இனி உனக்கு வயிறு வலியே இருந்தாலும் நீ தான் கார் ஓட்டணும் என்றான் வினித்.
“இதெல்லாம் அநியாயம்டா” தியா சொல்ல, “நியாயம் தான் ஏறு” என்று டிரைவர் சீட்டில் அவளை உள்ளே தள்ளினான் வினித். அஜய் பின்னே அமர, வினித் தியா அருகே அமர்ந்தான்.
காரை எடு தியா. உனக்கு பதில் முருகன் கார் ஓட்ட மாட்டார்.
சரி..எடுக்கிறேன் என்று கடுப்பாக காரை ஓட்டினாள். மெதுவாக..மிகவும் மெதுவாக..காரை நகர்த்தினாள்.
ஏய்..என்னது இப்படி போனா இரவு உணவுக்கு தான் போகணும் என்றான் வினித். அஜய் ஏதும் பேசாமல் தியாவை பார்த்துக் கொண்டிருந்தான்.
எப்படியோ காரை ஓட்டி..இல்லை..இல்லை தள்ளிக் கொண்டு ஓர் கடை முன் நிறுத்தி விட்டு, “அஜய் சார் நீங்களுமா வரப் போறீங்க?” என்று அவனை பார்த்து கேட்டாள்.
“ஏன் நான் வரக் கூடாதா?”
இந்த ஹோட்டல் நீங்க போற ஹோட்டல் மாதிரி பெருசா இருக்காது. இடைஞ்சலா இருக்கும். அப்புறம் என்று அவள் தயங்க, அஜய் ஏதும் சொல்லாமல் காரிலிருந்து இறங்கி ஹோட்டலை பார்த்தான். அவன் இதுவரை இப்படி சிறிய ஹோட்டல் முன் காரை கூட நிறுத்தியதில்லை. அவன் ஹோட்டலை பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.
வினித் இறங்கி முன் செல்ல தியா அஜய்யை பார்த்துக் கொண்டே வினித் பின்னே ஓடினாள். அஜய்யும் அவர்கள் பின் சென்றான்.
மூவரும் ஓரிடத்தில் அமர, சங்கர் அண்ணா..தியா அழைக்க, “அம்மணி வந்துட்டேன்” என்று ஒருவர் வந்தார். “வாங்க தம்பி” என்று வினித்தை பார்த்து விட்டு அஜய்யை பார்த்தார்.
ம்ம்..அண்ணா, ஒன் சாம்பார் சாதம், ஒன் பன்னீர் பிரைடு ரைஸ், ஒன் பிளேட் பிராக்கோலி ப்ரை..ஓ.கே வா வினித்? தியா அவனை பார்க்க, அவன் அஜய்யை பார்த்தான். அஜய் சுற்றி சுற்றி ஹோட்டலை கண்களால் அலசிக் கொண்டிருந்தான்.
அஜய்..வினித் அழைக்க, ஹா..என்று இருவரையும் பார்த்தான்.
அம்மணி, “புது ப்ரெண்டா?” சங்கர் கேட்க, இல்லண்ணா..இவர் நான் இப்பொழுது வேலைக்கு சேர்ந்திருக்கும் கம்பெனியின் முதலாளி. இன்று மட்டும் தான் வந்திருக்கார் என்றாள்.
இல்ல, இனி நானும் இங்க தான் வரப் போகிறேன் என்றான் அஜய். வினித் அஜய்யை உற்று பார்க்க, “ஏன்டா இப்படி பாக்குற?” அஜய் கேட்டான்.
“நீ என்னோட அஜய் தானா?” நம்பவே முடியல என்று தியா..இவன் என்ன சொன்னான் பார்த்தாயா? என வினித் அவளை பார்க்க, வினித் ஏற்கனவே நேரமாகிடுச்சு. சீக்கிரம் சாப்பிட என்ன வேணும்ன்னு சொன்னா அண்ணா தயார் செய்து கொண்டு வந்திருவாங்க என்றாள்.
வினித் அஜய்யை பார்க்க, எனக்கு எதுவாக இருந்தாலும் ஓ.கே. நீயே ஆர்டர் பண்ணு என்றான் அஜய்.
நா..நான் எப்படி? என்று தியா வினித்தை பார்த்தாள். அண்ணா..இன்னொரு பன்னீர் பிரைடு ரைஸூம் பன்னீர் சுக்காவும் கொண்டு வாங்க என்றான் வினித்.
சரிப்பா..என்று அவர் அஜய்யையும் தியாவையும் பார்த்துக் கொண்டே நகர்ந்தார்.
சில மணி நேரத்திலே உணவை சங்கர் கொண்டு வந்து டேபிளில் வைத்து விட்டு, தியாவை பார்த்து..கொஞ்சம் முன்னமே வந்திருந்தா உங்க ப்ரெண்ட்ஸ்ஸ பார்த்திருக்கலாம்ல்லம்மா என்று தயங்கியவாறு தியாவை பார்த்துக் கொண்டே சென்றார். அவள் அவரை பார்த்து விட்டு உணவை உண்ண ஆரம்பித்தாள்.
சங்கர் தியா அருகே தயங்கி வந்து, அப்பா இறந்துட்டார்ன்னு அரசன் சொன்னான்ம்மா. வருத்தப்படாத, ஏதும் உதவி வேணும்ன்னா சொல்லு என்று அவர் கூற, தியா கண்கலங்க, வராத சிரிப்பை வரவைத்து அவரை பார்த்தாள்.
சாரிம்மா..என்று அவர் சொல்ல, நான் ஓ.கே அண்ணா. நீங்க வருத்தப்படாதீங்க என்று எழுந்து வினித்தை பார்த்து, நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வாரேன் என்று கண்ணீர் வடிய சென்றாள்.
என்ன அண்ணா? இப்ப தான் ஏதோ பேசினா. நினைவுபடுத்தீட்டீங்களே! வினித் செல்லமாக கோபிக்க, கேட்கணும்ன்னு தோணுச்சுப்பா. பிள்ளைய நல்லா பார்த்துக்கோ. போன பிறந்தநாளுக்கு கூட பாப்பாவை இங்க தான் அழைச்சிட்டு வந்திருந்தார். ம்ம்..என்று பெருமூச்செடுத்து விட்ட சங்கர், “நல்ல மனுசனுக்கு தான் இப்படி நடக்கணுமா?” என புலம்பிக் கொண்டே நகர்ந்தார்.
“எல்லாரிடமும் நல்லா பேசுவாரோ?” அஜய் வினித்திடம் கேட்க, ம்ம்..என்று அவன் அமைதியாக தியா சென்ற பக்கம் பார்த்தான்.
அஜய் எழுந்து சர்வராக இருந்த பெண்மணியை அழைத்து ஏதோ சொல்ல, அவரும் ரெஸ்ட் ரூமிற்கு சென்றார்.
என்னடா, அவங்ககிட்ட சொன்ன? வினித் கேட்க, தோளை குலுக்கி விட்டு அஜய் அமர்ந்தான்.
உள்ளே சென்ற பெண்மணி, தியாம்மா..வாழ்க்கை நமக்கு நிறைய வச்சிருக்கு. இனி வரும் காலம் உங்களுக்கு வெற்றியாகவே அமையும். உங்க அப்பா எப்பொழுதும் உங்களுடனே இருப்பார் என தியாவை ஊக்குவிக்கும்படி பேசினார். அவள் அவரை பார்த்து, “தேங்க்ஸ் ஆன்ட்டி” என்று முகத்தை கழுவி சரி செய்து விட்டு வெளியே வந்தாள்.
அண்ணா, “பில்” வினித் சத்தம் கொடுக்க, அருகே வந்த சங்கர் வேண்டாம் தம்பி. நான் கொடுத்துக்கிறேன். பாப்பாவை பார்த்துக்கோங்க. அது போதும் என்று அவர் வேலையை கவனிக்க சென்றார்.
தியா அவர்களிடம் வர, “பில் பே பண்ணிட்டியா?” அவள் கேட்க, சங்கர் “சொல்லாதீங்க” என்று கையை ஆட்டினார். ம்ம்..என்று வினித் சொல்ல, தியா அக்கடையின் ஓனர் மேசையில் இருந்த நன்கொடை பாட்டிலில் இருபது ரூபாய்யை போட்டு வெளியே சென்றாள். வினித் அவள் பின் செல்ல, பாட்டிலை பார்த்த அஜய் இரு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அதில் போட்டு சென்றான். உணவுண்ண வருபவர்கள் முழுதாக நூறு ரூபாய்க்கு மேல் போட மாட்டார்கள். ஓனர் விழிவிரித்து அவனை பார்த்தார்.
இல்ல அஜய், தியா தான் ஓட்டணும். எந்த நிலையையும் கடந்து வந்து பழகட்டும். என்ன தியா? வினித் கேட்க, அவள் அமைதியாக காரை எடுத்தாள். மூவரும் கம்பெனி வந்து சேர்ந்தனர்.
வினித் சொல்வதையும் கவனமாக கவனித்தும், அஜய்க்கு உதவியும் அவள் வேலை பளு அவளை இழுத்துக் கொள்ள, அவள் அதில் மும்பரமானாள்.
செங்கதிரோன் தன் காரிகையை காண துடித்து மறைய ஆரம்பித்த நேரம் மூவரும் கம்பெனி விசயங்களை பேசிக் கொண்டே காபி அருந்திக் கொண்டிருந்தனர்.
அஜய், அந்த விசுவநாதன் என்னாச்சு? வினித் கேட்க, பணம் கொடுத்து அவனை பாரின் அனுப்பிய வீடியோ கைல்ல சிக்கி இருக்கு. அதான் அந்த விதுவோட செக்ரட்டரி தான் அதுல்ல இருக்கான். ஆனால் இதில் அவன் தப்பிடுவான். மாட்டுவான்..அந்த விசுவநாதனை தூக்கிட்டா எல்லாம் ஓவர் என்று அஜய் கூறிக் கொண்டே காபியை பருகினான்.
தியா அலைபேசி அவளை அழைக்க, அவள் எடுத்தாள்.
ம்ம்..சொல்லுடா என்று சொல்ல, அந்த பக்கம் அமிர்தன் பேசினான்.
“அப்படியா?” என்ற தியா கண்கள் விரிந்து “என்ன சொன்ன?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“என்னாச்சு? உன்னோட மாமன் அவன் பெற்றோர் வேண்டாம்ன்னு உன்னை தேடி வந்துட்டானா?” என வினித் கேலியாக கேட்க, அவனை முறைத்த தியா..”வாய மூடுடா” என்று எப்ப? எப்படி? எங்க? என வினாக்களை தொடுத்தாள்.
“அவங்க ஊர்ல்லயா?” சொல்லாம எப்படிடா பண்ணாங்க. சிம்மா அண்ணா வரட்டும். நான் கேட்கிறேன்.
என்னமும் செய். ஆனால் கால் பண்ணா எடுக்கலை. வீடியோவை இணைய தளத்தில் போட்டுருக்காங்க என்று அவன் வைத்து விட்டான். அலைபேசியை அணைத்து விட்டு இணையதளத்தை பார்த்தாள்.
“என்ன இவ்வளவு ஆர்வமா பாக்குற?” வினித் கப்பை டேபிளில் வைத்து விட்டு அவளுடன் இணைந்து பார்த்தான். அதில் சிம்மராஜன்- நட்சத்திரா, உதிரன்- ரித்திகாவின் திருமண புகைப்படம் இருந்தது. தியாவும் வினித்தும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு அஜய்யை பார்த்தனர்.
“என்ன?” அவன் கேட்க, நீ..என்று வினித் கேட்க தயங்க, தியா அவள் அலைபேசியை அஜய் முன் வைத்தாள். அவன் அதை பார்த்து, “இதுனால என்ன?” அஜய் கேட்க,” நீ அந்த பொண்ணு பின்னாடி தான சுத்துன?” வினித் கேட்டான்.
“அதுக்கு இப்ப நான் என்ன அழணுமா?” என்று சாதாரணமாக கேட்டான் அஜய்.
ஓ..என்று அவள் வினித்தை பார்க்க, “நாம நம்ம வேலையை கவனிக்கலாமா?”
போ..முடிக்காத பைல்ஸை டைப் செய்து எடுத்துட்டு வா என்று அஜய் தியாவை பார்த்தான். அவள் எழுந்து அவள் வேலையை கவனித்தாலும் அவனை அவ்வப்போது பார்த்தாள்.
வினித்தும் அஜய்யையே பார்க்க, “என்னடா? இப்படி பார்த்தால் நான் எப்படி வேலையை கவனிக்குறது?” அஜய் கேட்டான்.
அஜய் கையை பிடித்து கம்பெனிக்கு வெளியே அழைத்து வந்து பேசினான் வினித்.
“உனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தா காட்ட வேண்டியது தான? எவ்வளவு நேரமா இப்படி தெரிந்தும் தெரியாதது போல் இருக்க?” வினித் கேட்க, அஜய் சிரித்தான்.
என்ன அஜய்? வினித் குரல் கலங்க, ஒன்றுமில்லைடா மச்சான். எனக்கு நட்சத்திராவை பிடித்தது. அவ்வளவு தான். நான் அவளை நேற்றே கடந்து வந்துட்டேன். அவளோட மாமா கூட சந்தோசமா இருக்கட்டும்டா என்று அஜய் கண்கள் கலங்கியது.
வினித் அவனை இழுத்து அணைத்தான். காதல் இல்லை வினித். பிடித்தம் மட்டும் தான். ஜஸ்ட் கண்ணீர் அவ்வளவு தான். இனி அவள பத்தி நான் நினைக்கவே மாட்டேன் என்றான் அஜய்.
ம்ம்..தேட்ஸ் கரெக்ட். உனக்கு என்ன பொண்ணா கிடைக்க மாட்டாங்க.
டேய், நீ இரு பொருளில் சொல்வது போல் இருக்கு. நான் என்னோட ப்ரெண்ட்ஸ்ஸ கட் பண்ணப் போறேன். எனக்கு பிடிக்கல என்றான் அஜய்.
அய்யோ, என்ன சொல்ற? உன்னோட தலையில அடிபட்டிருக்கா? வினித் கேட்க, எஞ்சாய்மென்ட் தான் லைஃப்புன்னு நினைச்சேன். ஆனால் இப்ப தான் நிஜ உலகத்துக்கு வந்திருக்கேன். இனி இதை விட்டு நான் செல்ல மாட்டேன் என வினித்திடம் சொல்லிக் கொண்டே தியாவின் புன்னகைத்த மலர்வதனத்தை எண்ணினான்.
ஹப்பாடா, ரொம்ப நல்லதுடா. உன்னை நம்பி அங்கிளும் கம்பெனியை ஒப்படைத்து விட்டார். நானும் கிளம்புகிறேனா? என்ன செய்யப் போறன்னு எனக்கு கொஞ்சம் பயமா தான் இருந்தது. இனி இருக்காது என வினித் அஜய்யை அணைத்தான்.
ம்ம்..ஆமாடா. என்னோட பொறுப்பை கையிலெடுத்துட்டேன். விட மாட்டேன் என்றான் மீண்டும் தியா நினைவிலே.
ரொம்ப நல்லதுடா. அப்புறம் தியா முழுவதும் உன் பொறுப்புல்ல கொடுத்த கஷ்டப்படுத்த வேண்டாம்ன்னு வீக் என்ட் அப்பாவுடன் தங்க சொல்லி இருக்கேன். அவளுக்கும் கொஞ்சம் மாறுதல் நல்லது தான! உன்னோட அம்மா மட்டும் அவளை நெருங்காம பார்த்துக்கோ. பேசியே கஷ்டப்படுத்துவாங்க என்றான்.
“வீக் என்ட் இங்க இருக்க மாட்டாளா?” அஜய் சிந்தனையுடன், தியா இங்கேயே கூட இருக்கட்டும். அதான் நாங்க இருக்கோம்ல்ல.
“எந்த நேரத்திலும் நீ மாறிட்டன்னா?” வினித் கேட்க, நான் இனி மாற மாட்டேன்டா.
சரி..சரி..ஒரு வருசம் தியாவை நல்லா பார்த்துக்கோ. அவளுக்கு அப்பா மாப்பிள்ளையை ஒரு வருசத்துல்ல பார்த்து வக்கிறேன். பின் பாரின்ல்ல இருந்து வான்னு சொன்னார்.
என்ன? அஜய் திகைக்க, ஆமாடா, தனியா இருக்கிறது எவ்வளவு கஷ்டம். அதுலயும் அவ அழகா இருக்கா. எவனிடமாவது சிக்கிட்டான்னா..அவ்வளவு தான். அதான் அதுக்குள்ள அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு அப்பா சொன்னாரு என்றான் வினித்.
ஓ..என்று அஜய் முகம் சுருங்கியது.
வா, உள்ளே போகலாம் என்று அஜய்யை அழைத்து உள்ளே வந்தான் வினித்.
சார், நான் முடிச்சிட்டேன் என்று தியா பைல்லை கொடுக்க, நீ பாருடா. நான் நம்ம பிராஜெக்ட் எந்த அளவு வந்திருக்குதுன்னு பார்த்துட்டு வாரேன் என்று வினித் நகர்ந்தான்.
தியா பைல்லை நீட்டிக் கொண்டே நிற்க, வினித் சொன்ன தியா கல்யாணம் மட்டுமே அஜய் தலையில் ஓடிக் கொண்டிருந்தது. அவன் தலையில் கை வைத்து அமர்ந்தான்.
“என்னாச்சு சார்? மேம் மேரேஜால கஷ்டமா இருக்கா?” என்று அஜய் அருகே வந்தாள் தியா. தியாவை பார்த்த அஜய், தியா..என்று அவளை இழுத்து அணைத்தான் கண்ணீருடன்.
நட்சத்திராவை எண்ணி அழுகிறான் என்று அஜய்யை ஏதும் சொல்லாமல் அவன் தோளை தட்டினாள்.
ஒன்றுமில்லை சார். “சின்னப்பிள்ளை மாதிரி அழுறீங்க?” உங்களுக்கு மேம் மேல இருந்தது காதல் இல்லை. அதுக்காகவே இப்படி அழுறீங்க? என்று அவள் சொல்ல, அவளை விட்டு நகர்ந்த அஜய், எனக்கு நட்சத்திரா மேல் காதல் இல்லைன்னு எப்படி சொன்ன? என்று கேட்டான்.
காதலித்தால் அவங்கள எப்படி பக்கத்துல வச்சுக்கிறதுன்னு தான் யோசிப்பாங்க. அவங்கள பார்த்துகிட்டே இருக்கணும் போல் இருக்கும். அப்புறம் அவங்களிடம் காதலை கூறி, அவங்களை கல்யாணம் பண்ண வைக்க எப்படி சம்மதிக்க வைப்பதுன்னு சிந்திக்க தோணும். உங்களுக்கு தான் இது போல் ஏதுமில்லையே? என்றாள்.
ஆமா என்று அஜய்..தியாவின் அருகாமையில் காதலை உணர்ந்தது; அவளை பார்த்துக் கொண்டே இருக்க தான் அவளை செக்கரட்டரியாக வினித் சொன்ன போது மறுக்காமல் ஏற்றது என சிந்தித்து, பின் காதலை சொல்லணுமே! என அவளை பார்த்தான்.
தியா..நான் என்று தயங்கி அவளை பார்த்த அஜய்யால் பேச முடியவில்லை. தொண்டை அடைத்தது.
இருங்க சார்..என்று தண்ணீர் எடுத்து வந்து அவனிடம் கொடுக்க, அவன் வாங்கி குடித்து விட்டு மீண்டும் பேச எண்ண, சார் அவங்கள விடுங்க. உங்களுக்கு நல்ல பொண்ணா கிடைப்பாங்க என்று தியா கூறி விட்டு, “பைல் சார்” என்று அவனது மேசையில் வைத்து விட்டு அவள் நகர, அவளை மீண்டும் அவன் அணைக்க வந்தான். இடையே வந்தாள் ருத்ரா.
ம்ம்..என்று கட்டுப்படுத்திக் கொண்டு வேலையை கவனிக்கலானான். அவ்வப்போது தியாவை பார்ப்பதை மட்டும் அஜய்யால் தவிர்க்க முடியவில்லை.
நட்சத்திரா அக்கா, “திலீப் யார காதலிக்கிறான்? உங்களுக்கு தெரியுமா?” ரம்யா கேட்க, அதான் இந்த கல்யாணப்பொண்ணை தான் என்றாள் கீர்த்தனா.
அக்கா, “நான் கீர்த்துவை ஊரை சுற்றி காட்ட அழைத்து செல்லவா?” ரம்யா கேட்க, “ஆமா என்னாலும் உள்ளேயே இருக்க முடியல” என்றாள் கீர்த்தனா பாவமாக.
மாமாகிட்ட கேளு கீர்த்து என்றாள் நட்சத்திரா.
“இப்பவே போறோம்” என்று கீர்த்தனா கையை பிடித்து வெளியே வந்தாள் ரம்யா. சிம்மா அவன் நண்பர்களுடன் இன்று இரவு நடக்கப் போகும் பூஜை பற்றி பேசிக் கொண்டிருந்தான். திலீப்பும் அவர்கள் அருகே அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
அண்ணா..என்று ரம்யா கீர்த்தனாவை இழுத்து சிம்மா முன் வந்து, நான் கீர்த்துவுக்கு நம்ம ஊரை சுத்தி காட்டப் போறேன் என்றாள்.
“இந்த நேரத்துல்லயா? ரம்யா நீ வீட்டுக்கு கிளம்பு” மாறன் சொல்ல, அவனை முறைத்த ரம்யா..அண்ணா ப்ளீஸ்..நாங்க ப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். நாளைக்கு ஸ்கூலுக்கு வேற போகணும். ஈவ்னிங் கிளாஸ் இருக்கு. ப்ளீஸ்..ப்ளீஸ்..என்று ரம்யா கெஞ்சினாள்.
கீர்த்து, “நீ என்ன சொல்ற?” சிம்மா கேட்க, ஏய்..குட்டச்சி, இந்த நேரத்துல்ல என்ன சுத்தி காட்டப் போற. இன்னும் ஒரு மணி நேரத்தில் இருட்டிடும் முகேஷ் சினமாக கூறினான்.
ரம்யா கீர்த்தனாவை பார்த்தாள். சிம்மா அருகே வந்த கீர்த்தனா, “அண்ணா நாங்க போயிட்டு வரவா?” என்று அவள் கேட்கவும் பரிதி இருவரையும் பார்த்து, தனியா இந்த நேரத்துல்ல வேண்டாம். வேணும்ன்னா சிம்மா இவனுக யாரையாவது அனுப்பு என்றார்.
என்னது நாங்களா? எங்களுக்கு வேலை இருக்கு என்று எல்லாரும் ஒரே போல் சொல்ல, ஆமா வேலை பார்த்து இவனுக உசரப்போறானுக பாரு என்று ரம்யா சொல்ல, இந்த வாய்க்கு தான் உன்னிடம் பேசவே விருப்பமில்லாமல் போகுது கார்த்திக் சொல்ல, “விடுங்கடா” என்ற சிம்மா ரம்யா எல்லாரிடமும் இப்படி பேசக்கூடாது என்றான்.
ரம்யா, “முதல்ல ஸ்கூல் டிரஸ்ஸ வீட்ல போய் மாத்திட்டு போங்க” நட்சத்திரா உள்ளிருந்து சத்தமிட்டாள்.
“இருடி” என்று அன்னம் ஓடி வந்து ஒரு டிபன் பாக்ஸை கொடுத்து, உன்னோட அத்தை வீட்ல குடுத்துட்டு போ என்று கொடுத்தார்.
“சரி சரி” என்று அதை வாங்கிக் கொண்டு இருவரையும் அழைத்துக் கொண்டு நேராக அவள் வீட்டிற்கு சென்றாள்.
சிறிய குடிசை தான் ரம்யாவின் வீடு. தனி அறையென ஏதுமில்லை. வெளியே உள்ள திண்ணையில் இருவரையும் அமர வைத்து உள்ளே சென்று பாவாடை சட்டையுடன் துப்பட்டா அணிந்து வெளியே வந்தாள்.
“வாங்க போகலாம்” என்று இருவரையும் அவள் அத்தை வீட்டிற்கு சென்று அவள் அத்தையை அழைக்க, “அடியேய் இவ்வளவு நேரம் எங்க போன?” அவர் சத்தமிட்டார்.
“வாங்க” என்று இருவரையும் அழைத்தாள்.
இல்ல, “நாங்க வெளிய இருக்கோம்” திலீப் சொல்ல, என்ன திலீப், இப்படி யோசிக்கிற? யாரும் உன்னை ஏதும் சொல்ல மாட்டாங்க. கீர்த்து..வா..வா..என்று அவர்களை துளசி வீட்டினுள் அழைத்து சென்றாள்.
இரு அறைகள், ஹால், பாத்ரூம் என துளசி வீட்டில் வசதி கொஞ்சம் இருந்தது. ரம்யாவின் மாமா நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“குட்டிம்மா…மாமா உனக்கு என்ன வச்சிருக்கேன் பாரு” என்று அவர் எழுந்தார். எழுந்து திலீப், கீர்த்தனாவை பார்த்து, “வாங்கப்பா உட்காருங்க” என்று அவர்களை அமர வைத்து அவரும் அமர்ந்து ரம்யாவை பார்த்தார்.
மாமா, “என்ன வச்சிருக்கீங்க?” என்று அவர் கழுத்தை கட்டிக் கொண்டு ரம்யா கேட்க, “அப்பா கழுத்தை விடுடி” என்று கையில் கரண்டியுடன் துளசி ரம்யாவை செல்லமாக அடித்தாள்.
ஏம்மா? என்று அவர் துளசியை பார்க்க, அதை விடுங்க..என்ன வாங்கி இருக்கீங்க? சொல்லுங்க..சொல்லுங்க என்று பரபரத்தாள் ரம்யா.
“இது என்னடி?” என்று அவள் கையிலிருந்த டிபனை வாங்கினார் ரம்யா அத்தை.
அன்னம்மா குடுத்தாங்கத்த. மாமா சொல்லுங்க.
இதோ..என்று ஓர் பெட்டி ஒன்றை எடுத்து நாற்காலியில் அமர்ந்து, அவள் கையில் கொடுத்தார்.
நாற்காலி கையில் அமர்ந்து, என்னவென்று பார்த்த ரம்யா மகிழ்ச்சியில் மாமா..”லவ் யூ” என்று அவருக்கு முத்தமிட்டாள்.
அய்யோ..”முடியலப்பா” என்றாள் துளசி.
அண்ணி, இங்க பாரு. எனக்கு மாமா டாக்டர்ஸ் பயன்படுத்தும் ஸ்டெதஸ்கோப் வாங்கி இருக்கார் என்று காதில் மாட்டி..மாமா..மூச்சை இழுத்து விடுங்க என அவள் அவருடன் கலகலப்பாக பேச, வந்தவர்களுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தார் துளசியின் அம்மா.
இருவரும் வாங்கிக் கொண்டு அவளை பார்த்துக் கொண்டிருந்தனர்.
திலீப், நீயும் இதுபோல் வச்சிருப்பேல்ல என்று திலீப் அருகே வந்து அமர்ந்தாள். ம்ம்..என்றான் அவன்.
மாமா இது உங்களிடமே இருக்கட்டும். நான் மெடிக்கல் காலேஜ் சேர்ந்த பின் வாங்கிக்கிறேன் .
சரி..சரி..வாங்க நேரமாகிடும். பை அத்தை, மாமா, அண்ணி இருவர் கையையும் பிடித்து இழுத்தாள்.
“எங்கடி போற?”
“ஊரை சுத்தி காட்டப் போறேன்” என்று கத்திக் கொண்டே இருவரையும் இழுக்க, “மெதுவா போகலாம்” என்றான் திலீப்.
மூவரும் பேசிக் கொண்டே சென்றனர். ரம்யா அவளது மருத்துவர் கனவை கூற, “உனக்கு உன்னோட அண்ணாவை விட மாமா தான் பிடிக்குமா?” கீர்த்தனா கேட்டாள்.
ஆமா, மாமா தான் ரொம்ப பிடிக்கும். நான் மாமா செல்லம். என்னை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார். அண்ணா ரொம்ப கண்டிப்பு தான். என்ன தான் மாமா வீட்ல வளர்ந்தாலும் அண்ணா வீட்டில் இருந்தால் வீட்டுக்கு வந்திருவேன்.
“உன்னோட வீட்ல காற்றாடி கூட இல்லையே? எப்படி அங்க தூங்குவ?”
அண்ணா, இருக்கான்ல்ல. எங்களுக்கு பழகிடுச்சு.
ஓ..
“நீ எந்த காலேஜ்ல்ல சேரணும்ன்னு நினைக்கிற?” திலீப் கேட்டான்.
எப்படியாவது நான் காலேஜ் போகணும். அப்புறம் எந்த காலேஜ்ன்னு யோசிக்கலாம்.
ஏன்? நீ நல்லா படிப்பன்னு தான சொன்னாங்க.
படித்து..பணம் வேண்டும்ல்ல. மாமாகிட்ட அண்ணா கண்டிப்பா வாங்க மாட்டான். அவர் என்று இல்லை யார் கொடுத்தாலும் ஓசியாக யாரிடமும் எதுவும் வாங்க மாட்டான். எனக்கு காலேஜ்ல்ல இருந்து அவங்களா சேர்த்துக்கிட்டா தான்.
இங்க பாருங்க “வள்ளி” என்று ஆட்டுக்குட்டியை விரட்டி விளையாடினாள் ரம்யா. திலீப் சிந்தனையுடன் அவளை பார்த்தான்.
வாங்க..வாங்க..”இந்த வயலுக்குள்ள நடக்கலாமா?” ஜாலியா இருக்கும். அந்த பக்கம் போனால் மோட்டார் பம்பு செட் இருக்கு. பெரிய தொட்டி நிறைய எப்போதும் தண்ணீர் இருக்கும். வா..கீர்த்து ஜாலியா விளையாடலாம் என்று கீர்த்தனாவை இழுத்துக் கொண்டு வயல் மேட்டில் இருவரும் ஓடினர்.
“நில்லுங்க” என அலைபேசியை எடுத்து இருவரையும் புகைப்படம் எடுத்தான் திலீப். அவனும் அவர்கள் பின்னே மகிழ்வுடன் சென்றான். அவ்விடம் அவனுக்கும் பிடித்து போனது. மனதில் மகிழ்ச்சி அவனை தொற்றிக் கொண்டதி.
மூவரும் மோட்டார் பம்பு செட் அருகே சென்றனர்.
கீர்த்தி, திலீப் இதுல்ல ஏறுங்க. சூப்பரா இருக்கும் என்று அத்தொட்டி மீது ஏறி நின்று கீர்த்தனாவிற்கு கையை கொடுத்தாள் ரம்யா. கீர்த்தனாவும் மேலே ஏற, திலீப் தயக்கத்துடன் அதை பார்த்து, கீழ இறங்குங்க. தண்ணிக்குள்ள விழுந்திறாதீங்க என்று அவன் சொல்லி முடிக்கும் முன் கீர்த்தனா கால் வழுக்க ரம்யாவை பிடித்து இருவரும் தண்ணீரில் விழுந்தனர்.
ஏய்..என்று திலீப் சத்தமிட்டு சுற்றி பார்க்க யாருமில்லை. செவ்வானம் பூக்க திலீப் அதை பார்த்துக் கொண்டே தொட்டியில் ஏறி முதலில் கீர்த்தனாவை தூக்கினான். அவளை இறக்கி விட்டு ரம்யாவை பார்த்தான். அவள் அவன் மீது தண்ணீரை தெளிக்க,
போதும் ரம்யா..”வெளிய வா” என்று அவளுக்கு கையை கொடுத்தான். அவள் அவன் கையை பிடித்து ஏறினாள். கால் தட்டி மீண்டும் தண்ணீருக்குள் ரம்யா விழ, அவள் கையை பிடித்திருந்த திலீப்பும் விழுந்தான்.
ஓ..காட்..அங்க பாரு. அவ நடுங்குறா. நல்ல வேலை என்னோட கோர்ட் வெளிய இருக்கு என்று ரம்யாவை திட்டிக் கொண்டே திலீப் அவளை தூக்க வந்தான்.
என்ன பண்ணப் போற? நானே வெளிய வந்திருவேன் ரம்யா கூற, அதான் பார்த்தேனே! கையை கொடுத்தும் வெளியே வர முடியாமல் என்னையும் சேர்த்து தள்ளி விட்டு, “நீ அமைதியா இரு “என்று அவன் மேலே ஏறி குனிந்து அவளை இடையில் கையிட்டு தூக்கி கீழே இறங்கினான்.
ரம்யாவிற்கு பதட்டமானது. எல்லாருடனும் சகஜமாக இருந்தாலும் ஓர் ஆணின் முதல் தொடுதல். அவளுக்கு கூச்சத்தை வர வைத்தது.
திலீப் “விடு” என்று ரம்யா அவனை இறங்க விடாமல் அடிக்க, அவனோ இறங்குகிறேன் என்று சேற்றில் கால் வைத்து இருவருமே கீழே விழுந்தனர்.
அச்சோ..என்று கீர்த்தனா இருவரிடமும் ஓடி வந்தாள். திலீப் மீது விழுந்த ரம்யா வேகமாக எழுந்தாள். அவளது டாப் சற்று மேலேறி இருக்க, ஆடையை சரி செய்தாள். எழுந்த திலீப் அவளை திட்டத் தொடங்கினான்.
ரம்யாவின் உடலும் சேறாக இருக்க அவள் மேலும் தண்ணீர் அருகே செல்ல, நில்லு நீ சென்று மீண்டும் உள்ள விழுந்திருவ என்று அங்கிருந்த மட்டை ஒன்றை எடுத்து அவன் தண்ணீர் எடுத்து கொடுத்தான்.
வாஷ் பண்ணு. சீக்கிரம் இங்கிருந்து கிளம்பணும். இருட்டாகப் போகுது என்று திலீப் அவனும் சுத்தமானான். திலீப் அவனது தடித்த கருப்பு நிற கோர்ட்டை நடுங்கிக் கொண்டிருந்த கீர்த்தனாவிற்கு போட்டு விட்டான். ரம்யா துப்பட்டாவை வாங்கி நன்றாக பிழிந்து அக்குளிர்ந்த காற்றில் உதறினான். பின் அவளுக்கு மேலே போட்டு விட்டான். அவனது சட்டையை நன்றாக பிழிந்து அதையே அணிந்து கொண்டான். அவள் அமைதியாகவே அவனை கவனித்துக் கொண்டே வந்தாள்.
இல்ல கீர்த்து. எனக்கு பழக்கம் தான் என்றாலும் அவள் உடல் நடுக்கம் கண்டது.
“இங்க உட்காருங்க” என ஓரிடத்தில் இருவரையும் அமர வைத்து, ரம்யாவின் உள்ளங்கை, கால் என தேய்த்து விட்டான்.
ரம்யா, உன்னை பற்றி எங்களுக்கு எல்லாமே தெரியும். “எங்களை பத்தி உனக்கு தெரிஞ்சுக்க விருப்பம் இல்லையா?” கீர்த்தனா கேட்க, யார் பற்றியும் நான் தெரிஞ்சுக்க மாட்டேன். தானாக தெரியும் போது அறிந்து கொள்வேன்.
ரம்யா பாதத்தை தேய்த்துக் கொண்டே திலீப் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“ஏன்?” கீர்த்தனா கேட்க, அது அப்படி தான். சொன்னால் உனக்கு புரியாது என ரம்யா திலீப்பை பார்த்தாள்.
“ரம்யா” என்ற சீற்றமான குரலில் மூவரும் அதிர்ந்தனர். மருது சினமுடன் நின்று கொண்டிருந்தான்.
“அண்ணா” என்று ரம்யா எழ, திலீப் இருவரையும் பார்த்தான்.
அண்ணா..நான் என்று ரம்யா தொடங்க, ரம்யாவை சப்பென அறைந்தான் மருது.
“எதுக்கு ரம்யாவை அடிச்சீங்க?” கீர்த்தனா கேட்டுக் கொண்டே ரம்யாவிடம் வந்தாள்.
நோ..கீர்த்து, நீங்க கிளம்புங்க என்றாள் ரம்யா.
இப்பொழுது திலீப் மருதுவிடம் ரம்யாவை அடித்த காரணத்தை கேட்டான். திலீப்பை முறைத்த மருது ரம்யாவை தரதரவென இழுத்து செல்ல, “பை..இருவரும் பார்த்து போங்க” என்று ரம்யா கண் கலங்கினாலும் உதட்டில் நடுக்கமுடனும் புன்னகையுடன் இருவருக்கும் கையசைத்தாள்.
“என்னாச்சு மாமா? எதுக்கு அந்த அண்ணா ரம்யாவை அடிச்சாங்க?” என கீர்த்தனா கேட்க, இருட்ட ஆரம்பித்து விட்டது. இப்ப நாம கிளம்பலாம். நாளைக்கு பேசிக்கலாம் என்றாலும் அவனுக்கு மருதுவின் செயலில் கோபம் வந்தது.
குளிர்ந்த காற்று, கருப்புடையை போர்த்திய ஆகாயம். மணி எட்டை தொட்டது.
சீக்கிரம் கிளம்புங்க. பொண்ணு எந்த அலங்காரமும் இல்லாமல் இருக்கணும் என்று அல்லீ நகரத்தில் சிம்மா- நட்சத்திரா, உதிரன்- ரித்திகாவை அக்காட்டின் நடுப்புறத்தில் முதலிரவிற்கு என தயார் படுத்திய இடத்திற்கு அழைத்து வந்தனர். திலீப், சிம்மா நண்பர்கள், மருது, அவன் ஆட்கள் உடன் பக்கத்து ஊர் குருக்களும் இருந்தனர். ஏதோ யாகம் நடத்திக் கொண்டிருந்தனர்.
அதே போல் தமிழினியன்- மிருளாலினி தயாராகி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஓர் வீட்டிற்கு வந்தனர். அங்கே மிளிரன், ரவி, விக்ரம், தமிழின் தம்பிகள் அனைவரும் உடன் இருந்தனர். அங்கேயும் சில குருக்கள் யாகத்தை நடத்திக் கொண்டிருந்தனர். பெண்கள் அனைவரும் வீட்டில் இருந்தனர்.
விக்ரம், ரவி மிளிரனை பார்த்து, “நீங்க எப்ப வந்தீங்க?” எனக் கேட்டான்.
சிம்மா சார் ஏற்கனவே எங்களை வர வச்சுட்டார். உங்களுக்கு இப்ப கை ஓ.கே தான சார்? ரவி கேட்க, ஓ.கே ரவி என்றான் விக்ரம்.
கணவன்- மனைவி உள்ளே சென்றனர். மிருளா, “உனக்கு பயமா இருக்கா?” தமிழினியன் கேட்க, ம்ம்..என்றாள். ஆனால் இன்றோட பிரச்சனை முடிந்தால் நல்லது தான் என்றாள்.
சில மணி நேரம் அவர்கள் பேசிக் கொண்டும், சிறிது காதல், வெட்கம், தீண்டல் என இருந்தனர்.
உதிரனும் சிம்மாவும் அவர்களுக்கு ஏற்பாடு செய்து வைத்திருந்த டென்ட்டை சரி செய்ய ரித்திகா, நட்சத்திராவை வெளியே நிற்க வைத்து முடித்தவுடன் இரு ஜோடிகளும் இரு டென்ட்டிற்கும் சென்றனர். இருவரிடமும் சற்று அமைதியை கவனித்தனர் சிம்மாவும் உதிரனும். திடீரென திருமணம் நடந்ததால் இப்படி இருக்கிறாள் என இருவரும் எண்ணினர்.
திலீப் நகர்ந்து காட்டின் உள்பக்கம் செல்ல, அங்கே யாரோ ஒரு பொண்ணு அமர்ந்திருப்பதை கண்டான். அவனுக்குள் பயம் தொற்றிக் கொண்டது. சுபிதனின் ஆன்மா போல் வேறு ஏதாவது ஆன்மாவாக இருக்குமோ என பயந்து நின்றான்.
அந்த பொண்ணு அணிந்திருந்த உடையை உற்று பார்த்து, பயந்துடன் அருகே சென்று, “ரம்யா” என அழைத்தான். அவள் திரும்பி பார்க்க, அவள் தான் என்றவுடன் அவனுள் பெருமூச்சு.
“இந்த நேரத்துல்ல இங்க என்ன பண்ற?” திலீப் கேட்க, சும்மா தான். தூக்கம் வரலை திலீப் என்றாள்.
“உன்னோட அண்ணா எதுக்கு உன்னை அடிச்சாங்க?” எனக் கேட்டான். அவள் பதில் கூறவில்லை என்றாலும் விரக்தி புன்னகை சிந்தினாள்.
திலீப், அங்க யாரோ இருக்காங்கன்னு நினைக்கிறேன் என்று ரம்யா நடக்க, “இரு நானும் வாரேன்” என்று பயத்துடன் சுற்றி பார்த்துக் கொண்டே நடந்தான் திலீப்.
திடீரென திலீப், ரம்யாவை யாரோ இடிக்க இருவரும் பயந்து கைகளை கோர்த்துக் கொண்டனர்.
ரித்து, நட்சத்திரா..நீங்களா? என திலீப் அதிர்ந்தான்.
ஏன்? என்னாச்சு? ரம்யா கேட்க, அவளுக்கு நடக்கும் ஏதும் தெரியாது போல.
“மாமா மாமாவ..அது கொல்லப் போகுது” என்று ரித்திகா பதட்டமாக அவர்களை கடந்து ஓடினாள். மற்றவர்களும் அவள் பின் வந்தனர்.
“என்ன நடக்குது?” ரம்யா கேட்க, “உன்னை யாரு இங்க வரச் சொன்னா?” திலீப் கோபமாக கேட்டான். உதிரன் சிம்மா இருக்கும் இடத்தை அடைந்தனர் நால்வரும்.
மருதுவும் மற்றவர்களும் இவர்களை பார்த்து, “நீங்க இங்க இருந்தா சின்னய்யா கூட யாரு இருக்கா?” என்று மருது தன் தங்கையை பார்த்து, “இங்க என்ன செய்ற?” கத்தினான்.
“அண்ணா” என்று அவள் கையை பிசைய,
ரித்து..நட்சத்திரா..நிற்கவேயில்லை. இருவரும் டென்ட்டிற்குள் சென்றனர். அங்கே யாருமில்லை. குருக்கள் அவர்கள் கையில் காளி தேவியின் சூலத்தை கொடுத்தார். அதை பெற்றுக் கொண்டு “மாமா” என இருவரும் கத்தி அழுது கொண்டே ஓடினர்.
ஏதோ பாதரச நிற உருவம் இரண்டு சிம்மா, உதிரன் கழுத்தை பிடித்து தூக்கி இருந்தது. இருவர் கண்களும் சொருக, மரண வாயிலில் நின்றனர்.
மாமா..என ரித்திகாவும் நட்சத்திராவும் ஒருவரை ஒருவர் பார்த்து அச்சூலத்தால் அதை குத்தி தூக்கினர். அதன் ஓலம் எதிரொளிக்க பயத்தில் ரம்யா திலீப்பை கட்டிக் கொண்டாள்.
குருக்கள் அதை அந்த யாக குண்டத்தில் போட சொல்ல, இருவரும் அதை போட சிம்மா நண்பர்கள், மருது அனைவரும் சிம்மா உதிரனிடம் வந்தனர்.
திலீப் ஓடி வந்து சிம்மா முதுகை தட்டி நெஞ்சை தடவி விட்டான்.
“ரம்யா” என அவன் அழைக்க, அவள் பயந்து நின்று கொண்டிருந்தாள்.
ஏய், இங்க வா. இவங்களுக்கு உதவு என திலீப் கத்த, அவள் செவியை அடையவும் ஓடி வந்தாள். சிம்மாவை வைத்து திலீப் செய்யும் அனைத்தையும் கவனித்து உதிரனுக்கு செய்தாள் ரம்யா. இருவரும் சீரானார்கள். மூச்சு மட்டும் சிரமமாக, தள்ளி நில்லுங்க..சுத்து போடாதீங்க என திலீப்பிற்கு முன் ரம்யா அனைவரிடமும் கூறினாள்.
இப்பன்னு பார்த்து காற்றே இல்லை என உதிரன் முகத்தில் ஊதினாள் ரம்யா.
ஏய், “என்ன பண்ற?” அவன் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு கோபமாக கேட்டான்.
சின்னய்யா, ட்ரீட்மென்ட் தான் செய்தேன். காற்று ஊதினேன் என்றாள் ரம்யா.
அந்த பாதரச நிற உருவம் முழுதாக அந்த யாகத்தில் எறிந்து விட நட்சத்திராவும், ரித்திகாவும் தங்களது மாமாக்களை பார்க்க வந்தனர். இரு ஜோடிகளும் கண்ணீருடன் அணைத்துக் கொள்ள, திலீப் கண்கலங்க அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். ரம்யா அவனை பார்த்துக் கொண்டே நின்றாள்.