அத்தியாயம் 52

தியா…அஜய் அழைக்க, சொல்லுங்க அஜய் என்று விரலில் ஒட்டியிருந்த கேக்கை சப்பியவாறு அவனை பார்த்தாள்.

பேப், ஐ கான்ட். யூ ஆர் கார்ஜியஸ் என அவளை நெருங்கி அவளது பின்னிய கூந்தலை அவிழ்த்துக் கொண்டே குண்டு மல்லியை நுகர்ந்தான்.

அஜூ..ஆடை மாத்திட்டு உங்களுக்கும் ஆடை எடுத்துட்டு வாரேன். உங்களுடைய ஆடை ஒன்று இங்க இருக்கு என்று அவனை விட்டு விலக எண்ணினாள் தியா.

பேப்..ப்ளீஸ் என்ற அஜய்யில் குலைவில் அசையாது அவனை பார்த்தாள்.

அஜூ..நா..நான்..மாத்திட்டு வாரேன். இம்முறை வார்த்தைகள் திக்கி வந்தது தியாவிடம்.

எழுந்த அஜய், நீ சொன்ன நாட்கள் முடிந்தது. “டூ யூ லவ் மீ பேப்?” எனக் கேட்டான்.

தியா தடுமாற, “சொல்லு பேப்” என அவளை அஜய் நெருங்கினான்.

அஜூ..அவள் பயத்துடன் அவனை பார்த்தாள்.

அம்மா, அப்பா..யாரை பற்றியும் பயப்படாத. நீ எனக்கு ஓ.கே சொன்னா. நீ என்னுடையவள். உன்னை யாரும் காயப்படுத்தமாட்டாங்க. எனக்கு தெரியும் என் பேப்பை..சொல்லு பேப்?

அஜூ..நானும் உங்களை காதலிக்கிறேன் என்று தியா சொன்ன மறுநொடி அவளது இதழ்களை அடைந்திருந்தான் அஜய். அவனை தள்ளி விட்டு பெரிய மூச்சுடன் படியேறி அறைக்கு ஓடி கதவை சாற்ற முனைந்தாள்.

கதவை பிடித்த அஜய்..பேப், “ஐ நீடு யூ” என தடாலடியாக தியா அறைக்குள் சென்றாள்.

அஜய் சொன்னது அவள் காதில் ஏறவில்லை. அவள் காதல் மயக்கத்தில் அவனை விட்டு தவிர்க்க பால்கனிக்கு ஓட, அவளை பின்னிருந்து இடையிட்டு இழுத்து அவ்வாறே அணைத்தவாறு அவள் முதுகில் குட்டி குட்டி முத்தங்களை பரிசளித்தான். அவள் மெதுவாக கிரங்க, அவனும் முன்னேறினான் பேப்..பேப்..என அவளை திருப்பி, அவளது இடையை வருடிக் கொண்டே கழுத்தில் முகம் புதைத்து பின் மெதுவாக மார்பிற்கு வந்தான். பின் அங்கம் முழுவதும் இதழ் ஊர்வலம் நடத்தி அவளை பார்த்து, பேப் என அவளுள் செல்ல கண்ணாலே கேட்க, தியா கண்களை மூடி திறந்தாள். இருவரும் சங்கமமாகினர். பின் அவளை தன் மார்பில் போட்டு கண்ணயர்ந்தான் அஜய்.

காலை முதலில் எழுந்தது அஜய் தான். அவன் தியாவையே பார்க்க, அவள் மெதுவாக அசைந்தாள். கண்களை மூடிக் கொண்டான் அஜய்.

கண்களை திறந்த தியா இருவரையும் பார்த்து விட்டு, அவனது மார்பில் மேலும் அழுத்தி பொதிந்து, நேற்று உங்களுடன் நேரம் செலவழிக்க தான் வேகமாக தயாராகினேன். ஆனால் எல்லாம் போச்சு. பரவாயில்லை என் காதலை இப்பவாது சொன்னேன். இனி நான் இந்த நொடியே செத்தாலும்..என சொல்லும் போது அவள் இதழ் எதிலோ மாட்ட, அவள் என்னவென்று பார்த்தாள். அஜய் தான் கவ்வி இருந்தான்.

அஜூ..என அவன் மார்பில் அவள் அடிக்க, அவளை விடுவித்து, என்ன சொன்ன? இனி இப்படி பேசுன நாம இந்த அறையை விட்டு போகவே வேண்டாம் என்றான் உறுதி தெறிக்க.

நோ..அஜூ..எனக்கு யாருமே இல்லைன்னு அதிகமா தோண ஆரம்பிச்சிடுச்சு. வினுவும் இல்லை  அதான் என கண்கலங்கினாள்.

“நானிருக்கும் போது நீ எப்படி இப்படி சொல்லலாம்?” இனி நமக்கு நாம். இனி நீ நான் எனவெல்லாம் இல்லை. “எப்போதும் நாம் தான்” என்றான்.

தியா கண்கள் சுழன்று ஓரிடம் நின்று, அஜூ ஆபிஸூக்கு நேரமாகுது. மணிய பாருங்க எட்டாகிடுச்சு என தியா பதட்டமானாள்.

நம்ம கம்பெனி தான். இன்றைய வேலை அதிகம் இல்லை. அதையும் கிருஷ் தான் பார்க்கணும்.

அதுக்கு?

அதுக்கு நாம என அஜய் புன்னகைக்க, ராஸ்கல் போடா..என வெட்கமுடன் எழுந்து குளியலறைக்கு ஓடினாள்.

அஜய் வானத்திற்கும் பூமிக்குமாய் குதித்தான். அவன் மனம் முழுவதும் நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே. இருவரும் தயாராகி வந்தனர்.

அலைபேசியில் கிருஷ்ஷூடன் அஜய் பேச, தியா அவனுக்கு தோசை ஊற்றி எடுத்து வைத்தாள். அவன் அலைபேசியை துண்டித்து, தியாவை வைத்த தோசையை ரசித்து உண்டு கொண்டிருந்தான்.

அந்நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டு அஜய் எழ, அஜூ “இருங்க” என புன்னகையுடன் தியா கதவை திறந்து அதிர்ந்து நின்றாள்.

அஜய் அம்மா சீற்றமுடன் தியா அடிக்க கையை ஓங்க, அவர் கையை பிடித்து தள்ளிய தியா..வாங்க ஆன்ட்டி, அஜய் சாப்பிட்டுட்டு இருக்கார். “தோசை சாப்பிடுறீங்களா?” என உபசரிக்க, இப்பொழுது அவர் அதிர்ந்து நின்றார்.

அஜய்யும் தியாவிடம் வர, அஜய் கைகளை கோர்த்த தியா..ஆன்ட்டி நானும் அஜய்யும் காதலிக்கிறோம். எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க என்றாள் தியா தில்லாக. அஜய்யே அசந்து விட்டான்.

“உனக்கு எவ்வளவு திமிருடி? நான் சொன்னதை நிஜமாக்கிட்ட?” அவர் நாராசமாக மேலும் பேச, வேடிக்கை பார்த்த தியா காதை குடைந்து கொண்டே, கத்துறத நிறுத்துங்க ஆன்ட்டி. என்னோட ராமன் அஜய். அவரோட சீதை நான். ” “என்ன சொல்றீங்க அஜூ?” என தியா அஜய்யை பார்த்தான்.

அஃப் கோர்ஸ். “பொண்டாட்டி பேச்சுக்கு ஏது அப்பீல்?” என்று அவன் கையை விரிக்க, அவன் அம்மாவிற்கு மயக்கம் வராத குறைதான்.

“உன்னை என்ன செய்கிறேன் பாரு” என அவர் கத்த, அவர் கன்னம் பழுத்தது. அஜய் அப்பா அவன் அம்மாவை அறைந்திருந்தார்.

யோவ், “உனக்கு என்ன திமிரு?” அஜய் அம்மா, அவன் அப்பாவை அடிக்க கையை ஓங்க, அஜய் அவன் அம்மா கையை பிடித்து தள்ளி விட்டு, என்ன நடந்தாலும் தியா தான் என்னோட பொண்டாட்டி. அதை மாற்ற யாராலும் முடியாது.

அஜய், “அம்மாவை மறந்துட்டியாடா?” அவர் கேட்க, மறக்கலம்மா. எனக்கு தியாவும் முக்கியம். அவளில்லாமல் நானில்லை. உங்களுக்கு அவளை பிடிக்கலைன்னா..நீங்க வேணும்ன்னா நம்ம வேளச்சேரி வீட்டுக்கு போயிடுங்க என்றான் சாதாரணமாக.

அஜய் அப்பா வியந்து தன் மகனை பார்த்தார். தியாவும் அவ்வாறே அவனை பார்த்தாள்.

அஜய் அம்மா கோபமாக சென்று விட, தனராஜ் காலில் விழுந்து இருவரும் ஆசி பெற்றனர். அவரும் வாழ்த்தினார்.

அஜய், சீக்கிரமே நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க என்றார்.

எஸ் டாட் என்றான்.

சார், வினு இல்லாமல்..

அவனுக்கு நீ சந்தோசமாக இருந்தால் போதும்மா. உங்க திருமணம் முடிந்த கையோட நீங்க நம்ம பீச் ஹவுஸ்ல்ல தங்கிடுங்க. அதான் எல்லாருக்கும் நல்லது என்றார் அவர்.

டாட், மாம்..

அவள நான் பார்த்துக்கிறேன். நாளை கூட நாள் நல்லா இருக்கு. நிச்சயம் வச்சுக்கலாமா? அவர் தியாவை பார்க்க, வீரா அங்கிள் கிட்ட பேசணும் சார்.

சார் இல்லம்மா மாமா.

வீராவை வர சொல்றேன். நீ வா என அவர் வீட்டிற்கு சென்று அவர் மனைவியின் திருமண புடவையை கொடுத்து திருமணத்தோட இதை தான் நீ போட்டுக்கணும்மா என்றார்.

ஆன்ட்டி..

அவ ஒன்றும் சொல்ல மாட்டா. அதான் நான் இருக்கேன்ல்ல. இப்ப நல்ல புடவை ஒன்றை எடுத்து உடுத்திட்டு வாம்மா. வீராவை வர வைத்து தட்டு மாத்திக்கலாம் என்றார். தியா மகிழ்வுடன் அவர் காலில் விழுந்தாள்.

அஜூ..என அஜய் கையை தியா பிடிக்க, அவனும் மகிழ்ச்சியுடன் தனராஜூன் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டனர். அவர் கண்ணில் ஆனந்தகண்ணீர்.

சரிம்மா, நீ போ..என தியாவை அனுப்ப, அவள் புன்னகையுடன் சென்றார். அஜய்யும் தயாராக சென்றான்.

அன்னம், “அவங்களுக்கு கால் பண்ணீயா?” பரிதிம் கேட்க, பண்ணிட்டேங்க. எல்லாரும் காலையில நேராக கோவிலுக்கு வருவதாக சொல்லீட்டாங்க. நாம கிளம்பலாம். சிம்மா எல்லாத்தையும் வண்டியில ஏத்துங்க என பரிதி சொல்ல, சிம்மா, உதிரன், மகிழனும் வண்டியில் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

விக்ரம், நீ ரம்யாவை அழைச்சிட்டு வா. கிளம்பணும் என்று பரிதி சொல்ல, அவன் சிம்மா பைக்கை எடுத்து ரம்யா பள்ளி நோக்கி கிளம்பினான்.

அம்மாடி, “எல்லாரும் தயாரா?” புகழேந்தி சத்தமிட்டார்.

வந்துட்டோம்ப்பா..என்ற நட்சத்திரா, ஹேய்..எல்லாரும் முன்னாடி போங்க. அர்சு தூங்கிட்டு இருக்கான். அவனை தூக்கிட்டு வாரேன் என்றாள்.

அக்கா, “அர்சுவுக்காகவா? இல்லை மாமாவுக்காகாவா?” சுருதி கேலியாக கேட்க, பெண்கள் அனைவரும் புன்னகையுடன் வந்தனர்.

“போங்கடி” என்று வெட்கப்புன்னகையுடன் நட்சத்திரா சொல்ல, அண்ணி உங்க முகம் சிவக்குது. பார்த்து அண்ணி அண்ணா மயங்கப் போறாங்க ரித்திகாவும் சேர்ந்து கேலி செய்தாள்.

ரித்து..என சிரிப்புடன் வெட்க சிவப்பாக நட்சத்திரா மிளிர, வாவ்..என்றாள் கீர்த்து.

ஏய் கீர்த்து, “சும்மா இரு” என நட்சத்திரா முகத்தை கையால் மறைக்க சிம்மாவும், உதிரனும் உள்ளே வந்தனர்.

ஹா..ஹா..ஹாம்..என சுருதி, கீர்த்தனா, சுவாதி ஆர்ப்பரிக்க, “என்னாச்சு?” என்று உதிரன் கேட்க, ரித்திகா அவனிடம் கண்ணாலே நட்சத்திராவை காட்டினாள்.

செல்லம்மா, “உனக்கு என்னாச்சு?” உதிரன் நகர, அய்யோ..மாமா..என ரித்திகா அவன் கையை பிடித்து வெளியே இழுத்து சென்றாள்.

சிம்மா புரியாமல் விழிக்க, ம்ம்..நடக்கட்டும் நடக்கட்டும் என சுவாதி சொல்ல, மற்ற பெண்கள் சிம்மாவை பார்த்து சிரித்துக் கொண்டே, “வாங்க போகலாம்” என்று வெளியேற சிம்மா நட்சத்திராவை பார்க்க, அவள் அவர்கள் அறைக்கு ஓடினாள்.

“ஸ்டார்” என சிம்மா அவள் பின் சென்று அவளை இழுத்து திருப்பி, “என்ன நடக்கட்டும்?” என்று கேட்டவன் கண்ணில் நட்சத்திராவின் வெட்கப்புன்னகை பதிலளிக்க, அவளை அணைத்து விட்டு புன்னகையுடன் தயாராகணும் ஸ்டார் என்றான்.

அர்சுவை தூக்கிக் கொண்டு  நட்சத்திராவை தோளோடு அணைத்தவாறு வெளியேறினான்.

ஆகாய வண்ண முழுக் கைகளில் அதே நிற நெட் உறையிட்ட சுடிதார் டாப்பும் அதே நிற பேண்டும், ஆகாய மங்கையாக ஒப்பனை ஏதுமில்லாமல் கவலை தோய்ந்த முகத்துடன் விக்ரம் பைக்கிலிருந்து இறங்கினாள் ரம்யா.

மகிழ், இந்தா..என ரம்யாவின் பையை விக்ரம் தூக்கி போட அதையும் வண்டியில் ஏற்றி விட்டு அவன் இறங்கி வந்தான். அனைவரும் ரம்யாவை சூழ்ந்து அவளது கவலை எண்ணத்தை மாற்றிக் கொண்டிருந்தனர்.

புகழேந்தி குடும்பமும், பரிதி குடும்பமும் அவர்களது குலதெய்வ கோவிலை நோக்கி பயணிக்க ஆயத்தமானார்கள்.

எல்லாரும் வாங்க பிக் எடுத்துக்கலாம் என அனைவரும் புகைப்படம் எடுத்து அந்த ஏகாந்த நடு இரவில் வீட்டிலிருந்து கிளம்பினர்.

தமிழ் குடும்பத்து ஆட்களுக்கு அவர்களது பயண புகைப்படம் சுவாதியின் மூலம் பகிரப்பட்டது. அனைவரும் ரம்யாவை பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.

திலீப்பிற்கும் பகிரப்பட்டது. அவன் விடுப்பு எடுத்ததால் அடுத்தடுத்து ஆப்ரேசன் செய்து களைத்து அப்பொழுது தான் வீட்டிற்கு வந்தான்.

ம்மா..என் அலைபேசியை நீங்களே வச்சிருங்க. விடுப்பு சொல்லி தான் வந்துருக்கேன். நாளை மறுநாள் மூன்று ஹார்ட் ஆப்ரேசன் இருக்கு. யாரும் தொந்தரவு செய்யாமல் ஓய்வெடுத்தால் தான் நாளை கோவிலுக்கு என்னால் வர முடியும்ன்னு சொல்லி அவன் அம்மாவிடம் கொடுத்து அவன் அறைக்கு சென்ற பின் தான் அந்த நள்ளிரவிலும் அவனுக்கு வந்த மேசேஜை பார்த்த அவர் முகம் விகர்சித்தது.

எப்பொழுதும் டாப், பாவாடை இரண்டை சடையில் இருக்கும் ரம்யா, அன்று தான் சுடிதார் அணிந்து தலையில் சிறிய கிளிப் மட்டும் போட்டு தலையை விரித்து மல்லிகைப்பூவும் வைத்திருந்தாள். ஒப்பனை இல்லாமல் பால் போன்ற முகம். அதில் கருமை நிற சிறு பொட்டு. நெற்றியில் சிறிய திருநீர் கீற்று. அனைவர் கண்ணுக்கும் வித்தியாசமாகவும் அழகாகவும் தெரிந்தாள். திலீப் அம்மாவே ரம்யாவை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.

அதிகாலை திலீப் வீட்டின் அழைப்புமணி ஒலிக்க, தயாராகி அமர்ந்திருந்த திலீப் அப்பா கதவை திறந்தார். விகாஸூம் ராஜாவும் தத்தம் குடும்பங்களுடன் நின்று கொண்டிருந்தனர். “வாங்க” என அழைத்து உபசரிக்க, “அண்ணா எங்க?” என இரு தம்பிகளும் உள்ளே வந்தனர்.

அவன் இன்னும் எழலை. இரவு நேரம் கழித்து தான் வந்தான்.

என்ன பெரியப்பா, “இப்படி சொல்றீங்க? அண்ணா வரலையா?” விகாஸ் கேட்க, வருவான். நம்ம முன்னாடி போகலாம். அவன் வருவான் என்றார் அவர். அவர் மனைவியும் தயாராகி வர, திலீப் கொட்டாவியுடன் கீழே வந்தான்.

அண்ணா, “என்ன இது? கிளம்பலையா?”

“நீங்க முன்னாடி போங்கடா?” லொக்கேஷன் ஷேர் பண்ணுங்க. நான் வந்துடுறேன் என்று திலீப் அவர்களை அனுப்பினான். அனைவரும் சென்றனர். திலீப் தயாராக மீண்டும் அவனறைக்கு சென்றான்.

தியாம்மா, “தயாராகிட்டியா?” தனராஜ் சத்தம் கொடுக்க, அவளை பார்த்து நெட்டிமுறித்து அவர் உள்ளே சென்றார். அவர் பின் அஜய்யும் தியாவை கண்களாலே விழுங்கிக் கொண்டிருந்தான்.

வீராவும் உள்ளே வர, முருகா..தனராஜ் சத்தமிட்டார்.

வீராவுடன் அவளது நண்பர்களை பார்த்து தியா விழித்து எழ, ஹேய்..”சூப்பர்டி, கங்கிராட்ஸ்” என்று மனீஷா தியாவை அணைத்தாள்.

அம்மாடி, “நீ இப்ப எங்க பக்கம் மறந்துட்டியா?” தனராஜ் கேட்க, தியா புரியாமல் விழித்தாள்.

மனு, “தியா முழிக்கிறா பாரேன்” கீரன் சந்தோச கூச்சலிட்டான்.

அஜய் சார், தங்கையாக நான் இப்ப வந்துருக்கேன். வேற பொண்ணுங்க தெரியாது. அவர் அம்மாவும் என அவள் பேச, அவளை இடித்து முறைத்தான் புழலரசன்.

சாரி..சாரி..சார் என மனீஷா தனராஜை பார்த்தாள்.

ஓ.கேம்மா புரியுது. பசங்களா என்னோட அமருங்க என வீரா அழைக்க, அமிர்தன், புழலரசன், கிருஷ், கீரன் அவரிடம் அமர்ந்தனர்.

கிருஷ், “ருத்ரா வரலையா?” தியா மெதுவாக கேட்க, அவளுக்கு கால் பண்ணேன். போகலை. இப்ப தான தெரிந்தது. அதான் நான் மட்டும் வந்துட்டேன் என்றான். தியா முகம் சோகமாக, “என்னாச்சும்மா?” வீரா கேட்டார்.

சிம்மா அண்ணாவும், தமிழ் சார், நட்சத்திரா மேம் இருந்தா நல்லா இருந்திருக்கும் என்றாள் அவள்.

“அவங்க எல்லாரும் கோவில் குலதெய்வ வழிபாட்டுக்கு போறதா நேற்று சொன்னாங்கல்ல? நாம தான் பேசினோம்ல்ல?” கீரன் கேட்க, யாருமில்லாமல் அதான்..அவங்க இருந்தா நல்லா இருக்கோம்ன்னு தோணுச்சு.

“நாங்க இருக்கோம்டா” என்ற வீரா,..இதோ வினு லையன்ல்ல வந்துட்டான் பாரு என வீடியோ கால் கனெக்ட் செய்து வீரா காட்ட, வினித் தியாவிற்கும் அஜய்க்கும் வாழ்த்தை தெரிவித்தான். அவள் முகம் பிரகாசமானது.

தேங்க்ஸ்டா. நீயும் இரண்டு நாள் கழித்து கூட போயிருக்கலாம் என தியா சொல்ல, அப்புறம் மேடம் என்னை விடலைன்னா. “நான் என் வேலையை எப்படி பார்ப்பது?” என இருவரும் ஆர்க்யூ பண்ணிக் கொண்டிருக்க, “போதும் போதும் சீனியர்” என்றான் புழலரசன்.

சரி, வினு எங்க மேரேஜூக்கு நீ கண்டிப்பா வரணும் இல்லை. அவ்வளவு தான்.

தாயே! மலையிறங்கு..என்றான் வினித் கேலியாக. அனைவரும் புன்னகைத்தனர்.

தாம்பூலத்தட்டை மாத்துங்க வினித் அலைபேசியிலிருந்து சொல்ல, ஒரு நிமிசம் என்றான் அஜய்.

“என்ன?” அனைவரும் அவனை பார்க்க, “அஜய் என்னடா?” தனராஜ் கேட்க, டாட் ஒரு நிமிசம்..ப்ளீஸ் அமைதியா இருங்க. “எழுந்திருங்க டாட் அங்கிள்” என்றான் அஜய்.

அனைவருக்கும் பக்கென ஆனது. தியா அஜய் கண்களையே பார்க்க, “இங்க வந்து நில்லுங்க” என்று வாசலின் அருகே இருவரையும் அழைத்து வந்து நிறுத்தி வைத்தான் அஜய்.

சார், “என்ன பண்றீங்க?” அமிர்தன் கோபமாக கேட்க, புன்னகைத்த அஜய்..இருடா..என்னோட தியா யாருமில்லைன்னு பீல் பண்ணக் கூடாது என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு வேனிலிருந்து ஆட்கள் இறங்கி வீட்டிற்குள் வந்தனர். அனைவரும் ஆவென பார்த்தனர்.

அனைவரும் தியாவின் சொந்தபந்தங்கள். அவள் சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, அத்தை மகன் கூட வந்திருந்தான். எல்லாரையும் பார்த்து தியா கண்கள் கலங்கியது. தனராஜ் தன் மகனை பெருமையாக பார்த்தார் என்றால் வீராவோ நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் அஜய்யை அணைத்துக் கொண்டார்.

அஜய் தியாவை பார்க்க, அவளை சுற்றி எல்லாரும் நலம் விசாரிக்க, என்ன உணர்விது? எனக்காக அஜய்..என்னோட அஜூ இவர்களை வர வைத்தாரா? என கையெடுத்து கும்பிட வந்தாள்.

அஜய்யை அணைத்தவர்களிடமிருந்து விலகிய அஜய் தியா கையை இறக்கி ஆறுதலாக பிடிக்க, தாவி அஜய்யை அணைத்துக் கொண்டாள் தியா காதலாக. அனைவரும் ஆனந்த கூச்சலிட்டனர்.

வீரா தனராஜ் தாம்பூலம் மாற்றிக் கொள்ள, மனீஷாவும் வந்திருந்த உறவுக்கார பொண்ணொருத்தியும் தியா தலையில் சரம் சரமாக பூ வைக்க, அஜய் தியாவை அமர வைத்து..சந்தன, குங்குமம் வைத்து இருவரையும் எல்லாரும் வாழ்த்தினர். இதை பார்த்த வினித் நெஞ்சம் நிறைந்து போனது.

விழா முடிந்து மனீஷா அவள் நண்பர்கள் வீட்டில் இருக்க, அஜய் வந்தவர்களுக்கு மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தான். அவர்களை அருகே அவனே பார்த்துக் கொண்டான். தியாவை விரும்பிய அத்தை மகனுக்கு அஜய்யின் செய்கையில் நிம்மதி பெருமூச்சு வந்தது. பின் அஜய் அவனாக அவனுடன் சென்று பேச இருவருக்கும் நட்பு புலர்ந்தது.

தியாவை அவள் நண்பர்கள் ஓட்டிக் கொண்டிருந்தனர். சிம்மா அண்ணாவிடமும் நட்சத்திராவிடமும் சொல்ல பயமாகவும் வருத்தமாகவும் இருக்க இப்பொழுதைக்கு யாரும் இதை பற்றி பேச வேண்டாம். அவர்கள் ஊரிலிருந்து சென்னை வரவும் பேசிக்கிறேன். புகைப்படம் வெளியிடுறேன்னு ஏதாவது செஞ்சீங்க. நீங்க காலிடா என அனைவரையும் தியா மிரட்டி வைத்து விட்டாள்.

மாலை நேரம் வீட்டில் ஓய்வெடுத்து வெளியே வந்த அஜய், தியாவை பார்க்க சென்றான். அங்கே அவன் அம்மா அவளுடன் நன்றாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தான்.

மாம்..அழைத்தான் அவன்.

தியா புன்னகையுடன் புருவத்தை உயர்த்தி அவன் அம்மாவை காட்டினாள்.

சாரி அஜய், உன்னோட சந்தோசத்தை விட எனக்கு ஏதும் பெரியதில்லை. என் மருமகளை எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. நாம அவளை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாமா? என அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

தனராஜ் இதை கேட்டுக் கொண்டே வந்து, திருமணத்திற்கு முன் இதெல்லாம் வேண்டாம். தியாம்மா..நீ இருந்துப்பேல்லடா அவர் கேட்க, ஓ.கே மாமா..அத்தை, நான் இடையிடையே வந்து உங்களை பார்த்துட்டு வந்துக்கிறேன் என்றாள் பொறுப்பாக.

உன்னோட அத்தைக்கு இந்த பார்மாலிட்டியெல்லாம் பிடிக்காது தியாம்மா. அவளே உன்னிடம் வந்து பேசுவா. நீ வர வேண்டாம் என்றார் கண்டிப்புடன் தனராஜ். அவரையே யோசனையுடன் அஜய் பார்த்துக் கொண்டிருந்தான்.

சரிங்க மாமா, ரொம்ப தேங்க்ஸ் மாமா என தியா அவரிடம் வந்தாள். அவள் தலையை ஆதரவாக வருடி கொடுத்து, எந்த பிரச்சனை வந்தாலும் எங்களை விட்டு நீ போகக் கூடாதும்மா என்று கண்கலங்கினார்.

எனக்கு எந்த பிரச்சனையும் வராது மாமா. வந்தால் முருகன் பார்த்துப்பார் என்றாள் கைகளை உயர்த்தி.

முருகா, என்னோட பிரச்சனையும் பார்த்தேன்னா நல்லா இருக்கும். நானும் ரொம்ப நேரமாக என் பொண்டாட்டிட்ட பேச நினைக்கிறேன். முடியலையே! என அஜய் கையை தூக்கி வேண்டுதல் விடுத்தான். அனைவரும் அவனை பார்த்து புன்னகைத்தனர்.

கிராமத்து வாடை காற்று வீச, இழுத்து போர்த்தி தூங்கிக் கொண்டிருந்த கீர்த்தனா, ரம்யா காதில் சில குரல்கள் கேட்டது. உள்ளே வந்த ரித்திகா இருவரையும் எழுப்ப, தாத்தாவும் பாட்டியும் அங்கே வந்திருந்தனர்.

“செல்லங்களா?” என தாத்தா அழைத்துக் கொண்டே இவர்கள் அறைக்கு வர, “எழுந்திருங்கடி” என போர்வையை இருவரிடமிருந்தும் விலக்கினாள் ரித்திகா.

தாத்தா உள்ளே வந்து விட, “தாத்தா” என இருவரும் எழுந்தனர்.

திலீப் அம்மா ஆர்வமாக உள்ளே வர, உடுத்திய உடையுடனே இருவரும் தூங்கி இருப்பர். இருவர் தலையும் கலைந்திருக்க, விகாஸ் சத்தம் கேட்டு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு, “தாத்தா தானா?” என ரம்யா அவரருகே வந்து உற்று பார்த்தாள்.

தாத்தா புன்னகைத்து ரம்யாவை பார்க்க, ரித்திகா பயங்கரமாக சிரித்தாள்.

ரம்யா கனவில்லை. எல்லாருமே வந்துருக்காங்க. “அன்னம் பெரியம்மா உங்களிடம் சொல்லலையா?” எனக் கேட்டாள் சிரித்துக் கொண்டு.

“தாத்தா” என ரம்யா அவரை கட்டிக் கொள்ள, கீர்த்தனாவிடமும் கையை நீட்டினார் அவர். அவளும் ஓடி வந்து அணைத்துக் கொள்ள, ரம்யா திலீப் அம்மாவை பார்த்து விலகினாள்.

அங்கே வந்த விகாஸ் இருவரையும் பார்த்து உறைந்து வயிற்றை பிடித்துக் கொண்டு படுக்கையில் அமர்ந்து சிரித்தான்.

டேய், “எதுக்கு சிரிக்கிற?” ரம்யா கேட்க, இருவர் கையையும் பிடித்து கண்ணாடி பக்கம் இழுத்து வந்து, “தலையை பாருங்க” என மேலும் சிரித்தான். மற்றவர்களும் சிரிக்க, ரம்யாவும் கீர்த்தனாவும் தலையை சரி செய்ய, ரம்யா அவனை முறைக்க, கீர்த்தனா தலையை கவிழ்ந்து கொண்டாள்.

அட, “இது கூட எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா?” என விகாஸ் அம்மா ரம்யா நெற்றியில் முத்தமிட்டு அவள் கோபத்தை குறைக்க, கீர்த்தனா அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ம்மா..விகாஸ் கோபக்கண்ணால் கீர்த்தனாவை காட்டினான். அவளை பார்த்து அவளையும் கட்டிக் கொண்டு, சீக்கிரம் தயாராகி வாங்க என்றார்.

ரம்யா அருகே வந்த திலீப் அம்மா, நீ வருவன்னு நாங்க நினைக்கலைடா. ரொம்ப சந்தோசம் டா. “எட்டு மணிக்கு கோவிலுக்கு போகணுமாமே!” என்று ரம்யாவை அணைத்து அவர் விடுவித்தார்.

அத்தை, இதெல்லாம் போங்காட்டம். எங்களை கூட நீங்க பார்க்க வரலை என்று சுருதி குரல் கேட்டு, திரும்பிய திலீப் அம்மா..”வாடி என் தங்கமே!” என அவளை அணைக்க, முத்தம் கொடுங்க..என்று கன்னத்தை காட்டினாள்.

“உனக்கு கொடுக்காமலா?” என அவர் கொடுக்க, “லவ் யூ அத்தை” என்றாள் சுருதி.

சுருதி, எங்களை கவனித்தது போதும். “உன் மாமியாரை கவனிக்கலையா?” அவர் பாரு கோபப்படுறார் என்று விகாஸ் அம்மா சொல்ல, எல்லாரும் கோபமாக நின்று கொண்டிருந்த அன்னத்தை பார்த்தனர்.

“அத்தை” என சுருதி அழைக்க, “என்ன பண்றீங்க? உங்க கொஞ்சலை அப்புறம் வச்சுக்கோங்க. இன்னும் குளிக்காம பேசிட்டு இருந்தா எப்ப கோவிலுக்கு போறது?” பொண்ணுங்களாம் வாங்க என அன்னம் சத்தம் கொடுக்க, எல்லாரும் ஹாலுக்கு வந்தனர். எல்லாரும் ரம்யாவை பார்த்து புன்னகைத்தனர். அவளும் புன்னகைத்தாள்.

அம்மாடி, நட்சத்திரா, பிள்ளைங்களுக்கு அவங்களுக்கான ஆடையை கொடு. அவங்க தயாராகி வரட்டும் என்றார் அன்னம்.

“மாமா” என நட்சத்திரா சிம்மாவை அழைக்க, “அவனை எதுக்கும்மா கூப்பிடுற?” பரிதி கேட்டார்.

நானும் மாமாவும் சேர்ந்து கொடுக்கிறோம் மாமா என்றாள் நட்சத்திரா. எல்லாரும் பெருமையுடன் அவளை பார்த்தனர். அன்னத்திற்க்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை. அவளை நெட்டி முறிக்க, ரித்திகா கையை கட்டிக் கொண்டு அவர் முன் வந்தாள்.

ரித்து, “நீ அம்மாகிட்ட வா” என அன்னம் அவளை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.

“மகிழ் எங்க?” ராஜா கேட்க, குளிச்சிட்டு இருக்கான். வந்துருவான் என்று பரிதி சொல்ல, வரட்டும் வரட்டும் என்றார் சுருதி அப்பா.

மிருளாலினி- தமிழை அழைத்து அவர்களுக்கும் ஆடையை கொடுத்து விட்டு, சுவாதி, சுருதி, ரசிகா, ஹராவிற்கு புடவையும் ரம்யா, கீர்த்துவிற்கு பாவாடை தாவணியும் கொடுத்து அணிய சில நகைகளையும் கொடுத்தார்.

ஒரு மணிநேரம் தான்ம்மா.. தயாராகி வாங்க. சாமி கும்பிட்டு தான் சாப்பிடணும் என்றார் அன்னம்.

பொண்ணுங்க தயாராக கிளம்ப, மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

எல்லாருமே ஒரே வேனிலே ஏறினர். ஊரின் எல்லையில் தான் கோவில் உள்ளது என வேனில் ஏற, ரம்யாவின் கண்கள் அவ்விடத்தில் அலைந்தது.

ரம்யா, “நீ யாரையோ தேடுற மாதிரி இருக்கே!” சுருதி குறும்புடன் கேட்க, “ஆமா இந்த கண்கள் ஓரிடத்தில் நிற்கவில்லையே!” என சுவாதியும் ரம்யாவை கிண்டலாக கேட்டாள்.

“தேடுறதா? இல்லையே? நான் யாரை தேடப் போறேன்?”

நீ யாரையும் தேடலைன்னா ஏறும்மா என்று சுவாதி சொல்ல, ரம்யா வேனில் ஏறினாள். சுவாதியும் சுருதியும் சிரிப்புடன் “ஹை பை” கொடுத்துக் கொண்டனர்.

ஏய்..ஏறுங்கடி. என்ன பேச்சு? விகாஸ் அம்மா சத்தம் கொடுக்க, வந்துட்டோம் என்று அவர்கள் ஏற, அவர்களின் பின் வந்த சிம்மாவும் விக்ரமும் பேசிக் கொண்டே ஏறினர்.

அந்நேரம் விகாஸிற்கு கால் வந்தது. திலீப் அழைத்திருந்தான்.

வீ..அம்மா, அவங்க அலைபேசியை வச்சுட்டு என்னோட எடுத்துட்டு போயிட்டாங்கன்னு சொன்னேன்ல்ல. “எங்க தான் இருக்கீங்க? ரூட்ட சரியா சொல்லுடா” என சீற்றமுடன் கத்தினான் திலீப்.

இரு. சிம்மா மாமாகிட்ட தாரேன் பேசு என்று விகாஸ் முன்னிருந்த சிம்மாவிடம் கொடுத்தான். அவன் வழியை சொல்ல திலீப்பும் வந்து சேர்ந்தான்.

கோவில் வர வேன் நின்றது. அண்ணா…கொஞ்சம் முன்னாடி தள்ளி நிறுத்துங்க என்று சிம்மா சொல்ல, வேனை ஓட்டி வந்தவரோ..நேற்று பெய்த மழையால் நிறுத்த இந்த இடத்தை விட சரியான இடமில்லை. மற்ற இடம் முழுவதும் அதிகமாக நீரால் நிரம்பி இருக்குப்பா என்றார்.

அப்பத்தாவுக்காக எடுத்து வந்த அந்த சிலைடை போடுங்க. எல்லாரும் பார்த்து இறங்குங்க என்று சிம்மா வேஷ்டியை மடித்து கட்டி தண்ணீர் இல்லாத இடத்தில் குதித்து பெரிய கல் ஒன்றை உருட்டிக் கொண்டு வந்து சிலைடின் அருகே வைத்து அனைவரையும் கையை பிடித்து இறக்க, விக்ரமும் உதவினான்.

மகிழ், மத்தவங்களுக்கு உதவப் போ. அண்ணாக்களுக்கு வேலை இருக்கு என்று சிம்மா, விக்ரமை புகழேந்தி அழைத்தார். திலீப் அங்கே வந்து, மகிழ் நீங்க போங்க. நான் இங்கிருப்பவங்களை பார்த்துக்கிறேன் என்றான்.

மகிழன் புன்னகையுடன், “சரிதான்” என நகர்ந்தான். திலீப் கையை நீட்டி அவன் வீட்டு பெரியவர்களுக்கு உதவினான். அவன் அம்மா அவனிடம் கையை நீட்ட, ம்மா..”என்னோட அலைபேசி எங்க?” என புருவத்தை உயர்த்தினான்.

“அதுவா?” என குறுஞ்சிரிப்புடன் அப்பாகிட்ட வாங்கிக்கோப்பா என்று நகர்ந்து புன்னகையுடன் அவனை பார்த்து புன்னகையுடன் சென்றார்.

“என்னாச்சு எல்லாருக்கும்?” மகிழ், பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா என்னை பார்த்து சிரிக்கிறாங்க. ஏதோ வித்தியாசமா இருக்கு என்று கீர்த்தனாவை பார்த்து, “கீர்த்தும்மா..நீயா இது?” அழகா இருக்கடா என்று திலீப் சொல்ல, “தேங்க்ஸ் மாமா” என்று கையை நீட்ட, அவளையும் நகர்த்தினான். அவள் பின் விகாஸ் நின்றான்.

ஹாய் அண்ணா. “கையை குடுத்துராத” என்ற விகாஸ் ஷூ காலுடன் சிலைடில் காலை வைத்து சறுக்கி விளையாண்டு கொண்டே கீழே இறங்க, திலீப் தலையில் அடித்துக் கொண்டே அவனை திட்டினான்.

விகாஸ் கீர்த்துவை இடிக்க, அவளோ..ஏய் என கையை ஓங்கி விகாஸை பார்த்து முறைத்தவாறு கையை இறங்கினாள்.

ஹலோ, “என்ன முறைக்கிற?” எனக்கு இடையில் தான் நீ வந்த விகாஸ் சொல்ல,

ஆமா..இடிடான்னு நான் வந்து நின்றேன் பாரு என கீர்த்தனா முணங்கினாள்.

“என்ன சொன்ன?” விகாஸ் கேட்க, அவனை முறைத்து விட்டு திலீப்பை பார்த்தாள் கீர்த்தனா.

கீர்த்தும்மா, அவன் கிடக்கான். நீ போடா திலீப் சொல்ல, டேய் அண்ணா, “நீ எனக்கு அண்ணன் தானா?” என விகாஸ் கேட்க, நீயெல்லாம் கம்பெனி பொறுப்பில இருக்கன்னு வெளிய சொல்லாத. இன்னும் கல்லூரி படிக்கும் பையன்னு நினைப்பு என திலீப் விகாஸை வாரியவாறு கையை நீட்டினான் யாரென பாராமல்.

அண்ணா, முதல்ல அங்க பார்த்து கையை குடு. பார்த்து..என செல்லகோபம் மறைந்து விகாஸ் புன்னகைத்தான்.

அந்த பக்கம் திலீப் கையை பிடிக்க எண்ண, இவன் கையை எடுத்து விட்டு இடுப்பில் கையை வைத்து, “மொத்த குடும்பமும் இவ்வளவு சந்தோசமாவா இருக்கீங்க? எல்லாரும் என்னை பார்த்து எதுக்குடா சிரிக்கிறீங்க?” என ஆற்றாமையுடன் கேட்டான் திலீப்.

அண்ணா…”நாங்க வெயிட்டிங்” என்று சுவாதி குரல் கொடுக்க, இருடா வந்து உங்கள கவனிக்கிறேன். சுவாம்மா..என கையை நீட்டி திரும்பிய திலீப் கண்களை விரித்து அதிர்ச்சியுடன் ரம்யாவை பார்த்தான்.

கரும்பச்சையும் அரக்கும் கலந்த சில்க் பாவாடை தாவணியும், பெரிய வைரக்கல் நெக்லஸூம் ஒட்டியானம், காதணி, நெற்றிச்சூட்டி என அழகு தேவதையாக ரம்யா திலீப் கையை பிடிக்க முயன்றாள். அவனோ கைகளை அவன் பக்கமே வைத்துக் கொண்டு உறைந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான். “சின்ன பொண்ணு..சின்ன பொண்ணு..” என சொல்லிக் கொண்டிருந்த திலீப்பின் கண்களுக்கு இப்பொழுது அழகு பதுமையாக தெரிந்தாள் ரம்யா.

அண்ணா..அண்ணா..சுவாதி சத்தமிட, அவன் மட்டுமல்ல ரம்யாவும் அவனை எதிர்பாராத நேரம் பார்க்கவும் இவ்வுலகிலே இல்லை. சுவாதி சத்தத்தில் அவள் சுயம் வர, திலீப்பால் தான் அதிர்ச்சி தாங்க முடியலை.

“இது சரிவராது” என எண்ணிய சுவாதி, அண்ணா..என கத்தி விட்டு ரம்யாவை இடிக்க, அவள் முன்னோக்கி விழ, சுயம் வந்த திலீப் அவள் விழாமல் பிடிக்க எண்ணி, ஓர் அடி முன் வைக்க, நேராக அவனை இடிக்கும் நேரம் ரம்யா கையை பிடித்தாள் சுருதி.

சுருதி, திலீப்பிற்கு இடையில் ரம்யா தொங்கிக் கொண்டிருக்க, அனிச்சையாக திலீப் கை அவளை தாங்கும் எண்ணத்துடன் அவளது இரு தோள்ப்பட்டையிலும் பதிந்தது. இருவரின் முகமும் அருகாமையில் இருக்க, ரம்யாவிற்கு இம்சையாகிப் போனது. திலீப் இதயமோ படபடவென துடித்தது.

மாமா…”ரம்யாவை பிடி” என்னால முடியல. கை வலிக்குது சுருதி கத்தினாள்.

ரம்யாவையே பார்த்துக் கொண்டிருந்தவன் சுருதியை பார்த்து விட்டு, ரம்யாவையும் சுருதியையும் மாறி மாறி பார்த்தான்.

சுருதிம்மா “அவளை விடு” என்று திலீப் சொல்ல, ரம்யா பயத்தில் கண்களை இறுக மூடினாள். சுருதி அவளை விட, ரம்யாவை இழுத்து அவளது இரு பக்க இடையிலும் கை வைத்து துக்கி இருவரும் சுற்றி, ஒரே தாவலில் தரையை அடைந்து அவளை இறக்கி விட்டான். அவள் பயத்தில் அவனது கழுத்தில் கைகளை மாலையாக்கி இறுக பிடித்திருந்தாள்.

தரையை அடைந்த பின் கண்களை திறந்து திலீப்பை பார்த்து அவன் கழுத்தில் இருந்த தன் கைகளை அவள் எடுக்க, அவளது இடையிலிருந்து இரு கைகளையும் அவன் எடுத்தான் அவன்.

வாவ்..சூப்பர் என விகாஸூம் சுவாதியும் கை தட்டி சிரித்தனர்.

ரம்யா கண்களை சுருக்கி சுவாதியை முறைக்க, அய்யோ ரம்யா நானில்லை “இவள் தான்” என்று சுருதியை காட்ட, “ஏய் நானில்லை” என சுருதி சுவாதியை காட்டினாள். இருவரையும் முறைத்து விட்டு களைந்த ஆடையை ரம்யா சரி செய்து கொண்டிருந்தாள்.

வாயில் காற்றை ஊதி தள்ளி விசிலடித்துக் கொண்டே ரம்யாவை சீண்ட அவளருகே வந்தான் விகாஸ்.

பாப்ஸ், “எப்படி? ஜிவ்வுன்னு இருந்ததா?” விகாஸ் கேட்க, “திலீப்பை கேட்டிருந்தால் அவன் ஆமாம் என சொல்லி இருப்பானோ என்னவோ?”

ரம்யா சினமுடன் அவனை பார்த்து, “கீர்த்து” என அழைத்தாள்.

“வந்துட்டேன் ரம்யா” என்று அவள் ஓடி வர, சாருக்கு ஜிவ்வுன்னு இருக்கணுமாம் என்று ரம்யா முந்தானையை கையால் இழுத்துக் கொண்டு,

வீ..பாய்..உனக்கு ஒன்று இருக்கு என்றாள் ரம்யா.

வாவ்..சூப்பர் பாப்ஸ் என்று அவன் முத்தமிட கன்னத்தை காட்ட, திலீப் அதிர்ந்தான்.

“சாரிப்பா” என்ற கீர்த்து அவனருகே வந்து அவனை மெதுவாக தள்ள, சேற்றில் விழ இருந்த விகாஸ் கையை பிடித்த ரம்யா, “எப்படி ஜிவ்வுன்னு இருக்குதுன்னு தெரியுதா?” என கேட்டவளின் கால் செருப்பு சேற்றில் மாட்ட. அவளால் நகர முடியவில்லை.

ஏய்,” என்ன பண்ற?” பாப்ஸ்..என்னை விட்றாத விகாஸ் கதற, அய்யோ..அவர விட்ரு ரம்யா. நீயும் அந்த அழுக்கு தண்ணீல்ல விழுந்துருவ கீர்த்தனா சொல்ல, “அடப்பாவி நான் விழுந்தால் பரவாயில்லையா?” என விகாஸ் கேட்க, உங்களுக்கு ஆடை மட்டும் தான் பாழாகும். ஆனால் “ரம்யா பாவம்” என்றாள் கீர்த்தனா.

திலீப் வேகமாக ரம்யாவின் பின் வந்து, “அவன் கையை விடாத” என ரம்யாவை அணைத்தவாறு விகாஸ் கையை பிடித்து இழுக்க, இதை தூரமிருந்து பார்த்த மகிழனும் விக்ரமும் ஓடி வந்து திலீப்புடன் ரம்யா விகாஸ் விழாமல் இருக்க அரணாக நின்று, மச்சான்…இப்ப இழுங்க வேகமாக விக்ரம் சொல்லிக் கொண்டே மகிழன் கையை பிடித்து அணைகட்ட, ரம்யா திலீப் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து இழுக்க, விகாஸ் மேலே வர..மூவரும் இடித்து விக்ரம் மகிழனையும் இடித்தனர்.

மகிழன் விழாமல் பிடித்த திலீப்பை இடித்து ரம்யாவும் விகாஸூம் நின்றனர்.

யாரும் விழாமல் தப்பித்தனர். ஹப்பாடா..யாரும் விழலை என கீர்த்தனா மூச்சு வாங்கினாள். எல்லாரும் அவளை முறைத்தனர்.

அண்ணா, “உனக்கு ஒன்றுமில்லையே!” என கீர்த்தனா விக்ரமிடம் கேட்க, ஹேய், “என்னை தள்ளி விட்டு எவ்வளவு தைரியம்ன்னா சாரி கூட கேட்காமல் போவ?” விகாஸ் கீர்த்தனா கையை பிடிக்க, விக்ரம் அவனை முறைத்து பார்த்தான்.

மாமா, இவளால் தான் நான் கீழ விழுந்திருப்பேன் விகாஸ் சொல்ல, “அதான் என் அண்ணா உதவினார்ல்ல?” கீர்த்தனா சொல்ல, உன்னை நான் பயமுறுத்த தான் அழைத்தேன் ரம்யா கீர்த்தனாவிடம் முறைத்து கூறினாள்.

தெளிவா சொல்லி இருக்கலாம்ல்ல..

“நீங்க பயமுறுத்த நான் என்ன சின்னப்பிள்ளையா?” அவர்கள் சண்டை நீள, “போங்கடா டேய்” என மகிழனும் விக்ரமும் வேலையை கவனிக்க சென்றனர். திலீப் சுவாதி, சுருதிக்கு உதவி விட்டு அவர்களிடம் வந்தான்.

விகாஸ் மீண்டும் கீர்த்தனா கையை பிடிக்க, “கைய பிடிக்கிற”? என ரம்யா அவன் கையை தட்டி விட, கையை பிடித்தால் தப்பு. “இடுப்பை பிடித்து தூக்கினால் தவறில்லையா?” என விகாஸ் கேட்க, வந்து கொண்டிருந்த திலீப்பை எதிர்கொள்ள முடியாமல், கீர்த்து நீ வா..நான் போகிறேன் என்று ரம்யா சென்று விட்டாள்.  விகாஸ் கையை உதறி விட்டு கீர்த்தனாவும் ரம்யா பின் சென்றாள்.

கோவிலுக்குள் நுழைய அங்கே பொங்கல் வைக்க ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. ரம்யாவிற்கு இதெல்லாம் பார்த்து பழகியதால் நட்சத்திரா, ரித்திகாவிற்கு உதவ முன் சென்றாள்.

அவளை பிடித்த அம்சவள்ளி, அவங்களுக்கு அவங்க புருசனுக உதவுவானுக. அவங்களாக தான் பொங்கல் வைக்கணும். வேணும்ன்னா, தண்ணீர் மட்டும் அவங்களுக்கு எடுத்து கொடு என்று சொல்லு அவர் மற்ற பெண்களை பார்த்தனர்.

எங்கள் ஆடை பாழாகிவிடும். நாங்க பண்ணமாட்டோம் என்று சொல்ல, கீர்த்தனாவோ, நான் பிடிச்சு தாறேன். “நான் அவங்களிடம் வச்சுட்டு வாரீயா?” எனக்கு தூக்கி பழக்கமில்லை ரம்யா என்றாள்.

ஓ.கே என உதவினார்கள். “திலீப் அவன் அப்பாவிடமிருந்து அலைபேசியை வாங்கி கால் ஏதும் வந்திருக்கா?” என பார்க்க, ஏதுமில்லை. ஆனால் நேற்று அனுப்பிய புகைப்படத்தில் சுடிதாரில் ரம்யாவை பார்த்து விட்டு ஓரிடத்தில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அனைவரும் அவனை தான் கவனித்துக் கொண்டிருந்தனர். அதை கூற அறியாமல் ரம்யாவை கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தான் திலீப்.