அத்தியாயம் 46
மகிழ், “நீ என்ன செய்யப் போற?” கதவை திற பரிதி கோபமாக கத்தினார். அவனிடம் பதிலே இல்லை.
மகிழ், அவசரப்படாத. என்னோட குடும்பத்தை பற்றி உனக்கு தெரியாததா? அவங்கள நான் பார்த்துக்கிறேன் என்றாள் நட்சத்திரா.
கண்ணை துடைத்து விட்டு, முகத்தை சரி செய்து சிம்மாவின் பைக் கீயை பார்த்து அதை எடுத்து வெளியே வந்தான் மகிழன்.
மகிழ், அந்த வீடு உங்களுக்கு மட்டுமல்ல. எங்களுடைய நினைவுகளும் இருக்கு பரிதி அவனிடம் கோபமாக பேச,
பெரியப்பா எங்களிடம் அது மட்டும் தான் இருக்கு. எல்லாருடைய நினைவுகளையும் விட எனக்கு என் அக்கா தான் முக்கியம் என்று நட்சத்திராவை பார்த்து, அண்ணி நீங்க சென்னைக்கு வந்தவுடன் அண்ணா அப்பார்ட்மென்ட்டிற்கு போயிடுவீங்கல்ல. அதனால நீங்க இப்ப இருந்த வீட்ல நான் தங்கிக்கவா? ஹவுஸ் ஓனர் எண்ணை மட்டும் எனக்கு அனுப்புங்க என்று பரிதியை பார்த்து “சாரி பெரியப்பா” என்று அவன் நகர முனைந்தான்.
நில்லுடா..என்று அவர் அழைக்க, நின்று அவரை திரும்பி பார்த்தான்.
என்னோட தம்பி பசங்க என்னோட பசங்க மாதிரி தான் இதுவரை நான் பார்த்திருக்கேன். சொல்லப் போனால் உன் மீதும் பாப்பா மீதும் நான் கோபத்தில் தான் இருக்கேன். உன்னோட அம்மா, அப்பாவுக்கு உடல் சரியில்லைன்னு சொல்லாமல் இந்த நிலைக்கு போயிருக்கு. பாப்பாவும் இப்படி எல்லாரிடமும் எல்லாத்தையும் மறைத்து தனியா கஷ்டப்பட்டுகிட்டு இருந்திருக்கா.
உனக்கு அவங்க பெற்றோர்ன்னா, என்னோட உடன்பிறந்த தம்பி அவன். அவன் பிள்ளைகள் என் பிள்ளைகள் தான். என்னால என் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டியதை செய்ய முடியும். அதை விட்டு எதையாவது விக்கிறேன்னு என்னையும் இந்த உலகத்தை விட்டு அனுப்பிறாதீங்க என்று பரிதி கண்கலங்க சொல்ல, அனைவரும் பதறினார்கள்.
அன்னம் அழுது கொண்டே, “என்ன பேசுறீங்க?” என பரிதியை அணைத்தார். நட்சத்திரா மகிழனை முறைக்க, கண்ணீருடன் அவரை வந்து அணைத்துக் கொண்டு, “எதுக்கு இப்படி பேசுறீங்க?” எங்களுக்கு உங்களை விட்டால் யாருமில்லை என்று அழுதான் மகிழன்.
இப்ப கூட நடந்த எதுவுமே நம்ப முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்ப நீங்களும் இப்படி பேசுறீங்க என்று அவன் வார்த்தைகள் தடுமாறி கலக்கமுடன் வந்தது. அதில் அவன் பெற்றோர் இழப்பில் அவன் தாங்கமுடியாத வலி தெரிய, அன்னமும் அவன் தோளில் கை போட்டு அணைத்தார்.
பெரியப்பா எப்படி பேசுகிறார்? பாருங்க என்று அன்னத்தையும் அணைத்து அழுதான்.
இப்பொழுது தான் அவர்களின் நிலை மற்றவர்களுக்கு புரிய, திருமணமான ஜோடிக்காக ஒருவரை ஒருவர் மகிழ்வுடன் இருப்பது போல் நடிக்கிறார்கள் என்று புரிந்தது.
பாட்டி அவர்களிடம் வந்து நின்றார். மூவரும் விலக, மகிழன் கண்ணை துடைத்து பரிதியை பார்க்க, அவரும் கண்ணீருடன் தான் நின்றார்.
ஏம்ப்பா, பிறப்பு இறப்பு இவ்வுலகின் நியதி தான். உன்ன பெத்தவங்க வாழ்க்கை முடிந்தது. இவங்கள அம்மா, அப்பான்னு அழைத்து பார். உனக்கு இந்த பிரிவும் தெரியாது. தனியாக இருப்பது போல் இருக்காது என பல போதனைகளை மகிழனுக்கு வழங்கினார். அவன் தலையை ஆட்டிக் கொண்டே அன்னம், பரிதியை பார்த்தான்.
ரித்துகிட்ட எதுவும் சொல்லீடாதடா. அவளும் ரொம்ப கஷ்டப்படுவா என்று நட்சத்திரா சொல்ல, மகிழன் தலைகவிழ்ந்து நின்றான்.
டேய் மகிழ், “அவகிட்ட சொல்லீட்டியா?” நட்சத்திரா கோபமாக கேட்க, அவன் கண்கலங்க நட்சத்திராவை நிமிர்ந்து பார்த்தான். உன்னை..என்று திட்ட வந்த நட்சத்திராவிற்கு அழைப்பு வந்தது.
கையிலிருந்த அலைபேசியை பார்க்க, அண்ணா..என்று மகிழனை பார்த்தாள் நட்சத்திரா.
அலைபேசியை அவள் எடுக்க, மகிழ்கிட்ட அலைபேசியை கொடு உதிரன் கோபமாக சொல்ல, மகிழ்,..”நீ காலிடா” என்று சொன்ன நட்சத்திரா அவள் அலைபேசியை நீட்டினாள்.
எச்சிலை விழுங்கி மகிழன் அலைபேசியை வாங்க, உதிரன் சத்தமிடத் தொடங்கினான்.
மாமா..என்று இவன் அழைக்க, சரமாரியாக திட்டினான் உதிரன். கடைசியாக ரித்து அவ தான் இதுக்கும் காரணம்ன்னு அழுது மயங்கியே போயிட்டா என்று உதிரன் சொல்ல,
மாமா, “அக்காவுக்கு என்ன? நல்லா இருக்கால்ல? ஒன்றுமில்லைல்ல?” அவன் பதற, பரிதி அலைபேசியை வாங்க, “இருங்கப்பா” என்று மகிழன் பரிதியை அப்பா என அழைத்தான். அவர் அவனையே பார்க்க, மாமா..சொல்லுங்க என்று இவன் கத்த, அந்த பக்கம் உதிரன் அழைப்பை துண்டித்து விட்டான்.
“மாமா” என்று அலைபேசியை வைத்த மகிழன், அக்கா..என்று அன்னத்தை பார்த்த மகிழன் மனம் அடித்துக் கொள்ள வீட்டினுள் ரித்திகாவை மயக்கநிலையில் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தான் உதிரன்.
அண்ணா..என்னாச்சு? நட்சத்திரா பதற, இந்தா உன்னோட அக்கா என்று தூக்கி வந்த ரித்திகாவை மகிழன் கையில் கொடுத்து அவனை பளாரென அறைந்தான். சுருதி கண்ணீர் வடிய, ஹரிணி ஆறுதலாக அவள் கையை பிடித்தாள்.
உதிப்பா, “எதுக்கு அடிக்கிறீங்க?” பரிதி கோபப்பட, மாமா..அப்படியே இவள மாதிரியே பண்றான் பாருங்க. “அக்காவுக்கும் தம்பிக்கும் வேற வேலையே இல்லையா?” உதிரன் கோபமாக கத்தினான்.
“சாரி மாமா” மகிழன் சொல்ல, யார்கிட்ட பேசின? சிந்திக்கவே மாட்டாயா? அவன் ஒரு ஃபிராடு. அவன் வக்கீல் எல்லாம் இல்லை உதிரன் கோபமாக கத்தினான்.
மாமா, அவர் சென்னையிலே பேமஸ் வக்கீலில் ஒருவர் தான். சந்துரூ சார் என்றான் அவன்.
சரி தான். ஆனால் நீ பேசியவன் சந்துரூ இல்லை. அவனை விக்ரமிற்கு நன்றாக தெரியும் என்ற உதிரன். எண்ணை மாற்றி கொடுத்து உன்னை ஏமாற்றி இருக்கானுக என்றான்.
மகிழன் கோபமாக அலைபேசியை எடுக்க, மகிழ்..நீ எதுவும் செய்ய தேவையில்லை என்று உதிரன் டீவியை ஆன் செய்தான். அதில் ஐவரை போலீஸ் ஆட்கள் பிடித்து செல்ல, “இவனுக யாரையாவது உனக்கு தெரியுமா?” உதிரன் கேட்டான்.
இல்லையே! என்றான் மகிழன்.
அந்த பச்சை சட்டை போட்டவன் தான் உன்னிடம் சந்துரூ போல் பேசி இருக்கான். பாலா தற்செயலாக ஒரு பேக்டரிக்கு சென்றவன். இவர் உன் பெயரை கூறி பேசுவதை பார்த்து எனக்கு கால் பண்ணான். ஒரு முறை விக்ரம் சந்துரூவிடம் பேசியது போல் எனக்கு நினைவு வர, அவரிடம் சந்துரூ என்பவரை பற்றி விசாரித்தேன். அவர், அவர் ஆட்கள் மூலம் இவர்களை வேவு பார்த்து, இப்ப நீங்க பேசிய கடைசி உரையாடலில் போலீஸார் மூலம் பிடிபட்டான். அவனை வைத்து மற்றவர்களையும் பிடித்து விட்டனர் என்று உதிரன் மகிழனை முறைத்தான்.
மாமா, அவன்..என்று மகிழன் பேசும் முன் சுருதி அம்மா பேசினார்.
“இப்ப தான் ஏதோ பெருசா பேசுன? இதை கூட உன்னால சரியா செய்ய முடியல. நீ எப்படி என் பிள்ளைய பார்த்துப்ப?” என்று அவர் கேட்க, உதிரன் அதிர்ந்து, “தவறான நேரம் பேசி விட்டோமோ!” என எண்ணி மகிழனை பார்த்தான். அவன் அமைதியாக ரித்துவை அங்கிருந்த சோபாவில் கிடத்தி விட்டு தண்ணீரை எடுத்து தெளித்தான். அவள் எழுந்து மகிழை பார்த்து, “மகிழ்” என அவனை அணைத்துக் கொண்டாள்.
சாரிக்கா, என்னால எதையும் தெளிவா யோசிக்க முடியல. ஆனால் இனி சரியா இருப்பேன். இனியும் நமக்கு தான் அம்மா, அப்பா இருக்காங்கல்ல என்று அன்னம் பரிதியை பார்த்து, நான் எல்லாவற்றிலுமே ஏமாந்து தான் இருந்தேன். இனி அப்படி இருக்க மாட்டேன். அப்புறம் நம்ம வீட்டை யாருக்கும் நான் கொடுக்கல. எந்த பிரச்சனையானாலும் அன்னம் அம்மா, பரிதி அப்பா, சிம்மா அண்ணா, நான், நீ, மாமா எல்லாரும் சேர்ந்தே பார்த்துக்கலாம் என்று சொல்ல, அன்னம் பரிதியை பார்த்து ரித்திகாவும் புன்னகைக்க, நட்சத்திரா கோபமாக மகிழனிடம் வந்து அவன் தலையில் கொட்டி, “நம்ம குடும்பத்துல்ல என்னை எதுக்குடா விட்ட?” என்று கேட்க, அர்சுவும் அவனது நீளமான பேண்ட்டை தூக்கிக் கொண்டு ஓடி வந்து, “ஆமா..என்னை எதுக்குடா விட்ட?” என்று அவனும் கொட்ட வர, அவனை பிடித்து தூக்கிய மகிழன்,
“உன்னோட அம்மாவும் நீயும் உங்க தாத்தா, பாட்டி பாசத்துல்ல உங்க தாத்தா பாட்டி பக்கம் சாய்ந்தால் நான் என்ன செய்வது?” அதான் சேர்க்கலை என்று கேலியுடன் கூறி நட்சத்திராவை பார்த்தான்.
“என்னது? நான் அவங்க பக்கமா?” நோ..நான் தர்மத்தின் பக்கம் என்று கெத்தாக கூறினாள் நட்சத்திரா.
“ஆமா..ஆமா..தர்மத்தின் தலைவியே!” என்று மகிழன் புகழுரைக்க, ரசிகா புன்னகையுடன் விக்ரமை தேடினாள். விக்ரமை மகிழன் சேர்க்கவில்லை என்ற எண்ணம் அவளுள் வாட்டி வதைத்தது. சுவாதியும் அமைதியாக அவளை பார்த்தாள்.
இருவரையும் பார்த்த அன்னம், “நீங்க என்னம்மா அங்க நிக்குறீங்க?” நீங்களும் வாங்க என்று அவர்களையும் இழுத்து அணைத்துக் கொண்டார் அன்னம். தமிழ் குடும்பம் அனைவருக்கும் விக்ரம் பற்றி தெரியும் என அங்கிருப்பவர்களுக்கு தெரியும் ஆனால் உதிரன், மகிழை தவிர.
“அத்தை, என்ன பண்றீங்க?” என உதிரன் இருவரையும் பார்க்க, “நானே சொல்றேன்ம்மா” என்றாள் ரித்திகா. அவளது அம்மாவில் அன்னம் உருகி விட்டார்.
மகிழ், புரியாமல் பார்க்க, அவரிடம் நான் சொல்கிறேன் என்று சுருதி அவனருகே வர, அவள் அம்மா தடுத்தார்.
“அம்மா” அவள் அழைக்க, என்னால இந்த மாதிரி பொறுப்பில்லாத பையனை ஏத்துக்க முடியாது என்றார்.
போதும்மா..நிறுத்து, அவரை உன்னை கட்டிக்க சொல்லி கேட்கலை. நான் தான் கட்டிப்போறேன். இதுக்கு மேல அவரை ஏதாவது சொன்ன பார்த்துக்கோ என்று சுருதி கோபப்பட, சுருதிம்மா..”எடுத்தெறிந்து பேசாத” பாட்டி சத்தம் போட்டார்.
ஏன் பாட்டி, ”உங்க மருமக எடுத்தெறிந்து பேசலையா?” நானும் எவ்வளவு நேரம் தான் பொறுமையா இருப்பேன். காசு பணம் மட்டும் வாழ்க்கையில்லை. “உங்க மருமகள தடுக்காம என்னை தடுக்குறீங்க? அவங்க வீட்ல இருந்துட்டு அவங்களையே பேசுற?” விருப்பமில்லைன்னா என்று சுருதி பேச, “சுருதி அமைதியா இரு” மகிழன் சத்தமிட்டான். கண்ணீருடன் வாயை மூடிக் கொண்டாள் அவள்.
அவளிடம் வந்து, உங்க அம்மா வேற எண்ணத்தில் இருந்தது உனக்கு தெரியும்ல்ல. “அப்புறம் இது என்ன பேச்சு?” நம்ம காதலை அவங்க ஏத்துப்பாங்க. இப்ப தான் நாம பேசவே ஆரம்பித்து இருக்கோம். அதனால அவங்க பயப்படலாம். நம்மையே எல்லாரும் புரிஞ்சுக்கணும்ன்னு எண்ணக் கூடாது. நாமும் அவங்கள புரிஞ்சுக்கணும் என்று அவள் கண்ணீரை துடைத்து விட்டு, நீ எனக்காக இவ்வளவு பேசுவன்னு நான் நினைக்கவேயில்லை. ரொம்ப தேங்க்ஸ். “லவ் யூ” என்று அவள் அம்மாவை பார்த்து விட்டு அனைவர் முன்னிலையிலும் அவள் இதழ்களில் மென்மையாக முத்தமிட்டு விலகினான். அவள் வெட்கத்துடன் நிற்க, அனைவரும் அதிர்ந்து பார்த்தனர்.
சுருதி அம்மாவோ செய்வதறியாது திகைத்து நின்றார்.
அடியேய், போதும் தரையை தோண்ட பார்க்காத. இது டைல்ஸ். ஹப்பா..என்று ஹரிணி, உனக்கு முட்டுதோ இல்லையோ எனக்கு மூச்சு முட்டுது என்று வெளியே ஓடினாள்.
மகிழன் சுருதியை பார்த்து சிரிக்க, “இதுக்கு மேல எங்களாலும் முடியாது” என்று சிறுசுகளும் வெளியே ஓடினர். திலீப் சோர்வாக அங்கே வந்தான்.
டேய் மகிழ், உன்னை என்னவோன்னு நினைச்சேன் என்று உதிரன் அட்டகாசமாக சிரிக்க, சுருதி அதே வெட்கத்துடன் வெளியே ஓடினாள்.
திலீப்பை பார்த்து ரித்திகா உதிரனை பார்த்தாள்.
“என்னடா? அந்த பொண்ணுகிட்ட சாரி சொல்லீட்டியா?” தாத்தா கேட்க, அவ நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலை தாத்தா. ரொம்ப கோபமா இருக்கா.
ஆமா இவன் பேசியதுக்கு இவனோட சாரிய ஏத்துக்கணுமாம். எந்த பொண்ணு ஏத்துப்பா? என்று சுவாதி கோபமாக நகர்ந்தாள்.
“பொண்ணா? என்னாச்சு?” ரித்திகா கேட்க, அவளை பார்த்த திலீப், உதிரன் மகிழனை பார்த்து விட்டு நகர்ந்தான்.
மகிழன் அவனை நிறுத்தி, “பதில் சொல்லைன்னா எப்படி வருவீங்க?” என்று திலீப்பிடம் கேட்க, “அவ பேச விருப்பமில்லைன்னு சொல்லீட்டா” என்று வருத்தப்பட்டான்.
மகிழன் பாட்டியையும், திலீப் அம்மாவையும் பார்த்தான். அவனை பார்த்து விட்டு திலீப் அருகே அமர்ந்து, போக போக எல்லாம் சரியாகும் என்றனர்.
சரி, “உன்னோட டீன்கிட்ட பேசுனியா?” தாத்தா கேட்க, அவங்க ஏத்துக்கலை. இப்ப ஹாஸ்பிட்டல் வொர்க்கே அதிகமா இருக்காம். அதனால் இங்க மெடிக்கல் கேம்ப் நடத்த முடியாதுன்னு சொல்லீட்டாங்க. நான் நாளை ஹாஸ்பிட்டலுக்கு போகணும்மாம். அதனால் இன்று மாலை கிளம்பணும் என்றான்.
சரிப்பா, “நாம கிளம்பிடலாம்” என்றார் திலீப் அம்மா.
நானும் இன்று கிளம்பினால் தான் நாளை காலேஜ் போக சரியாக இருக்கும் என்று மகிழன் சொல்ல, எங்களுடன் வா என்று திலீப் சொல்ல, நான் தனியே போயிடுவேன் என்று அதில் சரியாக விலகினான். சுருதி அம்மா முகத்தை திருப்பிக் கொண்டார்.
விக்ரமும் கீர்த்தனாவும் விகாஸை தேடி வந்தனர். எப்பொழுதும் புன்னகையுடன் இருக்கும் விகாஸோ வயற்பரப்பில் மரத்தடியில் கவலையுடன் அமர்ந்திருந்தான்.
அண்ணா, அங்க இருக்கார் என்று கீர்த்தனா கையை காட்ட, இருவரும் அவன் முன் வந்தனர்.
முதலில் விக்ரம் அவன் தோளை பற்றியவாறு அருகே அமர்ந்தான். கீர்த்தனா மறுபக்கம் அமர்ந்து அவ்விடத்தையும் தூய காற்றையும் உள்வாங்கி ரசித்துக் கொண்டிருந்தாள். அவ்வப்போது இருவரையும் கவனித்தாள்.
பாருங்க மாம்ஸ், ஒருத்தர் கூட என்னை நம்பலை. நான் அந்த பொண்ணிடம் டேட் பண்ணலாமான்னு தான் கேட்டேன். என் மனம் கவரும் பொண்ணுங்களிடம் மட்டும் தான் டேட் பண்ண அழைப்பேன். சும்மா அவங்களோட பீச், மால், பப்புன்னு சுத்துவேன். அதுவும் விருப்பமுள்ள பொண்ணிடம் தான். நான் அப்ரோச் செய்து விருப்பமில்லைன்னா அருகே கூட செல்ல மாட்டேன் என்று கண்ணீருடன் விக்ரமை அணைத்தான்.
சரி, “அந்த பொண்ணுகிட்ட என்னவெல்லாம் பேசினீங்க?” விக்ரம் கேட்க, “மாம்ஸ் நீங்க என்னை நம்புறீங்களா?” என விகாஸ் கேட்டான்.
நம்புகிறேன். சொல்லுங்க என்று விக்ரம் கேட்க, “லவ் யூ மாம்ஸ்” என்று விக்ரமை அவன் அணைக்க, கீர்த்தனா அதிர்ச்சியுடன் விகாஸை பிடித்து தள்ளினாள்.
அண்ணா, “வா போகலாம்” என அவள் விக்ரமை இழுக்க, கீர்த்து விடு. அவர் எமோஸ்னல்ல தான் சொல்லீட்டார். நீ நினைக்கிற மாதிரி இல்ல என்று விக்ரம் சிரித்தான்.
“நீ என்ன நினைச்ச?” விகாஸ் கீர்த்தனாவிடம் கேட்க, நீங்க பேசியதுக்கு நான் என்ன நினைப்பேன் என அவள் திரும்பிக் கொண்டாள்.
ஓய்..நான் ஒன்றும் கே இல்லை என்றான் விகாஸ். கீர்த்தனா புரியாமல் அவனை பார்த்தாள். விக்ரம் விகாஸை பார்த்து, அவளுக்கு இதை பத்தியெல்லாம் தெரியாது என்றாள்.
“கே” ன்னா என்னன்னு தெரியாதா? மாம்ஸ் வாய்ப்பேயில்லை என்றான் விகாஸ்.
அண்ணா, “அது பேமஸ்ஸான விசயம்மா?” கீர்த்தனா கேட்க, விகாஸ் அதிர்வுடன் “உண்மையிலே உனக்கு தெரியாதா?” அவன் கேட்க, கீர்த்து அதை பற்றி நீ தெரிஞ்சுக்க வேண்டாம்.
மாம்ஸ், “ஸ்கூல் படிக்கிற பொண்ணா இருந்தாலும் இது தெரியாதா? நீ அலைபேசி யூஸ் பண்ண மாட்டாயா?” கீர்த்தனாவை பார்த்து கேட்டான்.
என்னிடம் இல்லை என்று அவள் சோகமானாள்.
“நான் வாங்கித் தரவா?” விகாஸ் கேட்க, வீ..அவளுக்கு அதெல்லாம் தேவையில்லை விக்ரம் கோபமாக கூறினான்.
மாம்ஸ், “அவ இல்லைன்னு வருத்தப்படுறா?” என்று விகாஸ் சொல்ல, அவ அதுக்காக வருந்தலை என்று விக்ரம் கீர்த்தனாவை பார்த்தான்.
சிறுவயதிலிருந்து ஆசிரமத்தில் தான வளர்ந்தாள். இறந்த அவளின் தங்கைகள், தம்பிகள், அக்காக்கள், அம்மாக்கள், பாட்டி நினைவு வர, அவள் கண்ணீர் அதிகமானது. கீர்த்தனா அழ, “ஏய் எதுக்கு அழுற?” என்று விகாஸ் கேட்க, விக்ரம் எழுந்து கீர்த்தனாவிடம் வந்து மண்டியிட்டு அவளை பார்த்தாள்.
விக்ரமை பார்த்து அவள் அழுகை நீள, வி..வி..விக்ரம் என்னால தாங்க முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு. தூங்க முடியல. அவங்க நினைவாகவே இருக்கு என தேம்பி தேம்பி அழுதாள்.
விக்ரமும் கண்ணீருடன் அவளை அணைத்துக் கொள்ள, அவன் அணைத்தும் அவளால் நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமலும், அவள் கண்முன் அவள் வாழ்ந்த அந்த ஆசிரமும், உடன் வளர்ந்தவர்களும் அழிய பார்த்தது மட்டும் மனதில் அழுத்தமாக பதிந்து அவளை வாட்டி எடுத்தது.
ஈஸிடா, நோம்மா. அழாத என்று அவள் தலையை இதமாக விக்ரம் கோதி விட, விகாஸ் இருவரையும் அதிர்வுடன் பார்த்தான்.
நானும் அவங்களோட செத்து போயிருக்க வேண்டியது விக்ரம். லட்சுமி அம்மா தான் என்னை காப்பாத்திட்டு அவங்க..என அவள் மேலும் அழ, விகாஸ் மேலும் அதிர்ந்தான்.
கீர்த்தனா பேசியது விக்ரம் மனதையும் பாதித்தது. அவனும் அழ, “மாம்ஸ்” என்று விக்ரம் தோளில் கை வைத்தான் விகாஸ்.
தன்னை சமாதானப்படுத்திய விக்ரம், கீர்த்தனாவை விலக்கி அவளது முகத்தை அவன் கையில் ஏந்தினான். இனி இந்த மாதிரி பேசாத கீர்த்து. நீ இல்லாமல் நானில்லை. உன்னை பார்க்காமல் நான் இருக்க மாட்டேன் என்று விக்ரம் கண்ணீர் அனிச்சையாக வழிந்து கொண்டே இருக்க, அழுகையை நிறுத்திய கீர்த்தனா அவன் கண்ணீரை துடைத்து விட்டு, “சாரி அண்ணா” என அவனை அணைத்து, நீ அழவே கூடாது என்றாள்.
ம்ம்..என்று தன் மனதை கட்டுப்படுத்திய விக்ரம் அவளை அமர வைத்து விகாஸை பார்த்தான். ஏற்கனவே ஹாஸ்பிட்டலில் வைத்து கீர்த்துவை குழந்தையாக கையில் எடுத்ததும் விக்ரம் தான் என்று அனைத்தும் விகாஸ் கேட்டிருப்பானே! அவளுக்கு அண்ணாவாக விக்ரம் இருந்தாலும் இருவர் உறவும் அப்பா- மகள் போல தெரிந்தது விகாஸிற்கு. ஆனால் அவன் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.
விகாஸ் இருவரையும் அமைதியாக பார்க்க, இவன் கோபப்படுவானோ! அவன் தங்கையை தான விக்ரம் காதலிக்கிறான்.
“ஏற்கனவே எல்லாரும் எங்களை தவறாக பேசினாங்களே! இப்ப விக்ரமை என்னால இவங்களுக்கு பிடிக்காமல் போயிடுமோ?” என்று பயத்துடன் விகாஸை பார்த்து, இனி நான் விக்ரம்ன்னு சொல்ல மாட்டேன் அண்ணான்னே கூப்பிடுறேன். “அவனை தப்பா நினைக்காதீங்க?” என கீர்த்தனா பாவமுடன் சொல்ல, விகாஸ் புன்னகையுடன் அவளை பார்த்தான். அவனுள் ஏதோ வித்தியாசமாக கீர்த்தனா தெரிந்தாள்.
வீ., “அந்த பொண்ணு நம்பரை எனக்கு அனுப்பு” விக்ரம் கேட்க, கீர்த்தனாவிடமிருந்து அவன் பார்வை விக்ரமிடம் மாறியது.
“அவள மாதிரி நான் தப்பா நினைப்பேன்னு உங்களுக்கு தோணலையா மாம்ஸ்?” விகாஸ் கேட்க, விக்ரம் ஒரே வார்த்தையில், உன்னை எனக்கு தெரியும் என்றான்.
என் குடும்பம் ஏன் சுவா கூட என்னை நம்பலை. ஆனால் நீங்க மட்டும் நம்புறீங்க?
“யார் சொன்னா அவ உங்களை நம்பலைன்னு?” அவ கோபமா பேசினாலும் அவ கண்ணுல உங்களை அவ நம்புறான்னு தெரிஞ்சது. அன்று கூட பொண்ணுங்க பின்னாடி ஜொல்லு விட்டு போறீங்கன்னு தான திட்டினாளே தவிர தவறாக ஏதும் சொல்லலை. எல்லா பசங்களுக்கும் அழகான பொண்ணுங்கல்ல ரசிக்க தோன்றும் தான். உங்க கேரக்டருக்கு நீங்க நேரடியா பேசுறீங்க? அவ்வளவு தான் என்றான் விக்ரம்.
தேங்க்ஸ் மாம்ஸ், ஆனால் சுவா..
நீங்க சொல்லி தான சிலர் நம்பலை. ஆனால் அதை நிரூபிக்க முடியும்ல்ல? விக்ரம் கேட்க, அதெப்படி முடியும்? விகாஸ் கேட்டான்.
முதல்ல எண்ணை அனுப்புங்க. இப்ப பாருங்க என்று விக்ரம் சொல்ல, விகாஸூம் எண்ணை கொடுத்தான்.
கீர்த்தனா விக்ரமை ஆர்வமுடன் பார்க்க, கீர்த்து “இங்க வா” என்று விக்ரம் அழைக்க, விக்..அண்ணா நான் எதுக்கு? என விகாஸை பார்த்தாள்.
நான் சொல்வது போல அழகாக பர்பக்ட்டா பேசணும் என்று அவளை பேச வைத்து அலைபேசியில் எண்ணை அழுத்தி ரெக்கார்டரை ஆன் செய்து கீர்த்தனாவிடம் விக்ரம் கொடுத்தான்.
ஹாய் மேம், “நீங்க அஷ்வினியா?” கீர்த்து கேட்க, “யா? ஹூ ஆர் யூ?” என அந்த பொண்ணு கேட்டாள்.
ஏதோ குழுவின் பெயர் ஒன்றை கூறி, நாங்க பாய் ப்ரெண்ட்ஸ் குறைஞ்ச விலைக்கு கொடுப்போம். உங்களுக்கு விருப்பமிருந்தால் சொல்லுங்க?
அழகான குற்றவாளி ஒருவன் புகைப்படத்தை அனுப்பி அவன் பெயர் சொல்லி கீர்த்தனா பேச, முதலில் எரிச்சலுடன் பேசிய அஷ்வினி, புகைப்படத்தை பார்த்தவுடன் அவனை பற்றி துருவி துருவி கேட்டு விசாரித்துக் கொண்டாள்.
“எத்தனை மாதம் பாய் ப்ரெண்டா இருப்பான்?” என அவள் கேட்க, மூன்று மாதங்கள். உங்கள் இஷ்டத்துக்கு அவனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கீர்த்தி சொல்ல, இவன் போனவுடன் அடுத்து வேற ஆட்களும் கிடைப்பாங்களா? என கேட்க, கீர்த்துவால் பேச முடியல.
“பேசு” என விக்ரம் அவள் கையை அழுத்தி பிடிக்க, ம்ம்..கிடைப்பாங்க மேம் என்றவள், அப்ப இவர் உங்களுக்கு ஓ.கே தான? உங்க விவரத்தை சொன்னீங்கன்னா. உடனே வந்துருவான் மேம் என்றாள்.ஓ.கே என்று அவளும் அவள் பற்றியதை சொல்லி முடிக்க, “மேம்..இதுக்கு முன் இப்படி யாருடன் இருந்திருக்கீங்களா?” என கீர்த்தனா கேட்க, “இதெல்லாம் எதுக்கு கேக்குறீங்க?” அஷ்வினி குரல் ஓங்கியது.
மேம், எங்க ரூல்ஸ்ல்ல ஏற்கனவே ஆள் இருந்தா மட்டும் தான் அனுப்புவோம். இல்லை அவன் எங்க வேலைய விட்டு உங்க பின் வந்துட்டான்னா அதான் கேட்டேன் என்றாள்.
இருந்தாங்க. நான்கைந்து பேர். அதில் கடைசியாக கூட அந்த பைத்தியக்கார விகாஸ், எங்க சாரை மாமான்னு பின்னாடியே சுத்துவான். நான் அவரை கரெக்ட் செய்ய பார்த்தேன். அவர் என்னை கண்டுகொள்ளவே இல்லை. அதான் அந்த பைத்தியக்காரன் டேட்டிங் கேட்டதை மாற்றி சொன்னேன். இனி அவன் எனக்கு தடையாக இருக்க மாட்டான். அவங்களுக்குள் பிரச்சனை வந்திருக்கும். அவரை மீண்டும் ட்ரை பண்ணுவேன். ஆனால் வேற யாராவது பக்கத்துல்ல இருந்தா நல்லா இருக்கு என்று கூசாமல் அவள் பேச, கீர்த்தனா முகமோ கோணிச் சென்றது.
விகாஸூம் விக்ரமும் அதிர்ந்து அஷ்வினி பேசுவதை கேட்டனர்.
“மேம்” அவள் தயங்க, நீங்க கவலைப்படாதீங்க. அவனை அனுப்புங்க. மூன்று மாதத்தின் பின் அவனை எப்படியும் ஏதாவது சொல்லி பத்திரமாக அனுப்பிடுவேன் என்றாள்.
“தேங்க்யூ மேம்” என்று கீர்த்தனா அலைபேசியை வைத்து விட்டு விக்ரமை முறைத்தாள்.
கீர்த்து அவன் அழைக்க, “ச்சீ…வெட்கமே இல்லாம இவ்வளவு கேவலமா பேசுறா? இவகிட்ட பேச வச்சுட்ட” என்று விக்ரமை செல்லமாக கீர்த்தனா அடித்தாள். விகாஸோ கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டான்.
“இந்த கேவலமான பிறவி என்னை பற்றி பேசுவதா? என் மாமாவுக்கு ரூட்டு விடுறாலா?” என்று சினமுடன் அவன் பேச இருவரும் அவனை பார்த்தனர். உடனே ரகசியனுக்கு இந்த வீடியோவை விக்ரம் அனுப்பினான். சிக்னல் வேற இல்லையே என்று அவன் அதை பார்த்துக் கொண்டிருந்தான்.
உங்க அக்கா தான் பாவம். “தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவாங்கல்ல? பயப்படவும் செய்வாங்கல்ல?” என்று சுஜியை பற்றி அறியாது கீர்த்தனா விகாஸை பார்த்தாள்.
விகாஸ் விக்ரமிடம், இந்த வீடியோ வேண்டாம். அழிச்சிருங்க. நான் என்னை யாரிடமும் நிரூபிக்க போறதில்லை என்றான்.
விக்ரம் அலைபேசியையே பார்ப்பதை பார்த்து, “மாம்ஸ் என்ன பண்றீங்க?” அக்காவுக்கு தெரிந்து கோபப்பட்டாலும் ரொம்ப கஷ்டப்படுவா என்று விக்ரமை நெருங்கினான் விகாஸ். அதற்குள் வீடியோ சென்று விட ரகசியன் தான் பார்க்கவில்லை. ஆனால் சென்றவுடனே விக்ரம் அழித்து விட்டு அலைபேசியை விகாஸிடம் காட்டினான்.
“அவள எப்படியாவது மாட்டி விடணும்?” விகாஸ் சிந்தனையுடன் தோட்டத்து செடிகளை பார்க்க, ஒருவன் அந்த தோட்டத்தினுள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே எதையோ ஊற்றிக் கொண்டிருந்தான்.
மாம்ஸ், அங்க பாருங்க. அவன் ஏதோ செய்கிறான் என்று அவன் கையிலிருப்பதை விகாஸ் உற்று பார்த்து, மாம்ஸ் அது ஏதோ கெமிக்கல் மாதிரி தெரியுது என்றான்.
கீர்த்தனா அதை பார்த்து வேகமாக அவ்விடம் ஓடினாள்.
ஏய் போகாத, விகாஸ் கத்த, விக்ரம் அவள் பின் ஓட, இவனும் சென்றான்.
அதை இதுல்ல தெளிக்காத. பூக்கள் எல்லாம் செத்து போயிரும் என்று அவள் கத்த ஊற்றிக் கொண்டிருந்தவன் கீர்த்தனாவை பார்த்து வேகமாக ஊற்றினான்.
விக்ரமை பார்த்த அவன் வேகமாக நெருப்பை கொழுத்தி அதில் போட அவ்விடம் கொழுந்து விட்டு எறிந்தது.
கீர்த்தனா நெருப்பை பார்த்து அங்கேயே நின்று விட்டாள்.
மச்சான், “கீர்த்துவை பார்த்துக்கோங்க” என விக்ரம் விகாஸிடம் கூறி அவனை பிடிக்க செல்ல, கீர்த்தனாவிற்கு நெருப்பில் இரையான அவள் ஆசிரமம் நினைவிற்கு வந்தது. அங்கிருந்த சோளக்கொல்லை பொம்மையில் நெருப்பு பட, அவளுக்கு அவளுடனான எல்லாரும் நினைவில் வந்தனர்.
விக்ரம்..அவங்க அவங்க..வா..என கத்தி அழுதாள் அன்றைய நினைவில்.
கீர்த்தனாவிடம் வந்த விகாஸ், யாருக்கும் ஏதுமில்லை. அது பொம்மை தான் என அவளை பிடிக்க, இல்ல..அவங்க நிரா, வாசு, துனு..எல்லாரும்..பாட்டி, லட்சுமிம்மா..என அவள் அவனை தள்ளி விட்டு வேகமாக நெருப்பிற்குள் செல்ல, விகாஸ் பதறிப் போனான்.
கீர்த்து, “போகாத” என்று அவன் விக்ரமை தேட, அவனோ அவனை துரத்தி வெகுதூரம் சென்று விட்டான். நெருப்பிற்குள் கீர்த்தனா செல்ல, அன்றைய இடத்தில் நெருப்பின் வெளியே கதறிய அவள் இன்று நெருப்பினுள் கதறி அழுதாள். விகாஸூம் வழியில்லாது சிரமப்பட்டு நெருப்பை கடந்து அவளிடம் வர, “விக்ரம்” என மயங்கி கீழே விழுந்தாள்.
அவ்விடம் முழுவதும் நெருப்பு சூழ்ந்திருக்க, அதை பார்த்த சிலர்..தீயணைப்பு வீரர்களுக்கு செய்தியை பரப்ப, ஊர்மக்கள் அனைவரும் வர, கொழுத்தியவனை தவற விட்ட விக்ரம் அங்கே வந்து நடந்ததை பார்த்து அதிர்ந்திருந்தான். அவ்விடம் நீரால் நனைந்திருக்க அழகான தோட்டம் கருகி மோசமாகி இருந்தது.
உள்ளிருந்து சட்டையில் அங்கங்கு தீயால் கருகி, முகத்தில் வியர்வையுடன் உடல் உஷ்ணத்துடன் சோர்வுடன் உடல் முழுவதும் ஈரமாகி கீர்த்தனாவை துக்கி தள்ளாடி வந்த விகாஸை தான் விக்ரம் பார்த்தான்.
வீ, கீர்த்து..என விக்ரம் அவ்விடத்தினுள் செல்ல முனைய, அங்கிருந்தவர்கள் அவனை பிடித்து வைத்து விட்டு மற்றவர்கள் உள்ளே சென்றனர். அதில் மருதுவும் அடக்கம்.
கீர்த்தனாவை அவனிடமிருந்து வாங்க அவன் கால்கள் ஆட்டம் கண்டது. அவனை தோளோடு இணைத்து இருவர் வெளியே அழைத்து வர, விகாஸிற்கு தண்ணீரை கொடுக்க, அவன் தெளிவானாலும் உடல் சோர்வாக தான் இருந்தது.
விக்ரம் சிம்மாவிடம் விசயத்தை சொல்லி விட்டு சுவாதியை அழைத்து கூற, அவள் அழுது கொண்டே வீட்டிற்கு சென்று சொல்ல, அனைவரும் மருத்துவமனை கிளம்பினார்கள்.
ஆம்புலன்ஸ் மூலம் கீர்த்தனாவையும் விகாஸையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
கீர்த்தனா கண்விழிக்க, விகாஸ் உடல் சோர்வால் டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது. சிம்மா வாங்கி வந்த ஆப்பிளை அவன் கொறிக்க, விக்ரம் அவனை திட்டிக் கொண்டிருந்தான்.
உள்ளே வந்தனர் விகாஸ் குடும்பம். ஆப்பிளை கடிப்பதை நிறுத்தி அவர்களை பார்த்து விட்டு, மாம்ஸ் எல்லாரையும் வெளிய அனுப்புங்க. நான் ஓய்வெடுக்கணும் என்றான்.
கீர்த்தனா மெதுவாக எழுந்து விகாஸ் அறைப்பக்கம் வந்து அவன் குடும்பம் இருப்பதை பார்த்து நின்று கொண்டாள். அவன் சொல்லவும் சிம்மா அவர்களிடம், அவனிடம் முதல்ல நாங்க பேசிக்கிறோம். பின் உள்ளே வாங்க என்றான்.
ம்ம். வாங்க வெளிய இருக்கலாம் என்று தாத்தா சொல்ல, எல்லாரும் அவனை பார்த்தும் முறைத்துக் கொண்டும் சென்றனர்.
கீர்த்தனாவை பார்த்த சுவாதி, “அவளிடம் வந்து உனக்கு ஒன்றுமில்லைல்ல?” என வினவ, சுவாதி அம்மா ஆரம்பித்தார் அவர் புராணத்தை.
இவளால் தான் என் பிள்ளை இப்படி ஆகிட்டான். உனக்காக எதுக்குடி பண்ணான்? உன்னையும் என அவர் பேசும் முன்னே, “அம்மா” என சுவாதி கத்தினாள். அவள் சத்தத்தில் விக்ரம் வெளியே வந்தான்.
கீர்த்தனாவிற்கு என்ன பேச வந்தார்கள் என்று தெரியாமலா போகும்?” அவள் கண்ணீருடன் சுவாதி கையை எடுத்து விட்டு அறைக்குள் செல்ல முனைய, “கீர்த்து” என்று விக்ரம் சுவாதி அம்மாவை முறைத்துக் கொண்டே, “நீ ஓ.கே தான?” வா..என்று அவள் இருந்த அறைக்குள்ளே அவளை அழைத்து சென்றான்.
தாத்தா,..இவங்க என்னோட அம்மாவே இல்லைன்னு எழுதி கொடுத்திறலாம் போல இருக்கு என்று சீற்றமுடன் சுவாதி சொல்ல அனைவரும் அதிர்ந்தனர்.
ஏம்மா, அவருக்கு கீர்த்து தான் எல்லாமேன்னு தெரிஞ்சே இப்படி பேசுறாங்க. என் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்காமல் இருந்தால் சரிதான் என்றாள்.
உன்னோட அம்மாவுக்கு நல்ல எண்ணமே வராதுல்ல என்று ரசிகா சுவாதியிடம் பேசுவது போல் எல்லார் முன்னும் சொல்லிக் கொண்டே கீர்த்தனா அறைக்கு சென்று விக்ரமுடன் அவளுக்கு ஆதரவாக இருந்தாள்.
“விகாஸிற்கும் சுவாதி சத்தம் கேட்டுருக்கும்?” அவன் சிம்மாவை பார்க்க சொல்ல, நடந்ததை பார்த்த சிம்மா..உங்க பிரச்சனைய பார்த்துக்கோங்கப்பா. உங்க அம்மாவை திருத்தவே முடியாது போல. இந்த நிலையிலும் கேவலமா யோசிக்கிறாங்க என சிம்மா கூற, விகாஸ் கோபமுடன் அவனை முறைத்தான்.
அவங்க பேசியதுக்காக சொன்னேன். “நீ உதவ போனதால தான கீர்த்துவுக்கும் இந்த பேச்சு?” தேவைதான். நீயும் உன் தங்கையும் உன் அம்மாவை விட்டு நகராதீங்க. இல்ல..யாரை பார்த்தாலும் பேசிடுவாங்க என்றான்.
ரகசியன் சுவாதி அம்மாவை திட்டுவதை பார்த்தவுடன் தான் சிம்மாவிற்கு கீர்த்தனாவிடம் அவர் பேச வந்தது புரிந்திருக்கும்.
விகாஸ் கோபமாக எழ, அமைதியா இரு. உடம்பை சரி செய்துட்டு நீ உன் அம்மாவிடம் பேசிக்கோ. விக்ரம் வந்தால் என்னை கொன்றுவான். ஒழுங்கா ஓய்வெடு என்று சிம்மா அவனுடன் அமர்ந்தான்.
கீர்த்தனா அறைக்குள் வந்து, “அண்ணா” என்று அவனை அணைத்துக் கொண்டு “அவருக்கு ஒன்றுமில்லையே?” எனக் கேட்டாள்.
“அவனுக்கென்ன?” டிரிப்ஸ் ஏறுது. நன்றாக ஆப்பிளை கொறித்துக் கொண்டிருக்கிறான் என்று சுவாதி அவளிடம் வந்து அமர்ந்தாள். விக்ரமும் ரசிகாவும் அவளை பார்க்க, விக்ரம்..“அம்மாவை என்ன சொல்றதுன்னே தெரியல” என்று அவனை பார்த்து விட்டு கீர்த்தனாவிடம், சாரி கீர்த்து, அம்மா அப்படிதான் என்று சொல்லி விட்டு அமைதியாக இருந்தாள்.
அன்னம் உள்ளே வந்தார். பாப்பா, “நீ நல்லா இருக்கேல்லடா?” என்று கீர்த்தனாவிடம் கேட்டார்.
நல்லா இருக்கேன்ம்மா என்றாள்.
“எல்லாரும் சாப்பிடாம இங்க வந்துட்டாங்க” என்று அவர் கையில் கொண்டு வந்த கேரியரை எடுத்து வெளியே வைத்து பிரித்துக் கொண்டே, விக்ரம் சிம்மாவை அழைச்சிட்டு வா என்றார். அவன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
போ..அந்த பையனுக்கும் சேர்த்து தான் எடுத்துட்டு வந்திருக்கேன். இந்தா…இதை அவனுக்கு கொடு என்று விக்ரம் அருகே வந்து பாக்ஸ் ஒன்றை கொடுத்து, நீ அவரை பார்த்துக்கோ. சிம்மாவை வரச் சொல்லு. எல்லாரையும் வீட்டுக்கு அழைச்சிட்டு போகச் சொல்லணும் என்றார்.
விக்ரம் சுவாதியை பார்க்க, “நான் பார்த்துக்கிறேன்” என்று அவள் கண்ணசைக்க, அவன் சென்றான். சிம்மா அனைவரையும் அழைக்க, விக்ரம் வெளியே வந்து, சிம்மா “ஒரு நிமிடம்” எல்லாரும் உள்ள வாங்க விக்ரம் அழைத்தான்.
விகாஸை அனைவரும் வருத்தமாக பார்க்க, அவன் யாரையும் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.
இதை கேளுங்க என்று கீர்த்தனா அஷ்வினியிடம் பேசியதை விக்ரம் போட்டு காட்ட அனைவரும் அதிர்ந்தனர். சுஜித்ரா தன் கணவன் தேவாவை முறைத்தாள்.
மாம்ஸ், “இதை நீங்க இன்னும் அழிக்கவில்லையா?” இதையெல்லாம் காட்டி நான் என்னை நிரூபிக்க விரும்பலை என்றான் விகாஸ் கோபமாக.
சாரிடா வீ, ரகசியன் அவனிடம் வர, எனக்கு யாரிடமும் பேச விருப்பமில்லை. மாம்ஸ்..எல்லாரையும் போகச் சொல்லுங்க எனக் கத்தினான்.
சரி..எல்லாரும் சிம்மாவுடன் வீட்டிற்கு போங்க. அவன் மதியம் வந்திருவான். டாக்டர் சொன்னாங்க. நான் பார்த்துக்கிறேன் என்றான் விக்ரம்.
வீ..அவன் அம்மா அருகே வர, மாம்..என் பக்கம் கூட வராதீங்க. “கீர்த்துகிட்ட என்ன பேசுனீங்க? இப்ப அவளுக்கு ஏதாவது ஆகி இருந்தால் உங்களுக்கு நல்லா இருக்கும்ல்ல? என்னையும் நம்பல அவளையும் கஷ்டப்படுத்துற மாதிரி பேசிட்டீங்க?” ச்சே..உங்க புத்தி மாறவே மாறாது. போங்க வெளிய. உங்கள பார்க்கவே பிடிக்கல என்று சீற்றமுடன் கத்தினான்.
விக்ரமும் மற்றவர்களும் அவனை அதிர்ந்து பார்த்தனர்.
வீ, “அந்த பொண்ணுக்காக அம்மாவை வெளிய போக சொல்றீயா?” அவன் அப்பா கேட்க, ”ஆமா..என்னை தான் நீங்க யாருமே நம்பலையே!” நான் முதலிலே பொண்ணுங்க பின்னாடி போன போதே எனக்கு புத்தி சொல்லி இருக்கணும். ஆனால் யாரும் ஏதும் சொல்லலை. இப்ப என்னாலும் அதிலிருந்து வெளிய வர முடியல. ஆனா என்னை இவ்வளவு கேவலமா நினைச்சுட்டீங்கல்ல? நான் இதுவரை எந்த பொண்ணிடமும் தவறாக நடந்து கொண்டதேயில்லை. ஜஸ்ட் எல்லாருடனும் எல்லார் முன்னும் ஓர் எஞ்சாய் மட்டும் தான் செய்வேன்.
தயவு செஞ்சு எல்லாரும் போங்க. கீர்த்தனாவை ஒருநாள் முழுவதும் பார்த்திருக்கீங்க? நாங்க பேசியது கூட இல்லை. இப்படி அவகிட்ட பேசிட்டீங்க? அவ எந்த நிலையில இருக்கான்னு தெரிஞ்சும் அவள நீங்க புரிஞ்சுக்கலம்மா.
ஆமா, நீங்க பெத்த பிள்ளைகளை பத்தியே கவலைப்பட மாட்டீங்க? உங்ககிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என்று பேசி விட்டு, மாம்ஸ் அவங்கள போக சொல்லுங்க. இல்ல நான் சாப்பிடமாட்டேன் என்று விகாஸ் படுத்துக் கொண்டான்.
விக்ரம் அனைவரையும் பார்க்க, விகாஸ் கோபம் கூட யாருக்கும் பெரியதாக தெரியவில்லை. அவன் கீர்த்தனாவிற்காக பேசியது தான் ஆச்சர்யமாக இருந்தது.
எல்லாரும் வெளியேற, ரம்யா பள்ளிச்சீருடையில் வந்திருந்தாள். அன்னம் அவளை திட்டிக் கொண்டிருந்தார்.
ஓ..காட், அன்னம்மா உனக்கு என்னை திட்டணும்ன்னா நல்லா திட்டு. இப்ப விடு. நான் கீர்த்துவை பார்த்துட்டு போகணும் என்று அவள் சொல்ல, பாட்டி அவளிடம் வந்து, “நீ எப்பம்மா வந்த?” என்று கேட்டார்.
பாட்டி, நான் யாருக்கும் தெரியாமல் சுவர் ஏறி குதித்து வந்திருக்கேன். ராமசாமி மாமா தோட்டம் எல்லாம் கருகி போச்சு. பாவம் அவர்..இருங்க நான் அவளையும் உங்க பேரனையும் பார்த்துட்டு வாரேன் என்று நகர, திலீப் அவள் முன் வந்தான்.
“இப்படி வெளிய வராத” என்றான் அவன்.
எனக்கு தெரியும் தாத்தா. உங்க பேரன் எனக்கு உதவி செய்ததற்கு நன்றி சொல்லிக்கிறேன். நான் எப்படியாவது அவர் கட்டிய பணத்தை எப்பொழுது வேண்டுமானாலும் தந்துடுவேன். ஆனால் அவர் என்னிடம் பேச தேவையில்லை என்று திலீப் முகத்தை கூட பாராது தாத்தாவை பார்த்து சொல்லி விட்டு, சுருதியை பார்த்து, “கீர்த்து எங்க இருக்கா?” என்று அவள் அறைக்கு சென்றாள். போகும் அவளை சோகமாக பார்த்தான் திலீப்.
அவள் கீர்த்தனாவிடம் பேசி விட்டு விகாஸை பார்க்க வந்தாள்.