நதியின் ஜதி ஒன்றே 12

பெண் மனதில் அஜய் பற்றிய உணர்வுகள் மிகவும் விநோதம் ஆனது. இது தான், இப்படி தான் என்று எதிலும் இணைக்க முடியா உறவு அது.

ஜீவிதாவிற்கு அவனை பிடிக்கும், பிடிக்காது என்பதை எல்லாம் கடந்து அவளில் அவன் மிக மிக  முக்கியமானவன்

குழந்தையில் அவள் முகம் பார்த்து மனதில் பதிய வைக்க தொடங்கிய காலத்தில் இருந்து உடன் இருந்தவன்! 

இவர்கள் எல்லாம் தான் நம் சொந்தம் என்று சிறு மனதில் ஆழமாக பதித்து போனவன்!

வருடங்களாக ஒன்றாக, ஒருவருக்கு ஒருவராக வளர்ந்து, திடீரென ஓர் நாளில்நான் இனி இல்லை. உன்னோடு இருக்க மாட்டேன். நீயே எல்லாம் பார்த்துக்கோஎன்றால் சின்னவளுக்கு அதை ஏற்று கொள்ள முடியவில்லை

ஏன் இல்லை, ஏன் இருக்க முடியாது என்ற கேள்வி அவளுள் அதிகம்.

தாரணி திருமணம் முடிந்து கணவன் வீடு கிளம்பிய நாளில் அக்கா பிரிவில் அழுதது விட, அஜய் வார்த்தைகளில் அவன் பிரிவில் அழுதது அதிகம்.

அதிலும் தாரணி திருமணத்தில் தன்னிடம் சொல்லாமல் கிளம்பிவிட்டிருந்த அவன் செயல்?

நான் அழுதுட்டு போனேன்னு அவருக்கு தெரிஞ்சும் அவர் என்னை அப்படியே விட்டுட்டு போவாரா? என்னை சமாதானம் பண்ண மாட்டாரா

நான் அவ்வளவு தானா

அப்போ அவர் சொன்னது உண்மையா? இனி அவருக்கும் எனக்கும் சம்மந்தம் இருக்காதா? எனக்குன்னு நான் அவர்கிட்ட எதுவும் கேட்க கூடாதா

அதெப்படி எனக்குன்னா அவர் இருக்க மாட்டார்

கோவம், ஆதங்கம், அழுகை, வருத்தம் எல்லாம்

சின்ன மனதுக்கு திடீரென நடக்கும் பெரிய மாற்றங்களை, ஏமாற்றங்களை கையாள தெரியவில்லை.

அஜய் போன் செய்தால் பேசுவதில்லை. அவனை சந்திப்பதை தவிர்த்தாள்.

தாரணி விஷயம் கேள்விப்பட்டு தங்கையிடம் காரணம் கேட்டாள். ஜீவிதா அப்பா, அஜய் சொன்னதை சொன்னாள்.

தாரணிக்கு எதார்த்தம் தெரியும். “ஒரேடியா அப்படி சொல்லிட முடியாது  ஜீவி. நாம பேசலாம். வைக்கலாம், ஆனா முன்ன மாதிரி இருக்காது. கொஞ்சம் டிஸ்டன்ஸ் இருக்க தான் செய்யும், அவன் லைப் அவன் பார்க்கணும் இல்லைஎன்றாள்.

அவர் லைப் அவர் பார்க்க நான் என்ன பண்ண போறேன்?” புரியவில்லை

தொலைவில் இருந்தால் உறவும் தொலைந்து போகுமா?

அம்மாவிடம் கேட்டால், அது அப்படி தான் ஜீவி. எல்லாம் கடைசி வரை கூடவே  இருக்க மாட்டாங்க என்று சுருக்கமாக முடித்து விட்டார்.

சகுந்தலா அவளுக்கு தொடர்ந்து போன் செய்து பேசினார். “ஏன் தாரணி கல்யாணத்துல டல்லா இருந்த, என்ன ஆச்சு ஜீவி?” என்று கேட்டு கொண்டே இருக்க, மனம் தாளாமல் அவரிடம் சொன்னாள். 

அவங்க சொன்னா சொல்லிட்டு போறாங்க. நான் உனக்கு அத்தை தான். இது உன் வீடு தான். நீ எப்போ வர சொல்லு, நான் உனக்கு கார் அனுப்புறேன்என்றார் அவர்.

சின்னவளுக்கு அதில் எக்கச்சக்க ஆறுதல். அடிக்கடி அவருக்கு போன் செய்து பேசலானாள். அஜய் அவளுக்கு கொடுக்காத ஆதரவை அவர் கொடுத்தார்

அவள் மனது அதை தான் எதிர்பார்த்தது. அது ஆறுதல் மட்டுமா, இல்லை அதையும் மீறிய ஒன்றா என்று அவள் புரிந்து கொள்ள ஓர் நாளும் வந்தது.

தாரணிக்கு அப்போது எட்டு மாதம். ஜீவிதா விடுமுறைக்கு அக்கா வீடு சென்றாள். ஷாப்பிங், படம் என்று சுற்றிவிட்டு சாப்பிட ஹோட்டல் சென்றனர்.

அங்கு அஜய் ஓர் பெண்ணுடன் அமர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் அவன் மேல் இருந்த கோவம் எல்லாம் பறந்து போனது. அஜுவை பார்த்துவிட்ட மகிழ்ச்சி நிச்சயம்

இத்தனை மாதம் அவனிடம் பேசாமல் இருந்தவள், அஜயை பார்த்த குஷியில் அவனிடம் பேச போனாள்.

தாரணி தங்கை கை பிடித்து தடுத்துவிட்டாள். “க்கா. அஜுக்காஎன்றாள் ஜீவிதா.

நானும் பார்த்துட்டேன் ஜீவி. இப்போ அவன்கிட்ட போகாதஎன்றாள் அக்கா.

ஏன்? ஏன் போக கூடாது? நான் அஜுகிட்ட பேசணும்

இத்தனை நாள்  அவன் போன் பண்ணும் போதெல்லாம் முறுக்கிட்டு இருந்துட்டு இப்போ வந்து பேசணும்ன்னு குதிக்கிற? கொஞ்சம் பொறு ஜீவி. அவன் கூட யார் இருக்கா பாருஎன்றாள் மகிழ்ச்சியுடன்.

ஓர் பெண் இருந்தாள். ஜீவிதாவிற்கு அதில் பெரிதாக ஒன்றும் இல்லை.

ப்ரெண்டா இருக்கும். அதுக்கு என்ன இப்போ?” சாதாரணமாக சொன்னாள்.

மக்கு. அவ ப்ரெண்ட் மட்டுமில்லை. இரண்டு பேருக்கும் இடையில ஒரு பீல் இருக்குஎன்றாள் தாரணி சிரிப்புடன்.

பீல்ன்னா. என்ன சொல்ற நீ?” ஜீவிதா புரிந்தும் புரியாமல் நின்றாள்.  

அவ எங்களோட தான் ஒர்க் பண்றா. கொஞ்ச நாளா அவங்களுக்குள்ள என்னமோ போகுது. இன்னைக்கு தான் இரண்டு பேரும் தனியா  வந்திருக்காங்க. மே பி ப்ரொபோஸ் பண்ண பிளான் கூட இருக்கலாம்

ப்ரோபோஸா

ஆமா. அப்படி இருந்தா இன்னைக்கு பில்லை ட்ரீட்ன்னு அஜய் தலையில கட்டிடலாம்என்றாள் தாரணி குஷியுடன்.

ஓர் அதிர்வு. உச்சகட்ட அதிர்வு. ஜீவிதா இமைகளோ அசையவில்லை. 

அந்த பெண் அஜய் கை பிடிக்க போக, ஜீவிதா உடல் கோவத்தில் நடுங்கி போனது

அஜுவை எப்படி அவ தொடலாம்? ஆவேசமான கோவம், அந்த பெண்ணை அடித்துவிடும் வேகம்

அக்கா கை உதறி ஓர் அடி எடுத்தும் வைத்துவிட்டவள், அஜய் அந்த பெண்ணின் கை மேல் கை வைத்து தட்டி கொடுத்ததில் அப்படியே நின்றுவிட்டாள்.

ஆவேசமான கோவம், அழுகையில் முடிந்தது. இணைந்த அவர்கள்  கைகள் இவளுள் எதையோ ஆழமாக கீறி சென்றது

“ஹேய் இரண்டு பேருக்கும் ஓகே ஆகிடுச்சு போல ஜீவி” தாரணி உற்சாகத்துடன் சொன்னாள். 

அக்கா சொன்னது நேரே மனதுக்குள் சென்று அமர்ந்தது. அழுத்தம் கொடுத்தது.

அவர்களை பார்த்தே இருந்த ஜீவிதா கண்களில் இருந்து கண்ணீர்  கட்டுப்பாடு இல்லாமல் இறங் கியது. 

அஜய் அவள் பார்வையில் மறைந்து போக ஆரம்பித்தான். கண்ணீர் மேகம் அவனை மறைத்தது.

தாரணி பேச்செல்லாம் அவளுக்குள் ஏறவே இல்லை. நொடி நிமிடம் ஆக, அதற்கு மேல் அவளால் அவர்களை பார்க்கவோ, அங்கிருக்கவோ முடியவில்லை. ஓடி வந்துவிட்டாள்கால்கள் தடதடக்க விழுவது போல் ஓர் ஓட்டம்.

கல்யாண் பின்னாலே வந்து அவள் கை பிடித்து நிறுத்த, ஜீவிதா யாரென்றும் பார்க்காமல் அவனை உதறி தள்ளினாள்

ஜீவி. ஜீவிம்மா. என்னை பாருஎன்று இரு கை பிடித்து அவளை கட்டுக்குள் கொண்டு வர முயன்றான் கல்யாண்.

நான் அங்க வர மாட்டேன், என்னை விடு. விடு. விடுன்னு சொல்றேன் இல்லைஎன்று அழுகையுடன் கத்தவே செய்ய,

சரி நாம அங்க போக வேண்டாம்போகலை ஜீவிமா, மாமாவை பாரு. என்னை நம்பு. நாம வீட்டுக்கு போயிடலாம். நம்ம கார் அங்க இருக்கு பாரு, வா. போலாம் வாஎன்று  போராடி  அவளை  காருக்கு அழைத்து வந்துவிட்டான்

பக்கத்திலே தான் அவர்கள் வீடுகாமாட்சி மகன், மருமகளை பார்க்க வந்திருக்க, கல்யாண் அவர் பொறுப்பில் அவளை விட்டு, திரும்ப ஹோட்டல் சென்றான்.

தாரணியிடம் அவளுக்கு தலைவலி வீட்டுல விட்டு வந்தேன் என்று சொன்னவன், தான் இல்லாத நேரம் அங்கு என்ன நடந்தது என்பதையும் கேட்டு தெரிந்து கொண்டான்

இரண்டு நாட்கள் ஆறவிட்டவன், ஜீவிதாவை மட்டும் தனியே அழைத்து கொண்டு பீச் சென்றான். முகம் எல்லாம் வீங்கி, மிகவும் ஓய்ந்து போயிருந்தாள் பெண்.

தங்கைக்கு உடல் முடியவில்லை என்று தாரணிக்கு கவலை. ஆனால் கல்யாண்க்கு உடல் இல்லை, அவளின் மனது தான் நோய் பட்டிருக்கிறதோ என்ற அச்சம்.

சின்னவள் அமைதியாக கடல் மணலில் கிறுக்கி கொண்டிருந்தாள். கல்யாண்க்கு எப்படி ஆரம்பிக்க என்று தெரியவில்லை

இவன் ஏதாவது கேட்டால், சின்ன பெண் அதையே பிடித்து கொண்டால் என்ன செய்வது என்ற பயம்.

அன்னைக்கு ஹோட்டல் வைச்சு அஜய் பார்த்த இல்லை. கூட ஒரு பொண்ணு கூட இருந்தாளேஎன்று மெல்ல ஆரம்பித்தான்.

ஜீவிதா மௌனமாக இருக்க, “அவங்களுக்குள்ள ஒர்க் அவுட் ஆகலையாம் ஜீவிம்மா. வேணாம்ன்னு முடிஞ்சிருச்சுஎன்றான் அவளை உன்னிப்பாக கவனித்து கொண்டே.

ஜீவிதா கிறுக்கிய விரல்கள் நொடி நின்று திரும்ப நகர்ந்தது. “உனக்கு தெரியும் இல்லை அஜய் சீக்கிரம் வேலையை விட்டுட்டு போய் ஊர்லே செட்டில் ஆக போறான்னு. அதுல அந்த பொண்ணுக்கு இஷ்டம் இல்லையாம். இங்கேயே இருக்கலாம். ஊர் வேண்டாம்ன்னு சொல்ல, அஜய் முடியாதுன்னு மறுத்துட்டானாம்என்றான்.

ஜீவிதா நிமிரவே இல்லை, முகத்தில் எதிர்பார்த்த மகிழ்ச்சியும்  இல்லை. என்னடா இது? கல்யாண்க்கு குழப்பம்.

அந்த பொண்ணு பிறந்ததுல இருந்து சிட்டி. ஊர்ப்பக்கம் செட் ஆகாதுன்னு கேட்டா, அஜய் ஒரேடியா முடியாதுன்னு குளோஸ் பண்ணியிருக்கான். பிடிச்ச பொண்ணுக்காக கொஞ்சம் விட்டு கொடுத்திருக்கலாம்என்றான் கல்யாண்.

இதற்கு மட்டும் ஜீவிதா நேரே நிமிர்ந்து கடலை பார்த்தாள்.

ஆமா ஜீவிம்மா நீ எதுக்கு அன்னைக்கு அப்படி அழுத?” கல்யாண் மெல்ல கேட்டான்.

ஜீவிதா அமைதியாக இருக்க, “என்னை மாமாவா நினைக்காம உன் சீனியரா நினைச்சு சொல்லு ஜீவிம்மாஎன்றான் அனுசரணையாக.

என்னை நம்புற இல்லைஎன்று கல்யாண் கேட்க, சின்னவள் தலையசைத்தாள்.

உனக்கு அஜய் பிடிக்குமா?” 

இதென்ன கேள்வி?” என்றாள் சின்னவள்.

சரி பிடிக்கும். க்கும். அதுக்கு மேல இந்த .. லவ். இப்படி

இல்லைபட்டென பதில் வந்தது.

அப்பறம் ஏன் அந்த அழுகை ஜீவிம்மா

எனக்கு அஜு வேணும்என்றாள் இப்போதும் கமறிவிட்ட குரலில்.

அஜு வேணும்ன்னா எப்படி, எப்படி சொல்ற. எனக்கு புரியலை

எனக்கும் தெரியாது. ஆனா அஜு எனக்கே எனக்கு வேணும் சீனியர்

அப்போ இது தானே லவ்

அஜு மேல எனக்கு லவ் எல்லாம் இல்லை. வரவும் கூடாது, அது தப்பு, ரொம்ப பெரிய தப்பு. அஜுக்கு தெரிஞ்சா என்னை.. என்னை கொட்டுவான். என்கிட்ட பேச மாட்டான். அவனுக்கு அக்கா உங்களை லவ் பண்ணதே பிடிக்கலை. பேட் தெரியுமா நீங்க?”