தமிழ் குடும்பத்தை சுற்றி வளைத்தவர்களில் ஒருவன், திலீப் ரம்யா சின்ன பசங்களை நோக்கி வர, “டேய் நீங்க போயிடுங்க” என்று ரம்யா அந்த பசங்களை விரட்டினாள்.
அவர்களோ, அக்கா நீயும் வா போயிடலாம்.
“நானா? நான் வெளிய வந்து எங்க போறது?” என்று சிந்தித்து..போங்கடா. நாம நாளைக்கு பார்க்கலாம் என்றாள்.
நீயும் வா..என்று ஒருவன் சொல்ல, அவன் கையில பார்த்தேல்லே பெரிய கத்தி வச்சிருக்கான். நீங்க போங்க என அவள் அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க, அவளை தாக்க வந்தவனை அடித்து அவன் கையிலிருந்த கத்தியை கீழே விழச் செய்தான் திலீப்.
பசங்களுடன் பசங்களாக ரம்யாவும் அவனை ஆவென பார்த்தாள்.
ஏய்..போங்க..”என்ன வேடிக்கை?” திலீப் கேட்க, அனைவரையும் பார்த்த ரம்யா பதட்டமானாள். பெண்களை சுற்றி விகாஸ், விக்ரமும் சண்டையிட்டு சமாளிக்க, அவளை பார்த்த திலீப், “என்ன பண்ற?” போங்க என பதறினான்.
திலீப்..அவங்க..அவங்க..ள..காணோம்.
“யாரை காணோம்?” என அவன் கேட்க, அவர்களை நோக்கி இருவர் வந்தனர்.
டேய், பசங்களா வாங்க என்று ரம்யா அழைக்க, என்ன? திலீப் கேட்டான். யோவ்..வாய்யா..குட்டிப் பொண்ணு சொல்ல, ஹப்பா எல்லாமே இவளை மாதிரி பேச கத்து வச்சிருக்கா என்று அவன் எண்ணம் செல்ல, அவன் இதழ்களில் புன்னகை.
ரம்யாவோ வந்தவர்களை நோக்கி பசங்களுடன் சென்றாள். எண்ணத்திலிருந்து மீண்ட திலீப், ஏய்..என கத்திக் கொண்டே அவர்கள் பின்னே ஓடி வர, பசங்களா..ஒன், டூ, த்ரீ..என அனைவரும் குனிந்து மணலை கையில் எடுத்து..”கண்ணுல போடுங்கடா” என்று அவள் சொல்லவும் அவர்களும் திலீப்பும் நெருங்கவும் சரியாக இருந்தது.
எல்லாரும் மணலை கொல்ல வந்தவர்கள் கண்ணில்படுமாறு போட, ஊத்தவாயி மட்டும் திலீப் மீது போட்டான்.
அவர்கள் கண்ணை துடைத்துக் கொண்டிருக்க, திலீப் “அட்டாக்” என்று அவனை பார்த்து அதிர்ந்தாள்.
டேய், ஊத்தவாயி..யி..”இவர் மேல எதுக்குடா போட்ட?” நல்ல வேலை கண்ணில் அதிகமாக இல்லை என முதல்ல அவனுக கவனிக்கணும். இல்ல நம்ம எல்லார் உயிரும் போயிரும் என்றாள் ரம்யா.
திலீப் ஆடையிலும் மண்ணாக இருக்க தட்டிக் கொண்டிருந்தவன், கண்ணை மூடிக் கொண்டும் திறக்க முடியாமல் திறந்தும் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.
அவன் முடிக்கவும், விக்ரம் அண்ணா..நட்சத்திரா அக்காவும் சிம்மா அண்ணாவும் காணோம் என கத்தினாள் ரம்யா.
“இதை இவ்வளவு நேரம் கழித்து சொல்ற?” திலீப் கேட்க, “கொலைபண்ண வர்றாங்க அதை தடுக்க வேண்டாமா? சாகவாசமா பேசும் நேரமா இது? இவனுக எல்லாரும் யாரு?” சிம்மா அண்ணாவையே கடத்திட்டானுக. பெரிய கேடிகளாக தான் இருக்கணும் என்றாள் ரம்யா.
“அதை நீ சொல்றீயா?” என்னோட கண்ணு போச்சு திலீப் புலம்ப, சண்டை முடிந்து விக்ரம் ஒருவனை பிடித்து அங்கிருந்த தூணில் கட்டி வைத்தான். அவனை அடித்து, யார் அனுப்பியது என விசாரிக்க ராணி தான் என்றான் அவன்.
திலீப், அவன் கண்களை மல்லுக்கட்டி விரிக்க முயல்வதை ரம்யா பார்த்து, அவன் கையை தட்டி விட்டு அவன் தாடையை பிடித்து அவள் முகத்தினருகே இழுத்தாள். அவளது நெருக்கத்தில் இதயத்துடிப்பு ஏகத்துக்கும் அதிகமானது. அவன் தாடையை விடுவித்து அவனது கண்களை விரித்து மண்ணை அகற்ற அவள் முனைய, அவளது மூச்சுக்காற்றும், அவளின் இதழ்களில் விரிந்து வரிசையான வெண்பற்கள் ஊடானான காற்று அவன் கண்கள் மற்றும் மேனியை சிலிர்க்க செய்தது. அவன் அதில் லயித்து இருக்க, “திலீப் இப்ப ஓ.கே வா?” என ரம்யா கேட்கவும் தான் சுயம் வந்தான் திலீப்.
ம்ம்..ஓ.கே என்று அவளை நிமிர்ந்து கூட பாராது விக்ரமிடம் ஓடினான் திலீப்.
சுவாதி திலீப்பை பார்த்து, “என்னடா மனசு படபடன்னு அடிக்குதுல்ல?” எனக் கேட்டாள்.
“இல்லையே!” திலீப் சொல்ல, “அவன் நெஞ்சில் கை வைத்து இல்லையா?” என நக்கலாக சிரித்தாள். ரம்யாவும் அவர்கள் அனைவரிடமும் வந்தாள்.
அதே நேரம் காரிலிருந்து இறங்கினார்கள் தமிழினியன்- மிருளாலினி, அவள் பெற்றோர்.
மிருளாலினி தமிழினியன் கையை பிடித்து புன்னகையுடன் வருவதை பார்த்த ரம்யா அதிர்ந்து நின்றாள். பின் மிருளாலினியிடம் சென்று, நீங்க..நீங்க..என்று மிருளாலினியிடம் கையை நீட்டி கேட்டுக் கொண்டே தமிழினியனை மேலும் கீழுமாய் பார்த்து, அவர்களது இணைந்த கைகளை பார்த்து, “நீங்க சீட் பண்றீங்களா?” என மிருளாலினியை பார்த்து ரம்யா கேட்க, அனைவரும் அதிர்ந்தனர்.
தாத்தா, “இந்த பொண்ணு என்னோட மிருளாவ என்ன பேசுறா?” எனக் கோபமாக கேட்டான்.
மாப்பிள்ள..என்று திகைத்து ரம்யாவிடம் வந்த மிருளாலினி அம்மா, அவளது செயினை வெளியே எடுத்து போட்டு, “மிரும்மா இந்த பொண்ணிடம் இது எப்படி வந்தது?” எனக் கேட்டார்.
இவங்க ஹஸ்பண்டு தான் கொடுத்தார். அப்ப நான் சின்னப் பொண்ணு என்றாள் ரம்யா தமிழ்- மிருளாவை முறைத்துக் கொண்டு.
“உனக்கு எப்படி தெரியும்?” மிருளாலினி கேட்க, நீங்க நட்சத்திரா அக்காவுடன் ஊருக்கு வந்த மறுநாள் கோவில் விழாவில் வைத்து தான் சந்தித்தோம்.
“அங்கவா?” நான் உன்னை பார்க்கவில்லை.
ஆமா, பார்த்திருக்க மாட்டீங்க. ஏன்னா..அன்று கோபத்தில் தனியாக இருந்தேன். என்னை ஏமாற்றி என்னோட அண்ணி மொத்த குடும்பத்தையும் நான் அவங்க வீட்டிற்கு செல்லும் முன்னதாகவே விழாவிற்கு அழைச்சிட்டு போயிட்டாங்க. அதனால் என் அண்ணன் தனியாக இருந்த நேரம் அவனிடம் பேசிய போது, நான் அவனை விட்டு முன்னதாக போயிட்டேன்னு கோபமாக திட்டி விட்டான். அதனால் கோபத்தில் யாருமில்லா இடத்திற்கு சென்று அழுது கொண்டிருந்தேன்.
அப்பொழுது சுபி அண்ணா அங்க வந்தாங்க. அவங்க என்னிடம் சாக்லெட் கொடுத்தாங்க. நான் இருந்த கோபத்தில் அதை தட்டி விட்டேன். அது குளத்தில் விழுந்து விட்டது. மீண்டும் எனக்கு அவங்க கையில் இருந்த ஐஸ்கிரீமை கொடுத்தாங்க. அதையும் தட்டி விட்டேன். பின் தான், எதுக்கு அழுறன்னு காரணம் கேட்டாங்க. நான் நடந்ததை கூறினேன்.
அதுக்கு அவங்க, நம்ம உறவுகள் சில நேரம் நம்மை விட்டு விலகினாலும் நம்மை மட்டும் தான் நினைச்சுட்டு இருப்பாங்க. உன்னோட அண்ணா வழியில்லாமல் கோபத்தில் தான் திட்டி இருப்பார். அவரே சற்று நேரத்தில் உன்னை தேடி வந்துருவார்ன்னு சொன்னாங்க என்றாள் கண்ணீருடன் ரம்யா.
நான் அழுதேன். அதனால் என்னை சிரிக்க வைக்க முயன்றார். ஆனால் அண்ணா பக்கத்துல்ல இல்லாம எனக்கு சிரிக்க முடியல. அதான் எனக்கு இந்த செயினை கொடுத்தார். நான் வேண்டாம்ன்னு சொன்னேன்.
உனக்கு கஷ்டம் வந்தால் இந்த அண்ணா கொடுத்த செயினை தொட்டு பார். உன்னோட கஷ்டம் வந்த வழியே போயிடும்ன்னு சொன்னார். அதனால அவருக்கு ஏதாவது வேண்டுமான்னு கேட்டேன். அவர் அவருக்கு வேண்டாம்ன்னு உங்களுக்கு தான் கண்ணாடி வளையல் கேட்டார். உங்களுக்கு அவர் அன்று போட்டு விட்டது நான் வாங்கித் தந்தது தான். ஆனால் அவர் பாசத்துக்கு கொஞ்சமும் அருகதை இல்லாதவங்க நீங்க என்று அவள் சினமுடம் மிருளாலினி அருகே வர, விகாஸூம் திலீப்பும் மிருளாலினியை மறைத்து நின்றனர்.
வழிய விடுங்க. “இந்த பொண்ணு சீட்டர் சீட்டர்” என அவள் அழ, மிருளாலினி கண்ணீருடன் நின்றாள்.
தமிழினியன் செய்வதறியாது மிருளாலினியை விட, அவர்கள் கையை சேர்த்து வைத்த விக்ரம், ரம்யா முதல்ல எதையும் தெரிந்து பேசு. சுபி செத்து ஐந்து வருடமாகுது என்று கத்தினான். இதுக்கு மேல அவனை பத்தி பேசாத என்று மிருளாலினிக்கு நடந்ததை கூற, அவள் கை அனிச்சையாக அவளது செயினில் படிந்தது கண்ணீருடன்.
மிருளாலினியை பார்த்து, நான் பேசியது தவறு தான். சாரி..என்று அமைதியானாள். அவளுடைய எண்ணத்தில் அண்ணி சொன்னது சரிதான். யாருக்கெல்லாம் என்னை பிடிச்சிருக்கோ அவங்க எல்லாரும் தூரமா போயிடுறாங்க இல்ல செத்து போறாங்க. நான் ராசியில்லாதவள் தான். துரதஸ்டசாலி தான் என எண்ணினாள்.
அவள் எண்ணம் புரியாமல் ஆளாலுக்கு அவளிடம் அறிவுரை என பேச, அவளுக்கு தொண்டை அடைத்தது.
“நிறுத்துங்க” என ரம்யா கத்தி விட்டு தாத்தா அருகே வந்து, முதல்ல சிம்மா அண்ணாவையும் அவங்க பொண்டாட்டியையும் தேடப் பாருங்க. இல்ல அவங்களையும் இழக்கும்படி ஆகிடும் என்றாள்.
ஏய், “என்ன பேசுற?” விகாஸ் கோபமாக, விக்ரம் அவளை பார்த்து, “உனக்கு எப்படி தெரியும்?”
விக்ரம் கட்டி வைத்தவன் அருகே வந்த ரம்யா..அருகே இருந்த கூரான கல்லை எடுத்து கீழே அமர்ந்து அவன் காலை இழுத்து அக்கல்லால் அவன் காலிலே குத்தி..”சொல்லு? அவங்க எங்க இருக்காங்க?” என கேட்க, அனைவரும் திகைத்து அவளை பார்த்தனர்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அந்த சின்னப்பசங்களும் அவளை போல் கையில் கிடைத்ததை எடுத்து வந்து அவனை துன்புறுத்தினார்கள்.
அவன் ஒருவழியாக விசயத்தை சொல்ல, “சிம்மா, நட்சுவுக்கு என்ன? கடத்திட்டாங்களா?” மிருளாலினி கேட்க, “எதுக்காக? ஒரு வேலை அந்த கோகுலா?” தமிழினியன் கேட்க, ஆமா விக்ரம் தலையசைக்க, அவன் மட்டுமல்ல ராணியும் தான் என்றான் அவன்.
ராணியா? யார் அந்த பொண்ணு? தமிழினியன் கேட்க, சிம்மா பேட்ஜில் இருந்த பொண்ணு தான் மகாராணி.
அவ பெரிய இடத்து பொண்ணு. ஜமீன் குடும்பம். ஆனால் அவங்க நிலை மாறியதால் போலீஸ் பயிற்சிக்கு வந்திருந்தாள். எங்களிடம் மட்டுமல்ல எல்லாரிடமும் நல்லா பேசுவா. அவ எதுக்கு இப்படி சிம்மா, நட்சத்திராவை? என அவன் சிந்திக்க, “சிம்மா மாமாவை லவ் பண்ணி இருப்பாங்களோ!” சுவாதி கேட்க, “இருந்தா சொல்லியிருப்பாளே!” என்று விக்ரம் சொன்னான்.
“முதல்ல பிள்ளைகளை தேடணும்” பாட்டி சொல்ல, “பிள்ளைகளா? அர்சுகுட்டி எங்க?” சுருதி கேட்க, எங்களோட தான் கார்ல்ல வந்தான். தீபுவுடன் கார்ல்ல தான் இருக்கான் சுஜி சொல்ல, “என்னது கார்ல்லயா?” என ரித்திகா வேகமாக சுஜி வந்த காரை திறந்து பார்த்து, “பசங்களை காணோம்” என்றாள்.
“பிள்ளைகளை காணோமோ?” பாட்டி பதற, சுஜி அதை பார்த்து அழ, அர்சு.என ரித்திகா கண்கலங்க அலைபேசியை எடுத்து உதிரனை அழைத்து அனைத்தையும் சொல்ல, அவன் பதற வீட்டில் இருந்தவர்களுக்கும் விசயம் தெரிந்தது. உதிரன், ராஜா, ரகசியன், பரிதி கிளம்ப, அன்னம் அழுது கொண்டே பள்ளிக்கு வந்தார்.
எல்லாரும் வீட்டுக்கு போங்க. நாங்க அவங்களோட தான் வருவோம் என்று விகாஸ் கூற, “நானும் வருவேன்” என்று ரித்திகா கூற, மற்றவர்களும் அவர்களிடம் பேச, விக்ரமோ..எங்கே போயிருக்காங்க என கொலை செய்ய வந்த ஒருவன் கூறியதால் அவ்விடம் நோக்கி கிளம்ப, “பாட்டி” திலீப் சத்தமிட்டான்.
ஏற்கனவே எனக்கு பிடித்த அனைவரும் என்னை விட்டு போயிட்டாங்க. இனி யாரையும் இழக்கக்கூடாதுன்னு எண்ணிய ரம்யா, வெள்ளெலி..எல்லாரையும் பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு போ என்று குட்டி பசங்களை போக சொல்லி அவள் விகாஸ் காரின் டிக்கியில் யாருக்கும் தெரியாமல் ஏறி மறைந்து கொண்டாள்.
மற்றவர்கள் கிளம்ப, எதிரே அன்னம் முந்தானையால் கண்களை துடைத்துக் கொண்டே வருவதை பார்த்த சுருதி அம்மா, நீங்க வாங்க. பசங்க எல்லாரும் போயிருக்காங்க. நம்ம பிள்ளைங்க பத்திரமா வருவாங்க என அவரை காரில் ஏற்றி அன்னம் வீட்டிற்கு தான் சென்றனர்.
சிம்மா குடும்பத்தை தேடி வந்த கார் நேராக நம்ம ஜோடிகளுக்கு நடந்த திருமண மஹாலின் ரோட்டில் நின்றது. ஆனால் யாரும் உள்ளே செல்லவில்லை. எதிர்திசையில் அனைவரும் பதுங்கி பதுங்கி சென்றனர்.
உள்ளே சிம்மா மணமகன் அறையில் மயக்கத்தில் இருந்தான். நட்சத்திராவை கட்டிப் போட்டு வைத்திருந்தனர்.
சற்று நேரத்தில் மயக்கத்தில் இருந்து விழித்த சிம்மா, பட்டு வேஷ்டி சட்டையில் இருந்தான்.
“என்ன நடக்குது?” என்று தலையை பிடித்த சிம்மா..”ஸ்டார்..ஸ்டார்..” என கத்தினான். மணக்கோலத்தில் அலங்காரம் செய்து சிம்மா முன் வந்தாள் மகாராணி.
ரா..ராணி, “நீ இங்கேயா?” சிம்மா கேட்டுக் கொண்டே இருவர் ஆடையையும் பார்த்தான்.
ஏய், ”என்ன செய்ற?” சிம்மா கத்த, ஓ…மை லவ்லி கமான்டோ கத்தாதீங்க. இதை நான் முன்பே செய்திருக்கணும். காத்திருந்தது தவறாக போச்சு என்று அவள் புன்னகைத்தாள்.
“என்னோட ஸ்டார் எங்க? அவள என்ன செஞ்ச?” சிம்மா கேட்க,
செட் அப். நோ ஸ்டார். “பிரின்சஸ் இங்கிருக்கும் போது தூரத்தில் இருக்கும் அந்த ஸ்டாரை தேட உங்களுக்கு பைத்தியமா ராஜா?” எனக் கேட்டாள்.
“தூரமா? என்ன சொல்ற?” அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா உன்னை சும்மா விட மாட்டேன் கர்ஜித்தான் சிம்மராஜன்.
“தூரமோ? பக்கமோ?” அவ உங்களுக்கு வேண்டாம் ராஜா. நம்ம பெயரில் கூட பொருத்தம் பக்காவா இருக்கு. “நான் உங்களை எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா?”
“காதலா? ச்சீ..எனக்கு திருமணம் முடிந்தது உனக்கு தெரியாதா?” அவன் கேட்க, ராஜா..உங்களுடையது அவசர திருமணம். அதனால நாம கல்யாணம் பண்ணிக்கலாம். நாம தான் பொருத்தமாக இருப்போம்.
எனக்கு திருமணம் முடிந்தது. அதுவும் நான் வெகுவருடங்களாக காதலித்த என்னோட ஸ்டார். எங்களுக்கு பையனும் இருக்கான் என சிம்மா சொல்ல, ஆமா இருந்தான். ஆனால் இனி இருக்க மாட்டான்.
“என்ன சொல்ற?” சிம்மா சீற்றம் மிகுந்தது.
ம்ம்..கமெண்டோ டார்லிங். உங்களுக்குள் ஏதும் நடக்காமல் பிறந்த அவனுக்காக நீங்க வருந்த வேண்டாம். இனி நம்ம வாழ்க்கைக்கு இடையில உங்க மனைவியும், பையனும் வர மாட்டாங்க.
அந்த குட்டிப்பையன் இன்னும் சில மணி நேரத்தில் உலகத்தை விட்டே போயிடுவான். அப்புறம் உங்க மனைவி..அதான் ஸ்டார் அவ அந்த காதல் பைத்தியக்காரன் கோகுலுக்கு சொந்தமாகப் போறா என்று அவள் சொன்ன நிமிடம் அவன் கழுத்தை பிடித்திருந்தான் சிம்மா.
அவள் திணறினாலும் “டேய்..” கத்தினாள்.
பத்து பேர் வந்து சிம்மாவை அடித்து கட்டிப் போட முயல அறையை விட்டு வெளியே வந்த சிம்மா தன் மனைவி குழந்தையை பார்த்து அதிர்ந்தான்.
கண்ணீருடன் நட்சத்திரா திருமணக் கோலத்தில் மணமேடையில் கட்டி வைக்கப்பட்டிருந்தாள். அருகே கோகுல் அமர்ந்திருந்தாள். அழுது சோர்ந்த அவன் ஸ்டாரின் கண்கள் சிம்மாவை பார்த்ததும், “மாமா..” என கதறலுடன் கைக்கட்டை கழற்ற முயன்றாள். சிம்மாவும் வேகமாக அவளை நோக்கி வர, “வேண்டாம் மாமா..”என நட்சத்திரா கத்தினாள்.
“ஸ்டார்” சிம்மா அதிர, அவள் முன் எறிந்து கொண்டிருந்த அக்னிக்கு நேராக அர்சுவை கட்டி வைத்திருந்தனர். சிம்மா பதற, “மாமா..நம்ம அர்சு..”என கதறி அழுதாள் நட்சத்திரா. அர்சுவின் கை, கால் விரித்து மேலேயுள்ள விரிப்புடன் கட்டி இருந்தனர்.
சிம்மாவும் நட்சத்திராவும் அவர்கள் பேச்சுக்கு இணங்கவில்லையெனில் அர்சுவை கட்டி இருக்கும் கயிற்றை அவிழ்த்து விடுவார்கள் என அவர்களின் அடியாள் சொல்ல, மாலையுடன் பட்டுவேஷ்டி சட்டையுடன் கோகுல் புன்னகையுடன் நட்சத்திராவை பார்த்து அமர்ந்திருந்தான்.
அவனை பார்த்து அவளுக்கு பயம் பிடிக்க, சிம்மாவிற்கு வெறியானது.
ராணி அவனருகே வந்து, இப்ப முதல்ல அவங்க மேரேஜ் பண்ணி முதலிரவுக்கு போகட்டும். அப்புறம் நாம..என்று அவள் வெட்கத்துடன் பேச, சிம்மா அவளை ஓங்கி அறைந்தான்.
ஆனால் அவள் அவனிடம் அடியை வாங்கிக் கொண்டு, ம்ம்..இதுக்காக தான் கமென்டோ டார்லிங் ஏங்கி இருந்தேன்.
“உன் கை பட்ட இடம் என்னை ஏதோ செய்யுதே!” என பினாத்தியவள், சிம்மா கையை இழுத்து அவள் கன்னத்தில் வைத்து ஆழ்ந்து சுவாசித்து, அவன் கையை அவளது கழுத்தில் வைக்க, சட்டென அவளை தள்ளி அருவருப்பாக பார்த்தான்.
நட்சத்திரா இதை காண முடியாமல், உதட்டை பற்களால் கடித்து வலியை பொறுக்க முயன்றாலும் காதல்பட்ட அவள் மனம் வலிக்க, சிம்மாவை நிமிர்ந்து கூட பாராது கண்ணீரை கொட்டிக் கொண்டிருந்தாள்.
“என் பொற்கொடியே!” நீங்க அழக்கூடாது என கோகுல் அவள் கட்டை அவிழ்க்க, “அடேய் பைத்தியக்காரா என்ன செய்ற?” என்று ராணி கத்தினாள்.
ஏய், “அவள எதுக்கு கட்டிப் போட்ட?” பாரு என்னோட கொடிக்கு கை வலிக்குது என்று அவள் கையையும் பிரித்து விட்டு நட்சத்திரா கையில் கோகுல் ஊதினான்.
நட்சத்திரா வேகமாக அவனை விட்டு விலக, அந்த பொடிப்பையன் கயிற்றை அவிழ்த்து விடுங்கடா என்று ராணி கத்தினாள்.
இல்ல..இல்ல..வேண்டாம். நான் போகலை என்று நெஞ்சை கையால் அழுத்திக் கொண்டே அமர்ந்தாள் நட்சத்திரா.
கொடி, “யார் இந்த பையன்? அழகா தொங்குறான் பாரு” கோகுல் சொல்ல, அவளோ மயக்கத்தில் இருக்கும் தன் மகனுக்கு ஏதும் ஆகி விடுமோன்னு பயத்தில் இருந்தாள்.
“அம்மா” அர்சு மயக்கத்திலே முணங்க, “கண்ணா” என்று நட்சத்திரா எழுந்து கண்ணீருடன் மகனுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தாள் அழுது கொண்டே.
அழும் சத்தம் கேட்டு திகைத்து கோகுலை பார்த்த சிம்மாவும் நட்சத்திராவும் அதிர்ந்தனர்.
“கோகுல்” நட்சத்திரா அழைக்க, கொடி, “நீ எதுக்கு அவனுக்கு முத்தம் கொடுத்த?” அவனுக்கு வேண்டாம். எனக்கு என்று பாலகன் போல் கன்னத்தை கோகுல் நட்சத்திராவிடம் காட்டினான்.
சிம்மாவோ, “இப்ப என்ன பண்ணனும்?” என ராணியிடம் கேட்க, நட்சத்திரா கண்ணீருடன் சிம்மாவை பார்த்தாள். அவன் கண்களை மூடி திறந்தான். “ஆனால் மனைவியின் மனம் எப்படி ஏற்றுக் கொள்ளும்?”
இப்ப என்ன? இவங்க முதலிரவின் பின் நம்ம கல்யாணம் என்று சொல்ல, இதுவரை படியின் ஓரத்திலிருந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்த மகிழன் கோபமாக அலைபேசியை அவன் சர்ட்டில் வைத்துக் கொண்டு கீழிறங்கி வந்தான்.
“மகிழ்” நட்சத்திரா, சிம்மா அதிர, அட என்னோட சின்ன கொழுந்தன். “வாங்க வாங்க.. கல்யாணத்துல்ல நீங்க இல்லாம எப்படி?” என அவனருகே ராணி வந்து அவன் கையை பிடிக்க, “ச்சீ.. டர்ட்டி..டர்ட்டி..” என்றான் அவன்.
“டர்ட்டி இல்ல கொழுந்தா?” ப்யூட்டி..நான் எவ்வளவு அழகா இருக்கேன் என ராணி கண்சிமிட்ட, உவாக்..கருமம், என்ன மூஞ்சி அண்ணா. பார்க்கவே சகிக்கலை.
“டேய் கல்யாணம் மாப்பிள்ள நீ சொல்லு? இவ அழகா?” கோகுலை பார்த்து மகிழன் கேட்க, அந்த ஆன்ட்டி கேவலமா இருக்காங்க அண்ணா என்றான் அவன். இதை வீடியோவாக பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் சிரித்தனர்.
“பைத்தியக்காரா? வந்த வேலையை ஒழுங்கா செய்றீயா?” ராணி மேடையில் ஏறி கோகுல் தலையில் கொட்டினாள்.
“எதுக்கு என்னை அடிச்சிட்டே இருக்க?” நீ பார்க்க தான் கேவலமா இருக்க. அதே போல மோசமா தான் செய்ற. என்னோட கொடியை பார்த்து கத்துக்கோ கோகுல் சொல்ல, அட்டகாசமாக சிரித்தான் மகிழன்.
“என்னை சீண்டாதீங்கடா?” என நட்சத்திரா முடியை பிடித்து அவள் இழுக்க, “ஸ்டார்” என்று சிம்மா வர, அதற்குள் ராணி மீது சாணித்தண்ணீர் கொட்டப்பட்டது. எல்லாரும் அன்னாந்து யாரென பார்க்க, மகிழனை பின் தொடர்ந்த ரம்யா தான்.
மேல் மாடியில் இருந்து மறைந்து பார்த்துக் கொண்டிருந்த ரம்யாவிற்கு அவள் நட்சத்திரா முடியை பிடிக்க வந்ததே கோபம். அருகே இருந்தது தண்ணீர் என தான் கொட்டினாள். ஆனால் அது சாணித்தண்ணீர் என்று ஊற்றிய பின் தான் தெரிந்தது.
அய்யோ,“நாத்தம்..நாத்தம்..
”கோகுல் மூக்கை மூட, “டேய் அவளை பிடிங்க” என்று அதை துடைத்துக் கொண்டே கத்த, “இவள் எப்படி வந்தாள்?” விகாஸ் கேட்க, ரம்யாவை விரட்டினார்கள்.
“நான் உள்ளே போறேன்” என்று விகாஸ் சொல்ல, ரம்யாவை நெருங்கிய ஒருவன் மீது பக்கெட் வந்து விழுந்தது. அவன் திரும்பி பார்க்க சுருதி இருந்தாள்.
“என்னது? இவ எப்ப வந்தா?” திலீப் கேட்க, அவளையும் விரட்டினார்கள். மகிழனும் சிம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்து அக்னி அருகே வர, புடவையில் இடுப்பில் ஏற்றி சொருகிய ராணி, நட்சத்திரா கழுத்தில் கத்தியை வைத்தாள். அதில் பயந்து ரம்யா, சுருதியும் நின்று விட, அவர்களையும் சிம்மா, மகிழனையும் சேர்த்து கட்டினார்கள்.
“என்ன அறுத்துறவா? விளையாடுறீங்களோ?” ராணி சீற்றமுடன் நட்சத்திரா கழுத்தின் அருகே கத்தியை நெருக்க, கோகுல் அவளை அடித்தான்.
அடச்சே, “போடா..” என்று அவனை ஒரே தள்ளாக தள்ளி, இவ செத்துட்டானா எனக்கு பிரச்சனை இருக்காது என்று அவள் சொல்ல, அவள் கையில் வந்து பாய்ந்தது மரக்குச்சியால் செய்யப்பட்ட அம்பு. அதில் பயந்து அவள் விலக, அதே நேரம் மேடையின் பின்னிருந்து ஒரு பொண்ணால் இழுத்து செல்லப்பட்டாள் நட்சத்திரா.
“யாரு?” என்னை விடுங்க. “என்னோட பையன்?” அவள் அழ, அக்கா..நான் தான் என்றாள் சுவாதி. “அந்த அம்பு?” நட்சத்திரா கேட்க, அது ரித்து அண்ணி தான் என்றான்.
“என்னது? அவளா? எல்லாரும் எங்களோட சேர்ந்து மாட்டிகிட்டீங்க?” என அவள் புலம்ப, இருங்க..என்று சுவாதி அவளை அமைதிபடுத்தினாள்.
அவர்கள் முன் வந்தவர்கள் சுற்றி வளைத்தனர். “அக்கா” என்று சுவாதி நட்சத்திரா காதி எதையோ கூற தன் மருண்ட பார்வையால் சுவாதியை பார்த்தாள்.
“என்னடா? உங்களோட வரணுமா?” வாங்கடா என சுவாதி முன் செல்ல, நட்சத்திரா பயத்துடன் சென்றாலும் நம்பிக்கையுடன் சென்றாள்.
“தப்பிச்சிட்டு இப்ப பாரு கெத்தா ஏதோ நிகழ்ச்சிக்கு வர்ற மாதிரி வாறா பாரு?” என்று மகிழன் சொல்ல, “அவ அப்படிதான்” என்று சுருதி சலித்துக் கொண்டாள்.
சிம்மா, மகிழன், ரம்யா, சுருதியை சேர்த்து கட்டி வைத்திருந்தனர்.
மாமா..கவலைப்படாதீங்க. வெளிய நம்ம மாமாக்கள் இருக்காங்க என்ற சுருதி சிம்மா காதருகே சொல்ல, “ஏய்..என்னடி பண்ற?” ராணி அவளிடம் வந்தாள்.
என்னோட மாமா. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் சுருதி சொல்ல, சிம்மா மகிழனை பார்க்க அவன் சுருதியை எறித்துக் கொண்டிருந்தான்.
ஓய்..மகிழன் சத்தமிட, அய்யோ “சும்மா..சும்மா..” சுருதி சமாளிக்க, அதான பார்த்தேன் என் கமெண்டோ அருகே எந்த பொண்ணையும் நெருங்க விட மாட்டேன் என்று ராணி கூற, சுவாதி சிரித்தாள்.
ஏய், எதுக்குடி சிரிக்கிற? என்று துப்பாக்கியை ராணி சுவாதியிடம் நீட்டி கேட்க,
“நீ போலீஸ் தானா?” மாமா..இவங்க உங்க பேட்சுன்னு விக்ரம் சொன்னாரு. ஆனால் துப்பாக்கியை சரியாக பிடிக்க கூட தெரியல என்று சுவாதி கேலி செய்ய, “என்னடி சொன்ன?” அவள் கோபத்தில் எகிறினாள்.
துப்பாக்கியை இப்படி பிடிக்கக்கூடாது என்று அவள் அசந்த நேரம் அதை பிடுங்கிய சுவாதி, இப்படி பிடிக்கணும் என்று சரியாக பிடித்து, இப்படி சூட் பண்ணனும் என்று பல்ப்பை சூட் செய்தாள். அது சிதறியது.
“ஆத்தாடி” சுருதி சொல்ல, அனைவரும் அதிர்ந்தனர்.
“என்னோட பொண்ணா இது?” சுவாதி அப்பா திகைத்து பார்க்க, “மச்சான் இதை எப்ப இவளுக்கு கத்து கொடுத்தீங்க? இது ரொம்ப டேஞ்சராச்சே!” ராஜா கேட்க, “நான் எதுவுமே செய்யலையே?” என்றான் விக்ரம்.
“அப்புறம் எப்படி இப்படி ஒரே சார்ட்டில் சூட் பண்றா?” உதிரன் கேட்க, “அதான?” என்று பரிதி விக்ரமை பார்த்தார்.
“நிஜமாகவே நான் எதுவும் சொல்லித்தரலை? எங்களுக்கு பேசவே நேரம் கிடைக்கல. இதுல நான் எப்படி இதை கற்றுக் கொடுப்பது?” அவன் கேட்க, தமிழ் அவனிடம், “இன்னும் எவ்வளவு நேரம் மறைந்திருக்கணும்?” என்று கேட்டான்.
“என்னோட பிளானே போச்சு? இப்ப என்ன செய்றது?”
கொஞ்சம் காத்திருங்க. அவ செய்றதை பார்த்தா ஏதோ பிளான்ல்ல பண்ற மாதிரி தான் இருக்கு என்றான் திலீப்.
“இவகிட்ட என்ன பிளானாக இருக்கும்?” விக்ரம் கேட்க
முதல்ல அர்சுவை காப்பாற்றணுன்னா அந்த நெருப்பை அணைக்கணும். அதை தான் பார்க்கப் போறான்னு நினைக்கிறேன் என்று ரகசியன் சொல்ல, பார்க்கலாம் என்றான் தமிழ்.
“அந்த அம்பு யார் விட்டதாக இருக்கும்?” விகாஸ் கேட்க, தெரியலையே. ஆனால் நம்ம வீட்ல உள்ளவங்க யாரோ தான் அங்க இருக்காங்க.
“இந்த பொண்ணுங்களுக்கு பயமே இருக்க மாட்டேங்குது” பரிதி சொல்ல,
ம்ம்..அவங்க எந்த அளவு சென்டிமென்ட்டா இருக்காங்களோ அந்த அளவு பயமில்லாமலும் இருப்பாங்க என்றார் திலீப் அப்பா.
ஷ்..”யாராவது சத்தம் போட்டீங்க?” என்று சுவாதி சுருதியை மிரட்ட, “அடியேய் அவ தான் மாமா, அண்ணியை கடத்திட்டு வந்தா? என்னை மிரட்டுற?” சுருதி பாவமாக கேட்க,
நீ எப்படியும் போ. நான் வந்தது உங்க யாருக்காகவும் இல்ல. என்னோட தீபு குட்டிக்காக. “அவ எங்க?” அவ மட்டும் எனக்கு போதும் என்றாள் சுவாதி.
“இவங்க உனக்கு வேண்டாமா? அப்புறம் எதுக்கு இந்த கைக்காரிய காப்பாற்ற நினைச்ச?” என்று நட்சத்திராவை காட்டி அவள் கேட்க, மேம்..இந்த பொண்ணு அவங்கள அழைச்சிட்டு தப்பிக்க பார்க்க நினைச்சது என்று ஒருவன் சுவாதியை போட்டு விட்டான்.
“என்னது? தப்பிக்கவா?” இவளை இவர் காப்பாத்தக்கூடாதுன்னு தான் தான் இவளை இழுத்து சென்று கொல்ல பார்த்தேன் என்று அவளது ஆடையிலிருந்து கத்தியை வெளியே எடுத்தாள் சுவாதி.
வாவ்..சூப்பர். இந்த ஒன்னுத்துக்கும் ஆகாதவனோட சேர்ந்ததுக்கு பதில் உன்னோட முதல்லவே சேர்ந்திருந்தால் எப்பவோ என் டார்லிங்கை அடைந்திருப்பேன் என்று சொல்வேன்னு நினைச்சியா? என்று ராணி கேட்க,
நினைக்கலை தான். எனக்கு தான் உன் எண்ணம் தெரியுமே! என்றாள் சுவாதி.
சரி தான். “ஆனால் பிரஸ்ஸோட வந்தா என்ன செய்வ?” சுவாதி கேட்க, ஏற்கனவே ஒருவன் இந்த வேலையை பார்த்துட்டு தான் வந்திருக்கான் என்று சுவாதி மகிழனை பார்க்க, அனைவரும் அதிர்ந்தனர்.
அடிப்பாவி, “மாட்டி விட்டுட்டியே!” என்று மகிழன் பீதியில் இருக்க, “அடியேய் உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு?” என சுருதி சுவாதியை வசைபாட,
“நம்ம சுவா என்ன பண்ணீட்டா?” என தமிழ் கேட்க, “அவ சரியான ரூட்ல தான் போறா?” நாம எந்நேரமும் உள்ளே போக தயாராக இருக்கணும். தீபு இங்கு எங்கும் இல்லைன்னா ஏதாவது அறையில தான் இருப்பா. அவளுக்கு பின் அர்சுகிட்ட போவா பாருங்க என்று விக்ரம் சொன்னான்.
எல்லாரும் விக்ரமை பார்த்து விட்டு, அமைதியாக கவனிக்க, “பிரஸ்ஸா? டேய் அவனை இழுத்துட்டு வாங்க” என ராணி கத்த, மகிழன் கட்டை அவிழ்த்து விட்டு ராணி முன் நிறுத்த, துப்பாக்கியை கொடு என சுவாதியிடம் வாங்க வந்தவளை தடுத்த சுவாதி, “தீபு எங்க?” என துப்பாக்கியை முதுகில் சொருகினாள்.
“பாரேன் ரௌடி மாதிரி பண்றா?” ராஜா சொல்ல, விக்ரம் புன்னகையுடன் அவ என்னை போலவே செய்றா? காபி பண்றா. என்னை ஏற்கனவே பார்த்ததாக சொன்னால்.. அதை கவனித்து தான் எல்லாமே செய்றா.
“இது வேறையா?” சுவாதி அப்பா கேட்க, எல்லாரும் அவரை பார்த்தனர்.
டேய், அந்த குட்டிப்பொண்ணை அழைச்சிட்டு வந்து இவகிட்ட கொடுங்க. ஆனால் அதுக்கு முன் அந்த குட்டிப்பையனை நீ கொல்லணும் என்று அர்சுவை கை காட்டினாள் ராணி.
“என்னது?” நட்சத்திரா அதிர்ந்து, சுவாதி வேண்டாம்.. வேண்டாம்..என அழுது கொண்டே கெஞ்சினாள்.
சிம்மா அமைதியாக இருப்பதை பார்த்து, மாமா அவளை நிறுத்துங்க. நம்ம அர்சுவை..என நட்சத்திரா அழுதாள். சிம்மா நட்சத்திராவை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. சுவாதியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
பார்த்தேல்ல.. “என்னோட டார்லிங்கிற்கு நீயும் உன் பிள்ளையும் வேண்டாம்” ராணி சொல்ல, சிம்மாவை சீற்றமுடன் பார்த்தாள் நட்சத்திரா. சிம்மா மனதை திடப்படுத்தி அமர்ந்திருந்தான்.
எல்லாரும் ரெடியா இருங்க. நாம தான் பொண்ணுங்க வந்ததை பார்க்கல. ஆனால் அவங்க நம்மை பார்த்த தைரியத்தில் தான் எல்லாமே செய்றாங்க? கண்டிப்பா தீபுவை பார்க்காமல் சுவாதி எதையும் செய்ய மாட்டாள் என்றான் விக்ரம்.
சரி, அர்சுவை நானே கொல்கிறேன். ஆனால் நான் தீபுவை பார்த்தால் தான் செய்வேன் என்று ரம்யாவை பார்த்தாள்.
“எனக்கு ஒரு சந்தேகம்? இவ்வளவு நேரம் ரம்யா அமைதியா இருக்காளே!” என திலீப் கேட்க, எல்லாரும் அவனை முறைத்து பார்த்தனர்.
அய்யோ, கை ரொம்ப வலிக்குது. ஒரு கையை மட்டுமாவது அவிழ்த்து விடுங்க ரம்யா சொல்ல, எல்லாரும் திலீப்பை பார்த்தனர்.
“என்ன வாய்டா உன்னிது?” விகாஸ் கேட்டான்.
“எதுக்கு தப்பி ஓடவா?” ராணி கேட்க, “தப்பிக்கணுமா? அப்படின்னா என்ன?” அறியாத பிள்ளை போல் அவள் பேச, உன் நடிப்புக்கும் அளவிருக்கு ராணி சொல்ல, சத்தியமா..என சத்தியம் செய்ய இரு கைகளையும் இழுத்தாள் ரம்யா.
“அப்புறம் எதுக்கு என் மேல அதை ஊத்தின?” ராணி கேட்க,
அதுவா அக்கா.. நான் ஒரு ஆர்வக்கோளாறு தான். என் ஆடையை பாருங்க. நான் இங்கே தான் என பள்ளி பெயரை கூறி ரம்யா கதையளக்க..
நிறுத்திடி..காதுல்ல இரத்தம் வந்திரும் போல என்ற ராணி, “இப்ப என்ன ஒரு கையை அவிழ்கணும். அவ்வளவு தான?” எனக் கேட்டாள்.
அக்கா, அப்படியே இரு கையையும் அவிழ்த்து விட்டால் நான் பள்ளிக்கே போயிருவேன் என்றாள்.
“உனக்கு என்னை பார்த்தால் இனா வானான்னு தெரியுதா?” ராணி கேட்க, இல்லக்கா “நான்னா அன்னா” ன்னு தெரியுது.
அது என்ன “நான்னா அன்னா?” என்று அவள் கேட்க, நல்ல அக்கா. அதான் நான்னா அன்னா..என்று சிரித்தாள் ரம்யா.
சரி, நீ ஸ்கூல் பொண்ணு. ஒழுங்கா ஸ்கூல் பார்த்து போ என்று ரம்யாவை வெளியே அனுப்ப அவள் சுவாதியை பார்த்துக் கொண்டே வெளியே வந்து, “ஹப்பா..முடியல” என்று நெஞ்சை பிடித்து அமர்ந்தாள்.
பின் கதவின் பின் மறைந்து ஓட்டை வழியே ராணியை பார்த்து நக்கலாக சிரித்தாள் ரம்யா.
“என்னடா பண்ணுறானுக?” ஒண்ணுமே புரியல விகாஸ் மண்டையை பிய்ப்பது போல் கேட்க, அர்சு கிட்ட சுவாதி கஷ்டப்பட்டு போக வேண்டாம். அந்த லூசே வழி காமிச்சிருச்சு விக்ரம் சிரித்தான்.
“பொண்ணுங்க போனதால தான் இவ இப்படி ஃபன்னா பேசுறா?” நாம இப்ப உள்ளே போனால் அதுவும் என்னை மட்டும் அவ பார்த்தா எல்லாரையும் போட்டுத் தள்ளீட்டு போய்கிட்டே இருப்பா என்றான் விக்ரம்.
ஏன் மாம்ஸ், “உங்க மேல அவளுக்கு அவ்வளவு காண்டா?” விகாஸ் கேட்க, “இருக்காதா பின்னே!” சிம்மாவுக்காக நாங்க அடிக்கடி முட்டிப்போம். அதை விட அவளுக்கு பயிற்சிக்காக ஒரு கேஸ் கொடுத்தாங்க. அதுக்குள்ள போய் அவளை மொத்தமாக குழப்பி விட்டு வந்துட்டேன் என்றான் விக்ரம்.
“அவங்க காதல் உங்களுக்கு தெரியுமா?” ராஜா கேட்க, சிம்மாவை அவளுக்கு பிடிக்கும் தான். ஆனால் காதலிப்பான்னு நான் எதிர்பார்க்கலை.
“அது என்ன பிடிக்கும்?” காதலிக்கிறான்னு தெரியல.
நான் கூட அவ அவள் அவனிடம் உரிமையோடு இருப்பதை பார்த்து அண்ணாவாக தான் பழகுறான்னு நினைச்சேன்.
சிம்மா அவளிடம் அப்படி தான் பழகினான். அவன் மூஞ்சிய பாருங்க. இவ்வளவு அமைதி? எதுக்குன்னு நினைக்கிறீங்க? அவ மேல கொலைகோபத்துல்ல இருக்கான். சுவாதி ஏதோ செய்யப் போறான்னு தான் அமைதியா இருக்கான்.
நட்சத்திரா, அர்சுவுக்கு ஏதாவது ஆச்சு. இதுவரை யாரும் பார்க்காத சிம்மாவை தான் பார்ப்பீங்க என்றான் விக்ரம். தன் மகன் நிலையை எண்ணி கண்கலங்க அவனையும் அவர் குடும்பத்தையும் பரிதி பார்த்துக் கொண்டிருந்தார். உதிரன் அவர் கையை ஆதரவாக பற்றினான்.
“நட்சா? இப்படி அழ மாட்டேல்லே? உதிரன் கேட்க, அவ பிள்ளை எந்த நிலையில இருக்கான்? அப்புறம் அழாமல் எப்படி இருப்பா?” சுருதி அப்பா கேட்க, அதில்லை..”சிம்மாவை பிடிச்சிருக்குன்னு தான ராணி ஆட்டம் போடுறா?”
ஷ்..என்றான் திலீப்.
ஒருவன் தீப்தியை அழைத்து வர, அவள் அழுது கொண்டிருந்தாள். “தீபு” என சுவாதி எமோஸ்னல் ஆன நேரம் அவள் கையிலிருந்து துப்பாக்கியை பிடுங்கினாள் ராணி.
இதோ..உன் தீபு பத்திரமா இருக்கா. முதல்ல இவனை கொல்லு என்று ராணி சொல்ல, பெரிய விசில் சத்தம் கேட்டு அனைவரும் மேல் பகுதியை பார்த்தனர்.