நதியின் ஜதி ஒன்றே 16

அஜய் நின்ற இடத்திலே நின்றிருந்தான். அவனின் சுற்றம் எல்லாம் பிளாங்க்

அவனுடன் பேசி கொண்டிருந்தோர்அஜய்என்று திரும்ப தோள் தட்டினர்.

MP பெரியப்பாவும் அங்கிருந்தவர், அஜய் கண்கள் நிலைத்து நின்ற  திசையில் பார்த்தார். ஜீவிதா அங்கிருந்தாள். அவர் நெற்றி சுருங்கியது. “டேய் தம்பிஎன்று மகனை அசைத்தார்.

அஜய் அவரை பார்த்தவன், சுற்றியிருந்தோரையும் பார்த்தான். தானாக திரும்ப ஜீவிதாவையும் பார்த்தான்

தம்பிக்கு அசதி போல. நாம அப்புறம் பேசுவோம்என்று விடைபெற்றனர்.  

அஜய் முகம் தெளியவே இல்லை. சட்டென ஒரு மாற்றம். “என்னப்பா?” என்று பெரியப்பா அவனிடம் கரிசனையாக கேட்டார்

அஜய் நகர்ந்து தண்ணீர் பாட்டில் எடுத்து வேகமாக குடித்தான். “எனக்கும் கொடுடாஎன்ற பெரியப்பாவுக்கும்  கொடுத்தான்

வெயில் அதிகமா இருக்கு. இளநீர் வெட்ட சொல்லலாமா?” என்று கேட்டார்.

வேண்டாம் என்று தலையசைத்தவன் கவனம் ஜீவிதாவிடம் மட்டுமேஜீவிதாவும் அவன் பார்வையை உணர்ந்திருக்க, அஜய் பக்கம் திரும்பினாள்.

அஜய் பார்வை கூர்மை பெற்றது. தான் பார்த்ததை அவளிடம் உறுதி படுத்த நினைத்தான். ஏன் இப்படி பார்க்கிறாங்க? விலகாத அவன் கண் இமைகளில், ஜீவிதாவின் இமைகள் படபடவென அசைந்தது

பெரியப்பா, இருக்கும் இடம் எதுவும் அவனுக்கு நினைவில் இல்லை. நிமிடமே தொடர்ந்த அவன் பார்வையில், பெண்ணுக்கு தான் திரும்ப உள்ளங்கைகள் வேர்த்தது.

சில அடிகள் தொலைவில் இருந்தாலும், இருவருக்குமான விசையின் வீச்சு அதிகமே.

ஜீவிதாவிற்கு அவன் முன் நிற்க கால்கள் ஒத்துழைக்கவில்லை. மேல போறேன் என்று கை காட்டி ஓட்டமாக மாடிக்கு ஓடிவிட்டாள்.

பெரியப்பா ஒன்றை விடாமல் அவதானித்திருந்தவர், “பலராம் சின்ன பொண்ணு தானே அது?” என்று அஜயிடம் கேட்டார்.

அஜய் தலை அசைத்தான். அவர் மேலும் ஏதோ கேட்க வந்து மகனின் மாற்றத்தில்  நிறுத்தி கொண்டார். கோவமா இருக்கானா? அவருக்கும் உறுதியில்லை.

விருந்தினர் சிலர் வர, அஜய் அவர்களை கவனிப்பதாய் இல்லை. பெரியப்பா பொறுப்பெடுத்து கொண்டார். உடன் அவர்களின் பங்காளிகளும்.

அஜய் நகர்ந்து உள் அறைக்கு வந்தான். சுவற்றில் ஒரு கால் வைத்து சாய்ந்து நின்றான். கைகளை கட்டி கொண்டு, கண்களை மூடி கொண்டான்.

நடந்த நிகழ்வுகளை திரும்ப தனக்குள் ஓடவிட்டான். ஜீவிதாவின் முகம், அதில் ஜொலித்த பாவனை. வருடிய விரல்கள், இடையில் சொருகிய உரிமை. பட்டென கண்களை திறந்து கொண்டான்.

பெண்ணின் எல்லாம் அவனுக்கு தெரியும். அவளின் எல்லா வகை உணர்வுகள், எமோஷன் அவனுக்கு தெரியும். ஆனால் இப்போது அவள் முகம் வெளிப்படுத்திய பாவனை. அது தான். அது அவனுக்கு மிக புதிது.

இத்தனை வருடங்களில் அவளிடம் அது போல் ஒன்று அவன் கண்டதே இல்லை. இடையில் பிரிந்திருந்த சில வருடங்களில் இப்படியான பாவனை அவளிடம் என்றால்?

நேரே இருந்த சுவற்றை வெறித்தான். அப்படியே ஒரு கால் மடக்கி ஒரு கால் நீட்டி கீழே அமர்ந்தான். நிமிடங்கள் ஓடியது.

பெரியப்பா மகனை தேடி வந்தார். அவனுக்கு குடிக்க காபி கொடுத்தார். மறுக்காமல் சூட்டிலே காலி செய்தான்

ஏதோ போல  இருக்க. என்னடா?” என்று கேட்டார். அஜய்யிடம் பதில் இல்லை

கெஸ்ட் எல்லாம் கிளம்பிட்டாங்க. நம்ம சொந்தக்காரங்க மட்டும் பொண்ணு பார்க்க நிக்கிறாங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில பொண்ணு வீட்ல இருந்து வந்திடுவாங்க. நீ அதுக்குள்ள போய் ரிப்ரெஷ் பண்ணிட்டு வாயேன்என்றார்.

அஜய் அவரை கேள்வியாக பார்த்தான். “என்ன அஜய் புதுசா கேட்கிற மாதிரி பார்க்கிற. சாப்பிடும் போது சொன்னேனே. அந்த பெங்களூர் பொண்ணு. குடும்பத்தோட இங்க வராங்கஎன்றார் நினைவு படுத்தும் விதமாக.

அஜய் தனக்குள் மின்னலாக கணக்கிட்டான். தீவிரமான யோசனை. “அம்மாக்கு தெரியுமா? இங்க எல்லோருக்கும் தெரியுமா?” என்று வாய் திறந்தான்.

இத்தனை நேரத்துக்கு முதல் கேள்வி. பெரியப்பா உணர்ந்தவர், “எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். விஷேஷ வீட்டுக்காரன் நீ. பரவாம இருக்குமா?” என்று கேட்டார்.

அஜய் அவனின் எண்ணங்களை ஒரு கோட்டுக்குள்ளேயே நிறுத்த முயன்றான்.  ஆனால் கணக்குகளின் விடையோ அவனை வேறொரு புள்ளிக்கு இழுத்து சென்றது. அதை ஏற்று கொள்ளவும் அவன் தயார் இல்லை.

பெரியப்பாவிடம் சொல்லி கொண்டு அங்கிருக்கும் அவனின் அறைக்கு சென்றான். தண்ணீர் அடித்து முகம் கழுவினான்

ஈரம் வடிந்த முகத்துடனே மாடிக்கு ஏறினான். ஜீவிதா மாடி கைப்பிடி பிடித்து நின்றிருந்தாள்.

அவளின் நெஞ்சின் படபடப்பு இன்னும் அடங்கவில்லை. அஜய்  வராதது அவளுக்கு ஆசுவாசம் கொடுத்தது

ஏன் அப்படி பார்த்தாங்க? ஒரே கேள்வி தான்

அஜய் அவளை தேடி வந்தவன், அவள் பின் நின்றான்.

வெக்கை, அனல் காற்றில் ஜீவிதா வேர்த்து போனாள். தன் தோள் வரை இருந்த முடியை சுத்தி உச்சி கிளிப்பில் அடக்கியவள், பறக்கும் முந்தானையை எடுத்து இடையில் சொருகினாள்

விசிட்டிங் கார்ட் அவளுக்கு தட்டுபட்டது. எடுத்து மீண்டும் வருட அஜய் அதை பார்த்தபடி அவளிடம் வந்தான். ஜீவிதா அவன் வருகையை உணர்ந்து, கார்டை மறுபடி இடையில் சொருகி கொண்டாள்.

அஜய் அவளுக்கு நேரே வந்து நின்றவன், தயங்காமல் அவள் இடையை பார்த்தான்.

அவனின் கார்ட் இருந்த இடம் முந்தானை மறைக்காமல் வெற்றிடையில் அவனின் கண்களுக்கு நன்றாகவே காட்சியளித்தது

ஜீவிதா அவன் பார்த்த இடம் கண்டு கைப்பிடி சுவரை இறுக்கி பிடித்தாள். பார்த்துட்டாரா? மறைத்து நின்றவளுக்கு படபடப்பு எகிறியது

அவனின் கண்கள் அவளிடம் நிலைக்க, அவளின் கண்களோ எங்கோ அலைந்தது

அஜய் பேசவில்லை. சுவற்றில் சாய்ந்து அவளை நேரே பார்த்து நின்றான்

ஜீவிதா, அவனுக்குமான இடைவெளி குறைவு. “நீயே பேசுஎன்று தான் அவன் இருந்தான்.

ஜீவிதாவிற்கும் அது புரிந்தது. நான் தானே பேசணும்

மௌனம் அங்கு இனிக்கவில்லை. கனத்தது. பெண்ணின் கனம் ஒருவகை என்றால், ஆணின் கனம் ஒரு வகை.

நீடித்த நிமிடங்கள் அஜயின் முக ஈரத்தை ஆற்றியிருந்தது. புருவம், மீசை மட்டும் ஈரத்தை மிச்சம் பிடித்திருந்தது.

 ‘எவ்வளவு நேரம் ஆனாலும் நீ வாய் திறக்காம நான் திறக்க மாட்டேன்அஜய் அதில் மிக உறுதியாக நின்றான்.

ஜீவிதா மூச்சை இழுத்துவிட்டாள். தன்னை சமன் செய்ய வெகுவாக முயன்றாள்.

‘அஜு. நம்ம அஜு தான். பேசுஉள்மனம் அவளுக்கு சொல்லி கொண்டே இருந்தது

ஜீவிதா மெல்ல அவன் பக்கம் திரும்பினாள். அதே கூர்மையான பார்வை அவனிடம். பெண்ணுக்கு திரும்ப படபடப்பு. வேறு பக்கம் பார்த்தாள்.

அஜய் அவளை முழுதும் தனக்குள் உள்வாங்கினான். ‘மாறியிருக்கா. நிறைய மாறியிருக்கா

முந்திரி தோட்டத்துக்கு சென்றிருந்தவர்கள் காரில் வந்து இறங்கினர். பேச்சு சத்தத்தில் கீழே எட்டி பார்த்தனர். ‘அஜய் எங்க?’ என்று இவனையும் தேடினர்.

சகுந்தலா மகனை தேட, இங்கு அஜயும் நேரம் பார்த்தான். ஜீவிதாவிற்கு மெல்ல கோவம் தோன்ற ஆரம்பித்தது.

எதுக்கு அவங்க தேடுறாங்க? இவர் எதுக்கு நேரம் பார்க்கிறார்?

அவ்வளவு அவசரமா பொண்ணு பார்க்கஉள்ளே பொங்கியது.

அவளின் முக மாற்றத்தில் அஜய் புருவம் தூக்கினான். அஜயின் போன் ஒலித்தது. சகுந்தலா தான். அஜய் எடுக்க, “எங்க இருக்கப்பா?” என்று கேட்டவர், “பொண்ணு வீட்ல கிளம்பிட்டாங்களாம். நீ கொஞ்சம் வந்து ப்ரெஷ் ஆகிக்கோஎன்றார்.

ஜீவிதாவிற்கு அவர் சொல்வது நன்றாகவே கேட்டது. அஜய் இவளை பார்த்தபடி, “பைவ் மினிட்ஸ்ல வரேன்ம்மாஎன்று வைத்தான்.

ஆனந்தனும் பின்னாலே அழைத்தவன், “டேய் புது மாப்பிள்ளை எங்க இருக்க?” என்று கத்தினான்.

வரேன்டாஅஜய் சொல்ல,

சீக்கிரம் வாடா. நான் தான் உனக்கு துணை மாப்பிள்ளை. உன்னை அட்டகாசமா கிளப்புற கடமை எனக்கு இருக்கு இல்லைஎன்றான் அவன்.

ஜீவிதாவிற்கு அவ்வளவு கோவம். “பொண்ணு உன்னை பார்த்ததும் பிளாட் ஆகிடணும். கட்டுனா இவனை தான் கட்டுவேன்னு இங்கேயே டேரா போட்டுடணும். அப்படி போய் நிக்கணும் நீஎன்று மேலும் சொல்ல,

ஜீவிதாவின் குணம் விழித்து கொண்டது. பட்டென அஜய் கையில் இருந்த போனை பிடுங்கி கொண்டவள், “அஜு வர மாட்டாங்க. நீங்களே மேக்கப் போட்டுட்டு போய் நில்லுங்கஎன்றாள்.

ஆனந்தன் நொடி முழித்து, “ஹேய் பியூட்டி நீயா? அஜய் கூடவா இருக்க?” என்று கேட்டான்.

ஜீவிதா பதில் சொல்லாமல் வைத்துவிட்டவள், “அஜு நீங்க பொண்ணு பார்க்க போக கூடாதுஎன்றாள் பட்டென.

அஜய்க்கு இப்போது அவள் பழைய ஜீவிதாவாக தெரிந்தாள். இவள் அவனுக்கு ஓகே

ஏன் போக கூடாது?” என்று நிதானமாக கேட்டான்.

ஜீவிதா நொடி திணறி, தைரியத்தை கூட்டியவள், “நீங்க என் அஜுஎன்றாள்.

அஜய்க்கு இது  மாபெரும் ஆச்சரியம். “இதென்ன புதுசா? என் அஜு?” என்று கேட்டான்.