில் உன் விருப்பமில்லாமல் தாலி கட்டிய எண்ணம் வேற அவனை வதைத்து விட்டது.

கம்பெனி போறான். நன்றாக வேலை செய்வதாக தான் அஜய் சொல்றான். ஆனால் முன்னிருந்த சந்தோசம் அவனிடம் சுத்தமாக காணாமல் போனது. அவன் அண்ணன்கள் உங்களது திருமணத்தை வைத்து அவனை ஏதோ சொல்லி இருக்கானுக..கேட்டால் இவனும் சொல்ல மாட்டேங்கிறான். அவர்களும் ஒத்துக் கொள்ள மாட்டேங்கிறாங்க.

அதனால நீ அவனோட தங்கி அவன் மனநிலையை மாற்ற முடியுமாம்மா? எனக் கேட்டார்.

உன் நிலை புரியுதும்மா..அவன் உன் அனுமதி இல்லாமல் தவறாக நடந்து கொள்ள மாட்டான். கொஞ்சம் யோசித்து பாரும்மா..என கண்கலங்கிய ராணியம்மா, “யுகி வாழ்க்கை போல என் ரோஹித் வாழ்க்கையும் ஆகிடாமல் நீ தான் பார்த்துக்கணும்” என மனீஷா கையை பிடித்தார்.

மனீஷா கண்கள் கலங்க..அலா என்று உச்சரித்தாள்.

நீங்க எத்தனை வருசம் காதலிச்சீங்கன்னு எனக்கு தெரியாதும்மா. எவ்வளவு ஆழமான காதலாக இருந்தாலும் உன்னோட அலா இந்த உலகில் இல்லை என்பது தான் உண்மை. இதை நாம ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.

உன் உயிரை காப்பாற்றி என் பேரன் கையில் பிடித்துக் கொடுத்தது உன் அலா தான்ம்மா. அதை மறந்திடாதம்மா.

ரோஹித் உன்னை கவனிக்காமல் இல்லை. சாப்பிட அமரும் போதெல்லாம் நீ சாப்பிட்டியான்னு கேட்காமல் சாப்பிட மாட்டான். உன் அலா இறந்த அன்று உன்னை போல் அவனும் சாப்பிடவில்லை. மறுநாள் நீ உணவுண்ட பின் தான் அவன் சாப்பிட்டான். உன் மேல அவனுக்கு அக்கறை இருக்கு. உன்னை பார்க்காமல் உறங்க அவன் சென்றதில்லை. கொஞ்சம் வெளியே வந்து பாரும்மா..

நானும் என் பிள்ளைகளை கவனித்து என் கணவனை இழந்துட்டேன். அதே போல நீ உன் அலாவுக்காக உன் கணவனை இழந்துறாதம்மா என ராணியம்மா அழுதே விட்டார்.

பாட்டி..என மனீஷா அவரை அணைத்து அழுதாள்.

“யுகி அண்ணி, தியாவுக்கு என்ன பிரச்சனை?” என அவரை நகர்த்தி அவள் கேட்க, அவரும் இருவருக்கும் நடந்ததை கூற மனீஷா கண்ணீருடன் எனக்கு நேரம் தேவை பாட்டி..

“முகியை இன்று உங்களுடன் தங்க வச்சுக்கிறீங்களா?” எனக் கேட்டாள்.

“ம்ம்…சரிம்மா. நல்ல முடிவா எடுப்பன்னு நம்புகிறேன்” என கண்ணீரை துடைத்து விட்டு ராணியம்மா வெளியே சென்றார். மனீஷாவோ படுக்கையில் படுத்து அழுது தீர்த்தாள்.

சற்று நேரத்தில் உறங்கி விட்டாள் மனீஷா. விழிப்பு தட்டி எழுந்த மனீஷா படுக்கையிலிருந்து இறங்கினாள். எதிரே நின்ற ரோஹித்தை பார்த்து பதறினாள்.

“நீ..நீங்க எப்படி உள்ள?” அவள் பதட்டமாக கேட்க, பயப்படாத. நான் ஒன்றும் செய்யலை. நீ ரொம்ப நேரமா தூங்கிட்டு இருக்கன்னு தியா சொன்னா. அதான் பீவராக இருக்குமோன்னு பார்க்க வந்தேன் என அவன் சொல்ல, அவளுக்கு முழுதாக புரியவில்லை.

என்ன? அவள் கேட்க, தியாவை அழைத்தான் ரோஹித்.

“என்னடா வேணும் உனக்கு? அவ வேலையா இருக்கா” என யுக்தா அவர்களிடம் வந்தாள். அவன் அவளிடம் ஏதோ காதில் சொல்ல, யுக்தா புன்னகையுடன்.. மனீஷாவிடம் விளக்கினாள்.

“எனக்கு ஒன்றுமில்லை” என கண்களை உருட்டியவாறு யுக்தாவை பார்த்தாள்.

டேய்..போடா..நேரமாகுது. சாப்பிடு என யுக்தா ரோஹித்தை விரட்ட, அவன் அசையாமல் மனீஷாவை பார்த்துக் கொண்டே நின்றான்.

அவனை வெளியே தள்ளிய யுக்தா, மனீஷாவிடம் பேச..மனீஷாவின் பார்வை ரோஹித் பக்கம் இருந்தது.

“சாப்பிட எடுத்து வரவா?” என யுக்தா கேட்டுக் கொண்டே ரோஹித்தை பார்க்க, அவன் சாப்பிடாமல்.. தொலைக்காட்சியில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த ராணியம்மா மடியில் படுத்தான்.

மனீஷாவிற்கு ராணியம்மா சொன்ன, ரோஹித் குழந்தை போல நடந்துப்பான் என சொன்னது நினைவிற்கு வந்தது. ஆனாலும் எதுவும் பேசாமல் அவனை தூரமிருந்து கவனிக்க எண்ணினான்.

“எனக்கு பசிக்கலை” என மனீஷா சொல்ல, ப்ளீஸ் மனு..நீ அறையில் சாப்பிட்டால் கூட போதும். ரோஹித்தும் சாப்பிடுவான்..என யுக்தா அவனை பார்த்துக் கொண்டே கூற,ம்ம்..சாப்பிடுறேன் என்றாள்.

யுக்தா புன்னகையுடன், ரோஹித்திடம் சென்று சாப்பிட வா..ஆபிஸ் போகணும். மனு சாப்பாடு எடுத்து வரச் சொன்னாள் என்று சொன்னதும் ராணியம்மா மடியிலிருந்து எழுந்து மனீஷா அறையை பார்த்தான். அவளும் அறையிலிருந்து அவனை பார்ப்பதை கவனித்து நிமிர்ந்து அமர்ந்தான்.

டேய்..போதும். சீன் போடாத என யுக்தா அவனை இழுத்து சாப்பிட அமர வைத்து, மனீஷாவிற்கு எடுத்து வைத்தாள். ரோஹித் அவளுக்கான உணவை பார்த்து விட்டு, அவனும் சாப்பிட ஆரம்பித்தான்.

ரோஹித்..என்னடா லவ்வா? வினித் கேலி செய்ய, அவனிடம் பதிலில்லை.

டேய், ஏதாவது பேசித் தொலையேன்..மாமா..மாமான்னு பின்னாடியே வந்திட்டு..இப்ப பேசவே மாட்டேங்கிற? எனக்கு என்னம்மோ மனூவுக்கு மட்டும் திருமணத்தில் விருப்பம் இல்லாதது போல தெரியல..ரோஹித்துக்கும் இருக்குமோ? என சிந்திப்பது போல அவனை பார்த்தான்.

மாமா, வாய்ப்பேயில்லை. இவன் சாப்பிடாமல் இருந்து நான் பார்த்ததில்லை. என்னுடையதையும் சேர்ந்து விழுங்குவான். நான் நம்ப மாட்டேன். அவன் என்னோட அண்ணியை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான் என முக்தா சொல்ல, அவளை முறைத்துக் கொண்டே சாப்பிட்டு எழுந்தான்.

அஜய் புன்னகையுடன், அவனை பேச வையுங்கள். பார்க்கலாம் என சவால் விடுத்தான்.

இவன நம்பி ஒத்த பைசா நான் டீலுக்கு ஒத்துக்க மாட்டேன். என்னை விடுங்க என முக்தா எழுந்து ஓடினாள். ரோஹித்தின் இதழரோம் மென்னகை பிறந்தது. நால்வரும் ஆபிஸ் கிளம்பினார்கள்.

அன்றிரவு உறங்காமல் படுத்திருந்த மனீஷா முடிவெடுத்தவளாக அவன் கையிலிருந்த டெட்டியை அந்த அறையின் கப்போர்ட்டில் வைத்து பூட்டினாள். பின் அவளது சில பொருட்களை பைகளில் அடைத்தாள். பின் படுத்துக் கொண்டாள்.

அவளது பேச்சிற்கு இணங்கி முக்தாவை ராணியம்மா அவர் அறையிலே படுக்க வைத்துக் கொண்டார்.

ரோஹித்தும் அஜய்யும் நேரம் கழித்து தான் வந்தனர். தியா அவர்களுக்கு சாப்பிட எடுத்து வைக்க, “அவ சாப்பிட்டாளா?” ரோஹித் கேட்டான். இல்லை என உதட்டை பிதுக்கினாள் தியா.

அவளுக்கு முதல்ல சாப்பிட கொடுங்க.

நீ சாப்பிடு. நான் அவளை சாப்பிட வைக்கிறேன் தியா சொல்ல, அவ சாப்பிடட்டும். பின் நான் சாப்பிட்டுக்கிறேன் என ரோஹித் நகர, அவனுக்கு அழைப்பு வந்தது.

“இந்த நேரத்துல்ல யாரு?” தியா கோபமாக கேட்டாள்.

மா தான்..என அலைபேசியை காட்டினான்.

“என்னை தான் திட்டப் போறாங்க” தியா சொல்ல, “அப்படியா? திட்டு வாங்குறீயா?” என அவளிடம் அலைபேசியை நீட்டினான்.

நான் சாப்பாடு எடுத்து வச்சுட்டு இருக்கேன். உனக்கு பார்த்தால் தெரியலையா? தியா வேண்டுமென்றே கேட்க, அவன் ஸ்பீக்கரில் போட்டு அவளை பார்த்தவாறு அவன் அம்மாவிடம் பேசினான்.

ஆன்ட்டி..உங்க பையன் சாப்பிடல. தியா சாப்பாடு போடலை என அஜய் கோர்த்து விட, “யாரு நானா? நானா?” என சந்திரமுகியாக மாறிய தியா..இப்ப கூட சாப்பிட இருவருக்கும் தான்ம்மா எடுத்து வைத்தேன். அவன் சாப்பிட மாட்டேங்கிறான். நான் என்ன செய்வது? ஊட்டியா விடுறது? ஊட்டி விட உன்னோட பொண்டாட்டிய கூப்பிட்டிடுக்கோ..இல்லை அம்மா..நீங்க வந்துருங்க. இவனை என்னால சமாளிக்க முடியாது. ரது மாதிரி பிடிவாதம் பண்றான். இடியட் என நிறுத்தாமல் பொரிந்து தள்ளினாள்.

சரிம்மா, “அவனிடம் நான் பேசுகிறேன்” என்ற ரோஹித் அம்மா..தமிழிலே பேச ஆரம்பித்தார்.

உன்னோட பொண்டாட்டிக்கு நேரம் கொடுடா. அவ உன்னிடம் தான் வருவா. உடனே இழந்தவர்களை விட்டு வர முடியாது. “உன்னை பற்றி அவளுக்கு என்ன தெரியும்?” கொஞ்சம் அவள் நிலையில் இருந்து யோசித்து பாருடா என அறிவுரை வழங்க, மா..அவனுக..என தொண்டை அடைத்தது ரோஹித்திற்கு.

அஜய் புருவம் சுருக்கி ரோஹித்தை பார்த்தான்.

எவன் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அவனுகள விடு. உன் வாழ்க்கை நல்லா இருக்கணும். சாப்பிடு..பாட்டி சொன்னது போல வேலையை கத்துக்கோ. உன்னோட பாட்டி உனக்காக அஜய்யை தேர்வு செய்ததும் நல்லதா போச்சு. இங்க உன் அண்ணன்களிடம் விடாமல் இருந்தாரே அதை எண்ணி சந்தோசப்படு.

நாம அடுத்தவங்களோட நம்மை ஒப்பிட்டு பார்க்கக் கூடாது. நீ உன்னை உயர்த்தணும்ன்னு நினை. உன் அப்பா எப்போதும் இதை தான் சொல்வார். நீயும் அதேயே நினை. எல்லாம் கற்றுக் கொண்டு..எல்லாருக்கும் பதிலடி கொடுக்கணும் அதை விட்டு சின்னப்பையன் போல அழுற..

இப்ப நீ தனியாள் இல்லை. பொண்டாட்டி இருக்கா. அவளை யாரும் ஏதும் சொல்லாமல் பார்த்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு. சாப்பிட்டு தூங்கு. அம்மா காலையில கால் பண்றேன் என வைத்தார்.

மா, “லவ் யூ” என அவன் சொல்லி அலைபேசியை துண்டித்தான்.

“என்னடா சொன்னானுக?” அஜய் கேட்க, ரோஹித் எழ, அவன் கையை பிடித்த தியா கத்தியை அவனிடம் நீட்டி, ஒழுங்கா உட்கார்ந்து சாப்பிடு இல்ல கொன்றுவேன்.

ஆமாடா..பார்த்துடா. செஞ்சாலும் செஞ்சுறுவா அஜய் கேலியுடன் தியாவை பார்க்க, அவள் அவனை முறைத்து “வாயை மூடிட்டு சாப்பிடணும் இல்லை சொறுகிடுவேன்”.

“புருசன் கிட்ட பேசுற மாதிரியா பேசுற?”

உதட்டை கோணிக்காட்டி, இதோ பாரு..உன்னோட பொண்டாட்டிக்கு நீயே எடுத்து வை. நான் சாப்பிட கொடுத்துட்டு வாரேன்.

“அவளுக்கு என்ன பிடிக்கும்ன்னு எனக்கு தெரியாதே!”

ஹ..அவளுக்கு எங்க அரசனை தான் பிடிக்கும். போனவனை கொண்டு வர உன்னால முடியுமா?

பாவமாக ரோஹித் அவளை பார்க்க, முடியாதுல்ல..முதல்ல எடுத்து வை. அவள் உன்னிடம் பேச வந்தால் கேட்டு தெரிஞ்சுக்கோ. நான் சொல்ல முடியாது என்று சமையலறைக்குள் சென்றாள் தியா.

அனைத்தையும் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த மனீஷா மனம் ரோஹித்திற்காக மாறத் தொடங்கியது. அவன் தன் கணவன் என்பதால் மட்டும்.

ரோஹித் எடுத்து வைத்த உணவை தியா மனீஷா அறைக்கு கொண்டு செல்ல, ஓடிச் சென்று அவள் உறங்குவது போல் பாவனை செய்தாள்.

கதவை தட்டிய தியா, மனூ..மனூ..என சத்தமிட்டாள். அஜய்யும் ரோஹித்தும் அறைப்பக்கம் பார்க்க, உறங்கி எழுந்தது போல வந்து..தியாவை பார்த்தாள் மனீஷா.

“என்னிடமே நடிக்கிறியா?” தியா மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்குமாறு கேட்க, மனீஷா திருதிருவென விழித்தாள்.

தியா, “அவள திட்டுறியா?” அஜய் கேட்க, ரோஹித் எழுந்தான். அவன் கையை பிடித்த அஜய், வேடிக்கையை மட்டும் பாரு என்று அவனை அமர வைத்தான்.

இல்ல சார், தியா திட்டல என மனீஷா உணவுத்தட்டை வாங்க, தியாவோ அஜய்யை வெறிக்க, அவன் பறக்கும் முத்தத்தை பறக்க விட்டாள்.

கண்ணை மூடிய மனீஷா..தியா, நீ போ..என திரும்பிக் கொண்டாள்.

“நீ ஏன்டி வெட்கப்படுற? நான் தான்டி வெட்கப்படணும்” தியா கேட்க, “உங்களுக்கு கொஞ்ச இடமா இல்லை” என மனீஷா கடுத்தவாறு சொல்ல, “என்னை ஏன்டி கடிக்கிற?” வெளிய வந்து அவரை கடி..

மனீஷா தியாவை முறைக்க, அஜய் சிரித்தான்.

நீ போ. நான் சாப்பிட்டு வாஷ் பண்ணிக்கிறேன் என்றாள் மனீஷா.

“என்னது? மேடம் வெளிய வருவீங்களா? வேண்டாம்ப்பா..அப்புறம் என்னால தான் வரும் நிலையாகிப் போனதுன்னு என்னிடம் சண்டைக்கு வரவா?” தியா கேட்க, ப்ளீஸ்..நான் பார்த்துக்கிறேன். எல்லாரும் கிளம்புங்க.

“நாங்க கிளம்பினா உன் புருசனுக்கு நீ சாப்பாடு போடுவியா?” தியா கேட்க, மனீஷா மீண்டும் தியாவை முறைத்தாள்.

போடி..என மனீஷா உள்ளே செல்ல, தியா அஜய்யை பார்த்து கண்ணடித்து, “போடியா..நீ போடி” என அவளை உள்ளே தள்ள, கையிலிருந்த உணவுத்தட்டு விழாமல் பிடித்த மனீஷா திரும்பி தியாவை முறைத்து படுக்கையறையில் இருந்த தலையணையை தியா மீது தூக்கி போட்டாள்.

அஜூ..இவ என்ன பண்றா பாருங்க. இருடி என தியாவும் தலையணையை தூக்கி போட, ரோஹித்தோ பதறி எழுந்தான்.

எங்க போற? அவங்க சண்டை போடலை. நல்லா பாரு என அஜய் சொல்லி ரோஹித்தை அறைக்கு அருகே அழைத்து சென்றான்.

இவர்களை பார்த்த தியா மனீஷாவிற்கு இவர்கள் இருப்பது தெரியாது என தலையணையை தூக்கி வெளியே எறிய, அது ரோஹித் தலையில் விழ, அவன் தயங்கி அஜய்யை புரியாமல் பார்த்தான்.

இம்முறை மனீஷா தூக்கி எறிந்தது ரோஹித் மீது விழ, தியா வேண்டுமென்றே செய்கிறால் என அவள் தான் எறிந்தால் எண்ணியவன் அவனது பழைய குணத்திற்கு மாறிய ரோஹித், சட்டென உள்ளே சென்று அவன் மீது எறிந்த தலையணையை உள்ளே தூக்கி எறிய மனீஷாவின் மீது பட்டது.

அவனோ பதறி, ஹே..சாரி சாரி..என மனீஷா அருகே செல்ல, அவன் வந்ததில் அதிர்ந்து அவள் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.

தியாவோ..அஜூ..என அஸ்கி வாய்சில் அழைக்க, அஜய் உணவுத்தட்டு ஒன்றை நீட்டினான். அதை வாங்கி உள்ளே வைத்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தியா வெளியேறி கதவை வெளிப்புறமாக தாழிட்டாள். மனீஷா மேலும் பதறி அவனிடமிருந்து நகர்ந்தாள்.

தியா..”கதவை திறங்க”..”அண்ணா”..என ரோஹித் கதவருகே வந்து சத்தமிட்டான்.

நீங்க இருவரும் சேர்ந்தே சாப்பிடுங்க. அப்புறம் கண்ணம்மாம்மா கதவை திறந்து விடுவாங்க என தியா கூறி விட்டு இருவரும் கையை கோர்த்துக் கொண்டு யுக்தா அறைக்கு சென்று ரதுவை தூக்கி அறைக்கு சென்றனர்.

“ஐ அம் சாரி..அவங்க இப்படி பண்ணுவாங்கன்னு நான் நினைக்கலை” என ரோஹித் மனீஷாவிடம் மன்னிப்பு கேட்க, பரவாயில்லை சாப்பிடலாம் என அவள் மேசையை அவள் இழுக்க..அதிர்ந்து அவளை பார்த்த ரோஹித்தை தட்டினாள். அவனும் உதவ இருவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே சாப்பிட்டனர். பின் வெளியே வந்த ரோஹித் சிறுபுன்னகையுடன் நகர்ந்தான். கண்ணம்மா புன்னகையுடன் அவனை பார்த்தார்.

டேய் அண்ணா, “எழுந்து தயாராகி வா” என முக்தா ரோஹித்தை எழுப்பினாள்.

முகி, “எதுக்கு காதுக்குள்ள வந்து கத்துற?” என்று அவனது அலாரத்தை பார்த்து, மணி ஐந்து தான் ஆகிறது. “அதுக்குள்ள எதுக்கு தொந்தரவு பண்ற?”

பாட்டி, அண்ணா கிளம்ப மாட்டானாம் என முக்தா சத்தமிட, வேகமாக எழுந்து அவள் வாயை பொத்தி, “பாட்டியா? எதுக்கு?” எனக் கேட்டான்.

நான் சொல்ல மாட்டேன். தயாராகி வா..என அவனை தள்ளி விட்டு ஓட, ஏய் சொல்லீட்டு போ..

நீ கிளம்பி வா. சீக்கிரம் வா என முக்தா சென்று விட்டாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் ரோஹித் தயாராகி கீழே வந்தவன் அதிர்ந்து நின்று, வேகமாக கீழிறங்கினான். புடவையுடன் அருகே அவளது பைகளை வைத்துக் கொண்டு தயாராகி அமர்ந்திருந்தாள் மனீஷா.

எல்லாரும் அவனை பார்க்க, பாட்டி..நேற்று நான் எதுவும் செய்யலை. தியாவும் அண்ணாவும் தான் என பதட்டமாக ரோஹித் பாட்டியிடம் வந்தான்.

“நேற்றா? என்னடா நடந்தது?” தியூ..நீங்க சொல்லவேயில்லை என முக்தா கேட்க, “உனக்கு தெரியாதா?” ரோஹித் கேட்க, “எனக்கும் தெரியாதே!” யுக்தாவும் அவனை பார்த்தாள்.

அஜய் அட்டகாசமாக சிரித்து, தம்பி நீயே சொல்லீட்ட. நாங்க எதுவுமே சொல்லலை என்றான். ரோஹித் புரியாமல் எல்லாரையும் பார்த்து விட்டு மனீஷாவையும் அவள் கையிலிருந்த பையையும் பார்க்க, ராணியம்மா புன்னகையுடன்..”வாம்மா..மருமகளே” என மனீஷாவை அழைத்தார்.

அவளும் எழுந்து வர, ரோஹித் இங்க வா..என இருவரையும் வீட்டிலிருக்கும் பூஜை அறைக்கு அழைத்து சென்றார்.

தியாவோ ரோஹித்தை பார்த்து, “என்ன செஞ்சுட்ட தெரியுமா?” என கோபமாக கேட்க, அவன் பாவமாக முகத்தை வைக்க, அனைவரும் சிரித்தனர். மனீஷாவும் லேசான புன்னகையுடன் அவனை பார்த்தாள்.

பையை அங்கேயே வச்சிட்டு பூஜை அறைக்குள் வாம்மா..என ராணியம்மா அழைக்க, பாட்டி..என ரோஹித் புரியாமல் விழித்தான்.

“நீ இந்த திருமணம் வேண்டாம்ன்னு சொல்லீட்டியா?” என ரோஹித் பயத்துடன் மனீஷாவிடம் கேட்டான். அவள் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ரோஹித்திற்கு மனீஷாவை பார்த்ததும் பிடித்தாலும் அவனுடன் அவளுக்கு திருமணம் எனவும் அவளுக்கு விருப்பமில்லையே! என்ற எண்ணம் ஆழமாக பதிந்ததால் “அவளுக்கு தன்னை பிடிக்காது” என யூகித்து இருந்தான்.

“இல்லை” என அவள் தலையசைத்தாள்.

பாட்டி அவளுக்கு சம்மதம் தானான்னு நீங்க கேட்கவேயில்லை..

“இதற்கு முன்னும் யாரும் என் அபிப்ராயத்தை கேட்கலையே!” என்றாள் மனீஷா பட்டென. அவன் முகம் வாடியது.

“என்னம்மா?” ராணியம்மா கேட்க, அவர் தான பாட்டி கேட்டார் என அவள் சொல்ல, எல்லாரும் ரோஹித்தை பார்த்தனர்.

விருப்பமில்லைன்னா நான் அதை கழற்றிடுறேன் என ரோஹித் யோசிக்காமல் மனீஷா கழுத்தில் கையை வைக்க, அவனை அடித்து விட்டாள் மனீஷா.

மனூ..எல்லாரும் அதிர்ந்தனர். ரோஹித் கன்னத்தில் கை வைத்து அவளை திகைத்து பார்த்தான்.

ரோஹித், “நீ என்ன செய்ய போன?” என வினித் கோபமாக கேட்டான்.

மாமா..என அவன் பாவமாக பாட்டியை பார்க்க, மனீஷாவோ அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

பாட்டி.. நான் முகி அறைக்கே போகவா? என மனீஷா கோபமாக அவனை முறைத்துக் கொண்டே கேட்டாள்.

ரோஹித், நீ வாயை திறக்கவே கூடாது என யுக்தா சத்தமிட, ரோஹித்திற்கு அருகே நெருக்கமாக வந்து நின்றாள் மனீஷா.

தியா அவனிடம் குங்குமத்தை நீட்டினாள்.

ரோஹித் அவளது முந்தானையை எடுத்து முக்காடு போட்டு, அவளது நெற்றியில் அவள் கணவன் நான் என்ற அங்கீகாரத்தை இட்டான். பின் இருவரும் சேர்ந்து ஆராத்தி தட்டை பிடித்து கடவுளை வழிபட்டனர். பூஜை அறையிலிருந்து அனைவரும் வெளியே வந்தனர்.

இது..என ரோஹித் மனீஷாவை பார்த்து கேட்க, அவள் முக்காடு விழாமல் பிடித்துக் கொண்டு அவளது பைகளை எடுக்க,

“எதுக்கு பேக்கேஜ்?” என ரோஹித் கேட்டான்.

அதுவா அண்ணி அவங்க வீட்டுக்கு போறாங்களாம் என முக்தா சொல்ல, “உங்க வீட்டுக்கா?” என ரோஹித் அவளை பார்த்தான்.

டேய் மரமண்ட, உன்னோட அறைக்கு அழைச்சிட்டு போ என அவளின் மற்ற பைகளை ரோஹித் கையில் திணித்தாள் யுக்தா.

“என் அறைக்கா?” என ரோஹித் ராணியம்மாவை பார்த்தான்.

ம்ம்..

பாட்டி, .நம்ம முறைப்படி எந்த சம்பிரதாயமும் நடக்கலை என ரோஹித் கேட்டான்.

அவளுக்கு தன் திருமணம் அலாவின் முறைப்படி என புழலரசனின் கனவை எண்ணி கண்ணீர் சொட்டியது. அவளது கையிலிருந்த பை கூட அவள் மனம் போல கனமாக தோன்ற அவள் கையிலிருந்ததை கீழே போட்டாள். எல்லாரும் அவளை பார்த்தனர்.

“மனூ அண்ணி” என முக்தா அவளருகே வந்து அவள் கையை அழுத்தினாள். அவள் கண்ணீர் ரோஹித்திற்கு புரியவில்லை. தியாவிற்கு புரிய அவள் கண்கள் கலங்கியது.

எல்லாவற்றையும் அங்கேயே போட்டு விட்டு முக்தா கையை தட்டி விட்டு கண்ணீருடன் மாடி ஏறி ரோஹித் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.

“என்னாச்சு? ஏதும் தப்பா கேட்டுட்டேனா?” ரோஹித் கேட்டான்.

மனுவும் அரசனும் காதலிக்கும் போது நாங்க எல்லாரும் சேர்ந்து தான் வொர்க் பண்ணீட்டு இருந்தோம். நாங்க வெட்டிங் பிராஜெக்ட் வொர்க்ல்ல தான இருந்தோம்.

நம்ம மனூவோட வேலையே ஸ்டேஜ் டெக்கரேசன். ஒரு திருமணத்திற்காக நாங்கள் தயார் செய்யும் போது அரசன் அவளிடம், “நீ எங்க முறைப்படி நான் கட்டும் தாலியை வாங்கிப்பேல்ல?” எனக் கேட்டான்.

வாப்பா..கோவிச்சுப்பார்ல்லடா என மனு கேட்க, அவன் அதற்கு முதல்ல உங்க முறைப்படி திருமணம் நடக்கட்டும். அப்புறம் இந்த மாதிரி டெக்கரேசன்ல்ல மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கலாம் என கூறினான். ஆனால் இன்று..என தியாவும் கண்ணீருடன் நிற்க, ரோஹித்தால் நிற்க முடியவில்லை. அவனுக்கு மனம் பாரமாகி போனது.

ரோஹித்தை பார்த்த தியா, அரசனை விட நம்ம மனூ தான் அவனை அதிகமாக காதலித்தாள். பள்ளியில் இருந்தே இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும். ஆனால் பேசியதில்லை. நான் மனூ கூட அதிகமாக பேசியதில்லை.

வேலைக்கு ஒரு பொண்ணு வர்றான்னு கேள்விப்பட்டோம். மனூன்னு நாங்கள் இருவருமே எதிர்பார்க்கலை. யுகியை நாங்க மீட் பண்ணும் முன்னிருந்தே மனூ அரசனை காதலித்து இருந்திருக்கிறாள். அவளால் அவ்வளவு எளிதாக அவனை மறக்க முடியாது. நீ காத்திருக்கணும்..என அவள் ரோஹித் அறைக்கு சென்றாள்.

ராணியம்மா அவனை அமர வைத்து, காத்திருப்பதால் நீ குறைஞ்சு போக மாட்ட. அவள் இனி உன் அறையில தான் இருப்பா. இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசி புரிஞ்சுக்கோங்க. எதையும் பார்த்து பேசணும்..இனி வரும் காலத்தில் உனக்கு அவளும் அவளுக்கு நீயும் தான் இருக்கணும். அவளிடம் அவசரப்பட்டுறாதப்பா..

காதல் எந்த அளவு பவர்புல்ன்னு இனி உனக்கு புரியும். ஆனால் அதில் சிறு பிழை ஏற்பட்டாலும் அதை சரி செய்வது கண்ணாடியை ஒட்ட வைப்பதற்கு சமம் என அறிவுரை வழங்கினார். அவனும் அமைதியாக கேட்டுக் கொண்டான்.

முக்தா அஜய் அருகே அமர்ந்து வருத்தமுடன் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். யுக்தாவோ அவளது சிறுவயது தோழனின் நினைவில் கண்கலங்க சென்றாள்.

ஒரு நிமிசம்…என அனைவரையும் அவன் பக்கம் திருப்பிய ரோஹித், பாட்டி..அவன் ஆசைப்பட்டது போல திருமணம் நடந்தால் மனூ சந்தோசப்படுவால்ல? எனக் கேட்டான்.

யுக்தா அவனை பார்த்து, அவளிடம் தனியா நீ பேசி தெரிஞ்சுக்கோ. அவசரப்படாத..அவனை இழந்த வலியில் இருக்கும் போது அவளின் மனநிலையை நம்மால் உறுதி செய்ய முடியாது. அவள் உன்னை கல்யாணம் பண்ணது அரசனுக்காக. அது மாறணும். நீ பழைய ரோஹித்தாக இருந்தால் அவள் கண்டிப்பா மாறுவா. நீ கேட்ட கல்யாண விசயம் அவள் ஒத்துக்கொள்ள தொண்ணூறு சதவீதம் வாய்ப்புள்ளது.

மெதுவாக பேசு..அதே போல்..அவள் எந்த முறைப்படி செய்ய எண்ணுகிறான்னு கேட்டுக்கோ..

எல்லார் முன்னும் திருமணம். ஒத்துப்பாளா? வினித் கேட்க, ம்ம்..ஒத்துக்கலாம்..இல்லாமலும் போகலாம் என யுக்தா வேகமாக அவளறைக்கு சென்றாள்.

முக்தா அருகே வந்து அமர்ந்த ரோஹித், அவர் எப்படி? எனக் கேட்டான்.

முக்தா அவனை பார்த்து, உனக்கு எதிர்ப்பதம். ஆனால் உங்களுக்குள் ஒரு ஒற்றுமை. இருவரும் நல்லா பேசுவீங்க. அண்ணி அந்த அளவிற்கு யாருடனும் பேச மாட்டாங்க.

அரசன் அண்ணாவை எனக்கு நன்றாக நினைவில் இருக்கு என கண்ணீருடன்..உன்னை போல சிரித்துக் கொண்டே தான் இருப்பார். ஆனால் அவர் வாழ்க்கை முறை, குடும்ப பொறுப்பு, அக்கறை அனைத்தும் அதிகமாக இருக்கும்.

பார்த்தேல்ல..அவர் நினைத்திருந்தால் அவர் குடும்பம், உயிரை காப்பாற்ற எண்ணி அண்ணியை விட்டு போயிருக்கலாம். ஆனால் அவர் இறக்கும் நிலையில் கூட அண்ணியை உயிரோட பாதுகாத்து, நல்ல வாழ்க்கையையும் அமைத்து கொடுத்துட்டு போயிருக்கார். இதில் அவரின் காதல், அக்கறை, பொறுப்பு..அனைத்தும் இருந்தது.

ஒன்று மட்டும் இல்லாமல் போனது. பணபலம்..அது இருந்தால் அண்ணா உயிரோட இருந்திருப்பாங்க என முக்தா ரோஹித்தை அணைத்து அழுதாள்.

ரோஹித் புழலரசனுடன் அவனை ஒத்துப்பார்க்க, “நான் எதற்கும் தகுதி இல்லாதவனாக இருக்கிறேனே!” என்னால மனுவை காதலிக்க முடியும். “அவளுக்காக என்னையும் என் குடும்பத்தையும் இழக்க முடியுமா? முடியாதே!” என அவன் மனம் அடிபட்டது.

அவருக்காக தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா. கடைசி வரை மனூவிற்கு என்னை பிடிக்காமல் போகுமோ?

இருக்கட்டும். அவளை பார்த்துக் கொள்வது என் பொறுப்பு தானே! என்னால அவளை பார்த்துக் கொள்ள முடியும் என அவனுக்கு அவனாக மனதில் எண்ணியவாறு அவன் கண்ணீர் வருவதை கூட பொருட்படுத்தாமல் யோசனையுடன் அமர்ந்திருந்தான்.

ரோஹித்..ரோஹித்..என அஜய்யும் வினித்தும் சத்தமிட, கனவிலிருந்து விழித்தது போல் இருவரையும் பார்த்தான்.

பாட்டிடா..என அவர்கள் சொல்ல, ராணியம்மாவை பார்த்தான். தியா மனீஷாவை கீழே அழைத்து வந்து கொண்டிருந்தாள்.

அம்மாடி, நீ கீழ இருடா..இரவு அறைக்கு போகலாம் என அவர் சொல்ல, பாட்டி சம்பிரதாயம் எதுவும் முழுதாக நடக்கலைல்ல. எதுக்கு? என ரோஹித் கேட்க, யார் சொன்னா நடக்கலைன்னு இனி நடக்கும் என முகி..என சத்தம் கொடுத்தார்.

முக்தா கண்ணை துடைத்து விட்டு பூஜையறைக்கு சென்று ஒரு தாம்பூலத்தை எடுத்து வந்தாள். அதில் அவர்கள் வழக்கப்படி திருமண ஆடைகள் இருந்தது. அவன் அதிர்ச்சியுடன் அவரை பார்த்தான்.

பாட்டி..என கோபமாக அழைத்தான் ரோஹித்.

நீ மருமகள தனியா அழைச்சுட்டு போய் பேசிட்டு வா..

பேசி..அவன் கேட்க, நம்ம குடும்பத்தினர் வர்றாங்க என்றார் ராணியம்மா.

பாட்டி..முக்தா அழைக்க, ஆமா..இன்று இருவருக்கும் திருமணம். எந்த முறைப்படி என்று பொண்ணே தீர்மானம் செய்யட்டும். அம்மாடி..போங்கம்மா. பேசிட்டு வாங்க..மத்த எல்லாரும் தயாராகுங்க..

“எங்க போகணும்?” வினித் கேட்க, முதல்ல பேசட்டும் முருகன் கோவிலா? துர்க்காம்மாவா? மசூதியா?ன்னு தெரிந்தவுடன் கிளம்பலாம் என சொல்ல, அவளோ திகைத்து ரோஹித்தையும் ராணியம்மாவையும் பார்த்தாள்.

ரோஹித் அவள் கையை பிடித்து, உனக்கு விருப்பமில்லைன்னா விட்ரு. நான் பார்த்துக்கிறேன் என்றான் உறுதியான குரலில் ராணியம்மாவை முறைத்துக் கொண்டு.

உங்க முறைப்படியே செய்யலாம். ஆனால் என மனீஷா கண்கலங்க ரோஹித்தை பார்த்து, “நான் சொல்ற இடத்துல்ல வைக்கலாமா? இது மட்டும்” என ராணியம்மாவை பார்த்தாள்.

“எங்கம்மா? உன் அலா ஆசைப்பட்ட இடமா?” எனக் கேட்டார் ராணியம்மா.

ரோஹித் அதிர்ந்து அவரை பார்த்து விட்டு மனீஷாவை பார்த்தான்.

ஆம்..என தலையசைத்தாள்.

யுகி, முகி, தியா..முதல்ல மருமகள தயார் செய்யுங்க. எல்லாரும் சீக்கிரம் தயாராகி வரணும். நம்ம வீட்ல எல்லாரும் தயாராகி தான் வருவாங்க. ஏற்பாடு முழுவதும் என சிந்தித்த ராணியம்மா..வாசலருகே ஓடி வந்து “வேலா” என வெளியே உரக்க சத்தமிட, அவன் துப்பாக்கியை நீட்டியவாறு வந்தான்.

உன்னோட ஆளுங்க சிலருடன் நீ எங்களது பாதுகாப்பிற்காக இரு. சில பொருட்கள் வாங்கணும் என அவர் சொல்ல, திருமணத்திற்கா? என மனீஷா கேட்டாள்.

ஆமாம்மா..பூக்கள், மாலை..இன்னும் நிறைய பொருட்கள் வேணும் என அவர் சொல்ல, நானே ஆர்டர் பண்ணிடுறேன் பாட்டி. எல்லாமே ப்ரெஷ்ஷா கிடைக்கும். தியா அமீக்கு கால் பண்ணு. மேம்மை அழைத்து சொல் என சொல்ல, தியா மகிழ்வுடன் மனீஷாவை அணைத்தாள்.

ஆமால்ல..நம்ம வெட்டிங் வொர்க்கர்ஸை பக்கம் வச்சிட்டு நாம ஆள் தேடணுமா? வினித் புன்னகைத்தான்.

பாட்டி..நீங்க லிஸ்ட்டை சொல்லுங்க என அவளது வேலையின் நினைவில் பேச, அவர் அவளை நெட்டி முறித்து புன்னகைத்தார்.

நீ சொல்லீட்டேல்லம்மா. உன்னோட ப்ரெண்ட்ஸ் வருவாங்க. நீ தான்ம்மா பிரைடு. நீ தயாராகணும்ல்ல? உள்ள போ..என ராணியம்மா மகிழ்ச்சி வெளிப்படையாக தெரிய, எல்லாரும் வியப்புடன் மனீஷாவை பார்த்தனர்.

ஒரு நிமிசம்..உனக்கு விருப்பம் தான? ரோஹித் கேட்க, ம்ம்..என்று சொல்லி விட்டு முக்தா, யுக்தாவுடன் அவள் செல்ல, தியா அவள் நண்பர்களையும் நட்சத்திராவையும் வர வைத்தாள்.

சில மணி நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் வந்து சேர்ந்தனர். விருப்பமுள்ள, விருப்பமில்லாத அனைவருமே ராணியம்மாவின் பேச்சை தட்ட முடியாமல் அரசன் திருமணக் கனவை ரோஹித் மூலம் நிறைவேற வைத்தனர்.

அஜய்யின் சொந்தங்கள், மனூவின் நண்பர்கள், வினித்தின் நண்பர் குடும்பங்கள், ரோஹித் குடும்பத்தினரின் பிசினஸ் ஆட்கள், சில சொந்தங்கள், மீடியா..என ஆட்களை அழைத்து ரோஹித்- மனீஷாவின் திருமணத்தை உலகெங்கும் பரப்பினர்.

நல்ல முறையில் திருமணச் சடங்கை முடித்தனர். பாங்கருந்தி கொண்டாடும் விழாவை மட்டும் தடை செய்திருந்தனர்.

யுக்தாவிடம் அனைவரும் அவள் திருமணத்தை பற்றி கேட்க, அவளோ தன் குடும்ப பிசினஸை விரைவிலே கையில் எடுக்கப் போவதாக சொல்ல, அவள் அண்ணங்கள் வன்மத்துடன் அவளை பார்த்தனர். ராணியம்மாவும் அஜய், வினித்தும் அவர்களை கவனித்தனர்.

ரோஹித் மகிழ்வுடன் இருந்தாலும் அவ்வப்போது மனீஷா அழுகிறாளா? எனவும் பார்த்தான். அவர்கள் முறைப்படி கட்டும் தாலியை ரோஹித் அவள் கழுத்தில் போடும் போது அவள் கண்ணீரை பார்த்தான். மனதை தேற்றிக் கொண்டு அவளை சந்தோசமாக பார்த்துக்கணும் என மனதினுள் எண்ணினான்.