பாலா, “எழுந்திரு” என்று பிரகவதி பாலாவை எழுப்பினாள்.
“என்னடா?” என்று வாய் குழறியவாறு எழுந்தான் பாலா. அவன் தலையில் கை வைத்து, “இப்படி வலிக்குதே!” என்று அமர்ந்து பிரகதிவதியை பார்த்து, “நீ என்ன செய்ற?” என்று அறையை பார்த்தான்.
“நாம எங்க இருக்கோம்?” என்று அவன் கேட்க, உதிரன் சார் அறையில இருக்கோம். “நீ என்ன வேலை பார்த்து வச்சிருக்க தெரியுமா?” எல்லாமே போச்சு. இனி ஒரு நிமிசம் கூட இங்கே நம்மை இருக்க விட மாட்டாங்க என்றாள்.
“என்ன?” என்று கண்ணை மூடி சிந்தித்தான். அவன் நிஷாவிடம் நடந்து கொண்டது நினைவிற்கு வந்தது.
“என்ன செஞ்சு வச்சிருக்கேன்? நீயாவது தடுத்திருக்கலாம்ல்ல?” அவன் சொல்ல, முதல்ல உன்னோட அறைக்கு போ. தயாராகி வா என்று அவனை திட்டி அனுப்பினாள்.
பாலா தயாராகி வெளியே வர, வா “சாரிடம் பேசலாம்” என்று பிரகவதி அவனை அழைத்தாள். கையில் கட்டுடன் ரித்திகா இருவரையும் முறைத்துக் கொண்டே அவளறைக்கு சென்றாள்.
ரித்தி..பாலா அழைக்க, ரித்திகா அவனை பார்த்து “நல்ல வேலை பார்த்துருக்க” என்றாள் சினமுடன்.
இல்ல ரித்தி, அவன் பேச அவள் சென்று விட்டாள்.
சரி, அவ கோபத்தை பின் சரி செய்து கொள்ளலாம். முதல்ல மேம்மிடம் மன்னிப்பு கேளு என்று நிஷா அறைக்கதவை ஓலிக்க விட்டனர்.
எஸ், அவள் அழைக்க, இருவரும் உள்ளே வந்தனர்.
ரட்சகனும் உதிரனும் பாலாவை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தனர். நிஷா அவளது டாட்டையும் உதிரனையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
நிஷாம்மா, நீ வெளிய இரு ரட்சகன் சொல்ல, “எதுக்கு டாட்?” என்று புன்னகைத்த அவள் முகம் மாறியது.
“கோ அவிட் சைடு” என்றார்.
நோ டாட், இதில் நானும் சம்பந்தப்பட்டு இருக்கேன். நான் இங்கே தான் இருப்பேன்.
எங்களோட ஆராய்ச்சி கூடத்துல்ல ஆல்கஹால் அருந்தக் கூடாது. ஆனால் நீங்க குடிச்சிருக்கீங்க. அதுமட்டுமல்லாமல் ஆட்களை தொந்தரவு செஞ்சிருக்கீங்க. என்னோட பொண்ணையே கட்டி பிடிச்சிருக்கீங்க? எல்லாரும் தப்பா பேசுற அளவு கொண்டு போய் விட்டுட்டீங்க. உங்க பிராடெட்டிற்காக எங்களால் ஏதும் செய்ய முடியாது. நீங்க கிளம்பலாம் என்றார் ரட்சகன்.
சாரி சார், நான் நிதானத்திலே இல்லை. அதனால் தான்..
“அப்படி குடிக்கும் அவசியம் என்ன தான் வந்தது?” உதிரன் சினமுடன் கேட்டான்.
டாட், நீங்க பிரேக் அப்ல்ல நல்ல வழியை தேர்ந்தெடுத்தீங்க. ஆனால் அவன் தப்பான வழியை தேர்ந்தெடுத்துட்டான் என்று நிஷா பாலாவை பார்த்தாள். அவன் தலைகவிழ்ந்து நின்றான்.
“பிரேக் அப்பா?” ரட்சகன் கேட்க, உதிரனும் ரித்திகா நினைவு வந்து பாலாவை பார்த்தான்.
“அந்த பொண்ணுக்கு தான் மேரேஜ் முடிவு பண்ணீட்டாங்கல்ல?” அவர் கேட்க, “வேலையில் நாங்க இருவரும் ஒன்றாக தான் சேர்ந்தோம்” என்று அவன் காதலை கூறி விட்டு, என்னை நேற்று நிராகரித்து விட்டாங்க. அதான் டென்சன்ல குடிச்சுட்டேன். இதுக்கு முன் குடித்ததில்லை.
நான் செய்தது தவறு தான். அதற்காக நான் இங்கிருந்து செல்கிறேன். ஆனால் எங்க மேம் இதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க. அதனால மற்ற எல்லாரும் இருக்கட்டும் என்றான்.
“எக்ஸ்க்யூஸ் மீ சார்” என்று கதவை தட்டினாள் ரித்திகா.
“எஸ் கம் இன்” என்று ரட்சகன் சொல்ல, மூவரையும் பார்த்துக் கொண்டே உள்ளே வந்த ரித்திகா பாலாவை பார்த்து முறைத்தாள். அவன் அவளை பார்த்து விட்டு தலை கவிழ்ந்தான்.
என்னம்மா, “உனக்கு கை எப்படி இருக்கு?” என்று பாலாவை பார்த்துக் கொண்டே ரித்திகாவிடம் பேசினார் ரட்சகன்.
பரவாயில்லை சார்.
“என்ன?” என்று மூவரும் அவளை பார்க்க, பிரகவதி ரித்திகா அருகே வந்து அவன் சொன்னதை சொல்ல, சார் இதை பாருங்க என்று இரு பைல்லை நீட்டினாள்.
“என்னதும்மா?” அவர் கேட்க, சார் மேலே இருப்பது பிரகவதியோட பிராஜெக்ட். கீழே இருப்பது பாலாவோடது. இருவரும் என்னை விட திறமையானவர்கள். இவர்களுடைய பிராஜெக்ட் உங்களுக்கு தேவைப்படும்ன்னு எனக்கு தோன்றியது.
அப்புறம் பாலா நேற்று அவ்வாறு நடந்து கொண்டதற்கு ஒரு வகையில் நானும் காரணம் தான். இனி அவன் இது போல் நடக்காமல் இருக்க நான் பொறுப்பேத்துக்கிறேன்.
அவனுக்கு ஒரே ஒரு வாய்ப்பு குடுங்க. அவன் மற்றவரிடம் வேலை பார்க்கணும்ன்னு அவசியமேயில்லை. அவங்க தாத்தா பெரிய ஆள். அவன் குடும்பமும் பெரியது. வசதியானவன். அவன் வீட்டில் அவனை வேலைக்கு இப்படி வெளியே அனுப்ப விருப்பமில்லை. ஆனால் அவன் விருப்பத்திற்காக குறிப்பிட்ட நேரத்தில் அவன் வெற்றி அடைந்தால் அவன் வழிக்கு செல்லட்டும் இல்லைன்னா அவங்க குடும்ப வேலையை தான் பார்க்கணும்ன்னு சொல்லி அவனை அனுப்பி இருக்காங்க.
அதனால் ஒரு வாய்ப்பு குடுங்க. அதில் அவன் வெற்றியடையலைன்னா வெளியே அனுப்பீடுங்க என்றாள்.
பாலாவிடம் அவனை பற்றி ரட்சகன் கேட்டார். சாரி சார், நான் என்னோட குடும்பத்தை வைத்து முன் வர எனக்கு விருப்பமில்லை. “சாரி மேம்” என்று நிஷாவை பார்த்து விட்டு, “சாரி சார்” என்று உதிரனை பார்த்து விட்டு ரித்திகாவை பார்த்தான்.
அவள் அவனை முறைத்து பார்த்து, “அவசரப்படாத” என்றாள்.
உன்னோட குடும்பத்தை பற்றி வேண்டாம். உன்னோட முழுபெயரிலிருந்து எல்லாவற்றையும் சொல்லணும் என்று கேட்டார்.
அவனது முழுப்பெயர் பாலகுரு என்றும் அவனது விவரத்தை சொன்னான். அவன் அலைபேசி அழைக்க, அதை அணைத்தான். மீண்டும் அழைத்தது.
“நீ முதல்ல பேசு” என்ற உதிரன், ரட்சகனிடம் ஏதோ சொல்ல, “உங்க குழுவினர் எல்லாரையும் வர வையுங்க” என்று அழைத்தார். அவள் யோசனையுடன் பிரகவதியை பார்த்தாள்.
மேம், நீங்க இருங்க. நான் அழைக்கிறேன் என்று பிரகவதி சென்றாள். “நீ உட்காரும்மா” என்று அவர் சொல்ல, அவருக்கு எதிரே அமர்ந்தாள் ரித்திகா. உதிரன் கண்ணிமைக்காது அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அலைபேசியை எடுத்த பாலா, அண்ணா..நானே அழைக்கிறேன். கொஞ்ச நேரம் என்று சொல்ல, ஹேய் சக்திக்கு திருமண தேதி குறிச்சுட்டாங்க என்றார் பாலாவின் அண்ணா.
“அண்ணா, நிஜமாகவா?” என்று புன்னகைத்தான். அனைவர் கவனமும் அவன் பக்கம் திரும்பியது.
“மாப்பிள்ள?” இவன் கேட்க, சென்னை தானாம்.
அண்ணா, “அப்பா எப்படி ஒத்துக்கிட்டார்?”
ம்ம்..அதான் சித்தி, அம்மா, அத்தை எல்லாரும் தான்.
ஓ..”லேடிஸ் சப்போர்ட்டா?” என்று புன்னகையுடன் திரும்பி எல்லாரையும் பார்த்தான். எல்லாரும் அவனையே பார்ப்பதை கவனித்து அண்ணா, நான் அவளுக்கு வாழ்த்து சொன்னதாக சொல்லு. நான் அப்புறம் அவளிடமும் அம்மா, தாத்தாவிடமும் பேசுகிறேன் என்று போனை அணைத்து அவர்கள் முன் வந்து நின்றான்.
“ரொம்ப சந்தோசமா இருக்க போல?” நிஷா கேட்க, எஸ் மேம்.
“இப்ப உன் வேலை போனாலும் சந்தோசப்படுவியா?” குதர்க்கமாக நிஷா கேட்க, அவன் முகம் வாடினாலும் சந்தோசமாக இருப்பேன் மேம்.
“எப்படி? உனக்கு பிடித்த வேலைக்காக வசதியை இழந்து கஷ்டப்படுறன்னு உன்னோட மேம் சொல்றங்க? நீ சந்தோசமா இருப்பேன்னு சொல்ற?”
“என்னோட சந்தோசம் என்னோட சிஸ்டருக்காக” என்றான்.
“சிஸ்டரா?”
காதலித்தவனை கரம் பிடிக்க போகிறாள்.
“அதுல என்ன?”
மேம், எங்க தாத்தா பழைய காலத்து ஆள். அவருக்கு ஒருவரை பிடிக்க வைப்பது ரொம்ப கஷ்டம். ஆனால் சக்தியோட காதலனை ஏத்துக்கிட்டார். மேரேஜ் வரையும் போயிருச்சாம் என்று அவன் புன்னகையுடன் சொன்னான்.
“நிஜமா சந்தோசப்படுறியா? உனக்கு பிடித்த வேலை, காதலை இழந்தும் உன்னோட சிஸ்டர் காதலுக்காக உன்னால சந்தோசப்பட முடியுமா?” ரட்சகன் கேட்டார்.
முடியும். எங்க வீட்டிலே சமத்து பொண்ணு. அமைதியான பொண்ணு தான் சக்தி. அவ லவ் பண்ணதை என்னால நம்பவே முடியல. அவளால் சிறு வலியை கூட தாங்கிக் கொள்ள முடியாது. அப்படி இருக்க என்னோட பிரச்சனை எதுவும் பெரியதாக தெரியல. அவள் வலியில்லாமல் காதலை பெற்றுக் கொண்ட இன்பம் எனக்கும் இன்பமே! என்றான். எல்லாரும் அவனை வியந்து பார்த்தனர். பாலாவின் இந்த பாசம் நிஷாவிற்கு பிடித்து விட்டது.
“அது எப்படி? அவள் இன்பம் உன் இன்பமாகும்?” நிஷா கேட்க, அவள் என்னோட உடன் பிறந்தவள். அவள் கஷ்டம் எனக்கும் கஷ்டம். அவளோட சந்தோசம் எனக்கும் சந்தோசம் என்றான். இவன் வார்த்தை உதிரன் மனதை தைத்தது.
“தன் கனவுக்காக கர்ப்பமாக இருந்த தன் தங்கை என்ன செய்கிறாள்? நன்றாக இருக்கிறாளா? என்று சிந்திக்காமல் தனியே விட்டு வந்து விட்டோமே!” என்று உதிரன் கண்கள் கலங்கியது. அவன் வார்த்தையில் ரித்திகா குத்தும் பார்வையை உதிரன் மீது தெளிக்க, அவளை அவனால் பார்க்க முடியவில்லை.
வாவ், கிரேட்..”நல்லா தான் பேசுற” ஒரு வாய்ப்பு தான் கொடுக்க முடியும் என்றார் ரட்சகன்.
“தேங்க்யூ சார்” என்று புன்னகையுடன் பாலா உதிரன் கண்கலங்குவதை பார்த்து, ரித்திகாவின் குத்தும் பார்வையை பார்த்தான். அவனை பார்த்த இருவரும் அவன் கண் சென்ற இடத்தை பார்க்க, உதிரன் அங்கே இருக்க முடியாமல், சார், ஐந்தே நிமிடம். நான் வாரேன் என்று நகர்ந்தான்.
அவன் செல்லவும் அவர்களது குழுவினர் வந்தனர். உதிரன் சென்ற திசையையே ரித்திகா பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னாச்சும்மா அவனுக்கு?” ரட்சகன் உதிரனை பற்றி நிஷாவிடம் கேட்டார். அவனுக்கு அவன் தங்கை நினைவுக்கு வந்துட்டா போல டாட். அதான் பீல் ஆகிட்டான். அவனை நான் சமாதானப்படுத்திக்கிறேன் என்று நிஷா ரித்திகாவை பார்த்தாள். அவள் பார்வை தரையிலே இருந்தது.
பிரகவதி அவள் தோளில் கை வைத்தாள்.
வர்சன், “நீங்க உங்க மேம்மை விட அனுபவம் உள்ளவராமே! நீங்க கொண்டு வந்திருக்கும் பிராஜெக்ட்டை விளக்குங்க” என்று ரட்சகன் கேட்க, அவன் தயக்கத்துடன் நின்றான்.
“என்னாச்சு வர்சன்? உங்களால முடியாதா இல்லை தெரியாதா?” என்று அவமானப்படுத்துவது போல் நிஷா கேட்க, மனதில் வன்மம் எழுந்தது அவனுக்கு.
சாரி சார், இது மேம்மோடது தான்.
ஓ.கே, “நீங்க எத்தனை வருடமாக வொர்க் பண்றீங்க?”
ஆறு வருடம் சார்.
“உங்களோட வெற்றிகரமான பிராஜெக்ட் ஏதாவது விவரிக்க முடியுமா?” ரட்சகன் கேட்டார்.
வர்சனும் அவன் கம்பெனியில் அவனது தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருந்த பிராடெக்ட்டை பற்றி கூறினான்.
“அவ்வளவு தானா? ரொம்ப சிம்பிளா இருக்கே?” என்று வேண்டுமென்று நிஷா கேட்க, மேம் இது பெரிய வசூலை எட்டியது என்றான் அவன்.
“அப்படியா? இப்ப எவ்வளவு பெரிய வசூலா இருக்கு?” என்று நிஷா கிண்டலாக கேட்க, மேம், இப்ப அது ஓடவே இல்லை. ஸ்டாப் பண்ணீட்டாங்க என்று தக்சனா சொல்ல, திரும்பி அவளை முறைத்தான்.
“இவனை எதுக்கு இவங்க டார்கெட் பண்றாங்க?” என்று பாலா நிஷாவை பார்த்துக் கொண்டிருக்க, அவள் அவனை பார்த்தாள். ரட்சகன் வர்சனிடம் மேலும் கேள்விகளை எழுப்பினார்.
உதிரன் தன்னை தயார் செய்து விட்டு உள்ளே நுழைந்தான். நிஷா பாலாவை பார்ப்பதை கவனித்துக் கொண்டே அமர்ந்தான் உதிரன்.
“என்ன?” நிஷா புருவத்தை உயர்த்த, “என்னாச்சும்மா?” என்று ரித்திகாவிடம் ரட்சகன் கேட்டார்.
சாரி சார்,” தெரியாமல் கால் பட்டிருச்சு” என்றாள். ரித்திகா நிஷாவை ஒருவாறு பார்க்க, பாலா விரலை நோ..என்று கையசைத்துக் கொண்டே சொல்லவும் செய்தான்.
“என்ன?” நிஷா பாலாவை உற்று பார்க்க, இம்முறை சரியாக ரித்திகா நிஷா காலை தட்டி விட்டாள்.
நிஷா பயந்து பின் நகர்ந்து ரித்திகாவை பார்த்தாள். அவள் கண்ணாலே வர்சன் விசயத்துல தலையிட வேண்டாம் என்று அவனிடம் கண்ணை காட்டி நிஷாவிற்கு புரிய வைத்தாள். பாலாவையும் ரித்திகாவையும் பார்த்துக் கொண்டே உதிரன் வர்சனை பார்த்தான். அவன் பார்வை ரித்திகா மற்றும் நிஷாவிடம் பகீரங்கமாக பட்டது.
ஏய்..என்று உதிரன் சத்தமிட, அனைவரும் பயந்து விட்டனர். ஆனால் ரித்திகா அசையாது அவனை பார்த்தாள்.
“என்னது அலார்ட்டா?” உயிர் போய் வந்து விட்டது என்று நிஷா கூற, அவர் இப்பொழுது பிரகாவிடம் அவளுடைய பிராஜெக்ட்டை பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். அவளுக்கு பேச்சே நின்று விட்டது.
ரித்திகா சாதாரணமாக இருப்பதை பார்த்தனர் பாலாவும் உதிரனும். அனைவரும் அந்த ஒரு நிமிடம் திகைத்து இருந்தனர். ஆனால் அவள் அமைதியை பார்த்து, அவள் ஏதோ யோசனையில் இருக்கிறாள் என்று உதிரன் அவளருகே வந்து அவளது மேசையை தட்டினான். அவள் திக்கென்று மூச்சு வாங்கி, “என்ன?” சார்..என்று உதிரனை பார்த்து எழுந்தாள்.
“நீங்க கனவெதுவும் காண்கிறீர்களோ?” உதிரன் கேட்க, அவள் பிரகவதியை பார்த்து அவளுக்கு தண்ணீர் எடுத்து கொடுத்தாள்.
நான் உங்களிடம் தான் பேசிட்டு இருக்கேன் என்று உதிரன் ரித்திகாவிடம் கேட்க, அவள் கண்கள் கலங்கியது.
“என்னாச்சும்மா?” ரட்சகன் கேட்க, “சார் நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரவா?” எனக்கு ஒருமாதிரி புழுக்கமா இருக்கு என்று சொல்லும் போதே அவள் கண்ணில் கண்ணீர் வடிந்தது.
“அதுக்காக எதுக்கு அழுற?” நிஷா கேட்க, அவள் ரட்சகனை பார்த்தாள்.
நிஷாம்மா, அந்த பொண்ணு கூட போயிட்டு வா என்று ரட்சகன் சொல்ல, ரித்திகாவின் நினைவெல்லாம் சுபிதனின் பக்கம் தான் இருந்திருக்கும்.
“என்னாச்சு ரித்தி?” நிஷா கேட்க, “எனக்கு அண்ணாவை பார்க்கணும் போல இருக்கு” என்று வெளியே வந்து அமர்ந்தாள். உதிரனும் பாலாவும் வெளியே நிஷாவை அணைத்து அழும் ரித்திகாவை பார்த்தனர்.
இரு. இப்பவே கால் பண்ணலாம் நிஷா சொல்ல, இப்பவா? முடியாதே! சுபி அண்ணாவை பார்க்க முடியாதே! என்றாள்.
ஏய், “என்ன சொல்ற? இரவு முழுவதும் அதை பற்றியே நினைச்சுட்டு இருந்தியா?” நிஷா கேட்க, ரித்திகாவின் அழும் குரல் ஓங்கியது. அனைவரும் பதறி வெளியே வந்தனர்.
“என்னாச்சும்மா?” ரட்சகன் கேட்க, டாட் நான் பார்த்துக்கிறேன் என்று நிஷா அவளை தனியே அழைத்து சென்றாள். “சார், நானும் போய் பார்க்கலாமா?” பவ்வியமாக பாலா கேட்க, உதிரன் அலட்டிக் கொள்ளாமல் “வா போகலாம்” என்று எழுந்தான்.
சார், “அந்த பொண்ணு பிராடெக்ட்டை பற்றி நானும் சில விசயம் கேட்கணும்?”
“அதுக்கு இதுவா நேரம்?”
சார், இப்ப கேட்டா தான் அவங்க அழுகை நின்று எனக்கு தேவையானதை தெளிவாக பேசுவாங்க.
“அதென்னடா? நீ மட்டும் ஒரு டைப்பா இருக்க?” அவர் கேட்க, உதிரன் அமைதியாக நின்றான்.
சரி, போங்க. இந்த பொண்ணுங்க பிராஜெக்ட்டை பற்றிய விளக்கத்தை நானே பார்த்துக்கிறேன் என்று அவர்களை அனுப்பினார்.
“எதுக்கு இப்படி அழுற?”
“எனக்கு சுபி அண்ணா பேசுவது போல் இருக்கு” என்றாள்.
“பைத்தியமாகிட்டியா? நேற்று உருவம் தெரியுதுன்னு சொன்ன? இப்ப என்னடான்னா பேசுதுன்னு சொல்ற?”
ஆமா, “அண்ணா என்னை பெயர் கூறி அழைத்தாங்க” என்று மேலும் கதறி அழுதாள்.
அய்யோ, எல்லாமே உனக்கான கற்பனை.
அப்ப சிம்மா அண்ணாவும் பேசினானே! அதுவும் கற்பனையாக தான் இருக்கும். அவர் ஏதோ உன்னிடம் கதை சொல்லி இருக்கார் என்றாள் நிஷா.
எனக்கு நேற்று அலைபேசியில் பார்த்த போது தான் பயம் இருந்தது. இப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு. அவங்க எவ்வளவு க்ளோஸ்ஸா இருந்தாங்க தெரியுமா? என்று இருவரும் மாறி மாறி ஊட்டிக் கொண்டது. நட்சத்திராவிற்காக சீதமந்த பரிசு வாங்கி வந்ததை சொல்லி மேலும் தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.
அப்பொழுது தான் உதிரனும் பாலாவும் அவ்வழியே வந்தனர்.
நிஷா ரித்திகா முகத்தை துடைத்து விட்டு, நம்மை சுற்றி இது போல் இருக்க வாய்ப்பேயில்லை. நம்மிடம் சிசிடிவி இருக்கு. நான் அப்புறம் காட்டுகிறேன். நீ அழாத.. உன்னால அவங்களுக்காக இப்ப ஏதும் செய்ய முடியாது என்று சொன்னாள்.
“யாருக்காக? என்ன செய்யணும்?” என்று உதிரன் கேட்க, பாலா இருவரையும் பார்த்துக் கொண்டே வந்தான்.
அது வந்து நிஷா தயங்க, ரித்திகா அமைதியாக நின்றாள்.
“எதுக்கு அழுத? ஏதும் பிரச்சனையா?” பாலா கேட்டான்.
ஆமா, அவளுக்கு தெரிந்த ஒரு அண்ணன் இறந்துட்டானாம் என்று உதிரனை பார்த்தாள் நிஷா.
“அண்ணனா?” உதிரன் பதட்டமாக, அவளோட அண்ணன் பேரு சிம்மாவாம். அவனுக்கு ஒன்றுமில்லை. வேற அண்ணனாம் என்று நிஷா சொல்ல, “வேற அண்ணனா?” என்று உதிரன் ரித்திகாவை பார்த்தான்.
நான் பாஸ்கிட்ட பேசுறேன். “நீ உன்னோட ஊருக்கு போறீயா?” பாலா கேட்டான்.
இப்ப போவதால் ஒன்றும் ஆகாது. ஏன்னா, அவர் இறந்து ஐந்து வருடமாகிடுச்சாம் என்னோட அண்ணாவுக்கே நேற்று தான் தெரியும் என்று சொல்லிக் கொண்டே அழுதாள்.
எனக்கு தெரியாது. ரித்தியோட மாமான்னு சொன்னா..அப்புறம் எல்லாமே சொன்னா.
“என்ன சொன்னா? அவளுக்கு இப்பவும் உதியை பிடிக்கும்ல்ல?” அவள் கேட்க, நாங்களும் அதை தான் கேட்டோம். அவள் பாஸை தான் காதலிக்கிறாளாம்.
உச்..என்று பாலாவை பார்த்து, “உனக்கு என்ன தோணுது?” என்று நிஷா கேட்டாள்.
எனக்கு சரியா தெரியல. ஆனால் பாஸ் பெயரை கூறி அவள் அழைத்ததேயில்லை. எங்களுடம் உதிரன் சார் பற்றி சொன்ன போது பாஸை பெயர் கூறி அழைத்தாள். அவள் அவரை தான் காதலிக்கிறாள்.
ம்ம்..என்று இருவரும் அவர்களை பார்த்தனர்.
ரித்து, “எந்த அண்ணனை சொல்ற?” என்று படபடப்புடன் உதிரன் கேட்க, அப்பொழுது தான் அழுகையை நிறுத்தி நிஷா, பாலாவை பார்த்தாள். அவர்கள் தூரமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
சார்,..அண்ணா..அது வந்து..அவங்க என்று மீண்டும் அழுதாள்.
சட்டென உதிரன் ரித்திகாவை அணைத்துக் கொள்ள, வர்சன் இருவரும் அணைத்திருப்பதை பார்த்து, “உனக்கு இருக்குடி?” என்று போனில் புகைப்படமாக்கினான் இருவரையும்.
உதிரன் அணைக்கவும், அவள் கண்ணீர் அதிகமானது. மாமா, சுபி அண்ணா தான் இறந்துட்டாங்களாம்.
ஆமா, “அவனா? நல்லா தான இருந்தான்?” என்று ரித்திகாவை விலக்கி உதிரன் கேட்டான்.
“அண்ணாவை அவங்க குடும்பமே கொலை செஞ்சிருக்காங்க” என்று மேலும் அழுதாள்.
“நீ அவர்களுடன் கொஞ்ச நேரம் தான இருந்த? இப்படி அழுற?” உதிரன் கேட்க, எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. அண்ணாவுடனும் மகிழ், என்னுடம் நன்றாக பேசி பழகினாங்க. அப்புறம் என்று உதிரனை நிமிர்ந்து பார்த்து மனதினுள், “அவர்களை பார்த்து தான் மாமா உன்னுடன் அவங்களை போல சந்தோசமா வாழணும்ன்னு நினைச்சேன். அவங்க பிரிஞ்சிட்டாங்க. அதே போல் தான் மாமா நம்ம வாழ்க்கையும். நான் இங்கிருந்து சென்று விட்டால் நாம் சந்திக்க கூட முடியாது” என்று கண்ணீருடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அப்புறம் என்ன?” அவன் கேட்க, இல்லை. ஒன்றுமில்லை என்று அவனை விட்டு பின்னே நகர்ந்தாள்.
“என்னன்னு சொல்லு ரித்து?” உதிரன் கேட்க, சார் எனக்கு டயர்டா இருக்கு அவள் சொல்ல, அவளுக்கு சுபிதன் அழைப்பது கேட்டது.
அண்ணா..அண்ணா..என்று அவள் நாலா பக்கமும் பார்த்து மயங்கினாள்.
“ரித்தி” என்று கீழே விழுந்தவளை தூக்கினான் உதிரன்.
“என்னாச்சு?” என்று நிஷாவும் பாலாவும் அவர்களிடம் வந்தனர்.
“அவனுடன் இவள் எப்படி நெருக்கமானாள்?” என்று உதிரன் கேட்க, “யாரை சொல்ற?” நிஷா கேட்டாள்.
“அவளுக்கு தெரிந்தவரை உங்களுக்கு எப்படி சார் தெரியும்?” என்று பாலா தெரியாதது போல் கேட்டான். உதிரன் ஏதும் பேசாமல் அவனை பார்த்து விட்டு உள்ளே வந்தான்.
இப்படி ரித்திகாவை உதிரன் தூக்கி வர, அங்கிருந்த ஒருவர் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
அக்கூடத்தில் நடந்த “ஆராய்ச்சி அவார்டு மீட்டிங்”கிற்கு பின் விடுமுறையாக பெரும்பாலானோர் அவரவர் வீட்டிற்கு சென்றிருந்தனர். பத்து பேர் அளவில் தான் ஆட்கள் இருந்தனர்.
உதிரன் அவளை பார்த்துக்க சொல்லி மருத்துவர், நிஷாவை விடுத்து வெளியே வந்தான்.
அழுதாள் சரி, ஆனால் அண்ணா..அண்ணா என அழைத்துக் கொண்டே மயங்கினாளே! அவள் மனதளவில் பாதிக்கப்பட்டு விட்டாளோ! என்று உதிரன் அவனாக பேச, “என்ன சார் அவளை பைத்தியம்ன்னு சொல்றீங்களா?” பாலா கேட்டுக் கொண்டே உதிரன் அருகே அமர்ந்தான்.
“உனக்கு ஏதாவது அவளை பற்றி தெரியுமா?” உதிரன் கேட்க, எனக்கு எதுவும் தெரியாது. அவள் யாருடனும் அதிகமாக பேச மாட்டாள்.
“பேச மாட்டாளா?” ஆமா அவளோட நடத்தை வித்தியாசமாக தான் இருக்கு என்று உதிரன் சிந்தித்தான்.
அதே நேரத்தில் எடுத்த புகைப்படத்தை வர்சன் பிரணவ்விற்கு அனுப்பினான். “ஹௌ டர் யூ ரித்திகா?” நீ அதிகமா படப் போற என்று கத்தினான்.
சற்று நேரத்தில் எழுந்த ரித்திகா நிஷாவிடம், சுபியின் குரலை கேட்டதாக சொல்ல, இன்று நீ என் அறையில் தான் தங்கணும். எனக்கு கேட்குதான்னு பார்க்கலாம் என்று நிஷா சொன்னாள். இருவரும் அமைதியாக இருந்தனர்.
உதிரன் சார், “உங்களை தேடி வந்திருக்காங்க?” என்று ஒருவன் உதிரனிடம் சொல்ல, பாலாவிடம் அமர்ந்திருந்த உதிரன் எழுந்து கீழே சென்றான்.
அம்சவள்ளியும் புகழேந்தியும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர். அதிர்ந்தாலும் சிறுபிள்ளையாக அம்மா…என்று உதிரன் அவன் அம்மாவை ஓடி வந்து அணைத்து அழுதான். பின் அவன் அப்பாவை பார்த்தான். அவர் தன் மகன் வேலை பார்க்கும் இடம் பெரியது என்று நெகிழ்வுடன் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார்.
“இத்தனை வருசமா இங்க தான் வொர்க் பண்றீயா?” புகழேந்தி கேட்க, ஆமாப்பா என்று அவரையும் அணைத்தான்.
“வாங்கம்மா.. வாங்கப்பா..” என்று இருவரையும் உள்ளே அழைத்து வந்தான். வரவேற்பறையில் இருந்த பொண்ணு புன்னகையுடன் உதிரனை பார்த்துக் கொண்டே ரட்சகனை அழைத்து சொன்னாள்.
எதிர்பாராமல் பார்ப்பது போல் வந்த ரட்சகன், “உதிரா யாரு இவங்க?” என்று கேட்டார்.
அம்மா, அப்பா என்று என்று அவர்களுக்கு இவரையும் அறிமுகப்படுத்த, ரட்சகன் நிஷாவை வர சொல்லி இருப்பார். அவளும் அங்கு வந்தாள்.
“டாட் எதுக்கு வர சொன்னீங்க?” நிஷா கேட்டுக் கொண்டே உதிரனை பார்த்து, இவங்க உன்னோட மாம், டாட் தான? ஹாய் ஆன்ட்டி, ஹாய் அங்கிள் என்று அவனை பார்த்து விட்டு, அம்சவள்ளி அருகே வந்து, “ஆன்ட்டி சரியான மாம்ஸ் பாய் உங்க பையன்”.
எப்பப்பாரு அம்மா..அம்மா..தான். அங்கிள் இதை பாருங்களேன் என்று அவன் பாக்கெட்டில் கையை விட்டு அவனது வாலட்டை எடுத்து அவனது குடும்ப புகைப்படத்தை காட்டி ஒருநாள் கூட இதை பார்க்காமல் இருக்கவே மாட்டான். உங்க எல்லாரையும் அவ்வளவு மிஸ் பண்ணான் என்று அவள் மேலும் பேசிக் கொண்டே சென்றாள்.
நிஷாம்மா, “போதும்” ரட்சகன் கூறினார்.
அம்மா, அப்பா வாங்க சாப்பிட போகலாம் என்று அழைத்தான் உதிரன். அவர்கள் தயங்கினார்கள்.
வாங்க, இங்கு வொர்க் பண்றவங்க குடும்பத்திற்கு சிறப்பு விருந்து இருக்கும் என்றார். உதிரன் விழித்தான்.
இப்பொழுது தான் அவர் தெரிந்து தான் அவரும் வந்து, நிஷாவையும் வர வைத்திருக்கிறார் என்று உதிரனுக்கு புரிந்தது.
உதி, நீங்க போய்க்கிட்டே இருங்க. நான் வந்துடுறேன் என்று பின்னே பார்க்காமல் அவர்களை பார்த்துக் கொண்டே நடந்தாள். பாலா தன் குடும்பத்தினருக்கு போனில் செய்தி அனுப்பிக் கொண்டு அதை பார்த்தவாரே வந்தான்.
நிஷாம்மா, “அப்புறம் போ” ரட்சகன் சத்தமிட, டாட் “நான் ரித்துவை பார்த்துட்டு வாரேன்” என்று சொல்லிக் கொண்டே திரும்பி பாலாவின் தலையில் முட்டினாள்.
ஏய்..என்று கையை உயர்த்திய பாலா, நிஷாவை பார்த்து விட்டு “சாரி மேம்” என்று ஒதுங்கி நடந்தான். எல்லாரும் இருவரையும் பார்க்க, நிஷா அவனை பார்த்துக் கொண்டு, “என்னிடம் பேசவே மாட்டேங்கிறானே!” என்று யோசித்துக் கொண்டே நின்றாள்.
இவனை பாரு உதிரா, “என் பிள்ளை பக்கமே போறான்” என்று உதிரன் காதில் கிசுகிசுத்தார் ரட்சகன்.
பாலா அவரை பார்த்து, விஸ் செய்து விட்டு உதிரனையும் அவன் பெற்றோரையும் நின்று பார்த்து முன் செல்வதும் திரும்பி பார்ப்பதுமாக சென்றான்.
“அந்த பையன் பழக்கமா?” பார்க்கிறான் பேசலை. ஆனால் எங்களையும் பார்த்துக் கொண்டே போகிறான் என்று புகழேந்தி கேட்க, “நீங்களே தெரிஞ்சுப்பீங்கப்பா” என்றான் உதிரன் புதிராக.
“வாங்க” என்று அவர்களை அழைத்து சென்றான். சாப்பிட அமர்ந்தனர். தன் மகன் உயர்ந்த இடத்தில் விருது வாங்கும் அளவு உயர்ந்திருக்கிறான் என்று உதிரன் பெற்றோர் மகிழ்ந்தனர்.
நிஷாம்மா..ரட்சகன் சத்தமிட, நிஷாவுடன் ரித்திகா, பாலா, அவர்களின் குழுவினர் வந்தனர்.
ரித்திகாவை பார்த்து உதிரன் பெற்றோர் அதிர்ந்து அவனை பார்த்தனர். அவன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
நேராக அவர்களிடம் வந்தனர். ரித்து இவங்க என்று அவளை நிஷா பார்க்க, உதிரன் சார், “அம்மா அப்பாவா? வணக்கம் சார், மேம்” என்றாள் ரித்திகா. அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி.
அம்மா..என்று உதிரன் அவரது தோளை பற்றினான். “வணக்கம்மா” என்று அவளை பார்த்தனர்.
சார், நாங்க அங்க இருக்கோம் ரித்திகா சொல்ல, “கை இப்ப எப்படி இருக்கும்மா?” அவர் கேட்டார்.
“பெட்டர் சார்” என்று அவள் நகர பாலாவும் மற்றவர்களும் அவளுடன் சென்றனர்.
ரித்திகா அமராமல் நின்று அனைவரும் அமர்ந்த பின் வேரொரு டேபிளில் அமர்ந்தார்.
மேம், “வாங்க” ஸ்ரீ அழைக்க, “இட்ஸ் ஓ.கே” என்று வர்சனை பார்த்தாள். அவன் பார்வை அவளையும் நிஷாவையும் ஏறிட்டது. பாலா அதை பார்த்து, மேம் “இங்க வாங்க” என்று உதிரன், வர்சன் அமர்ந்திருந்த டேபிளுக்கு இடையே அமர வைத்து நிஷாவை மறைத்து அமர்ந்தான் பாலா.
பாலா, வர்சன் நிஷா மேம்மை பார்ப்பதே சரியில்லை பிரச்சனையாகிடாமல். அவங்களிடம் எச்சரிக்கை செய்யணும் என்று ரித்திகா பாலா காதில் கூறிக் கொண்டே அலைபேசியை எடுத்தாள். பெரியவர்கள் இருவரும் அவளையே அடிக்கடி பார்த்தனர்.
ரித்திகா சாப்பாட்டை வாயில் வைக்க, அலைபேசி அழைத்தது.
சாப்பாட்டை தட்டில் போட்டு விட்டு, அவள் அலைபேசியை பார்த்து அவள் சோகமானாள்.
“என்னாச்சு?” அலைபேசியை எடுங்க என்றான் பாலா. அவள் தயக்கத்துடன் அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தாள். எல்லாரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
மேம், எல்லாரும் பாக்குறாங்க..
ம்ம்..என்று எச்சிலை விழுங்கி விட்டு அலைபேசியை எடுத்து காதில் வைத்தாள். அவள் கண்கள் கலங்கியது. ரித்திகா எழுந்து நகர்ந்து செல்ல பாலாவும் சென்றான்.
“இந்த டீமுக்கு சும்மாவா சொல்லணும்?” இன்னும் பேசுவாங்களே! “நிறுத்துறீங்களா?” என்று பிரகவதி சத்தமிட்டு ரித்திகாவிடம் சென்றாள்.
டாட், “நானும் பார்த்துட்டு வாரேன்” என்று நிஷா எழுந்தாள்.
இல்லம்மா. நீ போகக்கூடாது என்று அவர்களை பார்த்தார் ரட்சகன்.
டாட், நீங்க நினைக்கிறது நடக்காது. எனக்கு உதியை பிடிக்கும். காதலெல்லாம் இல்லை. கல்யாணமெல்லாம் அவனை செய்து கொள்ள முடியாது என்று நேரடியாகவே சொல்லி விட்டாள் நிஷா. இருவரும் ரட்சகனை பார்த்து விட்டு தன் மகனை பார்த்தனர் உதிரனின் பெற்றோர்கள்.
ஆன்ட்டி, அங்கிள் “சாரி” என்று டாட், “நான் அவளை பார்த்துட்டு வாரேன்” என்று சென்றாள் நிஷா.
“அப்படியாம்மா?” ரொம்ப நல்லது. இதை நீங்கள் அன்று யோசித்து இருக்கலாம் என்று பட்டென உதிரன் சொல்லி விட்டு சென்றான்.
பிரகவதி சென்ற போது அலைபேசியை வெறித்துக் கொண்டிருந்தாள் ரித்திகா.
மகிழ் படிக்கும் மெடிக்கல் காலேஜில் இருந்து கால் பண்ணி இருந்தாங்க. அவன் இப்ப வரலைன்னா காலேஜூக்குள் நுழைய முடியாதுன்னு சொல்லி அவர்கள் வைக்க, அவன் போனில் திமிறாக ரித்தியிடம் போக முடியாதுன்னு கத்தி இருப்பான்.
நிஷாவும் அவன் பின் உதிரனும் வரும் போது..கண்ணீருடன், சாப்பிட போங்க. எனக்கு வேண்டாம் என்று அவள் ஓடினாள்.
ஹேய் ரித்தி, நில்லு..”பேசலாம்” என்று பாலா ஓடினான்.
“என்னாச்சு?” உதிரன் கேட்க, நிஷா அவனை பார்த்தாள்.
தெரியலை. “இவளுக்கு மட்டும் எங்கிருந்து தான் பிரச்சனை முளைக்குதோ?” என்று வருத்தமாக பிரகவதி கூறினாள்.
ரித்திகா சார், மேம் என்று அழைத்தது; பாலாவுடன் நெருக்கமாக பேசுவது என எண்ணியவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்த புகழேந்தி அவளது உரிமையான பேச்சை காணோமே! பெரிய மாமான்னு கூப்பிடுவா. அதியை சார்ன்னு கூப்பிடுறா? இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு? என்று யோசனையுடன் இருந்தார். அம்சவள்ளிக்கும் அதே யோசனை தான்.
நாளைய எபிசோடில் உதிரன் பெற்றோர் ரித்திகாவிடம் பேசுவார்களா? என பார்க்கலாம்.