அஜய், தியா, வினித் கம்பெனிக்கு வர, அவர்களுக்கு முன்னதாகவே அவன் அப்பா தனராஜ் அங்கே இருந்தார். அவர் செக்ரட்டரி கம்பெனி சம்பந்தப்பட்ட அனைத்து பைல்களையும் அவரிடம் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் அறைக்குள் மூவரும் நுழைந்தனர்.
நம்ம ஊழியர்களுக்கு முதலில் உன் மீது நம்பிக்கை வரும்படி பேசி அதை செயல்படுத்தணும். ஒரு வாரம் உன் செயலை கவனித்து தான் உன்னை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்று தெரியும் அஜய். கவனமா இரு. வினித்..கொஞ்சம் பார்த்துக்கோப்பா என்றவர் தியாவை பார்த்தார்.
அம்மாடி நீயும் பார்த்துக்கோ என்று அவர் கூற, அவரின் செக்ரட்டரி வித்தியாசமாக தனராஜை பார்த்தார்.
“என்ன சார் அப்பாவை இப்படி பாக்குறீங்க?” அஜய் கேட்டான்.
“இந்த பொண்ணு மேனஜர் சார் பொண்ணாக இருந்தாலும் இது போல் சார் பேச தேவையில்லையே?” அவர் கேட்க, “நான் ஏதும் தவறாக பேசவில்லையே?”
“எந்த பொண்ணாக இருந்தாலும் பெயர் கூறியோ இல்லை மேடம் என்றோ தான அழைப்பீர்கள்? இது கொஞ்சம் உரிமையாக இருக்கிறதே!” என்று அவர் தியாவை பார்த்தார்.
நல்லா தெரிஞ்ச பொண்ணு. அதான் அழைத்தேன். “உனக்கு தவறாக தெரிகிறதா?” அவர் கேட்க, “இல்ல சார்” என்று அமைதியானார். வினித் அஜய் அப்பாவை முறைத்து நின்றிருந்தான். அவனை பார்த்து விட்டு கண்டுகொள்ளாதது போல் தன் மகனை பார்த்தார். அவன் தியாவை பார்த்தான். அவள் அமைதியாக எல்லாரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அஜய்..மாதவரத்துல்ல இருக்கிற கம்பெனியை மட்டும் நான் பார்த்துக்கிறேன். என்னால வீட்ல இருக்க முடியாது என்றவர். மூவரும் வாங்க..கம்பெனி ஊழியர்களுக்கு உங்களை அறிமுகப்படுத்துகிறேன் என்று அழைத்து அஜய், தியாவை அறிமுகப்படுத்தினார்.
ஏம்மா, உன் அப்பா சாவுக்கு இவர் தான் காரணம். “நீ சாதாரணமாக வந்து நிக்குற?” ஒருவர் சத்தம் கூட்டத்திலிருந்து கேட்டது.
“யாருடா அது?” தனராஜூன் செக்ரட்டரி சினமாக கேட்க, “சார் அமைதியா இருங்க” என்ற தியா, என்னோட அப்பா இங்கே முப்பது வருடமாக பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அதே போல் தான் நானும்.
அறிந்து தவறு செய்தாலும் அறியாமல் செய்தாலும் தவறு தவறு தான். “அதுக்காக பழி வாங்கவா முடியும்? என் வாழ்க்கையை நான் பார்க்க வேண்டாமா?” என்று அஜய்யை தியா பார்க்க, அவன் அவளை தான் பார்த்தான்.
என் அப்பா நிறைய நேரம் இங்கே தான் செலவழித்து இருக்கிறார். அதனால் நான் இங்கே இருக்க நினைக்கிறேன். “நான் இங்கே பணிபுரிய எண்ணுவது தவறில்லையே!” அவள் கேட்க, அனைவரும் கை தட்டினர்.
அஜய் சார், “நீங்க பேசுங்க” என்று தியா சொல்ல, அஜய் வினித்தை பார்த்து விட்டு, இதுவரை நான் பொறுப்பில்லாமல் இருந்திருக்கேன். நான் அறியாத தவறாக இருந்தாலும் மிகப்பெரிய பிழை தான். என்னை தியாவின் அப்பா மன்னிக்க நான் நம்ம கம்பெனிக்காக உழைப்பேன். என்னை நம்பி எனக்காக வாய்ப்பளியுங்கள் என தாழ்வான குரலில் கேட்டான்.
அவன் பேசியதை பார்த்து, “அஜய்யா பேசினான்?” என வினித், தியா, ஏன் அவன் அப்பா கூட ஆச்சர்யமாக பார்த்தனர்.
“வாய்ப்பளிப்பீர்களா?” என ஊழியர்களை பார்த்து விட்டு தியாவை பார்த்தான்.
“எதுக்கு என்னை பார்க்கிறான்?” ஏற்கனவே என்ன செய்ய காத்திருக்கானோன்னு பயமா இருக்கு. “திடீர்ன்னு இவ்வளவு நல்லவனாக பேசுகிறானே!” என மனதினுள் நினைத்தாள்.
ஒரு பொண்ணு முன்னே வந்து, “வாய்ப்பு தாரோம் சார்” என்று தியாவை பார்த்து புன்னகைத்தாள். தியா கண்கள் விரிந்து, ஹே..என பேச வந்தவள் வினித்தை பார்த்து வாயை மூடிக் கொண்டு அவளை பார்த்து கண்சிமிட்டினாள். அஜய்யும் வினித்தும் இருவரையும் பார்த்தனர்.
கம்பெனி சம்பந்தப்பட்ட அனைவரிடமும் பேசினார்கள். பேசி விட்டு அஜய் கேபினுக்கு அழைத்து வந்தார் அவன் அப்பா. அங்கேயே தனியாக தியாவிற்கு இடம் அமைக்கப்பட்டு இருந்தது.
அய்யோ, “இவன் அறையிலேவா நான் இருக்கணும்?” என்று அஜய் அப்பாவையும் அஜய்யையும் பார்த்தாள் தியா. வினித் அவளை புரிந்தவனாக அவள் கையை பிடித்து அழுத்தம் கொடுத்தான்.
“எக்ஸ்யூஸ்மி சார்” என்று தனராஜ் செக்ரட்டரி உள்ளே வந்து உத்தரவு கேட்டு, சில பாக்ஸை அடுக்கினார்.
இது நம்முடைய எல்லா கிளை கம்பெனியிலும் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் பிராஜெக்ட் பற்றிய முழுவிவரமும். நீங்க முதல்ல இந்த கம்பெனியில் நடந்து கொண்டிருக்கும் பிராஜெக்ட்டை வினித் கிளம்பும் முன் லாஞ்ச் செய்யணும். அதற்கான வேலையை பாருங்க என்ற அஜய் அப்பா அவர் செக்ரட்டரியை பார்க்க, அவர் அஜய் மேசையில் இருந்த அலைபேசியை எடுத்து, கிருஷ்ணா..நீங்களும் உங்க டீமும் உங்களோட பிராஜெக்ட்டை எடுத்துக் கொண்டு புது பாஸ் அறைக்கு வாங்க என்று அலைபேசியை வைத்தார்.
சற்று நேரத்தில் கிருஷ்ணா அன்ட் டீம் உள்ளே வர, ஊழியர்களுடன் பேசும் போது தியா பார்த்த பொண்ணும் உள்ளே வந்தாள்.
கிருஷ், “நீயுமா இங்க இருக்க?” என்று தியா அவனை பார்க்க, அவன் தியாவை பார்த்து திரும்பிக் கொண்டான். அவள் முகம் வாடியது.
பிராஜெக்ட் மேனஜராக கிருஷ்ணா பொறுப்பாக அதை பற்றி விளக்கினான். தியா அவனையே பார்ப்பதை கண்டு அஜய்க்கு சினம் துளிர்த்தது. வினித் புன்னகையுடன் தியாவை பார்த்தான்.
பின் அனைவரிடம் பேசி விட்டு, ருத்ரா, நீங்களும் கிருஷ்ணாவும் இருங்க என்றான் வினித்.
தேங்க்யூ சார், “இனி எல்லாவற்றையும் தியாவிற்கு பழக்கி விடுகிறேன்” என்று அஜய் அப்பாவை பார்க்க, அவர் புரிந்து கொண்டு தன் செக்ரட்டரியுடன் வெளியேறினார்.
தியா..ருத்ரா அழைக்க, உர்ரென முகத்தை வைத்திருந்த கிருஷ்ணா அவளை பார்த்து உதட்டை மடித்து சிரிப்பை வாய்க்குள் மறைத்தான்.
ருத்ரா, “இவன் நம்ம கிருஷ் தானா?” தியா கேட்க, கிருஷ் தியா அருகே வந்து அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்து கலகலவென தரையில் அமர்ந்து சிரித்தான்.
அய்யோ, “மானத்தை வாங்குறானே!” என்று அவன் தலையிலே ருத்ரா அடிக்க, அவன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மேலும் சிரித்துக் கொண்டே எழுந்தான்.
வினித், “இவ என்னை கேக்குறாளே! இது நம்ம தியாவா?” என்று ருத்ராவின் துப்பட்டாவை பிடுங்கினான்.
அவள் அவனை மொத்த, அதை மேலே போட்டுக் கொண்ட கிருஷ், “இந்த மாதிரி ஆடையெல்லாம் அப்பாவுக்கும் பிடிக்காது. எனக்கும் பிடிக்காது” என்று அவனுக்கு கூந்தல் இருப்பது போல் அதை சரி செய்தவாறு நடித்துக் காட்ட, வினித், கிருஷ் தியாவை பார்த்து சிரித்தான்.
ராஸ்கல், “என்னையே கிண்டல் பண்றீயா?” என பேப்பர் வெயிட்டை கிருஷ் மீது தூக்கி எறிய, அவன் விலகி விட்டான். இவர்களை திகைத்து பார்த்துக் கொண்டிருந்த அஜய் மீது பட்டது.
அய்யய்யோ சார், பிளட் என தியா அஜய் அருகே செல்ல, மற்ற மூவரும் அதிர்ந்து அவனை பார்த்தனர்.
“வினித்” தியா அழைக்க, “தியா” என்று பொறுமிக் கொண்டே அஜய்க்கு மருந்தை எடுத்து வினித் தியாவிடம் கொடுத்து விட்டு அவளை திட்டிக் கொண்டிருந்தான். வாய் ஓயாது பேசும் அஜய்யின் அமைதியை கண்டு கிருஷூம் ருத்ராவும் ஆச்சர்யமாக பார்த்தனர். அவன் தியாவையும் மற்றவர்களையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். தியா அவன் காயத்தை வெந்நீரால் சுத்தப்படுத்தி பேன்டேஜ் போட்டு விட்டு, அஜய்யை பார்த்து. சாரி சார்..நான் செய்யும் அனைத்தும் உங்களை காயப்படுத்துது. சத்தியமாக நான் வேண்டுமென்றே செய்யவில்லை என்று அவனிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு அவனை விட்டு விலகினாள்.
“என்ன சொன்ன கிருஷ்?” என்று தியா அவனை நோக்கி செல்ல, வேண்டுமென்றே ஷ்..என்று அஜய் சத்தமிட்டான்.
“என்னாச்சு சார்? ரொம்ப வலிக்குதா?” பாவமாக தியா கேட்டுக் கொண்டே, நாயே உன்னை குறி வச்சு பாரு சாருக்கு அடிபட்டிருச்சு.
கிருஷ் சிரித்துக் கொண்டு அஜய்யை பார்த்து விட்டு, “வேறேன்ன சாரை செய்த? எல்லாமே உன்னிடம் புதுசா இருக்கே!” கிருஷ் கேட்க, அதை நான் உன்னிடம் கேட்கணும்.
கிருஷ் அவனை பார்க்க, தியா..அவனோட அப்பா கம்பெனி நஷ்டத்துல மூழ்கிடுச்சு. அதை தனராஜ் சார் தான் வாங்கி இருக்கார். இதை தாங்க முடியாத கிருஷ் அப்பா..என்று ருத்ரா நிறுத்தி கிருஷ்ஷை பார்த்தாள்.
“உட்காருங்க” வினித் சொல்ல, கிருஷ் அருகே தியா அமர்ந்து, “அம்மா என்ன செய்றாங்க?” எனக் கேட்டாள்.
அம்மா, அப்பா காதல் பிரச்சனையில் இப்ப கூட தாத்தாவும் எங்களை ஏத்துக்கலை. நான் தான் பார்த்துட்டு இருக்கேன். அம்மா வீட்ல தான் இருக்காங்க. அவங்களும் வேலைக்கு போறதா சொன்னாங்க. நான் தான் விடாமல் நாம கண்டிப்பா முன்னேறலாம்ன்னு தைரியப்படுத்தி இருக்கேன்.
“அம்மா இது போல் பிறந்ததிலிருந்தே கஷ்டப்பட்டதில்லை தியா” என சட்டென அவளை அணைத்தான் கிருஷ். மூவரும் இதை எதிர்பார்க்கலை.
அவன் அழுது கொண்டிருக்க, திணறிய தியா மூவரையும் பார்த்துக் கொண்டே “நீ..நீயும் தான கிருஷ் கஷ்டப்பட்டதில்லையே!” எனக் கேட்டாள். அவன் இறுக்கம் அதிகரித்தது.
இறுக்கமுடனும் சினமுடனும் அஜய்யை பார்த்த ருத்ரா சட்டென கிருஷை அவள் புறம் இழுத்துக் கொண்டாள். கண்ணீருடன் அவளை பார்த்த கிருஷ் ருத்ராவையும் அணைத்துக் கொண்டான். தியாவிற்கு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த கிருஷ் நினைவிற்கு வந்தான்.
பந்தாவுடன் கேலிச்சிரிப்புடனும் பள்ளியை வலம் வந்த கிருஷ் நினைவுக்கு வந்தான். தியா அவனையே கண்ணெடுக்காமல் பார்ப்பதை கண்ட அஜய் பொறுக்க மாட்டாமல் “எனஃப். ஸ்டாப் பண்ணுங்க” என சத்தமிட்டான்.
வினித் அவனை அதிர்ந்து பார்க்க, மற்றவர்கள் இயல்புக்கு திரும்பி அவன் முன் வந்து நின்றனர்.
“சாரி சார்” என்ற கிருஷ் கண்ணை துடைத்துக் கொண்டு அஜய்யை பார்க்க, “உன்னோட நேம் என்ன?” என்று அஜய் கிருஷ்ணாவிடம் கேட்க, இப்ப தான சார் பேசிட்டு இருந்தோம். அவனோட நேம் கிருஷ்ணா என்றாள் தியா.
தியாவை முறைத்த அஜய், “நான் உன்னிடமா கேட்டேன்? நீ எனக்கு செக்ரட்டரியா இல்லை அவனுக்கா?” என கோபப்பட்டான்.
“இது என்னடா வம்பா போச்சு?” என்று மீண்டும் தியா மருண்ட விழியால் அஜய்யை அப்பாவி போல் பார்த்தாள்.
ஹா..இந்த பார்வை தான். என்னை கொல்லுதே என்று அவன் மனம் அஜய்யிடம் பேச, அவளை தவிர்த்து கிருஷ்ணாவை பார்த்தான்.
“இப்ப உங்க பிராஜெக்ட் எதுவரை இருக்கு?” என பணி சம்பந்தப்பட்ட விசயத்தை இருவரும் பேசினர். மூன்று நாட்களில் எனக்கு இதை முடிக்கணும் என்றான் அஜய்.
சார், “மூன்று நாட்களில் எப்படி முடியும்?” ருத்ரா தயங்கி கேட்டாள். இந்த மூன்று நாள் மட்டும் ஓவர் டியூட்டி பாருங்க என்றான் அஜய்.
தியா வினித்தை பார்த்து அவன் கையை சுரண்டினாள்.
“என்ன?” அவன் மெதுவாக கேட்க, வீட்டிற்கு வேண்டிய வெஜ்ஜீஸ்..பலப்பல வாங்கணும் என்று அவன் காதை கடித்தாள்.
தியா,” என்ன?” அஜய் கேட்க, சொல்லு என வினித்திடம் வாயசைத்தாள் தியா. நீ தான் சொல்லணும் வினித் சொல்ல, ப்ளீஸ்டா என்றாள்.
தியா, உன்னிடம் தான் கேட்டேன் அஜய் சினமாக கேட்க, “எதுக்கு அஜய் இப்படி கோப்படுற?” என்ற வினித்திடம் “பேசாத” என்று கையை உயர்த்தினான்.
வினித் தியாவை பார்க்க, சார் எனக்கு சில பொருட்கள் வாங்கணும். “அதனால் நான் கிளம்பலாமா?” என தியா அஜய்யிடம் கேட்டாள்.
“ஏன் வினித்? அசிஸ்டென்ட்ன்னா? வேலை எப்படி இருக்கும்ன்னு அவளிடம் சொல்லவில்லையா?” அஜய் கேட்க, “இன்று ஒரு நாள் மட்டும் சார்” என்று வினித் கேட்டான்.
நோ..சேர்மன் சார் சொன்னதை கேட்டேல்ல. ஒரு வாரத்துல்ல முடிக்கணும். பிராஜெக்ட்டை லாஞ்ச் பண்ணனும்ன்னா சும்மாவா? அஜய் கேட்க, வினித் அமைதியாக தியாவை பார்த்தான்.
ஓ.கே சார், “வொர்க் முடிச்சிட்டு போகலாம்” என்று தியா அஜய்யை முறைத்துக் கொண்டு சொன்னாள்.
ம்ம்..குட். வேலைய ஆரம்பிங்க. வினித்..முதல்ல செக்ரட்டரி என்னவெல்லாம் செய்யணும்ன்னு அவளுக்கு சொல்லிக் குடு. அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு டீ வேணும். அதை செய்து கொடுத்துட்டு அவள வேற வேலைய பார்க்க சொல்லு.
இன்று மட்டும் தான் நீ அவளுக்கு சொல்ல வேண்டியதை சொல்லித் தரணும். மற்ற நாட்கள் அவள் சரியாக செய்கிறாளான்னு கவனி என்று அஜய் கிருஷ்ணா, ருத்ராவை பார்க்க, “தேங்க்யூ சார்” என்று இருவரும் தியாவை பாவமாக பார்த்து விட்டு சென்றனர்.
“என்ன இவனுக இப்படி பாக்குறானுக? ஆடு பழி கொடுத்தால் இப்படி தான பார்ப்பாங்க? அப்ப நான் ஆடா?” என மனதில் நினைக்கிறேன் என்று வெளியே சொல்ல, வினித் அவளை பார்த்து சிரித்து விட்டு, “நீ ஆடெல்லாம் இல்லை. பூனைக்குட்டி” என்று முதல்ல பாஸ் சொன்ன வேலைய செய் என்றான்.
அய்யோ, “இப்படி நேரடியாகவா பேசுவ?” என அவளை அவளே கடிந்து கொண்டு “வாரேன்” என்று வெளியேறினாள். அஜய்யின் இதழ்களையும் சிரிப்பு தொட்டு சென்றது.
“நீ என்ன நினைக்கிறன்னே எனக்கு புரியல அஜய்?” என்று வினித் அமர்ந்தான்.
“என்ன நினைக்கிறது?” இனி பொறுப்பில்லாமல் இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்.
அது தெரியுது. தியா விசயத்தில் கொஞ்சம் கோபமா இருக்குற மாதிரி தெரியுது. அவள் உன்னை கஷ்டப்படுத்த வந்தான்னா நீ அவளை பயமுறுத்துற என்று வினித் கேட்க, நானா பயமுறுத்தினேன். “அவள் செக்ரட்டரி போலா நடந்துக்கிறா? மத்தவங்க பார்த்தால் என்ன எண்ணுவார்கள்?”
முதல்ல அவளிடம் சொல்லி வை. ப்ரெண்ட்ஸூன்னு எல்லாரிடமும் சகஜமா பேசினா எல்லாரும் அவளை பயன்படுத்திப்பாங்க. அது போல் அவள் நடந்தால் நம்ம கம்பெனி தான் பாதிக்கப்படும் என்றான் அஜய்.
ம்ம்..நீ சொல்றது சரி தான். இந்த கிருஷ் கூட பயன்படுத்த வாய்ப்பிருக்கு என்ற வினித் அஜய்யை பார்த்து, எதுவானாலும் தியாவிடம் அமைதியா பேசு. அவ உண்மையிலே உன்னை கஷ்டப்படுத்த வரல. அதை உனக்கு நான் சொல்ல தேவையில்லைன்னு நினைக்கிறேன். நம்ம ஊழியர்களிடம் சொன்ன காரணத்தால் தான் இங்க வந்திருக்கா. அவளிடம் ஹார்சா நடந்துக்காத. ஒரு வாரத்தின் பின் அவளுக்கு நானும் இருக்க மாட்டேன். நீ தான் பார்த்துக்கணும்.
ம்ம்..ஓ.கே என்று அஜய் சொல்ல, “அது என்ன பக்கத்துல?” வினித் கேட்டான்.
“இதுவா?” சக்கர. நான் மூவி, டிராமா பார்த்திருக்கேன். அதுல செக்ரட்டரி பாஸிற்கு சக்கரை கம்மியா போட்டான்னு அவ மேலே அந்த சூடான டீயை எறிந்து விடுவான். அது போல் உன்னோட பாஸூம் செய்தால், “நான் என்ன செய்வது? நீ எடுத்து கொடுத்த ஆடை பாழாகிவிடுமே!” என்று அவள் சொல்ல, இருவருமே தியாவை அதிர்ந்து பார்த்தனர்.
தியா, அஜய் அப்படியெல்லாம் செய்ய மாட்டான். நீ படத்தையும் வாழ்க்கையையும் ஒத்துப்பார்க்காத. “சூடான டீ மேலே பட்டால் உனக்கு வலிக்குமே!” நீ ஆடையை பத்தி யோசிக்கிற வினித் கேட்க, நீ எனக்கு வாங்கிக் கொடுத்ததுல்ல. எனக்கு உன்னையும் அங்கிளையும் விட வேற யாருமில்லைல்ல என்று தியா கண்கலங்க கூறினாள். எமோசனாக வினித் அவளை இறுக அணைத்தான்.
“என்னை இவள் ஒரு பொருட்டாய் கூட மதிக்கலையா?” என்னை இவளுக்கு பிடிக்கவில்லை என்ற மனமே அஜய்யை வாட்டியது.
வினித் அவளை விடுவிக்க, வினித்..”வெளிய யாருடா அவன்?” சரியா மொக்க போடுறான். தலை “வின் வின்” என வலிக்குது. உன்னோட பாஸை கூட சமாளிக்கலாம் போல அவன சத்தியமா முடியாது என்று தலையை பிடித்தாள்.
ஹா..ஹா..என்று சிரித்த வினித், எல்லாரும் பலவிதமா தான் இருப்பாங்க. நீ சமாளிக்க கத்துக்கணும்.
தியா அஜய்யை பார்க்க, “டேக் யுவர் சீட்” என்று அவனும் வாங்கிக் கொண்டான். ஆனால் அவன் மனம் அலைகடல் போல் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அவ்வப்போது இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
விக்ரம் ஹிப்னடைஸ் செய்யப்பட்டு அவன் மனதை திறந்த போது சொன்னவற்றை உள்வாங்கிய மிருளாலினி ஓரு விசயத்தில் உறைந்திருந்தாள்.
பின் சுயம் வந்து தமிழை தேடி ஓடினாள். தமிழ் திலீப், சுருதிக்கு மேசேஜ் செய்து கொண்டிருக்க, தமிழை பார்த்து ஓடி வந்து அவனை இறுக அணைத்து அழுதாள் மிருளாலினி.
மிருளா, “எதுக்கு அழுற?” யாருக்கும் ஏதும் ஆகாது என்று தமிழ் சொல்ல, இல்ல தமிழ். அதுக்கில்லை. விக்ரம் சொன்னான்ல்ல அந்த கோகுல். அவன் செத்துட்டான். ஆனால் விக்ரம் உயிரோட இருப்பதாகவும் அவனால் தான் ஆபத்துன்னு சொன்னான். அதான் ரொம்ப பயமா இருக்கு என்று மேலும் அழுதாள்.
“என்னது? கோகுலா? யார் அவன்?” தமிழினியன் கேட்க, அனைத்தையும் சொன்னாள் மிருளாலினி.
“மது இவனை பத்தி தான் சொல்ல வந்திருப்பாளோ?” மனதினுள் சிந்தித்தான் தமிழினியன்.
சரி, பார்த்துக்கலாம். முதல்ல சிம்மா, நட்சத்திரா நல்லா இருக்காங்களான்னு பார்க்கணும். “கால் மெசேஜ் பண்ணுங்கடா” என்று தன் தம்பிகளிடம் கூறி விட்டு மிருளாலினியை தனியே அழைத்து வந்து சமாதானப்படுத்தினான்.
மண்டபத்திலிருந்து இரு ஜோடிகளும் கோவிலுக்கு செல்ல பெரியவர்கள் அறிவுறுத்த, அத்தை, மாமாவிற்கு நாட்கள் ஆகட்டும். அப்புறம் கோவிலுக்கு போறோம் என்று நட்சத்திரா சொல்ல, சிம்மாவும் உதிரனும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
அது பிரச்சனையில்லம்மா. இன்று அந்த காட்டில் காளி கோவில் சற்று தள்ளி தான் முதலிரவு. அந்த கடவுள் தான் பிறப்பு இறப்பை வகுத்து, உங்களை உலக அழிவிலிருந்து காக்க தான் தேர்ந்தெடுத்து இருக்கார். அதனால் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி விட்டு அவரவர் வீட்டிற்கு செல்லுங்கள் என்று பூசாரி அறி வுறுத்த, “இதனால் தீட்டோ, நம்ம ஊருக்கோ பிரச்சனை ஏதும் வராதே!” என்று ஒருவர் கேட்க, “கண்டிப்பாக இல்லை” என்று பூசாரி சொல்ல, அவர் கூறியது போல் செய்து விட்டு, உதிரன்- ரித்திகா புகழேந்தி வீட்டிற்கும், சிம்மராஜன்- நட்சத்திரா- அர்சு பரிதி வீட்டிற்கும் சென்றனர். மகிழன், சுருதி, அவளோட அப்பா ரித்திகாவுடனும் திலீப் சிம்மாவுடனும் சென்றனர்.
புகழேந்தி வீட்டில் மணமக்கள் வெளியே நிற்க, ஆலம் கரைத்து வந்தாள் மான்விழி. அம்சவள்ளியின் சித்தி பொண்ணு.
அண்ணா, “பெருசா கொடுத்தா தான் உள்ளே போக முடியும்” அவள் உதிரனிடம் பேசிக் கொண்டே ஆலம் எடுக்க, உதிரன் பாக்கெட்டில் கார்டு தான் இருந்தது.
கார்டை அவன் கொடுக்க செல்ல, அதை பறித்த மகிழன் “மாமா என்ன செய்றீங்க?” என்று அவன் கையிலிருந்து நூறு ரூபாய்யை கொடுத்தான்.
“வாட்? வெறும் நூறு ரூபாயா?” அவள் கேட்க, போதும் போதும். எல்லாரும் உள்ள போங்க என்றான் மகிழன்.
அனைவரும் உள்ளே சென்றனர். யாரும் பெரிதாக அவன் வார்த்தையை கண்டுகொள்ளவில்லை. ரித்திகா..வாம்மா பூஜை அறையில் விளக்கேற்ற சொன்னார் அம்சவள்ளி. அவளும் விளக்கேற்றி சாமி கும்பிட, உதிரன் அவளது நெற்றியிலும் அவளது தாலியிலும் பொட்டு வைத்தான். கண்களை இறுக மூடி திறந்த ரித்திகாவை பார்த்து, எந்நிலையிலும் உன்னை கைவிட மாட்டேன் என்று அவள் கையை இறுக பற்றினான்.
ஏய், “என்ன திமிறா?” உன்னை உள்ளே விடவே மாட்டேன் மான்விழி வம்பு செய்ய, நான் உள்ளே வாரேன்னு சொல்லவேயில்லையே என்று மகிழன் வெளியே நகர்ந்தான்.
மகிழ், “என்ன பண்றீங்க? அக்கா தனியா ஃபீல் பண்ண மாட்டாங்களா?” என்று அவன் பின்னே வந்து சுருதி கேட்க, எனக்கு பதில் அவளோட நீ துணைக்கு நில்லு என்றான் பட்டென.
“வாட்?” அதிர்ந்தாள் சுருதி.
என்னால உள்ளே வர முடியாது. நீ போ என்றான்.
“அவ்வளவு தானா?” சுருதி கேட்க, அவ்வளவே தான் என்றான்.
அப்பத்தா வீல்சேருடன் வெளியே மகிழனை பார்த்து அழைக்க, “என்னால வர முடியாது” என்று அவன் அங்கிருந்து நகர, “இப்ப பிரச்சனை வேண்டாம்ப்பா” என்றார் சுருதி அப்பா.
அங்கிள், “உங்களுக்கு இவங்கள பத்தி எல்லாம் தெரியாது?” எப்ப வேண்டுமானாலும் எப்படின்னாலும் மாறுவாங்க. உதி மாமாவை நம்பி மட்டும் தான் நான் அக்கா திருமணத்தை சம்மதித்தேன்.
“இதே இடத்தில் அவங்க பொண்ணையே என்ன கேள்வியெல்லாம் கேட்டு அசிங்கப்படுத்தினார் இந்த பெரிய மனுசன்?” பாவம் அண்ணி..அப்ப அர்சு அவங்க வயித்துல்ல இருந்தான். எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க என்று அவன் சொல்ல, “நில்லுய்யா” என்று அப்பத்தா மகிழனை அழைத்தார்.
நான் உன்னையும் சேர்த்து தான் சொல்றேன். “பேத்தி பேத்தின்னு அவ்வளவு உறவாடுன? அண்ணி சொல்ல வந்ததை காது கொடுத்து கேட்டியா?” ஒரு வேலை அன்றே விசாரித்து இருந்தா..அண்ணி, அண்ணா, அக்கா, மாமா எல்லாருக்கும் எப்பவோ திருமணம் முடிந்திருக்கும் என்று கோபமாக சொல்ல, மகிழ், “உள்ள வா. நடந்து முடிந்ததை பற்றி யோசிக்காதடா” உதிரன் வெளியே வந்தான்.
மாமா, அக்கா இனி உங்க பொறுப்பு. உங்க அப்பா மாதிரி நீங்க நடந்துக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன் என்று ரித்திகாவை பார்த்தான். அவள் கண்ணீருடன் அவனை தான் பார்த்தாள்.
புகழேந்தியும் அம்சவள்ளியும் அவன் பேச்சை கேட்டு அவனருகே வந்தனர்.
“உன்னோட கோபம் புரியுது? எங்க மேல இருக்கிற கோபத்தை உன் அக்காவிடம் காட்ட போகிறாயா?” அவ கஷ்டப்படுவால்ல. அங்க பாரு. அழுறா அம்சவள்ளி சொல்ல, என் மேலுள்ள பாசத்துல்ல தான அழுறா. அழட்டும். ஆனால் என்று மகிழன் பேச, டேய்..மருது என்று புகழேந்தி கொடுத்த சத்தத்தில் கடோத்கஜன் போல் ஐவர் அவனை சுற்றி நின்றனர்.
“யாராவது பக்கத்துல்ல வந்தீங்க?” அவ்வளவு தான் என்று மகிழன் கபடி ஆட, “விடுவோமா உன்னை?” என்று ஐவரும் அவனை புகழேந்தி வீட்டிற்குள் தூக்கி வந்து போட்டனர்.
யோவ், “மாமா உன்னால என்னோட மானம் போச்சு” என்று மகிழன் புகழேந்தியிடம் சொல்ல, “என் பெரியப்பாவையே கை நீட்டி பேசுற?” சண்டைக்கு வந்தாள் மான்விழி.
இவர்களது செய்கையில் அனைவரும் புன்னகைக்க, சுருதி புன்னகை நின்று ரித்திகாவை பார்த்தாள்.
“என்ன?” ரித்திகா புருவத்தை உயர்த்த, என்னோட அண்ணா, மாமா என எனக்கு நிறைய பேர் இருக்காங்க. உங்க நிலையில் நானிருந்தால் அவங்க எனக்காக இவ்வளவு பேசி இருக்க மாட்டாங்க என்று மகிழனை பார்த்தாள்.
ரித்திகா அவளை நெருங்கி, “உனக்கு மகிழை பிடிச்சிருக்குல்ல?” எனக் கேட்க, சுருதி வேகமாக விலகினாள்.
நான் ஏதும் செய்யமாட்டேன். பயப்படாத. அவனிடம் சொல்லிடு. அவன் முடிவெடுக்க வருடங்கள் கூட ஆகும்.
“அப்ப நீங்க என்னை?”
ம்ம்..எனக்கு ஓ.கே தான். “இவ்வளவு க்யூட்டா பொண்ணை வேண்டாம்ன்னு யாராவது சொல்லுவாங்களா?” ரித்திகா கேட்க, அவள் முகம் சிவப்பேறியது. மகிழன் இருவரையும் பார்த்தான்.
அப்புறம், இனி அவன் தனியே தான் இருப்பான். முடிஞ்சா பார்த்துக்கோ. அதை விட உன்னோட குடும்பம் பெருசுல்ல. அதனால அவன் உன்னுடன் இருந்தால் நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன் என்று ரித்திகா சொல்ல, கண்ணீருடன் சுருதி அவளை அணைத்து, என்னோட குடும்பத்தை வைத்து நீங்க என்னை மறுத்துடுவீங்களோன்னு நினைச்சேன் என்றாள் அவள்.
“அழாதம்மா” அவன் உன்னை தான் பார்க்கிறான் உதிரன் மெதுவாக சொல்ல, “நான் வெளிய இருக்கேன்” என்று சுருதி கண்ணை துடைத்துக் கொண்டு வெளியேறினாள். மகிழனை பார்த்து ரித்திகாவும் உதிரனும் ஒரே போல் புன்னகைத்தனர். அவன் இவர்களை பார்த்துக் கொண்டே சுருதியையும் பார்த்தான். அவள் அப்பா அங்கிருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
“என்ன?” மகிழன் ரித்திகாவிடம் கேட்க, அவள் சுருதி சென்ற திசையை காட்டினாள்.
மகிழன் எழுந்து சுருதியை பார்க்க சென்றான். மனதில் புன்னகை இருந்தாலும் “ரம்யா, இந்த மான்விழி அவனை தன்னை விட்டு பிரித்து விடுவார்களோ?” என்று தேவையில்லாத யோசனையில் இருந்தாள்.
மஞ்சள் நிற சட்டையும், பட்டு வேஷ்டியுமாக இருந்த மகிழன் அவளருகே வந்து அமர்ந்து, “அக்காவும் மாமாவும் உன்னிடம் என்ன பேசுனாங்க? ஏதும் திட்டினாங்களா? அதான் அழுதியா?” அவன் கேட்க, அவள் முதலில் அதிர்ந்தாலும் இல்லை சும்மா தான் பேசினாங்க. “உங்க அக்கா, மாமா சோ..க்யூட்” என்றாள்.
“அப்படியா?” என்று அவளை பார்த்தான்.
அம்சவள்ளி இவர்களிடம் வந்து, “தனியா எதுக்கு இங்க இருக்கீங்க?” வாங்க உள்ள போகலாம் என்று அழைக்க, மகிழனும் சுருதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
பரிதி வீட்டிற்கு வந்த மணமக்களை அர்சுவுடன் சேர்த்து நிற்க வைத்து கீர்த்தனா மூலம் ஆலம் சுற்றி உள்ளே அழைத்து வந்தனர். சிம்மா நட்சத்திராவை பார்த்து, “என்னோட எத்தனை வருட கனவு தெரியுமா?” என அவள் காதில் கேட்க, ம்ம்..”எனக்கும் தான் மாமா” என்று நட்சத்திரா கண்ணில் கண்ணீர்த் துளிகள்.
அம்மா, “எதுக்கு அழுறீங்க?” அர்சு கேட்க, “சந்தோசத்துல்ல தான்டா கண்ணா” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். சிம்மா அவள் கையை இறுக பற்றினான். அத்தருணம் அனைவருக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது.
சற்று நேரம் அனைவரும் பேசி விட்டு மணமக்களை தனித்தனி அறைக்கு ஓய்வெடுக்க அனுப்பினார்கள். கீர்த்தி அசதியில் சோபாவிலே தூங்கி விட்டாள். மற்ற சொந்தங்கள் சற்று நேரத்தில் கிளம்பி விட, பரிதி கீர்த்தியை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார். நட்சத்திராவுடன் அர்சு இருக்க, சிம்மாவுடன் திலீப் ஓய்வெடுத்தான்.
அந்தி வானப்பொழுதில் வீட்டில் ஒரே கலகலப்பு சத்தம். திலீப் எழுந்து அறையை பார்க்க சிம்மா இல்லை. முகம் கழுவி துடைத்து, தலை வாரி விட்டு வெளியே வந்தான் திலீப்.
கீர்த்திக்கு எதிரே அமர்ந்து கதை அளந்து கொண்டிருந்த ரம்யாவை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். அருகே சின்னபசங்க சிலர் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் வாயை பிளந்து திலீப்பை பார்க்க, “ஏன்டா இப்படி பாக்குறீங்க? நான் அதிர்ச்சியாகும் படி எந்த கதையும் சொல்லலையே!” என ரம்யா கேட்க, கீர்த்தியும் திலீப்பை தான் பார்த்தாள்.
ஏய், ஊத்தவாய்..நான் இவ்வளவு அழகா கதை சொல்லீட்டு இருக்கேன். “எங்கடா பாக்குற?” ரம்யா ஓர் பையனை கேட்க, கொஞ்சம் திரும்பி பாரு. ப்ரெஷ் ஆப்பிள் மாதிரி ஒருத்தர் இருக்கார் என்றான்.
“ப்ரெஷ் ஷ்..ஆப்பிளா?” ரம்யா திரும்பி திலீப்பை பார்த்து விட்டு, “ஆப்பிள் சார்.. ஆப்பிள் சார்..”என்னை கொஞ்சம் பேச விடுங்களேன். இந்த சின்னப்பசங்க உங்கள பார்த்து ஜொல்லு ஊத்துறானுக.
சார்..எங்க ஸ்கூல் பக்கம் வந்தீங்க. எவளும் கிளாஸ்ல்ல இருக்க மாட்டாளுக என்று ரம்யா பேசிக் கொண்டே செல்ல, “என்னடி பேசுற வாயாடி?” தம்பி இவ இப்படி தான் தப்பா எடுத்துக்காதீங்க என்றார் அன்னம்.
அன்னம், உன் பேச்சே சரியில்லை. வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளி முன் இந்த ரம்யாவை அவமானப்படுத்தீட்ட. “நானில்லை நீ போ வீட்டை விட்டு” என்று ரம்யா சொல்ல, அவள் சொன்ன பாணியில் கீர்த்தி சிரித்து விட்டாள்.
அடக் கழுத, “என்னையவே என் வீட்டை விட்டு போக சொல்ற?” என்று மேசையில் இருந்த தட்டை கையில் எடுத்து அன்னம் ரம்யாவை விரட்ட, சிம்மா உள்ளே வந்தான்.
அய்யோ,” போலீஸ் வீட்லயே கொலை பண்ண பாக்குறாங்களே!” என்று போலீஸ்கார் என்னை காப்பாற்றுங்கள். உங்க அம்மா என்னை கொல்ல வருது என்று சிம்மா பின் நின்றாள்.
அம்மா, “அவள விரட்டினா..அவளுக்கு நீ செய்ததை நான் எடுத்துக்கவா?” என சிம்மா கேட்க தட்டை கீழே வைத்து விட்டு, “அடியேய் போய்ட்டியா?” என்று அன்னம் சத்தம் போட, “என்னோட வீட்டை விட்டு நான் எதுக்கு போகணும்?” என்று வெளியேயிருந்து சத்தம் கேட்டது.
“உள்ள வாடி” அன்னம் அழைக்க, அம்மா..இங்க சில மசாலா நடக்குது. நான் பிரீயா பார்த்துட்டு வாரேன். நீ எடுத்து வை என்று அவள் சொல்ல, “என்னது?” அக்கா நானு..நானு..என்று முந்தியடித்துக் கொண்டு அந்த பசங்க வெளியே ஓடினர்.
“அது என்ன மசாலா?” திலீப் கேட்க, சிம்மா அவனை பார்த்து புன்னகைத்து, “நீங்களும் பார்க்கலாமே!” என்றான்.
சிம்மா..சும்மா இரு. தம்பி அவளுக்கு வேற வேலையில்லை என்று அன்னம் சொல்ல, “இருங்க நான் பார்த்துட்டு வாரேன்” என்று கீர்த்தி வெளியே ஓடினாள்.
அய்யய்யோ..உன்னோட அண்ணாவுக்கு தெரிஞ்சா நான் காலி. அம்மா நான் வாரேன் என்று சிம்மா கீர்த்தி பின் ஓடினான். “அப்படி என்ன தான் மசாலா?” என்று திலீப்பும் அவர்கள் பின் சென்றான்.
ஒரு பொண்ணும் பையனும் காதல் செய்து கொண்டிருந்தனர். என் செல்லம்..என் அம்மு..என் பட்டு..அவன் கொஞ்ச, இவளோ..டார்லிங்கை விட்டுட்டீங்க மச்சான் என்று அவள் எடுத்துக் கொடுக்க, மறைந்திருந்து பசங்களோட பசங்களாக ரம்யா பார்த்துக் கொண்டிருந்தாள். அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தி கண்ணை மூடினான் சிம்மா.
திலீப் இதை பார்த்து, “சின்ன பசங்க செய்ற வேலையா? எதை பார்த்துட்டு இருக்கீங்க?” என்று ரம்யாவையும் பசங்களை பார்த்து சத்தமிட்டான். இவன் கொடுத்த சத்தத்தில் அந்த ஜோடிகள் பயந்து ஓடி விட்டனர்.
பக்கத்து வீட்டினர் வெளியே வந்து எட்டி பார்த்தனர். திலீப் ரம்யாவை முறைத்து பார்க்க, இங்க பாருங்க. எங்க ஊர்ல மறைஞ்சு தான் காதல் செய்றாங்க. அதுவும் லிமிட்ல தான் இருப்பாங்க. சும்மா எங்க பொழுது போக்கா எல்லாரும் பார்ப்போம். அவ்வளவு தான்.
ஆனால் உங்க சென்னையில பெரியவங்க இருக்காங்கன்னு மரியாதை இல்லாமல் கிஸ் செய்வது; பீச்ல்ல படகடியில் இருந்து கொண்டு சில்மிசம் செய்வது; ஏமாத்தி கூட்டிட்டு போய் கதைய முடிப்பதெல்லாம் எங்க ஊர்ல கிடையாது.
“இப்ப மட்டும் எங்க பிரசிடன்ட் இதை பார்த்திருந்தால் இவங்களுக்கு எவ்வளவு பெரிய தண்டனை கிடைக்கும் தெரியுமா? உங்க ஊர்ல உங்களால பாதிக்கப்பட்ட பொண்ணுக்கு நியாயம் வாங்கி தர முடியுமா?” என்று ரம்யா பாயிண்டை பிடிக்க, திலீப்பால் ஏதும் பேச முடியல.
அம்மாடி, செல்லக்குட்டி. போதும். நீ டாக்டரை விட வக்கீலுக்கு படிக்கலாம். எனக்கும் உதவியா இருக்கும் என்று சிம்மா அழைக்க, அண்ணா..நீங்க போங்க. நான் அப்புறம் வருகிறேன் என்று ரம்யா நகர்ந்தாள்.
அக்கா, இரு. நாங்களும் வாரோம். உன்னை போய் நல்லவன்னு பேசினோம் பாரு என்று பதினொரு வயதை ஒத்த சிறுவன் சொல்லிக் கொண்டே நகர்ந்தான்.
திலீப் சிந்தனையுடன் வீட்டிற்கு வந்தான். சிம்மா கீர்த்தியிடம் பேசிக் கொண்டிருந்தான்.
“இது தப்பு தான அண்ணா? அவ நியாயம் பேசுற மாதிரி பேசுறா?” கீர்த்தி கேட்க, புன்னகைத்த சிம்மா, அவள் சிறு வயதிலிருந்து பார்த்து வளர்ந்திருக்காம்மா. சென்னையில ஜோடி ஜோடியா சுத்துறது போல இங்க சுத்த மாட்டாங்க.
பொண்ணும் பையனும் பேசணும்ன்னாலே திருட்டுத்தனமா தான் பேசுவாங்க. நீ பார்த்தேல்ல.. மடியில படுத்திருந்தாலும் அவர்கள் கையை கோர்த்து கொஞ்சி தான் பேசிட்டு இருந்தாங்க. இதுல உனக்கு என்ன தவறு தெரியுது?
இதை தான நம்ம சிட்டி, பாரின்ல ரோட்டுல செய்றாங்க. இதை விட காதலிப்பது ஒருவரை என்று கல்யாணம் வேறொருவருடனும் தான் இருக்காங்க. ஆனால் கிராமம் இன்னும் மாறலைம்மா. காதலித்தவனை கரம் பிடிக்கலைன்னா..திருமணமே வேண்டாம்ன்னு போறாங்க. அதுக்காக இங்க எல்லாரும் சரியா இருக்காங்கன்னு நான் சொல்லலை. இங்கே சில தவறுகள் என்றால் நம்ம சிட்டியில நிறைய நடக்குது. இரு இடத்திலும் நிறைய கேஸ் பார்த்திருக்கேன் என்றான் சிம்மா.
“அந்த பொண்ணு ஹர்ட் ஆகி இருப்பாலா?” திலீப் வருத்தமாக கேட்க, “அண்ணா..இந்தாங்க” என்று ரம்யா கூலாக சோளம் ஒன்றை சிம்மாவிடம் போட்டு விட்டு நேராக சமையலறைக்கு சென்றாள்.
திலீப் கண்ணை விரித்து பார்க்க, சிம்மாவை பார்த்து “ஷி இஸ் கூல் அண்ணா” என்று கீர்த்தி புன்னகையுடன் ரம்யா பின் சென்றாள்.