“ஹாய்! வணக்கம் நான் உங்கள் அன்பான ஸ்ரீ பேசுறேன். எல்லாரும் எப்படி இருக்கீங்க? நல்லா இருப்பீங்க இருக்கணும்னு கடவுள் கிட்ட வேண்டுகிறேன்.
இந்த நாளோட முதல் கவிதையைச் சொல்லி இந்த ஷோவ ஸ்டார்ட் பண்ண போறேங்க எல்லாரும் ரெடியா? சொல்லிடலாமா? என்றவன் சில நொடிகள் கடந்து.
இன்னைக்கும் என்னைக் கொன்னுதான் அனுப்பி வச்சிருக்கா என்னவள்.வழக்கம் போல என் அவளுக்காக!… அவளுக்காக மட்டுமே இந்தக் கவிதை” என்றவன் மயக்கும் குரலில் கவி படிக்கச் தொடங்கினான்.
அது என்னவோ ஆண்மை ததும்பும் குரல் என்பார்களே அது போல் குரலில் தேன் தடவி வசியம் செய்பவன் இந்த ஸ்ரீ.காதலி கவிதை என்று வந்தால் மட்டும் அதில் மயக்கத்தைக் கூட்டி நிற்பான்.
தன்னவளை எண்ணிய கணம் மயக்கம் வந்து தாக்க கண்கள் சொருகியது “இன்னைக்கு அவ சேலையில் வந்திருக்கா பாவி… என்றவன் உஷ்ண மூச்சை இழுத்து விட்டுட்டு,
சுடிதாருல வந்தாலே தடுமாறி நிக்கிற நான் சேலையில வந்தா என்ன தாங்க செய்ய? அப்படியே செத்துட்டேன் போங்க.
சரிங்க அது என் சோக கதை நம்பக் கவிதைக்குப் போகலாம் வாங்க”.
வாதம் செய்யும் வயதை மிரட்டி நின்று கண்ணியம் காக்க,
வம்பு செய்து வைத்தது அவள் அங்க வளைவுகள்,
கரை மீற துடிக்கும் கண்ணியத்தைக் கயிறு பிடித்து,
இழுத்து வைத்திருக்கேன் பெரும் உணர்வு குவியலோடு.
நான்கு வரியில் அவனது இன்றைய நிலையை சொன்னனவன் “கரும் பச்சை சேலையில, தளர ஜடை பின்னி ஜாதி முல்லை வச்சு, கொஞ்சமே கொஞ்சம் எட்டி பார்க்கும் அந்த மஞ்சள் மயிலை…”
அதற்கு மேல் தொடர முடியாமல் “இதோ உங்களுக்காகவும் எனக்காகவும் இந்தப் பாடல்” என்றவன் போட்ட பாடல்
இரட்டை வால் குருவி படத்தில் இளைய ராஜா இசையில் ஜேசுதாஸ் குரலில் வந்த பாடல் “ராஜா ராஜா சோழன் நான்…”
பாட்டுடன் சேர்ந்து பாடியவன் அவனுக்குப் பிடித்த வரிகள் வந்த போது கண் மூடி கிறங்கி அவ்வரிகளுடன் கலவி கொண்டான்.
கலந்து நின்றால் அந்த வரிகள் வாயோடு நின்றுவிடும் அல்லவா. அதனால் இவன் ரசனைக்குக் கலவி என்ற வார்த்தை தான் சரி.
‘முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே…
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே…
தேனோடை ஓரமே நீராடும் நேரமே…
புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி…
இந்த வரிகளில் அவன் தொலைந்து போக. இந்த வரிகளைக் கேட்டவளோ தடுமாறி போனாள்.
“கடங்காரா! பாவி! பாவி! எங்கட இருக்க நீ? அவனை மனதார கடிந்தவள் ஒரு வித உணர்வு பிடியில் அமர்ந்திருந்தாள். அவள் தான் நித்யா கவி படித்தவனது கள்ளி என்று கூட சொல்லலாம்.
மாநிறத்தில் அளவான உடல் வாகு கொண்டு கரும் பச்சை சேலை கட்டி இடை தொடும் முடியை பின்னி பூ வைத்திருந்தாள். சற்று முன் ஸ்ரீ சொன்ன கவிதையைக் கேட்டு பதறி,
தனது சேலையைச் சரி செய்தவள் மீண்டும் அவனது பேச்சை கேட்க முடியாமல் காதில் மாட்டியிருந்த ஹெட் போனை கழட்டி எரிந்தால்.
அவளது செயலில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கி கொண்டு அமர்ந்திருந்த அவளது தோழி வெண்ணிலாவை பார்த்து முறைத்து வைத்தவள் நித்யா.
தனது பையை மாட்டி கொண்டு எதுவும் பேசாமல் செல்ல போக. அவளது செயலை பார்த்து வெடித்துச் சிரித்த வெண்ணிலா
“ஆனாடி நித்தி உன் ஆளு செம ரசிகன் தான் போ”
“உன்னைக் கொன்னுடுவேன் நிலா”
“ஹா! ஹா!” அதற்கும் அவள் சிரித்து வைக்க சோர்ந்து அவளது அருகில் அமர்ந்த நித்யாவை அதே சிரிப்புடன் பார்த்த வெண்ணிலா.
“ஹே எதுக்குடி டென்ஷன் ஆகுற?… சும்மா சொல்ல கூடாது நித்தி உன் ஆள் கவிதை செமடி”
“அவன் வர வர ரொம்ப ஓவரா போறான் நிலா. என்ன பேச்சு பார்த்தியா? கவிதை சொல்லுறான் பாரு கடங்காரன்” என்றதும் மீண்டும் சிரிப்பு வர பார்த்தது வெண்ணிலாவுக்கு அடக்கி கொண்டாள் பெண்.
“ரொம்ப ஆட்டம் காட்டுறான்டி இங்க தாண்டி இருக்கான், ஆனா என்னால கண்டே பிடிக்க முடியல பாரு.
காலேஜ் அட்மின், ரேடியோ ஸ்டேஷன் அட்மின் எல்லா இடமும் முட்டி பார்த்தாச்சு ஆள் சிக்க மாட்டேங்குறான்” ஏக கடுப்பில் நித்யா சொல்ல.
“விடு விடு எங்க போயிட போறான் ஒரு நாள் வசமா மட்டுவாண்டி அப்போ வச்சுக்கலாம் அவனை. நம்பக் கேங் கிட்ட சொன்னா போதும், ஆனா நீ தான் சொல்ல மாட்டேங்குற”
“ப்ச் வேணாம் நிலா நம்பக் கேங்குல அந்தக் கபிலன் குரங்கும் இருக்கு மறந்துடாதா”
“ஹே ரொம்பப் பண்ணாதடி கபிலன் நல்ல மாதிரி தான் நம்ப ப்ரண்டு தானே? சொன்னா நமக்கு செய்வான்”
“அவன் நல்லவன் தான், ஆனா எனக்கு வில்லன் சொந்தக்காரன் சொந்த மாமன் மகன் எதாவது வீட்டுல உளறி வச்சான்,
படிப்பு, வேலை, சம்பாத்தியம்னு என் எல்லாக் கனவும் கோவிந்தா.அது போக அவனுக்கும் எனக்கும் சும்மாவே ஆகவே ஆகாதுடி உனக்கு தான் தெரியுமே,
பேசுறது இரண்டே வார்த்தை அதுல இரண்டாயிரம் சண்டை பிடிப்பான், குதர்க்கமா வேற பேசி வைப்பான்”
“சரி சரி விடு அவன் வேணாம் ராஜு கிட்ட சொல்லலாமா நித்தி”
“நீ கொஞ்சம் நிதானமா யோசிப்ப அதான் உங்கிட்ட சொல்லி வச்சேன், ஏன்னா இது எங்க போயி முடியும்னு தெரியாது.
நாளை பின்னே ஏதாவதுனா ஒருத்தருக்காவது உண்மை தெரியனும் தானே.அப்போ தான் எனக்கு சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கும்.
எங்க அம்மா, மாமா பத்தியெல்லாம் தெரியும் தானே? அவங்கல சமாளிக்க எனக்கு ஒரு ஆள் கண்டிப்பா வேணும்” கலக்கமாக சொல்ல அவளது நிலையை கருத்தில் கொண்டு.
“ஹ்ம்ம்! நீ சொல்லுறதும் சரிதான் நித்தி விடு பார்த்துக்கலாம் நான் இருக்கேன் தானே ஒரு வேல சமாளிக்க முடியாத நிலை வந்தா அவங்க கிட்ட சொல்லலாம்,
கபிலன் பிரச்சனை பண்ண மாட்டான்டி அதுவும் இந்த மாதிரி விஷியத்துல.நான் இருக்கேன் பேசுறேன் என்ன?” வெண்ணிலா சமாதானம் செய்ய சற்று தெளிந்தால் நித்யா.
நித்யா கபிலன் இருவரும் உறவினர்கள் ஒரே சந்தில் தான் வீடு அதாவது ஸ்டோர் போன்ற அமைப்பு நித்யாவுக்குத் தாய் மாமன் மகன் தான் கபிலன்.
சிறு வயதில் கணவனை இழந்த தங்கையைத் தன்னுடனே வைத்து கொண்டனர் கபிலன் தந்தையும் பெரியப்பாவும்.
இரு அண்ணன்கள் நிழலில் இருப்பதால் நித்யாவின் தாய் சற்று கண்டிப்பாக இருப்பார் இரு பெண் பிள்ளைகளைக் கரையேற்ற வேண்டுமே,
அதிலும் ஒரு மகனும் வேறு உண்டு. மூன்று பிள்ளைகளைப் பெற்ற தாய் அல்லவா கண்டிப்பு இருக்க தான் வேண்டும்.
இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே நண்பர்கள் குழு இவர்களை நெருங்கியது
“ஹே எழுதி முடிச்சுட்டியா நித்தி” சில்வியா கேட்க.
“இல்ல எகனாமிக் அசைன்மென்ட் மட்டும் இருக்குடி”
“நாளைக்கி பார்த்துக்கலாம் நித்தி வா நேரமாகுது. நம்ப ஐஸ் கிரீம் சாப்பிட்டு வீட்டுக்குப் போகச் சரியா இருக்கும்” என்றால் பானு.
“ஆமா சீக்கிரம் கிளம்புங்க” என்றான் ராஜு. அவர்களைப் பார்த்தவாறே எழுந்து கொண்ட நித்யா “எங்க டா மத்த தடிமாடுங்க”
“அவனுங்க வேலை இருக்குனு போனானுங்க. எங்க போனானுங்கனு தெரியல,
நேரா கடைக்கு வந்துடுறேனு சொல்லிட்டானுக நீங்க வாங்க நம்பப் போலாம்” என்று ஐஸ் கிரீம் கடையை நோக்கி பேசி கொண்டே நடந்தனர்.
ஆண் பெண் பேதமின்றி நட்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சுற்றி திரியும் இந்தப் பட்டாம் பூச்சிகள் யார் என்று பார்க்கலாமா?
இதோ திருச்சி தனியார் கலை கல்லுரியில் வணிகப் பிரிவில் பயிலும் மாணவர்கள். ஒரே பள்ளி படிப்பில் தொடங்கிக் கல்லூரி வரை பயணித்து நின்றது தான் இந்தப் பட்டாம் பூச்சிகளின் சிறப்பே.
தற்போது இறுதி ஆண்டில் இருக்கும் இவர்களின் பயணம், நட்பு ,களிப்பு, காதல் கல்யாணம், கண்ணீர் என்று உணர்வுகளைக் கொட்டி,
நிலவு வானொலியுடன் கை கோர்த்து செல்ல போகிறது. நாமும் இளமையாகக் காதலாக அவர்களுடன் ஓர் பயணம் செல்வோம் வாருங்கள்.
கடைக்குச் சென்று அனைவரும் அமர ராஜு “யாருக்கு என்ன வேணுன்னு சொல்லுங்க என்றவன் ரஃபிக்கிடம் திரும்பி
“டேய் அவனுங்க என்ன பண்ணுறானுங்க? எப்போ வருவானுங்கனு கேளுடா?”
“ப்ச் நான் இன்னைக்கு போன் எடுத்துட்டு வரல மச்சி. ஏற்கனவே போன் யூஸ் பண்ணி தெண்டம் கட்டுன்னேன்”
“ஆமால இவனுக வேற” சலித்துக் கொண்டான் ராஜு.அவர்கள் கல்லூரியில் செல் போன் உபயோக படுத்தக் கூடாது.
வாரம் ஒரு முறை ஆசிரியர்கள் வகுப்புக்கு ரைட் வருவார்கள்.அன்று பார்த்து ரஃபிக் போனை அனைத்து வைக்காமல் போகப் போன் அடித்து மாட்டி கொண்டான் ரஃபிக்.
நிர்வாகம் அவனைக் கண்டித்து அபராதம் கட்டிய பின்பு தான் அவனது கை பேசியை கொடுத்தார்கள்.
அன்றில் இருந்து அவன் போன் வைத்துக் கொள்ள வில்லை.. இப்போ எப்படி நண்பர்களுக்குத் தகவல் சொல்வது? என்று முழித்த நேரம்.
வந்து சேர்ந்தனர் ஏனைய நண்பர்கள் கபிலன் மார்ட்டின், ஆனந்து.
“எங்கதான்டா போனீங்க?” ராஜு.
“ஒரு சின்ன வேலை மச்சி என்று மற்ற மூவரும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர்.
யாருக்கு என்ன என்ன வேண்டுமென்று ஆர்டர் செய்தவர்கள் அது வரும் வரை பேசி கொண்டிருந்தனர்.
“டேய் ப்ராஜெக்ட் என்ன பண்ணுறது?”
“ரொம்பப் பெரிய கம்பெனி வேணாம் மச்சி இங்கையே வேற பார்ப்போம். இரண்டு டீம் போடுவோம் வெளி ஆள் வேணாம் நம்ப மேம் கிட்ட சொல்லிக்கலாம்” கபிலன் வேகமாக சொல்ல.
“உன் ஆள் கிட்டையா?” கண் சிமிட்டி வம்பு செய்தான் கபிலன். நண்பர்கள் கேலியில் பொய் கோபம் கொண்டு கையில் வைத்திருந்த புத்தகத்தைத் தூக்கி.
அவனது தோளில் அடித்தான் மார்ட்டின் அதனைப் பார்த்து மற்றவர்கள் வெடித்துச் சிரித்தனர்.
“டேய் அந்தப் பொண்ணை வச்சு ஓட்டி தொலையாதீங்க டா. அது பாட்டுக்கு ஏதுவாது கற்பனை பண்ணிக்கப் போகுது” அழுகாத குறையாகச் சொல்ல மேலும் வெடித்துச் சிரித்தனர் நண்பர்கள் பட்டாளம்.
இவர்கள் வகுப்பில் கணக்கியல் பாடமெடுக்கும் மேரி என்பவர் மார்டினுடன் சற்று உரிமை எடுத்து பேசுவார்.ஒரே சமூகம் அவருக்கு தூரத்து உறவு வேறு.
அதற்குக் காரணம் அவருடைய மகள் சைனி அவளும் அதே கல்லுரியில் கணக்கை சிறப்புப் பாடமாக எடுத்து படிக்கிறாள்.
அவளுக்கு மார்ட்டின் மீது கண். அது போக நன்றாகப் படிக்கும் மார்டினை அனைத்து ஆசிரியர்களுக்கும் பிடிக்கும்.
அதுவும் இறுதி ஆண்டு என்பதால் மேரி கவனிப்பு சற்றுக் கூடுதலாகத் தெரிய நண்பர்கள் குழு அவனை ஓட்டி எடுத்தது.
அதுவரை சிரித்துக் கொண்டிருந்த சில்வியா மார்டினை கேலி பேசவும் இறுகி போனாள்.
ஆனந்து “மச்சி படிப்பு, பணம் அது போகச் செம பொண்ணு கலக்குற போ”
பானு, “உனக்கு ஓகேன்னு தோணுச்சுனா இந்த வருஷம் முடியிறதுக்குள்ள சொல்லிடு மார்ட்டின்”
நித்யா, “உனக்கு என்ன தோணுது மார்ட்டின்? அந்தப் பொண்ணு ஓகேவா? இல்லையா?” சிறு மௌனத்திற்குப் பின்.
“ஓகே தான் ஆ… “என்று மேலும் பேச போனவனைத் தடுத்தது கண்ணாடி குவளை சத்தம். கையில் ரெத்தம் வழிய கையில் உள்ள குவளையை நொறுக்கி இருந்தாள் சில்வியா.
ஒரு நொடி என்ன நடந்தது என்றே புரியவில்லை நண்பர்களுக்கு. நொடியில் நிலையை உணர்ந்த கபிலன் “ஏய் மூக்கி லூசாடி நீ என்ன வேலை பார்த்து வச்சிருக்க” என்றதும் தான் தெளிந்தது பெண்கள் குழு.
பானு சில்வியா கையைப் பிடிக்கப் போக அவள் கையை உருவி கொண்டு செல்ல பார்க்க “எரும எரும எங்க போற கையைக் கொடுடி” என்ற அழுத்தி பிடித்து ரத்தத்தை நிறுத்த
“பானு கையில கண்ணாடி துண்டு இருக்கானு பாரு நான் ஆட்டோ புடிச்சிட்டு வரேன்” என்று ஓடினான் ரஃபிக்.
எப்படி கண்ணாடி உடைஞ்சுச்சு யோசனையாக மார்ட்டின் கேட்க. கண்ணில் நீருடன் அவனைப் பார்த்த சில்வியா குனிந்து கொண்டாள். அவளது செயலில் வெண்ணிலா யோசைனையாக ஆனந்தோ.
“நல்ல நாளுளையே வாயே திறக்காது இதுல ரெத்தம் கொட்டுது பேசவா செய்யும் நீ வேற” இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே ஆட்டோ வந்தகாக ராஜு சொல்ல. அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சில்வியா மார்டினை தாண்டி செல்லும் போது ஒரு கணம் நின்று அவனைப் பார்த்து விட்டு செல்ல.
அவளது செயலில் நொடியில் விடயத்தைச் சரியாகக் கணித்து விட்டனர் கபிலனும் வெண்ணிலாவும்.
இதுங்கள் இரண்டும் சற்று அதிகப்படியான முதிர்வு கொண்டவர்கள் என்பது கூடுதல் தகவல்.
“அது சரி இந்த மேட்டர் இத்தனை வருஷம் நம்பக் கண்ணுல படலையே” என்று கபிலன் முனகி கொண்டே அவர்களைப் பின் தொடர்ந்தான்.
அதன் பின் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை முடிந்து.சில்வியா வீட்டுக்கு பானு,வெண்ணிலா மற்றும் நித்யா அழைத்துச் செல்வதாக சொல்ல.அவர்களை அனுப்ப ஆட்டோ பிடித்து வந்தனர் காளைகள்.
ஆட்டோவில் ஏறுவதற்கு முன்பு வெண்ணிலவை தனியாக அழைத்துச் சென்ற கபிலன் “நிலா கொஞ்சம் அவ கிட்ட விசாரி எனக்கு என்னவோ… அவன் ஆரம்பிக்க “ஆமா லவ் தான் மார்ட்டின்” என்று முடித்து வைத்தாள் வெண்ணிலா.
“ஆனா கற்பூரம் தாண்டி நீ” சிரித்தவன் சரி முழுசா கேட்டு சொல்லு பையன் கிட்ட பேசுவோம்” என்றவன் அவளது கன்னம் தட்டி செல்ல.
சிறு புன்னகையுடன் விலகி சென்றால் வெண்ணிலா.
கபிலனும் வெண்ணிலாவும் பேசி சிரிப்பதை பார்த்த பானு.ஆட்டோவில் ஏறியவுடன் “என்ன ரகசியம்” கண் சிமிட்டி கேட்க.
நிலா சிரித்துக் கொண்டே “வீட்டுக்கு போயி பேசலாம்” என்றால் சிறு குரலில்.
கை வலியில் முனகிய வாறே நித்யா தோளில் சாய்ந்து கொண்டாள் சில்வியா. மனம் முழுக்கச் சொல்ல படாத நேசம் முள்ளாகக் குத்தியது.