அறையை விட்டு வெளியே வந்த நொடி, அளவுக்கு அதிகமாக வெப்பத்தை உணர்ந்தான்.
அவ்வளவு நேரம் ஜில்லிட்டு இருந்தவன், இப்போது மூச்சையும் நன்றாக இழுத்துவிட்டு கொண்டான்.
ஒரு வார்த்தை கூட விட்டு விட கூடாது என்பதில் கவனமாக இருந்தவன், இப்போது ஆசுவாசத்துடன் அந்த கேட்டை விட்டு வெளியே வந்தான்.
அந்த தெரு முடியும் இடத்தில் ரவி காத்திருந்தவன், “மாப்பிள்ளை” என்று ஓடி வந்து அணைத்து கொண்டான்.
செல்வமும் நண்பனை நன்றாகவே அணைத்து கொண்டவன், “சாப்பிட போலாமா” என்று கேட்டான்.
“வா, வா. முதல்ல இந்த ஊரை விட்டே போலாம். அப்புறம் தான் சாப்பாடு” என்று காரில் ஏறி கிளம்பினர்.
முதலில் அவனின் மனைவிக்கு அழைக்க, மின்னலாக எடுத்தாள் பெண். “ரிங் கூட போகாம எடுக்கிற? சாப்பிட்டியா முதல்ல?” என்று கேட்டான் செல்வம்.
“ம்ம்” என்றவளின் குரல் கமறி தான் வந்தது.
செல்வம் திரும்பி ரவியை முறைக்க, “டேய் எனக்கே அவ்வளவு பயம். காலையில போனவன், இப்போ நடுராத்திரியில தான் வெளியவே வர. அதான் நாச்சிக்கு, அதுவும் இப்போ ஒரு எட்டு மணி போல தான்சொன்னேன்” என்றான்.
அதுகூட சில மணி நேரங்கள் ஆகியிருக்க, “இவ்வளவு நேரமும் அழுதியா என்ன? அப்படியென்ன பயம். என்னை நம்ப மாட்டியா? நேர்ல வந்து பேசிக்கிறேன் உன்னை. முதல்ல போய் சாப்பிட்டு எனக்கு மெசேஜ் பண்ணு” என்று வைத்துவிட்டான்.
மனைவியின் விசும்பல் கேட்க முடியவில்லை அவனால். ரவி ஊர் எல்லையை தாண்டவும் தான் வேகத்தை குறைத்து, இரவு நேர கடை முன் காரை நிறுத்தினான்.
அந்த நேரத்தில் என்ன உணவு கிடைக்கும். டீ, பிஸ்கெட் சாப்பிட்டு ஊருக்கு சென்றனர்.
வழியில் செல்வம் நண்பனுக்கு எல்லாம் சொன்னான். “அடப்பாவி நீதான் லீக் பண்ணதா?” ரவி அதிர,
“ஆமா காந்தி செத்துட்டார் தான்” என்றான் செல்வம் கேலியாக.
“டேய் உன்னை” ரவி ஒரு கரத்தால் அவனை மொத்த, “அகிலனுக்கு கூப்பிடு” என்றவன், அவனுக்கும் விஷயத்தை பகிர்ந்து கொண்டதுடன், “நீ என் ப்ரெண்டுன்னு தெரிஞ்சிருக்கு” என்றான்.
“தெரியாம இருந்தா தான் ஆச்சரியம். நான் அவங்களுக்கு உண்மையா இருக்கேன். சோ இதை பெருசா கண்டுக்க மாட்டாங்க” என்று மேலும் பேசி வைத்தான்.
அவர்களின் எல்லைக்குள் வர, “உங்க வீட்டுக்கு போ” என்றான் செல்வம்.
“மாப்பிள்ளை. நிஜமாவா? சந்தோசம்டா” என்று ரவி மகிழ்ச்சி கொள்ள.
“இந்த செல்வமும் உன்னால தான். அதையும் சேர்த்து சொல்லு” என்றான் கண்ணீரை முழுவதுமாக துடைத்தபடி.
“இல்லை. அப்படி இல்லை” என்று முத்து பெண் மறுக்க,
“அப்படி தான். எனக்கு தெரியும்” என்று உறுதியாக சொன்னவன், “எதுக்கு இவ்வளவு பயம்?” என்று கண்டிப்புடன் கேட்டான்.
“அண்ணா சொல்லவும் பயம் தானே வந்திடுச்சு. நீங்க என்கிட்ட சொல்லிட்டு கூட போகலை, ஏன் சொல்லலை?” என்று மனைவியாய் கேள்வி கேட்டாள்.
“சொன்னா நீ விட மாட்ட, நானும் உன்னை பார்த்திருந்தா கிளம்பியிருக்க மாட்டேன்”
முத்து பெண்ணுக்கு உண்மை என்று தோன்றியது. “என்ன சொன்னாங்க” என்று கவலையுடன் கேட்க,
“வெற்றி தான்” என்றான் கண்ணடித்து.
தான் செய்த வேலைகள் அனைத்தையும் மறைக்காமல் மனைவியிடம் சொன்னவன், “எப்படியும் கண்டுபிடிச்சிடுவாங்கனு தெரியும். கூப்பிட்டு பேசுவாரா? இல்லை வேறெதுவும் செய்வாங்களான்னு யோசனை. பரவாயில்லை கூப்பிட்டு பேசினார். முன்ன அத்தனை நாள் அவங்களுக்காக உள்ளே இருந்தேன் இல்லை. அந்த நம்பிக்கைக்காக இருக்கும்” என்றான்.
“என்ன தைரியத்துல இதெல்லாம் செஞ்சிங்க. ஏன் இப்படி? இனி இது மாதிரி எல்லாம் ரிஸ்க் எடுக்காதீங்க” மனைவி பதறி சொல்ல,
“அமைச்சர்கிட்ட என்னால பேச முடியாது. உன் அப்பாவை வைச்சு நீயும் உள்ள வந்திட்ட. கவனமா தான் வெளியே வந்தாகணும். இனி பிரச்சனையில்லை. அவங்க பார்த்துப்பாங்க” என்றவன், தலைமையிடனான உரையாடலையும் சொன்னான்.
“முழுசா வெளியே வர முடியலை. இந்த சொத்து இருக்கிறதால முடியவும் முடியாது தான். ஆனா இதுவே பெரிய ரிலீஃப்” என்றான் செல்வம்.
முத்து பெண்ணுக்கும் அந்த ஆசுவாசம் இருந்தாலும், “நீங்க அப்படி பண்ணியிருக்க வேண்டாம். வேற மாதிரி ஆகியிருந்தா” என்றவளிடம் அச்சம் மிச்சமிருந்தது.”
“நாராயணன் பொண்ணு எப்படி வேணா இருந்திருக்கலாம். செல்வத்தோட பொண்டாட்டி இவ்வளவு எல்லாம் பயப்பட கூடாது. அப்படியென்ன நடந்திச்சுன்னு இப்படி மாறியிருக்க? நான் பார்த்தப்போ எவ்வளவு தைரியமா இருந்த, இப்போ என்னன்னா, போடி” என்றான் பிடிக்கா பாவனையுடன்.
முத்து பெண் பதிலில்லாமல் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். எதனால், யாரால் என்று கணவனிடம் சொல்ல மாட்டாள். அவளின் அப்பாவே மகளை கார்னர் செய்து தானே செல்வத்தை வெளியே எடுத்தார். அவளின் தைரியம் உடைய ஆரம்பித்த நிமிடங்கள் அது.
ஆனால் அவளுக்கு நேர் மாறாக செல்வம். இவளுக்காக என்று அதிகம் மாறினான். தைரியமாக சிலதை செய்தான். கடினங்களை கடந்து சாமானியனாகவே இருந்தாலும், சாதித்திருக்கிறான்.
காதல் ஒருத்தியை பலவீனமாக்கியது என்றால், ஒருவனை பலமாக்கியுள்ளது.
இனி அவனே அவளின் பலத்தை, அவளை முழுமையாக மீட்டெடுப்பான்!
முத்து பெண்ணுக்கும் அந்த நம்பிக்கை அவன் மேல் உள்ளது. காதல் என்றால் எல்லாம் சேர்ந்தது தானே!
அந்த காதல் மிகுதியில் அவளின் முத்தங்கள் கூடி கொண்டே போக, “முத்து மாலைக்கு நேரம் வந்திடுச்சு போல” என்றான் செல்வம் உல்லாசமாக.
இனி உறுத்தல்கள் எதுவும் இருக்காது என்பதில் அதிகமான ஆசையே!
“எங்க மாலை, எங்க முத்து மாலை?” என்று மனைவியை கைகளில் அள்ளி கொண்டே கேட்டான்.
அவனின் மனைவி இருக்கும் இடத்தை காட்ட, “போட்டுவிடவா?” என்று கண்ணடித்து கேட்டான் கள்ளன்.
“போட்டு விடுங்க” என்று மனைவி அவன் கையில் எடுத்து கொடுக்க, கட்டிலுக்கு வந்தவன் மடியில் அமர்த்தி அவளுக்கு போட்டுவிட்டான்.
செல்வத்துக்கு வலிக்கும் என்று மடியில் இருந்து எழ போக, அப்படியே அவளை கட்டிலில் சாய்த்து, தானும் மனைவி மேல் பாய்ந்தான்.
“மெல்ல, மெல்ல. ஏங்க இப்படி?” பெண் அவன் வேகத்தில்அலறவே செய்ய, “இடையில் கேப் விழுந்ததை எல்லாம் ஈடு கட்டணும். ஒத்துழைப்பு கொடுடி பொண்டாட்டி” என்றான் கணவன் முத்தங்களுக்கு இடையில்.
“அதுக்காக இப்படியா?” நிமிடத்தில் காணாமல் போன உடையில், பெண் அவனையே கட்டி கொண்டு சிணுங்கினாள்.
“சரி முத்து மாலைக்கு நோகாம பண்ணுவோமா” அவன் குறும்பாக கேட்க,
“நோ, நோ. நீங்க இப்படியே இருங்க” என்றுவிட்டாள்.
வன்மையை விட மென்மையில் அவளை அதிகம் கரைத்து விடுவான். இவளுக்கு தான் தொண்டை வறண்டு போகும்.
“சரி முதல் இப்படி, அடுத்து அப்படி?” என்று டீல் பேசியவன், அவள் மறுக்கவே வாய்ப்பு கொடுக்காமல், விடியலை காண வைத்தான்.