வயது -1
தன் உறக்கத்தை நிறுத்திக்கொண்டு பஞ்சுமெத்தையான அந்த வெண்மேகங்களை விட்டு மஞ்சளை பூசிக்கொண்டது போல் சூரியன் மெல்ல எழுந்தருளித்த அதிகாலை நேரம் அது . எந்த ஒரு அசாதாரணமான நிலையிலும் யாருக்காகவும் எதற்காகவும் நேரமும்,காலமும்,தனி மனிதனுடைய வேலையும் நிற்காது என்பதற்க்கு உதாரணமாய் சுறுசுறுப்பாக இயக்கத்தொடக்கி இருந்தது நம் வந்தாரை வாழவைக்கும் சிங்கார சென்னை.
பணக்காரர்களின் , சினிமா நட்சத்திரங்களின்,தொழில் அதிர்பர்களின் என்று அநேக நபர்களின் இருப்பிடமான அந்த கிழக்குக்கடற்கரைசாலையில் ஒரு பங்களாவில் தன்பிள்ளைகளான கதிர்களைக் கொண்டு வீசத்தொடங்கினான் சூரியன்.
தன் கண்களில் ஏதோ சூடாகப்பட்டு கூசுவதை உணர்ந்து மெல்ல கண்விழித்தான் செழியன் நம் நாயகன்.இரவில் வெகுநேரம் பால்கனியில் நடந்துவிட்டு கதவை சாத்தாமல் வந்ததால் கிடைத்த பரிசு
மெல்ல கண்விழித்தப்படி தன் கட்டிலில் அருகில் உள்ள கடிகாரத்தில் மணியைப் பார்த்தான்.’நீ எப்போ பார்த்தாலும் நான் என் வேலையை நிறுத்தாமல் செய்வேன்’ என்று உணர்த்தியபடி அது 6:30 என்று காட்டியது. பின் அவன் கண்கள் தனக்கு நேர் எதிர் சுவரில் பெரிதாக மாட்டப்பட்டுள்ள புகைப்படத்தைப் பார்த்து அவன் இயல்பையும் மீறி அவன் இதழில் சிறுமுறுவல் தோண்றியது.
தன் தாய்தந்தைக்கு நிகராக தன்னை வளர்த்து , படிக்க வைத்து இன்று சென்னையில் பெரிய தொழிலதிப்பராக உயரவைத்த அவன் உடன்பிறந்த அக்காஅனுராதா. அவளுடன் அவன் எடுத்தப் புகைப்படம் அது.அவனின் சிறுவயதில் தந்தை இறந்தார் பின் பதின்பருவத்தில் தாயும் மறைத்தார்.அவனிற்கும் அனுராதாவிற்கும் 12 வருடங்கள் வித்தியாசம்.அதனால் ஆரம்பத்திலேயே தன் குழந்தையாக அவனை பாவித்து வளர்த்தாள்.அதன்பின் அவனின் மகிழ்ச்சி,துக்கம்,வெற்றி,தோல்வி,துரோகம்,சிரிப்பு,கண்ணீர் என்று அணைத்திலும் இருப்பது அவன் உடன்பிறப்பு தான்.
அந்த உறுதுணையாலும்,ஊக்கத்தாலும்,அவனின் திறமை மற்றும் விடாமுயற்சியாலும் தான் இன்று கண்ஸ்டரக்க்ஷன் உலகில் அவன் முடிசூடா மன்னனாக தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளான்.சென்னையின் முக்கிய தொழிலதிபர்களில் அவனுக்கு என்று தனி இடம் உண்டு.அவன் தொழில்துறையில் ARS கண்ஸ்டரக்க்ஷன் என்றால் தனிமதிப்பு மற்றும் மரியாதை.ஆனால் எந்த ஒரு ஆடம்பரனும் தலைக்கணமும் திமிரும் அவன் பேச்சிலும் செயலிலும் துளி கூட இருக்காது.
அவன் புன்முறுவல் செய்த அடுத்த நொடியே அந்த சிரிப்பு இருந்த இடம்தெரியாமல் போனது.அவனது சிந்தனை நேற்று இரவு நடந்த பேச்சுவார்த்தை நோக்கிச் சென்றது
“செழியன் எவ்வளவு நாள் தான் பழசையே நினைச்சிட்டு இப்படி தனிமரமா இருப்ப???”தன் இயல்பையும் மீறி கொஞ்சம் கோபமாக கேட்டாள் அனுராதா.அவள் குரலில் கோபத்தையும் மீறி தன் தம்பி இதற்க்கு சம்மதம் சொல்ல மாட்டானா என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் சமஅளவில் இருந்தது.
“தனிமரமா ஏன்கா நீ, மாமா , அர்வி, அனி இவ்வளவு பேரு இருக்கும் போது நான் ஏன் தனிமரமா இருக்கப் போறேன்”
“இவ்வளவுநாள் இருந்தோம் சரி உன்னோட கடைசிகாலம் வரைக்கும் இருக்கமுடியுமா?எல்லாருக்கும் ஒரு துணை தேவை டா…உடலளவுல விட மனதளவில நமக்கு ஒரு துணை கண்டிப்பா தேவை…அது இப்போ புரியாது உனக்கு என்னோட வயசு வந்தோன்ன புரிஞ்சுக்குவ “
தொழிலில் தனிஇடம் பிடித்த தன் தம்பி வாழ்க்கையிலும் அவனுக்கு என்று ஒரு இடம்,குடும்பம் வேண்டும் என்று எண்ணினாள்.
“உன் மனசைத்தொட்டு சொல்லுக்கா நான் இப்படியே கடைசிவரைக்கும் இருந்தாலும் என்னை விட்டு போயிடுவியா என்ன???”தன் அக்காவின் கண்களைப் பார்த்துக் கேட்டான்.
“இறப்பு என்று ஒன்று வராமல் இருக்க நான் ஒன்னும் தேவரிஷியோ தெய்வமோ கிடையாது”
“அக்க்க்கா….பிளீஸ்…..” அலுப்புதட்டியது அவன் குரலில்.
“வேற எப்படி பேசசொல்ற உனக்கு பொண்ணுப்பார்க்கவும் விட மாட்டேன்கிற என்னோட பொண்ணு அனிஷாவ கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும் மாட்டேன்கிற ஏண்டா?”
பொறுமையிழந்த செழியன் “அக்கா….எனக்கு கல்யாணம் பண்ணிக்கிற எண்ணமும் இல்ல அந்த வயசையும் கடந்துடேன் அனிஷா என் பொண்ணு மாதிரி நான் வயசுகாக மட்டும் இத சொல்லயில்ல நான் தூக்கி வளர்த்தப் பொண்ணு அவளப் போய்…..”
“அனிஷா நீ தோள்ள போட்டு வளர்த்தப் பொண்ணு சரி அத விடு அது என்னடாபொல்லாத வயசு உனக்கு பொண்ணுக் கொடுக்க அவன்அவன் வரிசைல நிக்கிறான்.நீ என்ன கிழவன் மாதிரியா இருக்க நல்ல வாட்டசாட்டமாதான இருக்க என்ன கொஞ்சம் காதுக்கிட்ட உள்ள 3,4 முடில டைய் அடிச்சா போதும்”
ஆம்,செழியனின் வயது 40.(சாரி மக்களே அநேக ஹீரோக்கள் போல 25+ நினைச்சு இருந்தா மன்னிக்கவும்)ஆனால் அவன் தோற்றம் விடாமல் உடற்பயிற்சி செய்த பலனால் கட்டுக்கோப்பான உடல்கட்டு , நெடுநெடு உயரம், அடர்ந்த தலைமுடி, மாநிறம், கூர்மையானநாசி,ட்ரிம் செய்யப்பட்ட தாடி,மீசையுடன் என்று பார்ப்பதற்கு கம்பிரமான அழகன் போல் இருப்பான்.காதோரத்தில் மட்டும் சில நரைமுடி எட்டிப்பார்க்கும் அவ்வுளவே.
சொல்லப்போனால் அவனிற்கு இன்றும் பல பெண்கள் தொழில்துறை பார்ட்டியில் மீட்டிங்யில் என்று நூல் விட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.அவனின் சக போட்டியாளர்கள் தங்கள் வீட்டு பெண்ணை அவனுக்கு திருமணம் முடித்து கொடுக்க காத்துக் கொண்டி இருக்கிறார்கள்.அதற்க்கு காரணம் பணம் மட்டும் அல்ல அவன் போல் கம்பிரமான கண்ணியமான ஒருவனை கண்டுபிடிப்பதும் கஷ்டம்.அதனால் வயதை அவர்கள் பெரிது படுத்துவதில்லை.
சூ ழ்நிலையை சகஜமாக்க “ஏன்கா மாமா க்கு அடிச்சுவிட்டு பழக்கத்துல சொல்லுரியா???” என்று கேட்க அவனை அனுராதா முறைத்தாள்.
“அக்கா என்னோட வாழ்க்கைல அந்த சம்பவத்துக்கு அப்புறம் கல்யாணம்கிற பேச்சுகே இடம் இல்ல. கல்யாணம்,குடும்பம் எல்லாம் என்னால நினைச்சு பாக்க முடியல…எனக்கு டைம் ஆச்சு நான் வீட்டுக்குப் போறேன்.மாமா, அர்வி ,அனி எல்லார்கிட்டையும் சொல்லிடுகா பை!!” என்று கார்க்கு விரைந்தான்.
அந்த பாசமிகு அக்காவின் கண்களில் கண்ணீர் துளிர்ந்த்து.அதை பார்க்கும் சக்தியும்,தைரியமும் இல்லை என்பதனால் தான் இந்த ஓட்டமோ?
நேற்றைய யோசனையில் இருந்து வெளிவந்து மணியைப் பார்த்தான் அது 6:45 என்றது.ஜாக்கிங் செல்ல தயாராகி கிழே சென்றான்.
பாவம் அவனுக்கு தெரியாது எதை வேண்டாம் வேண்டாம் என்றுசொல்லுகிறானோ அதுவே இன்னும் சில நாட்களில் நடக்கப்போகிறது என்று.
ஜாக்கிங் சென்று தன் காலைக்கடன்களை முடித்து விட்டு அலுவலகத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டு இருந்தான் செழியன்.அந்த வீட்டில் அவனைத் தவிர சமையல் செய்யும் மீனாச்சியம்மாள் அவர் தலைமையில் 3 சமையல்காரார்கள் , விட்டைப் பராமரிப்பதற்கு 3 வேலையாட்கள், கார்டிரைவர் முத்து.
தனது 27வது வயது வரை அக்கா அனுராதா வீட்டில் தான் செழியன் இருந்தான்.அதன் பின் அரண்மனைப் போன்ற இந்த விட்டை கட்டினான் அந்த வீட்டின் கிரகப்பிரவேஷம் போதுக் கூட தன் அக்கா அனுவையும், மாமா திவாகரனையும் தான் எல்லா சடங்கையும் செய்ய வைத்தான்.
அவனுக்கு அவன் அக்காவிடம் எவ்வளவு பாசம் உள்ளதோ அதைவிட பன்மடங்கு தன் மாமாவிடம் மரியாதையும் அன்பும் உள்ளது.தாய்தந்தை அற்று இருந்தப்போது எந்த ஒரு எதிர்ப்பும் சொல்லாமல் தன்னை வளர்க்க அக்காவை ஊக்குவித்தவர்.ரத்தபந்தமே ஏமாற்றும் இந்த கலிகாலத்தில் தன் மனைவியின் தம்பியை தன் பிள்ளையாகவே தான் நினைத்தார் திவாகர்.இவர் போல் சில மனிதர்கள் நடமாடுவதால் தான் இந்த பூமி இன்றும் பல சோதனைகள் வந்தும் அழியாமல் இருக்கிறது.
அவர்கள் மூலம் தன் தாய்தந்தையை காண்பதாக தான் எண்ணுவான்.அவர்களும் அவனை தங்கள் மூத்தப் பிள்ளையாகத் எண்ணினர்.அவர்களுக்கு 2 பிள்ளைகள் அரவிந்தன் , அனிஷா.
திவாகர் சென்னையின் பிரபல கிரிமினல் வழக்கறிஞர்.அரவிந்தன் அவன் தந்தையை பின்பற்றி வழக்கறிஞர் ஆக பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறான். அனிஷா பேஷன் டெக்னாலஜி படித்து விட்டு ஒரு ஆடைஅலங்கார தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவியாளராக இருக்கிறாள்.
அலுவலகம் செல்ல தயாராகி கீழே வந்தவனது பர்சனல் மொபைலில் யாரோ அழைக்க அதை எடுத்து பார்த்தான். அது ” பிரகாஷ் கால்லிங் “என்றது.
“சொல்லு பிரகாஷ்”
“அண்ணா…… யாரக்கேட்டு இன்னிக்கி பிரகாஷ்க்கு மீட்டிங் அரேஞ் பண்ணிங்க” காரசாரமாக கேட்டாள் பிரகாஷின் மனைவி ப்ரியா
“நான் யார கேக்கனும்???”
“என்ன கேக்கனும்”
“ஓ……உன் புருஷனோட பாஸ் கிட்ட இப்படி தான் பேசுவியா???”
“நான் ஒன்னும் அவரோட பாஸ்க்கிட்ட பேசல அவரோட கிளோஸ் பிரண்ட் அப்புறம் என்னோட அண்ணா கிட்ட பேசுறேன்”
“உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? எங்க உன்கிட்ட மாட்டின அப்பாவி? அவன் மொபைல்ல பேசுற?”
“அண்ணா….நீங்க கூட மறந்துட்டிங்களா இன்னைக்கு என்ன நாள்னு” கோபமாகக் கேட்டாள் அவன் கேட்ட கேள்விகளை காற்றில் பறக்க விட்டு.
“ஹே லூசு!!! நான் மறப்பனா இன்னைக்கி என்னோட செல்லக் குட்டி ப்ரஜன்க்கு பிறந்தநாள் அதனால் தான் அவனோட கிஃப்ட் டா ஆபிஸ் ல பிரகாஷ் கிட்ட தரலாம்னு நினைச்சேன்”
“எனக்கு தெரியும்ணா நான் பிரகாஷ கல்யாணம் பண்ணிக்கிட்டதுல இருந்து உங்க நட்பும், நீங்க எங்க குடும்பத்து மேல வைச்சியிருக்க பாசமும் குறைச்சது இல்ல…தளபதி படத்தை நீங்க ரெண்டு பேரும் ஓட்டமா இருந்ததும் இல்ல ” என்றாள் பாதி உண்மையும் பாதி கிண்டலுமாக.
“ஓஹ் அவ்ளோ நக்கலா…எனக்கு அக்கா மட்டும் இல்ல தங்கச்சியா நீயும் இருக்க “என்றான் வாஞ்சனையாக.
“அப்ப இந்த தங்கச்சியோட ஆடர் இன்னைக்கு டின்னர் எங்க கூடத்தான்.உங்க கிஃப்ட் நேரா வந்து ப்ரஜன்கிட்ட தாங்கண்ணா”
“ஒரு முக்கியமான வேலை இருக்கு…ஆனாலும் தங்கச்சி சொன்னா கேக்க வேண்டியது தான்” என்று பேசிமுடிப்பதற்குள் மொபைல் அதன் ஓனர் கைக்கு சென்றது.
“என்னடா உன்னோட தொங்கச்சி காலைலேயே கடிக்க ஆரம்பிச்சிட்டாளா”
“என்ன கடிக்கிறது இருக்கட்டும் உன்ன மிதிக்காமா இருந்தா போதும் டா” என்று சில அலுவலக வேலைகளை பற்றியும் பேசி வைத்தனர்.
பிரகாஷ் செழியனின் உயிர் நண்பன்.இன்று நேற்று அல்ல 18 வருடங்களாக அவர்களின் நட்பு மேன்பட்டுக்கொண்டே தான் உள்ளது.அவனின் மகன் பிரஜனிற்கு இன்று எட்டாவது பிறந்தநாள் அதற்கு தான் ப்ரியாவின் இந்த ஆட்டம்.
இது தான் செழியன் தன் வளையத்திற்குள் தன் அக்காவின் குடும்பம், தன் நண்பனின் குடும்பம் என்று அத்துடனே இருப்பான். அதைத் தாண்டி வரவும் மாட்டான்.அதற்குள் யாரையும் அனுமதிக்கவும் மாட்டான்.
பாவம் அவனுக்கு தெரியாது விரைவில் தன் வளையத்திற்குள் மனைவி என்ற அங்கீகாரத்தோடு ஒருத்தி வந்து தன் வாழ்க்கையை தலைகீழாக மாற்றி நிம்மதியை மொத்தமாக பறிக்க போகிறாள் என்று.
சாப்பாட்டு மேஜைக்கு வந்து அமர்ந்த செழியனின் மொபைலுக்கு பிரைவேட் நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. எடுத்து பேசியவன் எதிர்ப்புறத்தில் கேட்டச் செய்தியில் ஸதம்பித்து போனான். பிடித்தியிருந்த கைப்பேசி நழுவி கீழே விழுந்து சிதறியது.
” நான் என்பதில் இன் மறைந்து இம் வந்ததும் ஏனோ
போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ
நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ
குளிரில் எனக்கோரு புழுக்கம் அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ
ஏனோ… ஏனோ…. ஏனோ… ஏனோ…
காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ “