“எதுக்கு அழுறீங்க விக்ரம்?” சுவாதி கேட்க, நீ நினைப்பது போல் நான் எல்லாவற்றிலும் சரியாக இருக்க மாட்டேன். எனக்கு கோபம் வந்தாலோ இல்லை நான் வருந்தும் படி யாராவது பேசினாலோ மது அருந்துவேன் என்றான்.
சரி, “அப்புறம்?” சுவாதி கேட்க, அவன் அவளை பார்த்து, “உனக்கு கோபம் வரலையா?” எனக் கேட்டான்.
“இல்லை” என்று அவனை பார்த்தாள்.
தனிமை என்னை ஆல்கஹால் அருந்தும் படி செய்து விட்டது.
“இதுக்கு அம்மா கூடவே இருக்கலாம்ல்ல?” சுவாதி கேட்க, அவளை விட்டு நகர்ந்தான்.
சுவாதி அவனை அணைத்து, “தப்பா கேட்டுட்டேனா?” எனக் கேட்டாள்.
விக்ரம் கோபமாக, “அவங்கள நான் புரிஞ்சுக்கணுமா? ஏன்? என்னை அவங்க புரிந்து வைத்திருக்கலாமே!”
அவங்களுக்கு பயம் தான். உங்க அப்பா உங்க மேல ரசியை விட பாசமா இருக்காரு. அதான் எங்கே தன்னோட பொண்ணை கவனிக்காமல் விட்டு விடுவாரோன்னு பயத்துல்ல தான் உங்கள காயப்படுத்துறாங்க விக்ரம். மற்ற படி அவங்க ரொம்ப நல்லவங்க என்றாள்.
விக்ரம் சுவாதியை பார்த்து, “நீ என்ன நினைக்கிற? அப்பா சொல்றாருன்னு ரசிக்குரியதை நான் எடுத்துப்பேன்னு நினைக்கிறியா?”
“அப்படியில்லை விக்ரம்” என்று சுவாதி அமைதியானாள்.
விரக்தி புன்னகையுடன், அவன் அலைபேசியை எடுத்து சந்துரூ என்ற வக்கீல் ஒருவரை அழைத்து, சார், “அப்பா சொத்தை என் பெயரில் மாற்ற சொன்ன போது நான் என்ன செய்தேன்னு சொல்லுங்க?” என்று விக்ரம் கேட்டான்.
“என்னாச்சு விக்ரம்? உங்க அம்மா மீண்டும் பிரச்சனை பண்றாங்களா?” அதான் முன்பே உன்னை சொல்ல சொன்னேன் என்றார் அவர் கோபமாக.
நான் சொல்லி யாரும் என்னை பற்றி தெரிய வேண்டாம்ன்னு நினைத்தேன். ஆனால் எனக்கு பிடித்த யாருமே என்னை நம்புவதாக இல்லை என்று சுவாதியை பார்த்தான் விக்ரம்.
விக்ரம், “நான் உங்களை நம்பலைன்னு யார் சொன்னா?” சொத்து வேணும்ன்னு நினைக்கிறவன் வீட்டை விட்டு அந்த வயதிலே வெளியேறி இருக்க மாட்டான். எனக்கு தெரிந்து நீங்க இப்ப இருக்கும் வீடு கூட உங்க சொந்த செலவில் தங்கி இருப்பீங்கன்னு எனக்கு தெரியும் என்றாள்.
ஏன்னா, அவங்க உங்க உண்மையான அம்மா இல்லை. அதனால் அவங்களுக்கு எண்ணம் அப்படி தான் போகும். எதை கூறியும் அவங்கள நம்ப வைப்பது கஷ்டம் தான். யார் சொன்னாலும் கேட்க மாட்டாங்க என்றாள் அவளும் கோபமாக.
“நீ எப்படி என்னை நம்புற?” விக்ரம் கேட்க, சட்டென புன்னகைத்தாள்.
“இப்படி பக்கம் வந்து கட்டிப் பிடிச்சு கடிச்சு வச்சிருவேன்” என்றாள்.
ஷ்..ஆ..வாயாடி என்றான் விக்ரம்.
டேய் விக்ரம், நான் லயன்ல்ல தான் இருக்கேன். “யாருடா அந்த பொண்ணு? உன்னையவே மிரட்டுறா?”
“என்னோட ரௌடி பேபி” என்றான் விக்ரம்.
ரொம்ப சந்தோசம்டா. எப்படியோ ஒரு புள்ளைய பிடிச்சிட்ட. இனி உன்னை பார்க்க உன் வீட்டுக்கு நான் வர தேவையில்லை என்ற சந்துரூ, ஹாம் விக்ரம், உன்னோட பேரண்ட்ஸ் தேனீன்னு சொன்னான்டா ஆதவ்.
“எனக்கு தெரியும்” என்றான் விக்ரம்.
“வாட்?” சந்துரூ கேட்க, ஆமா சார். அவங்க என்னை அப்பாவிடம் தெரிந்தே தான் தத்து கொடுத்திருக்காங்க என்றான் விக்ரம்.
“எதுக்குடா? உன்னை பிடிக்காமலா?”
இல்ல சார், எனக்கும் என் அண்ணாவுக்கும் ஏதோ தோசமாம். அதனால் தான். எங்க உயிரை காப்பாற்ற தான். எங்களது இருபத்தெட்டாவது வயது வரை ஏதோ கண்டம் இருக்குன்னு இருவரும் பிரிந்து இருக்கணும் என்பதால் தான் என் அப்பா சதா அப்பாவிடம் என்னை கொடுத்து வளர்க்க சொல்லி இருக்கார்.
அடுத்த வருடம் நான் அவர்களிடம் சென்று விடுவேன் என்று விக்ரம் சுவாதியை பார்த்தாள். அவள் கண்கலங்க அவனை பார்த்தாள்.
சார், நான் அப்புறம் பேசுகிறேன் என்று அலைபேசியை துண்டித்து விட்டு, “சுவாதி நீ பார்த்தேல்ல ரசி கோபத்தை?” இதற்கு பயந்து தான்..
“என்ன? அவளுக்கு தெரியுமா?”
“நீங்க அப்பொழுது சிம்மா மாமாவிடம் தான பேசுனீங்க?” ஆமா அவன் தான் என் அண்ணன். அவங்க தான் என் உண்மையான குடும்பம் என்றான் விக்ரம்.
“அவங்களா? அப்ப இங்க தான இருப்பீங்க? எதுக்கு போயிருவேன்னு சொன்னீங்க?” சுவாதி கேட்க, சுவா..அவங்க தேனீக்காரவங்க. சோ..நான் போகணும் என்றான். அவள் கண்ணீருடன் அவனை பார்த்தாள்.
விக்ரம் புன்னகையுடன், “உன்னை எப்படி விட்டு போவேன்?” எல்லார் பிரச்சனையும் முடியட்டும். பின் நம் வீட்டில் பேசி சம்பூவை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்றான்.
நான் சம்பூ இல்லை. “சுவாதி” என்று அவனை அணைத்தாள்.
சுவாதி நம்ம மேரேஜோட உனக்கு சர்பிரைஸ் இருக்கும். அதுவரை காத்துக்கிட்டு இருக்கு.
அய்யோ, அதுவரை சொல்லாமல் இருந்தீங்க. என் தலை வெடித்து விடும்.
அது சர்பிரைஸ் தான். சொல்ல முடியாது. யோசிக்காத. உன்னோட அண்ணாவை அது ஏதும் செய்து விடாமல் இருக்கணும்.
ஆமா, “அங்க என்ன ஆயிற்றுன்னு தெரியல?” சுவாதி வருத்தமாக கூற, அவள் தோளில் கையை போட்ட விக்ரம், யாருக்கும் ஏதும் ஆகாது. அதான் சுபிதனின் ஆன்மா துணைக்கு இருக்கே என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க, விக்ரம்..அது தாத்தா கார், அச்சோ சிம்மா மாமாவும் ரித்தி அண்ணியும்.. போச்சு போச்சு என்று எழுந்து, நீங்க வெளிய வராதீங்க. நான் அவங்களை போக விடாம செய்கிறேன் என்று சுவாதி வேகமாக ஓடினாள்.
காரின் முன் சுவாதியை பார்த்து ரகசியன் காரை நிறுத்தி இறங்க, அவர்கள் பின் வந்த சிம்மாவும் பைக்கை நிறுத்தினான்.
ரகசியனை பார்த்து, “அண்ணா இங்க எதுக்கு வந்தீங்க?” போங்க என்று ரித்திகாவை பார்த்து, “நீங்க இங்கே வரவே கூடாது” என்று பயத்துடன் சொல்ல, “நாங்க வந்தா என்ன பிரச்சனை?” சிம்மா கேட்க, “மாமா” என்று ரகசியன் கையை விட்டு சிம்மாவிடம் வந்து, “விக்ரமை அதை கொல்ல பார்த்தது” என்று அவள் சொல்ல, “விக்ரமா?” என்று எல்லாரும் அவளை பார்த்தனர். அவள் குடும்பம் மொத்தமும் அங்கே வந்திருந்தனர்.
தன் மகள் பேசியதை பார்த்த சுவாதி அப்பா சுற்றிலும் கவனித்தார். கோவிலின் வாயிலில் விக்ரம் அமர்ந்திருந்தான். அவனை பார்த்து விட்டு சுவாதி..என்று கோபமாக சத்தமிட்ட அவளுடைய அப்பா வா..என்று அவளை இழுத்தார்.
அப்பா, என்னை விடுங்க என்றாள்.
“என்னடி விடணும்?” எங்களுக்கு எங்க பிள்ளைய விட ஏதும் முக்கியமில்லை. அது உன்னை ஏதாவது செய்து விட்டால்.
“இதுக்கு தான் பொட்ட பிள்ளைய வாய் பேச விடக் கூடாதுன்னு சொல்வாங்க” என்ற சுவாதியின் அம்மா தாத்தாவை பார்த்து, மாமா நான் முதல்லவே சொன்னேன். “யாராவது கேட்டீங்களா?” இவளோட பேச்சுக்கு இது போல் மட்டுமா பிரச்சனை வரும் என்று புலம்பிக் கொண்டே அழுதார்.
அம்மா, நான் ஏதுமே செய்யலை. “அது சரி உங்களுக்கு எப்படி அவனை பற்றி உங்களுக்கு தெரியும்?”
“நீ தான் குரூப்ல்ல போட்டுருக்க” என்றரகசியன், அந்த புத்தகம் பற்றி ரித்திகா சொல்லும் போதே ஏதோ வில்லங்கம் இருக்குன்னு நினைச்சேன். இவ்வளவு பெருசா இருக்கும்ன்னு நினைக்கல என்று அவனும் கோபப்பட்டான்.
“எதுக்கு எல்லாரும் என்னையே சொல்றீங்க?” நான் அண்ணி வாழ்ந்த ஊரை பார்க்கணும்ன்னு தான ஆசையா வந்தேன். “இப்படியெல்லாம் இருக்கும்ன்னு எனக்கென்ன தெரியும்?” என்று சுவாதி அழுது கொண்டே சொன்னாள்.
“உங்க பொண்ணு வாய் பேசுறதனால பிரச்சனைன்னா அமைதியா இருக்கும் பொண்ணுங்களுக்கு பிரச்சனையே வருவதில்லையா?” நானும் முன் சுவாதி போல தான் அதிகமாக பேசினாலும் சந்தோசமா இருந்தேன். “என் வாழ்க்கையில் நான் எப்பொழுது அமைதியை தேர்ந்தெடுத்தேனோ? அப்பவே மொத்தமும் போச்சு. நாம எப்படி இருக்கோம்? “என்று முக்கியமில்லை. நம் வழி சரிதானான்னு பாருங்க என்று ரித்திகா சினமுடனும் கண்ணீருடனும் சொல்லி விட்டு சுவாதி அருகே வந்தாள்.
சுவாதி ரித்திகா கையை பிடிக்க, அதை தட்டி விட்ட சுவாதி அப்பா..நீ என்ன வேண்டுமானாலும் சொல்லு. எங்க பொண்ண நாங்க அழைச்சிட்டு தான் போகணும் என்று அவர் நகர, விக்ரமும் சுவாதி கையை பிடித்தான். அவனை பார்த்து அவர் மேலும் கோபமானார்.
சிம்மா பதட்டமாக விக்ரமிடம் வந்து, “தலையில இப்படி அடிபட்டிருக்கு” என்று அவனிடம் வந்தான்.
சுவாதி அவள் அப்பா கையை தட்டி விட்டு, “எதுக்கு வெளிய வந்தீங்க?” வராதீங்கன்னு சொல்லீட்டு தான வந்தேன் என விக்ரமிடம் கத்தி அவன் கையையும் தட்டி விட்டு “கோவிலுக்குள்ள போங்க” என்று நேரத்தை பார்த்து, இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு. அது இங்க வந்திறாம..என்று அவனை தள்ளினாள்.
சுவாதி, “கொஞ்சம் அமைதியா இரு” விக்ரம் சத்தமிட, சிம்மா இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
இங்க பாருங்க சார், உங்க பொண்ணுக்கு இப்பொழுதைக்கு ஆபத்து இல்லை. இப்ப நீங்க எல்லாரும் தமிழ்- மிருளாலினி பற்றி தான் யோசிக்கணும். “அவங்க என்ன செய்றாங்கன்னு தெரியல?” அது கண்டிப்பாக அவங்கள சேர விடாது.
அப்புறம் ஆன்ட்டி, “உங்க பொண்ணு என்ன அது கூட வம்பா வளர்த்தா?” இதுக்கு முன் நடந்த பிரச்சனையில் அவளை இழுக்காதீங்க என்று சிம்மா, மாறா தனியா அங்க இருக்கான். இங்கிருக்கும் போலீஸ் ஆட்களையும் பாதுகாப்பிற்கு போட்டேன். ஆனால் அதை சமாளிக்க இவங்களால் முடியாது என்றான்.
ம்ம்..தெரியும் விக்ரம். சாமி..வாங்க என்று சிம்மா அழைக்க நாலைந்து பேருடன் ஒருவர் வந்தார். இவர் காட்டில் வசித்த சித்தர். “அவனை கட்டுக்குள் வைக்க இவரால் முடியும்” என்றான் சிம்மா.
ரசி, “என்னாச்சு?” என்று விக்ரம் பதற, அண்ணா..என்று அழுது கொண்டே அவனை அணைத்த ரசிகா,
தமிழ் சாருக்கு உடல் தூக்கிப் போட்டதுன்னு பூஜை செய்யும் குருக்களிடமிருந்து தீர்த்தமொன்றை சிம்மா அண்ணா ப்ரெண்டு மாறன் வாங்கி தெளித்தார். அண்ணா இப்ப பரவாயில்லை.
அவனை காப்பாற்றிய மாறன் அண்ணா..என்று சிம்மாவை பார்த்து, அது அவரை தூக்கி அடித்தது. வேகத்தில் சுவற்றில் இடித்து பின் தலையில் நிற்காமல் இரத்தம் வந்தது. அண்ணா மயங்கிட்டாங்க. அவர் இப்ப மிரு அக்காவோட பெற்றோருடன் தான் இருக்காங்க. அங்கே பக்கமிருந்த சில பசங்க உதவ முயன்று கொண்டிருக்கிறார்கள்.
“இங்க ஹாஸ்பிட்டல் இருக்குன்னு தான் மருத்துவரை அழைத்து செல்ல வந்தேன்” என்று உடல் நடுக்க விக்ரமை அணைத்து அழுதாள் ரசிகா.
டேய், “காரை எடுங்க” என்று தாத்தா சொல்ல, சுவாதி “நீ வா..” என்று அவள் அப்பா அவளை இழுக்க, “இங்க என்ன பிரச்சனை நடக்குது? என்னடா பண்ற?” பாட்டி சத்தமிட்டார்.
அம்மா, “எனக்கு தெரியும்” என்று அவர் மேலும் சுவாதியை இழுத்தார்.
தாத்தா சப்பென அவர் கன்னத்தில் அறைய, “தாத்தா” என்று சுவாதி அண்ணன் தாத்தாவிடம் கோபமாக வந்தான்.
“என்னடா சத்தம் போடுற? உங்களுக்கு புரியலையா?” நம்ம சுவாவுக்கு இப்ப ஏதும் ஆகாது. முதல்ல அந்த பொண்ணுங்களையும் அவங்க கணவன்மார்களையும் காப்பாற்றி அவ்வரக்கனை அழித்தால் பிரச்சனை தானாக முடிந்து விடும். சும்மா பிள்ளைய பிடித்து தொந்தரவு செய்யாதீங்க.
திலீப், முதலுதவி பெட்டியை எடுத்துட்டு நீ அந்த பையனை பாரு. ராஜா..ஹாஸ்பிட்டலுக்கு சென்று மருத்துவரை அழைச்சிட்டு வா. மத்தவங்க கார்ல்ல ஏறுங்க என்றார் தாத்தா.
விக்ரம், “நீங்க கோவிலுக்குள் போங்க” என்ற சுவாதி ரசிகாவை அணைத்து, நீயும் போ. ரித்தி நீங்களும் என்று அவளது அத்தை பொண்ணுங்களை பார்த்தாள்.
தாத்தா, “இவங்க வருவது பாதுகாப்பு இருக்காது” என்று சுவாதி கூற, “அவள் எதற்கு கூறுகிறாள்?” என்று புரிந்து பசங்க மட்டும் வாங்க என்று தாத்தாவும் அவர்களுடன் சென்றார்.
விக்ரம் “போங்க” என்று சுவாதி சொல்ல, ரகசியனை பார்த்த ரசிகா, போகாதீங்க என்று தலையசைத்தாள். அவன் கண்ணை மூடி திறந்து அவளை பார்த்துக் கொண்டே காரை எடுத்தான். அவள் கைகளில் நடுக்கம் கொஞ்சமும் குறையவில்லை. பசங்க எல்லாருடைய அம்மாக்களும் கோவிலில் விக்ரமுடன் இருந்தனர்.
ரித்திகாவை கோவிலில் இருக்க சொன்ன மறுநிமிடம் சிம்மா தன் நண்பனை காண பைக்கில் பறந்தான்.
தமிழினியன் மிருளாலினியை நெருங்கிய போது தான் அவன் உடல் சூட்டால் தகித்து தூக்கிப் போட்டது. மிருளாலினி அழுது கொண்டே வெளியே வந்து சத்தமிடவும், மாறன் உதவினான்.
மாறனின் உதவிக்கு பின் தமிழினியன் கையை பிடித்து அழுது கொண்டிருந்த மிருளாலினியை அவனை பார்த்து இழுத்து அணைத்துக் கொண்டான். அவளின் அவனுக்கான அழுகை அவனுக்கு மேலும் உடல் தேற உதவியது. இருவரும் மெதுவாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, “உன்னை என்னை விட்டு எங்கேயும் போக விட மாட்டேன்” என்று தன் மனதில் எண்ணியவாறு மிருளாலினி பார்க்க, உனை ஒருவன் தீண்ட வேண்டுமானால் அது நான் இறந்தாலும் நடக்காது என்று தமிழினியனும் மனதினுள் எண்ணிக் கொண்டான்.
மிருளா, “பயந்துட்டியா?” தமிழினியன் கேட்க, அவள் மேலும் அழுதாள். அவளின் உவர்நீர் அவனுக்கு அமுதாய் இனித்தது. இருவரும் சிலமணி நேரம் அணைத்துக் கொள்ள, அவர்களின் இனிமையான காதல் அரங்கேறியது. வெளியே மாறன் இரத்தவெள்ளத்தில் இருந்தாள்.
விரட்டிய காரை அங்கே வந்து நிறுத்தினான் திலீப். இறங்கி “எங்கே?” என தேட, மிருளாலினி அப்பா கையசைத்தார். அப்பெரிய ராட்சசனை பார்த்துக் கொண்டே அவரிடம் ஓடியவன் மாறனை பார்த்து அதிர்ந்து நாடியை சோதித்தான்.
மாமா, இவங்க பல்ஸ் கம்மியா இருக்கு. இப்படியே போனால் காப்பாற்ற முடியாது என்றான். அவனுடைய குடும்பத்தின் ஆண்கள் அனைவரும் அங்கே வந்தனர்.
ராஜா, “வர்றானான்னு கேளுங்க?” தாத்தா சொல்ல, சுவாதி அண்ணன் கால் செய்து விட்டு, “இப்ப மருத்துவர் வந்திருவாராம்” என்று அவன் சொல்ல, திலீப் மாறனை தன் தம்பிகள் உதவியுடன் படுக்கையில் போட்டு இரத்தம் வழியும் இடத்தை துடைத்து இப்பொழுதைக்கு அவன் வைத்திருந்த மருந்தை போட்டு கட்டிட்டா.
இவர்கள் இங்கே வரும் முன்னே சாமியாரை அழைத்து வந்த சிம்மா, அவரிடம் ஏற்கனவே இருக்கும் சாமியார் பக்கம் அழைத்து வந்தார்.
அந்த பெரிய ஓமகுண்டத்தின் முன் அனைத்து குருக்களும் பூஜை செய்து கொண்டிருந்தனர். அருகே இருந்த தீர்த்தத்தை பார்த்த அவர் சிம்மாவை பார்த்து, அதை எடுத்து வீட்டிற்கு வெளியேயும் உள்ளேயும் ஓர் இடம் விடாமல் தெளித்து விடு..
சாமி..”அவங்க உள்ள இருக்காங்க” சிம்மா தயங்கினான்.
எடு..வா என்று அவர் அழைக்க மந்திரத்தை கூறிக் கொண்டே அவரும் அவனுடன் சேர்ந்து சென்றார். மந்திரத்தை போட சென்ற அவரை அது தாக்க, சிம்மா அவரை தப்ப வைத்து அழைத்து சென்றான்.
இருவரும் உள்ளே சென்றனர். அப்பொழுது தான் தமிழினியன் குடும்பம் வந்தனர்.
யாரும் அதன் முன் இல்லாமல் இருக்க, அது பக்கமிருந்த மரங்களை தாக்கி இடத்தையே அலங்கோலப்படுத்தி இருந்தது. மிருளாலினி வீட்டை தாக்க, பலனில்லாமல் போனது. பூஜை செய்பவர்களையும் அதனால் நெருங்க முடியவில்லை. அவர்களில் ஒவ்வொருவராக எழ, அது பயங்கர சத்தத்துடன் சிரித்தது.
எழுந்த குருக்களோ காரணமில்லாமல் எழவில்லை. அவர்களாகவே அதை நோக்கி செல்ல, அது அவர்களை தாக்க காத்திருந்தது. சிவப்பு நிற தேர் இழுக்கும் கயிறு அவர்கள் கையில் இருக்க, அனைவரும் அதனை சூழ்ந்து மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே கட்டினர். அதனால் நகர முடியவில்லை. நின்றவாறே அலறலுடன் சாய்ந்தது.
தாத்தாவும் மற்றவர்களும் வாசலருகே வந்து பார்த்தனர்.
“அன்று கூட இவ்வளவு பயங்கரமாக தெரியல தாத்தா” ரகசியன் சொல்ல, “ஆமா கண்ணா” என்று அதையே அவரும் பார்த்துக் கொண்டிருந்தார்.
தாத்தா, “அவருக்கு பல்ஸ் நார்மலாகிடுச்சு” என்று சுவாதி அண்ணன் சத்தமிட்டான். அம்மயான அமைதியில் அதன் குரலும் அடங்கிப் போனது.
அவன் அவனுக்கான சக்தியை அதிகரிக்க முயன்று கொண்டிருக்கிறான். “பார்க்கிறாயா?” அச்சாமியார் கேட்க, “ஆமா சாமி” என்றான் சிம்மா.
சுபிதனின் ஆன்மா நீலநில சுடரின் மேல் அமர்ந்து கண்ணை மூடி தியானித்துக் கொண்டிருந்தது.
“அது என்னது சாமி? நீலநிற ஒளியாக தெரியுது?” சிம்மா கேட்க, அது ஒளியல்ல. நம் சிவபெருமானின் விசம் என்றார் அவர்.
“விசமா?” சிம்மா அதிர்ச்சியுடன், “அது அவனை காயப்படுத்துமா சாமி?” என அவரை பார்த்து கேட்டார்.
“உனக்கு அவனை பார்த்தால் பயமாக இல்லையா?” அவர் கேட்டார்.
இல்ல சாமி, அவன் இன்னும் எங்க சுபிதன் தான்.
அப்படியே இருந்தால் நல்லது. சாதாரண விசம் மனிதர்களை உடனே தாக்கும். ஆனால் இது என் ஈசனின் தேக விசயம். பலமடங்கு ஆன்மாவை நேரம் கழித்து தான் தாக்கும். அவன் அவ்விசத்தை எடுத்துக் கொள்வது அவ்வளவு சாதாரணமில்லை. அவன் நாளைய இரவுக்காக அவனை அவனே வலிக்கும்படி தயாராகிக் கொண்டிருக்கிறான்.
ஆனால் சாமி, அவனுள் அன்று நான் ஈசனை பார்த்தேன்.
ம்ம்..அவனை பார்த்தவுடனே அவன் இறந்து ஆன்மாவாக இருக்கிறான் என்பதை விட தெய்வ அம்சம் அவனிடம் தெளிவாக தெரியுது. ஈசனின் விதிமுறையை அவன் மீறாமல் இருக்கும் வரை அவ்விசம் அவனை அழிக்காது. ஏனென்றான் மகாதேவனே அவன் பக்கம் தான் இருக்கிறார். அவனுள்ளும் இருக்கிறார்.
சிம்மா வெளியே வந்து அரக்கனை பார்த்துக் கொண்டே மாறனை பார்க்க ஓடினான்.
மாறன் சுயம் இல்லாமல் மயக்கத்தில் இருந்தான். சிம்மா அவனை பார்த்து அழுது கொண்டே அவன் கையை பிடித்தான்.
“உன்னோட மனைவி, பிள்ளைக்கு நான் என்னடா பதில் சொல்வது?” எல்லாமே என்னால் தான் உன்னை நான் இங்கே அனுப்பி இருக்கவே கூடாது என்று அவன் கதற, எல்லாரும் அவனை சுற்றி நின்றனர்.
மாறன் அழைத்து வந்த சாமியார் உள்ளே வந்து சிம்மா தோளில் கையை வைத்து, “அவனுக்கு ஏதும் ஆகாது” என்றார்.
சாமி, “நான் சித்துவுக்கு என்ன பதில் சொல்வது?” என சிம்மா அழுதான். அவர் அவனை புன்னகையுடன் பார்த்து விட்டு, மாறன் நெற்றியில் கையை வைத்தார்.
சிம்மா, “இன்னும் நீ பார்க்க வேண்டியது நிறைய இருக்கு. இதற்கே அழுதால் எப்படி?” மாறனுக்கு ஒன்றும் ஆகாது. அவன் சற்று நேரத்தில் எழுந்து உன்னிடம் பழையவாறு பேசுவான் என்று சொல்லி விட்டு அவர் சென்றார்.
அவர் சென்ற ஐந்தாவது நொடிக்குள்ளே மீண்டும் அவரே வந்தார்.
“என்னாச்சு சாமி? வேற யாருக்கும் ஏதுமில்லையே?” சிம்மா கேட்க, “மாறன் எப்படி இருக்கான்? அவன் மனைவியிடம் சொல்லிட்டியா?” எனக் கேட்டார்.
சாமி, “இப்ப தான் அவன் என்னிடம் பழையவாறு பேசுவான்னு சொன்னீங்க?” சிம்மா கேட்க, நான் “இப்ப தான் வாரேன் சிம்மா” என்று அவர் சொல்ல, “அப்ப இங்க வந்தது யாரு?” ரகசியன் கேட்டான்.
“வந்தாங்களா? யாரு?” அவர் கேட்க, “நீங்க தான?” சிம்மா கேட்க, நிஜமாகவே நானில்லை. இப்ப தான் நான் வந்துருக்கேன் என்றார்.
“அந்த அரக்கன் போல் வேறோருவன் வந்து இவனை ஏதும் செய்து விட்டானோ?” தாத்தா கேட்க, சிம்மா பதட்டமானான்.
மை..காட்..இவர் தலையை பாருங்க. காயமே இல்லை. அடிபட்ட தடயம் கூட இல்லை திலீப் பதற, “என்ன இது விந்தை?” என்று மருத்துவர் கேட்டார்.
மாறன் எழுந்து அமர்ந்தான்.
மாறா, “உனக்கு ஒன்றுமில்லையே? தலை வலிக்குதா? வேற ஏதாவது செய்யுதா?” சிம்மா பதற, மாறன் புன்னகைத்தான்.
அடிச்சேன்னா பார்த்துக்கோ. “நான் எவ்வளவு பதறி வந்துருக்கேன்? நீ சிரிக்கிற?” சிம்மா அவன் தலையை தொட்டு பார்த்தான்.
“என்ன சொன்ன? மகா தேவ்வா? என் அப்பனா இங்கே உன்னை வந்து காப்பாற்றியது?” என மடிந்து தலைமேல் கை வைத்து “எல்லாம் வல்ல ஈசனே போற்றி..போற்றி..” என்றார்.
“தந்தையே! என்ன இது?” விநாயகர் கேட்க, “விசமும் நானே மருந்தும் நானே” என புன்னகை அளித்தார் லிங்கேஸ்வரர்.
“ஈசனா?” என்ற சிம்மா, “அந்த கடவுள் என்னை தொட்டாரா?”
“தொட்டாரா சிம்மா?” நீ கவனமா இருக்கணும். அவர் கை உனக்கு ஆறுதலாக படிந்துள்ளது என்றால் உன் வாழ்க்கையில் பெரியதாக ஏதோ நடக்கவிருக்கிறது என்றார் அவர்.
சிம்மா சிந்தனையுடன் அமர்ந்தான். அந்த சிவனா இங்கே நம் முன் வந்தார் சுவாதி அண்ணா பூரிக்க, நாம கவனமாக இருக்கணும். அவரே இறங்கி வந்து இவனை காப்பாற்றினால் காரணம் இருக்கும் என்றார் தாத்தா.
ம்ம்..என்று அதிர்ச்சி மாறாத முகத்துடன் அனைவரும் அதிர்ந்தனர்.
அந்த சுபிதனிடம் தொடங்கியது. பார்க்க வேண்டியவர், வேண்டாதவர்களை பார்க்கிறோம் என்றான் ரகசியன்.
ஆமா, “சுபிதன் நமக்காக எதையும் செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறான்” என்று சிம்மா மனதினுள் எண்ணினான்.
கோவிலினுள் அனைவரும் அங்கங்கு அமர்ந்திருக்க, விக்ரம் மடியில் ரசிகா உறங்கிக் கொண்டிருந்தாள். அவர்கள் அருகே ரித்திகா அமர்ந்திருந்தாள். சுவாதியின் பெரியப்பா, சித்தப்பாக்களும், அத்தைகளும், அவர்களின் மகள்களும் விக்ரமை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் சுவாதியின் பெற்றோரோ அண்ணன், தங்கை இருவரையும் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் சினம் விக்ரமிற்கு புரிந்தாலும் அமைதியாக இருந்தான்.
அந்நேரம் விக்ரமிற்கு அழைப்பு வர, தெரியாத எண்ணாக இருக்க புருவம் சுருக்கி எண்ணை பார்த்தான். பின் ரித்திகாவை கண்ணால் அழைத்து ரசிகாவை பார்த்துக் கொள்ள சொல்லி அவளை ரித்திகாவின் மடியில் அவள் விழிக்காதவாறு நகர்த்தி எழுந்தான்.
சற்று நகர்ந்து சென்ற விக்ரம் கோபத்தில் அங்கிருந்த தூணில் கையை அடித்தான். அவன் கண்கள் சிவப்பேறி இருந்தது. ஆண்கள் எழுந்து அவனை கூர்ந்து நோக்கினர். அலைபேசியில் அவன் எதையோ பார்த்து துடித்துக் கொண்டிருந்தான்.
விக்ரம் தோளில் பாட்டி கை வைக்க, கண்களை துடைத்து திரும்பிய விக்ரமிடம், “பிரச்சனையாப்பா?” என்று ஆறுதலாக கேட்டார். அவர் கேட்ட மறுநிமிடம் அவரை அணைத்து சத்தமில்லாது அவன் அழுதான். அனைவரும் பதறிப் போயினர். ரித்திகா பதட்டமாக ரசிகாவையும் விக்ரமையும் செய்வதறியாது பார்த்தாள்.
சட்டென விலகி, “சாரி பாட்டி” என்று கரகரத்த குரலில் அவன் பாட்டியிடமிருந்து ரித்திகாவை நோக்கி வேகமாக வந்து, “உதிரன் எண்ணை கொடு” என்றான்.
“மாமா எண்ணா? என்னிடம் இல்லையே?”
“உன்னிடம் இருக்கு” என்று பல்லை கடித்த விக்ரம் ரித்திகாவை முறைத்துக் கொண்டே அவளது அலைபேசியை அவள் கையிலிருந்து உருவினான். அதில் இருந்த உதிரன் எண்ணை பார்த்து நிம்மதியிற்று தனியே சென்று ஏதோ பேசி விட்டு வந்தான்.
“பெரிய பிரச்சனையா? நட்சத்திராவிற்கா?” வேல்விழி கேட்க, இல்ல..அவங்க நல்லா இருக்காங்க. மணி பன்னிரண்டிற்கு மேலாகி விட்டது. எல்லாரும் கிளம்பணும். வெகு நேரம் இங்கிருப்பது நல்லதில்லை என்ற விக்ரம் அழைத்தது ரகசியனை.
சற்று நேரத்தில் ரகசியன், திலீப், விகாஸ் காருடன் அங்கே வந்தனர். “சீக்கிரம் கிளம்புங்க” என்ற விக்ரம் ரித்திகாவிடமிருந்து அவன் தங்கை ரசிகாவை தூக்க, “அவளை எழுப்பி விடலாம்ல்ல?” கிருபாகரன் கேட்டான்.
இல்ல அங்கிள், அவ பயந்திருப்பா. விழித்தால் தூங்க மாட்டா. நடந்ததையே நினைத்துக் கொண்டிருப்பாள் என்று ரித்திகாவை பார்த்து சினமுடன் “எழுந்திரு” என்று சொல்ல, அவள் புரியாது விழித்தவாறு வேகமாக எழுந்தாள்.
திலீப் காருக்கு சென்று ரித்து,” நீ இவங்களோட வா” என்று ரகசியன் கார் பக்கம் விக்ரம் நகர, நான் அவளை பார்த்துக்கிறேன் என்றாள் ரித்திகா.
அவ உன்னை பார்த்தால் கோபப்படுவாள். நீ அவங்களோட வா என்று விக்ரம் சொல்ல, திலீப் அருகே இருந்த முன் சீட்டில் அமர்ந்தாள். அவளுக்கு பின் அவன் அம்மாவும், அவனது அத்தைகளும் ஏறினர்.
ரகசியன் காருக்கு வந்த விக்ரம், ரகசியன் அருகே இருந்த சீட்டில் ரசிகாவை சாய்த்து அமர வைத்து, தனது கைக்குட்டையை எடுத்து காரின் ஓரிடத்திலும் அவளது கையிலும் கட்டினான்.
ரகசியனை நிமிர்ந்து பார்த்த விக்ரம், “உங்க பாதுகாப்பிற்கு தான்” என்று அவன் கார் கதவை சாத்த, அவனுக்கு அழைப்பு வந்தது. அதை எடுத்தவன் கண்களோ கலங்கியது.
ரகசியன் அவனை பார்த்து, “பிரச்சனையா? நானும் வரவா?” என்று கேட்டான்.
ரவி நீங்க எல்லாரையும் பார்த்துக்கோங்க. நான் இப்பவே வாரேன் என்று ரகசியனை பார்த்து, எங்கேயும் காரை நிறுத்தாதீர்கள். வீட்டிற்கு சென்றவுடன் எல்லாரும் உள்ளே சென்று விடுங்கள். லாக் பண்ணிக்கோங்க. கதவை திறக்க வேண்டாம் என்று நிறைய அறிவுரையை மூன்று காரில் இருப்பவர்களிடமும் கூறினான்.
“நானும் வாரேன்னே!” என்று ரகசியன் கேட்க, சுவாதி பெற்றோரை பார்த்த விக்ரம், என்னோட பிரச்சனையை நானே பார்த்துக்கிறேன் என்ற நேரம் பைக்கில் வந்த சிம்மா விக்ரமை கோபமாக முறைத்தான்.
விக்ரமின் சீரியசான முகம் புன்னகையை தத்தெடுத்தது.
“என்னடா பல்லை காட்டுற?” பிரச்சனைன்னா சொல்ல மாட்ட. “அந்த மிளிரன் சொல்லி தான் எனக்கு தெரியணுமா?” என்று சிம்மா கொந்தளித்தான்.
சிம்மா ரித்திகாவை பார்த்து, “ரசிகாவை பார்த்துக்கோ” என்று அவளிடம் கூறி விட்டு அவளை பார்த்துக் கொண்டே, “ஏறுடா” என்று விக்ரமை அழைத்தான். இருவரும் கிளம்பினர்.
ரகசியன் காரை எடுக்க, அதன் பின் மற்ற கார்களும் நகர்ந்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ரசிகாவோ சீட்டிலிருந்து நகர்ந்து டிரைவர் சீட்டில் இருந்த ரகசியன் தோளில் விழ வந்தவளை தடுத்தது விக்ரமின் கைக்குட்டை.
சட்டென காரை நிறுத்தி, ரசிகாவின் தலையில் சீட்டில் சாய்க்க, அவள் கண்ணை விழித்து, “நான் எப்படி காருக்குள்ள வந்தேன்?” என்று பதறி ரகசியனை பார்த்தாள். அவன் புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டே காரை எடுத்தான்.
“உன்னோட அண்ணன் வேலை தான்” என்றார் சுவாதி அம்மா.
“அண்ணாவா?” ஆமா..”அவன் எங்கே?” என்று ரசிகா ரகசியனை பார்த்தாள்.
பேசுவது நாம். “அவனை எதுக்கு பாக்குற?” என்று முகம் சுளித்து சுவாதி அம்மா அவளிடம் கேட்டார்.
“உங்களை பார்த்தால் எனக்கு கோபம் தான் வருது” என்று சாதாரணமாக ரசிகா சொன்னாள்.
சுவாதி அம்மாவோ சீற்றத்தில், விக்ரமை பற்றி பேசத் தொடங்கினார்.
“உன்னோட அண்ணனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் எங்க பொண்ணு கையை எங்க முன்னே பிடிப்பான்?”
கையை தான பிடித்தான். அது கூட அவளுக்கு உதவ கூட இருக்கலாம் என்றாள்.
“நீ நடந்தது தெரியாமல் பேசாத” என்று அவர் கர்ஜித்தார். ரகசியனுக்கோ இவர்களது உரையாடலில் சினம் துளி விட ஆரம்பித்தது.
எனக்கு என் அண்ணாவையும் தெரியும். உங்களையும் தெரியும் என்று சுவாதி அப்பாவை ஏளனப்பார்வை பார்த்தாள் ரசிகா.
“என்ன தெரியும்? அவனோட திமிர் அப்படியே உனக்கும் இருக்கு” அவர் சினமாக பேச, ரகசியன் அம்மா அவர் கையை பிடித்து “வேண்டாம்” என்று தலையசைத்தார்.
சும்மா இருங்கக்கா. “இருவருக்கு ஒரே அம்மா, அப்பா போல பேசுறா? அம்மா, அப்பா பெயர் தெரியாத அநாதையை என் பிள்ளைக்கு மணமுடிக்கணுமா? போலீஸ்காரன் வேற. என்ன பழக்கமெல்லாம் வைத்திருக்கானோ? யாருக்கு தெரியும்?” இவளும் அவள் அண்ணா போல எவனுடனானுலும் கூட சுற்றி திரிவாள் என்று அவர் பேச பட்டென பிரேக்கை அழுத்திய ரகசியன் சுவாதி அம்மாவை முறைத்தான்.
பக்கமிருந்த ரசிகா கண்கள் கலங்க, அவள் அண்ணன் கட்டியிருந்த கைக்குட்டையை அவிழ்த்து காரிலிருந்து இறங்கினாள்.
அம்மாடி, “கார்ல ஏறு” என்று பாட்டி கீழே இறங்க, மற்ற கார்களும் நின்றது.
திலீப் பிரேக்கை அழுத்த, யோசனையிலிருந்து மீண்ட ரித்திகா அவனை பார்த்தாள். அவன் வெளியே கண்ணை காட்டி விட்டு இறங்கினான். ரித்திகா இறங்கி ரசிகாவிடம் ஓடினாள்.
ரசிகா, அவர்கள் பேசியதை சொல்ல, சினம் வெடித்து கிளம்பியது ரித்திகாவிற்கு.
ஒரு பொண்ணை பற்றி இப்படி பேச உங்களுக்கு அசிங்கமா இல்லை. “அவள் சுற்றுவாளா? அப்ப உங்க பொண்ணு?” உங்களுக்கும் பொண்ணு இருக்கு. எங்களுக்கும் உங்களை போல் வாய் இருக்கு. பேச தெரியாமல் யாரும் இல்லை.
விக்ரம் அமைதி அவன் பலவீனம் இல்லை. அவன் நினைத்தால் இப்ப கூட சுவாதி உங்களிடமிருந்து அழைத்து செல்ல முடியும். அமைதியாக இருப்பவர்கள் தப்பானவர்கள் இல்லை. அதிகம் பேசுபவர்கள் நல்லவர்களும் இல்லை என்று ரித்திகா கோபமாக அவள் தலையை பிடித்தாள்.
ஆமா, “என்னோட அண்ணா பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?” எல்லா போலீஸ்காரனும் கெட்டவர்கள் இல்லை. என்னோட அண்ணாவை சுவாதிக்கும் பிடிக்கும். அதை நினைவில் வச்சுக்கோங்க. அண்ணா இனி அவள் பக்கம் வரவே விடமாட்டேன் என்று ரசிகா சொன்னாள்.
ரசி, “என்ன பேசுற?” அண்ணா..அவன் காதல் விசயத்தை அவனே பார்த்துக்கட்டும். நீ தலையிடாத. காதல் ஒன்றும் பொழுதுபோக்கு விசயம் அல்ல. உயிரோட கலந்தது. உனக்கென்ன இவங்களுடன் செல்லக் கூடாது. அவ்வளவு தான? வா…போகலாம் என்று ரித்திகா ரசிகாவை இழுத்தாள்.
அவள் கையை தட்டி விட்ட ரசிகா சுவாதி அம்மா முன் சென்று, என்னோட அண்ணா ஒன்றும் அநாதை இல்ல. என்னோட பெற்றோர் அவனை எடுத்து வளர்த்ததால் தான அவனுக்கு குடும்பம் இல்லை, அநாதைன்னு சொல்றீங்க.
என்னோட விக்ரம் அண்ணாவிற்கு குடும்பம் இருக்காங்க. அவனை ஈன்ற அம்மா, அப்பா, அன்பான அண்ணன் இருக்காங்க. உங்களை விட பலமடங்கு பாசமான பெரிய சொந்தபந்தங்கள் இருக்காங்க என்று ரித்திகாவை பார்த்த ரசிகா, நான் என்னை பற்றி யோசித்தது எவ்வளவு பெரிய தவறுன்னு புரிய வச்சுட்டீங்க.
அவங்க அவனிடம் பேசாத காரணமும் எனக்கு தெரியும். எல்லா பிரச்சனைகளும் முடிந்த பின் நானே என் அண்ணனை அவர்கள் குடும்பத்துடன் சேர்த்து வைப்பேன். நான் தனியாக இருந்தாலும் பரவாயில்லை.
“இதுக்கு மேல என்னோட அண்ணாவை பற்றி யாராவது பேசுனீங்க?” நான் மனுசியா இருக்க மாட்டேன் என்று திட்டி விட்டு ரித்திகா பக்கம் திரும்ப, அவளோ ரசிகாவை அணைத்துக் கொண்டாள்.
அய்யோ வலிக்குது, “இப்படி இறுக்குற?” ரசிகா சத்தமிட்டு அவளை தள்ளினாள்.
“நீ எப்படி தனியா இருப்ப?” விக்ரமோட சொந்தங்கள் எல்லாரும் உனக்கும் சொந்தம் தான். சும்மா நீ வேற விக்ரம் வேறன்னு நினைக்காத. அவனை பற்றி எல்லாருக்கும் தெரிய வரும் போது உன்னையும் எல்லாரும் ஏத்துப்பாங்க என்ற ரித்திகா ஆறுதலில் மனமகிழ்ந்தாள் ரசிகா.
சரி, வா..போகலாம் என்று ரசிகா ரித்திகா கையை பிடித்து இழுக்க, அவள் பார்வை ரகசியனை தொட்டு மீண்டது. அவன் ரசிகாவை புன்னகையுடன் பார்ப்பதை பார்த்து விட்டு, “இது சரியில்லாத நேரம். அதனால நாம இவர்களுடன் போகலாம்” என்று திலிப்பை பார்த்து, “உங்களுக்கு ஏதும் பிரச்சனையில்லையே?” என ரித்திகா கேட்டாள்.
இல்ல, ரசி..நீ வா என்று ரகசியன் அவளை அழைத்தான். ரசிகா அவனை பார்த்து முறைத்து விட்டு ரித்திகா கையை பிடித்து அவளுடன் திலீப் காருக்கு சென்றாள். ரகசியன் முகம் வெளிறிப் போனது.
ஆமாம், “ரசி எப்படி அவனுடன் செல்வாள்?” அவன் சித்தி அவளை பற்றி பேசும் போது அமைதியாக வேடிக்கை தான பார்த்தான் என்று அவளுக்கு ரகசியன் மீது சீற்றம் இருந்தது.
ரித்திகா ரசிகாவை உள்ளே செல்ல சொல்ல, “நீங்க உள்ள போங்க” என்று ரசிகா ரித்திகாவை உள்ளே தள்ளினாள். ரசிகாவை பார்த்துக் கொண்டே ரித்திகா புன்னகையுடன் திலீப்பை நெருங்கி அமர்ந்தாள். அவன் அம்மா அவனை பார்க்க, அவன் அவளது அருகாமையில் புன்னகையுடன் காரை எடுத்தான்.
அக்கா, எனக்கு தூக்கமா வருது. “சாஞ்சுக்கவா?” ரசிகா கேட்க, “என்னை எப்படி அழைத்த?” ரித்திகா இதழ்கள் சிரிப்பில் விரிய, திலீப் அவளை ரசித்துக் கொண்டே காரை எடுத்தான்.