நீ நான் 14

கீர்த்து..விகாஸ் அழைக்க, எழுந்து அவனிடம் ஓடி அன்று போல் அவனை அணைத்து அழுதாள். சுதாரித்த ராம்..நான் எதுவும் செய்யலை. அவ தான் என்னிடம் தப்பா பேசினா என்று அவதூறாக கீர்த்துவை பற்றி ராம் சொல்ல, விகாஸிடமிருந்து கீர்த்தனா நகர்ந்து விகாஸை பார்த்தாள்.

மற்றவர்களும் அவ்விடம் வர, நான் எதுவும் சொல்லலை. அவன் என சொல்ல முடியாமல் கீர்த்து அழ, சொல்லு..சொல்லு..என ராம் நல்லவன் போல பேச, அவன் வாயிலே ஓங்கி குத்தினான் விகாஸ்.

ராமின் பற்கள் தெறித்து இரத்தம் வந்தது.

டேய் பரதேசி, யார் வீட்டுக்கு வந்து யார பத்தி பேசுற? கொன்றுவேன் பார்த்துக்கோ என விகாஸ் ராம் கையை பிடித்து திருக, ராம் அலறினான்.

“அவனை விடுடா” அவன் அம்மா விகாஸை தடுக்க, மாம்..இவனை கொல்லாமல் விட மாட்டேன் என அறையிலிருந்த சிறிய நாற்காலியை தூக்கி விகாஸ் அவனை அடிக்க, ராம் கீழே விழுந்து பிரண்டு எழுந்து ஓடினான்.

டேய்..நில்லுடா என ரகசியனும் அவனை பந்தாட, பசங்க எல்லாரும் அடித்ததில் அடையாளம் தெரியாமல் போனான் ராம். கீர்த்தனா அழுது கொண்டே நின்றிருந்தாள்.

இனிமேல் எங்க பொண்ணு பக்கத்துல்ல வந்த உடம்புல உயிர் இருக்காது தாத்தா அவனை மிரட்டி அனுப்ப, உங்கள சும்மா விட மாட்டேன் என அவன் ஓடினான். அவனுக்கு எதிரே ஓடுபவனை புரியாமல் பார்த்தவாறு வந்தான் விக்ரம்.

நாற்காலியால் அடித்தும் விகாஸின் கோபம் ஓயவில்லை.

அண்ணா, நான் அவனை பார்த்துட்டு வாரேன் என விகாஸ் கோபமூச்சுக்களுடன் சொல்ல, அவன் அப்பா அவனை பார்த்து..வீ அமைதியா இரு என்றார்.

நோ..டாட். நான் வாரேன் என அவன் நகர, நில்லு வீ..என் கேள்விக்கு பதில் சொல்லீட்டு எங்கேயும் போ என்றார்.

சில நாட்களாக நீ சரியில்லை. “அடிக்கடி இங்க வர்ற? இப்ப எதுக்காக அவனை இப்படி அடிச்ச? “கீர்த்துவிடம் அவன் தப்பா நடந்துகிட்டான் தான். அவனை கொல்லலாம்.

ஆனால் உன் பதட்டம், நீ வெறியுடன் அவனை அடித்தது போல இருந்தது.

டாட், “அவனை சும்மா விட முடியாதுல்ல?”

முடியாது தான். முதலில் உதவிக்கு தான் ஆளை கூப்பிட உனக்கு கற்றுக் கொடுத்திருக்கோம். நாங்க எல்லாரும் இருக்கும் போது ஏன் நீ முன் போன? இன்று வந்ததிலிருந்து கீர்த்தனா அறையை அடிக்கடி பார்த்துக்கிட்டே இருந்த? என்ன செய்ற? என அவர் கேட்க, விக்ரம் அப்படியே நின்றான்.

கீர்த்தனாவும் அழுகையை நிறுத்தி அவனை பார்த்தாள்.

டாட்..என தயங்கி அனைவரையும் பார்த்து விட்டு, கீர்த்தனா அருகே சென்று நின்ற விகாஸ்..ஐ..ஐ லவ் கர் டாட் என்றான்.

“வாட்?” விக்ரம் குரலில் எல்லாரும் அவனை பார்த்தனர்.

மாமா, நான் கீர்த்தனாவை காதலிக்கிறேன்.

வீ..மத்த பொண்ணுங்க மாதிரி கீர்த்து கிடையாது. நீ அவளோட விளையாட நினைக்காத என விக்ரம் கோபமாக கீர்த்தனாவை அவன் பக்கம் இழுத்துக் கொண்டான்.

மாம்ஸ், மத்த பொண்ணுங்க மாதிரி நான் அவளை பார்க்கலை. நான் கீர்த்து படிப்பு முடியும் வரை காத்திருக்கிறேன். பின் திருமணம் செய்து கொள்கிறேன் என்றான். அவன் கன்னத்தில் அறை விட்டார் விகாஸ் அம்மா.

மாம்..எனக்கு கீர்த்து தான் வேண்டும்.

உன்னோட இஷ்டத்துக்கு ஏதும் செய்ய முடியாதுடா என விகாஸ் அம்மா கீர்த்தனாவை முறைக்க, அவளுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. அவள் விக்ரம் கையை பிடித்துக் கொண்டு அழுதாள்.

ஹேய் பப்ளிம்மா, “எதுக்கு அழுற?” மாம் உன்னை ஏதும் சொல்ல மாட்டாங்க விகாஸ் சொல்ல, பப்ளிம்மாவா? என விகாஸ் அம்மா கேட்க, எஸ் மாம். நான் அவளை இப்படி தான் செல்லமா கூப்பிடுவேன் என்றான்.

“இது எப்படா?” என ரகசியன் அம்மா கேட்க, பெரியம்மா..அன்று விக்ரம் மாம்ஸ் கோவிலுக்கு போனோம்ல்ல. அப்பொழுதிலிருந்து..அப்ப கூப்பிடுவேன். ஆனால் காதல்ன்னு தெரியல. ஆனால் இது கண்டிப்பாக காதல் தான் என்றான்.

விகாஸ் கீர்த்தனா அருகே வந்து, நீ சொல்லு பப்ளிம்மா. “உனக்கு என்னை பிடிக்கும் தான?” விகாஸ் கேட்க, அவள் விக்ரமை பார்த்தாள்.

விக்ரம் அவளை முறைக்க, கீர்த்தனா விக்ரம் கையை விட்டு நகர்ந்து நின்றாள்.

ஏய், “அன்று அந்த மரத்தடியில் என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?” என அவள் தலையை தட்டி மிருளாலினி கேட்க, அது வந்து..நான் அவளை டீஸ் பண்ணிட்டு இருந்தேன் அண்ணி என்றான் விகாஸ்.

“அவ்வளவு தான?” மிருளாலினி கேட்க, கீர்த்தனா இதழ்கள் பயத்தில் நடுங்கியது.

விகாஸ் அவளை பார்த்து, அவளருகே வந்து அவள் கையை கோர்த்து அன்று தெரியாமல் கிஸ் பண்ணிட்டேன் என விகாஸ் சொல்ல, விக்ரம் அவனை அடித்தான்.

மாம்ஸ்..என வீ அழைக்க, கீர்த்தனா கண்ணீருடன் விகாஸ் கையை இறுக பற்ற, விகாஸிற்கு நம்பிக்கை வந்தது. அவளை சொல்ல வைக்க எண்ணினான்.

மாம்ஸ், கிஸ் மட்டும் தான் பண்ணேன். தெரியாமல் இல்லை தெரிந்து தான். அன்று என விகாஸ் மீண்டும் தொடங்க விக்ரம் அவனை அடிக்க, விகாஸ் அம்மா “அவனை விடு” என விக்ரமை தள்ளினார்.

விகாஸ் மேலும் கீர்த்தனாவிடம் அன்று நடந்து கொண்டதை சொல்ல, விக்ரம் அடிக்க அடிக்க, கீர்த்தனா கண்ணீர் பெருகியது.

மற்ற யாரும் விக்ரமை தடுக்கவில்லை. கீர்த்தனாவிற்கும் விகாஸை பிடிக்கும் தானே!

அண்ணா..வேண்டாம் என விக்ரம் கையை பிடித்தாள் கீர்த்தனா.

“கீர்த்து” என விக்ரம் அதிர, சாரி அண்ணா..எனக்கு அவரை பிடிக்கும் என அவள் சொல்ல, அவள் கன்னத்திலும் அறை விட்டான் விக்ரம்.

அண்ணா..நான் சொன்ன பின் என்னை அடிங்க. அன்று தீவிபத்தில் காப்பாற்றிய போதே இவர் மேல் நல்ல எண்ணம் வந்து விட்டது. என்னிடம் அவர் சொன்னது போல் தவறாக ஏதும் நடந்துக்கலை. தெரியாமல் விழும் போது நடந்தது. ஆனால் நானும் அதை தடுக்கலை. முதலில் எனக்கும் என் மீதே கோபம். ஏன்னு அன்று புரியலை. பின் தான் புரிய ஆரம்பித்தது.

பின் ஒரு நாள் கூட என்னுடன் படிப்பவன் என் மீது லிக்விடை ஊற்ற வந்தானே! அப்பொழுது எனக்காக அவர் பட்ட காயம் தான் மொத்தமாக என்னை அவர் பக்கம் சாய்த்தது.

அதன் பின் என் அருகே கூட இவர் வரவில்லை. நான் தான் இவருக்கு என்னை பிடிக்கலையோன்னு மொத்தமாக விலகியே இருந்தேன். பேச வந்த போது கூட நான் பேசலை. என்னிடம் பேச தான் என் அறையை பார்த்திருப்பார் என விகாஸ் மீது நம்பிக்கையுடன் பேச, அவனுக்கோ மனம் துள்ளியது.

யார் பேசியும் சமாதானமாகாத என் மனதை உங்களுடன் அவர் பேசியதை வைத்தே சந்தோசமாக்கி கொண்டேன். அவரோட கலகலப்பான பேச்சு என் மனதுக்கு இதமாக இருந்தது. அவர் என்னை காதலிக்கும் முன் எனக்கு அவர் மீது காதல் வந்து விட்டது. என்னால தான் புரிஞ்சுக்க முடியல என முகத்தை மூடி அழுது கொண்டே, சாரி அண்ணா எனக்கு காதலிக்கிறது தப்புன்னு தெரியும். ஆனால் என்னால அவர் மீதுள்ள பாசத்தை கட்டுப்படுத்த முடியலை. அவர் பேசுறதை கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு என அழுது கொண்டே, உங்களை தவிர எந்த பசங்களும் இந்த அளவு என்னை சந்தோசப்படுத்தியதில்லை.

ஆன்ட்டிக்கு ஏற்கனவே என்னை பிடிக்காது. அதனால நான்..என விக்ரமை பார்த்து என்னை ஏதாவது ஆசிரமத்தில் சேர்த்து விட்ருங்க என கீர்த்தனா அழுது கொண்டே விக்ரமை அணைத்தான்.

அவளது அழுக்கில்லாத குணம் அனைவர் மனதையும் கவர்ந்தது. அவளது நிலையும் புரிந்தது. விக்ரம் கண்ணீருடன் நின்றான்.

விகாஸ் அவன் பெற்றோரிடம் சம்மதத்தை கேட்டவாறு நிற்க,சு வாதி விக்ரம் அருகே வந்து கீர்த்தனாவை அணைக்க, சுருதி, ரகசியன் அம்மா, சுஜி அம்மா என ஒவ்வொருவராக கீர்த்தனாவை ஏற்க, கடைசியில் விகாஸ் பெற்றோரும் அவளை ஏற்றுக் கொண்டனர்.

விகாஸ் அம்மா கீர்த்தனாவை அணைத்து, நீ என் மகனை என்னிடமிருந்து பிரிக்காமல் இருந்தாலே எனக்கு போதும்மா. “நீ சந்தோசமா இரு” என கீர்த்தனா நெற்றியில் முத்தமிட்டார். அவள் அவரை அணைத்து அழுதாள். விகாஸூம் தன் அம்மா, அப்பாவை அணைத்து “தேங்க்ஸ் மாம் டாட்” என்றான் மனநிறைவுடன்.

இதை நினைத்த விகாஸ் கண்ணில் உவர்நீர் நிற்காமல் வந்தது. அன்று இரவு தூங்காமல் காலை எழுந்தான்.

அனைவரும் சென்னைக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். மருது அனைவரிடம் பேசணும் என அமர வைத்தான். பின் தன் மனைவியை பார்த்தான். துளசியும் அவனருகே வந்து நின்றாள்.

“ரம்யா கல்யாணம் பற்றி” என பாட்டி தாத்தாவை பார்த்தான் மருது.

ஆமாப்பா, இன்னும் நேரம் கழிக்கக்கூடாது என்றார் பாட்டி.

ரம்யா யோசனையுடன் எல்லார் முன்னும் வந்து, “நான் படிச்சு முடிச்ச பின் கல்யாணம் வச்சுக்கலாமே!” என தன் அண்ணன் மருதுவை பார்த்தாள்.

இல்ல ரம்யா, உடனே செய்யணும்ன்னு மாமா ஆசைப்படுறார். மாப்பிள்ளையும் டாக்டர் தானே! அவரும் நீ படிக்க உதவுவார்ல்ல துளசி கேட்க, ஆமாடா நீ நம்ம வீட்டுக்கு சீக்கிரம் வந்திரு. என்னாலும் எத்தனை நாள் தனியே இருக்க முடியும்? திலீப் அம்மாவும் ரம்யாவை பார்த்து கேட்டார்.

ஆன்ட்டி, நான் படிக்கணும் ரம்யா சொல்ல, பாப்பா நீ தாராளமாக படிக்கலாம். உன்னை யாரும் தொந்தரவு பண்ணலை. ஆனால் கல்யாணம் பண்ணீட்டு படி. திலீப்பிற்கும் வயசு ஏறிட்டு போகுதுல்ல தாத்தா கூறினார்.

ரம்யா சிந்தனையுடன் “சரி” என தலையசைத்தாள்.

இந்த மாதம் முடியவும் கல்யாணம் வச்சுக்கலாமா? என தாத்தாவை பார்த்து மருது கேட்டான்.

“உடனேவா?” ரம்யா அதிர்ந்தாள்.

பாட்டி புன்னகையுடன், அம்மாடி ஒரு மாதம் இருக்கு என கண்களை சிமிட்டி சொல்ல, பாட்டி என அவரிடம் செல்லமாக கோபித்தவள் திலீப் அப்பா அருகே சென்று, மாமா எனக்கு அடுத்த மாதம் எக்ஸாம் இருக்கு. முடிந்த பின் வச்சுக்கலாம்ன்னு சொல்லுங்க என அவரை பேச துணைக்கு அழைத்தாள்.

ஏன்டா, “நம்ம வீட்டுக்கு வர ரொம்ப லேட் பண்ற?” என ரம்யாவை பார்த்து புன்னகைத்தார்.

“மாமா” என ரம்யா அவரை முறைக்க, சுவாதி முகம் வாடி இருந்தது. ஹரிணி அவள் கையை அழுத்தி பிடித்தாள். சுவாதி முகத்தை சிரித்தவாறு வைத்தாள்.

ரம்யா சொன்னா கேளு. உனக்கு ஒரு மாதத்தில் திருமணம். இது தான் முடிவு. சரிதான தாத்தா? துளசி ரம்யாவை முறைத்துக் கொண்டு கேட்டாள்.

சரி, என்னவாது பண்ணுங்க. திலீப் ஒத்துப்பாரா? ரம்யா கேட்க, இதோ கேட்டுட்டா போச்சு என ராஜா திலீப்பை அலைபேசியில் அழைத்தான்.

ஹலோ என்ற திலீப் குரலில், என்னடா அண்ணா கல்யாண மாப்பிள்ளையாக போற போல. கல்யாணப்பேச்சு தீவிரமா நடக்குது. என்னை போல நீயும் மாட்டப் போற. எல்லாம் விதி என ராஜா கேலியாக பேச, ஹரிணி அவன் முன் வந்து கையை கட்டிக் கொண்டு முறைத்தாள்.

கல்யாணப்பேச்சா? திலீப் கேட்க, ஆமா இந்த மாதம் முடியவும் மேரேஜாம் என ராஜா சொல்ல, திலீப் குரல் தாழ்ந்து வந்தது.

சரிடா. அவங்க பார்க்கட்டும் என திலீப் வைக்க எண்ண, தன் மனைவியை கண்களால் கொஞ்சியவாறு ராஜா திலீப் குரலை கவனித்து சீரியசாக, “என்னாச்சு? உனக்கு விருப்பமில்லையா?” எனக் கேட்டான். எல்லாரும் ராஜாவை பார்த்தனர்.

தியா பற்றி சிம்மா மூலம் தெரிய வந்ததை சொல்ல, “அப்படியா? இப்ப எப்படி இருக்காங்க?” என ராஜா கேட்டான்.

இப்ப ஓய்வெடுக்க சொல்லி இருக்காங்கலாம்.

“அதுக்கு உனக்கு என்னடா?” ராஜா கேட்க, விக்ரம் சிம்மா மாமா அங்க போயிட்டாங்க. நேகன் வக்கீல் சந்துரூவை பார்க்க போயிருக்காங்க. அப்சரா குடும்பமும் மகிழன் நானும் தான் இருக்கோம்.

“அங்க சனா பாதுகாப்பா தான இருக்கா?” திலீப் கேட்க, அவளை போலீஸில் ஒப்படைத்து விட்டோம். இதெல்லாம் காரணமாக தெரியலையே? ராஜா கேட்க, திலீப் அமைதியாக இருந்தான்.

அண்ணா, நேற்று நடந்தது. அந்த வீடியோ உனக்கு தெரியுமா? ராஜா கேட்க, திலீப்பிடமிருந்து சத்தமே இல்லை.

“லையன்ல்ல இருக்கியா?” அண்ணா..அண்ணா..ராஜா அழைக்க, ரம்யா ராஜாவிடமிருந்து அலைபேசியை பிடுங்கி, திலீப்..அதெல்லாம் ஒன்றுமேயில்லை. அந்த வீடியோவை அழிச்சாச்சு. இப்ப பிரச்சனையில்லை என்று சமாதானப்படுத்த முயன்றாள்.

அண்ணா அழாதீங்க..என்ற மகிழனின் குரலில் ரம்யா பதறினாள்.

திலீப்..திலீப்..கேட்குறீங்களா? என ரம்யாவின் பதறிய குரலில் அனைவரும் அவளை சூழ்ந்து நின்றனர்.

ம்ம்..என்று திலீப் குரல் கொடுத்தான்.

பிக் சீனியர்..திலீப் அழுவதை வீடியோ எடுத்து அனுப்புங்க. இதை வச்சே திலீப்பை வச்சு செய்கிறேன் என ரம்யா கலாட்டாவாக பேசுவது போல் அவன் எண்ணத்தை மாற்ற முயன்றாள்.

மாமா..முகத்தை காட்டுங்க என மகிழன் அலைபேசியுடன் அவனை சுற்ற, போடா..என திலீப் அவன் கையிலிருந்த அலைபேசியை பறிக்க, இவனும் விடாமல் பிடிக்க இருவரும் சண்டை போட்டு உருண்டு கொண்டிருந்தனர்.

இருவரின் சண்டையின் இடையே வந்து பார்த்த அப்சரா,

ஹே..பிக் அனவன்ஸ்மன்ட் ..

டாக்டர்ஸ் இருவரும் சண்டை போடுறாங்க.

வாங்கோ..வாங்கோ..காணக் கிடைக்காத அரிய காட்சி.. ஐந்து நிமிடத்திற்கு ஆயிரம் ரூபாய் என அப்சரா கூவினாள்.

அப்சரா பெற்றோர் பதறி இருவரிடமும் வந்து, அடியேய் பிள்ளைங்க சண்டை போடுறாங்க. நீ பொருள விக்கிற மாதிரி கூவிட்டு இருக்க? அவள் அம்மா திட்ட, மாம்..நீ என்னை திட்டுன..என்னோட தலைவர் அம்மாவுக்கு நடக்கும் கதி தான் உனக்கு.

“போடி அங்கிட்டு” என அவர் உதவ வர, ரம்யாவோ என்னடா நடக்குது? என கத்திக் கொண்டிருந்தாள். திலீப் அலைபேசி கீழே விழுந்து ஸ்பீக்கர் ஆன் ஆனது.

டாக்டர்ஸ்..அமைதியோ அமைதி..அமைதிக்கெல்லாம் அமைதி என சின்சான் டயலாக்கை பேச, திலீப் நான் அங்க வந்தேன் இருவருமே காலி. “சண்டையா போட்டுட்டு இருக்கீங்க?” ரம்யா கத்தலில் இருவரும் விலகினார்கள்.

“யாருடா அது? சண்டைய பிரிச்சு விடாமல் வெட்டி பேச்சு பேசுறது?” ரம்யா கேட்க, வெட்டி பேச்சா? நான் எவ்வளவு அழகாக என் தலைவரின் டயலாக்கை உச்சரிக்கிறேன். என் பேச்சு வெட்டியா இருக்காடி என அப்சரா கொதிக்க, ரம்யாவோ சீற்றமானாள்.

திலீப், “யாரு அவ? அங்க என்ன பண்றா?” ரம்யா கொதிக்க, மாமா போச்சு. சமாளிங்க என மகிழன் சொல்ல, “எப்படிடா?” திலீப் விழித்தான்.

அப்சராவின் தந்தை அலைபேசியை எடுத்து, ஏம்மா திலீப் டாக்டர்ம்மா. நீ என்ன பெயர் சொல்லி அழைக்கிற?

நான் பெயர் சொல்லி என்ன போடா வாடான்னு கூட கூப்பிடுவேன். நானும் அவரும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். எப்படி வேண்டுமானாலும் கூப்பிடுவேன். உனக்கென்னயா? ரம்யா கேட்க, ரம்யா..என திலீப்பின் அழுத்தமான குரலில், அப்புறம் என்ன? நீங்க என்ன சின்னப்பிள்ளையா அழுறீங்க. கஷ்டமா இருக்குல்ல.

எங்க எல்லாரையும் பதட்டப்பட வச்சதால உங்களுக்கு மீண்டும் ஒரு தண்டனை இருக்கு என ரம்யா சொல்ல, இல்ல..நான் எதுவுமே செய்யலை. நான் வேணும்ன்னா சிரித்தது போல பிக் அனுப்பவா? திலீப் கேட்க, ம்ம்..அனுப்புங்க பார்க்கலாம் என்றாள். மகிழன் சிரித்தான்

சுருதி அக்கா, “உங்க ஆளையும் கவனிக்கலாமா?” என ரம்யா சுருதியை பார்த்து..ம்ம்..சூப்பர் பண்ணிடலாம் என அவள் சொல்ல, இப்பொழுது திலீப் மகிழனை பார்த்து சிரித்தான்.

அவனிடமிருந்து அலைபேசியை பிடுங்கிய அப்சரா, ஹே..ரம்யா..உன்னோட சாக்லெட் தண்டனை சூப்பர்? வேற ஐயிட்டம் இருந்தா சொல்லு. நானும் ட்ரை பண்றேன் என அப்சரா கேட்டாள்.

ஏய் நீ..ரம்யா கேட்க,

நாம சந்தித்து இருக்கோம். “உனக்கு நினைவில்லையா?” அந்த சனா லூசுகிட்ட இருந்து தப்பித்து வரும் போது உன்னை நான் தான் வெளிய அழைச்சிட்டு வந்தேன்.

ஹே, “புட்டி நீங்களா?” ரம்யா கேட்க, ஏய்..நான் புட்டியெல்லாம் அணிய மாட்டேன். அது என்னோட கெட் அப்.

சரி சரி..அதை விடு. “ஐயிட்டம் இருந்தா சொல்லு?”

நாங்க சென்னைக்கு தான் கிளம்பிட்டு இருக்கோம். வந்து சொல்றேன். ஆமா..அந்த சனா ஹாஸ்பிட்டல் ஒரிஜினல் ஓனர் நீங்க தானா?

நானில்லை. மை லவ்லி டாட்..

“வாட்?” இப்ப அவரிடமா பேசினேன் என ரம்யா உதறலுடன் கேட்க, எஸ்..என அப்சரா சிரித்தாள்.

போச்சு..போச்சு..அங்கே இன்டர்ன்னாக வரலாம்ன்னு நினைச்சிருந்தேன். எல்லாம் போச்சு. என்னோட வாயிருக்கே என ரம்யா புலம்ப, ஆல்வேஸ் வெல்கம்மா. ஆனால் பேசண்ட் கிட்ட இப்படி பேசாதம்மா என அப்சராவின் அப்பா சொல்ல, “தேங்க்யூ சார்” என ரம்யா குதித்தாள்.

அவளிடமிருந்து அலைபேசியை பிடுங்கிய தாத்தா, திலீப் உனக்கும் ரம்யாவிற்கும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் திருமணம் செய்யலாம்ன்னு இருக்கோம். என்ன சொல்ற? அவர் கேட்க, ம்ம்..ஓ.கே தாத்தா என திலீப் உடனே ஒத்துக் கொண்டான்.

“இப்ப என்னம்மா சொல்ற?” பாட்டி கேட்க, திலீப் என் படிப்பு? ரம்யா கேட்க, மேரேஜ் பண்ணிட்டு படி என அவனும் அதையே சொன்னான்.

“உனக்கு விருப்பமில்லையா?” திலீப் கேட்க, எனக்கு ஓ.கே தான். ஆனால் இது வேகமா இருக்கே என ரம்யா சிந்தித்தாள்.

திலீப் புன்னகையுடன், “இது வேகமா?” நாம சந்தித்து இரு வருடமாச்சே என்றான்.

ம்ம்..ஆனால்..என ரம்யா சொல்ல, தாத்தா ஏற்பாடு பண்ணுங்க என்ற திலீப், இதுக்கு மேல உனக்கு டைம் கிடையாது.

ம்ம்..என அலைபேசியை வைத்தாள். அனைவரும் மருது துளசியை புகழேந்தி, அன்னத்தை பார்த்துக் கொள்ள சொல்லி கிளம்பினார்கள். ரம்யாவிற்கு அவள் அத்தை, மாமா நினைவாகவே இருந்தது.

கீர்த்து போல நீயும் தமிழ் வீட்ல தங்கிக்கோ என தாத்தா சொல்ல, விடுதியிலே இருக்கேன். மேரேஜூக்கு பின் திலீப் வீட்ல இருக்கேன் தாத்தா என்றாள்.

விகாஸ் இடைபுகுந்து, “சொன்னா கேட்க மாட்டாயா?” என அதட்டினான்.

“அதுக்கு ஏன் கத்துற?” சரி தாத்தா..என ஒத்துக் கொண்டாள்.

கீர்த்துகிட்ட பேசணும். அவளையும் வர வைக்கணும் ரம்யா சொல்ல, காரை நிறுத்தினான் விகாஸ்.

“என்னாச்சுடா?” திலீப் அம்மா கேட்க, “ஒன்றுமில்லை பெரியம்மா” என அவன் குரல் கரகரத்தது. ரம்யா அவனையே பார்த்துக் கொண்டு வந்தாள்.

சந்தோஷ் அவனது ஆபிஸிற்கு தயாராக வினித் அவனை அழைத்து தியா பற்றி கூற, கார்த்திக்கை தவிர நண்பர்கள் அவளை பார்க்க ஹாஸ்பிட்டல் வந்தனர்.

தியாவிடம் பேசி விட்டு அவர்கள் வெளியே வர, சந்தோஷ் முன் வந்தாள் முக்தா.

அம்மு, “ரொம்ப வருத்தமா இருக்க? அழுதியா?” என அனைவரையும் சந்தோஷ் பார்த்தான்.

பாட்டி..என முக்தா அழைக்க, வினித்தும் ராணியம்மாவும் அவனை தனியே அழைத்து சென்று விசயத்தை சொன்னார்கள்.

“நானா? நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது?” அதுவும் யுகியை. அவள் கார்த்திக்கோட என ராணியம்மாவை பார்த்தான்.

ம்ம்..தெரியும்ப்பா. எங்க யுகி மாற மாட்டான்னு தெரியும். நீங்க கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். டேட் பண்ணா போதும் என்றார் ராணியம்மா.

“என்ன பேசுறீங்க?” என வினித்தை பார்த்தான்.

ம்ம்..ஆமாடா, எனக்கும் வேற வழியே தெரியலை என கார்த்திக் அம்மா பேசியதை அவனிடம் வினித் கூறினான்.

“என்னடா இப்படி பேசிட்டாங்க?” சந்தோஷ் வருத்தமாக கேட்டான்.

“ப்ளீஸ்டா” என வினித் சந்தோஷ் கையை பிடிக்க, டேட் பண்றேன். ஆனால் திருமணத்துக்கு ஃபோர்ஸ் பண்ணக் கூடாது என்றான்.

ம்ம்..டன் என வினித் அவனை அணைத்தான். ராணியம்மா மகிழ்வுடன் அங்கிருந்து நகர்ந்தார்.

பர்ஸ்ட் மீட் நாளை காலை எல்லாருடன் வச்சுக்கலாம் என்றான் வினித்.

ம்ம்..ஆனால் நான் ஆபிஸ்ல்ல இருப்பேன்.

“அதனால என்ன?” ரஞ்சனையும் அழைச்சிட்டு வாடா என சொல்ல, சந்தோஷ் தன் நண்பர்களுடன் யுக்தாவை பார்த்துக் கொண்டே சென்றான். ஆனால் அவளோ கார்த்திக் பேசியதையே எண்ணிக் கொண்டிருந்தாள்.

அவர்கள் செல்லவும் விக்ரம் சிம்மா வந்தனர். அவர்கள் சில மணி நேரம் அஜய், வினித்திடம் பேசி விட்டு சென்றனர்.

அப்சரா குடும்பம், சிம்மா, விக்ரம், திலீப், மகிழன், நேகன் அனைவரும் ஹாஸ்பிட்டலில் தியாவை பார்த்து விட்டு கோர்ட்டிற்கு வந்தனர். தாத்தாவும் அவர் குடும்பத்துடன் வீட்டிற்கு கூட செல்லாமல் நேராக வந்து விட்டார்.

முதலில் அந்த அமைச்சர் மகன் பற்றிய கேஸ் நடந்தது. ஆதாரமாக இணையத்தில் பரப்பியதே போதும் என அதை வைத்தே அவர்களுக்கான தண்டனையாக, இனி சர்க்காருக்கு சம்பந்தப்பட்ட எந்த ஆதாயமும் இவர்களுக்கு கிடைக்காது எனவும் இனி மினிஸ்டர் மகன் படிக்க தடை உத்தரவும் பிறப்பித்தார் நீதிபதி. மினிஸ்ட ருக்கான கடுங்காவல் தண்டனையும் பிறப்பிக்கப்பட்டது.

சனா அப்பாவின் கேஸில் சனா பற்றிய உண்மையும், அப்சரா அப்பாவிடமிருந்து ஹாஸ்பிட்டலை பறித்ததற்காக அவர்களின் லைசன்ஸ் கேன்சல் செய்யப்பட்டு, கொலை முயற்சிக்காக அவர்களை பத்து வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிரச்சனை முடியவும் நேகன் அவன் குடும்பத்திடம் ஓடி வந்தான்.

பாட்டி தாத்தா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான். அப்சராவின் குடும்பமும் அவர்களிடம் வந்தது. உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிந்து கிளம்ப, அப்சரா நேகனிடம் வந்து அவன் காதில் ஏதோ கூறி விட்டு அவளது எண்ணை கொடுத்து சென்றாள்.

அவன் புன்னகையுடன் திரும்ப, பாட்டி கையை கட்டிக் கொண்டு அவனை பார்த்தார். அனைவரும் அவனையே பார்க்க, அதுவா பாட்டி..அந்த பொண்ணு அப்சரா. அவளுக்கு உதவி வேணும்ன்னா கால் பண்ணுவாளாம். வேற ஒன்றுமில்லை. வாங்க கிளம்பலாம் என நேகன் வேறு பேச்சுக்கு தாவி அவர்களை அங்கிருந்து நகர்த்தினான்.

ரம்யா நேகனிடமிருந்து அப்சரா எண்ணை வாங்கிக் கொண்டாள்.

ஹாஸ்பிட்டலில் இருந்து கோபமாக வீட்டிற்கு வந்து பைக்கை நிறுத்தினான் கார்த்திக். பக்கத்து வீட்டு பொண்ணு அவனிடம் ஓடி வந்தாள்.

கார்த்திக் அண்ணா, நில்லுங்க. நேற்று இரண்டு பசங்க உங்க வீட்டுக்கு வந்தாங்க என வினித் ரோஹித் வந்ததையும், கார்த்திக் அம்மா அவர்களிடம் பேசியதும், ரோஹித் வெளியே அமர்ந்து அழுது புலம்பியதையும் கூறினாள்.

“தேங்க்ஸ்ம்மா” என சினமுடன் கார்த்திக் கதவை திறக்க, அவன் தந்தை நின்றிருந்தார்.

“அம்மா எங்க?” பல்லை கடித்துக் கொண்டு கார்த்திக் கேட்டான்.

அவன் தந்தை உள்ளே பார்க்க, வந்துட்டியா கார்த்திக். இன்று விடுப்பு சொல்லீடு. நாம பொண்ணு பார்க்கப் போறோம் என்று அவன் அம்மா சாதாரணமாக பேச, அவனோ கொதித்தான்.

“அம்மா” என கத்திய கார்த்திக்கை பார்த்து அவன் அம்மா அதிர்ந்து நின்றார்.

“ரோஹித் முன் என்ன பேசுனீங்க? யுக்தா விதவையா?” நான் உயிரோட தான இருக்கேன். செத்தா போயிட்டேன் என கத்த, அவன் தந்தையும் அதிர்ந்து அவனை பார்த்தார்.

பெற்றோரிடம் சிறு எதிர்ப்பு கூட காட்டாமல் வளர்ந்தவனின் கோபத்தை பார்த்தவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

“இல்லப்பா” என அவன் தந்தை சமாளிக்க எண்ணினார்.

அப்பா, அம்மா பேசும் போது என்ன செஞ்சுட்டு இருந்தீங்க? நான் கல்யாணமே வேண்டாம்ன்னு சொன்னதுக்கு காரணம் என்னோட புஜ்ஜிம்மா தான். பள்ளியில் தான் காதலித்தோம். ஆனால் இப்ப வரை நான் அவளை தான் நினைச்சுட்டு இருக்கேன். என் மேல தான் தப்பு. நான் தான் அவளை புரிஞ்சுக்க தவறிட்டேன். கல்யாணமன்று கூட எனக்கு கால் பண்ணா. நான் தான் எடுக்கல என தலையில் அடித்து கார்த்திக் அழுதான்.

“அது எப்படி அவள் ராசியில்லாதவளா?” அவளோட இந்த நிலைக்கு காரணமே உங்க பையன் தான். அன்று அவளது அழைப்பை ஏற்றிருந்தால் இந்த பெயர் அவளுக்கு வந்திருக்காது.

என்னோட ப்ரெண்ட்ஸ் சொல்லி தான் அவளுக்கு மேரேஜ் முடிஞ்சதுன்னு தெரிஞ்சது. அதான் அன்று நான் வீட்டிற்கே வரலை. என்னோட யுகி இப்ப எனக்கு இல்லை. அவள சந்தோஷ் கல்யாணம் பண்ணிக்கப் போறானாம்.

என் மேலுள்ள கோபத்தில் என்னோட புஜ்ஜிம்மாவும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாப்பா. “நான் இப்ப வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிக்க சொல்றீங்க? எப்படி என்னால முடியும்?”

“அவ தான் வேறொருவனை கல்யாணம் பண்ணிக்கப் போறாலப்பா?” நீயும் வா..என அவன் அம்மா அழைக்க, அவர் அப்பா முதல் முறையாக தன் மனைவியை அடித்தார்.

வாய மூடிட்டு இரு. வாயில கையை வை என கத்தினார்.

“வேற எவளையும் கட்டிக்கிறது நான் சாகுறதே மேல்” என நெற்றியடியாய் சொல்லி விட்டு கார்த்திக் அவனறைக்குள் நுழைந்தான்.

சற்று நேரத்தில் அவன் வெளியே வர, அவன் அம்மா வாயிலிருந்து கையை எடுக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார். அவன் தந்தை அவனிடம் வந்து, “நான் பேசுகிறேன்ப்பா” என்று முன் வந்தார்.

இருக்கட்டும்ப்பா. என் தலைவிதி எப்படி இருக்கோ அப்படியே நடக்கட்டும் என அவன் தாயை முறைத்து விட்டு வெளியேற, “சாப்பிட்டு போப்பா” என வாயில் கையை வைத்தபடியே பேசினார் அவன் தாய்.

“தேவையில்லை” என அவன் வெளியேறவும் கார்த்திக் அம்மா அழுதார்.

“நான் சொன்னதை கேட்டீயா?” அவன் தந்தை அவரை திட்டினார்.

கார்த்திக்கிற்கோ மனம் எதிலும் ஈடுபடவில்லை. யாருமில்லா மலைப்பாதையில் சென்று மலையின் உச்சிக்கு சென்று அமர்ந்து கொண்டான். அன்று முழுவதும் அவன் வீட்டிற்கு வரவேயில்லை.

தியாவை அன்று முழுவதும் ஹாஸ்பிட்டலில் வைத்திருக்க சொல்ல, அஜய்யும் ராணியம்மாவும் அங்கே இருந்தனர்.

“நானும் முக்தாவும் உடன் பிறந்தவர்களா?” எனக் கேட்டான் அஜய்.

ம்ம்..உங்களுக்கும் என் அம்மா, அப்பாவுக்கும் என்ன சம்பந்தம்?

புத்திசாலி புள்ள..என அவனை பார்த்து, உன் அம்மா என் தங்கையின் பொண்ணு. உன் அம்மா அப்பாவுடன் வந்த கஷ்டத்தில் அவ இறந்துட்டான்னு கேள்விப்பட்டேன்.

என்னோட அம்மாவோட அப்பா?

அவர் உடல்நலமில்லாமல் இறந்துட்டார்.

அம்மாவை பற்றி சொல்லுங்களேன் என அஜய் ஆசையாக கேட்டான்.

உன் அம்மா என்னை கண்டுபிடித்து அவளது உயிரை கையில் பிடித்துக் கொண்டு வந்தாள். முக்தாவை ரோஹித் பெற்றோர் கையில் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

நான் எவ்வளவோ தடுத்தேன். அவள் கேட்கவேயில்லை. அவள் கடைசியாக சொன்னது. என்னோட பொண்ணு அவ கண்ணுல படக் கூடாது. என் மகன் வளர்ந்த பின் அவனிடம் ஒப்படைங்கன்னு சொல்லீட்டு என் கேள்விக்கு கூட பதில் கூறாமல் போனாள்.

பின் அவள் அந்த நிலையில் சிரமப்பட்டு பயணம் செய்து உன்னை பார்க்க வந்தாள். உன்னை பார்த்து பேச வந்தவளை யாரோ கடத்தி எறிச்சுட்டாங்கன்னு சாம்பல் தான் உன் அப்பாவிடம் வந்தது. அவர் கதறி அழுதார்.

உனக்கு உன் அம்மாவை பற்றி தெரியக் கூடாதுன்னு சொல்லி தான் அந்த காதம்பரி உன்னை “அம்மா” என அழைக்க வைத்தாள்.

ஆனால் “எனக்கும் முகிக்கும் வயது வித்தியாசம் அதிகம் இருக்குமே!”

ஆம், நீ பிறந்து ஒரு வருடத்தின் பின் தான் அந்த காதம்பரி உங்க வாழ்க்கையில் வந்தாள். உனக்கு அப்பொழுது முழுதாக விவரம் தெரியலை. உன் அம்மாவை கடத்தி உன் அப்பாவை மிரட்டி தான் உன்னை தன் மகனாக ஆக்கி கொண்டிருக்கிறாள்.

சில வருடங்களுக்கு பின் உன் அப்பா அவளுக்கு தெரியாமல் அடிக்கடி உன் அம்மாவை சந்திப்பாங்க. காதம்பரி ஆள் ஒருவனே உன் அப்பாவுக்கு உதவினார். வீராவும் உன் அப்பாவும் சேர்ந்து உன் அம்மாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் உன் அம்மா அப்பொழுது ஆறு மாத கருவை சுமந்து இருந்தார். அவங்களால காப்பாற்ற முடியலை. அவர்களால் ஏதும் செய்ய முடியலை. அவளை எதிர்த்தால் உன்னை கொன்றுவேன்னு மிரட்டி வச்சிருந்தாங்க. பாவம் உன் அம்மா..ரொம்ப கஷ்டப்பட்டா.

அவ கர்ப்பத்திற்கு உன் அப்பா தான் காரணம் என காதம்பரிக்கு தெரியாது. தெரிஞ்சா கருவை கொல்ல என்ன வேண்டுமானாலும் செய்வான்னு யாருமே வாயை திறக்கலை.

நீயும் வளர்ந்த பத்தாவது மாதம் பிரசவ வலியில் துடித்த அவளை ஹாஸ்பிட்டலில் சேர்த்தாள் காதம்பரி. குழந்தை பிறந்தது. அந்த நேரம் கூட மருத்துவரிடம் குழந்தையை அவளிடம் கொடுக்க வேண்டாம்ன்னு அவள் சொன்னதால் குழந்தை செத்து போச்சு என வேற குழந்தையை காட்டிட்டாங்க.

அதனால் முகி பிறந்ததே இத்தனை வருடமாக தெரியாது. குழந்தை தூக்கி என்னை பற்றி ஏற்கனவே அவள் அம்மா உன் அம்மாவிடம் சொல்லி இருப்பாள் போல. நேராக என்னை பற்றி விசாரித்து இங்கே வரும் போது யாரோ ஒருவன் குடிச்சிட்டு குத்தியதா சொன்னா. நானும் அப்படி தான் என எண்ணி அவளுக்கு சிகிச்சை அளிக்க, முடியவுமே அவள் என்னிடம் சொல்லி விட்டு தன் மகனை பார்க்க போவதாக சொல்லி சென்றாள்.

மனம் கேட்காமல் என் ஆட்களை அனுப்பினேன் அவளுக்கு தெரியாமல். அவள் உங்க வீட்டுக்கு பத்திரமா வந்துட்டான்னு தான் என்னோட ஆட்களை வர வைத்து விட்டேன். ஆனால் மறுநாள் உன் அம்மா இறந்ததாக சொல்லவும் உயிரே போச்சு என கண்ணீர் வடித்தார் ராணியம்மா.

எனக்கு முழுதாக எதுவும் தெரியல. அவள் தன் மகளை காக்க தான் வந்தாள் என்று மட்டும் தான் தெரியும். அந்த காதம்பரி பற்றி தியா வந்த பின் தான் தெரிந்து கொண்டேன்.

அவ ராட்சசிப்பா. அவகிட்ட உன் அம்மா மட்டுமல்ல தியாவும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டா. நல்ல வேளை தியாவையாவது காப்பாற்றும் வாய்ப்பு கிடைத்தது என்று கண்ணீரை துடைத்தார்.

“அம்மாவை சென்னையில வச்சு தான் கொன்னாங்களா?” பாட்டி..”அம்மா உண்மையிலே உயிரோட இல்லையா?” அஜய் கேட்க, “என்னப்பா சொல்ற?” அவர் கேட்டார்.

அம்மாவை கடத்தி வச்சு என் மனதை மாற்றி அப்பாவை காதம்பரி மிரட்டினாள் சரி. ஆனால் அம்மா இறந்த பின் யாரை வைச்சு மிரட்டி எங்க சொத்தை அடைய நினைத்தாள்?

அது..தெரியலையே? உன்னை கொல்வதாக ராணியம்மா சொல்ல, அப்பாவுக்கு இருக்கும் செல்வாக்கிற்கு எங்கு வேண்டுமானாலும் என்னை தூக்கி சென்று காப்பாற்றி இருக்கலாம் என்றான் அஜய்.

அட ஆமா, இதை நான் யோசிக்கவேயில்லை. “வீரா அங்கிளுக்கு தெரியுமோ?” அஜய் கேட்க, எனக்கு தெரியாது என்ற குரலில் இருவரும் அவரை பார்த்தனர்.

அங்கிள், அம்மா..”உயிரோட தான இருக்காங்க?” அஜய் கேட்க, வாய்ப்பில்லை அஜய். ஆனால் நீ சொல்றதை வைத்து பார்த்தால் எனக்கு அப்படி தான் தோணுது.

அங்கிள், “தியா அம்மா, உங்க மனைவிய எதுக்கு அவங்க கொல்லணும்?” அஜய் கேட்டான்.

எல்லாரும் தோழிகளாக பழகினாங்க. என் மனைவி தான் காதம்பரி எல்லாரையும் நோட்டமிடுவதை பார்த்து, அவளிடம் பேச சென்றிருக்கிறாள். பேசும் போதே படியிலிருந்து தள்ளி விட்டாள். வினித் என் மனைவி வயிற்றில் இருந்தான். அவன் பிறக்க அவள் என்னை விட்டு போயிட்டா..

அப்ப தியா அம்மா?

அது..தெரியல. உன் அம்மா இறந்து வருடங்களுக்கு பின் தான் தியா அம்மா இறந்திருக்காங்க. அவள் கத்தியால் குத்தி காரில் அடிப்பட்டது போல் செட் பண்ணீட்டாங்க. போலீஸூக்கு கூட இது கொலைன்னு தெரியும். பணம் பத்தும் செய்யுமேப்பா.

செய்யும் செய்யும். அதே பணம் நமக்கும் செய்யும் அங்கிள். அவங்க ஒருத்தரையும் சும்மா விட மாட்டேன் என அஜய் சொல்ல, இதை அறையின் வெளியே வந்த தியா கேட்டு அழ, அவள் அழும் சத்தம் கேட்டு எல்லாரும் அவள் பக்கம் திரும்பினார்கள்.

அஜய் அவளிடம் ஓடி பேசி சமாதானப்படுத்த முயன்றான். ஆனால் முடியவில்லை. தியா அழ, “பாப்பா பாரு தியா” என ராகவீரன் அவளை திசை திருப்ப, ரதுவை பார்த்து விட்டு அஜூவை பார்த்து..அஜூ..அம்மா டைரி..அதுல்ல சில பக்கம் கிழித்ததை போல் இருந்தது தியா சொன்னாள்.

சரி நான் பார்த்துக்கிறேன். நீ எதையும் யோசிக்காமல் ஓய்வெடு என அவளை தூக்கி அறையில் இருந்த படுக்கையில் படுக்க வைத்து அமைதியா இரு என்று அஜய் ராணியம்மா ராகவீரனை பார்த்தான்.

அவர்கள் வெளியேற, அஜய் ரதுவை தூக்கிக் கொண்டு தியா அருகே வந்து அமர்ந்தான்.