அத்தியாயம் 48

சுருதி ராஜாவை பார்த்து, மாமா..என சத்தமிட, ஏய்..என்று ஹரிணி அவள் வாயை கை கொண்டு மீண்டும் அடைக்க, ராஜா இருவரையும் பார்த்தான். அவன் பார்க்கவும் அமைதியாக தலையை கவிழ்ந்து கொண்டாள் ஹரிணி.

அலைபேசியை அணைத்து விட்டு, சுருதி அருகே ராஜா வந்து அமர்ந்தான். அவள் ஹரிணியையும் அவனையும் பார்க்க, “சுருதி நீ ஏதோ செய்யப் போறன்னு கேள்விப்பட்டேனே!” என்றான்.

“என்ன மாமா? லவ்வா?” என சுருதி அவனை பார்க்க, அவன் புன்னகையுடன் மகிழை பார்த்து உன்னோட வேலையவே மறந்துட்ட போல என்று கேலியாக கூற, “வேலையா?” என்று சுருதி அவனை பார்த்தாள்.

“அதான் டிசைனிங் வொர்க் ஆரம்பிக்க போறீயாமே!” அவன் கேட்க, அப்பா தான சொன்னார். அவரை..அப்பா என கத்த வந்தவளது வாயிலே அடித்தான்.

ஆவ்..மாமா..வலிக்குது. சரி, “என்ன பிளான் வச்சிருக்க?” அவன் சுருதியிடம் கவனமாக பேசினாலும் அவன் கண்களோ ஹரிணியை தான் பார்த்துக் கொண்டிருந்தது.

அதை பார்த்த சுருதி, சரிதான். சரி மாமா, நீங்க பேசுங்க. நான் வாரேன் என்றாள்.

உன்னிடம் தான பேசிட்டு இருக்கேன் அவன் சொல்ல, மாமா..இதெல்லாம் ரொம்ப ஓவர். பேச்சு என்னிடம் தான். ஆனால் வீச்சு வேறெங்கோ இருக்கே! என கேலியுடன் அவளும் பேசினாள்.

சரி, “சொல்லு” என்று அவள் புறம் திரும்பினான்.

இப்பொழுதைக்கு நான் டிசைன்ஸ் செய்து ஆடை தயாரிப்பு பணியில் இறங்கப் போகிறேன். மற்றதை அப்புறம் பார்த்துக்கலாம் என்றாள்.

“சிங்கிளாவா? வொர்க்கர் வச்சு பார்க்கப் போறீயா?”

வொர்க்கிற்கு ஆள் வைத்து பார்க்க, நான் என்ன கம்பெனியா ஆரம்பிக்கப் போகிறேன்.

“தனியா உன்னால செய்ய முடியுமா?” ஆச்சர்யமாக கேட்டான்.

முடியுமே!

சரி, உனக்கு வாய்ப்பு நான் தாரேன். இதுவரை மார்க்கெட்டிற்கே வராத நியூ டிசைன் ஆடை ஒன்றை கச்சிதமா தயாரி. அதை நம்ம கம்பெனி மற்றும் மாலில் இருக்கும் ஆட்கள் மூலம் மாடலாக ஏற்பாடு செய்யலாம்.

நம்ம கம்பெனியில இப்ப நியூ பிராஜெக்ட் ஒன்று போயிட்டு இருக்கு. அதை யாராவது நியூ மாடல் வைத்து அட்வர்டைஸ் பண்ணலாம்ன்னு இருக்கோம். உனக்கு எக்ஸாம்ஸ் முடியவும். ஆரம்பி..

மாமா, “என்ன பிராஜெக்ட்?  அது தெரிந்தால் அதற்கு ஏற்றவாறு ஆடையை தயாரிக்கலாமே!”

ம்ம்..என்று சுருதியை உறுத்து பார்த்தான்.

“ஏன் மாமா? இப்படி பாக்குறீங்க?”

“நிறைய ஆடை உன்னால தயார் செய்ய முடியுமா?” நீ வேணும்ன்னா உன்னோட ப்ரெண்ட்ஸையும் சேர்த்துக்கோ..

“என்ன பிராஜெட்?”

மால்ல..மாடர்ன் ஆடைகள் அனைத்தும் இருக்கு பட் காஸ்ட்லியா தான் பார்த்தோம். மத்தியரக மனிதர்கள் போடும் ஆடைகளை குறைந்த விலைக்கு போடும்படி தயாரிக்கணும்.

மாமா, மால்ல குறைந்த விலையா? அவள் கேட்க, ஏன் செய்யக் கூடாது. இது பிஸினஸ்ல்ல ஒரு டிரிக் தான்ம்மா.

“யாரு ஐடியா மாமா? ஒரு பொண்ணோட ஐடியாவா?” சுருதி கேட்க, ஆமா, கலெட்க் பண்ண பிராஜெக்ட்ல்ல அந்த பொண்ணு சொன்னதும் சரியாக பட்டது.

“யாரு மாமா அது?” சுருதி டோன் மாற, ஹேய்..”என்ன?” அந்த பொண்ணுக்கு மேரேஜ் ஆகிடுச்சு ஆகலைன்னாலும் உனக்கென்ன பிரச்சனை? என்று அவன் கேட்டுக் கொண்டே ஹரிணியை பார்க்க, அவள் தலையை கூட நிமிர்த்தாது அமர்ந்திருந்தாள்.

இவளது புதுவித நடவடிக்கை அவள் உண்மை தெரிந்ததால் என்றாலும் ராஜாவிற்கு கஷ்டமானது. அவளை பார்த்த அவன்..நாம அப்புறம் பேசலாம் என்று நகர்ந்தான்.

ராஜாவை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த சுருதி அருகே இருந்த ஹராவை பார்த்து அதிர்ந்தாள். ஹரிணி அழுது கொண்டிருந்தாள்.

“இப்ப எதுக்குடி அழுற?”

தெரியல சுருதி. என்னால மாமாவை ஃபேஸ் பண்ண முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு. அவர் என்னை பற்றி கேவலமா நினைச்சுட்டு இருப்பார்ல்ல சுருதி. இப்ப எல்லாரும் என்னை அப்படி தான நினைப்பாங்க அவள் கேட்க,

சுருதி அவளை அணைத்து அதெல்லாம் ஒன்றுமில்லை ஹரா. எல்லாமே சரியாகிடும் என்றாள். தள்ளி நின்று அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜா.

“இவள் சரியில்லையே?” அவன் எண்ண, அதே நேரம் ஹரிணிக்கு அவனிடமிருந்து அழைப்பு வந்தது. சுருதி அதை பார்த்து ஹரிணியுடமிருந்து பிடுங்க, இருவரும் மாறி மாறி சண்டையிட, அலைபேசியில் ஸ்பீக்கர் மோடு ஆன் ஆனது.

இருவர் சண்டையையும் பார்த்து, அருகே வந்தவன்..குரலை கேட்டு நின்று ஹரிணியை பார்த்தான் ராஜா.

ஹா..”எங்க இருக்க? சொல்லாமல் எங்க போன? செம்மை போர்யா?” என்று அவன் குரல் கொடுக்க, இவளுக்கோ அலைபேசியை எடுக்க கைகள் நடுங்கியது.

அலைபேசியை எடுத்து அவளருகே வைத்து விட்டு ராஜா சுருதி அருகே அமர்ந்தான்.

மாமா..சுருதி அழைக்க, ஷ்..என்று அமைதியாக அவளை இருக்க சொன்னான். சுருதியும் ராஜாவும் ஹரிணியையே பார்க்க, அவளால் பேச முடியல.

அவனோ..ஏய்..”இருக்கியா? இல்லையா? அட்டென் பண்ணா பேச முடியதா? என்னடி பண்ற? என்னை விட உனக்கென்ன முக்கியமான வேலை?” என்று அவன் வார்த்தைகள் முதலில் அன்பாக ஆரம்பித்தாலும் இப்பொழுது காரசாரமாக விழுந்தது. ராஜா கோபமாக அலைபேசியை முறைத்தான்.

காதலித்த ஹரிணியின் மனமோ அவன் வார்த்தைகளால் நெஞ்சு எறிந்தது. ஏற்கனவே அவனை பற்றி எல்லாவற்றையும் ராஜா தான் போட்டு உடைத்து விட்டானே! இப்பொழுது இவனும் பேச, பின்னிருந்து..ஹே..இதுக்கு தான் சொன்னேன். அவளெல்லாம் சரிப்பட்டு வர மாட்டா என்று குலைந்து பேசும் பெண்ணின் குரல் கேட்க, கோபத்தை விட அழுகை பொங்கிக் கொண்டு வந்தது ஹரிணிக்கு.

அவளது அழுகையை எதிர்பார்க்காத ராஜாவிற்கு சினம் மேலிட்டது. அவளது அலைபேசியை தூக்கி உடைத்து விட்டு, “போயும் போயும் இவனுக்காக அழுற?” என்று ராஜா கத்த, உறக்கம் கலைந்து அனைவரும் வெளியே வந்தனர்.

“மாமா” சுருதி சத்தம் போட்டாள். ஹரிணி அழுது கொண்டே நகர, அவளது கையை பிடித்த ராஜா, “அவனை திட்டுவன்னு பார்த்தா அழுதுட்ட இருக்க?” கோபமாக கேட்டான்.

அவன் என்னை காதலிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அவனை தானே நான் காதலித்தேன். அவன் மீது எல்லையற்ற நம்பிக்கை வைத்திருந்தேன். அவன் அதை மொத்தமாக அழிச்சிட்டான். “அவனிடம் கோபப்பட்டு என்ன பயன்?” என்னால இப்ப அழ தான முடியுது. நான் தான ஏமாந்தேன் என்று அழுது கொண்டே ராஜாவை பார்க்க, அவன் மனமும் காயப்பட்டு போனது.

அவள் கைகளை ராஜா விடுவிக்க, அவள் அழுது கொண்டே உள்ளே ஓடினாள். ராஜாவின் கண்ணீர் அவனுக்கு ஹரிணி மீதான காதலை பறைசாற்றியது. இதை பார்த்து சுருதி அம்மா தான் அதிர்ந்து ராஜாவிடம் வந்தார்.

அவன் அவர் கையை தட்டி விட்டு அங்கிருந்து கோபமாக சென்றான். ராஜா..அவர் அதிர்ந்து நின்றார்.

ராஜாவின் அப்பாவும் சுருதியும் அவன் பின் சென்றனர்.

உள்ளே சென்ற ஹரிணி பின்னே அவள் அம்மா, அத்தைகள், பெரியம்மா, சித்திகள், பாட்டி சென்றனர்.

ஹரா..அவள் அம்மா சத்தமிட, கட்டிலில் ஓடி வந்து விழுந்து அழுது கொண்டிருந்த ஹரிணி, “அம்மா” என அவரை அணைத்து, அவன் சீட்டர். என்னை ஏமாத்திட்டான். இவன் இவ்வளவு மோசமானவனா இருப்பான்னு நினைக்கவேயில்லை என்று ஏங்கி அழுதாள்.

போதும். “அழுகையை நிறுத்திறியா?” சுவாதி கோபமாக சத்தமிட்டாள்.

சுவா, “என்னால முடியல” ஹரிணி அழுதாள்.

“என்னடி முடியல? அவனது கேவலமான செயலுக்கு பின்னும் அவன் உனக்கு நல்லவனா தெரியுறானா? அன்று மட்டும் ராஜா அண்ணாவும், உன்னோட ப்ரெண்டும் வரலைன்னா..நீ இப்ப என்ன ஆகி இருப்ப? கொஞ்சமாவது யோசிச்சியா? இப்ப கூட அவனை நினைச்சி மறக்க முடியாம முட்டாளா இருக்க?” என்று சுவாதி அதிகமாக திட்ட, அந்நேரம் ஓடி வந்தாள் சுருதி.

“மாமா” என்று ரகசியன் விகாஸ் முன் நேராக வந்து மூச்சிறைத்து நின்றாள்.

ஏய், “என்னாச்சு?” விகாஸ் கேட்க, மாமா..அவன் நம்ம ஹராவோட ப்ரெண்டை கடத்தி இருக்கான். அவ தான் ஹராவுக்கு வீடியோ அனுப்பினால்ல. அவனுக்கு தெரிஞ்சு போச்சு.

ராஜா மாமாவும், பிக்ப்பாவும் அந்த பொண்ணை தேடி போயிருக்காங்க. அவளை இந்த ஊர்ல தான் கடத்தி வச்ச்சிருக்கான். அவன் ஹரா வந்தா தான் அந்த பொண்ணை உயிரோட விடுவேன்னு சொல்லி அந்த பொண்ணு அலைபேசியில் இருந்து கால் செய்து மிரட்டினான்.

ஹரா, இதை கேட்டு திடுக்கிட்டு..”எங்க? எங்க இருக்கான்?” என அவள் பதற, “நீ வர வேண்டாம் ஹரா” என்ற ரகசியன், வா வீ என்று அவர்கள் செல்ல, அசந்து உறங்கிக் கொண்டிருந்த விக்ரம் அலைபேசி ஒலிக்க, நால்வரும் விழித்தனர்.

விக்ரம், அலைபேசியில் சுவாதி எண்ணை பார்த்து, “என்ன பேபி?” என்று தூக்கக்கலக்கத்தில் அருகே இருப்பவர்களை கூட கவனிக்காது கேட்டாள்.

அவள் பதட்டமாக..விக்ரமிடம் விசயத்தை சொல்ல, “எங்க இருக்காங்க?” என்று விக்ரம் எழுந்தான்.

“என்னாச்சுப்பா?” அன்னம் கேட்க, உன்னோட அண்ணனுக மட்டும் வரட்டும். மத்த யாரும் வர வேண்டாம். வராம பார்த்துக்கோ. ஹரிணியை மட்டும் தயாரா இருக்க சொல்லு. நான் பிக் அப் பண்ணிக்கிறேன் என்று அலைபேசியை வைத்து விட்டு, சிம்மா அறைக்கதவை தட்டினான்.

அன்னம், பரிதி, கீர்த்தனா அவள் பின் வந்து, “என்னாச்சு விக்ரம்? யாருக்கு என்னாச்சு?” அன்னம் பதறினார். உதிரன் வெளியே வந்தான்.

அம்மா..அமைதியா இருங்க. டேய் சிம்மா, எனக்கு இந்த இடம் புதிது. “சீக்கிரம் வா” என்று அவனை அழைக்க, விக்ரம் நான் வாரேன். “எங்க போகணும்? என்ன பிரச்சனை?” உதிரன் கேட்க, சிம்மா வெளியே வந்து, “என்னடா?” என்று விக்ரம் கேட்டான்.

டேய் அங்க என்று சுவாதி சொன்னதை சொல்ல, சிம்மா யோசனையுடன் அந்த பொண்ணை அங்க அழைச்சிட்டு போறது சரியா இருக்கும்ன்னு தோணலடா விக்ரம்.

அவள வச்சே அவனை பிடிக்கலாம் என்று விக்ரம் சொல்ல, சரி அப்ப நாம முதல்ல போவோம். மச்சான் நீங்க அந்த பொண்ணை பண்ணை வீட்டிற்கு சென்று அழைச்சிட்டு வாங்க என்று சிம்மா உதிரனிடம் சொன்னான்.

ஓ.கே என்று உதிரனும் கிளம்பினான். “அர்சு குட்டி எங்க?” சிம்மா கேட்க, அவன் பக்கத்து பங்கஜம் வீட்ல தான் இருக்கான். இப்பவே பிள்ளைய அழைச்சிட்டு வந்திடுறேன் என்று அன்னம் நகர, நட்சத்திராவும் வெளியே வந்து அன்னம் பின் சென்றாள்.

கீர்த்தனா பரிதி எண்ணை வாங்கி சுவாதி, சுருதி மற்றவர்களிடம் பேசினாள்.

யாருமில்லா சரிவுப் பாதையில் கீழுள்ள ஓர் பங்களா வீட்டினுள் ராஜாவும் அவன் அப்பாவும் நுழைந்தனர்.

நிலா.. நிலா..எங்க இருக்க? ராஜா கத்த, அப்பங்களா இருட்டினுள் மூழ்கி இருந்தது. பங்களாவின் எல்லா சன்னல் பகுதியும் கட்டையால் அடைத்து வைத்திருந்தனர். எவ்வித வெளிச்சமும் இல்லாமல் இருந்தது.

“என்னப்பா இப்படி இருக்கு?” எனக்கு சரியா படலப்பா ராஜாவின் அப்பா சொல்ல, அப்பா இந்த பொண்ணு நம்ம ஹராவுக்காக எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கு. வாங்கப்பா என்று அவன் மேலும் முன்னேற, “எங்க தேடுறது?” என்று அவன் அப்பா கேட்க, அப்பா நீங்க வலப்பக்கம் போங்க. நான் இந்த சந்துப்பகுதிக்கு போறேன் என்று அவர்கள் முன்னேற, நிலாவின் கத்தலில் அப்பங்களாவே அதிர்ந்தது.

சத்தம் வரும் இடத்தை கண்டறிய முடியாமல் அப்பாவும் மகனும் புரியாமல் விழித்தனர். அப்போது கருப்பு உடையுடனும் உடல், முகம் என முழுவதும் மறைக்கப்பட்ட உருவம் ஒன்று ராஜா அப்பா மூக்கில் கை வைத்து அழுத்த,  அவர் மயங்கினார். அவரை இழுத்து சென்று கட்டி வைத்தது அவ்வுருவம்.

ராஜா மீண்டும் நிலா பெயரை கூறி அழைக்க, அவள் அவனிருக்கும் பக்கம் ஓடி வந்தாள்.

“ராஜா” என்று அவள் சத்தம் கேட்கவும், “எங்க இருக்க?” என்று அவன் பதட்டமாக கேட்க, சிம்மா, விக்ரம் அங்கே வந்தனர். அவர்கள் பின்னே உதிரனும் ஹரிணியும் வந்தனர்.

ராஜா வெளிய போங்க. நானும் வாரேன் என்று நிலா சொல்ல, நீ வா என்றான் அவன்.

“சொன்னா கேளுங்க ராஜா” என்று அவள் கத்தினான்.

காரணமிருக்குமோ என அவனும் அவ்விடம் விட்டு மீண்டும் ஹால் பக்கம் வந்தான். நிலா அவன் வந்த இடத்திலிருந்து எதிர்த்திசையிலிருந்து பல காயங்களுடன் வாயில், தலையில் இரத்தமுடன் வந்தாள்.

நிலா, “என்னாச்சு?” ராஜா பதற, அப்பங்களாவின் விளக்குகள் ஒளிர நிலா அவனை கட்டிக் கொண்டாள்.

நிலாவிற்கு என்னமோ என எல்லாருக்கும் முன் அவளை பார்க்க வந்த ஹரிணி இருவரும் கட்டிக் கொண்டு நிற்பதை பார்த்து அதிர்ந்தாள். அதில் நிலாவின் உணர்வுப்பூர்வமான கண்களை மூடி ராஜாவின் உணரும் அணைப்பை பார்த்து மேலும் அதிர்ந்தாள் என்றால் நிலா விழித்து இவர்களுக்கு எதிரே நின்ற ஹரிணியை பார்த்து நக்கலாக சிரித்து, உதட்டசைத்தாள்.

“என்ன சொல்றா?” ஹரிணி உற்றுப்பார்க்க, “உன்னோட மாமா எனக்கு தான்” என்றாள். இதில் ஹரிணிக்கு அவளை மீறியும் கோபம் வந்தது.

சிம்மா, விக்ரம், உதிரன் அவளிடம் வர, அவள் வேகமாக ராஜா அருகே வந்து இருவரையும் விலக்கி விட்டு, நிலா கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

ஹரிணி, “அவ உனக்காக என்ன செஞ்சிருக்கா? நீ என்ன பண்ற?” என ராஜா ஹரிணியை திட்ட, “மாமா” என்று அவள் நிலாவை பார்க்க, அவள் பாவமாக ராஜாவை பார்த்தாள்.

ஏன்டி, “என்னை பார்த்து அப்படி சிரிச்ச?” ஹரிணி கேட்க, ஏம்மா..அந்த பொண்ணே நிக்க முடியாம கஷ்டத்துல இருக்கு. “இப்படி பேசுற?” உதிரன் ஹரிணியை கேட்க, ராஜா அவளை முறைத்தான்.

ஹரு, “உனக்கு என்னாச்சு?” நிலா அக்கறையுடன் கேட்பது போல் நடித்து ஹரிணி கையை பிடித்து அவளது நகத்தால் காயப்படுத்தினாள்.

“நிலா” ஹரிணி சத்தமிட,

ஹரிணி போதும். “அவ உனக்கு என்னமோன்னு பயப்படுறா? அவ எந்த நிலையில இருக்கா? நீ  இப்படி அவள கஷ்டப்படுத்துற? நீ இப்படி இருப்பன்னு நினைக்கல ஹரா” என்றான் ராஜா.

அவனை முறைத்த ஹரிணி, “சொல்றதை கேளு மாமா. அவ நடிக்கிறா”. என்னோட ப்ரெண்டு நிலா இவள் இல்லை என்று அழுதாள்.

அவன் கோபத்தில் சட்டென, உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. “அதான் இப்படி நடந்துக்கிற?” என்ற ராஜா ஹரிணியை கண்டுகொள்ளாமல், “அப்பா” என சத்தமிட்டான்.

ராஜா, “அப்பா பின்பக்கம் வழியாக வெளிய போயிட்டார்” என்ற நிலா, “அவன நான் கொன்னுட்டேன் ராஜா” என்று மீண்டும் அவனை அணைத்து அழுதாள்.

“அதை நாங்க பார்த்துக்கிறோம்மா” என்று சிம்மா சொல்ல, சார்..ஆனால் அவன் அதோட தப்பிச்சிட்டான் என்றாள். விக்ரமிற்கு இன்னும் ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அவன் சுற்றும் முற்றும் பார்க்க, ஹரிணி அமைதியாக நின்றாள்.

ஹரா, போ..கார்ல ஏறு என்று ராஜா அவள் முகத்தை கூட பாராது நிலாவை தாங்கிச் செல்ல, இன்றே எங்களுக்குள் எல்லாம் முடிந்து விடும் என்று நிலா வாயசைத்து கூற, அப்பொழுதும் ஹரிணியிடம் பதிலில்லை.

வெளியே வரவும் உங்க கார்ல்ல ஏறிக்கவா சார்? ராஜாவுடன் விக்ரம், சிம்மா வந்த காரில் ராஜாவுடன் ஏறினாள். உதிரன் தனியே காரை எடுக்க, எல்லாரும் ஒவ்வோர் யோசனையில் கிளம்பினர். ஆனால் எல்லாரும் ஹரிணியை மறந்து போனார்கள்.

“ஹரிணி அவர்களுடன் சென்று விட்டாள்” என உதிரன் எண்ணியிருக்க, அவர்கள் கார் கிளம்பவும் கதறி அழுதாள் ஹரிணி. அவள் முன் வந்து நின்றான் அவள் காதலித்தவன்.

“நீ..நீயா?” என அவள் நகர, மயக்கத்தில் இருந்த ராஜாவின் அப்பாவை அவன் ஆட்களுடன் வந்து போட்டான்.

“மாமா” என்று ஹரிணி அவரிடம் செல்ல இருந்தவளை பிடித்து இழுத்து, அவளை அடித்தான். அவள் அழுது கொண்டே “நிலாவை என்ன செஞ்ச? இவ யாரு?” என்று கேட்டாள்.

இவ நிலா தான். உன்னோட ப்ரெண்டா இவள் அறிமுகமானது உன் ராஜா மாமாவிற்காக தான். ஆனால் அவள் என்னை எல்லார் முன்னும் காட்டிக் கொடுப்பான்னு எண்ணவில்லை. அவளோட திட்டம் தான் எல்லாமே! இன்று எப்படியும் உன் மாமாவை அடைந்து விடுவாள். சரி அவள் என்னமும் செய்யட்டும்.

“உன்னோட புருசனுக்கு நீ கொடுக்க வேண்டியதை கொடுக்கணும்ல்ல?” என்று அவளை இழுத்து அவள் இதழ்களை வலுக்கட்டாயப்படுத்தி அடைந்தான். ராஜா அப்பாவிற்கு விழிப்பு தட்ட, அவர் அந்நிலையை பார்த்து தன் மகனை தேடினார்.

ஆனால் அங்கே கார் நின்று விட, சிம்மா வெளியே சென்று காரை தள்ள, அவனால் தனியே தள்ள முடியவில்லை. விக்ரமும் வெளியே இறங்கி காரை சிம்மாவுடன் சேர்ந்து தள்ளினான். டிரைவர் சீட்டில் ராஜா அமர்ந்து காரை எடுக்க முயன்று கொண்டிருந்தான். அருகே அவன் தோளில் சாய்ந்து நிலா அமர, ராஜாவிற்கு ஒருமாதிரி ஆனது. அவனுக்கு ஹராவின் விரக்தியான கோப முகம் கண் முன் வந்தது.

உதிரன் காரை பார்க்க, அவன் கார் முன்னே சென்று கொண்டிருந்தது.  பின் சீட்டிலும் அவனருகேயும் யாரும் இல்லாததை பார்த்து அதிர்ந்து..விக்ரம், சிம்மா என பதட்டமாக ராஜா அழைக்க, சட்டென அவன் தோளில் இருந்து எழுந்த நிலா அவன் கையை இறுக பற்ற, அவன் நிலாவை முறைத்து மேலும் அழைத்தான்.

“அவர்கள் தள்ளியும் காரை எடுக்க முடியாததால் ஆட்கள் யாரும் இருக்காங்களா?” என பார்க்க சென்றனர்.

“அவங்க வர மாட்டாங்க ராஜா” என்று அவன் தொடையில் அவள் கையை வைக்க, அவன் தவறு புரிந்து உதிரன் காரை பார்க்க, அவனோ இவர்கள் கார் நின்றது கூட தெரியாமல் சென்றே விட்டான்.

ஏய், கையை எடு. உனக்கு அசிங்கமா இல்லை என ராஜா கூற, “என்னோட ராஜாவை நான் தொடும் போதும் அசிங்கம் எப்படி இருக்கும்?” எனக் கேட்க, அவன் அதிர்ந்து “லூசுத்தனமா பேசாத” என்றான்.

நான் லூசு தான். உன்னால தான் லூசாகிட்டேன் என்று எழுந்து அவன் மடியில் அவள் அமர, அவளை தள்ளி விட்டான் ராஜா.

கதவை திறக்க ராஜா முயல, அதை திறக்க முடியாது. லாக் பண்ணிட்டேன். எல்லாமே நமக்காக தான். யாரும் தொந்தரவு செய்யக் கூடாதுல்ல என்று அவளது டாப்பை அவள் கழற்ற முயல, கையை பிடித்து நிறுத்திய ராஜா அவளை ஓங்கி அறைந்தான். அவனால் கதவை திறக்க முடியவில்லை.

“ஒழுங்கா மரியாதையா கதவை திற” ராஜா சொல்ல, அந்த ஹரிணியோட ப்ரெண்டாகிறதுக்குல்ல நான் பட்ட கஷ்டம் சும்மா இல்லைன்னா அவளை வைத்து உங்களை நெருங்க அரும்பாடுபட்டேன். அன்று அவன் அவளை எடுத்துக்க தான் அழைத்து சென்றான். நான் அவளுக்கு உதவ போகலை. உங்களது நல்ல அபிப்ராயத்தை வாங்கி உங்களை என் பக்கம் திருப்ப எண்ணினேன்.

அவ உங்க மாமா பொண்ணு தானன்னு சாதாரணமா நினைச்சேன். ஆனால் அவளை நீங்க காதலித்துக் கொண்டிருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதான் அன்று விட்டு இன்று அவளை அவனிடம் விட்டு வந்துட்டேன்..

இல்லை..இல்லை..நீங்க உங்க ஹராவை விட்டு வந்துட்டீங்க. பாவம்ல்ல அவள்..

அச்சோ..இன்னொரு விசயம். அவன் விருப்பத்துக்கு அவள் இணங்கவில்லை என்றால் கொலைகூட செய்ய தயங்க மாட்டான். ஆனால் அவனுக்கு வேண்டியதை எடுத்துட்டு தான் செய்வான்.

ம்ம்..பரவாயில்லை. அதான் அவ அப்பாவும் கூட இருக்காரே!

அவளோட அப்பாவா?

ஆமா, உங்களோட வந்தார்ல்ல?

ஓ…காட். அவரு என்னோட அப்பாடி என்று அவன் மேலும் பதறினான்.

ராஜா அலைபேசி வைபிரேட் ஆக, இவளுடன் பேசியவாறு சிம்மாவிற்கு மெசேஜ் அனுப்பினான் ராஜா.

“நான் நினைச்சேன் சிம்மா” என்ற விக்ரம் காரருகே வந்து, கார்க்கண்ணாடியை உடைத்தான் ஆக்ரோசமாக.

டேய், “உன்னோட காரை எதுக்கு இப்படி உடைக்கிற?” நிலா சாதாரணமாக கேட்க, காரின் ஓரத்தில் இருந்த கைவிலங்கை எடுத்து ராஜா நிலா கையுடன் சேர்த்து மாட்டி விட்டான்.

விக்ரம் அவன் காரை அசால்ட்டாக திறக்க, ராஜா மட்டும் வெளியே வந்தான். அவ்வூரின் போலீஸார் அவ்விடம் வந்து நிலாவை கைது செய்தனர்.

ஆனால் பங்களாவிலோ ராஜாவின் அப்பாவை கட்டி வைத்திருந்தனர்.

டேய்.”.என்னை விடுடா” என்று ஹரிணி சத்தம் மட்டும் அதிகமாக கேட்க, அக்கட்டை பிரிக்க முயன்று கொண்டிருந்தார். அந்நேரம் ராஜா காரிலிருந்து இறங்கி ஓடி வந்தான்.

அப்பா, ஹரா அவன் சத்தம் கொடுக்க, அவளின் கதறல் கேட்டு துடித்து போனான் ராஜா.

நீங்க அந்த பொண்ணை பாருங்க. நாங்க இவங்கல்ல கவனிச்சுக்கிறோம் என்று சிம்மா, விக்ரம் சொல்ல, வேகமாக படியில் ஏறி அவ்வறையை உடைத்து ராஜா உள்ளே சென்றான்.

அங்கே அன்று போல் ஆடையற்ற நிலையில் ஹரிணியை சோர்ந்த முகத்துடனும் கட்டி வைத்து அவள் மீது படர்ந்திருந்தான் அவன்.

அன்று மயக்கத்தில் இருந்தாள் அவள். ஆனால் இன்று தன் இயலாமையில் துடித்து சோர்ந்த அவளை பார்த்த ராஜா தன் மீதே குற்றம் சாட்டி தன் சட்டையை கழற்றி அவனை அவளிடமிருந்து பிரித்து இழுத்து, அவள் மீது சட்டையை போட்டு விட்டு, அவனை வெறிகொண்டு அடித்தான்.

“மாமா” என்ற ஹராவின் பேச்சு வாய்க்குள் சென்றாலும் அவள் கண்கள் மெதுவாக மூடியது. அக்குரலை கேட்ட ராஜாவால் அவனை விடாது அடிக்க அவனோ மயக்கத்தில் சென்று விட்டான்.

“ஹரா” என்று ராஜா அருகே வர, மாமா..என்று அவள் கண்களை மூடிக் கொண்டு, “என்னை கொன்று விடு” என்று அவள் சொல்ல, உடைந்து போனான்.

உனக்கு ஒன்றுமில்லை ஹரா..அவன் தேற்ற, அன்று நான் இதே நிலையில் நான் என்னை அறியாமல் இருந்தேன். ஆனால் இன்று என் நிலை எனக்கு நன்றாக தெரியுது மாமா. ரொம்ப அசிங்கமா இருக்கு என்று அவள் கண்ணீர் வடிய, ஹரா..,அவன் உன்னை..ராஜா கேட்க, இல்ல மாமா அவனை தடுத்து நான் சோர்ந்த போது தான் நீங்க வந்துட்டீங்க. இதே நிலையில் என்னால உங்க முகத்திலோ, நம்ம குடும்பத்தினர் முகத்திலோ விழிக்க முடியாது என அழ கூட தெம்பில்லாமல் சோர்ந்து கிடந்தாள்.

இல்ல ஹரா, நீ என்னோட ஹரா. உன்னை நான் எப்படி தப்பா எண்ணுவேன்? அந்த பொண்ணு உனக்காக உதவியதால் தான் இவ்வளவு தூரம் சிந்திக்காமல் வந்தேன். ஆனால் என் முட்டாள்தனத்தால் தான் உன்னை அவன்…என்று அவன் ஆடையை அவளுக்கு போட்டு விட்டு கதறி அழுதான்.

மாமா, “உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா? ஏன்?” அவள் கேட்க, “ஏன்னா..நீ என்னோட ஹரா” என்று அவளது உள்ளங்கையில் மென் முத்தம் ஒன்றை பதித்து விட்டு அவளை தூக்க, மாமா வேண்டாம். என்னால முடியாது. பயமா இருக்கு. இங்கேயே என்னை விட்ருங்க.

“நீ என்னோட ஹரா. உன்னை விட்டு நான் எங்க போறது? நீ இல்லாமல் என் வாழ்க்கைக்கு அர்த்தமில்லை” என்று ராஜா கூற, “ஏன் மாமா?” முதல்லவே எனக்கு புரிய வச்சிருந்தா. எனக்கு நீயும் உனக்கு நானுமாய் வாழ்ந்திருக்கலாம்.

“இப்ப என்னவாம்?” உன் படிப்பு முடியட்டும். உனக்கு ஒன்றுமில்லை. நான் இருக்கேன் என்று அவன் அவளை துக்கி வந்தான். அவள் அப்பொழுதும் கண்ணை விழிக்கவில்லை.

“தேங்க்ஸ் மாமா” என்று அவள் கண்ணீருடன் அவன் மார்பில் சாய்ந்து கொண்டு அவள் கைகளை அவன் கழுத்தை சுற்றிக் கொண்டாள்.

அவர்களை பார்த்து எல்லாரும் நிம்மதியாக, “எங்க அவன?” சிம்மா கேட்டான்.

மயக்கத்தில் இருக்கான் என்று அவன் சொல்ல, அவனையும் அங்கிருந்து போலீஸ் ஆட்களுடன் இழுத்து வந்தான் விக்ரம்.

காரினுள் அவளை குழந்தை போல் மடியில் போட்டு மருந்திட்டுக் கொண்டிருந்தான் ராஜா.

கண்களை விழித்து ஹரிணி பார்க்க, ஹரா என்று அவன் கண்கள் கலங்கியது.

மாமா..சாரி என்றாள்.

“ஒன்றுமில்லை ஹரா” என்று அவளை அணைத்துக் கொண்டான்.

மாமா, “டயர்டா இருக்கு” அவள் சொல்ல, சாரிம்மா என்று நகர்ந்த ராஜா கன்னத்தில் முத்தமிட்டாள் ஹரிணி. அவர்கள் வீட்டிற்கு சென்று அவளை படுக்கையில் போட, அனைவரும் அவளை பார்த்து பதறி வந்தனர்.

எனக்கு ஹராவை பிடிக்கும். அவளை நான் காதலிக்கிறேன். அவள் உடல்நிலை சரியான பின் அவள் கூறும் பதிலுக்காக காத்திருக்கேன் என்றான்.

“எனக்கு ஓ.கே மாமா” என்றாள் ஹரிணி.

“என்ன?” சுருதி அம்மா நெஞ்சை பிடிக்க, “அம்மா ஓவரா நடிக்காத. நான் மகிழை தான் கட்டிப்பேன்” என்றாள் சுருதி.

எல்லாரும் புன்னகைத்தனர்.

அப்ப அண்ணா..திருமணத்தோட எங்களுக்கும் கல்யாணம் செய்து வச்சிருங்க என்று ராஜா அமர்ந்தான்.

“திலீப்டா?”

அவனுக்கு பொண்ணா கிடைக்காது. அவன் திமிருக்கு யாரையாவது பிடிச்சு கட்டி வையுங்க என்றான் ராஜா.

டேய்..அவன் அம்மா பதற, அதெல்லாம் வேண்டாம். ரகா, ராஜா திருமணத்தை முடிக்கலாம் என்ற தாத்தா, திலீப்பை பார்க்க, “அண்ணா இருக்கும் போது ராஜாவுக்கு எப்படி திருமணம் செய்வது?”

“எனக்கு பிரச்சனையில்லை” என்று திலீப் அமர்ந்தான்.

என்னமும் செஞ்சு தொலை.

“இப்பவாது சொல்றானா பாரு?” சுவாதி மனதினுள் திட்டினாள்.

அதான் ஒரு வருசம் இருக்கே! பார்க்கலாம் என்று பாட்டி கூற, அதில் சிலர் சென்னை கிளம்ப தயாராக சென்றனர்.

ராஜா, ரகசியன், தாத்தா, பாட்டி, சுவாதி, ரசிகா, கீர்த்தனா, ஹரிணி அவள் பெற்றோர் தவிர அனைவரும் தயாராகி வந்தனர். ரம்யாவை பார்த்துட்டு போகலாம் என்று விகாஸ் சொல்ல, அனைவரும் அவனை பார்த்தனர்.

“நாங்களும் பள்ளி வரை வரலாமா?” கீர்த்தனா விக்ரமிடம் கேட்டாள்.

“ஓ.கே வாங்க” என்று நட்சத்திரா, ரித்திகா, சுவாதி..என பொண்ணுங்களும் கிளம்பினர்.

மாலை நேரம் பள்ளி முடிந்து அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர். வாட்ச்மேனிடம் திலீப் பேச, அவர் தலைமையாசிரியையிடம் கேட்டு அனைவரையும் உள்ளே விட்டார்.

அனைவரும் ஹாஸ்ட்டல் பக்கம் செல்ல, சரவணன் திலீப்பையும் மற்றவர்களையும் பார்த்தான்.

“எல்லாரும் ரம்யாவை பார்க்க வந்தீங்களா?” எனக் கேட்டான்.

ஆமா, எங்க இருக்கா? என்று திலீப் தன் கண்களால் எல்லா பக்கமும் அலச, அவ ஹாஸ்ட்டலுக்கு அப்பொழுதே கிளம்பிட்டா. அங்க தான் என்று அவன் கையை காட்டி, “இன்னுமா இவள் போகலை? இந்த பொடிபயலுகள..”என்று சரவணன், அதோ அங்க தான் இருக்கா. வாங்க என்று அவன் முன்னே ஓடினான்.

ரம்யா, “இவனுகளோட என்ன பண்ணீட்டு இருக்க?” சரவணன் கேட்க, “ஏய்..நீ கிளம்பலையா?” உனக்காக பாரு வெயிட் பண்ணீட்டு இருக்காடா ரம்யா அவனிடம் சொல்ல, நான் நேரமாகும்ன்னு ஏற்கனவே சொல்லீட்டேன். அவள் வெயிட் பண்ணுவா என்றான்.

“என்னது? வெயிட் பண்ணுவாளா? உனக்கு அவ காதலிக்கிறான்னா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வெயிட் பண்ணுவான்னு சாதாரணமா இப்படி சொல்ற?”

சரா, “நீ சரியில்லை. நேரமாகும்ன்னு கிளம்ப சொல்லி இருக்கணும்ல்ல?” ரம்யா கோபமாக கேட்டாள்.

“அதனால என்ன? அவன் கேட்க, என்னவா? ரொம்ப நாள் உனக்காக இப்படி வெயிட் பண்ண மாட்டா”. புரிஞ்சுக்கோ. இல்லை நீ தான் கஷ்டப்படணும். “யாரையும் அலட்சியமா எண்ணாத!” அதுவும் பாருவை..

சரவணன் யோசனையுடன் சரி, நான் கிளம்புகிறேன். அங்க பாரு. ஒரு பேமிலியே வந்திருக்காங்க என்று அவன் செல்ல,

அக்கா, “ஆப்பிள் சார் பேமிலியா?” என்று ஒரு பையன் கேட்க, ஆமாடா. “இப்ப எதுக்கு வந்திருக்காங்கன்னு தெரியலையே?” என்றவள் கீர்த்தனாவை பார்த்து புன்னகையுடன் எழுந்தாள்.

அக்கா, அந்தாளிடம் நீ பேசக் கூடாது. “உனக்கு புரியுதா?”

சும்மா இருடா ஓணா..என்று அவர்களை நோக்கி நடந்து கீர்த்தனாவை அணைத்துக் கொண்டாள்.

“உங்க பாசமழைய அப்புறம் வச்சுக்கோங்கப்பா” என்ற விகாஸ், நாங்க சென்னை கிளம்புகிறோம். இந்தா என்று ஒரு அலைபேசியை நீட்டினான்.

“எனக்கா? ரம்யா கேட்க, ஆமா..ப்ரெண்ட்ஸூன்னு சொல்லீட்டு எப்படி பேசாமல் இருப்பது?” என்று கேட்டான்.

“என்னது ப்ரெண்ட்ஸா?” மகிழன் கேட்க, ஆமா பிக் சீனியர், நாங்க ப்ரெண்ட்ஸ்  என்று இருவரும் ஒருகுறியை போட, “என்னடி பண்ற?” ரித்திகா கேட்டாள்.

க்யூட்டி, “நீயுமா கிளம்புற?” ரம்யா கேட்க, “நானா?” நான் கிளம்பினேன் என் மாமா என்னை ஒருவழி செய்து விடுவார் என்று ரித்திகா கிளம்புபவர்களை அறிமுகப்படுத்தினாள்.

திலீப்பும் கிளம்புவதை பார்த்து வேகமாக அவளது புத்தகப்பை அருகே ஓடி சென்று ஒரு காகிதத்தை எடுத்து வந்தாள்.

சுவாதி அவளருகே வந்து அதை பார்த்து சிரித்தாள்.

ரம்யா நேராக திலீப்பிடம் வந்து, அந்த காகிதத்தை நீட்டினாள். அவன் போட்டிருந்த கிளாஸை கழற்றி விட்டு அதை பார்த்து, “என்ன இது?” என அவளிடம் கேட்டாள்.

இது ஒரு ஒப்பந்தம் சார். இன்னும் இரு வருடத்தில் நீங்க எனக்காக விடுதிக்கு கட்டிய பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவேன் என்றாள்.

“எதுக்கும்மா இதெல்லாம்?” திலீப் அம்மா கேட்க, இதான் சரி ஆன்ட்டி என்று அவனை பார்த்து விட்டு, விகாஸிடம் “தேங்க்ஸ்டா நண்பா” என்று வாங்கி ஆன் செய்தாள்.

உன்னோட அலைபேசி எண் அவள் கேட்க, எல்லார் எண்ணும் இதில் இருக்கும். ஆனால் இவனுடையதை தவிர என்று விகாஸ் திலீப்பை பார்த்தான்.

“ஏன்டா?” சுவாதி கேட்க, அதான் சரி. நம்பிக்கை இல்லாத ஒருவருடன் பேசுவது கூட நல்லதில்லை. எனக்கு பிடிக்கவும் செய்யாது. நான் அண்ணா அண்ணியோட வாழணும்ன்னு தான் வந்தேன். அதுக்காக துளசியை மன்னிக்கவும் இல்லை. அவள் பேசியதை மறக்கவும் இல்லை என்று திலீப்பை பார்த்தாள். அவனுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியை கொடுத்துக் கொண்டிருந்தாள் ரம்யா.

வீ..நான் பேசணும்ன்னா தனியாகவே எல்லாருடனும் பேசிக்கிறேன். உங்க குரூப்ல்ல என்னை சேர்க்க வேண்டாம் என்றாள்.

“எதுக்கு? அப்புறம் எப்படி எல்லா விசயமும் உனக்கு தெரியும்?” சுருதி கேட்க, நான் ஒன்றும் உங்க குடும்பம் இல்லை. நாம எல்லாரும் தெரிஞ்சவங்க. நல்லா பேசிப்போம். அப்புறம் வீ..என்னோட ப்ரெண்டு.

“கீர்த்து நீயும் போகப் போறாயா?” வருத்தமாக ரம்யா கேட்க, இல்ல..நான் சிம்மா அண்ணா கிளம்பும் போது தான் என்று விக்ரமை பார்த்தாள்.

பின் எல்லாரும் திலீப் அப்பா, சிடுமூஞ்சி சுவாதி அப்பா கூட ரம்யாவிடம் நன்றாக பேசினார். பேசி விட்டு அனைவரும் நகர, திலீப் மட்டும் நின்று கொண்டிருந்தான்.

“ரம்யா” அவன் அழைக்க, ஒரு குட்டிப்பையன் அவன் முன் வந்து, “எங்க அக்காவை கஷ்டப்படுத்திட்டு இப்ப என்ன பேசணும்?” கிளம்பு என்றான்.

டேய், ஊத்தவாயி..”சும்மா இரு” என்ற ரம்யா, “சொல்லுங்க சார்?” என்றாள்

“எதுக்கு சார்ன்னு கூப்பிடுற?”

அதான் சரி. விசயத்தை சொல்லுங்க என்றாள்.

“இதெல்லாம் வேண்டாமே!” நீ என்னை மன்னித்து விடு. கோபத்தில் பேசிட்டேன்.” நாம எப்பொழுதும் போல பேசிக்கலாமா?” அவன் கேட்க, நோ..சார், ப்ளீஸ் கிளம்புங்க என்றாள். அவள் அழைக்கும் சார், அவனை மூன்றாவது மனிதனாக எண்ண செய்தது.

விகாஸ் விக்ரமை பார்த்துக் கொண்டே, கீர்த்தனாவை அழைத்தான்.

“என்ன செய்யப் போறான்?” அனைவரும் ஆர்வமாக பார்க்க, அவளிடமும் ஒரு அலைபேசியை நீட்டினான். அவள் விக்ரமை பார்க்க, “வாங்கிக்கோ” என்றான் விக்ரம்.

“தேங்க்ஸ்” என்று வாங்கிக் கொண்டாள்.

சுவா, கீர்த்துவுக்கு தேவையானதை பயன்படுத்த மட்டும் கற்றுக் கொடு. தேவையானதை மட்டும் என அழுத்திக் கூறினான் விகாஸ்.

“வீ மாமாவா இது?” சுருதி கேட்க, அவன் அவளை முறைத்தான்.

திலீப் ரம்யாவை பார்க்க, அவளும் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென யாரோ இருப்பது போல் தெரிய திலீப்பை விட்டு நகர்ந்து ரம்யா எட்டிப் பார்க்க, அங்கங்கு சில செடிகள் அசைந்தது.

“விக்ரம்” என அவள் உதடுகள் உச்சரிக்க, “என்ன?” திலீப் அவளை பார்த்தான்.

அவனை பார்த்து சுதாரித்த ரம்யா, “விக்ரம் அண்ணா” நம்மள சுத்தி யாரோ இருக்காங்க என கத்தினாள்.

பள்ளியில் மறைந்திருந்தவர்கள் கத்தி, அரிவாள், சுத்தி என சிலப் பொருட்களோடு அங்கு வந்தனர்.

அனைவரும் பயத்தில் உறைந்திருக்க, திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டது. பள்ளியில் வேலை பார்ப்பவர்கள், அனைவரும் வந்து பார்க்க, பிரின்சிபில் மைக்கில், “யாரும் மைதானத்தில் சுற்றக் கூடாது” என அறிக்கை விடுத்தார்.

எல்லாரும் நகர்ந்து செல்ல, சில பசங்க மட்டும் நின்றிருந்தனர்.