ரகுராம் அங்கேயே ஒரு குளியல் போட்டு, புளூ பேண்ட், வொயிட் ஷார்ட் மட்டும் அணிந்து கொண்டான். மேல் கோட் அணியவில்லை. தணிகைவேல் எடுத்து கொடுத்த உடை. “அதையும் போட்டுக்கோங்க” என்று உதவிக்கு இருந்த அனுஷா கணவர் சுதாகரன் சொல்ல,
“எனக்கு இதுவே போதும் மாமா. நல்லா தானே இருக்கு” என்றான்.
“அருமையா இருக்கு. மாப்பிள்ளை கலை சொட்டுது” என்றார்.
“மாமா” ரகுராம் நெற்றி நீவி கொண்டான்.
அருணகிரி வந்தவர் மகனை கண்ணார கண்டு சென்றார். மஞ்சுளா அவனுக்கு குடிக்க, கொறிக்க எடுத்து வந்தார். பாரதி மகளுக்கு எடுத்து செல்வது பார்த்து கொண்டே வயிற்றை கொஞ்சம் நிரப்பி கொண்டான்.
ஆறு மணி ஆக, விருந்தினர்கள் வர ஆரம்பித்துவிட்டனர். தணிகைவேல் மாப்பிள்ளையை தேடி வந்தவர், அவன் தோற்றத்தில் திருப்தி கொண்டார். கோட் அணியாதது பற்றி கேட்டுக்கொள்ளவிலை. தொழில் அதிபர்கள் வருவார்கள் என்று தான் கோட். ஆனால் அவனுக்கு விருப்பமில்லை என்று புரிய விட்டுவிட்டார்.
ரகுராம் மேடைக்கு வர, ஜனக்நந்தினியும் அம்மா கைபற்றி வந்தாள். கிரீம், சிகப்பு வண்ண நிறத்தில் லெஹங்கா தாவணி செட் அணிந்திருந்தாள் பெண்.
ரகுராம் கண்கள் மின்ன, அவளை பார்த்தான். பெண்ணுக்கு கன்னங்கள் சூடேறி சிவந்து போனது. “தாவணி கலருக்கும் உனக்கு வித்தியாசமே தெரியலடி” என்றான் அருகில் வந்தவளிடம்.
ரகுராமை ரசித்த மனைவி, நேரே நின்று கொண்டாள். விருந்தினர்கள் வர ஆரம்பித்தனர். இடையில் முக்கிய தலைகள் வந்து சென்றனர். ரகுராம், ஜனக்நந்தினி உடன் வேலை செய்வோர், அபார்ட்மெண்ட் வாசிகள் எல்லாம் வந்தனர்.
“மனோகர்.. என் பெஸ்ட் ப்ரண்ட்” என்று அறிமுகம் செய்து வைத்தவன், அவனை ஆரத்தழுவி கொண்டான்.
குடும்பத்தினருக்கு வேலை சரியாக இருந்தது. முன் வரிசையில் அமர்ந்திருந்த ராஜேஸ்வரியை தேடி வந்து உறவுகள் பேசிவிட்டு சென்றனர். சுந்தரம், ராமமூர்த்திக்கு பந்தியிலே நேரம் சரியாக போனது.
ராக்கி உறவிகளை வரவேற்று கொண்டிருக்க, “ப்ரோ வாட் ஈஸ் திஸ்” என்று வந்தான் அவன் தம்பி.
“என்னடா? இப்போ தான் வரியா” என்று கேட்க,
“நான் வரது இருக்கட்டும். நீ என்ன பண்ணிட்டிருக்க?” என்றான் அவன்.
ராக்கி என்னடா என்று பார்க்க, “ஜானுவை கோட்டை விட்டுட்டு கெஸ்ட்டை கூப்பிட்டுட்டு இருக்க” என்றான்.
“டேய்” அண்ணன்காரன் அதட்ட,
“நமக்கு வேணும்ன்னா தூக்கிட்டு போயிருக்கணும். நீ இவ்வளவு நல்லவனா இருந்தா விரல் சூப்பிட்டு தான் இருக்கனும்” என்றான் அவன்.
“எங்க வைச்சு என்ன பேசிட்டிருக்க நீ” ராக்கி கண்டிக்க,
“ப்ரோ.. சில். ஜானுவை பாரு. அவளை விட நீ பொண்ணு தேட போறியா? ஏதோ என்னைவிட நாலு வயசு பெரியவளா போயிட்டா, இல்லன்னா கண்டிப்பா அவ எனக்கு தான்” என்றான் அவன்.
“நீ முதல்ல இடத்தை காலி பண்ணு. வில்லங்கத்தை இழுத்து விடாத” என்றுவிட்டான் ராக்கி.
அவனோ அதை பற்றி கவலைப்படாமல் மேடைக்கு வர, “இப்போ தான் நீ என் கண்ணுலே படற” என்றாள் ஜனக்நந்தினி குறையாக.
“ஹாய்ண்ணா.. நீங்க லக்கி. நான் சின்ன பையனா போயிட்டேன்” என்றான் ரகுராமிடம்.
அவன் புரியாமல் பார்க்க, “என் அண்ணா மாதிரி ஜானுவை விட்டிருக்க மாட்டேன். அதை சொன்னேன்” என்றான் அவன் தோள் குலுக்கி.
“உன்னை கொல்ல போறேன் பாரு” ஜானு மிரட்ட, ரகுராம் சிரித்தவன், “நீ ராகேஷ் விட டிஃப்ரண்ட்” என்றான்.
“நிச்சயமாய்.. அவன் நல்லவன், நான் போக்கிரி” என்றான் அவன் கூலாக.
ரகுராம் அவன் தோளில் கை போட்டு போட்டோ எடுத்து கொண்டான். “எனிவே நீங்களும் எனக்கு அண்ணா தான். கங்கிராட்ஸ்” என்று கை குலுக்கி சென்றான் அவன்.
“கொஞ்சம் சேட்டை அவன்” ஜனக்நந்தினி சொல்ல,
“அவன் சீரியஸ் தான்” என்றான் ரகுராம்.
“ராகேஷ் இடத்துல இவன் இருந்திருந்தா நமக்கு இடைஞ்சல் கொடுத்திருப்பான்” என,
“உங்களுக்கும் என்னைவிட ஒரு காரணம் கிடைச்சிருக்கும் இல்லை” என்றாள் பெண் மனைவியாய் முறுக்கி.
“கெஸ்ட் வராங்கடி” என்றான் அவன் வேகமாக.
“இப்போ விடுறேன்” என்றவளுக்கு அதன் பின் ஓய்வே கிடைக்கவில்லை. கூட்டம் அதிகரித்து கொண்டே தான் போனது. “மொத்த திருப்பூர், கரூரையும் கூப்பிட்டுட்டாங்களா?” ரகுராம் அரண்டு போய் கேட்டான்.
இரவு பத்து மணிக்கு மேல் தான் கொஞ்சம் மூச்சு விட முடிந்தது. இடையில் குடிக்க, சாப்பிட வந்தாலும், சோர்வு தான். கால் நல்ல வலி. ஜனக்நந்தினி அமர்ந்தேவிட்டாள். அந்த நேரத்தில் ஜோடியாக, குடும்பத்தை வர வைத்து போட்டோ எடுத்து கொண்டனர்.
ராஜேஸ்வரி பேத்தி பக்கம் நிற்க, இடையில் நிற்க சொல்லி எடுத்தனர். ரகுராமை விட்டு சில அடி தள்ளி நின்றவரை அவனும் கண்டுகொள்ளவில்லை.
மேலும் ஒரு மணி நேரம் சென்று தான் மணமக்கள் உணவுண்ண சென்றனர். பசித்த அளவு உணவு உண்ண முடியவில்லை. இனி கரூர் கிளம்ப வேண்டும்.
நாளை குலதெய்வ பூஜை முடித்து, அம்மா வீடு வருவதால், அழாமல் நல்ல முறையிலே எல்லாம் கிளம்பினர். ஜனக்நந்தினி காரில் ஏறியதுடன் கண்களை மூடி தளர்ந்து கொண்டாள்.
ரகுராமும் அவளை தொந்தரவு செய்யவில்லை. திருப்பூரிலே ஹோட்டல் அறையில் தங்கி கொள்ள தணிகைவேல் கேட்டார். ரகுராம் மறுத்துவிட்டான்.
பின்னிரவு போல் தான் வீடு வந்து சேர்ந்தனர். முதல் இரவுக்காக சோர்ந்திருந்த ஜனக்நந்தினியை குளிக்க சொல்ல எல்லோருக்கும் தயக்கம். ரகுராம் அக்காவிடம் கண் காட்டி அவளை அறைக்கு அழைத்து வந்துவிட்டான்.
அனுஷா பின்னாலே கதவு தட்டி பூ, பிளாஸ்க் கொடுக்க வந்தவள், புதுப்பெண்ணுக்கு தலை அலங்காரம் கலைக்க உதவினாள். ரகுராம் துண்டுடன் ஓய்வறை சென்றான்.
“பூஜை சொல்லிடுச்சு. முடிஞ்சவரை கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிடுங்க. ரிசப்ஷன் இவ்வளவு லேட் ஆகும்ன்னு எதிர்பார்க்கலை” என்றாள் அனுஷா.
“சரிங்க அண்ணி” பெண் தலையசைக்க, அனுஷா கிளம்பிவிட்டாள்.
ரகுராம் குளித்து வர, ஜனக்நந்தினி தானும் குளிக்க, உடை எடுத்தாள்.
“குளிக்க எல்லாம் வேணாம்” என்றான் அவன் கதவடைத்தபடி.
பாரதி சொல்லி அனுப்பியிருக்க, ஏன் என்று கேள்வியாக பார்த்தாள். “நீ தூங்கு. நடுராத்திரி குளிச்சு என்ன பண்ண?” என்றான் அவன்.
ஜனக்நந்தினி அவனை குறுகுறுவென பார்க்க, “என்னடி” என்றான்.
அவள் சிரிப்புடன் தலையசைக்க, “நானே கொஞ்சம் கடுப்புல தான் இருக்கேன். பேசாம தூங்கிடு. ரொம்ப டையர்டா இருக்கன்னு பார்க்கிறேன்” என்றான் அவன்.
‘போங்க எனக்கென்ன’ பெண் முணுமுணுத்து தாவணி பின்னை எடுக்க, ரகுராம் அவளை பார்த்திருந்தான்.
“நான் ஹெல்ப் பண்ணவா?” என, அவள் பின்னை எடுத்து விட்டாள்.
“இதாவது பண்ணியிருக்கலாம்” புது மாப்பிளைக்கு ஏமாற்றம்.
ஜனக்நந்தினி மாற்றுடை எடுத்து ஓய்வறை செல்ல, “அங்க ஈரமா இருக்கும்” என்றான்.
“சரி நீங்க வெளியே இருங்க” என,
“இந்த நேரத்துக்கு வெளியே போனா எல்லார் கண்ணுக்கும் பேயா தான் தெரிவேன்” என்றான்.
“இதென்ன வம்பு” என்றவளின் தாவணி வேறு தோளில் இருந்து வழுவி கொண்டே இருக்க, இழுத்து பிடித்துகொண்டாள்.
அமைதியான அறையில் அனுஷா வைத்து சென்ற மல்லியின் வாசம் பேச ஆரம்பித்தது. மயங்கும் மணமான அதன் பேச்சில், ரகுராம் தன்னை சமன் செய்ய இயலாமல், மனைவியை நெருங்கி நின்றான்.
சுவாசத்தின் வேகமும் இருவருக்கும் மெல்ல மெல்ல அதிகரிக்க செய்தது. உடன் அதன் வெப்பமும் மற்றவரை சுட, ரகுராம் தாவணி பிடித்திருந்த அவளின் கையை தொட்டு வருடி விலக்கினான்.
தாவணி பிடிமானம் இன்றி வழுவ, பெண் பதட்டத்துடன் திரும்ப கையை கொண்டு செல்ல, ரகுராம் மின்னலாக அவளின் இரு கைகளையும் தன்னுடன் பிணைத்து கொண்டான்.
நழுவிவிட்ட தாவணியில் கணவனின் உடல் தகிக்க, மனைவியின் கன்னம் சிவந்து போனது. அவன் மீதிருந்த பார்வையை மாற்றினாள் அவள்.
ரகுராம் பிணைந்திருந்த கைகளை தன்நோக்கி இழுக்க, பெண் அவன் நெஞ்சில் முட்டி நின்றாள். “ஸ்ஸ்ஸ்” என்ற சத்தம் இருவரிடமும்.
நலங்கு வாசம் இன்னும் அவளிடம் மிச்சமிருக்க, அதனுடன் பூ, மஞ்சள் தாலியுமாக பெண் அவனை கிறங்கடித்தாள். “நாளைக்கு வரைக்கும் தாங்குவனாடி?” அவளின் காதில் கேட்டவன் அங்கேயே முத்தமும் வைத்தான்.
கணவனின் நெருக்கத்தில் இவளுக்கு வார்த்தைகள் வருவேனா என்றது. அதிகரித்த இதய துடிப்புடன் நிற்க, “முத்தம் மட்டும்” என்றான்.
அதுவும் இல்லாமல் அவனால் முடியாது எனும் நிலை. நெற்றியில் ஆரம்பித்து, உதட்டில் சரணடைந்தான். மிக மிக மென்மையான தேடல். பெண்ணின் கைகள் அவன் இடையை கட்டிக்கொள்ள, உடல் நடுக்கத்திற்கு சென்றது.
நிமிடங்கள் நீண்ட முத்தம் முடிவுக்கு வர, கால்களோடு அவளை கட்டி தூக்கி கொண்டான். “ப்ளீஸ்” என்றாள் பெண் உடை மாற்ற.
“இப்படியே தான் நைட்டுக்கு” என்றவன், அவளை அணைத்து கொண்டே தான் படுத்தான்.
“தாவணி மட்டுமாவது கட்டிக்கிறேன்” என,
“பர்ஸ்ட் நைட்ன்ற பேர்ல இது மட்டும் தான் எனக்கு கிடைச்சிருக்கு. அதையும் கெடுக்காத” என்றவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து, வெற்றிடையில் கரம் கோர்த்து தூங்க முயற்சித்தான்.
முழு அவஸ்தை தான் இருவருக்கும்.
நீண்ட அமைதியும், விடியற்காலையில் இருந்து அலைந்து, சோர்ந்த உடலும் ஒரு வழியாக அவர்களை தூக்கத்திற்கு இழுத்து சென்றது.