வில்வநாதன் எதிரில் நின்றவனிடம், “நீங்க யார் முதல்ல?” என்று கேட்டான்.
“ஏன் சொன்னா தான் நீங்க யாருன்னு சொல்வீங்களா?” அவன் கேலியாக கேட்டு சிரிக்க,
“ம்ம். அப்படி தான் வைச்சுக்கோங்க” என,
“இந்த ஏரியா தலைவர்” என்று பந்தாவாக சொன்னான்.
“ம்ப்ச்” என்ற வில்வநாதன் போனில் மெசேஜ் செய்ய, மீனலோக்ஷ்னி இருக்கையில் இருந்து எழ போனாள்.
அவள் புறம் புறம்பாமலே, “சிட்” என்று கை காட்டியவன், “இந்த அபார்ட்மெண்ட் செகரட்டரி யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று அங்கிருந்தவர்கள் மேல் பார்வையை படரவிட்டான்.
“நான் தான். நீங்க இந்த பொண்ணுக்கு ரிலேட்டிவா? ப்ளீஸ். இங்கிருந்து எல்லோரையும் கூட்டிட்டு கிளம்பிடுங்க. வெளியே வைச்சு உங்க பஞ்சாயத்தை பார்த்துக்கோங்க. எங்க அபார்ட்மெண்ட் பேர் தான் அடிபடும்” என்றார் அவர்.
“ஏன்? உங்க அபார்ட்மெண்ட் பேர் அடிபடுற அளவு இவங்க என்ன செஞ்சாங்க?”
“என்ன சார் தெரியாத மாதிரி கேட்கிறீங்க. இந்த பையன்கிட்ட இருந்து எக்கச்சக்க கிப்ட் வாங்கி அவனை கழட்டி விட பார்த்தா, அவன் சும்மா விடுவானா?” என்று இவர் எகிறினார்.
“அந்த கிப்ட் எல்லாம் என் பக்கத்து பிளாட் பொண்ணுக்கு” மீனலோக்ஷ்னி இடையிட்டு சொல்ல,
“சமூக சேவையாங்க மேடம்?” என்று வில்வநாதன் அவள் பக்கம் திரும்பி நின்றான்.
“ப்ளீஸ். தப்புன்னு காலையிலே உணர்ந்துட்டேன். என்னை தான் வம்பு பண்றானோன்னு முதல்ல தப்பா புரிஞ்சுக்கிட்டேன். அந்த கில்டல கெஞ்சி கேட்டாங்களேன்னு ஏதோ ஹெல்ப் பண்ண போய். சாரி” என்று தலையில் கை வைத்து கொண்டாள்.
“உதவிக்கும் அளவுக்கோல் இருக்கு. பாண்டி நாட்டு பொண்ணு இன்னும் வளரணும்” என்றான்.
“வளர்ந்திடுறேன். சீக்கிரமே வளர்ந்திடுறேன். இதை சரி பண்ணி கொடுங்க. அந்த மோகன் இதுக்கு பின்னால இருக்கான்” என்றாள்.
“தெரியும். ஆள் ஆன் தி வே” என, அந்த பையனுக்கு மெல்ல முகம் மாற ஆரம்பித்தது.
“தம்பி. பார்க்க ஏதோ பெரிய இடத்து பையன் மாதிரி இருக்கீங்க. உங்க சொந்தகார பொண்ணு எங்க ஏரியா பையனை ஏமாத்த பார்த்திருக்கு. லவ் பண்றேன்னு தங்கம், துணின்னு எல்லாம் வாங்கிட்டு இப்போ ஊருக்கு போறேன்னு பையை தூக்கினா சும்மா விட்டுட முடியுமா? நீங்களே சொல்லுங்க” என்றார் அந்த தலைவர்.
“கண்டிப்பா சும்மா விட கூடாது. அதுக்கு தானே கிளம்பி வந்திருக்கேன்” என்ற நேரம்,
“சார்” என்று நான்கைந்து பேர் பரபரப்பாக வந்தனர்.
“டேய் இவங்க அந்த கம்பெனி பெரிய கைங்க தானே?” என்று ஒருவன் கிசுகிசுக்க,
“நல்லதா போச்சு. லம்பா பணம் பார்த்துடலாம்” என்று அல்லக்கைகள் குதூகலிக்க, அந்த தலைவருக்கு மட்டும் பெரிய இடத்தில் கை வைத்துவிட்டோம் என்று புரிந்து போனது.
வில்வநாதன் அவர்களிடம் ஏதோ கேட்டு கொண்டிருக்க, மோகனை கட்டி தூக்கி வந்தனர். வில்வநாதனை அங்கு பார்த்ததும் அதிர்ச்சி மற்றும் பயத்தில் வேர்த்து போனான்.
அவன் வாய், கை, கால்களை விடுவிக்க, “எனக்கு, நான் எதுவும் பண்ணலை. என்னை எதுக்கு தூக்கிட்டு வந்தீங்க? எனக்கு எதுவும் தெரியாது” என்று படபடவென கத்த ஆரம்பித்துவிட்டான்.
“ஷ்ஷ்” என்று வில்வநாதன் உதட்டில் விரல் வைத்து எச்சரிக்க, மேலும் ஏதோ பேச போனவனின் வாயிலே அடி விழுந்தது.
தூக்கி வந்த ஆட்கள், அவன் கையை முறுக்க, சத்தம் போட முடியாமல் வாயையும் அடைத்து விட்டனர்.
‘ம்ம்ம்’ என்று அவன் துடிக்க, மற்ற எல்லோரும் அவரவர் இடத்தில் சிலையாகிவிட்டனர். வாட்டசாட்டமான ஆட்கள் உடனே செயலில் இறங்குவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
அந்த ஹாலின் கதவுகள் மூடப்பட, “யார் நீ?” என்று மீனலோக்ஷ்னி மேல் குற்றம் சுமத்தியவனிடம் கேட்டனர்.
“நான், நான் அவளுக்கு கிப்ட் கொடுத்தது இங்க எல்லோருக்கும் தெரியும்” என்று உலர,
“நீ யாருன்னு மட்டும் தான் கேட்டோம்” என்று அவன் காலிலே உதைத்து முட்டி போட வைத்துவிட,
“என்னை அடிச்சு, எல்லாம் மறைக்க பார்க்கிறீங்க” என்று கத்தினான் அவன்.
அந்த தலைவர் டிப் டாப்பாக உடையணிந்த ஆளிடம் மெல்ல நெருங்கியவர், “சார் இவர் யாரு” என்று வில்வநாதனை கை காட்டி விசாரித்தார்.
அவர் ஒருமாதிரி ஏற, இறங்க பார்த்தவர், “இந்த ஹாலை விட்டு வெளியே போனதும் உங்க பதவி காலி” என்று திரும்பி கொண்டார்.
வசமா சிக்கிட்டோமா, பணத்தை பார்த்து, பதவி புட்டுக்குமா? ஆள் பெத்த கை போலயே!
மோகன் வலியில் தவிக்க, “உன்கிட்ட என்ன சொன்னேன்?” என்று அவன் முன் நின்றான் வில்வநாதன்.
“சார், சார். எனக்கு ஒன்னும் தெரியாது” என்று மோகன் திக்கி திணற,
“நான் வர மாட்டேன்னு நினைச்சு தானே இந்த ஆட்டம் ஆடின? உன்னை தனியா பார்த்துகிறேன்” என்ற வில்வநாதன் அவனின் ஆட்களை பார்க்க, மோகனை அங்கிருந்து இழுத்து சென்றனர்.
அந்த காதல் மன்னனோ, “சார். எல்லாம் அவர் பிளான் தான். அவர் சொல்லி தான் நான் இதை பண்ணேன்” என்று அவசர அவசரமாக சரண்டர் ஆனான்.
“இந்த பொண்ணு பேரை கெடுக்கணும்ன்னு தான் பணம் கொடுத்தார். அந்த பக்கத்து வீட்டு பொண்ணை லவ் பண்றதால அவளுக்கு இவங்க மூலமா கிப்ட் கொடுத்து, எல்லார் பார்க்கிற மாதிரி செஞ்சோம். மத்தபடி எனக்கு வேறொன்னும் தெரியாது” என்றான் படபடவென.
“மீடியா அதுக்கு தான் நிக்குதா?” என்று ஒருவனின் சட்டையை பிடித்து முன்னிழுத்தான்.
‘காதல் என்ற பெயரில் மோசடி. அழகான பெண்ணின் மறுபக்கம்’ என்ற தலைப்பில் செய்தியும், மீனலோக்ஷ்னியின் புகைப்படமும் அவனின் தொலைபேசியில் தயாராக காத்திருந்தது.
வில்வநாதன் அதை படித்து, ஓங்கி தரையில் அடித்த வேகத்தில் போன் சில்லு, சில்லாக நொறுங்கி போனது. அதில் இருந்த மெமரி கார்ட், சிம்மை ஆட்கள் எடுத்து அங்கேயே சாம்பலாக்கி விட்டனர்.
“வேற யாருக்கு அனுப்பியிருந்தாலும் உன்னால இதை போட முடியாது. அந்த பத்திரிக்கை தானே நீ?” என்று கேட்க, அவன் பணம் வாங்கியிருந்ததால் பம்மிவிட்டான்.
மீனலோக்ஷ்னி ஆசுவாசத்துடன் கண்களை மூடி கொண்டாள். சமாளித்து விடுவோம் என்ற தைரியம் இருந்த போதும், வீண் பழிக்கு பெண் தயாராக இல்லை.
மோகனின் திட்டம் பெரிது என்பதால் தானே, வில்வநாதனை வரவழைத்தாள் மீனலோக்ஷ்னி.
பொதுவில் எல்லாம் பார்க்க கிஃப்ட்டை வாங்கியதால், அபார்ட்மெண்ட் ஆட்கள் இவள் மேல் குற்றம் சுமத்த தயாராக நின்றனர்.
“அந்த பையன் சொல்றது உண்மை தான். நாங்க பார்த்தோம். கேமராவிலும் இருக்கு” என்று தான் காலையில் இருந்து சொல்லி கொண்டிருக்கிறார்கள்.
உடன் இருந்த பெண்கள், “நாங்க இதுல இன்வால்வ் ஆக முடியாது. சாரிப்பா” என்று விலகிவிட,
“அந்த காதலித்த பெண்ணும், ‘நீங்க எஸ் ஆக, என்னை மாட்ட வைக்க பார்க்கிறீங்களா?’ என்று பெற்றவர்கள் மேல் இருந்த பயத்தில் நழுவி கொண்டாள்.
அந்த நொடிதான் பெண்ணுக்கு அதன் தீவிரம் புரிந்தது. அரவிந்தனுக்கு அழைக்க, போன் சுவிட்ச் ஆப். வினயும் அவர்களுடன் சென்றிருக்க, வில்வநாதன் தான் மனதில், மூளையில் உதித்தான்.
என்றோ, அவசரத்திற்கு இருக்கட்டும் என்று அரவிந்தனிடம் இருந்து வாங்கி வைத்திருந்த அவன் எண்ணுக்கு அழைத்துவிட்டாள்.
நிச்சயம் அவள் குடும்பத்தார் வந்திருந்தாலும், வில்வநாதனை போல் இதை சமாளிக்க முடியாது என்பதும் அவளின் அளவற்ற நம்பிக்கை. அதை நிரூபித்து கொண்டிருந்தான் வில்வநாதன்.
“போலீசை வர சொல்லுங்க” என்ற நொடி, கதவு திறந்து காவலர்கள் உள்ளே வந்தனர்.
“இவன் மேல என்ன கேஸ் வேணும்ன்னாலும் பைல் பண்ணிக்கோங்க. நான் சொல்ற வரை, ஜாமீன், பெயில் எதுவும் இவனுக்கு கிடைக்க கூடாது” என்றவன், அவர்களிடம் அந்த ரோமியோவை ஒப்படைத்தான்.
அந்த தலைவர் தானே வில்வநாதனை நெருங்கியவர், “சார். ஏதோ தப்பு நடந்திடுச்சு. அந்த பையன் எங்ககிட்ட பொய் சொல்லிட்டான்” என்றார் அந்தர் பல்டி அடித்து.
“எவ்வளவு பணம் வாங்கின?” வில்வநாதன் கேட்க,
“ஐயோ சார். சத்தியமா அப்படி ஏதும் வாங்கலை” அவன் அதிகமாக பதறினான்.
“நீங்களா சொல்லிடுங்க” என்று பாதுகாவலன் இவரை நெருங்க,
“எங்க தலைவர் மேல கையை வைச்சிடுவீங்களா? அவர் யார் தெரியுமா?” என்று உடன் இருந்த ஆட்கள் குதித்தனர்.
“கை வைக்க முடியாதா? இல்லை கூடாதா?” என்று நிதானமாக கேட்டான் வில்வநாதன்.
“உங்களால முடியாது” என்றனர் ஜம்பமாக.
அடுத்த நொடி, அவரின் மேல் மழையாக அடி விழ, கத்திய ஆட்கள் அருகில் செல்ல வேண்டுமே?
“என்ன அராஜகம் பண்றீங்களா? உங்களுக்கு மட்டும் தான் போலீஸ் தெரியுமா? ஒரு போன் போதும்”
“சரி நீ போன் பண்ணு. அதுவரைக்கும் அவரை பிசியா வைச்சுகிறோம்” என்றபடி ஆட்கள் வெளுக்க,