அத்தியாயம் 12

ரித்தி கதவை திற, “எதுக்கு அழுற? யாரு கால் பண்ணா?” பாலா வினாக்களை மேன் மேலும் தொடுக்க, சினத்துடன் கதவை திறந்த ரித்திகா, “நான் என்ன செய்தால் உனக்கென்ன?” உன் வேலைய பாரு என்று கத்தினாள்.

“உன்னோட அம்மா, அப்பா எங்க?” உன்னை பார்த்தாலே கஷ்டமா இருக்கு. “ஏதும் பிரச்சனையா? அவங்க உங்க ஊர்ல தான் இருக்காங்களா?” அவங்க நம்பர் கொடு என்று பாலா கேட்டான். நிஷாவும் உதிரனும் மனம் கேட்காமல் பாலா பின் வந்து அவளை பார்த்தனர்.

சொல்றேன்ல்ல. என் விசயத்துல தலையிட எனக்கு நீ யாருமில்லை. நான் எல்லாத்தையும் உன்னிடம் சொல்லணும்ன்னு அவசியமில்லை. புரியுதா? எனக் கத்தினாள்.

பாலா கண்கலங்க அவள் கையை பிடித்து, “உனக்கு நான் நண்பனாக கூட இல்லையா?” என்று பாவமாக கேட்டான்.

இல்லை..இல்லை..இல்லை எனக் கத்தி விட்டு சீற்றமுடன் பாலாவை தள்ளி விட்டாள். உதிரன் அங்கே வந்து பாலாவை பிடித்து நிறுத்தி விட்டு ரித்திகாவை முறைத்தான். அவள் வேகமாக கதவை சாத்தினாள்.

அதற்குள் கதவை பிடித்து உதிரன் உள்பக்கமாக தள்ள, அவள் கதவை அடைக்க முயன்று தோற்று அவன் தள்ளியதில் அறையினுள் விழுந்தாள்.

அறைக்குள் உதிரன் செல்ல, ரித்திகா தவித்துப் போய் எழ முடியாமல் தரையில் கையை ஊன்றி முயன்று கொண்டிருந்தாள். பாலாவும் நிஷாவும் உள்ளே வந்தனர்.

உதிரனை பார்த்துக் கொண்டே நிஷா ரித்திகாவிடம் சென்று அவளை தூக்கி விட்டாள். ரித்திகா எழுந்தவுடன், “நான் தனியா இருக்கணும்” என்று மூவரையும் பார்த்தாள். அவள் மனம் கனத்து இருந்தது.

“நீங்க போங்க” என்று உதிரனையும் பாலாவையும் நிஷா போகச் சொன்னாள். அவர்கள் செல்லவும் நிஷா ரித்திகாவிடம் வந்தாள்.

மேம், “ப்ளீஸ் போங்க” என்று ரித்திகா கெஞ்ச, “உனக்கு பிரச்சனை ஏதும் இருக்கா?” என்று நிஷா கேட்டாள்.

இருந்தால் தீர்த்து வைக்க உங்களால் முடியாது மேம். எனக்கு தலை சுற்றிக் கொண்டு வருது. நான் ஓய்வெடுக்கணும். நீ தாராளமாக ஓய்வெடு. முதலில் சாப்பிடு என்று நிஷா சொல்ல, கதவை தட்டும் ஓசை கேட்டது.

நிஷா கதவை திறந்து பார்த்தாள். அம்சவள்ளியும் புகழேந்தியும் வந்திருந்தனர். “அங்கிள்” என்று நிஷா தயங்க, நகரும்மா..என்று அம்சவள்ளி நிஷாவை நகர்த்தி விட்டு உள்ளே வர, புகழேந்தி நிஷாவை பார்த்துக் கொண்டே உள்ளே வந்து கதவை சாத்தினார்.

“உனக்கு எங்களை நினைவில்லையாம்மா?” என்று அம்சவள்ளி கேட்டுக் கொண்டே ரித்திகாவிடம் வந்தார்.

அவள் இருவரையும் பார்த்து எழ, சும்மா நடிக்காதம்மா. “ஏற்கனவே எங்க புள்ள பின்னாடி சுத்தியவ தான நீ? இப்ப எதுக்கு இங்க வந்து நல்லவ மாதிரி எங்களையும் அவனையும் தெரியாதது போல் காட்டிக்கிற? இது என்ன புது டிரிக்கா?” புகழேந்தி கேட்க, ரித்திகா மனதில் இருக்கும் பிரச்சனையை காட்டிக் கொள்ளாமல் மௌனம் காத்தாள்.

“டிரிக்கா? என்ன பேசுறீங்க?” நிஷா சினமுடன் புகழேந்தியை பார்த்தாள்.

இங்க பாரும்மா. இது எங்க புள்ளை சம்பந்தப்பட்டது. நீ தலையிடாத என்று அம்சவள்ளி கூற, நிஷா ஒதுங்கி நின்றாள். ஆனால் அவள் மனம் கொந்தளித்தது.

“சொல்லும்மா? உனக்கு வேலை செய்ய வேற இடமா இல்லை?” புகழேந்தி கேட்க, சாரி சார் நான் நடிக்கலை. நான் சீக்கிரம் கிளம்பிடுவேன். நான் வேறொருவரை கல்யாணம் பண்ணிக்கப் போறேன். உங்க பையனுக்கு என்னால் பிரச்சனை வராது.

நீங்களும் என்னை தப்பா நினைப்பீங்கன்னு நான் நினைக்கலை என்று அம்சவள்ளியை பார்த்து ரித்திகா கூற, அவளுக்கு தொண்டை அடைத்தது. பேச முடியாமல் நிஷாவை பார்த்தாள்.

ஆன்ட்டி, அங்கிள்..உங்க பையனை நீங்க வேணும்ன்னா இப்பவே கூட்டிட்டு போங்க. ஆனால் ரித்தி சில நாட்கள் இங்கே தான் இருப்பா என்ற நிஷா,

சாரி ரித்து, “உதி உன்னோட மாமான்னு ஏற்கனவே எனக்கு தெரியும்” என்று அவர்களை பார்த்தாள். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, நான் இவளிடம் பேசணும். நீங்க கிளம்புங்க. நீங்க இவளை பார்க்க வந்தது தெரிந்தால் உங்க பையன் கோபத்தில் இங்கிருந்து சென்று விடுவான். அவனுக்கும் ரித்துவை பிடிக்கும். “அவன் காதல் ரித்து கையில் தான்” என்று நிஷா ரித்திகாவை பார்த்தாள்.

எனக்கு புரிந்தது மேம். என்னால அவர் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியும். அவர் காதல் காலம் தாழ்ந்து விட்டது. என்னுடைய திருமணம் நடந்தே தீரும். அது பிரணவ்வுடன் தான். அதை யாரும் மாற்ற முடியாது. ஒரு வேலை மாறினாலும் உங்கள் மகன் இருக்கும் திசை பக்கம் நான் வரவே மாட்டேன். மேம் யாரும் என்னால இங்கிருந்து போக வேண்டாம். அவரோட வெளிச்சம் இவ்விடம் தான். அவர் இங்கேயே இருக்கட்டும். இரு வாரம் தானே! நான் இருந்துட்டு கிளம்பிடுவேன் என்று அயர்வுடன் கூறி விட்டு படுத்துக் கொண்டாள் ரித்திகா.

ரித்து, நீ ஓய்வெடு. நாங்க வாரோம் என்று அவர்களை நிஷா வெளியே அழைத்து வந்தாள். மெதுவாக எழுந்து கதவை சாத்தி விட்டு ரித்திகா அழுதாள்.

வெளியே வந்த நிஷா இருவரையும் பார்த்து, உங்களை இங்கே வர வைத்தது அவள் தான். நானில்லை. என்னிடம் அவள் செய்ய சொன்னதை நான் செய்தேன். அவ்வளவு தான்.

உதி உங்களை பார்க்க முடியாமல் கஷ்டப்படுவான்னு தான் வர வைச்சா. “அப்படிப்பட்ட பொண்ணுக்கிட்ட என்ன பேச்செல்லாம் பேசிடீங்க?” என்று நிஷா வருத்தமாக கூறி விட்டு நகர்ந்தாள். ரித்திகாவை பற்றி உதிரனின் பெற்றோர் எண்ணம் அவளை வாட்டியது. எதிரே வந்து கொண்டிருந்த உதிரனை பார்த்து விட்டு ஏதும் பேசாமல் சென்று விட்டாள் நிஷா.

ஏய்..நிஷா, “எங்க போற?” சார் உன்னை அழைத்தார் உதிரன் அழைக்க, அவள் காதில் விழவேயில்லை. அவளுக்கு ரித்திகாவிற்கு ஏதோ பிரச்சனை என்று மட்டுமே மனம் உலன்று கொண்டிருந்தது. நிஷா அவளறைக்கு செல்ல, பாலாவும் ரித்திகா பேசியதை எண்ணி வருத்தமுடன் சுற்றிக் கொண்டிருந்தான். உதிரன் பெற்றோர் சிந்தித்தாலும் ஏதும் பேசாமல் தன் மகனை சந்திக்க கிளம்பினர்.

மகாதேவா..என்று உரக்க சத்தமிட்டுக் கொண்டு எமதர்மராஜன் கையிலாயத்திற்கு சிவபெருமானை நோக்கி வந்தார்.

“எங்கே வந்து சத்தம் போடுகிறீர்கள் எமதர்மராஜா?” நந்தி கேட்க, நீவிர் அமைதியாக இரும். நான் மகாதேவனிடம் பேசிக் கொள்கிறேன் என்று சிவனிடம் வந்தார்.

வாருங்கள் எமா, அமருங்கள் சிவன் அவரை உபசரித்தார்.

மகாதேவா, நான் விருந்துண்ண வரவில்லை. “என் உயிர்க்கணக்கை இப்படி நீங்கள் குறைக்கலாமா? எதற்காக நீங்கள் இடையூறு செய்கிறீர்கள்?”

“இடையூறா? எமா யாரிடம் என்ன பேசிட்டு இருக்க?” பார்வதி தேவி சினமானார்.

“அமைதி தேவி” என்று சிவன் பார்வதியை அமைதிப்படுத்தினார்.

எமா, நீங்கள் ஒருவரிடம் வாக்கு கொடுத்து விட்டால் அதை நிறைவேற்றுவீர்களா? இல்லை உரியவருக்காக விட்டுக் கொடுப்பீர்களா? மகாதேவன் கேட்டார்.

மகாதேவா, வாக்கு உயிரினும் மேலோனது. அதை காப்பாற்றுவது தானே முறை எமன் கூறினார்.

அப்படியென்றால் நான் செய்வது சரிதான். என்னை நோக்கி கடுந்தவம் புரிந்த தேவதையின் வரத்திற்காக மானுடர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கேன். அவர்கள் வாழ்க்கை பயணத்தை அவர்கள் மாற்றிக் கொண்டால் நான் பொறுப்பல்ல..

“அப்படியென்றால் அவ்வான்மாவிற்கான வாய்ப்பு எதற்கு கொடுத்தீர்கள்?”

அவன் விதி மாறி தன் மனைவியை சுற்றி இருப்பவர்களுக்காக அவன் உதவவே உயிரை விட்டிருக்கான். அவன் ஆன்மாவிற்கும் நிபந்தனைகள், விதி முறைகள் உள்ளது. அதை அவன் ஆன்மா கடைபிடிக்கவில்லை என்றால் தக்க தண்டனை அவன் ஆன்மாவிற்கும் இருக்கு.

அப்படியென்றால் “நால்வர் உயிரையும் என்னால் எடுக்க முடியாதா?” எமன் கேட்க, அதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது. மூன்று ஜோடிகளும் நல்ல படியாக இணைய தான் ஆன்மாவை பூலோகம் அனுப்பி வைத்திருக்கிறேன். பார்க்கலாம்..

மகாதேவனே! “நான் காத்திருக்கிறேன்” என்று எமன் சென்று விட்டார்.

வாருங்கள் நாம் தமிழினியன் வீட்டில் நடப்பதை கவனிக்கலாம் வேலவன் ஆர்வமாக கேட்க, ஆம் கந்தா,” எனக்கும் ஆர்வமாக உள்ளது” என்று நாரதர் ஒத்து பாட, அவரை பார்த்து விட்டு வேலவனும் மற்றவர்களும் கவனிக்கலாயினர்.

காலையில் அவதியாக தலையை கூட சரி செய்யாது காதில் அலைபேசியுடன் தமிழினியன் ஓடி வந்தான். நடுஹாலில் மிருளாலினி தன் பெற்றோரை அணைத்து கண்ணீருடன் நின்று கொண்டிருந்தாள். அவளை பார்த்தவாறு அவனது பெற்றோரும், சிம்மாவின் பெற்றோரும், நட்சத்திராவும் இருந்தனர்.

ஓடி வந்த தமிழினியன் அவர்களை பார்த்து நின்று அவர்களை பார்த்தான்.

இனியா, “தலையை கூட சரி செய்யாமல் வெளிய வந்துருக்க?” அவன் அம்மா வேல்விழி கேட்டுக் கொண்டே அவனிடம் வந்தார். எல்லாரும் அவனை பார்க்க, மிருளாலினியும் பெற்றோரை விலக்கி அவனை பார்த்தாள். அவர்களும் அவனை பார்த்தனர்.

“அம்மா” என்று பேச முடியாமல் வாசலை நோக்கி விரைந்து நடந்தான்.

“வந்தவங்கல்ல கேட்டுட்டு போ” கிருபாகரன் சொல்ல, “சுஜி வராத” என்று சத்தமிட்டான் தமிழினியன்.

“சுஜியா?” என்று வேல்விழியும் கிருபாகரனும் அவன் பின் ஓட, “மாமா” என்று தமிழினியனிடம் வந்தாள் பத்து வயதையொத்த தீப்தி.

தீபு, நீ பாட்டிட்ட இரு. மாமா வாரேன் என்று அவன் விலகி நடக்க, சுஜித்ராவோ சினமுடன் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்து உள்ளே செல்ல முடியாமல் மிருளாலினி போல் இடித்து கீழே விழுந்தாள். அனைவரும் அதிர்ந்து அவளை பார்த்தனர். தமிழினியன் நின்று விட்டான்.

மிருளாலினி ஓர் அடி எடுத்து வைக்க, குறுக்கே டீப்பாய் ஒன்று தானாக நகர்ந்து வந்து அவளை தடுத்தது.

“சுபி” என்று அனைவர் மனமும் உருப்போட, சுஜித்ரா மீண்டும் உள்ளே வர முயன்றாள்.

அக்கா, நீ வராத. கிளம்பு என்று தமிழினியன் கூற, “என்னடா அவ வரவும் என்னை விரட்டுறீயா? என்னடா செஞ்ச?” என்னால உள்ள வர முடியல என்று மீண்டும் இடித்துக் கொண்டாள் சுஜித்ரா.

கதவு திறந்து தான இருக்கு. தீபு உள்ள வந்தா. “நான் எப்படி வர முடியாமல் போகும்?” சுஜி கேட்க, நீ வந்த நோக்கம் தப்பு. அதான் உன்னால உள்ள வர முடியல.

இனியா, “சாமியார் மாதிரி பேசுற?” சுஜி கேட்க, அவனது மொத்தக் குடும்பமும் அங்கே வந்தது.

“இன்று பெரிய சம்பவமே இருக்கு” என்று நட்சத்திரா அன்னம் காதில் ஓதினான்.

“ஆமா செல்லம்மா” என்று அவரும் ஒத்து பேசினார்.

அனைவரும் வெளியே நின்று கொண்டிருக்க, “எக்ஸ்யூஸ் மீ” என சிம்மா அவர்களை நகர்த்தி விட்டு வீட்டிற்குள் வந்தான்.

ஹே, “என்னால உள்ள போக முடியல. அவன் போறான்” என்று சுஜித்ரா சிம்மாவின் முகத்தை பார்த்து அதிர்ந்தாள்.

“என்னாச்சுடி?” அவள் அம்மா கேட்க, அம்மா..இவர் அர்சு மாதிரியே இருக்கார் என்றாள் சுஜித்ரா.

தீபு சொல்வாளே! அந்த பையனா? அம்மா கேட்க, ஆமாம்மா என்றாள் சுஜித்ரா. அனைவரும் உள்ளே வந்தனர். சுஜித்ரா ஆச்சர்யமுடனும் குழப்பமுடனும் உள்ளே வந்தாள்.

சிம்மாவை பார்த்ததும் சுபிதனின் ஆன்மா எல்லாரையும் உள்ளே விட்டிருக்கும்.

மிரு, ஸ்ட்ராங்கா ஒரு “டீ” என்று சிம்மா மிருளாலினியிடம் கேட்டுக் கொண்டே அனைவரையும் பார்த்து சோபாவில் அமர்ந்தான்.

மாமா, இங்க என்ன நடக்குது? நீ டீ கேக்குற? நட்சத்திரா கேட்க, “அடியேய் உன்னோட கணவன் செத்து போயிட்டான்னு சொன்ன? இவரை மாமான்னு சொல்ற?” சுஜித்ரா அவளிடம் கேட்டாள். நட்சத்திரா ஏற்கனவே உரைத்த பதிலை சொன்னாள்.

“என்னது? உன்னோட கணவன் வேறவன்னா? உன் மகன் எப்படி இவர் போல் இருக்கான்? இவர் உன்னோட அத்தை மகன் என்பதால் அப்படியே உரித்தா இருப்பான்?” சுஜித்ரா கேட்க, சிம்மாவும் அவன் குடும்பமும் இருவரையும் பார்த்தனர்.

அக்கா, “நான் பொய் சொல்றேன்னு நினைக்கிறீங்களா?” என்று நட்சத்திரா கேட்க, யாருக்கு தெரியும் என்றாள் சுஜித்ரா.

சுஜி, “நாம எதுக்கு வந்தோம்ன்னு மறந்துட்டியா?” அவளது கடைசி சித்தப்பா நினைவூட்ட, அட ஆமா, இவரை பார்த்து வந்த விசயத்தையே மறந்துட்டேன் என்று சுஜி மிருளாலினி அருகே வந்தாள்.

ஓ..”உன் கழுத்தில் தான் என் தம்பி தாலி கட்டினானா?” என்று மிருளாலினியை கீழிருந்து மேலாக பார்த்தாள் சுஜித்ரா. மிருளாலினி தமிழினியனை பார்த்தாள்.

மிரு, “நான் டீ கேட்டேன்” என்று சிம்மா சத்தம் உயர்ந்தது. மிருளாலினி பெற்றோர் சிம்மாவை பார்த்தனர்.

சிம்மா, “நான் எப்படி?” மிரு கேட்க, “எப்படியா? என்ன கேக்குற மிரு? புரிந்து தான் கேட்கிறாயா? உன் வீட்டில் உன்னிடம் தான கேட்க முடியும்?” சிம்மா தமிழினியனை பார்த்துக் கொண்டே பேசினான்.

மாமா, “நீ வீட்டுக்கு வா” என்று நட்சத்திரா அழைக்க, அவளை முறைத்த சிம்மா, “நான் உன்னிடம் பேசலை” என்றான் திமிறாக.

அத்தை, “உங்க மகனுக்கு எவ்வளவு திமிரு பாருங்க” என்று அன்னத்திடம் கூற, அவன் மீண்டும் முறைத்தான்.

மாமா, “உன் முறைப்புக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்” என்று நட்சத்திரா சொல்ல, மிரு..என்று சிம்மா மீண்டும் அழைத்தான்.

“எங்க சித்தப்பா வீட்ல வந்து என்ன உரிமையா பேசுறீங்க? நீங்க போலீஸ்ன்னா நாங்க பயப்படணுமா?” என்ற சுஜித்ரா, இனியா இவரை வெளியே போகச் சொல்லு என்றாள்.

“முடியாது” என்று தமிழினியன் சொன்னான்.

“இவர் யாருடா? நம் வீட்டில் அதிகாரம் செய்ய?” சுஜித்ரா கேட்க, “அதை என்னிடமே கேட்கலாமே?” சிம்மா பேச, அவனை பார்த்து விட்டு “சொல்லுடா இனியா?” என்றாள்.

“நான் மிருளாலினியின் அண்ணன்” என்றான் சிம்மா. எல்லாரும் அதிர்ந்து அவனை பார்த்தனர்.

மாமா, “என்ன சொன்ன?” நட்சத்திரா கேட்க, “நான் சொன்னது உன் காதில் விழவில்லையா?” அவன் கேட்டான்.

“அண்ணனா?” என்று மிருளாலினி சிம்மாவையும் அவளது பெற்றோரையும் பார்த்தாள். எல்லாரும் சிம்மாவை பார்த்தனர்.

சிம்மா, “நீ இவ்வளவு காலையிலே எதுக்கு வந்த?” என்று மிருளாலினி கேட்க, சுபி வரச் சொன்னான். “வந்தேன்” என்றான் சிம்மா.

“அவன் பேசுவது உனக்கு கேட்குதா?” தமிழினியனும் சிம்மாவிடம் வந்தான்.

“யார் சுபி?” கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் தமிழினியனின் சித்தப்பா பொண்ணு சுவாதி கேட்டாள்.

“செத்துப் போன மிருவோட கணவன்” என்று சிம்மா சொல்ல, “என்னது? செத்துப் போனவனா?” என்று தமிழினியனின் பெரியம்மாவும் மற்றவர்களும் அதிர்ந்தனர்.

ஆமா, “மிருவை தொந்தரவு செய்தால் கொல்ல கூட தயங்க மாட்டான்” என்று சிம்மா புன்னகையுடன் சொல்ல, “சித்தப்பா உங்க வீட்ல ஆவி இருக்கா?” சுஜித்ரா பயத்துடன் கேட்டாள்.

ஆமாம்மா, “உன்னை உள்ளே விடாமல் சுபி தான் தடுத்தான்” என்றார் கிருபாகரன்.

சித்தப்பா, “ஏதோ உறவுக்காரன் போல பேசுறீங்க?” சுஜித்ரா கண்கள் எல்லா பக்கமும் அலைபாய பேசினாள்.

அனைவரும் பயத்துடன் தனியாக ஒதுங்கி நின்றனர்.

சற்று நேரம் அமைதி நிலவ, ஆன்மா ஏதும் செய்யாது என்று சுஜித்ரா மிருளாலினியிடம் வந்து, “வெளிய போடி. வரும் போது பேயையும் கூட்டிட்டு வந்திருக்கியா?” என்று மிருளாலினியை சுஜித்ரா தள்ள, “அக்கா..”என்று தமிழினியன் சத்தமிட்டு அவளை கீழே விழாமல் பிடித்தான்.

புயல் காற்று பலமாக அடிக்க, கருப்பாக உருவமொன்று சுழல்காற்றின் முன் தெரிந்தது. அனைவரும் பயந்து சுவற்றை ஒட்டி நிற்க, வீட்டிலுள்ள பொருட்கள் பறந்தது. அவ்வுருவம் சுஜித்ராவை நோக்கி வந்து, மிரு இங்கே தமிழுடன் தான் இருப்பா. அவளை யாராவது தொந்தரவு செய்தீங்க கொல்லாமல் விட மாட்டேன் என்று சுஜித்ரா கழுத்தை பிடித்து, தமிழினியனையும் மிருளாலினியையும் பார்த்தது. தமிழினியன் மிருளாலினி முன் வந்து அவளை மறைத்து நின்றிருந்தான்.

சுபி, “அவங்கள விடு” என்று சிம்மா கத்தினான். மிருளாலினி சுபிதன் ஆன்மாவின் செயல்களை பார்த்து பயந்து தமிழினியனை கட்டி இருந்தாள்.

விடு சுபி, நீ யாரையும் காயப்படுத்தி ஈவில் ஆகிடாத. மிருவை நாங்க பார்த்துக்கிறோம் என்று சிம்மா கத்தினான்.

சுபிதனின் ஆன்மா மிருளாலினி தமிழினியனை பார்த்துக் கொண்டே மறைந்தது. காற்றின் வேகமும் மொத்தமாக குறைந்தது. சுஜித்ராவின் பெற்றோர் அவளிடம் ஓடி வந்தனர்.

“வாங்க நாம போகலாம்” என்று சுஜித்ராவின் அப்பா கோபமாக சத்தமிட்டார்.

சரிங்க பெரியப்பா, “எல்லாரும் கிளம்புங்க” என்று வெறுமையுடன் தமிழினியன் சொல்ல, எல்லாரும் அவன் மீது கோபத்தில் கத்தினார்.

“நிறுத்துங்க” என்று கத்திய சிம்மா, சுஜித்ரா அப்பாவிடம் வந்தான்.

ஒரு நிமிடம் சிந்தித்து பேசுங்க. “உங்க பொண்ணு மிருவோட நிலையில் இருந்தா என்ன செய்வீங்க?” இதுவரை சுபியின் ஆன்மா கோபமாக ஏதும் செய்ததில்லை. ஆனால் இப்ப அவன் உங்க பொண்ணை ஏதாவது செய்திருந்தால் “ஈவில் கோஸ்ட்” ஆகி இருப்பான். பின் மிரு அருகே யாரும் சிறிதாக கூட கோபப்பட உயிருடன் இருக்க மாட்டாங்க.

அது அவளோட தலைவிதி. “அதுக்கு நாம் என்ன செய்வது?” என்று சித்தி ஒருவர் கூற, “யாரும் ஏதும் பேச வேண்டாம். கிளம்புங்க” என்று தமிழினியன் சத்தமிட்டான்.

பாருடா உன்  பிள்ளையை. நம் அனைவரின் உயிரை விட அவள் தான் இவனுக்கு மேலாகி விட்டாளோ! அதுவும் ஏற்கனவே திருமணம் ஆனவள். குழந்தை ஏதும் இருக்கா? என்று ஏளனமாக சுஜித்ராவின் அப்பா கேட்டார்.

தமிழினியனுக்கு முன் கிருபாகரன் சத்தமிட்டார்.

“கிருபா?” என்று வந்திருந்த அனைவரும் அவரை பார்த்தனர்.

ஆமாடா, இந்த பொண்ணுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. குழந்தை இல்லை. இப்ப இந்த பொண்ணு தான் எங்க வீட்டு மருமகள். இதுல எங்க யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. “என்னம்மா?” என்று வேல்விழியை பார்த்தார் கிருபாகரன்.

ஆமா, “மிருளாலினி தான் எங்க மருமகள்” என்றாள் வேல்விழியும்.

“அவன் தான் புரியாம செய்றான்னா? நீ அவன் அப்பா. இப்படி பேசலாமா?” என்று அவன் பெரியப்பா கேட்டார்.

பெரியப்பா, அப்பா பிஸினஸ்ல சிரமப்படும் போது உதவுனீங்க அதுமட்டுமல்ல  உங்க தம்பியிடம் பேசுறீங்க சரிதான். ஆனால் இனி யாரும் மிருளாவை பற்றி பேசக் கூடாது என்றான் தமிழினியன்.

“அதெப்படிடா பேசாம இருப்போம்?” பெரியம்மா கேட்க, “எல்லாருக்கும் என்ன தான் பிரச்சனை?” அவன் கேட்க, “நம்ம குடும்பத்து கௌரவம் என்ன ஆவது?” என்று அவன் மாமா கேட்டார்.

“கௌரவம் தான் பிரச்சனையா?” என்று கிருபாகரன் கோபமாக எல்லாரும் கிளம்புங்க. எனக்கு என்னோட மகனின் விருப்பத்தை விட பெரிது ஏதுமில்லை என்று அறைக்கு சென்றார்.

ஏங்க, “நில்லுங்க” என்று வேல்விழி அவர் பின் சென்றார். மீண்டும் வெளியே வந்த கிருபாகரன் ஒர் ஒப்பந்த கோப்பை சுஜித்ரா அப்பாவிடம் நீட்டி, நாம பார்ட்னர்ஷிப்பை முடிச்சுக்கலாம் என்றார். அனைவரும் அதிர்ந்தனர்.

“அப்பா” தமிழினியன் சத்தமிட்டான்.

இனியா, “நீ அமைதியா இரு” என்று கிருபாகரன் சொல்ல, “நான் பேசலாமா?” என்று மிருளாலினியின் அப்பா கேட்டார்.

உன்னோட மகளால தான் இவ்வளவு பிரச்சனையும் என்று அவன் பெரியப்பா கத்த, சரியா சொல்றீங்க. முன் போல் என்னோட பொண்ணு உறவுகளால் கஷ்டப்பட வேண்டாம். அவளுக்கு பெற்றோர் உயிரோட தான் இருக்கோம். நாங்களே அவளை பார்த்துப்போம். ஆனால் இவரால் கட்டப்பட்ட தாலியை கழற்றி தர முடியாது என்று மிருளாலினி அப்பா அவள் கையை பிடித்து நகர, அவள் அம்மாவோ மனமுடைந்து அமர்ந்தார்.

“வாரீயா? இல்லையா?” என்று மிருளாலினி அப்பா அவள் அம்மாவை அதட்ட, கண்ணீருடன் எழுந்தார்.

மிருளாலினி கையை தமிழினியன் பிடிக்க, அவன் கையை தட்டி விட்ட மிருளாலினி அப்பா..இதே மாதிரி தான் சுபி மாப்பிள்ளை வீட்டில் ஆரம்பிச்சாங்க. என் பிள்ளையை உயிரோட இருக்க காரணமே மாப்பிள்ள மேல வச்சிருந்த காதல் தான். ஆனால் உங்க மேல அது போல் என் பிள்ளைக்கு காதலும் இல்லை. ஏற்கனவே அவள் பட்ட கஷ்டம் போதும். இதுக்கு மேல அவள் உயிரோடவாது இருக்கணும் என்று அவர் சொல்ல, மிருளாலினி கண்ணீருடன் அவள் அப்பாவை அணைத்து, நான் இங்க இருக்கேன்ப்பா என்றாள்.

“இங்க இருக்கப் போறீயாம்மா?” ஏற்கனவே உன் பேச்சையும் நட்சத்திரா பேச்சையும் கேட்டு திருமணம் செய்து வைத்து நிம்மதியில்லாமல் உன்னை விட்டு இருந்தது போதும். நான் உன்னிடம் ஆப்சன் ஏதும் கேட்கலை. நீ நம்ம வீட்டுக்கு தான் வர்ற. இதுக்கு மேல் நீ கஷ்டப்படுறதை பார்க்க எனக்கு திராணியில்லை. இதுக்கு மேல நீ இங்க தான் இருக்கணும்ன்னா நான் செத்த பின் இந்த வீட்டில் இருந்துக்கோ என்று தந்தையாக மனதில் ஏற்பட்ட ரணத்துடன் பேசினார்.

அப்பா, “என்ன சொல்லீட்டீங்க?” என்று அழுதாள் மிருளாலினி.

“எதுக்கு இப்படி பேசுறீங்க?” இவங்களுக்கு மிருவை பற்றி தெரிந்தால் புரிஞ்சுப்பாங்க என்றான் தமிழினியன்.

இல்லப்பா, என் பிள்ளையை அவங்க படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமில்லை. உடலளவிலும் மனதளவிலும் அதிகமாக காயப்பட்டுட்டா. இதுக்கு மேல் அவள் கஷ்டப்படுறதை பார்ப்பதை விட நாங்க இல்லாமல் போவதே மேல் என்று மிருளாலினி அப்பா கண்ணீருடன் கூறினார்.

“அதுக்காக எத்தனை நாள் உங்களுடன் அவளை வச்சுப்பீங்க?” சிம்மா கேட்டான்.

நாங்க இருக்கும் வரை.

“நீங்க இல்லாத போது அவளுக்கு யார் இருப்பா அங்கிள்?” நட்சத்திரா கேட்டாள்.

அம்மாடி, “நீ தனியா வாழலையா?” மிருவும் சுபி மாப்பிள்ளையும் உன்னை பற்றி எல்லாமே சொல்லி இருக்காங்க. உன்னை மாதிரி இருந்துட்டு போகட்டும் என்றார் அவர்.

அது அவ்வளவு சாதாரணமில்லை அங்கிள். மனதில் நிம்மதி இருக்காது. சந்தோசம் இருக்காது. அதை விட நம்ம நாடு இருக்கும் நிலையில் பாதுகாப்பு இருக்காது. எல்லாத்தையும் கடந்து தான் வந்திருக்கேன் அங்கிள். தயவு செய்து அவளை அப்படி வாழ விட்றாதீங்க. யாருமில்லாமல் வாழும் வாழ்க்கை சாதாரணமில்லை. எனக்கு அர்சு பிறந்த பின் தான் மனம் ஓர் நிலைக்கு வந்தது. என் பாதுகாப்பு அவன் தான். அவனுக்கு நான் தான்.

மிரு இதுவரை பட்ட கஷ்டத்தை விட அதிகமாக கஷ்டப்பட வேண்டி இருக்கும். நீங்க இப்ப கூட்டிட்டு போயிடுவீங்க. நம்ம கிராமத்துல்ல என்ன பேச்செல்லாம் பேசுவாங்க? உங்களுக்கு தெரியாதா? தயவு செய்து அவளை விடுங்க அங்கிள். நானும் அருகில் இருந்து பார்த்துக்கிறேன். “ப்ளீஸ் அங்கிள்” என்று நட்சத்திரா அழுதாள்.

நீ சொல்லறது எல்லாமே சரி தான். இதுக்கு மேல என் பிள்ளை வாழணும்ன்னா அந்த வீட்ல இருக்கிறவங்க மட்டுமல்ல அவங்க சொந்த பந்தம் எல்லாரும் அவளை ஏத்துக்கணும். அதுவரை அவள் எங்களுடன் இருக்கட்டும்.

மிரு, “இங்க தான் இருப்பா. விருப்பம் இருக்கிறவங்க இங்க இருக்கட்டும் இல்லைன்னா போகட்டும்” என்ற தமிழினியன் மிருளாலினி அப்பாவிடம், “நீங்க சொன்னது போல் அவளுக்கு என் மீது காதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்ப வரை நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க காரணம் இவள் தான். எனக்கு மிருவை பள்ளியில் படிக்கும் போதே தெரியும்” என்றான்.

“என்னது? அப்படின்னா? நீ காதலித்த பொண்ணு இவள் தானா?” என்று சுஜித்ரா கேட்டாள். அவன் அவளை முறைத்தான்.

எங்களோட முதல் சந்திப்பு பள்ளியில் இல்லை. “பூங்காவின் எதிரே இருந்த பஸ் ஸ்டாப்பில் தான்” என்றான் தமிழினியன்.

சார், “பள்ளியில் பார்த்து தான அவளை காதலித்ததாக சொன்னீங்க?” நட்சத்திரா கேட்டாள்.

இல்லை. அவளுக்கு என்னை நினைவிலே இல்லை. ஆனால் நான் எப்போதும் அவள் நினைவில் தான் இருந்தேன். இருக்கிறேன் என்றான்.

“பஸ் ஸ்டாப்பா?” என்று தன் அப்பா கையை விடுத்து அவனிடம் வந்தாள் மிருளாலினி.

ஆமா, பஸ் ஸ்டாப்ல அந்த பூனைக்குட்டியை காரில் இடித்தது நான் தான். நாம் சேர்ந்து தான் ஹாஸ்பிட்டல் போனோம். “உனக்கு நினைவே இல்லைல்ல?” தமிழினியன் கேட்டான்.

ஆமால்ல. பள்ளியில் சேரும் முன். “அப்பா நான் சொன்னேன்ல்ல” என்று அவள் அப்பாவை பார்த்தாள். அவர் கோபமாக அவளை பார்த்தார்.

அன்றே எனக்கு உன்னை பிடித்து விட்டது. இரட்டை சடை, பாவாடை தாவணியில் தான் உன்னை முதலாக பார்த்தேன். அதன் பின் அதே பஸ் ஸ்டாப்பிற்கு ஒரு வாரமாக உன்னை பார்க்க வந்தேன். ஆனால் நீ வரவேயில்லை.

பின் தான் எதிர்பாராத நேரத்தில் உன்னை நான் படிக்கும் பள்ளியில் பார்த்தேன். ஏற்கனவே சுபிக்கும் எனக்கும் ஆகாது. நீ அவன் வகுப்பில் தான் இருந்தாய். அதை வைத்து தான் என்னிடம் அவன் பெட் கட்டினான். அன்று செய்த முட்டாள் தனத்தை எண்ணி பலமுறை வருந்தி இருக்கேன். ஆனால் பெட்டில் தோற்று உன்னை இழப்பேன் என்று நான் கொஞ்சமும் நினைக்கவில்லை. உன்னுடன் அவன் நெருக்கமாக இருப்பதை பார்க்க பிடிக்காமல் தான் வேறொரு பள்ளிக்கு மாறினேன். ஆனால் அங்கேயும் நீ போட்டியில் கலந்து கொள்ள வந்த. அப்பொழுது அவன் இல்லை. உன்னிடம் பேசவாது செய்யலாம் என்று நினைத்த போது தான் நீ போட்டி முடிந்த கையோடு கிளம்பியது தெரிந்தது. அது தெரியாமல் தேடிக் கொண்டிருந்தேன். என்னுடைய தோழர்கள் சொல்லி தான் நீ சென்றதே தெரிந்தது.

பின் நீ படித்த கல்லூரிக்கு வேறு வேலையாக வந்தேன். நான் முதலில் சந்தித்தது நட்சத்திராவை என்றான்.

“என்னது? என்னையும் முன்னமே உங்களுக்கு தெரியுமா டாக்டர் சார்?”

ஆமா தெரியும். நான் செல்ல வேண்டிய இடத்திற்கு நீ தான் வழிகாட்டினாய். நான் செல்லும் போது தான் சுபியை பார்த்தேன். ஆனால் அவன் எந்த போட்டி எண்ணமும் இல்லாமல் என்னிடம் நன்றாகவே பேசினான். நீங்க இருவரும் காதலிப்பதாக சொன்னான். அதனால் உன்னை அடுத்த பார்த்த சில இடங்களிலும் உன்னை தவிர்த்தேன். நேற்று கூட கோவிலில் உன்னை பார்த்து பாராதது போல் தான் சென்றேன். ஆனால் யாரால் என் காதலை கூற முடியாமல் போனதோ? அவனே உன்னையும் என்னையும் சேர்த்து வச்சுட்டான் என்று மிருளாலினி அப்பாவை தமிழினியன் பார்த்தான்.

“சேர்த்து வைப்பதா?” என்று அவர் கேட்க, ஆமா மாமா, இப்ப மிருளா உங்க பொண்ணாக உங்களுடன் வந்திருந்தாலும் என்னோட மனைவி தானே! நான் கட்டிய தாலி செயின் தான் அவள் கழுத்தில் உள்ளது. என் மனைவியை நான் யாருடனும் செல்ல அனுமதிக்க முடியாது என்றான் உறுதியாக.

மிருளாலினி அப்பா கோபமாக அவனை அடிக்க வந்தார். “அப்பா” என்று மிருளாலினி சத்தமிட ஓங்கிய கையை இறக்கினார் அவள் அப்பா.

“இப்ப என்னம்மா? இவருடன் இருக்கப் போகிறாயா?” அவள் அப்பா கேட்க, அவன் கையை பிடித்த மிருளாலினி, ஆமாப்பா..என்னோட காதல் தான் ஒன்றுமில்லாமல் போனது. இவர் காதலாவது வெற்றியடையட்டுமே!  எப்போதும் நாம நம்மை பற்றி மட்டும் நினைக்கக் கூடாது. மற்றவர் நிலையையும் யோசிக்கணும்ன்னு” நீங்க தானப்பா சொல்வீங்க.

எனக்கு திருமணமானது தெரிந்தும் எனக்காக அவர் காத்து இருந்திருக்கார். அவர் காதலுக்கு முன் எங்க காதலெல்லாம் ஒன்றுமில்லை.

ஆனால் மிரும்மா, அவரது சொந்தக்கார்களுக்கு உன்னை பிடிக்கலைம்மா அவள் அம்மா சொல்ல, அப்பா..சுபி குடும்பத்துல என்னை யாருக்கும் பிடிக்கலை. ஆனால் மாமா எனக்காக அவரோட பார்ட்னர்ஷிப்பையே விட முன் வந்துட்டார். இவரும் அத்தை, மாமாவும் துணைக்கு இருக்காங்க. நான் சமாளித்துக் கொள்வேன் என்றாள். தமிழினியனும் அவன் குடும்பமும் வியந்து பார்த்தனர்.

“உங்க முன்னால் கணவரின் குடும்பம் உங்களை கொடுமைப்படுத்தினாங்களா?” என்று சுவாதி கேட்டாள். மிருளாலினி முகம் வாடி தலை கவிழ்ந்து நின்றாள்.

அவ சுபியோட மூன்று மாதம் தான் வாழ்ந்தாள். அவன் இறந்து விட்டான். அவன் நினைவு அங்கேயே உள்ளது என்று அவனை மனதில் நினைத்துக் கொண்டு அவர்கள் செய்யும் சித்திரவதைகளை பொறுத்துக் கொண்டு தான் இந்த ஐந்து வருடத்தை அங்கேயே கழித்து இருந்திருக்காள்.

“என்னோட மிரு யார் துணையும் இல்லாமல், அவளை தேடி வந்த பெற்றோரை வர விடாமல் செய்து தனியாக அனைத்து துன்பத்தை இழுத்து போட்டுக் கொண்டு வாழ்ந்தாள்” என்று நட்சத்திரா கண்ணீருடன் அவளை வந்து அணைத்தாள். மிருளாலினிக்கு அனைத்தும் நினைவு வர, அவளும் கதறி அழுதாள். அனைவரும் அவளை திகைத்து பார்த்தனர்.

மிருளாலினி அம்மாவும், அன்னமும் அவர்களுக்கு ஆதரவாக அவர்களை அணைக்க, வேல்விழி அவர்களிடம் வந்து மிருளாலினி, நட்சத்திரா தோளில் கை வைத்தார்.

“முதல்ல பேச வேண்டியதை பேசலாமா?” என்று கிருபாகரன் சத்தமாக கேட்டார். அவர்கள் அழுகை நின்று அவரை பார்த்தனர். மிருளாலினி நட்சத்திராவை விட்டு எழுந்து அவரிடம் சென்று, அவர் கையில் இருந்த கோப்புக்களை வாங்கி வேல்விழியிடம் கொடுத்து விட்டு, தமிழினியன் அருகே சென்று அவனை பார்த்துக் கொண்டே அவன் கையை இறுக பற்றினாள்.

யார் என்ன சொன்னாலும் இவரை விட்டு நான் செல்வதாக இல்லை. “நான் என்ன செய்யணும்? சொல்லுங்க?” என்று சுஜித்ராவை மிருளாலினி பார்த்தாள்.

“அதெல்லாம் நீ எதுவும் செய்ய தேவையில்லை” என்று தமிழினியன் கூற, இல்லை..இது சரியாக இருக்காது. அவங்க சொல்லட்டும். நான் செய்கிறேன்.

இங்க பாரு. இதுக்கு முன்னாடி நீ எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் என் கையால் எப்பொழுது உன் கழுத்தில் தாலி ஏறியதோ அப்பொழுதே என்னுள் நீ சரிபாதி ஆகி விட்டாய். சோ, நீ என்ன செய்வதாக இருந்தாலும் நானும் சேர்ந்து செய்கிறேன் என்று தமிழினியன் கூறினான். இதை கேட்டவுடன் தான் மிருளாலினி அப்பாவிற்கு மூச்சே வந்தது. தமிழினியனை பிடித்தும் விட்டது.

“சொல்லுங்க? நாங்க என்ன செய்யணும்?” தமிழினியன் அவன் குடும்பத்தை பார்க்க, மிருளாலினி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். எல்லாரும் அமைதியாக இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“சொல்லுங்கப்பா? இவ்வளவு நேரம் சத்தம் பெரியதாக இருந்ததே!” கிருபாகரன் கேட்க, “பேச வேண்டியதை பார்க்கலாம்” என்று சுஜித்ரா அப்பா சொல்ல, அனைவரும் அவர் பேச்சு இசைந்தனர்.

“இந்த பொண்ணு விதவையா இருந்தாலே? இது அவளுக்கு இரண்டாவது திருமணம்ல்ல?” அதை பத்தி சொல்லுங்க கிருபாகரன் கேட்டார்.

கிருபா,” அமைதியா இருக்கியா?” விசயம் முழுதாக அறிந்து கொள்ளாமல் பேசியது தவறு தான். நாங்க அந்த பொண்ணை ஏத்துக்கிறோம். “என்னப்பா சொல்றீங்க?” என்று அவர் கேட்க, ஆமா “கொஞ்சம் கோபப்பட்டுட்டோம்” என்று சுஜித்ரா சொல்ல, “ஓ…இதான் கொஞ்சமா?” அமைதியாக இருந்த சுபியையே கோபமாக்கிட்டு, “கொஞ்ச கோபமா?” என்று சிம்மா சுஜித்ராவை முறைத்தான்.

“இப்பவும் அந்த ஆவி இங்க தான் இருக்குமா சார்?” என்று அவள் சிம்மாவிடம் கேட்க, அதை நீங்க சத்தமா கேட்டாளே! அவன் காட்டிடுவான்.

“என்ன? காட்டுவானா?” நோ..நோ..காட்டவே வேண்டாம். அவர் இருந்தாலும் சரி இல்லைன்னாலும் சரி, மிருளாவை எங்க வீட்டுப் பொண்ணா ஏத்துக்கிறோம் என்று சுஜித்ரா சொன்னான்.

அப்பாடா, “சுபி இனி உனக்கு நிம்மதி தானடா” சிம்மா சத்தமிட, அங்கிருந்த நாற்காலி ஆடியது.

“ஓ.கே” என்று சிம்மா சொல்ல, சரி “பொண்ணோட அம்மா, அப்பா என்ன சொல்றீங்க?” என்று சித்தப்பா கேட்டார்.

உங்க எல்லாருக்கும் மனப்பூர்வமான சம்மதம் இருந்தால் எங்களுக்கும் ஓ.கே தான்.

“ஏற்கனவே தான் தாலி கழுத்தில் இருக்கே? ரிசப்சன் மட்டும் வைக்கலாமா?” ஒருவர் கேட்க, இல்ல எல்லாமே முறைப்படி நடக்கணும் என்று இருநாட்களில் சுபமுகூர்த்தம் இருக்கு. அன்று திருமணம் வச்சுக்கலாம் என்றார் பெரியப்பா.

“இரு நாளிலேவா? எப்படி எல்லாமே பார்த்துக்க முடியும்?” மிருளாலினி அம்மா கேட்க, நாங்க அதிகமான ஆட்களுக்கு சொல்லலை என்று அவள் அப்பா கூறினார்.

“எல்லாருக்கும் சொல்லலாமே?” அவள் அம்மா, அப்பாவை முறைத்தார்.

இருநாளில் அலைந்து திரிந்து எல்லாருக்கும் சொல்ல முடியாது என்றார் அவர்.

“இதான் பிரச்சனையா? முக்கியமான சொந்தங்களுக்கு மட்டும் நேரில் சொல்லுங்க. மீதி இருப்பவர்களுக்கு போனில் அழையுங்கள்” என்று கிருபாகரன் சொல்ல, “அலைந்தால் பிள்ளையை பார்க்கணுமே?”

“அதான் நாங்க இருக்கோமே!” என்று வேல்விழியும் அன்னமும் ஒருவாறு சொல்லி விட்டு ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

அவ எங்க வீட்டிலே இருக்கட்டும். நீங்க அவளுடன் தங்கிக்கோங்க என்று அன்னத்திடம் வேல்விழி கூறினார். நட்சத்திரா அமைதியாகவே நின்றாள்.

ஸ்டார், நீ இப்படியே நின்றால் உன்னால எப்படி இரு நாட்களுக்குள் அனைத்தையும் தயார் செய்ய முடியும். நீ தான் முழு பொறுப்பு. உன்னோட பசங்களை அழைத்து வேலைய ஆரம்பி என்று தமிழினியன் சொல்ல,

“அந்த ஸ்டாரை மட்டும் விட முடியுமா?” சிம்மா அவனிடம் கேட்டான். நட்சத்திரா அமைதியாக, நான் தொடங்கணும். கொஞ்ச நேரத்தில் எல்லாரும் வரவும் அரேஞ்மென்ட்டை மட்டும் தேர்ந்தெடுங்க சார் என்று சொல்லி விட்டு, மிருளாலினியை மகிழ்வுடன் அணைத்து விட்டு அவள் வீட்டிற்கு கிளம்பினாள்.

சரி, “நட்சத்திரான்னே அழைக்கலாமா சார்?” தமிழினியன் கேட்க, ம்ம்..என்று நட்சத்திரா சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தான் சிம்மா. நட்சத்திராவின் அப்பொழுதைய கண்ணீர் அவனுக்கு வேதனையளித்தது. “அவளை தனியே விட்டு தவறு செய்து விட்டோமோ?” என்று அவன் எண்ணினான்.

வாங்க ஆளுக்கொரு வேலையாக செய்ய ஆரம்பிக்கலாம் என்று பெரியப்பா கூற, “தமிழினியன்- மிருளாலினி”க்கான நாளைய நிச்சய விழாவிற்கு அனைத்தையும் தயார் செய்ய ஆரம்பித்தனர்.

தமிழினியனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி இருந்தாலும், “ஓர் ஓரத்தில் அவள் தன் காதலுக்காக தான் திருமணத்தை ஏற்றுக் கொண்டாள். அவளுக்கு தன் மீது காதல் இல்லையே? என்ற வருத்தம் இருக்க தான் செய்தது”.