அத்தியாயம் 26

நட்சத்திரா வீட்டில் உதிரனுடன் அர்சுவும், ரித்திகா, மகிழன், மாறன், சித்ரா இருந்தனர். சாப்பிட்டு அனைவரும் உறங்க சென்று விட்டனர். உதிரன் யாரிடமும் அதிகமாக பேசாமல் அமைதியாகவே இருந்தான்.

தமிழினியன் வீட்டில் மணமக்களின் முதலிரவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. மிருளாலினியை தயார் செய்து தமிழினியன் அறைக்கு அனுப்பினார்கள். அவள் கையில் பாலுடன் உள்ளே வந்து கதவை தாழிட்டாள்.

மல்லிகை, ரோஜா இதழ்களால் படுக்கை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தமிழினியன் பால்கனியில் யோசனையுடன் நின்று கொண்டிருந்தான்.

கதவு திறக்கும் ஓசை கேட்டு அழகுபதுமையாய் வரும் தன் மனைவியை பார்த்தான் தமிழினியன். அவன் தன்னை தான் பார்க்கிறான் என்றதும் அவள் அங்கேயே நின்று விட்டாள்.

மிருளா, வா என்று அவன் அழைத்துக் கொண்டே அவள் முன் வந்தான். அவள் அவனிடம் பாலை நீட்ட அவன் அதை குடித்து விட்டு அவளிடம் கொடுத்தான். அவளும் குடித்து விட்டு அவனிடம் வந்து அவன் காலில் விழுந்து வணங்கினாள்.

“சம்பிரதாயமா?” அவன் கேட்க, அவள் புன்னகைத்தாள்.

அழகா இருக்க. அழகா சிரிக்கிற. உட்காரு என்று அவளை அமர வைத்து அவனும் அமர்ந்தான்.

“நான் உங்களை பெயர் சொல்லி அழைக்கலாமா?” மிருளாலினி கேட்டாள்.

ம்ம், “உனக்கு எப்படி அழைக்க தோணுதோ அப்படியே அழை” என்றான்.

தமிழ், “எனக்கு நேரம் வேணும்” என்றாள் மிருளாலினி. அவன் முகம் வாடியது.

“கோபமா?” அவள் கேட்க, “உன்னால சுபியை மறக்க முடியாதா?” தமிழினியன் கேட்க, அவள் அமைதியாக தமிழினியனை பார்த்தாள்.

சரி, நீ இங்க படுத்துக்கோ. நான் சோபாவில் படுத்துக் கொள்கிறேன் என்று விலகினான். அவன் கரத்தை பிடித்து அவனை நிறுத்தி, இங்கேயே படுத்துக்கோங்க என்றாள்.

வேண்டாம்மா, ஏதாவது தவறு நடந்து விடும். என் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை என்றான்.

அதெல்லாம் நீங்க ஏதும் செய்ய மாட்டீங்க தமிழ். ப்ளீஸ் படுத்துக்கோங்க என்றாள். அவள் சூட்டிய மல்லிகை மணமும் அவ்வறைப் பூக்களின் மனமும் அவன் நாசியை துளைத்தது. இருவரும் ஒவ்வோர் பக்க ஓரமாக படுத்தனர். கரங்களை மடக்கி சிரமப்பட்டு மோகஉணர்வுகளை கட்டுப்படுத்தினான் தமிழினியன்.

அந்நேரம் அவர்களின் அறையில் இருந்த வெளிச்சம் மறைந்து இருளானது. பயத்துடன் மிருளாலினி போர்வையை தேடி கைகளால் துலாவினாள். ஏசியின் குளிர் அதிகமானது.

மிருளா, “இருட்டுக்கு பயப்படுவியா?” தமிழினியன் கேட்ட மறுநொடி உருண்டு அவனிடம் வந்து அவனை அணைத்துக் கொண்டாள் மிருளாலினி. அவர் அணைப்பால் என்று சற்றும் எதிர்பார்க்காதவன் வேகமாக திரும்பினான். அவன் மார்பின் கதகதப்பில் அவள் முகத்தை புதைத்தாள். தமிழினியனின் கட்டுப்பாடுகள் உடைந்தன. அவள் இடையில் அவன் கையை போட, விலகினாள் மங்கையவள். அவன் மனம் கனத்தாலும் எழுந்தான்.

கையை வைத்து துலாவிய மிருளாலினியை பயம் தொற்றிக் கொள்ள, தமிழ், “இருக்கீங்களா?” என்று நடுக்கத்துடன் அவள் வார்த்தைகள் வந்தது.

இங்க தான் இருக்கேன் மிருளா. திடீர்ன்னு குளிர் அதிகமாகுது என்று அவன் சொல்ல, ஆமா தமிழ், ரொம்ப அதிகமா இருக்கு. படுக்க வாங்க என்றாள்.

அலைபேசியின் வெளிச்சத்தை ஆன் செய்து தமிழினியன் அவளை பார்த்தான். அவள் கண்ணீருடன் இருப்பதை பார்த்து, மிருளா, “என்னாச்சு?” எனக் கேட்டான்.

“எதுக்கு தனியா விட்டீங்க?” பயமா இருக்கு என்று கண்ணை மூடினாள்.

தப்பா..என அவன் தொடங்க, ப்ளீஸ் “நான் உங்களை அணைச்சுக்கவா?” என்று உடல் விறைக்க கேட்டாள். அவன் அவளருகே வந்து அமர்ந்தான்.

ப்ளீஸ் தமிழ், இருட்டா குளிரா இருக்கு. இது போல் பல நாள் அழுது பயந்து மயங்கி தூங்கி இருக்கேன். “நீங்க எனக்காக பக்கம் இருக்க மாட்டீங்களா?” என்ற அவள் குரல் அழுகையுடன் வந்தது. சட்டென அவளை இழுத்து தன் மார்பில் போட்டு இறுக அணைத்து படுத்துக் கொண்டான்.

சற்றுநேரத்தில் இருவரும் அப்படியே தூங்கினர். “நீங்க தூங்கவா நான் இதை செய்தேன்” என்று சுபிதனின் ஆன்மா பலமான காற்றை வீசி சன்னலை படபடவென அடித்தது. இருவரும் விழித்தனர்.

மிருளா, “வெளிய காற்று அதிகமா இருக்கு” என தமிழினியன் சன்னல் தாழ்ப்பாழையும் போட்டு விட்டு அவளுடன் வந்து படுக்க, அவள் அவனை அணைத்து தூங்கினாள். ஆனால் அவனுக்கு அவளின் மீதான காதல் இம்சித்தது. கூடவே அவள் மேனியில் வந்த நறுமணம் அவனை பித்தம் கொள்ள செய்தது.

“இது சரிப்பட்டு வராது” என ரித்திகாவிற்கு குரல் எழுப்பியது சுபிதனின் ஆன்மா. அவள் அமைதியாக எழுந்து அமர்ந்து, “சுபி அண்ணா இந்த நேரம் என்ன பேசணும்?” எனக் கேட்டாள்.

அது சொன்னதை கேட்டு வெளியே வந்து சிம்மாவை அழைத்து தமிழினியனின் அலைபேசி எண்ணை கேட்டாள். அவன் கேள்விகள் எழுப்ப, முக்கியமா ஏதோ சுபி அண்ணா அவரிடம் சொல்லணும்மாம் என்று எண்ணை வாங்கினாள்.

“பிரச்சனைன்னா உடனே மாறனை எழுப்பிடு” என்றான் சிம்மா.

“சரிண்ணா” என்று அலைபேசியை வைத்து விட்டு, “என்ன சொல்லணும்?” என சுபிதனின் ஆன்மாவிடம் கேட்டாள்.

அது சொன்னதை கேட்டு, “நான் எப்படி?” அதுவும் இந்த நேரத்தில் என்று அவள் கேட்க, மாரனை எழுப்பினாள். சித்ரா அவளை பார்த்து “என்னாச்சு?” என பதற, அவள் கூறியதை கேட்டு தன் கணவனை பார்த்தாள்.

அண்ணா, “ப்ளீஸ் நீங்களே பேசுங்களேன்” என்று எண்ணை மாறனிடம் கொடுத்தாள் ரித்திகா.

தமிழுக்கு அழைக்க மிருளாலினியும் சேர்ந்து எழுந்தாள்.

“இந்த நேரத்துல்ல யாரு?” என பார்த்துக் கொண்டே அலைபேசியை எடுத்து பேச, நான் மாறன் பேசுகிறேன். சுபி உங்களிடம் ஏதோ சொல்லணுமாம் என்று அவன் சொல்ல, “சுபியா?” என்று தமிழினியன் மிருளாலினியை பார்த்தான்.

“உன்னால அவன் பேசுவதை கேட்க முடியுமா?”

இல்ல, எங்க ரித்து பேசுவா.

சரி, “என்னவாம்?” கடுகடுப்புடன் தமிழினியன் கேட்க, “உங்களை தொந்தரவு செய்ததற்கு மன்னிச்சிருங்க சார்” என்றான் மாறன்.

அண்ணா, “அங்க எதுவும் நடக்கலையாம்” என்றாள் ரித்திகா.

“என்ன?” மாறன் கேட்க, தமிழினியனுக்கும் ரித்திகா சொன்னது கேட்டிருக்கும்.

“விசயம் என்ன?” தமிழினியன் மேலும் கடுகடுக்க, அவங்க இருவரும் இப்பவே சேரணும் என்று சுபிதனின் ஆன்மா சொன்னதை தயங்கி தயங்கி ரித்திகா சொல்ல, மாறன் சொல்லும் முன் “வாட்?” என்று சினமானான் தமிழினியன்.

“அவளோட விருப்பமில்லாமல் என்னால ஏதும் செய்ய முடியாது” என்றான் கோபமாக தமிழினியன்.

மிருளாலினி அவனது அலைபேசியை பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டாள்.

“கண்டிப்பாக இருவரும் வரும் மூன்று நாட்கள் சேரணும் இல்லை இருவருமே உயிரோட இருக்க மாட்டீங்க” என்று ரித்திகா சொல்ல, எல்லாரும் அதிர்ந்து அமைதியானார்கள்.

“ஏன்? எதுக்கு?” தமிழினியன் கேட்க, அந்த ராட்சசன் தான் காரணம்.

அவனை தான் அடச்சுட்டாங்களே! ரித்திகா கேட்க, இல்ல அவன் நாளை இரவு எப்படியும் வெளியே வந்திருவான். நாளையும் இவர்களுக்கான இரவில் சேர்ந்து தான் ஆகணும். நாளையும்..இன்று இருவரும் இணைந்து விடலாம். ஆனால் அவன் தடைகளை ஏற்படுத்துவான். அதை தாண்டி உங்களுக்குள் நடக்க வேண்டியது நடந்தே ஆகணும் என்று சுபிதனின் ஆன்மா கூறியதை ரித்திகா கூறினாள்.

“அது என்னது? எதுக்கு அது எங்க வாழ்க்கைக்குள் இடைஞ்சலா இருக்கு?” தமிழினியன் கேட்க, அதுக்கு காரணம் மிருவுக்கு திருமணமானது தெரிந்தும் அவளுக்காக காத்திருந்த உன் காதலும், நான் இறந்த பின்னும் என் அறையையும் வீட்டை விட்டு வெளியே வராத மிருவின் காதலும்..

“புரியல” தமிழினியன் கேட்டான்.

உனக்கு புரிய வைக்க எனக்கு நேரமில்லை. நீ எல்லாவற்றையும் நாளை அறிந்து கொள்.

“என்ன அறியணும்?” தமிழினியன் கேட்க, சிவன் கோவிலுக்கு அருகே இருக்கும் நூலகத்தில் ஒரு புத்தகம் இருக்கு. இவன் சாதாரண ராட்சசன் இல்லை.  பத்தாயிரம் வருடமாக ஆழமான காதலுக்காக காத்திருக்கும் அரக்கன் “சாவான்”.

நாளை நூலகத்திற்கு மட்டும் போ. நானே உனக்கு தெரியப்படுத்துறேன். வீட்டிற்கு கொண்டு வந்து அதை படி. அதில் உள்ள அனைத்தும் உண்மையானவை. பின் அறிந்து கொள்.

இப்ப நடக்கட்டும் என்றது.

“நடக்கட்டும்மா?” நானே உன் மீது சினத்தில் இருக்கேன். சும்மா இருந்துரு. அவளுக்கு நேரம் வேண்டுமாம். விருப்பமில்லாத பொண்ணு என்னோட மனைவியானாலும் தவறுதான் தமிழினியன் சொல்ல, மிருளாலினி கோபமாக அவனை அடித்தாள்.

“நீ தான சொன்ன?” தமிழினியன் கன்னத்தில் கை வைத்து கேட்க, ஆமா நேரம் வேணும்ன்னு சொன்னேன் தான். “அதுக்கு உங்க மேல விருப்பமில்லைன்னு சொல்றீங்க? சுபியை மறக்க மாட்டியான்னு கேட்குறீங்க”? நீங்க என்னை புரிஞ்சுப்பீங்கன்னு நினைச்சேன்.

நல்லா கேட்டுக்கோங்க. என்னோட சுபி என்னை யாரும் கண்களால் தீண்டுவதையே விரும்பாதவன். ஆனால் இந்த சுபியின் ஆன்மாவோ நம்ம கல்யாணத்தை நடத்தி நம்மை படுக்கையில் இருப்பதையே பார்க்கிறான். இவன் என்னோட சுபி இல்லை. அவன் தான் செத்துட்டானே! அவன் வர மாட்டான்னு தான் நிதர்சன் புரிந்து உங்கள் காதலுக்காக தான் திருமணம் செய்தேன். ஆனால் இந்த இரு நாட்களிலே நீங்கள் என் மனதை உங்கள் பக்கம் வர வச்சுட்டீங்க.

“நேரம் கேட்டது?” என்று மிருளாலினி அழுது கொண்டு, ஜெனி சீனியருக்கு குழந்தை என்றதும் இறந்த என் குழந்தை நினைவு வந்து விட்டது. அதனால் தான் என்னால உங்களை நெருங்க முடியல. “என்ன விசயம்ன்னு தெரியாம உங்களை எனக்கு பிடிக்கலைன்னு எப்படி சொல்வீங்க?” என அழுதாள்.

தமிழ், ஒரு மணி நேரம் தான். இரவு பன்னிரண்டு மணி வரை தான் உங்களுக்கான நேரம். தவறினால் கண்டிப்பாக இறப்பு நிச்சயம் என்று அவன் வார்த்தை காணாமல் போக, ரித்திகா அலைபேசியை அணைத்து விட்டு அறைக்கு சென்றாள்.

“அது என்ன புத்தகமாக இருக்கும்?” நாமும் அவருடன் சென்று பார்க்கணும் என எண்ணிக் கொண்டே தூங்கிப் போனாள் ரித்திகா. மாறனுக்கும் இதே யோசனை தான்.

அஜய் தூங்க முடியாமல் தியாவும் அவள் அப்பாவும் கண் முன்னே வந்து கொண்டிருந்தனர். அவன் பொறுக்க மாட்டாமல் மதுவை அருந்து விட்டு மட்டையானான். அவன் அம்மாவோ இருவரும் வீட்டிற்கு வரவும் கத்தி இருப்பார். அஜய் அப்பா, அவன் அம்மாவிடம் கோபித்து கொண்டு மற்றொரு அறையில் அவருடைய பழைய கால நினைவுகளில் உலன்று கொண்டிருந்தார்.

மிருளாலினி அழுது கொண்டிருக்க, “சாரி மிருளா” என்று தமிழினியன் அவள் கையை பிடித்தான். வேகமாக அவனிடம் பாய்ந்து மிருளாலினி அவனை கட்டிக் கொண்டு, எனக்கு என்னுயிரே போனது போல் இருந்தது.

“என் குழந்தை அவர்களை என்ன செய்தது? அவனை இழந்த சிரமத்தில் இருக்கும் போது குழந்தை என்றதும் அது எனக்கு எப்போதும் துணைக்கு இருக்கும் என்று எவ்வளவு சந்தோசப்பட்டேன் தெரியுமா?” அம்மா அப்பாவிடம் இப்பொழுது வரை குழந்தை பற்றி சொல்லலை. அவங்களுக்கு தெரிந்தால் வருத்தப்படுவாங்க.

அவங்க செய்த கஷ்டத்தை கூட தாங்க என்னால முடிஞ்சது. குழந்தையை அழைத்ததில் இருந்து தன் என் உலகே மாயையானது போல் இருந்தது. நான் அதிலிருந்து கோவிலுக்கு செல்ல ஆரம்பித்தேன். அங்கு வரும் குழந்தைகளை பார்த்தால் என் குழந்தை போலவே தோன்றும்.

நீங்க சுபியை பார்த்து பொறாமைப்படவே வேண்டாம். காதலிக்கும் போது இருந்த காதல், நெருக்கம் எங்களிடம் திருமணத்தின் பின் இல்லாமல் போனது. அவனுடைய வீட்டார் எங்களுக்கான தனிப்பட்ட நேரத்தை தடுத்தனர்.

முதலிரவில் அவனுடன் நேரம் செலவழித்தோம். நட்சத்திரா ஊருக்கு சென்ற போது மட்டும் தான் செலவழித்தோம். அவன் நட்சுவிடம் பேசும் அளவு கூட என்னிடம் பேசவில்லை. நான் தனித்து விடப்பட்டதை போல் தான் இருந்தேன்.

நான் தூங்கிய பின் தான் வீட்டிற்கே வருவான். காரணம் கேட்டால் கோபப்படுவான். அடிக்கடி பிரச்சனை. அதில் தான் நட்சுவையும் அவனையும் சந்தேகிக்கும் படி நான் நடக்க, என்னால அதுக்கு மேல பொறுக்க முடியாமல் அவளிடம் சண்டை போட்டேன். அவள் அந்நிலையில் கிளம்புவாள் என்று நினைத்து கூட பார்க்கலை. அவளும் இல்லை இவனும் துணைக்கு இல்லை. எனக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான். இதில் அவன் அம்மாவும் அண்ணியும் அர்ச்சனை, பிடுங்கல் தாங்க முடியல. அதான் அம்மா வீட்டிற்கு போகலாம் என்று கிளம்பி தான் சுபி..என்று நிறுத்தினாள்.

மிருளாலினியை ஆதரவாக அணைத்து, அவள் தலையை கோதிக் கொண்டே அவளை நிமிர்த்தினான் தமிழினியன். அவள் கண்ணீருடன் அவனை பார்த்தாள். அவள் கன்னத்தை தன் கரங்களால் தாங்கி, நீ அவனை பற்றி பேசாமல் இருந்தாலே போதும். ”உனக்கு என்ன? குழந்தை தான?” என்று அவன் குறும்புடன் கண்ணடித்தான். அவள் இதழ்களில் சிரிப்பு வந்தது.

ம்ம், “இப்படி புன்னகையுடன் தான் இருக்கணும்” என்று அவளது இதழ்களை வருடினான். அவள் கண்களை மூட, ஒற்றியது போல் இதழ் ஒத்தடம் கொடுத்தான். அவள் கண்ணை திறந்து பார்த்தாள்.

“உனக்கு இப்ப ஓ.கே வா?” என்று அவளை இழுத்து தன் மேல் போல் போட்டுக் கொண்டு கேட்டான்.

ம்ம்..என்று அவன் மேல் சாய்ந்து அணைத்துக் கொண்டாள் மிருளாலினி. இருவர் இதழ்களும் உறவாட மோகவலையை பின்னத் தொடங்கினர். அவள் மேனியில் இதழ்களால் வருடிய தமிழினியன் பின் தலையில் அவள் கையை நுழைத்து அவனுடன் ஒன்றினாள் பாவையவள். கருமேகங்களோ வெட்கத்தில் சிவந்து கதிரவன் உதயமானார்.

முதலில் விழித்த மிருளாலினி ஆடையில்லாது அவனது மார்பில் உறங்கியது எண்ணி வெட்கத்துடன் அவனை ஏறிட்டாள். அவன் ஆழ்ந்து தூங்குவது போல் இருக்க, எம்பி அவன் நெற்றியில் முத்தமிட்டு “தேங்க்ஸ்” என் வாழ்க்கை இருள் மறைந்தது போல் இருந்தது. இப்பொழுது “என் வெளிச்சம் நீயடா” என்று அவன் இதழ்களில் முத்தமிட, அவனோ தூங்குவது போல் நடித்து இவள் செய்வதை கவனித்திருப்பான்.

அவள் இதழ் தன் இதழில் படவும் விடாது அதை பிடித்துக் கொண்டு, “அப்புறம்?” என்று கேட்டான். அவள் பயந்து இதழ்களை அவனிடமிருந்து பிரித்து, “தூங்கிட்டு தான இருந்தீங்க?” எனக் கேட்டாள்.

ஆமா, “தூங்கிட்டு தான இருந்தேன்” என அவளை இறுக்கி கண்ணை மூடினான்.

டாக்டர் சார், “கேடித்தனமெல்லாம் செய்வாரா?” என்று அவள் கேட்க, கேடி.ம்ம்..இதுவும் நல்லா இருக்கே. யாரும் என்னை இது போல் கூறியதேயில்லை. என்னோட காதல் மனைவி மிருளாவுக்கு மட்டும் தான் எப்பொழுதும் கேடியாக இருப்பேன் என்று அவளது மோகன புன்னகையை அவன் சிந்த, அச்சோ..உங்க பார்வையே சரியில்லை. நான் கிளம்பணும் என நகர்ந்தாள்.

அவன் அவளை பிடிக்க வர போர்வையை அவனிடமிருந்து உருவி அவள் உடலில் சுற்றி விட்டு வவ்வளம் காட்டிக் கொண்டே மிருளாலினி குளியலறைக்கு ஓட, “என்னோட மானத்தை காக்க வேண்டியவளே இவ்வாறு செய்யலாமா?” என பாவம் போல் கூறியவனை பார்த்து, “தமிழ்..உங்க மானம் என் கையில் இல்லை உங்க கையில் தான்” என்று அவன் பக்கமிருந்த போர்வையை காட்டினாள். அவன் புன்னகையுடன் எழுந்தான்.

அச்சோ..என்று குளியலறை கதவை தாழிட்டு குளித்து வந்தாள். துவாலையை மட்டும் சுற்றிக் கொண்டு வெளியே எட்டிப் பார்த்தாள். அவன் அறையில் இல்லை. “எங்க போயிட்டார்?” என்று வெளியே வந்த மிருளாலினியை இழுத்து அவளது கழுத்தில் முகம் புதைத்தான் தமிழினியன்.

டர்ட்டி பாய்..விடுங்க..விடுங்க.. என்று அவள் நகர முயல அவளால் முடியவில்லை. அவளை தள்ளிக் கொண்டே குளியலறைக்கு சென்றான் தமிழினியன். ஒரு வழியாக இருவரும் தயாராகி கீழே வந்தனர். இருவரும் சேர்ந்து வருவதை பார்த்த வேல்விழியும், கிருபாகரனும் மகிழ்ந்தனர். உறவினர்கள் அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றிருப்பார்கள்.

மாமா..என்று அவனுடைய அத்தை பொண்ணு சுருதி தமிழினியன் அருகே வந்தாள்.

“மற்ற யாரையும் காணோம்” என்று அவன் கேட்க, மாமா எனக்கு விடுமுறை. அதான் வந்தேன். எல்லாரும்  சாப்பிட வருவாங்க என்று கையை நீட்டினாள்.

அவன் புருவத்தை சுருக்க, “பணம் வேணும் மாமா?”

“பணமா?” உன்னோட அப்பாகிட்ட கேட்காம என் பிள்ளைகிட்ட கேக்குறடி. அவன் இப்ப முதல்ல மாதிரி இல்லை என்று வேல்விழி கூறினார்.

அக்கா, “மாமா எனக்கு பணம் கொடுத்தால் கோவிச்சுப்பீங்களா?” எனக் கேட்டாள்.

“இல்லை” என்று தலையசைத்தாள் மிருளாலினி.

“எதுக்கும்மா பணம்?” கிருபாகரன் கேட்டார்.

மாமா, ப்ரெண்ட்ஸோட படத்துக்கு போகப் போறேன். ப்ளீஸ் மாமா என்றாள் அவள்.

தமிழினியன் அவள் கையில் பணத்தை கொடுக்க, ஓடி வந்த சுவாதி அப்பணத்தை அவளிடமிருந்து பிடுங்கி “அண்ணா, இவளுக்கு எதுக்கு கொடுக்கிற?” அவ கல்லூரியை கட் அடித்து செல்ல பார்க்கிறாள் என்று அப்பணத்தை மிருளாலினி கையில் கொடுத்தாள்.

சுவா, உனக்கு தேவையில்லாததில் தலையிடாத இருவரும் சண்டையிட, அவளை விடுங்க.

அண்ணி, “லவ் யூ” என்று மிருளாலினி கன்னத்தில் முத்தமிட்ட சுவாதி அவளை அணைத்தாள்.

சுவா, “எதுக்கு அண்ணியை ஐஸ் வக்கிற? என்ன பிளான் வச்சிருக்க?” அவள் அண்ணன் காரை நிறுத்தி விட்டு வீட்டினுள் கேட்டுக் கொண்டே நுழைந்தான்.

அதெல்லாம் ஒன்றுமேயில்லை. அண்ணி, உங்களது அலைபேசி எண்ணை கொடுங்கள் சுவாதி கேட்க, “திருவிழாவில் காணாமல் போன பிள்ளை போல விழித்தாள் மிருளாலினி”.

எல்லாரும் அவளை பார்க்க, “எண் தான கேட்டேன்? ஏதும் தப்பா கேட்டுட்டேனா?” சுவாதி கேட்க, இல்ல என்று தமிழினியனையும் அவனது பெற்றோரையும் பார்த்துக் கொண்டு, “என்னிடம் அலைபேசியே இல்லையே!” என்றாள்.

“வாட்?” என்று சிறியதுகள் அதிர, தமிழினியனும் அவளை அதிர்ந்து தான் பார்த்தான்.

மிருளா, “உன்னிடம் அலைபேசி இல்லையா?” தமிழினியன் கேட்க, படிக்கும் போது பயன்படுத்தியது. “சுபி வீட்ல பயன்படுத்தக்கூடாதுன்னு சொல்லீட்டாங்க” என்று தமிழினியனை பார்த்தாள்.

அண்ணி, “அப்ப அந்த ஐந்து வருடம்?” சுவாதி திகைத்து கேட்க

அவள் கண்ணீருடன், வீட்டில் வேலையே நேரம் சரியாகிவிடும் என்றாள். தமிழினியன் அவள் கையை இறுக பற்றினான். அவளும் அவன் கையை இறுக பற்றினாள்.

“இப்ப எதுக்கு தேவையில்லாத பேச்சு?” வேல்விழி கோபமானார்.

அண்ணி, “அவங்க எங்க இருக்காங்கன்னு சொல்லுங்க. அவங்கள சும்மா விடக் கூடாது கொதித்தான் விகாஸ்.

வேண்டாம்..வேண்டாம்..என்று மிருளாலினி கண்ணீரை துடைத்து புன்னகைத்தாள்.

அண்ணி, “எதுக்கு சிரிக்கிறீங்க?” அவன் கோபமாக கேட்டான்.

அந்த ஐந்து வருட கஷ்டம் ஒரே நேரத்தில் உங்க பாசத்தில் காணாமல் போயிருச்சு என்றாள். மிருளாலினியை அனைவருக்கும் மிகவும் பிடித்து விட்டது. இவள் பேசியதை உடனே தன் குடும்ப நபர்கள் அனைவருக்கும் மகிழ்வுடனும் பெருமையுடனும் சுவாதி அண்ணன் பகிர்ந்தான்.

“அம்மா, அப்பா எங்கடா?” கிருபாகரன் கேட்க, வருவாங்க பெரியப்பா. உங்க தம்பி டார்ச்சர் தாங்க முடியல என்றாள் சுவாதி.

“ஏன்டி?” வேல்விழி கேட்க, ஒரே புராணம் பாடியே கொல்றாரு என்றாள்.

“யாரு கொல்றா?” என்று ரகசியன் அவன் பெற்றோருடன் வந்தான்.

“வேற யார அவ சொல்வா?” என்று அவன் அம்மா கேட்க, “எல்லாரும் வர நேரமாகுமாம்மா?” தமிழினியன் கேட்டான்.

“என்னாச்சுடா? ஏதும் பிரச்சனையா?” வேல்விழி கேட்க, இல்லம்மா. “ஆனால் ஒரு விசயம் பேசணுமே!” என்று தன் பெற்றோரை பார்த்தான்.

அவர்கள் அவனுடன் தனியே சென்று பேசி விட்டு வந்தனர்.

“பெற்றோருடன் ரகசியமா?” திலீப் பெற்றோர் கேட்டனர். அண்ணி, அண்ணா உங்களை விட்டு ரகசியம் பேசுகிறார் என்று அவர்கள் மகன் சொல்ல, “கோவிச்சுக்கப் போறாளோ?” என்று அனைவரும் மிருளாலினியை பார்த்தனர்.

மற்றவர்களிடம் ரகசியம் இருக்கலாம். பெற்றோரிடம் இருப்பது நல்லதல்ல. அவர் என்ன பேச சென்றிருப்பான்னு எனக்கு தெரியும் என்றாள் புன்னகையுடன் மிருளாலினி.

“அப்படியா? நாங்க என்ன பேசிக்கிட்டோம்? சொல்லு?” தமிழினியன் கேட்க, “எல்லாரும் வரவும் நீங்க சொல்ல வேண்டியதை நான் சொல்லவா?” என்று கேட்டாள். வேல்விழியும் கிருபாகரனும் அவளை புரியாமல் பார்த்தனர்.

சற்று நேரத்தில் அனைவரும் வந்து விட, “நாங்க ஊருக்கு போகப் போகிறோம். இதை தான அத்தை, மாமாவிடம் பேசுனீங்க?” மிருளாலினி கேட்க, அசந்தனர் மூவரும்.

சுபி பேசியதை வைத்து இன்னும் பிரச்சனை முடியவில்லை. அதனால் குடும்பத்துடன் இருந்தால் அவர்களுக்கு ஆபத்து வந்து விடும் என்று ஊருக்கு செல்ல முடிவு செய்திருப்பான் என்று சரியாக யூகித்து கூறினாள் மிருளாலினி.

“அப்படியா? இரு நாட்களுக்கு பின் தான போகணும்ன்னு சொன்ன?” சுஜித்ராவின் அம்மா கேட்க, ஆமா பெரியம்மா, அந்நேரம் முக்கியமான ஆட்கள் ஹாஸ்பிட்டலுக்கு வாராங்களாம். அதனால இப்பவே கிளம்புகிறோம் என்று மிருளாலினியை பார்த்து, சாப்பிட்டு ஆடையை பேக் செய்திரு. நான் முக்கியமான வேலையாக வெளியே போகணும் என்றான்.

“கிராமத்துக்கா?” அண்ணா..நானும் வாரேன் சுவாதி சொல்ல,” உனக்கு கல்லூரி இருக்கே” என்றான் அவன் அண்ணன்.

அண்ணா, ஸ்டடி ஹாலிடேஸ் நாளையிலிருந்து விட்ருவாங்க. நானும் என் ரசியுடன் வருவேன் என்றாள்.

சுவாதி, “அவங்க திருமண விருந்துக்காக போறாங்க?” அவள் அப்பா சத்தமிட்டார். அவள் முகம் வாடியது.

வரட்டும் சித்தப்பா. நான் பார்த்துக்கிறேன் என்றான் தமிழினியன்.

தேங்க்ஸ் அண்ணா, என்று அவள் அப்பாவிடம் முகத்தை திருப்பினாள்.

சுவா, உன்னோட தோழியை தயாராக சொல்லு. இங்கிருந்து உன் வீட்டிற்கு சென்று பொருட்களை எடுத்து விட்டு கிளம்பலாம். எல்லாரும் சாப்பிட போங்க. நான் கால் பேசிட்டு வாரேன் என்று தமிழினியன் எழுந்தான்.

மிருளாலினி பதட்டமாக அவன் பின் சென்று, “சுவாதியும் பிரச்சனையில் மாட்டிக் கொள்வாளே!” என்று தமிழினியனிடம் கேட்டாள்.

இல்ல, அவங்க பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யலாம். நாம முடியாதுன்னு சொன்னா அவ வீட்ல கஷ்டப்படுவா. சித்தப்பாவும் அவளும் சண்டை தான் போடுவாங்க. அவ நம்முடன் வரட்டும். “உனக்கு பிரச்சனை ஏதும் இல்லையே?” என புன்னகையுடன் கேட்டான்.

அவன் கேட்டதில் வெட்கி சிவந்த முகத்தை திருப்பிக் கொண்டாள் மிருளாலினி.

அண்ணி, உங்க முகம் ரொம்ப சிவந்து இருக்கு. அண்ணா, “என்ன சொன்ன?” சுவாதி அவர்களிடம் ஓடி வந்தாள்.

“ஒன்றுமில்லை” என மிருளாலினி நகர்ந்தான். சுவா, நீ உள்ள போ. சாப்பிடுங்க என்று அவன் சொல்ல, எல்லாரும் அமர்ந்தனர். மிருளாலினி நின்று கொண்டிருக்க, அமரும்மா..சாப்பிடலாம் கிருபாகரன் அழைத்தார்.

மாமா, அவரு வரட்டும். நீங்க சாப்பிடுங்க என்றாள்.

அடியேய், “மருமகள பார்த்து கத்துக்கோ” என்று சுவாதியிடம் அவள் அம்மா கூற, அனைவரும் புன்னகைத்தனர். சிம்மாவிடம் பேசி விட்டு விக்ரமை அவர்களுடன் அழைத்து செல்ல முடிவெடுத்து அவனிடம் விசயத்தை கூற, அவனும் கிளம்பினான்.

சாப்பிட்டு விட்டு அனைவரும் அமர்ந்திருக்க, நான் வெளியே போயிட்டு வந்துடுறேன் என்று தமிழினியன் சொல்ல, தமிழ்..நானும் வாரேன் என்றாள் மிருளாலினி.

நீ இரும்மா. வேலை விசயமா யாரையாவது பார்க்க போவான் என்றார் கிருபாகரன். அவளுக்கு தமிழினியனை தனியே அனுப்ப பயந்து நின்றாள். அந்நேரம் சரியாக விக்ரமும் ரசிகாவும் வந்தனர். எல்லாரும் வெளியே வந்தனர்.

டேய், “ஒழுங்கா நில்லு” என ரித்திகா கல்லை எடுத்து மகிழனை நோக்கி எறிய, அக்கல்லோ காரிலிருந்து இறங்கிய விக்ரம் தலையில் பட்டது. மகிழன் வயிற்றை பிடித்துக் கொண்டு பயங்கரமாக சிரித்தான்.

மகிழ், “உன்னை..” என்று விக்ரமிடம் ஓடி வந்து..சாரி சாரி என்று விக்ரம் தலையில் கை வைத்தாள் ரித்திகா. சுவாதி அவளை முறைத்து பார்க்க, ரித்திகா கையை உதிரன் தட்டி விட்டான்.

மாமா, என்னால தான் அவருக்கு அடிபட்டிருச்சு. “அதுக்காக தலையில எதுக்கு கை வைக்கிற?” உதிரன் கோபமாக கேட்க, ஆமா..”எதுக்கு அத்த கைய வைக்குற?” அர்சுவும் கேட்க, விக்ரமிற்கு சிரிப்பு தான் வந்தது.

என்னடா, “அந்த மாமாவுக்கு தான் உன்னோட சப்போர்ட்டா? எனக்கில்லையா?” பாவமாக கேட்பது போல் விக்ரம் கேட்க, அதற்கும் இடையே வந்தான் உதிரன். ரித்திகா அவனை முறைக்க, மாமா இவள விடு. உனக்கு பொண்ணா கிடைக்காது என்று மகிழன் உசுப்பேற்ற,

அண்ணா, “நீ குட்டிபையனுக்கு மாமா இல்லை” என்று ரசிகா சொல்ல, “அப்புறம் எப்படிம்மா?” என்று கிருபாகரன் கேட்டான்.

அது வந்து..அங்கிள் என்று தயங்கினாள் ரசிகா.

விடுங்க, “எதுக்கும்மா உன் தம்பியை கல்லால் அடிக்கும் வரை கோபமா?” பாட்டி கேட்டார். அவள் பதில் கூறாது உதிரனை பார்த்தாள். அவன் புன்னகைத்தான்.

“எதுக்கு சார் சிரிக்கிறீங்க?” பாலா அங்கே வந்தான்.

“நான் சொல்கிறேன்” என்று மகிழன் சொல்ல ஆரம்பித்தான்.

ரித்து அடிக்கடி வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தாள். உதி மாமா எதுவும் வெளிய போயிருக்காரோன்னு நினைச்சேன். ஆனால் அவர் உள்ளிருந்து வந்தார். அவரும் அவளை ஒருமாதிரியாக பார்த்து சென்றார். தயாராகி அவர் வெளியே வந்தாரா?

அதான்..அதான்..என்று மகிழன் சிரிப்புடன், மாமா நீங்க பொண்ணு பாக்கப் போறீங்களா?ன்னு கேட்டேன். இல்ல எலிபனட்டை பார்க்கப் போறேன்னு சொன்னாரு. அதான் எலிபன்ட் உங்க முன்னாடி இருக்கும் போது எதுக்கு நீங்க வெளிய பாக்க போறீங்கன்னு ரித்துவை காட்டி கேட்டேன். அதுக்கு தான் என்னை கொல்ல பாக்குறாள் என்று மகிழன் மேலும் சிரித்தான்.

விரைந்து அவனை பிடித்த ரித்திகா, உன்னை என்ன செய்கிறேன்னு பாரு என்று இழுத்தாள்.

அக்கா..நில்லு சீரியசாக மகிழன் சொல்ல, ரித்திகா நின்றாள். சட்டையிலிருந்து கையை எடு என்றும் அவன் சீரியசாக, கையை எடுத்து அவனை பாவமாக பார்த்தாள்.

அவள் சட்டையிலிருந்து கையை எடுக்கவும் அவன் வெளியே வைத்திருந்த கல்லூரி பையையும் அவன் மருத்துவ கோர்ட்டையும் எடுத்துக் கொண்டு, “ரித்தி எலிபன்ட்” என்று அவன் நகர, மகிழ்..என்று கோபமாக ரித்திகா சத்தமிட்டாள்.

அவன் மேலும் ஓட, தமிழினியனின் அத்தை பொண்ணு சுருதி தோளில் இடித்த மகிழன், சாரி சாரி..என்று “பை ரித்து” என்று ஓடினான்.

மகிழ், “டிராப் பண்ண வரவா?” உதிரன் கிண்டலாக கேட்க, “ரித்துவை டிராப் பண்ணுங்க மாமா” என்று ஓடும் போதும் அவளை வாரிச் சென்றான் மகிழ்.

வருவேல்ல. அப்ப பார்த்துக்கிறேன் என்றாள் ரித்திகா. அனைவரும் சிரித்தனர்.

“இப்பவே இப்படின்னா பெற்றோர் இருக்கும் போது இன்னும் அலும்பு செய்வீங்களோ?” விகாஸ் கேட்க, ரித்திகா முகம் வாட்டமானது. அனைவரும் அவனை முறைத்தனர்.

ரித்திகா அழுகையை அடக்கிக் கொண்டிருக்க, “ரித்து நீ?” உதிரன் பேசத் தொடங்க, “மாமா நீங்க வெளிய எங்கேயும் போறீங்களா?” எனக் கேட்டாள்.

போகணும் ரித்து. ஆனால் நீ..

இல்ல மாமா, நீங்க இருங்க. நான் போகணும். அர்சுவை பார்த்துக்கோங்க.

“எங்க போற ரித்து?” உதிரன் குரல் மாற, எல்லாரும் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தமிழ் அண்ணா, “நானும் வரவா?” ரித்திகா கேட்க, அனைவரும் திகைத்தனர்.

“மிரு அண்ணி போலவே கேட்குறீங்க?” சுவாதி கேட்க, ரித்திகா மிருளாலினியை பார்த்தாள். அவள் “வேண்டாம்” என்று தலையசைக்க, என்னை டிராப் செய்ய சொல்லி தான் கேட்டேன் என்று ரித்திகா தமிழினியனை பார்த்தாள்.

விக்ரம் அனைவரின் அசைவுகளையும் உன்னிப்பாக கவனித்தான்.

ரித்து, நான் உன்னை டிராப் செய்கிறேன். வா..விக்ரம் அழைக்க, நோ அண்ணா, இருக்கட்டும் என்றாள். கோபமான உதிரன் முகம் அமைதியாக விக்ரமை பார்த்தான்.

இந்நிலையில் தனியே எங்கும் போயிறாத. வா..அர்சுவை அழைத்துக் கொள்.

உங்களுக்கு வேலை இருக்கும்ல்ல அண்ணா.

தமிழ் சார், வெளிய போயிட்டு வரும் வரை நான் சும்மா தான் இருக்கணும். “ரசி உன் ப்ரெண்டோட வீட்டுக்கு போ” என்று “விக்ரம் வா” என்று அழைத்தான். உதிரனுக்கு ஏதோ சந்தேகமாக இருந்தாலும் இப்பொழுது அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ரித்து, “நான் கிளம்புகிறேன்” என்று சென்றான்.

தமிழினியன் காரை எடுத்து கிளம்ப, அவன் வீட்டு சிருசுகளுக்கு ஏதோ இருக்கு என்று எண்ணியவாறு நின்றனர்.

சுருதி அப்படியே நிற்க, “என்னம்மா உன் இதயத்தையும் சேர்த்து இடித்து விட்டானோ?” சுவாதி கேலியாக கேட்க, மகிழன் சென்ற திசையை பார்த்துக் கொண்டே ம்ம்..என்றாள்.

“என்னது?” சுருதி அம்மா கேட்க, சுவாதி சிரித்தாள். இல்லம்மா..இல்ல..இல்ல என்று வீட்டிற்குள் ஓடினான் சுருதி. அவளுக்கு மகிழை பிடித்து போயிற்று.

விக்ரம் காரை எடுக்க, நைசாக வெளியே வந்த ரகசியன் காரை எடுத்தான்.

“எங்கடா போற?” சுவாதி, ரசிகா, நேகன் அவன் முன் வந்தனர். ஏறித் தொலைங்க. அவங்கள மிஸ் பண்ணிடப் போறோம் என்று விக்ரம் காரை பின் தொடர்ந்தனர். கார் ஓரிடம் நிற்க மூவரும் இறங்கினர்.

ஹே, “அங்க நிக்குறாங்க பாருங்க” என்று ரசிகா சொல்ல, மெதுவாக வந்து அவர்கள் பேசுவதை கேட்கும் படி நின்றனர் நால்வரும்.

சொல்லு, “தமிழ் எங்க போறான்?” விக்ரம் கேட்க, நான் சொல்ல மாட்டேன் என்றாள்.

சொல்ல முடியாதுன்னு உன்னால சொல்ல முடியாது. என்னை பற்றி உனக்கு தெரியாது. இப்ப உன்னோட தம்பி படிக்கும் மெடிக்கல் கல்லூரியும் எனக்கு ஆள் இருக்கு. அவனை நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என விக்ரம் மிரட்டினான்.

சீரியசான ரித்திகா முகம் புன்னகையில் மலர்ந்தது.

“எதுக்கு சிரிக்கிற?” விக்ரம் சினமுடன் கேட்க, நீங்க எங்களை ஏதும் செய்ய மாட்டீங்க என்றாள் ரித்திகா.

“எப்படி சொல்ற?”

என்னோட அண்ணாவுக்கு உங்களை தெரியும். “உங்களை நம்பி இந்த குடும்பத்தையே விட்டிருக்காரே!”

எனக்கும் சிம்மாவுக்கும் ஆகவே ஆகாது. அதுவும் அவனுக்கு என்னை பார்த்தாலே பிடிக்காது விக்ரம் சொல்ல, கண்டிப்பாக இல்லை. நீங்க சேர்ந்து தான் வேல பாக்குறீங்கன்னு தெரியும் என்றாள் ரித்திகா.

எல்லாரும் திகைக்க, “இல்லை” என்றான் விக்ரம்.

ஆமா, எனக்கு நல்லா தெரியும். இந்த கண்கள் பொய் சொல்லாது என்றாள் ரித்திகா. ரகசியன், ரசிகாவிற்கு புரிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

அப்பொழுது சுவாதி, இவரு கண்ணை பாரு. மீனை பார்க்கும் கொக்கு போல இருக்கு. அதை பிடுங்கி கொக்குக்கு இரையாக்கணும். அவரோட நாசி இருக்கே. அதை வைத்தே யார் வருகிறார்கள்ன்னு கண்டுபிடிக்கிறாரு. அதில் கொசுமருந்தை அடித்து விடணும். வாய் இருக்கே என்று அவள் சொல்லும் முன், “அடிப்பாவி என்னோட அண்ணனை கொல்ல வேற பகையாளியே வேண்டாம். நீயே போதும்” என்று ரசிகா கோபமாக சுவாதியை முறைத்தாள்.

ஏம்மா, அவ உன்னோட அண்ணனை திட்டியது போல் தெரியல. சைட் அடிக்கிற மாதிரி தெரியுது என்ற நேகன், பாரு..நாம பேசுவதை கூட கவனிக்காமல் அவரையே பாக்குறா..

அடியேய் என ரசிகா சுவாதி தலையில் ஒன்றை போட, “விக்ரம்” என சத்தமிட்டுக் கொண்டே விக்ரம் ரித்திகாவை நோக்கி ஓடினாள் சுவாதி. எல்லாரும் அதிர்ந்து பார்த்தனர்.