அத்தியாயம் 34

அப்பா, “அந்த நாய் ஊருக்கு போயிருக்கானாமே! அவனுக்கு சொல்ல கூட தோணலையா?” விக்ரம் கோபமாக கேட்க, மூன்று நாட்கள் விடுப்பு கேட்டிருக்கான் விக்ரம். ஒரு வாரம் அதிகம் கூட ஆகுமாம்.

“ஒரு வாரமா?” நெவர்..எனக்கும் விடுப்பு வேண்டும். இன்று தமிழ்- மிருளா பிரச்சனை முடியவும் நான் அவனை பார்க்க போகணும். அவனுக்கு ஆபத்து வேற இருக்கு. “கீர்த்து என்ன செய்றாளோ?” விக்ரம் வருத்தமாக பேசினான்.

“விக்ரம்” என்று தயங்கிய சதாசிவம், சிம்மா கல்யாணம் பண்ணிக்க தான் ஊருக்கு போயிருக்கான் என்றார் அவர்.

வாட்..என எழுந்தான் விக்ரம்.

ஆமா..என்று அவர் புன்னகைக்க, அப்பா..சிரிக்கிறீங்க? அவன் நம்மை அழைக்கவேயில்லை. அதுக்குள்ள என்ன அவனுக்கு அவசரமாம்? சீற்றமுடன் கத்தினான்.

“அமைதியா இரு” என்று அவர் அனைவரையும் பார்க்க, சிம்மா கல்யாணமா? என்று எழுந்த மிருளாலினி, “நட்சுவோடவா?” அவளும் என்னிடம் சொல்லவில்லை என உதட்டை பிதுக்கி அழ தயாராக..

“சும்மா இருக்கியா?” என்ற விக்ரம், நான் பேசிட்டு வாரேன் என்று அலைபேசியை விக்ரம் எடுக்க, நீ அவனிடம் பேச வேண்டாம் என அவர்களின் அவசர திருமணத்தை பற்றி காரணத்தை சொல்ல, அனைவரும் அதிர்ந்தனர்.

அப்பா, அவன்..அவன்..விக்ரம் திக்க..ஆமா, அவன் இன்றே பிரச்சனையை முடிக்கணும்ன்னு எல்லா ஏற்பாடும் செய்துட்டான் என இன்றைய மிருளா- தமிழ் இரவு உறங்க இடத்தை சொல்ல..என்ன? அதெல்லாம் வேண்டாம் என்று வேல்விழி பயந்தார்.

அதான் சரி ஆன்ட்டி. நான் அங்கே அவங்களுடன் இருக்கேன் என்றான் விக்ரம்.

“இந்த கையோடவா?” நோ..விக்ரம். அவங்களுக்கு தேவையான ஏற்பாட்டை சிம்மா முழுதாக முடித்து விட்டான். மற்ற யாரும் அங்கே செல்லக் கூடாது. அதற்கான ஆளையும் ஏற்கனவே அவன் நம்பிக்கையான ஆட்களை அனுப்பிட்டான். பன்னிரண்டு மணி ஆகவும் எல்லாம் நல்ல படியாக முடிந்ததான்னு கவனிக்கணும் விக்ரம் என்றார்.

“அதை நான் பார்த்துக்கிறேன்” என்றான் ராஜா.

ராஜா, நீயா?

ஆமா, நான் தான். நோ வொரி பாட்டி. எல்லாம் நல்லதாகவே முடியும் என்றான் அவன்.

நானும்.. நானும்.. என விகாஸ், நேகன், ரகசியனும் கூற, ரகா நீ ஓய்வெடுக்கணும். உனக்கு பதில் என் பேரனுக்காக நான் போகிறேன் என்றார் தாத்தா.

ஒவ்வொருவராக நகர்ந்து செல்ல விக்ரம் மேலும் அங்கேயே அமர்ந்தான்.

மிருளாலினி ஓவென அழ, யாருக்கும் ஏதும் ஆகாது. அங்க அவனுக்கு அவன் ஊரே துணைக்கு இருக்கும் என்றார் சதாசிவம். அதான் மிருவுக்கே தெரியுமே!

ம்ம்..ஆனால் விக்ரம் நட்சு அலைபேசியை எடுக்கவேயில்லை அவள் சொல்ல, ஆமாக்கா, சுருதியும் என்றா ள் ஹரிணி.

அனைவரும் சென்று விட, நீ சிம்மாவிடம் அப்புறம் பேசிக்கலாம். முதல்ல அந்த பொண்ணிடம் பேசு என்று சதாசிவம், “மறந்துட்டேன்டா” என அவர் கார்க்கதவை திறந்தார்.

தயக்கமுடன் வனஜா வர, “அம்மா” என்று அவன் தயக்கமுடன் அசையாமல் நின்றான் விக்ரம்.

“என்னை மன்னிச்சிரு விக்ரம்” என ஓடி வந்து அழுது கொண்டே அவர் அணைக்க, அவன் கண்ணிலிருந்து கண்ணீர் ஆறாய் ஓடியது.

“அம்மா” என விக்ரம் அழைக்க, திரும்ப சொல்லு..வனஜா கேட்க, அவன் மீண்டும் சொல்ல, சாரிடா..உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் என்று இருவரும் அணைக்க, அம்மாவை தவிர விக்ரமிடமிருந்து ஏதும் வெளியே வரவில்லை. சுவாதி புன்னகையுடன் வாயில் கை வைத்து கதவில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். விக்ரம் புன்னகை கலந்த அழுகையுடன் அமர்ந்திருந்தான்.

விக்ரம்..சதாசிவம் அழைக்க, அவர் கண்ணை காட்டினார்.

சுவாதி பெற்றோர் அவள் முன் வர, விக்ரம் எழுந்து அவளை பார்க்க அவள் தெரியவில்லை. அவள் பெற்றோரை பார்த்தான். அவர்கள் இவனையும் சுவாதியையும் மாறி மாறி பார்த்தனர்.

சுவாதியிடம் ஏதோ அவர்கள் சொல்ல, கதவை திறந்து வெளியே வந்து விக்ரமை பார்த்து அழுது கொண்டே நின்றாள்.

“அம்மா” நான் என வனஜாவை விக்ரம் பார்க்க, அவர் கண்ணசைத்தார். விக்ரம் வேகமாக வீட்டிற்குள் வந்து, ஆன்ட்டி அங்கிள் என பேசும் முன் சுவாதி அவனை இறுக அணைத்திருந்தாள்.

பேபி..அவன் அழைக்க, கண்கலங்க தலையை “டிங்கு டிங்கு” என ஆட்டிக் கொண்டு, அம்மா, அப்பா நம்ம காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிட்டாங்க என மேலும் அவனை இறுக்கினாள்.

ஆவ்..அவன் சொல்ல, ஓ..சாரி சாரி..ரொம்ப வலிக்குதா? என அவன் கையை பார்த்து அழுதாள்.

கட்டு மட்டும் தான். வலியெல்லாம் இல்லை. எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு. பசிக்குது என விக்ரம் அவள் கண்ணை பார்க்க, சாப்பிடலாமே! முதல்ல இங்க வாங்க என்று வனஜாவிடம் அவனை இழுத்து சென்று, இன்று உங்க பையனுக்கு நீங்க தான் சமைத்துக் கொடுக்கணும் என்றாள்.

ஏய், “நான் என்ன கேட்டேன்? நீ என்ன செய்ற?” விக்ரம் கத்த, ஆச தோச அப்பள வட..போடா..என்று உள்ளே துள்ளி குதித்து ஓடி விட்டாள். ரசிகா இருவரையும் பார்த்து புன்னகைத்தாள்.

ரசி..நீ விக்ரம் கேட்க, இல்ல அண்ணா, நான் அம்மா, அப்பாவுடன் இப்பவே கிளம்புகிறேன் என்று அறைக்கு சென்று அவளுடைய பையை எடுக்க சென்றாள். ரகசியன் அவள் அறையில் இருந்தான்.

ரசி, சொல்றத கேளு. அவங்க கூட கூட பேசுனா பிரச்சனை பெருசாகிடும். அதனால தான் அமைதியா இருந்தேன்.

ம்ம், “நான் கிளம்புகிறேன்” என்று அவள் நகர, வழிமறித்த ரகசியன் கதவை தாழிட்டான்.

நீ இப்ப போகக்கூடாது. நானே உன்னை உன் வீட்டில் டிராப் செய்ய வருவேன் என்றான்.

தேவையில்லை. எனக்கு உங்க மேல நம்பிக்கையே போச்சு என்றாள். ரகசியன் அவளை அணைக்க, ப்ளீஸ் என்னை விட்ருங்க. நான் போறேன்.

நான் உன்னை தான் காதலிக்கிறேன். “தெரியும்ல்ல?”

வேண்டாம். வேற பொண்ண பார்த்துக்கோங்க அவள் சொல்ல, கோபமான அவன் அவளை இழுத்து இதழ் கோர்த்தான்.

“விடுங்க” என அவள் முதலில் தள்ளினாலும் பின் அவளும் முத்தமிட்டாள். “நீ போகக்கூடாது சரியா?” அவன் கேட்க, ம்ம்..என்று அவனை வெளியே அழைத்து வந்து அவள் அப்பாவிடம் ரகசியனை அறிமுகப்படுத்தினாள். “வனஜா ஏற்கனவே தான் அவனை பார்த்திருக்காரே!” அவரும் சதாசிவமும் அவனை ஏற்றுக் கொண்டனர். அனைவரும் மகிழ்ச்சியானார்கள்.

விக்ரம் மனதில் சிம்மாவுக்கு பிரச்சனை நான் சென்றே தீருவேன் என எண்ணிக் கொண்டான்.

“இங்க என்ன நடக்குது?” என்று ஆகாஷ் கேட்டுக் கொண்டே ரசிகா தோளில் கையை போட, “சும்மா இருடா” என்று அவன் கையை தட்டி விட்டாள்.

“மாமான்னு கொஞ்சமாவது உனக்கு மரியாதை இருக்கா?” அவன் கேட்க, என்னம்மா நடிச்ச பாவி. “அண்ணா அடிவாங்குறத வேடிக்கை பார்த்துட்டு நிக்கிற?” ஆகாஸை பார்த்து கொந்தளித்தாள் ரசிகா.

அப்புறம், “மாமா மாதிரி என்னையும் அடி வாங்க சொல்றீயா? என்னோட இமேஜ் என்ன ஆவது?” அவனும் அவளுடன் மல்லுக்கு நின்றான்.

“எதுக்கு ரசி அவனிடம் கோபப்படுற?” நான் சொல்லி தான் அவன் செய்தான். “அவனும் என்னுடன் சேர்ந்து அடி வாங்கினால் அவனுக வண்டவாலத்தை எப்படி தண்டவாளத்தில் ஏற்றுவது?” என்று விக்ரம் ரசிகாவை சமாதானப்படுத்தினான்.

“முதல்ல நீ யாருன்னு சொல்லு?” ரகசியன் சினப்பார்வையில் ஆகாஷை எறித்துக் கொண்டே கேட்டான்.

இவன் டிடெக்டிவ் ரகசியா. இவனுக்கு முன்னதாக நடக்கப் போவது தெரியும். ஆனால் இவ்வளவு சீரியசாகும்ன்னு தான் நாங்க நினைக்கலை என்று ரகசியன் காயத்தை பார்த்து விக்ரம் வருந்தினான்.

அதெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு அதிக வலியெல்லாம் இல்லை என்றான் ரகசியன்.

“அதான எப்படி வலிக்கும்?” இரு வீட்டிலும் அவன் காதலுக்கு பச்சை கொடி காட்டிட்டாங்கல்ல. வலிக்கவே வலிக்காது என்று விகாஸ் சொல்லிக் கொண்டே ரகசியனிடம் வந்தான்.

“என்ன? ஒத்துக் கொண்டார்களா?” ரசிகா திகைத்து ரகசியனை பார்க்க, அவன் அவளை பார்த்து புன்னகைத்தான்.

“என்ன அண்ணா? சரிதான?” ஒற்றை கண்ணத்து விகாஸ் கேட்க, தாத்தா பாட்டி வெளியே வந்து, “உள்ள வாங்க” என்று அழைத்தனர். சுவாதி அம்மா, அப்பாவும் அங்கிருக்க விக்ரமால் அங்கு நிற்க முடியாமல் வெளியே வந்து அமர்ந்தான். எல்லாரும் அவர்களிடம் நன்றாகவே பேசினர். சுவாதி பெற்றோர் அமைதியாக இருக்க, அவர்களை முறைத்த சுவாதி..வனஜாவிடம் வந்து எப்பொழுதும் போல் பேச, இருவரும் நன்றாக உரையாடுவதை பார்த்து பாட்டி நிம்மதி பெருமூச்சு விட்டார்.

ரசிகாவிற்கு படிப்பு முடியவும் ரகசியனுடன் திருமணம் செய்து வைக்கலாம் என்று இருதரப்பிலும் பேச மிருளாலினி மகிழ்வுடன் எழுந்து வாழ்த்தை கூற, மிருளாலினி அப்பா உடனே வெளியே சென்று பூ, இனிப்பு வாங்கி ரகசியன் பெற்றோரிடம் கொடுத்தார்.

ரசிகா, “இங்க வா” என்று ரகசியன் அம்மா அழைக்க, “என்ன செய்யப் போறாங்களோ!” என்று பயத்துடன் அவள் அருகே வர, “உட்காரும்மா” என்று அவளை அமர வைத்து “சுவா இங்க வா” என்று அவரும் சுவாதியும் இணைந்து அவள் கூந்தலில் மணம் பரப்பும் மல்லிகையை வைத்து ரகசியனுக்கு பெண் பார்க்கும் படலத்தை முடித்தனர்.

ரகசியன் பார்வை ரசிகா பக்கம் செல்ல, வேண்டுமென்றே சுவாதியும் ஹரிணியும் அவளை மறைத்து நின்று ரகசியனை வம்பு செய்தனர். ரசிகா முகம் புன்னகையில் சிவந்தாலும் அவள் கண்கள் வெளியே இருந்தது. அதை கவனித்த ரகசியனின் அப்பா, “மாப்பிள்ள உள்ள வாங்க” என்று விக்ரமிடம் சென்று அவன் தோளில் கையை போட்டு அழைத்து வந்தார்.

அனைவரையும் பார்த்த அவன் அமைதியாக அமர, தாத்தா எழுந்து அவனருகே அமர்ந்து ஆதரவாக அவன் கையை பற்றினார். விக்ரம்- சுவாதி காதலை சுவாதி பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டாலும் விக்ரமிடம் சாதாரணமாக பேச அவர்களுக்கு தயக்கமாக இருந்தது.

ரகசியனை ரசிகா கவனித்தாலும், “ஆன்ட்டி நான் உங்களிடம் தனியாக பேசமாலா?” எனக் கேட்டாள்.

“ரசி” சதாசிவம் அழைக்க, அப்பா “அவள் பேசுவதை இப்பவே பேசட்டும். அவளை தடுக்காதீங்க” என்றான் விக்ரம் ரசிகாவின் மனம் அறிந்த அண்ணனாக.

இருவரும் தனியே செல்ல, சுவாதி அம்மா பேசியதை பற்றி ரகசியன் அம்மா அபிப்ராயத்தை கேட்டாள் ரசிகா. ரகசியனுக்கு பயமாக இருந்தது. “எதையாவது பேசி கெடுத்து விடுவாளோ?” என பயந்தான்.

அவங்க பேசிய போது நான் உன்னை விட என் மகனை தான் பார்த்தேன். அவன் முகத்தில் இருந்த சீற்றம், உன்னுடைய பேச்சில் தெளிவானேன். சொல்லப் போனால் எனக்கும் சுவாதி அம்மா பேசியது பிடிக்கலம்மா. உறவுகளை தள்ளி விடக் கூடாதுன்னு தான்ம்மா என் மகனும் நானும் அமைதியாக இருந்தோம்.

“உன் கழுத்தில் எப்ப என் மகன் தாலியை கட்டுகிறானோ?” அப்பொழுதிலிருந்து உன்னை பற்றி யாரும் தவறாக பேச மாட்டாங்க. “நீ கவலைப்படாம நிம்மதியா இரு” என்று ரசிகா தலையை கோதினான்.

“தேங்க்ஸ் ஆன்ட்டி” என்று அவள் அவரை அணைத்துக் கொண்டாள். பின் சற்று நேரத்தில் சதாசிவம் தன் பிள்ளைகளை தாத்தாவின் பொறுப்பில் விட்டு கிளம்பினார்கள். ரசி..நீ நாளைக்கு வந்துருறணும் என்று சொல்ல, ஆகாஷ் எல்லாவற்றையும் பார்த்து விட்டு அவர்கள் கொடுத்த இனிப்பை அங்கேயே விட்டு சென்று விட்டான்.

“எல்லாரும் சாப்பிட வாங்க” என மிருளாலினி அம்மா அழைக்க, அனைவரும் சாப்பிட எழுந்து சென்றனர். விக்ரம் மட்டும் அமர்ந்திருந்தான்.

தாத்தாவை பாட்டி பார்க்க, அவர் கண்ணை காட்டினார். மாப்பிள்ள, “வாங்க” என்று பாட்டி விக்ரம் கையை பிடித்து இழுத்து சென்றார். அவனின் கட்டிட்ட கை வலிக்க அவன் முகம் சுருக்கினான். சுவாதி அறைக்கு அருகே இருந்த அறையில் விக்ரமை பாட்டி ஓய்வெடுக்க அழைத்து சென்றார்.

சுவாதி சாப்பிடாமல் யோசனையுடன் அவர்கள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னாச்சும்மா?” அவள் அப்பா கேட்க, அவருக்கு பதிலளிக்காமல், தாத்தா “நான் அவருக்கு சாப்பிட எடுத்து செல்லவா?” எனக் கேட்டாள்.

“எதுக்கும்மா கேக்குற?” எடுத்துட்டு போ என்றார். ரசிகாவும் அவன் சென்றதை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவளருகே ரகசியன் அம்மாவும் அப்பாவும் இருக்க, எழ முடியாமல் தவித்து இருந்தாள்.

உணவுத்தட்டுடன் மாடியில் ஏற காலை எடுத்து வைத்த சுவாதி, தன் தோழி ரசிகாவை பார்த்து கட்டை விரலை உயர்த்தி, “ஓ.கே வா?” எனக் கேட்டாள்.

ரசிகா கண்ணசைக்க, புன்னகையுடன் சென்றாள் சுவாதி.

பாட்டி விக்ரம் அருகே அமர்ந்து அவனிடம் பேசினார்.

“எதுக்குப்பா ஒதுங்கி போற?” பாட்டி கேட்க, சுவாதி பெற்றோருக்கு விருப்பமில்லாதது போல் இருக்கு. அது மட்டுமல்ல என்று அவன் கண்கலங்க பாட்டியை பார்த்தான்.

“தயங்காம என்னிடம் மனசுல இருக்கிறத சொல்லுப்பா” என்று விக்ரம் பேச ஊக்கினார்.

இது மாதிரி நான் குடும்பத்துடன் சேர்ந்து இருந்ததில்லை. அதனால் அதிகமாக பேச மாட்டேன். எனக்கு நண்பர்களும் கிடையாது என்று அவன் சொல்ல, அவன் கண்ணீர் வழிந்தது.

“அதற்கென்ன?” இனி நாங்களும் உன்னோட குடும்பம் தான். சுவாதி பெற்றோருக்கு உன்னை பிடிக்காமல் இருந்தால் நீ வந்தும் அமைதியா உன்னோட தங்கையை ஏற்றிருக்க மாட்டாங்க. அவங்களுக்கு கொஞ்சம் நேரம் தேவைப்படும் என்றார். விக்ரம் அமைதியாக இருந்தான்.

வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த சுவாதி கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு, “விக்ரம்” என்று அழைத்துக் கொண்டே உள்ளே வந்தாள்.

பெரிய உணவுத்தட்டில் இனிப்பு, மற்றும் காலை உணவை எடுத்து வந்திருந்தாள். ‘

பாட்டி, “நீங்க சாப்பிடப் போகலையா?”

அடியேய், “என்னை வெளிய பத்துறியா?”

இல்ல பாட்டி, உங்க மேல இருக்கும் அக்கறையில் தான் கேட்கிறேன்.

“அக்கறையா?” பாட்டி இழுக்க, உணவுத்தட்டை மேசையில் வைத்து விட்டு, சாப்பிட்டு வந்து உங்க பேரனை பாருங்கள் என அவரை நகர்த்த, “போறேன்டி” என்று விக்ரமை பார்த்து நல்லா சாப்பிட்டு தூங்குங்க பேரான்டி என்றார். அவன் அவரை பார்த்து புன்னகைத்தான்.

பாட்டி வெளியே செல்ல, கங்கிராட்ஸ் விக்ரம் சார். “உங்க தங்கையை எங்க அண்ணனுக்கு பேசி முடிச்சுட்டாங்க” என்று இனிப்பை அவன் வாயில் ஊட்டி விட்டு, “சாப்பிடுங்க” என்று சுவாதி உணவுத்தட்டை அவனிடம் கொடுக்க,

அடியேய் என்னோட பேரனுக்கு அடிப்பட்டிருக்கு. “அவராக எப்படி சாப்பிடுவார்?” பாட்டி தலையை உள்ளே நீட்டி கேட்டார்.

“பாட்டி” என்று சுவாதி சத்தமிட, “ஆத்தாடி என்ன கத்து கத்துறா?” பை பேரான்டி என்று அவர் சென்று விட்டார். முகத்தை சுருக்கிய சுவாதி வெளியே எட்டி பார்க்க, பாட்டி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றார்.

போ..என்று அவள் இடுப்பில் கை வைத்து முறைக்க, அவர் சென்று விட்டார். அவர் சென்றதும், உஃப் என்று காற்றை ஊதி தள்ளி விட்டு சுவாதி விக்ரமிடம் வந்து அவன் கையை பார்த்து, உணவுத்தட்டை எடுத்து அவனது மறுபக்கம் அமர்ந்தாள்.

விக்ரம் காதலுடன் சுவாதியை பார்க்க, “என்ன?” புருவத்தை உயர்த்தினாள்.

கண்ணால் அவளை அருகே அழைத்தான். அவன் முகத்தினருகே சுவாதி செல்ல, அவள் கன்னத்தில் முத்தமிட்டு “தேங்க்ஸ்” என்றான். அவள் மறுகன்னத்தை காட்ட அவன் முத்தமிட்டான்.

“முதல்ல சாப்பிடுங்க” என்று சுவாதி விக்ரமிற்கு ஊட்டி விட்டாள். அவனுக்கு வயிறு மட்டுமல்லாமல் மனதும் நிறைந்து போனது.

பேபி, அம்மா எனக்கு சிறுவயதில் ஊட்டி விட்டது. பின் எனக்கென யாரும் ஊட்டியதில்லை. அதுமட்டுமல்ல என் காயத்திற்கு மருந்திட கூட யாரும் இருந்ததில்லை. அம்மா ரசியை அதிகமாக அருகே விடவே மாட்டாங்க. இதே போல் நீ என்னருகே இருந்தால் மட்டும் போதும் என்றான்.

விக்ரம் கண்ணை மூடுங்களேன் சுவாதி சொல்ல, “எதுக்கு?” விக்ரம் கேட்டான்.

சொல்றேன்ல்ல அவள் அவனை முறைக்க, “சரி” என்று அவன் கண்ணை மூடினான். சுவாதி அவனை நெருங்கி வந்து அவனது தடித்த அதிரத்தில் அவள் மென் இதழ்களை பதித்தாள். அவன் சிந்திக்கும் முன் நகர்ந்த சுவாதி, அவன் மார்பில் சாய்ந்து அவன் கையை அவள் இடையில் போட்டுக் கொண்டாள்.

விக்ரம் கண்ணை திறந்து, “பேபி” என அழைக்க, நோ..விக்ரம் என்று மேலும் அவன் மார்பினுள் புதைந்தாள்.

பேபி, “என்னை பாரு” விக்ரம் அழைக்க, அவனை நிமிர்ந்து பார்த்த சுவாதி இதழ்களை கவ்வி இழுத்துக் கொண்டான் விக்ரம்.

விக்ரம் போதும்..என்று சுவாதி அவனை விலக்கினாள். அவனோ அவளது அணைத்த இடையை தன் கரத்தினால் ஊர்வலம் நடத்தினான். அதில் அவளுக்கு கூச்சம் மேலிட “விக்ரம்” என்று அவளது குரல் குலைந்தது. புன்னகைத்த விக்ரம், “எனக்கு ஒரு கிஸ் கொடு” என்று அவன் விரலால் அவன் உதட்டை சுட்டிக் காட்டினான்.

“போடா” என்று அவள் நகர, “இன்னும் பசிக்குதே!” என்றான் விக்ரம்.

நான் எடுத்துட்டு வாரேன் சுவாதி சொல்ல, ம்ம்..உனக்கும் சேர்த்து எடுத்துட்டு வா. நீ அருகே இருந்தாலாவது நான் உறங்கலாமானான்னு பார்க்கிறேன் என்றான்.

சுவாதி கீழே செல்ல, சுவா..”ஒரே ரொமான்ஸ் போலவே?” ஹரிணி கேட்க, ச்சீ “போடி” என்று உணவை எடுத்தாள்.

“நீ சாப்பிடலையாம்மா?” அவள் அம்மா அவளிடம் அக்கறையாக கேட்க, பாட்டி நான் எனக்கு எடுக்க தான் வந்தேன். அவர் தூங்கியதும் நான் கீழே வந்து விடுவேன் என்று சொன்னாள்.

சுவா, “ஒரு நிமிசம்” அந்த ஆசிரம பிள்ளைங்க எல்லாரும் இறந்துருக்காங்க. விக்ரம் அவரை அவரே சமாதானப்படுத்த தான் ஹாஸ்பிட்டலில் இருப்பதாக சொல்லி இருப்பார். சோ..அதை பற்றி ஏதும் கேட்டுறாத. அவர் கஷ்டப்படுறார்ன்னு நினைக்கிறேன் ரகசியன் சொல்ல, எல்லாரும் அவனை பார்த்தனர்.

சரி அண்ணா என்று சுவாதி சென்றாள். “அந்த பசங்களுக்கும் நம்ம மாப்பிள்ளைக்கும் என்ன சம்பந்தம்?” பாட்டி கேட்டார்.

இருக்கும்மா. அவர் குடும்பத்தை விட்டு வெளியே வந்ததும் முதல்ல அவருக்கு உதவியது அந்த ஆசிரமத்தின் நிறுவனர் தான். அவர் இறந்த பின் அவர் மகன் பொறுப்பெடுத்தாலும் அவன் பெரியதாக கவனிக்கவில்லை. அவருக்காக சென்ற விக்ரமிற்கு அந்த பசங்க எல்லாமுமாய் ஆனாங்க. வாரத்திற்கு ஒரு நாள் அங்கே சென்று விடுவார். அவரால் முடிந்த எல்லா உதவியும் செய்திருக்கார். அப்பொழுது தான் நிதியமைச்சர் ஆசிரமத்தை கேட்டு தொடங்கிய பிரச்சனை தான். விக்ரமால் எல்லா பிள்ளைகளும் இறந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் கண்களில் வேதனை தெளிவாக தெரிந்தது என்றார் தாத்தா.

ம்ம்..எனக்கும் தெரியும். ஆனால் பிரச்சனை எல்லாம் தெரியாது. என் அண்ணாவோட பெரிய ஆறுதலே அந்த சின்ன பசங்க தான்.

“அந்த பசங்களை பார்த்தால் என்னை நானே பார்ப்பது போல் இருக்கு”ன்னு சொல்வான். அதை சொன்னால் எனக்கு பிடிக்காதுன்னு அதை பற்றி பேசுவதையே நிறுத்திட்டான். ஆனால் இப்படி ஒரே நாளில் அவர்களை அவன் இழப்பான் என்று நானும் எதிர்பார்க்கலை. அவன் அமைதிக்கு பின் இருக்கும் ரணம் யாருக்கும் புரியாது. மற்றவர்களால் அதை தாங்கவும் முடியாது என்று ரசிகா அழுது கொண்டே சாப்பிடாமல் எழுந்தாள்.

அம்மாடி, அவருக்கு நாங்க இருப்போம். நீங்க சாப்பிடுங்க. அழாதீங்க என்று ரகசியன் அப்பா அவளை சமாதானப்படுத்த முயல, “சாரி அங்கிள்” எனக்கு டிஸ்டர்ப்டா இருக்கு. சாப்பிட முடியல.

நீங்க தான் சொல்றீங்க? சொல்ல வேண்டியவங்க ஏதும் பேசாமல் தான் இருக்காங்க என்று மேலும் அழுது கொண்டே அவள் அறைக்கு சென்றாள்.

ரகசியன் எழ, ரகா..”நீ இரு” என்று அவன் அம்மா அவளது உணவுத்தட்டை எடுத்து அவளிடம் சென்றார். மேலிருந்து ரசிகா பேசியதை பார்த்த சுவாதி கண்ணீர் வெளியே வர, அழுந்த கண்களை துடைத்துக் கொண்டு விக்ரம் அறைக்கு சென்றாள்.

சுவாதி விக்ரம் அறைக்குள் செல்ல, அவன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.

“சொல்லாமல் போயிட்டடா” என்று ஆகாஷிடம் விக்ரம் கேட்க, மாமா நான் பாரின் போகப் போறேன். இதுக்கு மேல என்னால எதையும் பார்த்துட்டு இருக்க முடியாது.

இல்லடா, ரசிக்கு அவரை தான் பிடிச்ச்சிருக்கு.

“அதான் தெரிந்து எல்லாம் முடிந்து விட்டதே!” என அழுதான்.

ஆ..ஆகாஷ் அழுறியா?

நானும் மனுசன் தான் மாமா. எனக்கும் உணர்வுகள் இருக்கும் என்று அவன் அழுகை அதிகமாக, கார் ஒன்று நிற்கும் சத்தம் கேட்டது.

ஏய்..யாரு..யாருடா? என விக்ரம் பதற, மாமா..ஆன்ட்டி, அங்கிள் தான்.

“இங்க என்னடா பண்ற?” சதாசிவம் சத்தம் கேட்க, போங்க மாமா. “ரசியை எனக்கு பிடிக்கும்ன்னு உங்களுக்கு தெரியும்ல்ல?”

“அவங்க இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதலிக்கிறாங்கடா” வனஜா சொல்ல, ஆகாஷ் அப்பாவிடம் அலைபேசியை கொடு என்ற வார்த்தை ஏதும் ஆகாஷ் காதில் விழவில்லை. அவன் அலைபேசியை கீழே போட்டிருந்தான்.

“ஆகாஷ்” என்று பயந்து விக்ரம் அலைபேசியை அணைத்து விட்டு, அவன் அப்பாவை அழைத்தான். அவர் அலைபேசியை எடுக்க, அப்பா..”எல்லாரும் நீங்க இருக்கும் இடத்திலிருந்து கிளம்புங்க” என்று அவன் முடிக்கவில்லை எங்கிருந்தோ துப்பாக்கி தோட்டா சதாசிவத்தை நோக்கி வந்தது.

“மாமா” என ஆகாஷ் அவரை தள்ளி விட்டு, கார்ல ஏறுங்க என கத்தினான். மூவரும் காரில் ஏற, துடித்து போனான் விக்ரம்.

ரசிகா பேசி செல்ல மனம் கேட்காமல் மிருளாலினி விக்ரமை பார்க்க எழுந்தாள். தமிழினியனும் வேல்விழியும் அவளுடன் செல்ல, மற்றவர்களும் வந்தனர்.

நாங்களும் என்று சுவாதி அம்மா சொல்ல, அத்தை, மாமா முதல்ல நீங்க போங்க என்று சுவாதி அம்மா, அப்பா முன் செல்ல வழி விட்டு நின்றாள் மிருளாலினி. அவர்கள் முன் செல்ல மற்ற எல்லாரும் அவனை பார்க்க செல்ல, ரகசியன் மட்டும் ரசிகாவையும் அவன் அம்மாவையும் பார்க்க சென்றான்.

அலைபேசியில் துப்பாக்கி சத்தம் கேட்ட விக்ரம் பதறி எழுந்தான்.

“விக்ரம்” என்று சுவாதி அவனருகே வர, பேபி அப்பா, அம்மா, ஆகாஷிற்கு பிரச்சனை. “நான் போகணும்” என்று கண்ணீருடனும் பதட்டமுடன் அவன் கைக்கட்டை பிரிக்க, “விக்ரம் என்ன செய்றீங்க?” அதை கழற்றாதீங்க. அமைதியா இருங்க. யாருக்கும் ஏதும் ஆகாது. முதல்ல சாப்பிடுங்க என்று சுவாதி விக்ரமிற்கு ஏதாவது ஆகி விடுமோ? என பயந்து அவனை செல்ல விடாமல் தடுத்தாள்.

சுவாதி, “நான் சொல்றது உனக்கு புரியலையா?” நான் போகணும். சாப்பிட சொல்ற என்று உணவுத்தட்டை தட்டி விட்டான். உணவு சிதறி தரையில் கொட்டியது.

ப்ளீஸ் விக்ரம். போகாதீங்க. இப்ப நீங்க வீக்கா இருக்கீங்க என சுவாதி அழுது கொண்டே அவனை தடுத்தாள்.

சத்தம் கேட்டு சுவாதி பெற்றோர் தான் முதலில் வந்து நின்றனர்.

“என்னாச்சும்மா?” சுவாதி அப்பா கேட்க, அப்பா..அங்கிளுக்கு ஏதோ பிரச்சனைன்னு இதோட போகப்போறாரு என்று சுவாதி அழுதாள். விக்ரம் அவர்களை தாண்டி செல்ல, விக்ரம் அவங்களுக்கு ஏதும் ஆகாது என்று தமிழினியன் தடுக்க, ரசிகா மேலே வந்தான் கையில் அலைபேசியுடன்.

அண்ணா, “என்ன பண்ணிட்டு இருக்க?” அவள் சத்தமிட, ரசி..அம்மா அப்பாவுக்கு என அவன் பதற, அவங்க நல்லா தான் இருக்காங்க. இதோ அவங்களிடம்  தான் பேசிட்டு இருந்தேன் என்று ரசிகா சொல்ல, அனைவரும் அதிர்ந்தனர்.

இல்ல, “அப்பாவுக்கு ஏதோ?” என விக்ரம் ரசிகாவிடமிருந்து அலைபேசியை பிடுங்கினான்.

விக்ரம், “என்னாச்சு? ஏதும் பிரச்சனையா?” சதாசிவம் பேச, அப்பா..துப்பாக்கி சத்தம்..ஆகாஷ் என அவன் பேசியதை கேட்டு, “என்ன துப்பாக்கி விக்ரம்?” ஆகாஷ் ரசி மீதுள்ள காதலால் அழுது கொண்டிருந்தான். அவனை நம்ம வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருக்கிறேன் என்றார்.

அப்பா, “யாரும் உங்களை துப்பாக்கியுடன் விரட்டவில்லையா? யாரும் உங்களை கொல்ல முயற்சிக்கலையா?” என் விக்ரம் கேட்க, இல்ல விக்ரம்..”நீ என்ன பேசுற?” அதெல்லாம் யாரும் ஒன்றும் செய்யலை என்றார்.

அமைதியாக தரையிலே கண்ணீருடன் அமர்ந்தான்.

அண்ணா, “என்ன சொல்ற?” ரசிகா அதிர்ந்து கேட்க, சுவாதியும் அவனிடம் வந்தாள். இருவர் கையையும் இறுக பற்றினான் விக்ரம். இருவரும் அவனருகே அமர, கண்கள் கட்ட சுவாதி மீது மயங்கி சரிந்தான் விக்ரம்..

விக்ரம்,“என்னாச்சு?”..

விக்ரம்..விக்ரம்..சுவாதி அழ, அண்ணா..அண்ணா.. அண்ணா.. என்று ரசிகாவும் அழுதாள்.

“டேய் பசங்களா?” தாத்தா அழைக்க, தமிழினியனும் மற்ற பசங்களும் விக்ரமை காரில் ஏற்றினர். மொத்த குடும்பமும் ஹாஸ்பிட்டலுக்கு சென்றனர்.

விக்ரம் ஹாஸ்பிட்டலில் இருக்க, தமிழினியன் போலுள்ள மனநல மருத்துவர் அவனை பரிசோதிக்க மொத்த குடும்பமும் வெளியே நின்றனர்.

தமிழினியன் மட்டும் மருத்துவருடன் இருந்தான். மயக்கத்தை தெளிய வைத்து அவனுக்கு மனதினால் ஏற்பட்ட மயக்கம் தான் என உறுதியான பின் விக்ரமை பற்றி தெரிந்த சில விசயங்களால் அவனை பற்றி அறிந்து கொள்ள தமிழினியன் எண்ணினான்.

அவனது ஆழ்மனதில் உள்ளவற்றை அவன் மூலமாக அனைவரும் அவன் வாயாலே கேட்க ஆரம்பித்தனர்.

உங்க பேர் என்ன?

விக்ரம்.

விக்ரம், “உங்களது அம்மாவை விட்டு எப்பொழுது பிரிந்து சென்றீர்கள்?” என மருத்துவர் கேட்க, “அம்மா..அம்மா..”என அவன் கண்ணிலிருந்து கண்ணீர் வடிய, ரசிகா அறைக்கதவின் கண்ணாடியில் கையை வைத்தாள். அவளது கரத்தை இறுக பற்றிக் கொண்டான் ரகசியன்.

நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இத்தனை நாட்கள் பாசமாக வளர்த்த அம்மா, “என்னை வீட்டை விட்டு வெளிய போ இல்ல செத்துருவேன்னு சொன்னாங்க” என அவன் சொல்ல, ரசிகா அதிர்ந்து ரகசியன் கையை இறுக பற்றினாள்.

“எதற்காக வெளிய போக சொன்னாங்க?”

பாப்பா பிறந்ததிலிருந்தே அம்மா என்னை திட்டிக் கொண்டே இருப்பாங்க. ஏனென்று முதலில் எனக்கு புரியவில்லை. அவர் பையன் நானில்லையாம். நான் அநாதையாம். என்னோட பாப்பாவை தொடக் கூடாதுன்னு சொன்னாங்க என வனஜா அவர் பயத்தில் விக்ரமை காயப்படுத்தியதை சொன்னான்.

இடையிடையே வீட்டிற்கு வந்தாலும் என்னோட பாப்பாவை பார்க்க விடவே மாட்டாங்க. அதனால் அடிக்கடி ஆசிரமம் செல்வேன். மூர்த்தி சார் என்னிடம் நன்றாக பேசுவார்.

ஓர் நாள் அடைமழை. ஓரிடத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி சென்றேன். பாலத்தின் ஓரத்தில் தனியாக ஒரு குழந்தை அழுது கொண்டிருந்தது.

என்னுடைய பையில் அக்குழந்தையை வைத்து மழைநீர் படாமல் அவ்விடம் யாராவது குழந்தையை தேடுகிறார்களா? என பார்த்தேன். இருமணி நேரமாகியும் யாரும் வரவில்லை. அதனால் ஆசிரமத்திற்கு கொண்டு வந்து விட்டேன். மூர்த்தி சார் என்னை பாராட்டினார். எனக்கு மிகவும் பிடித்தது.

அது ஒரு பெண்குழந்தை. அதற்கு பெயர் வைக்க அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த பாப்பாவிற்கு நான் தான் பெயர் வைத்தேன். கீர்த்தனா..என்னோட பாப்பா கீர்த்து என்று விக்ரம் சொல்ல, அனைவரும் அதிர்ந்தனர்.

அவள் பிறந்த பின் பள்ளி முடிந்து நேராக ஆசிரமம் சென்று விடுவேன். தினமும் அவளை பார்ப்பேன். அவளை சாப்பிட வைத்து தூங்க வைத்து பின் தான் என் இடத்திற்கே செல்வேன். கீர்த்து வளர ஆரம்பித்தாள். அவளுடன் நானும் வளர்ந்தேன். என்னோட ரசி பாப்பாவை பார்க்க செல்லும் போது அவளும் வருவா. அது ரசிக்கு பிடிக்காது. அதனால் அதன் பின் அவளை வீட்டிற்கு அழைத்து செல்வதில்லை.

கீர்த்து அதிகமாக பேச மாட்டா. அவளுக்கு நானென்றால் உயிர். என்னை தினமும் பார்க்கணும் இல்லை தூங்கவே மாட்டாள். நான் போலீஸ் டிரைனிங் சென்ற போது என்னை தேடி மூர்த்தி சாருடன் சேர்ந்து வந்து விட்டாள். எனக்கு அவ்வளவு சந்தோசம்.

கீர்த்துவுடன் என் நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் ரசியையும் அம்மா, அப்பாவையும் என் மனம் அதிகம் எதிர்பார்த்தது. அம்மாவின் பேச்சு பழகிப் போனது. ரசிக்காக தான் வீட்டிக்கு செல்வேன். அதே சாக்கில் அம்மாவை பார்த்தாவது வந்து விடுவேன்.

ஆனால் அம்மா..மிகவும் கடுமையாக நடந்து கொண்டதை என்னால ஏத்துக்க முடியல. என்னோட அம்மா, அப்பா யார்? எதுக்காக இப்படி தனியா விட்டு போனாங்கன்னு புரியாம அவங்க மேல கோபமா இருந்தேன்..

நாட்கள் சென்று போஸ்டிங் கிடைத்தது. அதை கூட யாரும் என் முயற்சியாக பார்க்கவில்லை. டி.ஐ.ஜி யின் வளர்ப்பு மகன் என்பதால் உயர்பதவி என எல்லாரும் பேசினார்கள். என்னை பிடித்து பேச பொண்ணுங்க வந்தாலே ஆதாயம் தேடியாக தான் இருக்கும். காதலாகவோ பாசமாகவோ இருக்காது.

அப்படியொரு நாள் தான் அவளை என் தங்கையுடன் பார்த்தேன். பயங்கர சுட்டி, சரியான அறுந்த வாலு என விக்ரம் இதழ்களில் புன்னகை. எல்லாரும் சுவாதியை பார்த்தனர்.

ரசியை அழைத்து செல்லும் சாக்கில் அவளை அடிக்கடி கல்லூரியில் பார்த்து செல்வேன். பேச தைரியமில்லை. எங்கே அம்மா போல் ஏதாவது பேசி விட்டால் என்றால் என் மனம் உடைந்து விடுமே! தள்ளி நின்றே பார்த்து சென்று விடுவேன்.

கீர்த்துவால் சமீபமாக படிப்பில் கவனம் செலுத்த முடியல. என்னவென்று பள்ளியில் விசாரித்த போது, அவள் பள்ளியில் அவளுடன் படிப்பவர்கள் அவனை யாருமில்லாமல் ஓசியாக வாழ்கிறாள் என்று பேசியதாக தெரிய வந்தது. அதை நேரிலே கண்ட எனக்கு என்னுடன் படித்தவர்கள் என்னை கேலி செய்து காயப்படுத்தியது நினைவு வர அவர்களை பள்ளியிலே அடித்து விட்டேன். பிரச்சனையானது.

எந்த தவறும் செய்யாத கீர்த்துவை சஸ்பண்ட் செய்தனர். ஏன்னா..பெரிய இடத்து பசங்களாம். என்னை பற்றிய ஆர்ட்டிக்களும் தவறாக வந்தது. அதை வெளியே வர விடாமல் தடுத்தான் சிம்மா. என்னுடைய தோழன் போல் என்றாலும் அவன் என்னை பார்த்தாலே கோபப்படுவான். அவன் என்னுடன் வேலை செய்பவர்களிடம் கூட நன்றாக பேசுவான். “நானென்றால் எங்கிருந்து வருமோ கோபம்?” என புன்னகைத்தான் விக்ரம்.

என்னோட சுவாதி பேபியுடன் முன் ஜென்மும் வாழ்ந்திருக்கேன் என நினைக்க என் மனதில் எனக்கு எல்லாம் கிடைத்தது போல் இருந்தது. அதே போல் அவளும் என்னை காதலிக்கிறாள் என்றவுடன் மனமெங்கும் நிறைவு.

“நான் அநாதை இல்லை “என கத்தி சொல்ல தோன்றியது. ஆனால் அவள் பெற்றோர் எல்லாரும் என்னை எதை கூறி காயப்படுத்தினார்களோ அதே போலே செய்தனர்.

என்னோட பேபி என்னை காதலிக்கிறால் எனக்கு அது போதும். ஆனால் நான் அநாதை இல்லை. நான் என் குடும்பத்தை கண்டுபிடித்து விட்டேன். அவங்க என்னை எவ்வளவு நேசிக்கிறாங்கன்னு பார்த்துட்டேன். சீக்கிரம் அவர்களுடன் சேர்ந்து விடுவேன் என்ற சந்தோசத்தில் மண்ணை அள்ளி கொட்டி விட்டான் அந்த அமைச்சர்.

அவனை..என..பயங்கரமாக கத்திய விக்ரம் உடல் கோபத்தில் உதறல் எடுத்தது.

“ஏன்? அப்படி சொல்றீங்க? அந்த விபத்தா?”

“விபத்தல்ல?” கொலை தான். எல்லாரையும் கொன்றவன். என் கீர்த்துவை கொல்லப் போறான். நான் வாழ நினைத்த குடும்பம் என்னை விட்டு கீர்த்துவுடன் போகப் போறாங்க.

“எங்க போகப் போறாங்க?”

அவங்கள அந்த கோகுல் கொலை செய்யப் போகிறான். அப்பா..அப்பா..உங்களை துப்பாக்கி..தோட்டா..என மயங்கி விட்டான் விக்ரம்.

தமிழினியன் எழுந்து வெளியே வந்தான்.

சுவாதி, அண்ணா சொன்னது..அப்பா..அப்பா..என்னோட அப்பா இல்லை. அவனோட சொந்த அப்பா என ரசிகா பதறினாள். அவங்களுடன் தான் கீர்த்து இருக்கா.. போச்சு அவங்கள தான் கொல்லப் போறாங்க என அழுதாள்.

“என்ன பேசுற?” ரகசியன் கேட்க, அவங்க தான்..கீர்த்துவுடன் சிம்மா எல்லாரும்..என எல்லாரையும் பார்த்து விட்டு வெளியே வந்த தமிழினியனை தள்ளி விட்டு விக்ரமிடம் வந்து அவனது அலைபேசியை எடுத்து சிம்மாவை அழைத்தாள்.

ஏய், “ரசி என்னடி பண்ற?” சுவாதி கேட்க, ஷ்..ஷ்..என்று ரசிகா மூச்சிறைக்க, சிம்மா போனை எடுக்கலை. ரித்துவை அழைத்தாள். யாருமே எடுக்கலை.

ரகசியன், சுவாதிக்கு புரிந்தது. அய்யோ திலீப் அண்ணா, சுருதி, சித்தப்பாவும் இருக்காங்களே!

“என்னடி சொல்ற? என்னோட பையனுக்கு என்ன?” திலீப் அம்மா பதற, விக்ரமோட சொந்த குடும்பம் சிம்மா மாமாவின் குடும்பம் தான். சிம்மா மாமா தான் விக்ரமோட அண்ணா என கத்தினாள் சுவாதி.

மிருளாலினி பதறி, “அப்படின்னா அவங்களுக்கு தான் ஏதோ ஆகப் போகுதா?” என அழுது கொண்டே கேட்டாள்.

யாருமே போனை எடுக்கல என்று சுவாதி அழுதாள்.

அமைதியா இருடா. யாருக்கும் ஏதும் ஆகாது. பார்த்துக்கலாம் என்று தமிழினியன் வேகமாக வெளியே வந்தான்.

தமிழ், “நீ இங்க தான் இருக்கணும்” அவன் அப்பா சொல்ல, சரிப்பா என்று அவன் ஓட, மற்றவர்களும் அவன் பின்னே சென்றனர்.

தமிழ், அந்த மருத்துவர் அவனை அழைக்க “சார்” என்று கண்ணீருடன் சுவாதி அவர் முன் வந்தாள். ரகசியன், ரசிகா, சுவாதி பெற்றோர், அவர்களின் அத்தைகள் அங்கே இருந்தனர்.

டாக்டர், “அவருக்கு பெரிய பிரச்சனையில்லைல்ல?” சுவாதி கேட்க, அப்படி முழுதாக சொல்ல முடியாது. அவரின் வலி மிகுந்த கடந்த காலம் அவரின் மனதினுள் ரணமாக இருக்கு. அவரை கடந்த கால சிந்தனைக்குள் செல்ல விடாமல் யாராவது அருகிலிருந்து பார்த்துக் கொண்டால் போதும். மாதம் ஒரு முறை அவரை பரிசோதனைக்கு அழைத்து வர வேண்டும்.

“அவரை பார்க்கலாமா டாக்டர்?” ரகசியன் கேட்க, வேண்டாம் அவரே இப்பொழுது விழித்து விடுவார். யாராவது ஒருவர் மட்டும் உள்ளே இருங்கள் என்று அவர் சென்று விட்டார்.

சுவாதி, “நீ போ” என்று ரசிகா சுவாதியின் பெற்றோரை பார்த்தார். “ஏற்கனவே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவனை மேலும் காயப்படுத்தி விட்டோமோ?” என யோசனையில் இருந்தவரை ரசிகாவின் குரல் நினைவிற்கு கொண்டு வந்தது.

அனைவரும் அவரை பார்க்க, சுவாதி போ..பார்த்துக்கோ என்று சுவாதி அம்மா வெளியே சென்று விட்டார்.

ஹப்பா, எப்படியோ ஒத்துக்கிட்டீங்க அண்ணி என்று ரகசியன் அம்மா ரசிகாவை பார்த்து புன்னகைத்தார். சுவாதி விக்ரம் கரத்தை அவள் கரத்தினுள் நுழைத்து சற்று நேரம் அமர, மற்ற அனைவரும் வெளியே இருந்தனர்.

நீங்க சொன்னது சரிதான். நான் ரொம்ப சுயநலமா இருந்துட்டேன். அண்ணா..பாவம் என்று ரகசியன் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் ரசிகா.

“நல்ல வேலை புரிஞ்சுக்கிட்ட” என்று அவன் ஆதரவாக அவளது கரத்தை பற்றினான்.

திலீப்பின் அண்ணன், தம்பிகள் அவனை அழைக்க, அவனோ எடுக்கவில்லை. சுருதியும் அவள் அப்பாவும் எடுக்காமல் இருக்க, தமிழ் நீ குறுஞ்செய்தி அனுப்பு. கண்டிப்பாக பதில் அனுப்புவார்கள் என்று தாத்தா கூற, பசங்க எல்லாரும் அனுப்பினார்கள்.