அத்தியாயம் 18

விக்ரம் பட்டென எழுந்து அவனது துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டு, அருகே இருந்து அறைக்குள் சென்றான். அங்கே யாருமில்லை..என்றதும் அவன் வெளியே வர, அனைவரும் புரியாமல் விழித்தனர். ஆனால் அவனுடைய அப்பா, சிம்மா இருவருக்கும் புரிந்தது. மற்ற இருவருமே துப்பாக்கியை எடுக்க, தோட்டா ஒன்று மிருளாலினியை நோக்கி வந்தது.

விக்ரம் அவளை தள்ளி விட்டு அவனும் விழுந்தான். அனைவரும் பதற, “எல்லாரும் அந்த அறைக்கு போங்க” என கத்தினான் விக்ரம்.

எல்லாரையும் ஆண்கள் உள்ளே அனுப்ப, விக்ரம் உள்ளே சென்று சன்னலை அடைத்து விட்டு, யாரும் வெளியே வராதீங்க என்று கதவை அடைத்து விட்டு வெளியே வந்தான்.

வெளியே துப்பாக்கி சத்தம் காதை கிழித்தது. பசங்களையும் சிம்மா உள்ளே அனுப்ப, தமிழினியனின் மூத்த தம்பி ரகசியன் மட்டும் கையில் துப்பாக்கியுடன் வர, “உன்னிடம் எப்படி?” சிம்மா கேட்டான்.

லைசன்ஸ் இருக்கு. கவலைப்படாதீங்க என்றான் அவன். பின் மேல் அறையிலிருந்து வந்த ஆட்களை துப்பாக்கி முனை கொண்டு பிடிக்க சென்றனர். ஆனால் அவர்கள் தப்பினர். மூவர் மட்டும் இருக்க, “சரணடைந்து விடுங்கடா” விக்ரம் சத்தமிட, ஒருவன் மட்டும் பயங்கரமாக சிரித்தான்.

எஸ். பி சார், உங்க குடும்பம் எங்க கையில இருக்கே. சரியா பண்ணி இருக்கோம்ல்ல டி.ஐ.ஜி சார் என்றான் அவன். நால்வரும் பார்த்துக் கொள்ள, சதாசிவத்தின் பொண்ணு ரசிகாவையும், அவர் மனைவி வனஜாவையும் துப்பாக்கி முனையில் வைத்து இழுத்து வந்தனர்.

ரசிகா மயக்கத்தில் இருக்க, மனைவி மட்டும் கோபமுடன் விக்ரமை பார்த்தார். அவர் தலையில் அடிபட்டிருந்தது.

அம்மா..என்று மனதில் சொன்னவன் தன் தங்கை மயங்கி இருப்பதை பார்த்து வெறியானான் விக்ரம்.

துப்பாக்கியை கீழே போடச் சொல்லி அவர்கள் மிரட்டினார்கள். மூவரும் போட்டு விட, ரகசியன் மட்டும் துப்பாக்கியுடன் நின்றான்.

“கீழ போடுறியா? இல்லையா?” அவன் மிரட்ட, தாராளமா சுட்டுக்கோ. “அவங்க எனக்கு உறவா என்ன?” இவங்க யாருன்னே எனக்கு தெரியாது. எனக்கு என்னோட குடும்பம் பத்திரமா இருக்கணும். அவ்வளவு தான். நீ இவங்க கூட்டிட்டு வெளிய போ என்று மேல் நோக்கி சுட்டான்.

அவர்கள் மிரண்டு அவனை பார்த்து விட்டு, நான் சுட்டுருவேன்..என்று ரசிகா நெற்றியில் துப்பாக்கியை நீட்ட, “நீ என்ன சுடுறது நானே சுடுறேன்” என்று ரகசியன் ரசிகாவை சுட்டான்.

மூவரும் கத்தினர். விக்ரம் அவனை அடிக்க செல்ல, டேய் இவனுக கிட்ட மாட்டுனா. நம்ம பாஸ் நம்மை கொன்றுவார். வாங்கடா என்று அவர்கள் எல்லாரும் ஓட, அனைவரும் ரசிகாவிடம் வந்தனர்.

அவள் எழுந்து அமர்ந்தாள். மீண்டும் தோட்டா அவளை நோக்கி வர, இடையே வந்தான் விக்ரம்.

அண்ணா..என்று அவள் சத்தமிட்டு மயங்கினாள். ரகசியன் ரசிகா ஆடையையும் அவள் விழித்து தான் இருக்கிறாள் என முன்னதாகவே கண்டுகொண்டான். அதனால் அவள் கை காட்டிய இடத்தை சுட்டான். இருவரும் விழியால் பேசி செய்திருப்பர்.

விக்ரமிற்கு கையில் அடிபட்டது. சிம்மா அவனது சட்டையை விலக்கி பார்க்க, அவன் கையில் தோட்டா இருப்பதை பார்த்து, உன் அண்ணாவை வரச் சொல்லு என்றான் சிம்மா.

ரகசியன் சென்று கதவை திறந்து விட அனைவரும் பதட்டமுடன் வந்தனர். ஆனால் வனஜா கோபமாக விக்ரமிடம் வந்து அவனை அறைந்தார்.

வனா..சதாசிவம் கத்தினார்.

எல்லாமே இவனால் தான். இவன் வந்த நாளிலிருந்து நிம்மதியே இல்லை. அதான் போனேல்ல. மொத்தமாக போய் தொலைய வேண்டியது தான். “எதுக்கு எங்க உயிரை வாங்குற?” என்று அவருக்கு அவனை பிடிக்காததை தெளிவாக காட்டினார்.

சிம்மா கோபமாக “நிறுத்துங்க” என கத்தி விட்டு விக்ரமின் கையை பிடிக்க, விக்ரம் அவன் கையை தட்டி விட்டு வேகமாக கண்ணீருடனும் அவமானத்துடனும் கீழே இறங்கி வந்தான்.

ஏம்மா, “நீ பெத்த பிள்ளையா இருந்தா இப்படி பிள்ளைக்கு அடிபட்ட சமயத்தில் பேசுவியா?” என்று அன்னம் சத்தமிட்டார். விக்ரம் நின்று அவரை பார்த்தான். டி.ஐ.ஜிக்கு கஷ்டமானது.

“நான் அவனை என்ன செய்தால் உனக்கென்ன?” வனஜா கேட்க, “தவமிருந்து பெற்றால் தான உனக்கு பிள்ளையின் அருமை தெரியும்” அன்னம் நேரடியாகவே வெளுத்து வாங்கினார்.

“ஏதோ உன்னோட பிள்ளையை கஷ்டப்படுத்துற மாதிரி பேசுற?” வனஜா கேட்க, “ஆமான்னு வச்சுக்கோடி” என்று அன்னம் கோபமாக கூறி விட்டு, விக்ரமின் அடிபடாத கையை பிடித்து அழைத்தார். அவன் திரும்பி, வனஜா, சதாசிவத்தை பார்த்தான்.

அம்மா, “நீ மனுசியா?” வீட்ல தான் அவனை கஷ்டப்படுத்துறன்னு அவன் வரவே மாட்டேங்கிறான். அவன் எனக்காக தான குண்டடி வாங்கி இருக்கான். “உனக்கு கொஞ்சம் கூட பதட்டம் இல்லையா?” ச்சே..மகனாக இல்லைன்னாலும் அவனை மனுசனா பார்த்திருக்கலாம் என்று ரசிகா வனஜாவை திட்டி விட்டு, விக்ரமை நோக்கி செல்ல சதாசிவமும் அவள் பின் வந்தார்.

நில்லுங்க. “உங்கள் இருவருக்கும் அவன் முக்கியமா? நான் முக்கியமா?” என்று வனஜா கோபமாக கேட்க, “எனக்கு என்னோட அண்ணன் தான் முக்கியம்” என்று ரசிகா முன்னேற,

அவன் உன் இரத்த சொந்தமுள்ள அண்ணன் இல்லை.

நல்லா தெரியும். ஆனால் சிறு வயதிலிருந்து நான் சேர்ந்து வளர்ந்த அண்ணன் என்று ரசிகா கோபாக செல்ல, வேண்டாம் ரசி. அவங்களோட வீட்டுக்கு போ என்றான் விக்ரம்.

முதல்ல வாப்பா..என்று அன்னம் ஓரிடத்தில் அமர வைத்தார். வேல்விழியும் அவர்களின் வீட்டாரும் அவனிடம் வந்தனர். ரகசியனுக்கு அடுத்தவனான திலீப் சில மருந்து பொருட்களை எடுத்து வந்து தோட்டாவை எடுத்து விட்டு மருந்திட்டு கட்டு போட்டு விட்டான்.

வனஜா தன் கணவனை இழுத்து செல்ல, ஒரு நிமிடம் என்ற மிருளாலினி…சார், “எங்க பங்சனுக்கு குடும்பத்தோட வாங்க..”என்று அவள் அப்பாவை பார்க்க, அவர் கார்ட்டை நீட்டி அழைப்பு விடுக்க, வனஜா மேலும் கோபமாக சென்றார்.

“ஆன்ட்டி உங்க பையனை நாங்க பார்த்துக்கிறோம். வேகமா நடக்காதீங்க. வயதாகிடுச்சுல்ல விழுந்திடுவீங்க” என்று மேலும் வெறுப்பேற்றினாள் சுவாதி. வனஜா திரும்பி அவளை பார்த்து விட்டு சென்றார். எல்லாரும் அவளை முறைத்து பார்த்தனர்.

ரசிகா கண்ணீருடன் விக்ரம் அருகே வந்து, சுவாதியை பார்த்து, “நீ திருந்தவே மாட்டியாடி” என்றாள்.

உன்னோட அம்மா கொஞ்சம் ஓவரா போனாங்கல்லா. அதான் நானும் கொஞ்சம் ஓவரா பேசினேன்.

உன்னோட வாயிருக்கே. “உன் மாமியார்கிட்ட நல்லா வாங்கிக்க போற” என்று அவள் அம்மா சுவாதியை திட்ட, அம்மா நீ கவலைப்படாத. என்னோட மாமியாவுக்கே நான் டஃப் கொடுப்பேன். யாரா இருந்தாலும் இந்த சுவாதிக்கிட்ட வாலாட்ட முடியாது, நறுக்கிடுவேன் என்றாள் சுவாதி. விக்ரம் வலியுடன் அவளை பார்த்தான்.

ஆமா, உங்கள் இருவருக்கும் ஏற்கனவே தெரியுமா? தமிழ் கேட்க, ஐந்து வருட நட்பாச்சே..என்று சுவாதி ரசிகா கழுத்தில் கையை போட்டு இறுக்கினாள்.

கொன்னுடாதடி. அப்புறம் என் அண்ணா உன்னை உள்ள தள்ளிடுவான்.

இந்த கையை வச்சுட்டு உன்னோட அண்ணா அவர் வேலையை முதல்ல சரியா பார்க்கட்டும்.

அண்ணி, இனி இந்த சார் நம்மை தொந்தரவு செய்ய மாட்டார். வாங்க நாம பங்சனுக்கு தயாராகுவோம் என்று மிருளாலினியை சுவாதி அழைத்தாள்.

சுவா..உனக்கு அப்படின்னா விக்ரம் சாரோட அம்மாவை தெரியுமா? அண்ணன் கேட்க, இருவருக்கும் ஏகப் பொருத்தம் என்றாள் ரசிகா.

“பொருத்தமா?”

ஆமா, இவங்க இருவரும் பேச ஆரம்பித்தால் அந்த இடத்துல ஐந்து நிமிடத்திற்கு மேல் நம்மால இருக்க முடியாது. ஒரே கலேபரமாக தான் இருக்கும் என்று ரசிகா தன் அண்ணனை பார்த்து, “நானும் இன்று உன்னோட இருந்துக்கவா?” எனக் கேட்டாள்.

“நீ வீட்டுக்கு போ” என்று அனைவரையும் பார்த்தான் விக்ரம்.

அய்யோ, நான் இப்ப போனால் அம்மா ஆட்டம் தாங்க முடியாதுடா. நான் உன்னுடன் தான் இருக்கேன். கார்ல தான வந்திருக்க? சாவி குடு போகலாம்.

“நான் பைக்ல்ல வந்தேன்” என்றான் விக்ரம்.

சார், முதல்ல ஹாஸ்பிட்டல் போங்க. நான் மருந்து போட்டிருக்கேன். எதுக்கும் போயிட்டு வாங்க என்று திலீப் சொல்ல, வா…போகலாம் சிம்மா அக்கறையுடன் விக்ரமிடம் வந்தான்.

உனக்கு மேரேஜ் வேலை இருக்கும்ல்ல. நாங்க பார்த்துக்கிறோம் என்றான்.

நான் வாரேன் தமிழினியன் எழ, நீ வெளிய போகக் கூடாதுப்பா பாட்டி தடுத்தார்.

ரகா, நீ போ. “உதவிட்டு வா” என்று தாத்தா ரகசியனை சொல்ல, பைக் சாவியை அவனிடம் கொடுத்தான் விக்ரம். மூவரும் சென்றனர்.

சிகிச்சை முடிந்த பின் கொலை செய்ய வந்தவன். உங்க அண்ணா, அண்ணியை தான் டார்கெட் செய்றான். பார்த்துக்கோங்க என்று விக்ரம் எழுந்தான்.

சார், இருங்க. நான் உங்களை டிராப் செய்கிறேன் என்று ரகசியன் ஒரு பக்கமும் ரசிகா ஒரு பக்கமும் விக்ரமை பிடித்துக் கொண்டனர்.

எனக்கு கையில தான் அடிபட்டிருக்கு. வேறெதுவும் இல்லை. விடுங்க என்று விக்ரம் இருவர் கையையும் தட்டி விட்டான். கை வலி தாங்க முடியாமல் ரகசியன் தோளில் கையை போட்டான்.

சொன்னேன்ல்ல சார், இருங்க. டாக்சி பிடிக்கிறேன். உங்களை விட்டு வந்து பைக்கை எடுத்துட்டு வாரேன்.

“உங்களுக்கும் வேலை இருக்கும்ல்ல?”

“அத மத்த எல்லாரும் பார்த்துப்பாங்க” என்று அவன் உதவினான். ரசிகா இடையிடையே அவனை பார்த்துக் கொண்டே வந்தாள். விக்ரம் அவளை பார்த்து புன்னகைத்து கண்ணடித்தான்.

ஷ்..”சும்மா இரு அண்ணா” என்று அவள் சொல்ல, டிரைவர் அருகே அமர்ந்திருந்த ரகசியனும் புன்னகைத்தான்.

அவர்களை போலீஸ் குடியிருப்பில் விட்டு பைக்கை எடுத்து மீண்டும் சென்றான். இருவரும் ஆர்வமாக அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தனர்.

என்னவென ரகசியன் எட்டி பார்த்தான். விக்ரம் அவனை பார்த்து அமர சொல்லி, அவனை பற்றி விசாரித்தான். அவன் குடும்ப பிசினஸ் பார்த்துட்டு இருப்பதாக சொன்னான். பின் அதை பற்றிய விவரத்தையும் சொன்னான்.

விக்ரம் யோசனையுடன் மிருளாலினியை பற்றி சிந்தித்தான். பின் ரகசியனை பார்த்து, திருமணம் செய்து கொள்ளப் போறாங்கல்ல உங்க அண்ணி. “அவங்கள பத்தி உனக்கு தெரிந்ததை சொல்லு?” விக்ரம் கேட்க, அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகா இருவரையும் பார்த்தாள்.

அவங்க எந்த தப்பும் செய்யல. அது மட்டும் எனக்கு உறுதியா தெரியும். ஆனால் எங்க குடும்பத்தில் சிலருக்கு அவங்க, அண்ணாவை திருமணம் செய்து கொள்வது பிடிக்கலை. முதலில் எங்க பெரியப்பா சொன்ன போது எங்க பேமிலி குரூப்ல..அவங்கள பத்தி அதிகமா பேசுனாங்க. பின் தான் அண்ணா இத்தனை வருசமாக கல்யாணம் பண்ணாத காரணம் அவங்க மேலிருந்த காதல் தான்னு தெரிந்தது. பின் தான் எல்லாரும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க.

“ஆனால் எனக்கு கூட ஒரு விசயம் தயக்கமா இருக்கு” என்று இருவரையும் பார்த்தான் ரகசியன்.

“என்ன? அந்த பொண்ணு தப்பானவங்கலா?” விக்ரம் கேட்க,

ச்சே..அப்படியில்லை. அவங்க எங்க அண்ணாவுக்கும் மேல. ரொம்ப நல்லவங்க. அவங்க கணவன் இறந்த பின்னும் அவர் நினைவிலே அவர் வீட்ல சித்திரவதை பட்டாலும் பரவாயில்லை என அவரை நினைத்துக் கொண்டு இருந்திருக்காங்க. பிரச்சனை அவங்க இல்லை அவங்க கணவன் தான்.

“அவர் இறந்துட்டார்ன்னு தான உங்க அண்ணாவ கல்யாணம் பண்ணிக்கிறாங்க?”

இல்ல. அவர் இறந்து ஐந்து வருடமாகுது. ஆனால் இப்ப தான் எங்க அண்ணிக்கு அண்ணா காதலே தெரிந்திருக்கு. ஏன் அண்ணா அவங்களுடன் ஒரே பள்ளியில் தான் படிச்சாங்கன்னு அண்ணிக்கே தெரியாது. அவங்க கல்யாணம் இப்ப நடக்க காரணமே அண்ணியோட இறந்த கணவர் தான்.

“என்ன? கணவரா?”

ஆமா சார், அவங்க கணவரோட ஆவி தான். அவங்கள சேர்த்து வைக்க வந்திருக்கு என்றான் ரகசியன்.

அண்ணனும் தங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்து பயங்கரமாக சிரித்தனர்.

“சிரிச்சுட்டீங்களா?” எங்க அக்கா அவங்கள அடிக்க போன போது என்று அவன் நடந்ததை சொல்ல, இருவரும் நம்புவது போல் இல்லை.

நீங்க நம்பவில்லை என்றாலும் நாங்க எல்லாருமே கண்ணால் பார்த்தோம். அந்த ஆவி என்னோட அக்கா கழுத்தை பிடித்தது. சிம்மா சார் சத்தம் போடவும் தான் விட்டது.

சரி, “சிம்மாவுக்கும் அந்த பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்?”

சரியா தெரியல. ஆனால் அவங்க நல்லா பேசிப்பாங்க. சொந்த தங்கையாக பார்ப்பதாக சிம்மா சார் சொன்னார். ஆனால் உண்மையிலே சிம்மா சார் கத்தவும் தான் எங்க அக்காவை அது விட்டது. அண்ணியால இறந்த கணவரை மறக்க முடியல. ரொம்ப கஷ்டப்படுறாங்கன்னு நல்லா புரியுது.

அண்ணா, “எங்களிடம் அவங்களுக்கு ஆபத்து வர வாய்ப்பிருக்குன்னு” சிம்மா சார் சொன்னதாக சொன்னார். நான் எதுவும் கேட்டுக்கல. ஆனால் அண்ணி ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க. அதனால கேஸ் விசயமாக பேசும் போது  பார்த்து பேசுங்க சார்.

ம்ம்.”.நட்சத்திரா பற்றி ஏதாவது உனக்கு தெரியுமா?”

இல்லை. ஆனால் எங்க சுஜி அக்காவுக்கும், சுவாதிக்கும் அவங்கள தெரியும்ன்னு நினைக்கிறேன். அவங்க தான் பெரியம்மா வீட்டுக்கு அடிக்கடி வருவாங்க.

ஓ..என்று சிந்தனையுடன் விக்ரம் ரசிகாவை பார்க்க, அவள் விக்ரமை பார்த்து புருவத்தை உயர்த்தினாள்.

“இல்லை” என்று விக்ரம் தலையசைக்க, சிம்மா அங்கே வந்தான்.

டேய், “நீ இங்க என்ன பண்ற? அவங்களுக்கு பாதுகாப்பாக இல்லாமல் இங்க வந்திருக்க?” விக்ரம் கேட்க, “ஹாஸ்பிட்டல் போனாயா?” சிம்மா கேட்க, நான் ஓ.கே தான் என்று உள்ளே வந்த பரிதியை பார்த்து நிமிர்ந்து அமர்ந்தான்.

சிம்மா, “உன்னோட அப்பா தான?” விக்ரம் கேட்க, “வாங்க அங்கிள்” என்று பரிதியை ரசிகா அமர சொல்லி எழுந்தாள். “இருக்கட்டும்மா” என்று அவர் விக்ரமை பார்த்தார். அவனும் அவரை பார்த்தான்.

“ரொம்ப பெயினா இருக்காப்பா?” என்று பரிதி கண்கலங்க விக்ரமை பார்த்தார். சிம்மா அவர் கையை அழுத்த, அவனை பார்த்து விட்டு, “உங்க அம்மா கோபமா போனா சமாதானப்படுத்தி இருக்கலாமே?” அவர் கேட்க, அங்கிள் அவங்கள பத்தி பேசாதீங்க என்று ரசிகா கோபப்பட்டாள்.

சரிம்மா, “நீ உன் அண்ணனோட இருக்க? அங்க உன்னோட அம்மா உன்னை நினைத்து கவலைப்பட மாட்டாங்களா? அவங்களுக்கு ஆறுதலா யார் அங்க இருப்பா?” பரிதி கேட்க, “அதான் அப்பா கூட இருக்காரே” என்று ரசிகா சொல்ல, “அவரு இங்க வெளிய தான் இருக்கார்” என்றான் சிம்மா.

“வெளியவா?” என்று ரசிகா வெளியே ஓடி வந்தாள். விக்ரம் எழ, இருப்பா..வருவார். பேசுங்க என்றார் பரிதி.

அப்பா, “இங்க என்ன செய்றீங்க? அம்மா தனியா இருப்பாங்கல்ல?” ரசிகா கேட்க, அவ ரொம்ப அதிகமா பேசுறாம்மா கேட்க முடியல. அதான் அவனை பார்க்க வந்துட்டேன்.

“உச்” என்றவள் வாங்க என்று உள்ளே அழைத்து சென்றாள்.

“அம்மாவ எதுக்கு விட்டு வந்தீங்க?” விக்ரம் கோபமாக கேட்டான்.

“நீ என்னடா பிறவி? இன்னும் அவள பத்தி யோசிக்கிற?” அவர் கேட்க, அப்பா..ரசிக்கு போட்டியாக வந்திருவேனோன்னு பயம் அவங்களுக்கு. என்னை வளர்த்தவங்களே அவங்க தான. அவங்களுக்கு என்னை பிடிக்கலைன்னா அன்றே என்னை தூக்கி போட்டிருப்பாங்க. ஆனால் வளர்த்திருக்காங்களே! அதுவே பெரிய விசயம்.

“என்னோட பெற்றோருக்கே என்னை பிடிக்கலை என்ற பின் அவங்களுக்கு எப்படி பிடிக்கும்?” என்று அவன் சொல்ல, பரிதியால் நிற்க முடியவில்லை.

நீங்க பேசுங்க. நாங்க வெளிய இருக்கோம் என்று சிம்மா பரிதியை வெளியே அழைத்து வந்தான். அவர் சிம்மாவை அணைத்து கதறி அழுதார். சிம்மா கண்களிலும் கண்ணீர். வெளியே வந்த ரகசியன் இவர்களை பார்த்தான்.

சதாசிவம் வெளியே வந்தார். பரிதியை பார்த்து, சாரி. அவனுக்கு நடந்தது தெரிந்தால் இப்படி பேச மாட்டான் என்றார்.

ரசிகா அவர் பின் வந்தவள். இவர்கள் பேசுவதையும் பரிதியின் கண்ணீரையும் பார்த்து அவர்களிடம் வந்தாள்.

“நீங்க எதுக்கு அழுறீங்க?” ரசிகா கேட்க, எல்லாரும் அமைதியாக இருந்தனர்.

ரசிம்மா, நான் சொல்வதை நீ விக்ரமிடம் சொல்லக் கூடாது. “சரியா?” சதாசிவம் கேட்க, ம்ம்..சரிப்பா. “ஏதும் பிரச்சனையா?” அவள் கேட்டாள்.

அம்மாடி, “இவங்க உன்னோட அண்ணா விக்ரமோட உண்மையான குடும்பம்” என்றார் சதாசிவம்.

அப்பா, “என்ன சொல்றீங்க?”

ஆமா, “இவர் விக்ரமின் அப்பா. சிம்மாவோட தம்பி தான் விக்ரம். இருவரும் டிவின்ஸ்”.

டிவின்ஸ்ஸா? ஆனால் சிம்மா, விக்ரம் சின்னவன்னு சொன்னீங்க? ரகசியன் கேட்க, ஆமாம், விக்ரம் சிறியவன் தான். முதலில் சிம்மா பிறந்த இருபது நிமிடத்தின் பின் தான் விக்ரம் பிறந்தான்.

விக்ரம் பிறந்து அவன் அழவேயில்லை. அவனுக்கு உயிரை வர வைக்க கஷ்டப்பட்டாங்க. ஆனால் அன்னம் உயிரை பணயம் வைத்து தான் விக்ரம் பிறந்தான். என்னோட மனைவி உயிரோட வந்தது எங்க வரம்ன்னு மருத்துவர்கள் சொன்னாங்க. அந்த அளவு என் பொண்டாட்டி வீக்கா இருந்தா. குழந்தை பிறந்தவுடன் மயங்கிட்டா. அதனால அவளுக்கு ரெண்டு பிள்ளைங்கன்னு தெரியாது. இப்பொழுது போல் ஸ்கேன் எல்லாம் அப்பொழுது இல்லை. ஹாஸ்பிட்டலுக்கு குழந்தை இருக்குன்னு உறுதி செய்து ஒரே ஒரு முறை செக் அப்பிற்கு தான் சென்றோம். பின் அவளுக்கு வலி எடுக்கவும் தான் சென்றோம். அவன் நன்றாக ஆனதும் ஜாதகம் பார்த்தேன்.

எங்க ஊர்ல குழந்தை பிறந்த மறுநிமிடமே ஜாதகம்  பார்ப்பது வழக்கம். அதனால் சிம்மா, விக்ரம் இருவரும்  பிறந்த அன்று ஜாதகம்  பார்த்தோம்.

அதில் அவர்..பசங்களோட இருப்பத்தெட்டாவது வயதில் கண்டம் இருப்பதாகவும் இருவரும் சேர்ந்து வளர்ந்தால் இருவரில் ஒருவர் வளரும் போதே இறந்து விடுவர் என்றும் சொன்னாங்க. விக்ரம் பிறந்தது தான் என் மனைவிக்கே தெரியாதே! அதனால் அந்த பச்சப்பிள்ளையை செய்வதறியாது இவரிடம் கொடுத்து விட்டேன். இவரை பற்றி எனக்கு ஏதும் தெரியாது. என்னோட இரு பசங்களும் உயிரோட இருக்கணும்ன்னு தான் விக்ரமை உன்னோட அப்பாவிடம் வளர்க்க கொடுத்தேன். ஆனால் அவன் இப்ப கஷ்டப்படக் காரணமே நான் தான். ஆனால் ஒருவிதத்தில் சந்தோசம் தான். என்னோட இரண்டு பசங்களும் உயிரோட இருக்காங்க என்று சொல்லி அழுதார்.

அப்பா..என்று சிம்மா அவரை அணைக்க, இப்ப சொல்லி இருக்கலாமே! ரசிகா கேட்க. இப்ப இருவருக்குமே வயது இருபத்தெட்டு. சாமியார் சொன்ன கண்ட நேரம் இருவருக்கும். அதான் விக்ரமிடம் ஏதும் சொல்லவில்லை.

“நீங்க சொல்லாமலே இருந்திடுங்களேன்” ரசிகா சொல்ல, “ரசிம்மா” என்று சதாசிவம் பார்த்தார்.

ஆமாப்பா, திடீர்ன்னு அண்ணா இல்லைன்னா என்னால ஏத்துக்க முடியாது. நான் தினமும் அவனை பார்க்கணும். பேசணும். அவனுக்கு மட்டும் இந்த காரணமும், அவன் பெற்றோர் அதுவும் சிம்மா அவன் அண்ணன்னு தெரிந்தால் கண்டிப்பா அவங்களோட அவங்க வீட்டுக்கு போயிடுவான்.

இல்லம்மா, “அவனுக்கான நேரம் முடியவும் அவன் போகட்டும்” சதாசிவம் சொல்ல, “யாரும் என் அண்ணாவிடம் இதை சொல்லக் கூடாது” என்று அழுதாள் ரசிகா.

“அம்மா அவனை கஷ்டப்படுத்துறா? அவன் கஷ்டப்படுறான்ல்லம்மா” அவள் அப்பா கேட்க, பரவாயில்லை. “அவனுக்கு தான் நாம இருக்கோம்ல்லப்பா” என்றாள் ரசிகா.

“நீ இப்படி சுயநலவாதியா இருப்பன்னு நான் நினைக்கலை” என்று ரகசியன் சொல்ல, “ஆமா நான் சுயநலவாதி தான்”. அண்ணா வீட்டை விட்டு வெளியே சென்றதையே என்னால ஏத்துக்க முடியல. இப்ப மொத்தமா போனா..”என்னால முடியாது” என்று அழுதாள்.

ரகசியன் கோபமாக அவளை பார்க்க, சதாசிவம் அவனை பார்த்தார். சிம்மாவும் பரிதியும் ஏதும் பேசாமல் அவர்களை பார்த்துக் கொண்டே சென்றனர்.

தம்பி, “இவள எங்க வீட்ல மட்டும் விட்டுறீங்களா?” சதாசிவம் ரகசியனிடம் கேட்க, “எனக்கு சுயநலமா இருக்கிறவங்கல்ல பார்த்தாலே பிடிக்காது” என்று அவன் செல்ல, இப்பொழுதுள்ள நிலையில் அவள தனியா அனுப்ப யோசனையா இருக்குப்பா.

என்னிடம் ஏதுமில்லை. பஸ்ல தான் போகப் போறேன் என்றான் அவன்.

“என்னது? நீ பிசினஸ்மேன் தான? கார் இல்லையா?” அவர் கேட்க, அதெல்லாம் இருக்கு. எனக்காகவென நான் அடுத்தவங்கல்ல கஷ்டப்படுத்த மாட்டேன் என்று ரசிகாவை பார்த்து குத்தும் வார்த்தையை கொட்டினான்.

நானே போயிடுவேன். எனக்கு யார் உதவியும் தேவையில்லை ரசிகா சொல்ல, அம்மா, தனியா இருப்பா. இரும்மா..ஆட்டோ பிடிச்சி விடுறேன். அண்ணாவிடம் சொல்லீட்டு வாம்மா என்றார் அவர்.

ரகசியன் அவரை பார்த்து விட்டு சென்றான். அவர் அழைத்த ஆட்டோக்காரன் பார்வையே சரியில்லாமல் இருக்க, அவனை அனுப்பி விட்டு ரசிகா “அப்பா, நான் பஸ்ல போயிடுவேன்” என்று தனியே வேகமாக நடந்தாள்.

அவருக்கு பயமாக இருந்தாலும் பொண்ணோட தைரியமான பேச்சில் அமைதியானார். அவள் நடந்து செல்லும் போதே மழை பிடித்துக் கொண்டது. நனைந்து கொண்டே வேகமாக நடந்தாள். அவள் பின்னே யாரோ பின் தொடர்வது போல் இருக்க பயத்துடன் நடந்தாள்.

பயத்தில் கவனிக்காது சேற்றில் கால் வைக்க, சேற்று நீர் அவளை வாரியது. விழ இருந்தவளை தூக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்த பஸ்ஸில் ஏறினான் ரகசியன்.

பேருந்தில் அனைவரும் இருவரையும் பார்த்தனர். அவள் கோபமாக அவனிடமிருந்து இறங்கி, “பெருசா பேசுனீங்க? இப்ப எதுக்கு வந்தீங்க?” கத்தினாள்.

“இது வீடில்லை” என்று அவளை கடந்து உள்ளே சென்றான். அவள் சினமுடன் அவன் பின் சென்று அவன் சட்டையை பிடிக்க, “விடுறியா? நீயும் உன் குடும்பமும் என்னமும் செய்யுங்க. எனக்கென்ன வந்தது?” என்று பின்னே இருந்த கடைசி சீட்டில் அமர்ந்தான். எல்லாரும் அவர்களை வேடிக்கை பார்ப்பதை கவனித்து, அவளும் அவனருகே வந்து அமர்ந்து கொண்டாள். அவன் அவளை பார்த்து திரும்பி அமர்ந்து கொண்டான்.

சரி…சரி..”தேங்க்ஸ்” என்றாள் அவள்.

“எனக்கு தேவையில்லை” என்றான்.

“என்னவாம் இவனுக்கு?” என்று முணுமுணுத்துக் கொண்டே வந்தாள். அவள் வீடிருக்கும் ஸ்டாப் வந்தது. பேருந்தின் வாசலில் நின்று கொண்டு கீழிருந்த சேற்றை பார்த்து தயக்கமுடன் நின்றாள். ரகசியன் எட்டி பார்த்து விட்டு, அவளை தூக்கிக் கொண்டே கீழே இறங்கி அவளை இறக்கி விட்டான்.

“உங்களுக்கு எங்க வீடு தெரியுமா?” அவள் கேட்க, சுவாவை டிராப் செய்ய வந்திருக்கேன் என்றான்.

ம்ம்..வாங்க அவள் அழைக்க, “சுயநலம் பிடித்தவர்கள் வீட்டிற்குள் நான் வர மாட்டேன்” என்றான்.

என்ன? அவள் கோபமாக அவன் சட்டையை பிடித்து இழுத்து அவள் வீட்டிற்குள் நுழைந்தாள்.

வனஜா, இருவரையும் பார்த்து, “யாருடி இவன்? இப்படி இழுத்துட்டு வாற? யாராவது பார்த்தால் என்ன நினைப்பாங்க?” என்று கேட்டார்.

“உன்னை விட என்னை நல்லவன்னு நினைப்பாங்க” என்று அவளறைக்கு சென்று விக்ரமின் ஆடையை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்து விட்டு, துவாலையை நீட்டினாள்.

அடியேய், அதிகமா பேசாத..

“நீ பேசியதை விடவா நான் பேசுகிறேன்?” அப்பா, அண்ணா மானத்தையே வாங்கிட்டு வந்துட்டு என்னிடம் சத்தம் போடுறாங்களாம் என்று அவன் அப்படியே நிற்பதை கண்டு, மேல இரண்டாவது அறை என் அண்ணாவின் அறை தான். “போய் மாத்திக்கோங்க சார்” என்று அவனை பார்த்தாள். அவன் அவளை முறைத்து பார்க்க, “எல்லாம் வந்து வாச்சிருக்கு பாரு” என்று திட்டிக் கொண்டே அவனை இழுத்து விக்ரமின் அறைக்குள் தள்ளி விட்டு அவளறைக்கு சென்றாள்.

சற்று நேரத்தில் அவன் கீழே வர, “யாருப்பா நீ? அவளோட பசங்க ப்ரெண்ட்ஸ கூட அழைச்சிட்டு வர மாட்டா. உன்னை அழைச்சிட்டு வந்திருக்கா?”

“அவர் தான் என்னை அழைச்சிட்டு வந்தார்” என்று சொல்லிக் கொண்டே தலையை சரி செய்து கொண்டே அவர்களிடம் வந்து, “சுவாதி அண்ணன்” என்று சொன்னாள்.

“என்னது? அவளோட அண்ணனா?”

ஆமா, உனக்கு அவளை பிடிக்காதது போல் நடிக்காத. என்னோட ப்ரெண்ட்ஸை இவங்க தான் வீட்டுக்குள்ள விட மாட்டாங்க. இவங்களுக்கு சண்டை போட ஆள் வேணும்ன்னு அவளை அடிக்கடி வர வைப்பாங்க. “என்னம்மா மறந்துட்டியா?” ரசிகா கேட்க, “சும்மா இருடி” என்று “சூடா ஏதாவது சாப்பிடுறீயாப்பா?” என கேட்டார் வனஜா.

சாரி ஆன்ட்டி, என்னால இங்க ஏதும் சாப்பிட முடியாது. நான் வாரேன் என்று அவன் சொல்ல, “என்ன திமிரு உனக்கு?” என்று அவனிடம் ரசிகா வந்தாள்.

நான் தவறாக ஏதும் சொல்லவில்லை. விக்ரம் சாரை கஷ்டப்படுத்தும் அம்மா, அவன் குடும்பத்துடன் சேர விடாத அவர் தங்கை என சுயநலவாதிகளை எப்படி தான் டி.ஐ.ஜி சார் சமாளிக்கிறாரோ? பாவம் அவர் அதான் அழுதார் போல என்று அவன் நிற்காமல் செல்ல, “அழுதாரா? அப்பாவா?” ரசிகா கேட்க, உனக்கு விக்ரம் சார் அப்பா கண்ணீரும் தெரியல. உன் அப்பாவையும் தெரியல.”வேஸ்ட்” என்று வெளியே சென்றான்.

“வேஸ்ட்டா?”

“என்னை அதுக்காக வேஸ்ட்டுன்னு சொல்றீங்க?” என மரியாதையுடன் பாவமாக கேட்டாள். அவன் அவளை உற்றுபார்த்து புன்னகைத்து, “நடிக்காத..”என்றான்.

“மழை தான் நிற்கவில்லையே கொஞ்ச நேரம் இருந்துட்டு போறது? அதான் ஏற்கனவே சொன்னேன்ல்ல?” அவன் சொல்ல..ஊ..என அழ ஆரம்பித்தாள் ரசிகா. அவன் நின்று அவளை பார்த்து, “உள்ள போய் அழு” என்றான்.

“உன்னை நல்லவன்னு நினைச்சுட்டேனே!” என்றாள்.

“நல்ல வேலை உன்னை மாதிரி ஒருத்தியிடம் நான் மாட்டிக்கல” என்றான் அவன்.

மீண்டும் அவள் அழ, “உஃப்” என்று ஊதி விட்டு உள்ளே வந்து அமர்ந்தான்.

ஆமா, “இருவரும் என்ன பேசிட்டு இருக்கீங்க? என்ன செய்றீங்க?” வனஜா கேட்க, “அதை அவள் தான் சொல்லணும்” என்றான் அவன். இல்லை “நீங்க தான் சொல்லணும்” என்றாள் அவள்.

“யாராவது சொல்லுங்களேன்” என்றார் வனஜா.

“முடியாது” என்று இருவரும் ஒருவாறு சொன்னார்கள். “மழை விட்டது விடுங்கடா” என்று ரகசியன் அங்கிருந்து சென்றான். ரசிகா கண்ணீருடன் அறைக்கு சென்றாள்.

விக்ரம் வெளியேறிய பின் அன்னம், தன் கணவனிடம் பேச என அழைத்து சென்று, “என் அண்ணா சொன்னது உண்மையா? உங்களுக்கும் அந்த பொம்பளைக்கு சம்பந்தம் இருக்கா?” என்று அழுது கொண்டே கேட்டார்.

அப்ப அவன் கண்கள். எனக்கு நல்லா தெரியும். அவன் உங்க பையன் தான. “நீங்க என்னை ஏமாத்திட்டீங்கல்ல?” அன்னம் அழ, இல்லம்மா அவன் நம்ம பையன். நம்ம சிம்மாவின் தம்பி என்று நடந்ததை சொன்ன பின் தான் அவரிடம் நிம்மதி பெருமூச்சு. ஆனாலும் பிள்ளையவே மறைச்சிருக்கீங்கல்ல? அன்னம் கேட்க, “நிலைமை அப்படிம்மா” என்றார் பரிதி.

சிம்மாவும் விக்ரமும் ஐ.பி.எஸ் பயிற்சியிலே பார்த்திருப்பார்கள். சிம்மாவிற்கு விக்ரமை பார்த்ததிலிருந்து இப்பொழுது வரை சந்தேகம் இருந்திருக்கும். சதாசிவம் சிம்மாவின் விவரத்தை அவனது பயிற்சியின் போது பார்த்தே கண்டறிந்திருப்பார். சிம்மாவும் விக்ரமும் உடன் பிறந்தவர்கள் என்று..  அவருக்கு முன்பே தெரிந்து தான் இருவரையும் பழக விட்டிருப்பார்.

விக்ரம் நன்றாக பேசினாலும் சிம்மாவிற்கு அவன் மீது அறியாத கோபம் இருந்ததால் நெருக்கம் வந்திருக்காது. இருவரும் எதிரிகள் போல் இருந்திருப்பர். போட்டி என்றதும் தான் இருவருக்கும் பிரச்சனை இருக்கும். மற்ற படி இருவரும் நல்லவர்கள் தான். ஒருவர் மீது ஒருவர் அக்கறையாக தான் இருப்பர்.

ஆனால் முன்னிருந்த வாழ்க்கையில் விக்ரம் பற்றி அறியும் முன்னே சிம்மா இறக்கும் தருவாய்க்கு வந்திருப்பான். இப்பொழுது மனதினுள் ஓர் நிம்மதி இருந்தாலும் ரசிகா பேசியதில் பரிதியும் சிம்மாவும் மனதளவில் வேதனையுடன் தான் வந்தனர்.

சிம்மாவும் பரிதியும் வீட்டிற்கு வந்தனர். அன்னம் வேகமாக அவர்களிடம் வந்து, பிள்ளைக்கு ஒன்றுமில்லைல்ல. நல்லா தானே இருக்கான்? என்று பதறினார்.

சிம்மா அமைதியாக நட்சத்திரா வீட்டின் ஓர் அறைக்கு செல்ல, அப்பா என்று அர்சு அவனை கட்டிக் கொண்டான். சிம்மாவும் கண்ணீரை மறைத்து அவனை கட்டிக் கொண்டான். அவர்களை பார்த்துக் கொண்டே, “ம்ம்..நல்லா இருக்கான்ம்மா” என்றார் பரிதி.

நட்சத்திரா மண்டப வேலையாக சென்றிருந்தாள். அவளுடன் அவள் குழுவினரும் இருந்தனர். தியா முகம் முழுவதும் சோகத்தை தத்தெடுத்து இருந்தது.

தியா, “என்ன கனவு கண்டு கொண்டிருக்கிறாய்?” என்று புழலரசன் அவள் தோளை தட்ட, “ஒன்றுமில்லை” என்று அவள் வேலையை கவனித்தாள். நட்சத்திரா அவளை யோசனையுடன் பார்த்தாலும் அவள் வேலை இழுத்துக் கொண்டது. அதில் மற்றவற்றை மறந்தாள்.

சற்று நேரத்தில் சிம்மா மிருளாலினியையும் அவள் பெற்றோரையும் பார்க்க தமிழினியன் வீட்டிற்கு சென்றான். அவர்களிடம் அவன் பேசிக் கொண்டிருந்த சமயம் சுபிதனின் அம்மா வீட்டை வேவு பார்க்க சென்ற மாறனிடமிருந்து சிம்மாவிற்கு அழைப்பு வந்தது. அவன் அலைபேசியை காதில் வைத்தான்.

மாறன் சொன்னதை கேட்டு, மாறா வேண்டாம் தனியா போகாத. நான் வாரேன். சித்துவுக்கு தெரிந்தால் பயப்படுவா என்று சிம்மா வேகமாக எழுந்தான்.

“ஏதும் பிரச்சனையாப்பா?” மிருளாலினி அப்பா கேட்க, ஆமாப்பா..என்று மாறா, உள்ள போகாத. இப்ப இருக்கும் இடத்திலிருந்து பாரு. நான் வந்துடுறேன் என்று வேகமாக விளையாண்டு கொண்டிருக்கும் அர்சுவை தூக்கிக் கொண்டு தமிழினியன் வீட்டிற்கு வந்து, “சுபி அங்கிள் இருக்கானா?” பாருடா என்று சிம்மா பதட்டமாக கூற, அவனிடமிருந்து இறங்கிய அர்சு ஒவ்வொரு அறையாக திறந்து பார்க்க, உள்ளிருந்தவர்கள் வெளியே வந்தனர்.

“என்னாச்சு சிம்மா?” மிருளாலினி பதட்டமாக, அவளை பார்த்து விட்டு ஏதும் கூறாமல் அர்சுவை பார்த்தான். தன் நண்பர்களை காண சென்ற தமிழினியனும் ரகசியனும் உள்ளே வந்தனர்.

“சொல்லு சிம்மா?” என்று மிருளாலினி அவனை உலுக்க, இங்க பாரு. நீ உன்னோட என்கேஜ்மென்ட்டுக்கு தயாராகும் வேலைய பாரு. மத்ததை நான் பார்த்துக்கிறேன் என்று பதட்டமுடனும் குரலில் பயமுடனும் சத்தமிட்டான் சிம்மா.

“என்னாச்சு சிம்மா?” என்று தமிழினியன் கேட்டுக் கொண்டே இருவரையும் பார்த்தவாறு வந்தான்.

“ஒன்றுமில்லை” என்ற சிம்மாவிடம், “அப்பா அங்கிளை காணும்” என்று அர்சு அவர்களிடம் ஓடி வந்தான்.

சுபி, “நான் பேசுறது கேட்குதா?” நீ இங்கே இருப்பதை தெரியப்படுத்து என்று சிம்மா கத்த..பத்து நிமிடமாகியும் எந்த சிக்னலும் சுபியின் ஆவி தராமலிக்க, “சுபிக்கு பிரச்சனை நிச்சயம் தான்” என்று பதட்டமுடன் பின் தலையில் கையால் தட்டிக் கொண்டு, அவனுக்கு தெரிந்த பேய் ஓட்டும் ஓர் சாமியார் நம்பரை முகேஷிடம் வாங்கி விட்டு, சென்னையிலிருக்கும் அவரை சுபிதனின் வீட்டிற்கு வரச் சொல்லி விட்டு கிளம்ப, மிருளாலினி பதட்டமானாள்.

சிம்மா, “நான் வாரேன்” என்று தமிழினியன் சொல்ல, தாத்தா அவனிடம் “நீ போகக்கூடாதுப்பா” என்றார்.

யாரும் ஏதும் செய்ய வேண்டாம். நீங்க பங்சனை கவனிங்க என்று அர்சுவை தூக்கிக் கொண்டு தமிழினியனின் ஓர் தம்பியின் பைக்கை சுபிதனின் வீட்டிற்கு விரட்டினான். அர்சு சிம்மாவை முன்னிருந்து அணைத்து சாய்ந்து கொண்டான்.