அத்தியாயம் 27

விக்ரம், ரித்திகாவை தள்ளி விட்டு சுவாதியும் தனியாக விழுந்தாள். தோட்டா ஒன்று மரத்தை துளைத்தது.

விக்ரம், “அங்க இருக்கான்” என்று சுவாதி கீழே விழுந்த படியே கூற, மற்ற மூவரும் அங்கே வந்தனர். விக்ரம் அவள் சொன்ன திசை நோக்கி ஓடினான். சுட்டவன் சுவாதியின் சத்தத்தில் தெறித்து ஓடினான். விக்ரம் அவனை பிடிக்க முடியாமல் திரும்பி வந்தான்.

அங்கிருந்த மற்றவர்களை பார்த்து விக்ரம் கத்தினான்.

சுவாதி கண்ணீருடன் நின்ற, அவள் கழுத்தின் பின் புறமும் ரித்திகாவின் கையிலும் உராய்ந்து இரத்தக்கறையாக இருந்தது.

விக்ரம் சுவாதியை பார்த்து, தண்ணீரை கொடுத்து விட்டு ரித்திகாவிடம் கொடுத்தான்.

குரல் அடைக்க, “சார்” என்று சுவாதி விக்ரமை அழைத்தாள். அவனும் மற்றவர்களும் அவளை பார்க்க, அவன் இவங்க தான் சுட பார்த்தான் என்று ரித்திகாவை காட்டினாள்.

“என்னையா?” ரித்திகா கேட்க, விக்ரம் இருவரையும் பார்த்துக் கொண்டு, அலைபேசியை எடுத்து “அந்த பிரணவ் அங்க என்ன செய்றான்?” எனக் கேட்டான்.

“இதோ பார்க்கிறேன் சார்” என்றான் ரவி.

“சீக்கிரம் ரவி” என்று விக்ரம் சுற்றும் துலாவ, ரகசியனும் சுற்றி பார்த்தான்.

நேகா, “இவங்க எல்லாரையும் காரில் அழைத்து செல்” என்று ரகசியன் விக்ரமை பார்த்தான். இவர்களை சுற்றி ஆட்கள் இருந்தனர்.

இல்ல, “இருங்க” என்று “ரகா எல்லாரும் என் பக்கத்துல வாங்க” விக்ரம் அழைத்து ரகசியனும் விக்ரமும் மற்றவர்களை மறைத்து நின்றனர்.

சுற்றி வளைத்தனர் ஐந்தாறு ஆட்கள்.

ரவி, “சொல்லு?” என்ற விக்ரமிற்கு கிடைத்த பதில் பிரணவ் எழ முடியாமல் தான் இருக்கிறான். ஆனால் வர்சன் தான். போலீஸீடமிருந்து தப்பி விட்டான் என்று.

அவர்களை சூழ்ந்த ஆட்களுடன் விக்ரமும் ரகசியனும் சண்டையிட, அவர்கள் ஒவ்வொருவராக தப்பி ஓடி விட்டனர்.

ரித்திகாவை பார்த்த விக்ரம், வர்சன் தான் அவன் ஆட்களை அனுப்பி இருக்கான்.

“அவனுக்கு ஏது ஆட்கள்?” வாய்ப்பேயில்லை என்றாள் ரித்திகா.

“ஏன்?”

அவன் ஆட்கள் வைத்து நடத்தும் அளவு பெரிய ஆள் இல்லை. மத்திய ரக மனிதன் தான் அவன்.

“முதல்ல இங்கிருந்து கிளம்பலாம்” சுவாதி சொல்ல, “நீங்க எங்கள வேவு பாக்க வந்தீங்களா?” என்று விக்ரம் அவளையும் மற்றவர்களையும் முறைத்தான்.

“நாங்க அதுக்கெல்லாம் வரல. நீங்க என்ன பேசுறீங்கன்னு தெரிஞ்சுக்க தான் வந்தோம்” என்று சுவாதி சொல்ல, “சுவா இரண்டுமே ஒன்று தான். நீயே வாய குடுத்துட்ட” என்று நேகன் அவள் கழுத்தை செல்லமாக பிடிக்க, “விடுடா..நான் கீழ விழுந்தப்ப தூக்கி கூட விடல. இப்ப பேசுறான் பாரு பேச்சு” என்று அவனை வாரினாள்.

என் செல்ல சுவாக்கு நான் ஐஸ்கிரீம் வாங்கி தரவா?

போடா. எனக்கு எதுவும் வேண்டாம் என்று விக்ரமையும் ரித்திகாவையும் பார்த்தாள்.

சுவா, “திரும்பு” என்று ரகசியன் சுவாதியின் கழுத்தின் பின்புறம் காயப்பட்ட இடத்தை தொட்டான்.

ஷ்..என்று முகத்தை சுருக்கினாள் சுவாதி.

சுவா, வா..என்று ரகசியன் அவன் காரருகே அவளை அழைத்து சென்று மருந்தை எடுத்து போட்டு விட்டான். பின் ரித்திகாவிடம் வந்து, “இதை போட்டுக்கோங்க” என்று மருந்தை கொடுத்தான்.

அவள் வாங்கி விட்டு கையை திருப்பினாள். அவளால் போட முடியவில்லை. ரசிகா அவளுக்கு உதவ போட்டுக் கொண்டாள்.

“வாங்க கிளம்பலாம்” என்று விக்ரம் அனைவரையும் அழைக்க, அந்நேரம் ரித்திகா திணறும் சத்தம் கேட்டு விக்ரம் திரும்ப, ரித்திகாவின் கழுத்தை கயிற்றால் நெறித்து கொல்ல பார்த்தான் வர்சன்.

“ரித்து” என்று விக்ரம் சத்தமிட, ரசிகா கீழே கிடைந்த கல்லை அவனை நோக்கி எறிந்தாள். அது தவற, எங்கிருந்தோ வந்த கல் ஒன்று நேராக அவன் கண்ணை நோக்கி வந்தது. கண்ணிலும் பட்டது. அவன் ரித்திகா வை விட, எல்லாரும் அவளிடம் வந்தனர்.

பதறி அங்கே வந்தான் உதிரன். உதிரன் தான் அடித்திருந்தான். ரித்திகா மயக்கத்தில் இருக்க, தப்ப இருந்த வர்சனை பிடித்து, “உன்னை தான்டா தேடிட்டே இருந்தேன் சிக்கிட்ட” என்று அவன் வாயிலே குத்தினான் உதிரன்.

“எவ்வளவு தைரியம்டா உனக்கு? என்னோட ரித்து மேல கைய வப்பீங்க?” என சொல்லி சொல்லி அடித்தான். அதிர்ச்சியுடன் எல்லாரும் அவனை பார்த்தனர்.

“அவன விடுங்க. இனி அவன் தப்பிக்காமல் நான் பார்த்துக்கிறேன்” என்று விக்ரம் அவனை இழுத்து அங்கிருந்த மரத்திலே கட்டினான். அவன் ஆட்களை அழைத்து சொல்ல, சற்று நேரத்திலே போலீஸார் அவனை இழுத்து சென்றனர்.

விக்ரம் அவனை கட்டும் போது உதிரன் ரித்திகாவிடம் வந்திருப்பான். ரகசியன் தண்ணீர் எடுத்து தெளிக்க விழித்து எழுந்து உதிரனை பார்த்து, “மாமா நீ இங்க எப்படி?” என்று கேட்டாள்.

உதிரன் கோபமாக அவளை முறைத்தான். வாங்க..இங்கிருந்து கிளம்பலாம் ரகசியன் சொல்ல எல்லாரும் காரில் ஏறினார்கள்.

மறுபடியும் ஓரிடத்தில் காரை ஓரம் கட்டி விட்டு வெளியே வந்து விக்ரம் கேட்க, ரகசியனிடமிருந்து வந்தவர்களும் இறங்கினர். ரித்திகாவிடம் விக்ரம் விசயத்தை கேட்க, அவளும் முந்தைய நாளில் நடந்ததை கூறினாள்.

அப்ப இனியன் அண்ணா, “அந்த புத்தகத்தை தேடி தான் போயிருக்காங்களா?” சுவாதி ரித்திகாவிடம் கேட்டாள்.

“நிச்சயமாக அதுக்கு தான் போயிருப்பாங்க” என்றாள் ரித்திகா கழுத்தை பிடித்துக் கொண்டு. அவள் கழுத்தில் அச்சு லேசாக பதிய இருந்தது.

எல்லாரும் கிளம்புங்க. நீ வா என்று ரித்திகா கையை பிடித்து இழுத்தான் உதிரன்.

“மாமா” என்று உதிரனை அவள் முறைத்தாள்.

ஹாஸ்பிட்டல் போக தான். வா..என்று அவன் அழைக்க, “ஆமா முதல்ல ஹாஸ்பிட்டல் போகலாம்” என்றான் விக்ரம்.

இல்ல..என்று ரித்திகா தயங்க, ரகசியன் எல்லாரையும் வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க. நாங்க ஹாஸ்பிட்டல் போயிட்டு வாரோம் என்றான் விக்ரம்.

“நான் பார்த்துக்கிறேன்” உதிரன் சொல்ல, “நானும் வாரேன்” என்று விக்ரம் எல்லாரையும் பார்க்க, அனைவரும் காரில் ஏறி கிளம்பினர். விக்ரம் ஹாஸ்பிட்டலை நோக்கி நகர்ந்தான்.

“ரொம்ப வலி இருக்கா” ரித்து உதிரன் கேட்க, அவள் உதிரனை பார்த்து “இல்லை” என்று தலையசைத்தாள். உதிரன் ரித்திகா கரத்தை இறுக பற்ற, அவளுக்கோ கண்ணீர் பெருக்கெடுத்தது. வலியால் அழுகிறாள் என்று இருவரும் நினைக்க, அவளோ..”மிஸ் யூ மாமா” என எண்ணினாள்.

ஹாஸ்பிட்டலுக்குள் அவர்கள் நுழைந்த போது, பாவம் அந்த பொண்ணு..கருக்கலைப்பு மாத்திரை அதிகமாக எடுத்ததால் அவள் கர்ப்பப்பையை எடுக்கும் நிலைக்கு அது வீக்காகிடுச்சு. இதனால அந்த பொண்ணோட கணவன் குடும்பமே அவளை வெறுத்து ஒதுக்கிட்டாங்க. இப்ப டிவர்ஸ் கூட கணவன் கேட்கிறான் என்று செவிலியர்கள் பேசி செல்வது ரித்திகா காதில் தெளிவாக கேட்டது.

விக்ரமும் உதிரனும் அவளுக்காக எண்ண, அங்கிருந்த பேச்சை அவர்கள் கவனிக்கவில்லை. கையை பிடித்து அழைத்து செல்லும் உதிரனை பார்த்துக் கொண்டு கண்ணீருடன், மாமா..”நாம பிரிய வழி கிடைத்துவிட்டது” என தவறான செயலை கையிலெடுத்தாள் ரித்திகா.

அவளை பரிசோதித்த மருத்துவர், அதிகமாக ஏதுமில்லை. தொண்டையை இறுக்கியதால் பெயின் இருக்கு. மத்தபடி பிரச்சனையில்லை. “இறுக்கியவர் குற்றவாளியா?” மருத்துவர் கேட்க, எஸ் டாக்டர் என்றான் விக்ரம்.

அவன் நினைத்திருந்தால் இப்ப இவங்க உயிரோட இருந்திருக்க முடியாது. ஏன்னா..இங்க பாருங்க என்று ரித்திகா தலையை நிமிர்த்தி தொண்டை பகுதியை காட்டினார். அவன் கழுத்தில் மாட்டிய போது ஓர் இடத்தில் காயமாகியிருக்கு. மீண்டும் ஓரிடத்தில் காயப்படுத்தி இருக்கான்.

அவன் தடுமாறி இருந்தால் இதே போல் தடம் அதிகமாக தெரிந்திருக்கும். அவன் வேண்டுமென்றே இந்த பொண்ணை காப்பாற்றியது போல் இருக்கு என்றார்.

மேம்,” அவன் பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவன்” விக்ரம் சொல்ல, இருக்கலாம். ஆனால் இந்த பொண்ணை கண்டிப்பாக அவன் காப்பாற்ற தான் முயன்று இருந்திருக்கான் என்றார். ரித்திகா யோசனையுடன் எல்லாரையும் பார்த்தாள்.

ஆமா அண்ணா, “அவன் கொலைசெய்யும் வரை செய்ய மாட்டான்னு தோணுது?” அவன் பணத்துக்காகவும், சுகத்திற்காகவும் தான் தவறு செய்வான். அவன் என்னை பார்த்தால் அடைய தான் நினைத்திருப்பான். ஆனால் இன்று அவன் பார்வையில் அது போல் ஏதும் தெரியல.

உதிரன், நீங்க அவனை அடிக்கும் போது தடுக்க தான் செய்தான். உங்களை அவன் அடிக்கவில்லை. ஏதோ சரியில்லை என்று விக்ரம் அலைபேசியுடன் நகர்ந்தான்.

ஓ..”அவன் உனக்கு நல்லவனாக தெரியிறானா?” உதிரன் கோபமாக, மாமா..சும்மா கோபப்படாதீங்க. “எல்லார் பக்கமிருந்தும் யோசிக்கணும்ல்ல?” ரித்திகா சொல்ல, உன்னால அவன் பக்கமிருந்து யோசிக்க முடியுது. ஆனால் என் பக்கமிருந்து யோசிக்க முடியலைல்ல? உதிரன் சீற்றமுடன் வெளியேறினான்.

என்னம்மா, “கட்டிக்கப் போறவரா?” மருத்துவர் கேட்க, அவன் சென்ற பின் மருத்துவரிடம் ரித்திகா தயங்கியவாறு அவளது கருப்பையை எடுக்க கூறி சொல்லவும் திகைத்து போனார் மருத்துவர்.

“என்ன கேட்கிறன்னு தெரிஞ்சு தான் கேட்கிறாயா?” அவரு..என்று அவர் உதிரனை கேட்க, கண்கலங்கிய ரித்திகா அவன் சென்ற வழியை பார்த்துக் கொண்டே, என்னால அவரை கல்யாணம் பண்ணிக்க முடியாது மேம். ப்ளீஸ் என்றாள்.

“செலவாகுமே!” அவர் கேட்க, நான் பே பண்ணிடுறேன் மேம்.

“உங்களுக்காக யாராவது சைன் பண்ணனுமே!”

யாரும் வர மாட்டாங்க. டாக்டர் ப்ளீஸ் என்று ரித்திகா அழுதாள்.

இது சாதாரணமில்லைம்மா. இந்த சமூகம் உங்களை வாழவிடாது என்றார் அவர்.

மேம்..ப்ளீஸ் என்று மருத்துவர் கையை பிடித்து கெஞ்சினாள் ரித்திகா.

“எக்ஸ்யூஸ் மீ” என்று கோபமாக சென்ற உதிரன் மீண்டும் வந்து அவர்கள் முன் அமர்ந்தான். மருத்துவர் ரித்திகாவை முறைத்து விட்டு உதிரனை பார்த்து புன்னகைத்தார்.

சார், “உங்களுக்கு கோபம் போயிருச்சா?” மருத்துவர் கேட்க, உதிரன் ரித்திகாவை பார்த்தான்.

“எதுக்கு அழுற?” என்று உதிரன் அவளிடம் கையை கொண்டு செல்ல, அவனது கரத்தை தட்டி விட்டாள்.

“மே ஐ கம் இன்” என்று விக்ரம் கேட்டு விட்டு உள்ளே வந்தான். ரித்திகா, “என்ன பிரச்சனை? இருவரும் சண்டை போட்டுகிட்டே இருக்கீங்க?”

தேவையான நேரத்துல இல்லாம இப்ப எதுக்கு இங்க இருக்காராம். அவர போக சொல்லுங்க என்று ரித்திகா முகத்தில் அடித்தாற் போல பேசினாள்.

ஆமாடி, நான் வர வேண்டிய நேரத்துல வரல. ஏன்னா..அது என் நிலை. எத்தனை வருடம் கழித்து நாம சந்தித்தோம். “சார்ன்னு கூப்பிடுற? யாருன்னு தெரியாத மாதிரி பேசுற? நீ சொன்னா தான தெரியும்?” உதிரன் கத்தினான்.

“சொல்லணுமா? என்ன சொல்லணும்? என்னோட வாழ்க்கையவே ஒரு பரதேசி சீரழிட்டான்னு உன்னை பார்த்து சொல்ல சொல்றீயா? எப்பொழுதும் நான் உன் பின் சுற்றும் போது பதிலளிக்காத நீ இப்பொழுது கேட்பன்னு எனக்கு என்ன தெரியும்? எப்பொழுதும் கண்டுகொள்ளாமல் செல்பவன் போல் செல்ல வேண்டியது தான? எதுக்கு உயிர வாங்குறீங்க?” என வாயில் வந்த கண்டதையும் அவள் பேசினாள்.

உதிரன் மனமுடைந்து, என் மேல தப்பு தான். நீ என் பின்  சுற்றும் போதே நான் பேசி இருக்கணும். பேசாத தப்புக்காக தான் மொத்தமும் போச்சு என்று கோபமாக மேசையில் குத்தினான். மருத்துவர் பயந்து இருவரையும் பார்க்க, அவன் விரல்கள் சிவந்து போனது. அவன் வலியை காட்டிக் கொள்ளாமல் கையை உதறியவாறு, நான் எடுத்த முடிவில் எப்பொழுதும் மாறுவதாக இல்லை.

ஏற்கனவே நடந்தது போல் நடப்பதை வேடிக்கை பார்க்க நான் அந்த பொறுமையான உதிரன் இல்லை. “புரியுதா?” என்னை போக வைக்க நீ என்ன செய்தாலும் போக மாட்டேன். என் தவறால் உன்னுடைய தவறான முடிவு எடுக்கப்பட்டது. இனி அது நடக்காது.

“உனக்கு விருப்பம் இருக்கோ? இல்லையோ?” நாம கண்டிப்பாக திருமணம் செஞ்சுக்கணும். என்னால எங்கேயும் போக முடியாது. தேவையில்லாத வேலைய பார்த்து என்னை கோபப்படுத்தாத. கவனமா இரு. “விக்ரம் மருத்துவரிடம் பேசிட்டு வாங்க” என்று உதிரன் வெளியே சென்றான்.

“டாக்டர்” என்று விக்ரம் சொடக்கிட, அவர் பயத்துடன் அவனை பார்த்தார்.

நீ வெளிய இரு. நான் பேசிட்டு வாரேன் என்று ரித்திகாவை வெளியே அனுப்பி விட்டு, இவன் பேசி விட்டு வெளியே வந்தான்.

உதிரன் அமர்ந்திருக்க, கொஞ்சம் தள்ளி நின்று ரித்திகா கனத்த மனதுடன் கையில் காயத்துடன் இருக்கும் தன் மாமா உதிரனை கண்ணீருடன் பார்த்தாள். உதிரன் கை வீங்கி இருந்தது. வெளியே வந்த விக்ரம் இருவரையும் பார்த்து விட்டு, உங்க சண்டையை வீட்ல வச்சுக்கோங்க என்று செவிலியர் ஒருவரை அழைத்து உதிரன் கைக்கு பார்க்க சொல்ல, அவரும் உதிரன் கையில் மருந்திட்டு சென்றார். மூவரும் அமைதியாக வீட்டிற்கு வந்தனர்.

நட்சத்திரா வீட்டை திறந்த ரித்திகா விக்ரமை அழைக்க, நாங்க மிருளாலினி ஊருக்கு போறோம். இப்ப அது தான் வரவே செய்தோம் என்றான். உதிரன் கோபமாக அவனறைக்கு சென்றான்.

“இப்பவா?” ஆனால் என்று அவள் சிந்திக்க, “அத்த” என்று அர்சு அவளிடம் ஓடி வந்தான்.

சும்மா சும்மா சண்டை போடாதீங்க. இந்த மருந்து அவருக்கு வீக்கம் குறையும் வரை போட்டு விடு என்று விக்ரம் சொல்ல, அண்ணா..எல்லாரும் தயார். “போகலாமா?” ரசிகா கேட்டாள்.

ம்ம்..என்ற விக்ரம் ரித்திகாவை பார்த்து, உன்னோட உதவி தேவைப்பட்டால் அழைக்கிறேன். நீ கவனமா இரு. சிம்மா வரும் வரை உங்க பாதுகாப்பிற்கும் ஆட்கள் இருக்காங்க என்று இருவரை காட்டினான்.

“எதுக்கு?” ரித்திகா கேட்க, மருத்துவர் சொன்னதை கேட்டேல்ல. என்னோட ஆட்கள் வர்சனை விசாரிக்கப் போறாங்க. அவனுக்கு மேல ஒருவன் இருக்கான். யாருன்னு பார்க்கணும். எதுக்கும் கவனமா இருங்க என்று உதிரனை அழைத்தான்.

உதிரன் வெளியே வரவும் இருவரும் கோபத்தை விலக்கிட்டு, பாதுகாப்பா இருங்க. எனக்கு தெரிந்து ரித்திகாவை தாக்க ஆட்கள் கண்டிப்பாக வருவாங்க. பார்த்துக்கோங்க என்று விக்ரம் நகர்ந்தான்.

உதிரன் நகர, தயங்கிய ரித்திகா, மாமா இன்னும் சாப்பிடலை. பசிக்குது என்றாள்.

அவனும் வந்து அமர்ந்தான். அர்சு ஏற்கனவே சாப்பிட்டு விட, உதிரனுக்கு எடுத்து வைத்தாள். அவனால் எடுத்து சாப்பிட முடியவில்லை.

ரித்திகா அவளாகவே உணவுத்தட்டை எடுத்து பிசைந்து அவனுக்கு ஊட்டி விட்டாள். உதிரன் மனம் துள்ளலாட்டம் போட்டது.

தமிழினியன் வீட்டில் அனைவரும் காரில் மிருளாலினி வீட்டிற்கு கிளம்பி விட்டனர். அவள் தமிழினியன் கரங்களை கோர்த்துக் கொண்டாள். விக்ரம் புன்னகையுடன் இருவரையும் பார்த்தான். சுவாதி அவனை பார்த்துக் கொண்டே சென்றாள். ரசிகா அவள் தோளில் சாய்ந்து தூங்கியே விட்டாள்.

கார்க்கண்ணாடி வழியே விக்ரம் யாருமறியாமல் தன் தங்கையை தோளில் சுமந்த தன் தேவதையை பார்த்துக் கொண்டே காரை செலுத்தினான்.

உணவை முடித்து விட்டு உதிரன் சோபாவிலே படுத்து விட்டான். எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு அவள் கழுத்தை பார்த்தாள். லேசான சிவப்பு கோடாக இருந்தது. மருந்து எதுவும் தேவையில்லை. அதுவாகவே சரியாகிடும் என்று மருத்துவர் சொன்னார். அதை எண்ணிக் கொண்டே உதிரனையும் அவன் கையையும் பார்த்தாள்.

அர்சு கையில் அலைபேசியுடன் இருந்தான்.

கண்ணீரை சுட்டி விட்டு, “ஹே லயன் தூங்கலாமா?” எனக் கேட்டாள். அத்தை, நான் தூங்க மாட்டேன் என்று அவன் வெளியே ஓட, கிருபாகரன் அவனை பார்த்து சலா..”தாத்தாட்ட வாங்க” என அழைத்தார். அவன் அவரிடம் செல்ல, ரித்திகா தயக்கமுடன் அவரிடம் சென்றாள்.

உட்காரும்மா, “உனக்கு இப்ப எப்படி இருக்கு?” பசங்க சொன்னாங்க என்றார்.

பரவாயில்லை அங்கிள். ரொம்பலாம் அழுத்தமில்லை. தானாகவே சரியாகிடுமாம்.

சரிம்மா, நீ வேண்டுமானால் ஓய்வெடும்மா. சலா எங்களுடன் இருந்துப்பான். ரொம்ப இக்கட்டான சூழ்நிலையில் எங்களிடம் தான் நட்சத்திரா விட்டு போவா. நான் பார்த்துக்கிறேன் என்று அர்சலனை அவர் இழுத்து அவனுடன் குழந்தையாக விளையாட, அவளுக்கு அவள் அப்பா நினைவு எழுந்தது.

“தேங்க்ஸ் அங்கிள்” என்று அவள் வீட்டிற்குள் கண்ணீருடன் வந்தாள். உதிரன் கண்ணை மூடி படுத்து இருந்தான்.

அவனை பார்த்து நின்ற ரித்திகா, அவனருகே சென்று அவனை பார்த்து விட்டு அவனது காயமான கையில் ஊதினாள். உதிரன் கண்ணை திறந்து, “என்ன செய்ற?” என்று அதட்டலாக கேட்டான்.

ரித்திகா விலக, அவளை இழுத்து திணற திணற அவன் மேல் போட்டுக் கொண்டான்.

மாமா, விடு..விடு..அவள் சத்தமிட்ட, அவள் வாயை அடைக்கும் பொருட்டு அவளது இதழ்களை கவ்விக் கொண்டான். அவள் அவனை தள்ள, இதழ்களை பிரித்த உதிரன், என்னோட பொண்டாட்டிக்கு கிஸ் பண்ணேன். நீ அமைதியா இல்ல. இதுக்கு மேலேயும் செய்வேன் என்று அவளை நகர விடாது இறுக்கினான்.

மாமா..வலிக்குது. மூச்சு விட முடியல என்றாள்.

ஆமா ரித்து, எனக்கு மூச்சே நின்றது போல் இருக்கு. இனி உன்னை விட்டு ஒரு நிமிடம் விலகினாலும் என் மூச்சே நின்றும். அது ஏன் உனக்கு புரியல ரித்து? என உதிரன் ஆதங்கப்பட, கண்ணீர் விட்டாள் ரித்திகா. ரித்திகா கண்ணீர் உதிரன் கன்னத்தில் விழுந்தது.

ப்ளீஸ் ரித்து, நாம கல்யாணம் பண்ணிக்கலாம் என்றான். அவள் அவனை தள்ளி விட்டு அழுது கொண்டே அறைக்கு ஓடினாள்.

ரித்து, “நீ ஓ.கே சொன்ன மறுநாளே கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று உதிரன் சொல்லி விட்டு அவனறைக்கு சென்றான்.

 தலையை பிடித்துக் கொண்டு எழுந்த அஜய் கடிகாரத்தை பார்த்து படுக்கையிலிருந்து இறங்கினான். வெந்நிற திரைச்சீலை மஞ்சலாய் ஜொலிக்க, அதை விலக்கி விட்டு முகத்தை கழுவினான். பின் அவன் தன் முகத்தை துடைத்துக் கொண்டிருக்கும் போது தான் அவள் நினைவு எழுந்தது.

தியா..என எண்ணும் போது மனம் குற்றவுணர்வில் பாடாய் படுத்த குளியலறை சென்று தயாராகி கீழே வந்தான். அவன் அப்பா அவனை அழைக்க, அவன் காதில் விழவேயில்லை. அவன் வாயிலை நோக்கி செல்ல, வினித் அவன் முன் வந்தான்.

பாஸ், “கம்பெனிக்கு தயாரா? போகலாமா?” வினித் கேட்க, “இல்ல நான் கம்பெனிக்கு இவ்வளவு சீக்கிரம் வந்து என்ன செய்யப் போறேன்?” என்று அவன் நகர, இதுவரை அஜய் பேசும் எல்லாவற்றிற்கும் ஆமாம் போடும் வினித் அஜய் மார்பில் கை வைத்து தடுத்தான்.

“வழிய விடுடா” அஜய் கோபமாக, முடியாது பாஸ். நீங்க எங்க போக போறீங்கன்னு தெரியும். அவளோட பர்சனல் விசயத்துல்ல நீங்க தலையிட வேண்டாம். நாங்க பார்த்துக்கிறோம். அவள் உங்களுக்கு பி.ஏ மட்டும் தான். உங்க வீட்ல பாதுகாப்புக்காக தான் இருக்க ஒத்துக் கொண்டோம்.

என்னோட அம்மா உயிரோட இருந்தா எங்க வீட்டுக்கு அவள அழைச்சிட்டு போயிருப்போம். ஊர்ப்பேச்சுக்காக தான் விட்டுட்டோம். ஆனால் தியா எங்களுக்கு மிக முக்கியம். நீங்க அவளை நெருங்கினால் பாதிப்பு அவளுக்கு என்று அஜய் அம்மாவை பார்த்தான்.

அஜய் திரும்பி அவன் அம்மாவை பார்க்க அவர் இருவரையும் சீற்றமுடன் முறைத்துக் கொண்டிருந்தார்.

வினித் அஜய் காதருகே வந்து, உனக்கு தியாவ பிடிச்சிருக்குன்னு உன்னோட அம்மாவுக்கு தெரிஞ்சா அவள கொல்ல கூட தயங்க மாட்டாங்க. அவள விட்டு விலகியே இரு. அவ ஒத்துக்கிட்டது உன்னை காயப்படுத்த தான்னு மறந்திறாத..

வினித், “எனக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை” என்று அஜய் சொல்ல, உன்னை விட உன்னை பற்றி எனக்கு தெரியும். நான் சொன்னதை மறந்திருறாத..என்று அவன் அப்பாவை பார்த்து, சார் “நான் ஒன்று சொல்லலாமா?” எனக் கேட்டான்.

அஜய் அப்பா யோசனையுடன் வினித்தை ஏறிட்டார்.

“அஜய் சார்கிட்ட பொறுப்பை நாளைக்கு ஒப்படைக்கிறீங்களா?” நாளைக்கு அற்புதமான நாள். தொட்டது துலங்கும் நாள். அஜய் சார் பிறந்த தேதியையும் அவர் பெயரையும் வைத்து பார்த்த ஜாதகத்தில், நாளை துவங்கினால் அமோக வரவேற்பு கிடைக்கும் என இருந்தது.

வினித் அருகே வந்த அஜய் அப்பா அவனை அணைத்து, ரொம்ப நன்றி வினு. நான் இருந்த மனஅழுத்தத்தில் இதை கூட சிந்திக்கவில்லை என்றார்.

நான் உங்களுக்காக எதுவும் செய்யவில்லை. அஜய் சார் என்னோட சிறுவயது தோழன் என்பதால் மட்டும் தான் இந்த வீட்டுக்கு நான் வாரேன் இல்லை என்று வினித் முகம் கடுகடுக்க, அவர் வருத்தமாக அவனை பார்த்தார்.

ஏய், “எங்க வந்து என்ன ஓவரா பேசுற?” என்று அஜய் அம்மா வினித்திடம் வர, கேலிப் புன்னகையுடன் அஜய் அம்மாவை மேலிருந்து கீழாக பார்த்து விட்டு, பாஸ் நமக்கு நேரமாகுது. நாளை பொறுப்பெடுத்துக்கோங்க. அதுக்கு முன்னாடி கம்பெனியை பற்றி அனைத்து விவரங்களையும் நீங்க தெரிஞ்சுக்கணும் என்று அவன் அப்பாவை பார்த்து “சரி தான சார்?” எனக் கேட்டான்.

சரி தான் அஜய். முதல்ல நம்ம கம்பெனி ஊழியர்கள், பிராஜெக்ட் எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கோ என்றார்.

சார், “நீங்க வந்தால் தான் நாங்க பார்க்க முடியும்” என்று வினித் அஜய் அப்பாவை அழைக்க, நீங்க முன் போங்க. நான் வாரேன் என்றார்.

“பையன் கம்பெனி பொறுப்பை எடுத்துக்கப் போறானா?” என்னிடம் நீங்க சொல்லவேயில்லை அஜய் அம்மா பதற, அவர் பதில் சொல்லும் முன், உங்க பையன் தான மேம் பொறுப்பை பார்க்கப் போறாங்க. “அதுக்கு ஏன் இவ்வளவு பதற்றம்?” வினித் நக்கலாக அவரை பார்த்து புன்னகைத்தான்.

“பதற்றமா? எனக்கா?” நா.. நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் என்று  “கண்ணம்மா ஸ்வீட் எடுத்துட்டு வாங்க” என்று சத்தமிட்டார் அஜய் அம்மா.

கண்ணம்மா  எடுத்து வந்து கொடுக்க, அதை ஸ்பூனில் எடுத்து அஜய்யிடம் வந்து கொடுத்து, எல்லாத்தையும் கவனமா பார்த்துக்கோ அஜய் என்றாள்.

“ஓ.கே மாம்” என்று அவன் இவர்களின் பேச்சே சாதாரணமாக எடுத்தாலும் வினித் எப்பொழுதும் அஜய் பெற்றோரை அமைதியாக கடந்து செல்பவன். இன்று ஓவரா பேசுகிறானே! என்று சிந்தனையுடன் அவன் அம்மாவை அணைத்து அவர்களிடமிருந்து விடை பெற்றான்.

வினித் காரை ஓட்ட, அவனருகே எப்பொழுதும் போல் அமர்ந்தான் அஜய்.

“நான் செய்ததற்கு நீ எதுக்குடா அம்மா, அப்பாகிட்ட அப்படி பேசுன?” என அஜய் வினித்திடம் கேட்க, “பாஸ் நான் எதுவும் தப்பா பேசலையே!”

“தியாவை என்னோட அம்மா கொலை கூட செய்வாங்கன்னு சொன்ன?” அவங்க ஸ்டேட்டஸ் பார்ப்பாங்கடா. அவங்களால யாரையும் கஷ்டப்படுத்திட்டு தூங்க கூட முடியாது. என்னிடம் அடிக்கடி புலம்புவாங்க. தூங்க முடியலன்னு நிறைய முறை என் அறைக்கு வந்து என்னுடன் தூங்கி இருக்காங்க என்றான் அஜய்.

ஓ.கே பாஸ் என்றான்.

நான் கேட்டா பதில் சொல்லணும். ஓ.கே பாஸ்ன்னா..என்ன அர்த்தம்?

நீங்க பேசுறதுல அர்த்தம் கூறும் அளவு நான் இல்லை. இப்ப நான் உங்க அசிஸ்டென்ட். உங்களை எப்படி எனக்கு சிறுவயதிலிருந்து தெரியுமோ அதே போல் தியாவையும் அவள் குடும்பத்தையும் நன்றாக தெரியும். அவ வழிக்கு நீங்க வரக் கூடாது. ஒரு வேலை வந்தால் உங்களுக்கு இடையில் முதல்ல நான் தான் இருப்பேன். எனக்கு அவளும் முக்கியம் என்றான் வினித்.

“நீ தியாவை காதலிக்கிறாயா?” அஜய் கேட்க, வினித் காரை நிறுத்தி விட்டு சிரித்தான்.

“எதுக்கு சிரிக்கிற?”

அவகிட்ட இந்த மாதிரி என்னையும் அவளையும் வச்சி பேசாதீங்க. “மாகாளி ஆகிடுவா?” அவளுக்கு எல்லாமே அவளோட பெற்றோர் மட்டும் தான் என்று அமைதியானான் வினித். இருவரிடமும் அமைதி நிலவியது.

வினித் அலைபேசி அவனை அழைக்க, “சொல்லுங்கப்பா” என்றான். அஜய்யும் கவனித்துக் கொண்டே வந்தான்.

மதியம் ஒருமணியளவில் வந்திரு என்றார் அவர்.

அப்பா, “தியா ஓ.கே தான?”

இல்ல, ஆனால் அவள் அழல. அந்த போலீஸ்காரனும் நட்சத்திராவும் அவன் குடும்பமும் இருக்காங்க. அவங்களும் இப்ப தான் இருவர் இழப்பை சந்தித்து இருக்காங்க. ரொம்ப அமைதியா இருக்காங்க. நட்சத்திராவும் போலீஸ்காரனும் தான் குட்டி பையனை வைத்து பேசி புன்னகைக்க வைக்க முயற்சி செய்றாங்க. அவள் வெளியே சிரித்தாலும் அவள் முகமே அவள் சரியில்லை என தெளிவா காட்டுது வினு. நீ வரும் போது வாங்கிட்டு வா என்று அவர் அலைபேசியை வைத்து விட்டார்.

வினித் கண்கள் கலங்கினாலும் தெளிவான சிந்தனையுடன் தான் இருந்தன. அஜய் அவனை பார்க்க, “எதுக்கு பாஸ் இப்படி பார்க்குறீங்க?”

“தியாவை உங்களுக்கு எப்படி தெரியும்?” அஜய் கேட்க, பிரேக்கிட்டு காரை நிறுத்தினான் வினித்.

பாஸ், “எங்க பர்சனல்குள்ள நீங்க வர வேண்டாம்” என்று அஜய்யை வினித் முறைத்தான்.

“உனக்கு தியா அப்பாவை பிடிக்குமா?” அஜய் கேட்க, சீற்றமுடன் வந்தது வினித்தின் வார்த்தைகள்.

ஆமா..ஆமா..ஆமா..தியா அம்மா, அப்பா எனக்கு உயிர் என்று ஸ்டியரை அடித்து அடித்து கதறி அழுதான் வினித். அஜய் திகைப்புடன் அவனை பார்த்தான்.

வினு, “சாரிடா” என்று கண்கலங்க அஜய் கூற, அவனை நிமிர்ந்து பார்த்து இதை நான் உங்களிடம் எதிர்பார்த்தேன் பாஸ். ஆனால் எங்க குடும்பத்துக்குள்ளவே செய்வீங்கன்னு தான் நான் நினைக்கல.

“தியாவுக்கும் உங்களுக்கும் பிரச்சனை வந்ததுல்ல கண்டிப்பா அவளை காயப்படுத்தி இருப்பீங்க? அவள் அதை கண்டுகொள்ளாமல் இருக்க அந்த கோபத்துல அப்பாவை பயன்படுத்துனீங்க?” சரியா பாஸ் என வினித் கேட்க, வெலவெலத்து போனான் அஜய்.

தியா அம்மா தைரியமா இருந்தாலும் ஒரு விசயத்துல்ல சரியா இருப்பாங்க. அவங்க வார்த்தை அடுத்தவங்களை பாதிக்காத வண்ணம் பார்த்துப்பாங்க. அதே போல் தான் அப்பாவும். தியாவிற்கு மட்டுமல்ல எனக்கும் அதையே சொல்லி சொல்லி தான் வளர்த்தாங்க என்றான்.

“என்னது?” அஜய் கேட்க, கண்ணீரை விரலால் தள்ளி விட்டு, எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து என் அம்மாவை பார்த்ததில்லை. அப்பா மட்டும் தான. அவரும் அந்நேரம் பிஸினஸ் விசயமாக அலைந்ததால் என்னை பார்த்துக்க முடியாமல் தியா வீட்ல தான் விட்டு செல்வார்.

எனக்கு அம்மான்னா சீதாம்மா தான். “லவ்லி மாம்” என்று கண்கலங்கியவன் அவங்க என்னையும் தியாவையும் பிரித்து பார்த்ததேயில்லை. அவளும் நாம படிச்ச பள்ளியில் தான் படிச்சா. உங்களுக்கு தான் அவளை நினைவில்லை.

நீங்க தான் ரிச் பாயாச்சே. நானும் ரிச் என்பதால் தான் என்னுடன் பழகுனீங்க. பள்ளியில் வைத்து அவளை பார்த்தால் கூட கண்டுகொள்ளவே மாட்டேன். அவள் பார்த்தாலும் பேச மாட்டாள். என்னோட அப்பா கண்டிப்பில் தான் அவளை யாரோ போல பார்த்தேன். ஆனால் நாட்கள் செல்ல செல்ல தியா மீதிருந்த பாசம் காதலாக மாறியது.

ஆனால் அவளுக்கு என் மீது மட்டுமல்ல யார் மீதும் விருப்பமில்லை. அவளுக்கு எல்லாமே பெற்றோர் தான். நான் அவளிடம் காதலை சொன்ன போது, உடன் பிறவா அண்ணனாக பார்ப்பதாக சொன்னாள். அவள் பேச்சில் மனமுடைந்தாலும் அவங்க குடும்பம் என்னை மாற்றியது. அவர்களின் இணைப்புக்குள் என்ன செய்தும் என்னால் செல்ல முடியவில்லை. ஆனால் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் உணர்ந்தேன்.

தியா அம்மா, அப்பா தான் என்னோட அம்மா, அப்பா. இதை என் அப்பா முன் கூட நான் சொல்வேன். அவர்கள் என்னை பார்த்துக் கொண்ட விதம் பிடித்து என் அப்பாவும் அடிக்கடி வந்து செல்ல ஆரம்பித்தார்.

ஆனால் ஓர் பிரச்சனையில் தியா அம்மா ஒருவரால் கொல்லப்பட்டார் என்று ஒரு நிமிடம் அமைதியாக நெஞ்சில் கையை வைத்த வினித், அம்மாவை கொன்னவங்கள என் கையால கொல்ல காத்திருக்கேன். எனக்கான நேரம் வரும். அந்த கடவுள் கண்டிப்பாக அமைத்துக் கொடுப்பார்.

என் அமைதியை அவங்க சாதாரணமா எடை போட்டு இருக்காங்க. தியாவை அநாதையாக்கிய அவங்க அவளுக்கு பதில் சொல்லியே ஆகணும். இப்ப அப்பாவும் இல்லை ரொம்ப உடைஞ்சிருப்பா. என்னை பார்த்துக் கொண்ட அந்த குடும்பத்தோட பொண்ணை என்னால முடிந்தவரை பாதுகாப்பேன். ஆனால் அவளுக்கு துணையாக இருக்க முடியவில்லை என எண்ணும் போது தான் வருத்தமா இருக்கு என்றான்.

“கொலையா? அவளுக்கு தெரியுமா?” அஜய் கேட்க, வினித் அவனை முறைத்து பார்த்து, எதுவும் சொல்லிடாதீங்க. தாங்க மாட்டா. விபத்துன்னு தான் அவ நினைச்சிட்டு இருக்கா என்று வினித் மனதை கல்லாக்கிக் கொண்டு காரை செலுத்தினான்.

“எனக்கு எதுக்கு வினித் மேல கோபம் வருது? அவன் சொன்னது போல் தியாவை நான் காதலிக்கிறேனா?” என்று சிந்தனையுடன் கண்ணை மூடி அமர்ந்தான் அஜய்.