அத்தியாயம் 23

நட்சத்திரா வீட்டில் ரித்துவுடன் அன்னமும், மகிழுடன் பரிதியும் படுத்துக் கொள்ள, நட்சத்திரா தன் மகனுடனும், சிம்மா உதிரன் ஒரே அறையிலும் படுத்தனர்.

உதிரன் தூங்க முடியாமல் வெளியே வந்தான். சிம்மா அவன் பின் வர, மகிழனுக்கு பெற்றோர் நினைவில் தூங்க முடியல. அவனும் வெளியே வந்தான்.

முதலில் வந்த உதிரன், “யாரும் இருக்கிறார்களா?” என பார்த்துக் கொண்டே வேகமாக தூரம் நின்ற கார் அருகே சென்று கார்சன்னலை தட்டினான்.

சிம்மா சந்தேகமாக மறைந்து நின்று பார்த்தான். மகிழனும் அவனுடன் வந்து நிற்க, அண்ணா..அழைத்தான்.

ஷ்..என்ற சிம்மா உதிரன் அருகே இருந்த மரத்தின் பின் மறைய, மகிழும் அவனை தொடர்ந்தான்.

கார்சன்னலை உதிரன் தட்ட, அதிலிருந்து புகழேந்தியும் அம்சவள்ளியும் இறங்கினார்கள்.

“நீங்க உங்க ஊருக்கே கிளம்புங்கன்னு அப்பொழுதே சொன்னேன்ல்ல?” உதிரன் கோபமாக கேட்டான்.

“அந்த பொண்ணு நல்லா இருக்காலாய்யா?” அம்சவள்ளி கண்கலங்க கேட்டார்.

“அவ இருந்தா என்ன இல்லைன்னா உங்களுக்கென்ன? சின்னப் பொண்ணுன்னு பார்க்காமல் என்ன பேச்சு பேசி இருக்கீங்க? இத்தனை நாள் என்னை பார்க்கணும்ன்னு உங்களுக்கு தோணலை?” ரித்து தான் எனக்காக உங்களை வர வச்சிருக்கா. அதுவும் நிஷா சொன்னதால் தான் தெரியும்.

அம்மா, உனக்கு தெரியும்ல்லம்மா. “எனக்கு அவளை முன்னிருந்தே பிடிக்கும்ன்னு தெரியும்ல்ல? அப்புறம் ஏன்ம்மா நீயும் இவர் பேசியதை கேட்டு அமைதியா இருந்த?” ஓ..இவர் உன் புருசன்ல்ல..போக வேண்டியது தான. அவர் உனக்கு போதும்ல்ல என்று ஆதங்கமுடன் பேசினான் உதிரன்.

உதிப்பா, அந்த பொண்ணையும் கூட கூட்டிட்டு வந்திரு. நம்ம ஊருக்கு போகலாம் அம்சவள்ளி சொல்ல, “நான் அவளை கூட்டிட்டு வரணுமா? புதுசா பேசுறீங்க?” நான் அவளை பார்க்கக்கூடாது. பேசக்கூடாது. “ஆயிரெத்தெட்டு உங்க கண்டிசன் எங்க போச்சு?”

தேவையேயில்லை. நான் என் குடும்பத்தோட இங்கேயே இருந்திருவேன். இனி என் தங்கை நட்சத்திரா, ரித்தி, மகிழ் என் பொறுப்பு. அவங்கள பார்த்துக்க எனக்கு தெரியும்.

உங்க பேச்சும் சாரோட பேச்சும் அவளை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும். அவள் என்னிடம் பேசுவாலான்னு கூட சந்தேகம் தான். ஆனாலும் இனி அவள் என்னோட பொறுப்பு. உங்க பேச்சை கேட்டு முதல்ல போல நான் செய்யப் போறதில்லை.

பெங்களூர் நேர்காணலை முடித்து நட்சாவை பார்க்க முதல்ல சென்னை தான் வந்தேன். தூரமிருந்து அவளை பார்த்தேன். இங்கேயே ஓரிடத்தில் வேலையும் செய்தேன். அந்த பணத்தை நான் அவளது தோழன் சுபிதனிடம் கொடுத்து விட்டு, பார்த்துக்க சொல்லி தான் கிடைத்த வாய்ப்பில் பெங்களூரு கிளம்பினேன். ஆனால் இங்க நட்சாவும் அங்க ரித்துவும் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க. நான் அவங்கள விட்டு போனது தான் தப்பு. இனி அவங்களே என்னை வெறுத்தாலும் நான் இங்கே தான் இருக்கப் போகிறேன்.

இல்லப்பா, அப்பத்தா..

அதான பார்த்தேன். “அப்பத்தாவுக்கு எங்க நினைவா இருக்குன்னு சொன்னதால தான் என்னை பார்க்க பெங்களூரு வந்துருக்கீங்க இல்லைன்னா வந்திருக்க மாட்டீங்கல்ல?”

“ஆமான்னு வச்சுக்கோ” என்று புகழேந்தி திரும்பி நின்றார்.

ஏங்க, “சும்மா இருங்க” என்ற அம்சவள்ளி, அப்பத்தாவுக்கு உடம்பு சரியில்லப்பா. உன்னையும் செல்லம்மாவையும் பார்க்க ஆசைப்படுகிறார்.

அவர் தான அவள கண்டபடி பேசி வெளிய அனுப்பினார். அவ வர மாட்டா. நீங்க கிளம்புங்க என்று உதிரன் பட்டென பேச, “அம்மாவுக்காகப்பா” என்று அம்சவள்ளி கண்ணீருடன் கேட்டார்.

மாமா, நீங்க போங்க. நாங்க நல்லா இருக்கோம். அக்காவை நான் பார்த்துக்கிறேன் என்று மகிழன் அவர்களிடம் வந்தான்.

“நீ தூங்கலையா?” உதிரன் கேட்க, “தூங்க முடியல மாமா” என்று புகழேந்தியை பார்த்து, “வாங்க பெரியமாமா” என்றான்.

மகிழ், நீ போ..

மாமா, அத்தையும் மாமாவும் வந்துருக்காங்க. அவங்கள கஷ்டப்படுத்தாதீங்க.

பார்த்தீங்கல்ல. அவன் அக்காவை பற்றி நீங்க பேசியது இவனுக்கும் தெரியும். இந்த சின்ன பையனுக்கு இருக்கும் எதுவும் உங்களிடம் இல்லை.

ஏம்மா, “நீங்க என்னோட தங்கச்சிய பார்க்க வந்தது தெரிந்தால் உங்க புருசன் மரியாதை இப்ப கெட்டுப் போயிறாதா?” என உதிரன் அன்றைய இவர்களின் வார்த்தையை அவர்களிடமே போட புகழேந்தி வருத்தமுடனும் கண்ணீருடனும் காரில் ஏறினார்.

போம்மா..போ..அவரு பின்னாடியே போ. உனக்கு உன்னோட புருசன் போதும். எங்க வாழ்க்கையை நாங்க பார்த்துக்கிறோம் என்றான்.

போறேன்ப்பா, “செல்லம்மாவோட புருசனை நாங்க பார்க்கவேயில்லையே?” அவர் கேட்க, ஆமால்ல என்று உதிரன் மகிழனை பார்த்தான்.

மாமா, எனக்கும் தெரியாது.” சிம்மா அண்ணாவுக்கு தெரியுமோ?”  அண்ணா..என்று மகிழன் திரும்ப, சிம்மா அவர்களை நோக்கி வந்தான்.

மகிழ், உங்க அண்ணி புருசன் செத்துட்டானாம். அவ பிள்ளைய தனியா தான் வளர்த்துட்டு இருக்கா. அவள் பேசுவது பொய்ன்னு தோணுது. அவ பையனை பார்த்தாலே உங்களுக்கு தெரியும் என்றான் சிம்மா.

“என்னது பொய்?” புரியல உதிரன் கேட்க, எனக்கு சரியா தெரியல. அவளோட பையன் என்னோட பையனா இருப்பான்னு தோணுது என்று சிம்மா சொல்ல, என்னடா சொல்ற? கொதித்த உதிரன்  மனதினுள் “அதான் தெரியுமே” என்று எண்ணினான்.

“கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா?” உங்க குடும்பத்துக்காக அவ காதலையே என்னிடம் மறைச்சிருந்திருக்கா. அவளாக என்று என்னிடம் பேசியது கூட இல்லை. எங்களுக்குள் ஏதும் நடக்கலை. ஆனால் பையன் என்னுடைய பையன் தான்.

“சிம்மா, உனக்கு பைத்தியமா?” எனக்கு தெரியும். நீங்க பேசகூட முடியாதுன்னு. “எப்படி அவ பையனை உன் பையன்னு சொல்ற?” உதிரன் கேட்க, “இன்னும் உங்க தங்கச்சி பையனை நீங்க பார்க்கலைன்னு பார்த்தாலே தெரியுது” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க..நட்சத்திராவின் கையிலிருந்து தாவி “அப்பா” என்று சிம்மாவிடம் வந்தான் அர்சு என்ற அர்சலன்.

எல்லாரும் அதிர்ச்சியுடன் அவனை பார்க்க, அண்ணி..”இவன் உங்க பையனா? அச்சு அசலாக சிம்மா அண்ணா மாதிரியே இருக்கான்” என்று மகிழ் ஆச்சர்யமாக பார்த்தான்.

நட்ச்சா, “இதுக்கு என்ன அர்த்தம்?” தெரியாதது போல் உதிரன் கேட்க, நட்சத்திரா தன் பெற்றோரை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.

நல்லா கேளுங்க மச்சான். நாங்க கேட்டது உறவால ஒன்று போல் இருக்கோமாம். “கதை அளக்குறா” என்று சிம்மா கோபமாக கூற, மாமா அதான் உண்மை.

“என்ன உண்மை? என்ன நடந்ததுன்னு சொன்னால் தான் என்னவாம்?” சிம்மா சீற்றமாக, என்னோட புருசன் நரசிம்மா தான் என்றாள்.

சிம்மா நட்சத்திராவை அறைத்தான். அம்மா..என்று அர்சு அவளிடம் தாவ, கண்ணா..உன்னோட அம்மாவை பேச சொல்லு. நீ கேட்டாவது உண்மையை சொல்றாலான்னு பார்க்கலாம் என்று சிம்மா வேண்டுமென்றே கூற, அதுக்காக “எங்க புள்ளைய எங்க முன்னாடியே அடிக்கிற?” என்று அம்சவள்ளி கோபமாக சிம்மா சட்டையை பிடித்தார்.

“அம்மா” என்று நட்சத்திரா கத்த, எல்லாரும் அவளை பார்த்தனர்.

கையை எடும்மா. உனக்கு உன் புருசன் உசத்தின்னா எனக்கு என் மாமா உசத்தி. “நீங்க அதிகாரம் பண்ண இது உங்க ஊரு இல்லை” என்றாள்.

நட்சா, “என்ன சொன்ன?” உதிரன் கேட்க, ஆமா நான் கஷ்டப்படும் போதெல்லாம் என் மாமா தான துணைக்கு இருக்கார். இப்ப அம்மா எனக்காக அடித்தாரே தவிர என்னை வெகுநாட்களுக்கு பின் பார்த்த மகிழ்ச்சியே தெரியலையே?

சிம்மா புன்னகையுடன், எஸ். இதுக்கு தான் அடிச்சேன் ஸ்டார். உன்னோட புருசன் எவனாக வேண்டுமானாலும் இருக்கட்டும். “இனி அவன் உன் புருசன்னு பெயரை மட்டும் உச்சரிக்காத. அவன் தான் இல்லையே?”

சோ, “என்னை கல்யாணம் பண்ணிக்கோ” என்று சிம்மா நட்சத்திரா கையை பிடிக்க, அவனை முறைத்த நட்சத்திரா “வா அர்சு” என்று மகனை அழைத்தாள்.

“அம்மா, அப்பா கல்யாணம் பண்ணி எப்போதும் கூடவே இருப்பாங்களாமே!” என்னோட ப்ரெண்டு நரேன் சொன்னான்ம்மா.

“நீங்களும் அப்பாவும் கல்யாணம் பண்ணிக்கலையா? எப்ப பண்ணிப்பீங்க? அப்பா இனிமே நம்ம கூடவே இருக்கட்டுமா?” அர்சு மழலைக்குரலில் அனைவரையும் ஈர்க்க, “உனக்கு யாரு இதெல்லாம் பேச சொல்லி கொடுக்குறது?” சிம்மா அருகே வந்து நட்சத்திரா கோபமாக அவனை அரட்ட.. ஏஞ்சல் அங்கிள் தான் என்றான்.

“அங்கிளா?” மகிழன் உதிரனை பார்க்க, நான் இப்ப தான்டா இவனை பார்க்கிறேன்.

அவன் உன்னை சொல்லலை. “டேய் சுபி இருக்கியா? எல்லாம் உன் வேலையா?” ஆகாயத்தை கண்களால் துலாவினாள் நட்சத்திரா.

அம்மா..அங்கிள் அங்க இல்லை. உன் பக்கத்துல தான் இருக்காரு.

என் கண்ணுல பட்ட செத்த..நட்சத்திரா சொல்ல, “அவன் தான் செத்துட்டானே!” சிம்மா சொல்ல, என்னது என்று மகிழ் பதறி உதிரனுடன் ஒட்டி நின்றான்.

மகிழ், அவன் ஒன்றும் செய்யமாட்டான். பயப்படாத..ப்ரோ நல்ல வேலை பாக்குறீங்க. எனக்கு பதிலா என் நட்சாவுடன் கூடவே இருந்ததற்கு உதிரன் புன்னகைத்தான்.

“யார்கிட்ட பேசுற?” அம்சவள்ளி நடுக்கத்துடன், “அதுக்குள்ள இங்க வந்துட்டானா?” என்று கேட்டார்.

“உங்களுக்கும் அவனை தெரியுமா?” நட்சத்திரா கேட்க, ரித்துவுடன் சுபி பேசுவதை பார்த்திருக்கேன். “நிஷா கூறி தான் தெரியும்” என்றான் உதிரன்.

“அவன் எதுக்கு ரித்திகாவுடன் பேசுறான்?” சிம்மாவை பார்த்தான் உதிரன்.

தெரியல. எப்படியோ அவன் சரியான நேரத்துல உதவி இருக்கான் என்ற சிம்மாவின் எண்ணத்தில் அன்றைய சுபிதன் ஆன்மாவின் பேச்சு மீண்டது. அவனது வேலைகளை முடிக்கணும் என்றான். நம்மை சுற்றி யாருடனாவது இருக்கிறான். அந்த ராட்சத உருவம். சுபி எதையோ மறைக்கிறான் என்று சிம்மாவை சிந்திக்க வைத்தது.

அண்ணா..மகிழ் சிம்மாவின் கரங்களில் தட்ட, ம்ம்..என்று எல்லாரையும் பார்த்தான். அவனை தான் அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“பையனை நான் தூக்கலாமா?” அம்சவள்ளி கேட்க, அம்மா..”இவங்க யாரு? அன்னப்பாட்டி மாதிரியா?” அவன் கேட்க, இல்ல அர்சு..இவங்க யாருன்னு அம்மாவுக்கு தெரியல. வீடு மாறி வந்துட்டாங்களாம்.

வா, “நாம போகலாம்” என்று சிம்மாவிடமிருந்து அர்சுவை நட்சத்திரா தூக்க வந்த சமயம், பிள்ளையை நகர்த்தி சிம்மா நட்சத்திரா தோளில் கை போட்டு, “கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்க, சுற்றி இருந்த எல்லா மரத்திலிருந்தும் பூக்கள் உதிர்ந்தது. நட்சத்திரா புன்னகையுடன் அதை பார்க்க, அனைவர் மனமும் லேசானதை போல் இருந்தது.

புன்னகையுடன் பூக்கள் உதிர்வதை ரசித்துக் கொண்டிருந்த நட்சத்திராவின் பூவிதழ்களில் சிம்மா அவனது தடித்த அதிரங்களால் மென்முத்தம் பதித்து நகர, “மாமா..”என்று அவள் சிணுங்கினாள்.

எல்லாரும் திகைக்க, நட்சத்திரா சிம்மாவை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கோ. இல்லை..மானத்தை வாங்கிடுவான் என்று மாறன் அவர்களிடம் வந்தான்.

டேய், “உன்னை மண்டபத்துல எல்லாருக்கும் துணைக்கு தான இருக்க சொன்னேன். நீ இங்க என்ன பண்ற?” சிம்மா கோபமாக கேட்டான்.

அவங்க வீட்டு பசங்க எல்லாரும் இருக்காங்க சிம்மா. யாருக்கும் ஏதும் ஆகாது.

இல்ல மாறா, சுபி நம்மிடம் எதையோ மறைக்கிறான். சரியில்லை. ஏதோ தப்பா நடக்கப் போகுது..

ஆமா மாமா, நடப்பதெல்லாமே மிருவோட திருமணத்தை பாதிக்கும் படி இருக்கு. ரித்துவை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டா. அவளுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு ரொம்ப பயமா இருக்கு என்றாள் நட்சத்திரா.

“யாருக்கு திருமணம்?” உதிரன் கேட்க, மிருவுக்கு தான் அண்ணா.

“அவளுக்கா? சுபி தான் பிரச்சனைக்கு காரணமா?” உதிரன் கேட்க, இல்ல மச்சான்..சுபி தான் மிருவை பாதுகாக்கிறான். “இன்று கூட” என்று சிம்மா நட்சத்திராவை பார்த்தான்.

சுபி, “நல்லா தான இருக்க?” நட்சத்திரா கண்ணீருடன் கேட்க, தெரு விளக்கு ஒளிர்ந்து ஒளிர்ந்து அடங்கியது. ஆச்சர்யமாக மகிழன் பார்த்தான்.

அண்ணி, அந்த ஆவி யாரையும் ஏதும் செய்யாதுல்ல..

இல்ல, சுபி நம்ம அர்சு கண்ணிற்கு நன்றாக தெரிவான். அர்சு பிறந்ததிலிருந்து சுபி என்னுடனும் மிருவுடனும் பாதுக்காப்பாக இருந்திருக்கான் என்று விரக்தியுடன் நடந்தாள்.

அம்மாடி..அம்சவள்ளி அழைக்க, மாமா..சீக்கிரம் வாங்க. காலையில மிரு மேரேஜ் பங்சன் வேலையை பார்க்கணும்.

நட்சா, அத்தை மாமா இறந்திருக்காங்க. “நீ எப்படி?”

அண்ணா, வேலைக்காக மட்டும் தான். முடிச்சிட்டு வந்துடுறேன் என்று சிம்மாவை பார்த்து, மாமா விக்ரமுடன் சண்டை போடாம ஒத்துமையா இருந்தா மது கேஸ் வேகமா முடிஞ்சிரும்.

“உனக்கு அவளை பற்றி என்னவெல்லாம் தெரியும்?” சிம்மா கேட்டான்.

விசாரிக்கிற நேரத்தை பாரு. எல்லாரும் போய் தூங்குங்கடா என்று நட்சத்திரா நகர்ந்தாள்.

சரி, “நாளைக்கு நாமும் கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டுக் கொண்டே அர்சுவுடன் அவள் பின் சிம்மா பின் தொடர்ந்தான்.

கிளம்புங்க. எங்களை தொந்தரவு செய்யாதீங்க என்று உதிரன் மகிழன் கரங்களை பிடித்து நடக்க, “நில்லு எங்களை மன்னிச்சிருங்க” என்று புகழேந்தி கூறி விட்டு காரினுள் ஏறி. அம்சா..அழைத்தார். அம்சவள்ளியும் கிளம்ப கார் விரைந்தது.

மகிழன் தன் உதிரன் மாமாவின் கரங்களை விடுத்து அவனை அணைத்துக் கொண்டான்.

“என்னாச்சுடா?”

“தேங்க்ஸ் மாமா”. அக்கா கோபம் சீக்கிரமே போயிடும். அவ பேசிடுவா. வருத்தப்படாதீங்க என்று பேசிக் கொண்டே வீட்டிற்கு சென்றனர்.

அவர்கள் உள்ளே நுழைய, சிம்மா மார்பில் அர்சு படுத்திருந்தான்.

அப்பா, “இவங்கள எப்படி கூப்பிடணும்?” அர்சு கேட்க, உதிரன் கையை நீட்ட அர்சு சிம்மாவை பார்த்தான்.

உன்னோட மாமா தங்கம். உன்னோட அம்மாவோட அண்ணன். அவன் உனக்கு சித்தப்பா என்றான் மகிழனை பார்த்து.

“அண்ணா” என்று அவன் சிம்மாவை அணைக்க, தள்ளிப் போ. என்னோட அப்பாவை தொடாத என்று மகிழனை தள்ளினான் அர்சு.

சிம்மா, “அவன் பெயர் அர்சுவா?”

அர்சலன். உங்க தங்கச்சி தான் வச்சிருக்கா.

“என்னது அர்சலனா?” அன்று பேசியதை அண்ணி கேட்டு உங்களுக்காக தான் வச்சிருக்காங்க போல அண்ணா மகிழன் கேட்க, அவள் மனம் முன் போலில்லை. நடந்த சில விசயங்களை மறந்துட்டா என்று சிம்மா உதிரனை பார்த்தான்.

சிம்மா..

ஆமா மச்சான். அவ புருசன்னு சொன்னாலே அவன் பெயர் நரசிம்மன் இல்லை. “கோகுல்” என்று சிம்மா விசயத்தை சொன்னான்.

கோகுலா? யாருப்பா? அர்சலன் கேட்க, பின் தலையை தட்டிக் கொண்ட சிம்மா..”சும்மா சொன்னேன்ய்யா” என்று அர்சுவிடம் கூறி “மாமாவிடம் போறீயா?” எனக் கேட்டான்.

அர்சு உதிரனை பார்த்துக் கொண்டே இறங்கினான். பின் அவனுடன் ஒன்றி விட்டான். மகிழ் அப்பாவோட போய் படுத்துக்கோ என்று சிம்மா நட்சத்திராவை தேடி சென்றான்.

உதிரன் அறைக்கு அர்சுவை தூக்கி சென்று அவனை தன் மார்பில் போட்டு படுத்து உறங்கினான்.

நட்சத்திரா அழுது கொண்டே படுத்திருந்தாள். எல்லாரும் நன்றாக இருப்பது போல் வெளியே காட்டிக் கொண்டாலும் அனைவரும் ரித்திகாவின் பெற்றோர் இறந்த துயரில் இருந்தனர்.

சிம்மா அழும் அவனது ஸ்டாரை பார்த்துக் கொண்டு அவளருகே வந்து படுத்தான். நட்சத்திரா பயந்து திரும்பி சிம்மாவை பார்க்க, அவனுடைய மீளா துயரை கண்ணில் கண்டவளோ “மாமா” என உருப்போட்டு அவன் கன்னத்தை தொட்டாள்.

சிம்மா நட்சத்திராவின் கண்ணீரை துடைத்து விட்டு, “ஸ்டார் உன்னை கட்டிக்கவா” என்று அவள் கையை பிடித்தான். நட்சத்திரா அழுது கொண்டு அவளாகவே சிம்மாவின் மார்பில் புதைந்து அணைத்துக் கொண்டாள். சிம்மாவும் அவளை இறுக தழுவிக் கொண்டான். இருவர் கண்ணீருடன் அந்த வருணனும் அவ்விடத்தை பிடிக்க அக்கார்கால மேகமோ நாளை விடியலும் உங்கள் வாழ்வில் இடியுடன் கூடிய மழையாகப் போகிறது என அடித்து வாங்கியது.

திருமணம் எட்டு மணியளவில் குறிக்கப்பட அதிகாலை எழுந்த தமிழினியனின் குடும்பம் மிருளாலினி அறைக்கு வந்து அவள் குளித்த பின் பட்டுப்புடவையுடன் அவளை மணமேடையில் அமர்த்தி பூஜை செய்ய ஆரம்பித்தனர். வீட்டு ஆண், பெண், குட்டீஸ் அனைவரும் இருந்தனர்.

மிருளாலினியை எழுப்பிய அதே சமயம் நட்சத்திராவின் அலைபேசி அழைக்க, சிம்மா விழித்து அவளையும் விழிக்க வைத்தான்.

“இந்த நேரத்துல யாரு?” என சிம்மாவிடமிருந்து விலகி அமர்ந்தாள். சிம்மா பின்னிருந்து அவளை அணைக்க, “சும்மா இருங்க மாமா” என்று தூக்கக்கலக்கத்தில் எடுத்து அந்த பக்க விசயம் அறியவும் தூக்கி வாரி போட்டது நட்சத்திராவிற்கு.

“என்ன ஆச்சு? எப்படி? நீ நேற்றிலிருந்தே சரியில்லை?” சொல்லு தியா என்று நட்சத்திரா கேட்க, தன் தாடியை சொரிந்த வண்ணம் சிம்மா சிந்தித்தான்.

தியா அழுது கொண்டு, “எனக்கு என்ன செய்யணுன்னு தெரியல மேம்” என்று அஜய் தியாவை பழிவாங்க அவள் அப்பா மீது பழி சுமத்தி கம்பெனியை விட்டு விரட்டியதை கூறி அழுதாள்.

“என்ன சொல்ற? நேற்றே சொல்லி இருக்கலாம்ல்ல?” சரி..இரு வாரோம். அழாத..

சீக்கிரம் வாங்க. என்னால முடியல என்று கதறி அழும் சத்தம் கேட்க, கண்கலங்க அலைபேசியை அணைத்து விட்டு “மாமா..சட்டையை போடுங்க. தியா அப்பா ஹார்ட் அட்டாக்கில் இறந்துட்டாராம்”. அவரை வீட்டுக்கு கொண்டு போறாளாம்.

“தியா அப்பாவா? திடீர்ன்னா?”

மாமா, முதல்ல..அந்த ஏழரை அஜய்யை பார்க்கணும்.

“அவனை எதுக்கு பார்க்கணும்?”

சொல்றேன் மாமா. வா..சீக்கிரம் என்று அவனிடம் பைக்கை எடுத்துட்டு வா. அவள் வீட்டில் தான் அவனுடைய இரு வாகனமும் கடந்த இரு நாட்களாக இருக்கு. அவன் வெளியே சென்றான்.

கையில் ஓர் பைல்லை எடுத்து “சீக்கிரம் மாமா” என்று சொல்லிக் கொண்டே சிம்மாவின் பைக்கில் நட்சத்திரா ஏறினாள். அவன் பைக்கை விரட்டினான். நேராக அஜய் வீட்டிற்கு தான் வந்தனர்.

வாட்ச்மேனிடம் சிம்மா பேச, நட்சத்திரா அவள் பாட்டுக்கு வேகமாக உள்ளே நுழைந்து பெல்லை அழுத்தினாள். கதவு திறந்தது தான் கத்த ஆரம்பித்தாள் நட்சத்திரா.

டேய் அஜய், “என்னடா பண்ணீட்டு இருக்க? கீழ வாடா” அவள் கத்த, அவன் அம்மா வந்து, “ஏய் எதுக்கு கத்துற?” என்று சீறினார்.

வாய மூடுங்க. பிள்ளைய வளர்த்து வச்சிருக்கீங்க பாரு என்று அவள் பேச, அவன் அம்மா நட்சத்திராவிடம் கையை ஓங்கினார்.

“யார் மேல கையை வைக்கப் பாக்குறீங்க?” சிம்மராஜன் சிங்கராஜனாக கர்ஜித்தான்.

அவன் அப்பா வந்து அவளை அமைதிப்படுத்த முயல, கண்களை கசக்கிக் கொண்டு அஜய் கீழே வந்து நட்சத்திராவை பார்த்து, “ஹாய்..ப்யூட்டி” என்றான்.

சீற்றமுடன் அவனிடம் சென்று நட்சத்திரா அழுது கொண்டே அவனை மாறி மாறி அடித்தாள்.

“எதுக்கு அடிக்கிற?” அவன் அவள் கையை பிடிக்க, “பாவி அநியாயமா தியா அப்பாவை கொன்னுட்டியேடா” என்று அவள் சொன்னதில் குடும்பமே அதிர்ந்தது.

நட்சத்திரா பார்த்து பேசு.

“உங்கிட்ட என்னடா பேச்சு?” நீ அவரை படுத்திய அவமானத்தில் அவர் கூனிகுறுகி ஹார்ட் அட்டாக் வந்து செத்துட்டார். பாவம் தியா. அவளுக்கு அப்பா மட்டும் தான். அவள் உறவினர்களும் சரியில்லை. அடிக்கடி சொல்லுவா..

ச்சீ..நீ என்ன தான் என் பின் சுற்றினாலும் நீ நல்லவன்னு தான் இந்த கான்ட்ராக்ட்டுக்கு சைன் செய்தேன் என்று அந்த பைல்லை திறந்து அதிலிருந்த காகிதத்தை கிழித்து போட்டு, இனி உங்க இல்ல நிகழ்ச்சியானாலும் கம்பெனி நிகழ்ச்சியானாலும் நாங்க அதை ஏத்துக்க மாட்டோம்.

“சிக்னல்ல நடந்த அந்த சின்ன விசயத்துக்கா இப்படி ஒரு மனுசன் உயிரை விடும்படி செஞ்சுட்டியே?” என்று அழுதாள்.

ஏம்மா, “கம்பெனி ஆளா? யாரம்மா சொல்ற?” அஜய் அப்பா கேட்க, தியா அப்பாவின் பெயரை நட்சத்திரா கூறிய மறுநிமிடம் அஜய்யின் அப்பா அவனை அறைந்திருந்தார்.

“அவர் கைசுத்தம் தெரியுமா உனக்கு?” அவருக்கு மேனேஜர் போஸ்ட்டிங் முப்பது வருசமா நேர்மையான முறையில் உழைச்சி வாங்கி இருக்கார். “அவரையாடா அவமானப்படுத்துன?” என்று அஜய் அப்பா மேலும் அவனை அடித்தார்.

“மன்னிச்சிரும்மா” அவர் சொல்ல, எனக்கு உங்க சாரி தேவையில்லை. உங்க பையன் அவன் பழியை தீர்த்துக்கிட்டான். ஆனால் யாருமில்லாமல் அந்த பொண்ணு பாதுக்காப்பா வாழணும். “எவ்வளவு கஷ்டம் தெரியுமா உங்களுக்கு?” ச்சே..என்று நட்சத்திரா..மாமா..சீக்கிரம் அவ வீட்டுக்கு போகணும். அவ மட்டும் தான் தனியா இருப்பா.

“உனக்கு தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி ஏற்பாடு பண்றீயா?” என கேட்டுக் கொண்டே சிம்மாவிடம் பேசிக் கொண்டே அவனுடன் சென்றாள்.

நேற்று இரவு தியா பேசிய அனைத்தும் அஜய்யின் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. டாட், நான் இப்படி ஆகும்ன்னு நினைக்கலை என்று அஜய் அழுதான்.

“எதுக்குடா இப்படி பண்ண? இந்த விசயம் வெளியே வந்தால் நம்ம எதிரிகளுக்கு கொண்டாட்டமாகிடுமே! என்ன செய்றது?” அவர் தலையில் கை வைத்து அமர்ந்தார்.

சில நிமிடங்களிலே எழுந்தவர், அஜய் “வா அந்த பொண்ணை பார்த்துட்டு வரலாம்” என்று அவர் எழுந்தார்.

“எதுக்கு அங்கெல்லாம் போறீங்க?” யாரும் போகக்கூடாது. ஆட்களை விட்டு பணம் கொடுத்திடலாம். அந்த பொண்ணு விசயத்தை வெளிய விடக் கூடாதுன்னா அதற்கும் சேர்த்து பணம் கொடுக்கலாம் என்றார் அஜய்யின் அம்மா.

மாம்..கண்டிப்பா அவ பணம் வாங்க மாட்டா. எல்லாத்தையும் பணத்தால வாங்க முடியாது என்று கத்தினான்.

இதுவரை அம்மா பேச்சை தட்டாத மகன் இன்று அவரை எதிர்த்து கத்தியதில் அவருக்கு சினம் மேலிட்டது. அவன் அப்பா அவனை அதிர்ந்து பார்த்தார்.

“என்ன டாட் பாக்குறீங்க? ஸ்டேட்டஸ் பார்க்கும் நான் அவரை பார்க்க வர எப்படி ஒத்துக் கொண்டேன்னா பாக்குறீங்களா?”

நேற்று அவள் கோபமாக சொன்னதும் இது தான். அவள் பேசும் போது அவள் அப்பா அவளுக்கு எவ்வளவு முக்கியம் என்று தெளிவாக தெரிந்தது. அவளுக்கு அம்மா இல்லைன்னு எனக்கு தெரியாது. நல்ல மனுசன் என்னால தான இறந்துட்டார். வாங்க பார்க்க போகலாம் என்றான்.

“வீட்டிலிருந்து கால் எடுத்து வெளிய வச்ச உன்னோட அம்மா உயிரோட இருக்க மாட்டேன்” என்று அஜய் அம்மா மிரட்ட, அவன் அப்பா நின்றார்.

டாட், “பேசுறவங்க பேச மட்டும் தான் செய்வாங்க. நட்சத்திராவை பார்த்திருக்கீங்கல்ல?” அவளை எனக்கு பிடித்த காரணமே அவளது உழைப்பு, அழகு தான். அவள் தனியாளாக தன் குழந்தையை வளர்க்க கஷ்டம் மட்டும் படலை. போராடி இருக்காள்.

நானும் அவள் பின் சென்று தொந்தரவு தான் செய்தேன். அவள் வீட்டில் ஆண் ஒருவர் இருந்தால் அதான் இப்பொழுது வந்தானே சிம்மராஜன் அவன் போல் யாராவது இருந்தால் அவளருகிலாவது செல்ல முடியுமா?

நட்சத்திராவின் பழைய நிலைக்கு தியா செல்லக் கூடாது. செல்லவும் விட மாட்டேன்.

“அதுக்கு நீ என்ன பண்ணப் போற?” அவன் அம்மா சினமுடன் கேட்க, தெரியாது. முதல்ல அவள் நிலை எப்படி இருக்குன்னு பார்த்துட்டு தான் முடிவெடுக்கணும் என்று அஜய்யும் அவன் அப்பாவும் கிளம்பினார்கள்.

“லோ கிளாஸ் பொண்ணுக்காக இவன் என்ன செய்யப் போகிறான்?” இப்பொழுதைக்கு இருக்கட்டும். நாளையோ இல்லை மறுநாளோ நான் அவளை சும்மா விட மாட்டேன் என மனதினுள் கருவினார் அஜய் அம்மா.

நட்சத்திராவை பார்த்த தியா, ஓடி வந்து அவளை அணைத்து அழுதாள். அவர்களை பார்த்துக் கொண்டே சிம்மா ஆட்களை ஏற்பாடு செய்தான். தியாவின் சொந்தபந்தங்கள் வந்திருந்தனர்.

அழுது களைத்து சோர்ந்து தியா அமர்ந்திருக்க அவளின் சித்தி ஒருபுறமும், அத்தை மறுபுறமும் அமர்ந்தனர்.

“இப்படி பிள்ளைய விட்டுட்டு போயிட்டியேடா” என்று அவள் அத்தை ஒப்பாரியை ஆரம்பிக்க, தியாவின் கையை பிடித்த அவள் சித்தி, “தியாம்மா சித்தி இருக்கேன்டா” என்று அவர் சொல்ல, அவள் அத்தை சித்தியை முறைத்துக் கொண்டு, “நீ அத்தை வீட்டுக்கு வந்திருடா” என்றார்.

இருவரும் வன்மமாய் முறைத்து அவள் மனஅழுத்தத்தை தூண்ட, அவளோ இருவரையும் ஆக்ரோசமாக தள்ளி விட்டு எனக்கு யாருமே வேண்டாம் என்று கதறினார். இதை தூரமிருந்த பார்த்த அஜய்யும் அவன் அப்பாவும் வருத்தமடைந்தனர்.

“என் பொண்டாட்டியவே தள்ளி விடுற? அநாத கழுத” என்று மாமா தியாவை அடிக்க வர, “அப்பா” என்று அவர் மகன் கத்தினான். ஆனாலும் அவர் அவனை கண்டுகொள்ளவில்லை.

அவர் கையை பிடித்து பின்னே திருகி முறித்த சிம்மராஜனோ, அந்த பொண்ணு மேல கைய வச்சீங்க. நடக்கிறதே வேற என்று மிரட்டினான். அவர் வலி பொறுக்க முடியாமல் கத்தினார்.

“யாருடா நீ?” அவள் அத்தை சிம்மாவை தள்ள, சித்தி அவர் எஸ். பி சிம்மராஜன். அவர் மேலவே கைய வச்சுட்டீங்க. போச்சு..போச்சு..என்று ஒருவன் கத்தினான். சிம்மா அவனை பார்க்க அவன் மறைந்து கொண்டான்.

தம்பி, “அவரை விடுங்க” என்று சொல்லவும் சிம்மா தியாவை பார்த்து, “என்ன சொல்ற தியா?” என்று கேட்டான்.

அவரை விட்ருங்க சார்.

சிம்மா அவரை தள்ளி விட்டு, “யார பார்த்து அநாதைன்னு சொல்றீங்க?” இனி அவ என்னோட தங்கை மாதிரி. புரியுதுல்ல. யாராவது தேவையில்லாம பண்ணீங்க. மறுநிமிடம் உங்க உசுறு உங்க உடம்புல இருக்காது.

மாமா, “எத்தனை பேர தங்கை தங்கைன்னு சொல்லுவ?” என்று மனதில் எண்ணியவாறு “என் முரட்டு சிம்மா” என்று செல்லமாக நினைத்தாள் நட்சத்திரா.

அஜய்யும், அவன் அப்பாவும் அங்கு வந்தனர். “இவரா?” என்று அஜய் அப்பாவை பார்த்து ஒருவன் வாயை பிளந்தான்.

நட்சத்திரா சினமுடன், “எதுக்கு வந்தீங்க?” என்று நீரோடையாக ஆர்பரித்தாள்.

“மேம்” என்று தியா கண்ணீருடன் இருவரையும் பார்த்தாள்.

அஜய் அப்பா அவளிடம் வந்து, “சாரிம்மா” என்றார். அவள் அமைதி காத்தாள். அவர் அவள் அப்பாவை பார்த்து விட்டு நகர, அஜய் அவருக்கு மாலை அணிவித்து அவளை பார்த்து பேச வந்தான். தியா நட்சத்திராவை பார்க்க, அஜய் அவனாகவே நகர்ந்து சென்றான்.

அஜய்யை பார்த்தவுடன் அவள் உள்ளம் குமுறியது. அவன் அவள் பெண்மையை நோகடித்து, அவள் அப்பாவை இறக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டான் என்று ஆத்திரம் பொங்க அவளது சிவந்த கண்களால் அவனை சுட்டெறித்தாள்.

சார், நீங்க.. சிம்மா தயங்க, இல்லப்பா..எல்லாம் முடியட்டும். இந்த பொண்ணு பாதுக்காப்பா இருக்கான்னு பார்த்துட்டு தான் போவோம் என்றார். சிம்மாவும் அஜய்யை கடுகடுத்த விழிகளால் முறைத்தெடுத்தான்.

சிம்மாவிற்கு அழைப்பு வர எடுத்த அவன், “அப்படியா?” நாங்க வாரோம் என்று அலைபேசியை அணைத்து விட்டு, நட்சத்திராவை தனியே அழைத்து ஏதோ சொன்னான். அவள் பதட்டமானாள்.

“இரு வாரேன்” என்று சிம்மா தியாவிடம் வந்து, நாங்க போயிட்டு வந்துடுறோம். அஜய் அப்பா இருக்கார் அவர் பார்த்துப்பார் என்றான்.

“அண்ணான்னு சொல்லீட்டு விட்டு போறீங்க?” என தியா கண்ணீர் வடிய கேட்டாள்.

மிருளாலினி, தமிழினியனுக்கு உயிர் போகும் விசயமாம். போகணும்டா என்று செல்லமாக அவளது தலையை கோதிய சிம்மா, அஜய் அப்பாவிடம் தியாவை பார்த்துக்க சொல்லி கிளம்பினான்.

செல்லும் இருவரையும் தியா ஏக்கமுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். பலர் வெளியே சென்றனர். ஆட்கள் வந்து அவருக்கு மரியாதை செலுத்தி விட்டு வந்தனர். அவளது சித்தி, அத்தை, அஜய் அப்பா, அஜய் மட்டும் இருந்தனர்.

திடீரென அவள் அத்தை ஒப்பாரியை ஆரம்பிக்க, கண்ணீருடன் அவள் அப்பாவை வைத்திருந்த பெட்டியில் சாய்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள் தியா.

சித்தியோ அவளிடம் வந்து, “கொஞ்சமா தண்ணீர் குடிம்மா” என்று தியாவிடம் கொடுக்க, அவள் அதை தட்டி விட்டு..”நீங்க யார் என்ன செய்தாலும் நான் யாருடனும் வர மாட்டேன்” என்று கத்தினான்.

எம்மா, “பிள்ளைய தனியா விடுங்கம்மா” என்று அஜய் அப்பா சத்தமிட்டார். அவர் கோபமாக அவளை முறைத்துக் கொண்டே வெளியே சென்று, திமிரு பிடித்தவள், அகங்காரி என திட்டினார். தியாவின் அமைதி உடைந்து அவள் அழுது கொண்டே இருந்தாள். அஜய்யால் அவள் அழுகையை பார்க்க முடியாமல் வெளியே சென்றான்.

சார், “உங்களுக்கு தியா நல்ல பழக்கமா?” தியா அத்தை மகன் அஜய்யிடம் கேட்டான்.

பேசுவோம்..அவ்வளவு தான் என்றான் அஜய்.

அவன் கையில் ஒரு காகிதத்தை திணித்து விட்டு அத்தெருவை தாண்டி சென்றான் அவன்.

அஜய் காகிதத்தை பிரித்து பார்க்க, அஜய்யிடம் பேச அழைத்திருந்தான். அஜய்யும் அவன் பின்னே சென்றான்.

சார், மாமாவை தூக்கிய பின் தியாவை விடுதியிலாவது சேர்த்து விட்ருங்க. அவ இங்க இருக்க வேண்டாம். அவளுக்கு இங்கே பாதுகாப்பு இருக்காது என்றான்.

“ஏன் பாதுகாப்பு இருக்காது? நீங்க யாராவது பார்த்துப்பீங்கல்ல?”

சார், அவ சித்தி அவளோட பணம், சொத்துக்காக அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக நினைக்கிறாங்க. என்னோட அம்மா என்னையும் அவளையும் கட்டி வைக்க தான் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக நினைக்கிறாங்க.

“கட்டி வைக்கவா? உனக்கு தியாவை பிடிக்காதா?” அஜய் கேட்க, பிடிக்கும் சார், ரொம்ப ரொம்ப பிடிக்கும். போன வருடம் அவளுக்கு நான் பிரப்போஸ் செய்திருந்தேன். அவ தான் ரிஜெக்ட் பண்ணீட்டா. அதான் அவளை விட்டு விலகி இருக்கேன். அதுக்காக மட்டுமல்ல..என் அம்மா பேச்சின் வீரியத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியாது.

எனக்கு இப்ப கூட அவள் மீது அத்தை பொண்ணுன்னு விருப்பம் தான். ஆனால் அவளுக்காக தான் பார்க்கிறேன்.

“அது எப்படி?” பிடிச்ச பொண்ணு. அம்மாவுக்காக காதலை விடுவது. “இது சரியா?”

சரி தான் சார். “அவளுக்கு என் மீது விருப்பம் இல்லையே?” அதை விட என் அம்மா படுத்தும் பாடு உங்களுக்கு தெரியாது.

என்னோட தியா பட்டென பேசினாலும் மனதளவில் மென்மையானவள். அவளுக்கு பிடிச்சவங்களுக்கு கஷ்டம்ன்னா தாங்கிக்கவே முடியாது. அவளுக்கு பிடிச்ச ஒரே நபர் அவள் அப்பா தான். அவளுடன் வேலை செய்யும் ஒருவன் தான் எங்களுடன் பள்ளியில் படித்தவன். அவன் பெயர் புழலரசன். அவனிடம் மட்டும் தான் நல்லா பேசுவா. அப்புறம் அவங்க மேம் நட்சத்திரா. அவளுக்கு அதிகமா பேச பிடிக்காது. ஆனால் மியூசிக் கேட்க ரொம்ப பிடிக்கும். நல்லா சமைப்பா. அவள் சமையல் சுவையாக இருக்கும் என்றான் அவன்.

அஜய்க்குள் அவளை பற்றி முழுதாக அறைந்து கொள்ளும் ஆவல் தோன்றியது. “வேற என்ன அவளை பற்றி தெரியும்?” என்று அஜய் அவனை மறந்து கேட்க, அவன் அஜய்யை ஒருமாதிரி பார்த்தான்.

சார், “உங்களுக்கு என்ன அவளை பிடிச்சிருக்கா?” பிடிச்சிருந்தா அவளை விட்ருங்க. அவளுக்கு பணக்காரவங்கன்னா பிடிக்காது. அவளோட அம்மா பணக்கார ஒரு பொண்ணால தான் இறந்தாங்க. அதிலிருந்து அவள் பணக்காரவங்கல்ல வெறுக்கிறாள். அதனால நீங்க விலகியே இருங்க சார். ப்ளீஸ் என்றான் அவன்.

“யாரால? என்னன்னு முழு விவரமும் தெரியுமா?” அஜய் கேட்க, “அவளுக்கே யாருன்னு அவ அப்பா சொல்ல” என்றான் அவன்.

வாங்க சார். போகலாம். யாரும் சந்தேகப்படப் போறாங்க என்று அவன் சொல்ல இருவரும் தியா வீட்டை நோக்கி நடந்தனர்.

சார், நீங்க முன்னாடி போங்க. என்னோட அம்மா பார்த்தா அவள தான் கஷ்டப்படுத்துவாங்க என்று அவன் நிற்க, அஜய் மட்டும் வீட்டிற்கு சென்றான்.

அதிகாலை எழுந்த ரித்திகா வெளியே வந்து சிம்மாவை தேடினாள். அவளுடன் வேலை செய்யும் பொண்ணின் அப்பா தவறிட்டாங்க என்று நட்சத்திரா எழுதி வைத்து தான் சென்றிருப்பாள். அதை பார்த்து மீண்டும் வருத்தமுடன் அமர்ந்தாள்.

பின் ஓர் அறைக்கதவை திறக்க, உதிரனும் அர்சுவும் உறங்குவதை பார்த்து வேகமாக நகர்ந்தாள். உதிரனை பார்க்க மனம் மகிழ்ச்சியானாலும் பிரணவ்வால் உருக்குலைந்த என்னால் மாமாவுடன் வாழ முடியாது என்று அவளாக எண்ணிக் கொண்டு, சமையலறைக்கு சென்று காபியை தயாரித்து, அன்னம், பரிதி இருக்கும் அறைக்கதவை மெதுவாக திறந்தாள். அவர்கள் விழித்து தான் இருந்தனர். இருவரும் அமைதியாக தனித்தனியாக அமர்ந்திருந்தனர்.

மனதில் உள்ள வேதனையை மறைத்து பெரியம்மா, பெரியப்பா..காபி என்று அவர்களிடம் புன்னகையுடன் சென்ற ரித்திகாவை தாளாத மனதுடன் பார்த்தனர் இருவரும்.

“என்னாச்சு பெரியப்பா?” காபி சாப்பிடுங்க என்றாள். அவர் கண்ணீருடன் வாங்கிக் கொள்ள, “அம்மாடி நீ ஒய்வெடுக்கலாம்ல்ல?”

தூங்கிக்கிட்டே இருந்தா வெயிட் போட்டிருவேன் என்று பேசி சமாளித்து அன்னத்திடமும் கொடுத்து விட்டு வெளியே வந்து வேகமாக மூச்செடுத்தாள். உதிரன் அறை திறந்திருப்பதை பார்க்காமல் அங்கேயே மடிந்து கண்ணீர் வடித்தாள்.

பின் அவளை அவளே தேற்றிக் கொண்டு, உதிரனுக்கும் எடுத்து சென்றாள். அவன் மார்பில் இருந்த அர்சு அவனருகே படுத்திருந்தான். உதிரன் சுவற்று பக்கம் திரும்பி இருந்தான்.

உதிரன் தோளை பற்ற வந்து கையை பின்னுக்கு இழுத்த ரித்திகா, “மாமா” என அழைத்தாள். அசைவே இல்லை. “மீண்டும் மாமா” என அழைத்தாள்.

எகிறி குதித்து கதவை தாழிட்டான் உதிரன்.

“மாமா” என்று அவள் பின் நகர்ந்தாள். உதிரன் அவள் கையிலிருந்ததை வாங்கி விட்டு அமர்ந்து அவளை பார்த்துக் கொண்டே பருக, அவள் கதவை திறக்க சென்றாள்.

“பேசணும்” என்றான் உதிரன்.

அ..அ..அப்..பு..றம் பேசலாம் என்று திக்கியவாறு நகர இருந்த ரித்திகாவை இழுத்து அவன் மடியில் அமர்த்தினான் உதிரன். கத்த வந்த அவள் வாயை மூடி விட்டு, பையன் தூங்குறான். சொல்றத கேளு. நாம கல்யாணம் பண்ணிக்கலாம் என்றான் உதிரன்.

அவன் மடியில் இருந்து அவள் எழ, நீ போன்னு சொன்னாலும் போக மாட்டேன். இனி உன்னையும் மகிழையும் நான் பார்த்துக்கிறேன். அழணும்ன்னா அழுதிரு. மனசுக்குள்ள வலியை ஏற்றாத..

“பேசீட்டீங்களா?” என்னால உங்கள கல்யாணம் பண்ணிக்க முடியாது. எங்களை பார்த்துக்க எங்களுக்கு தெரியும். உங்க வேலையை போய் பாருங்க.

“நான் அழுதாலும் அழவில்லைன்னாலும் நான் அனுபவித்த வேதனை இல்லை என்று ஆகி விடுமா?” ப்ளீஸ் என்னை தொந்தரவு செய்யாதீங்க.

சாரி ரித்து, தொந்தரவாக நீ என்னை எண்ணினாலும் பரவாயில்லை. எனக்கு நீ தான் வேணும்.

“நான் என்ன பொருளா?”

நீ பொருளில்லை. “என்னோட உயிர்” என்றான் உதிரன். ரித்திகா விரைந்து திரும்பிக் கொண்டாள். அவள் கண்ணீர் தரையில் பட்டது.

இதுவரை அடுத்தவங்களுக்காகவும் எனக்காகவும் வாழ்ந்துட்டேன். இனி நமக்காக நாம வாழணும். நமக்கான எல்லாமே உன் விருப்பம். வீடு, வாகனம், நான் என்னுடைய பழைய வேலையிலே சேரப் போகிறேன். ஆனால் இங்கே . நீ, நான், மகிழ், உனக்கு விருப்பம்ன்னா..பாப்பாவாக இருந்தாலும் சரி பையனாக இருந்தாலும் சரி. எனக்கு நீ வேணும். நீ தான் என் அருகே நான் சாகும் வரை இருக்கணும் என்றவுடன் அவனிடம் வந்து அவன் வாயை பொத்தினாள்.

“நீ தான போகணுன்னு நின்ன போக வேண்டியது தான?” உதிரன் கேட்க, அவள் கண்ணீர் மழையில் அவளை இழுத்து மீண்டும் அவன் மடியில் அமர வைத்தான் உதிரன்.

“என்னால இதுக்கு மேல யாரும் சாவதை பார்க்க முடியாது” என்று ரித்திகா அழுதாள்.

ஷ்..என்ற உதிரன் சத்தம் அவள் காதில் விழவேயில்லை. அர்சுவை அவன் பார்த்து விட்டு அவன் எழவில்லை என்றதும் பட்டென அவளது மென் இதழ்களில் அவன் இதழ்களை கோர்த்து அவளை தூக்கி வாகாக அமர்ந்தான். இருவர் இதழ்களும் உறவாட அவள் அழுகை மெதுமெதுவாக குறைந்தது.

முற்றிலும் அழுகை குறைய, “நாம என்ன செய்கிறோம்?” என்று உதிரனை விலக்கி அவள் நகர, சத்தம் கேட்டு பயந்து விட்டாள் ரித்திகா.

சுபிதனின் ஆன்மா சத்தம் ரித்திகாவிற்கு கேட்க பயந்து கீழே விழ சென்றவளை தூக்கினான் உதிரன்.

அண்ணா, “என்ன? என்ன?” என்று அவள் பதட்டத்தை பார்த்து அவளை கீழே இறக்கினான் உதிரன்.

மிருவுக்கு உங்க உதவி வேணும். நீ அவளுக்கு உதவும் நேரம் வந்து விட்டது. நீ சொன்னேல்ல அவளை பார்த்துக்கிறேன்னு. இப்ப அவளுக்கும் அவள் திருமணம் செய்யப் போறவனுக்கும் ஆபத்து என்றது சுபியின் ஆன்மா.

அண்ணா, “நான் இப்ப என்ன பண்றது? இப்ப என்ன பிரச்சனை தெளிவா சொல்லுங்க?”

சொல்ல நேரமில்லை ரித்து. மண்டபம் பக்கத்துல தான் இருக்கு. போ..உன்னோட மாமாவையும் அழைச்சிட்டு போ. மண்டபம் இருக்கும் முற்றத்திற்கு நீங்க ஐந்து நிமிடத்தில் வரணும். சீக்கிரம் வா என்று சொல்லி விட்டு சுபிதனின் ஆன்மா சென்றது.

“மாமா..மாமா” ரித்திகா பதற, “முதல்ல வெளிய வா” என்று உதிரன் அவளை வெளியே அழைத்து செல்ல, மகிழன் வந்தான்.

மகிழ், “நீ அர்சுவை பார்த்துக்கோ” என்ற ரித்திகா வேகமாக உதிரனை இழுத்து வெளியே சென்றாள். இருவரும் சுபிதன் சொன்ன இடத்திற்கு வந்தனர்.

மிருளாலினி கழுத்தில் இருந்த தாலியை கழற்றியவுடன் வந்தது அந்த ராட்சத உருவம். “அப்படியென்றால் அந்த ராட்சத உருவம் சுபி வீட்டில் வைத்து அழியவில்லையா? எதற்காக மிருளாலினி- தமிழினியன் வாழ்க்கையில் வருகின்றது?”

வாருங்கள் அடுத்த எபியில் பார்க்கலாம்.