அத்தியாயம் 48

நிது, ரணா அறையில் ஏதாவது பிராபிளமான்னு பாரு. அவளோட அறை ஏசி லெவல் அதிகமானது போல் தெரியுது. இந்த அளவிற்கு அவள் எப்பொழுதும் வைக்கவே மாட்டாள். வந்தவன் யாருன்னு தெரியணும்? என்று அதிரதன் சொல்லிக் கொண்டே நேத்ரா அருகே அமர்ந்தான்.

ரொம்ப ஃபீவரா இருக்கா? நேத்ரா கேட்க, ம்ம்..என்றான் அதிரதன்.

நிதின் ரணா அறைக்கு சென்று ரேவதியிடம் பேசிக் கொண்டு உலாவுவது போல் ஏதாவது அவன் விட்டு சென்றுள்ளானா? எனப் பார்த்தான்.

சற்று நேரத்தில் டாக்டர் வந்து விட ரணாவை பார்த்து விட்டு, சாதாரண காய்ச்சல் தான் என்று ஊசி போட்டு மருந்தை அவளுக்கு கொடுத்து விட்டு அவர் சென்றார்.

நிதின் கண்ணாலே அதிரதனை அழைக்க, காவியன் அவர்களை பார்த்து நானும் வாரேன் என்று அதிரதன் கையை பிடித்தான். அவனை பார்த்த அதிரதன் அவனையும் அழைத்து சென்றான்.

மூவரும் அதிரதன் அறைக்கு செல்வதை நேத்ரா கவனித்தாள். எழிலன் ரணாவை பார்த்து விட்டு வெண்பாவிடம் பேச வேண்டுமென நினைத்து சுஜிக்கு அழைப்பு விடுத்தான். அவள் எடுத்தவுடன் வெண்பாவிடம் பேசணும் என்றான்.

நேத்ரா அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

எழிலா, அவள் பேச மாட்டேன்னு சொல்றா? என்றாள் சுஜி.

எதுக்கு பேச மாட்டாலாம்? எழிலன் கேட்க, “எது பேசுவதாக இருந்தாலும் நேர்ல வந்து பேசு” என்றாள் சுஜி.

“அக்கா, அவளிடம் கொடுங்க” என்றான் அவன். அவளும் கொடுக்க, வெண்பா பேச மாட்டாயா? எழிலன் கேட்க, வெண்பாவிடம் பதிலில்லை.

சரி, நீ பேச வேண்டாம். நான் உடனே வர முடியாது. நாளை வாரேன். நீ ஒழுங்கா படிக்கிற வழியை பாரு. நாம பேசியதை மறந்துறாத என்றான். அப்பொழுதும் அவள் பேசாமல் இருந்தாள்.

“அவ பேசாமல் எழுந்து போயிட்டாடா” என்றாள் சுஜி. அவளிடம் போனை வாங்கிய ஜீவா, வெண்பா நேற்று வந்ததிலிருந்து யாரிடமும் பேசவும் இல்லை. சாப்பிடவும் இல்லை என்றான்.

ஜீவா, எப்படியாவது அவளை சமாதானப்படுத்துடா? எழிலன் சொல்ல, நானா? நீங்க வந்தால் தான் சாப்பிடுவான்னு நினைக்கிறேன் என்றான் ஜீவா.

“நான் இப்ப வர முடியாதுடா” எழிலன் சொல்ல, “அவள் முக்கியமில்லைன்னா நீங்க வரத் தேவையில்லை” என்று அலைபேசியை பட்டென வைத்து விட்டான் ஜீவா.

எழிலன் யோசனையோடு நேத்ராவை பார்த்தான். “போ..பேசிட்டு வா” என்றாள் நேத்ரா.

எப்படி போறது? யாராவது தப்பா எடுத்துக்கிட்டா? எழிலன் கேட்க, சொல்லீட்டு போ. யாருடனாவது சேர்ந்து அடுத்து முறை இதுபோல் ஆகாமல் முடிச்சிட்டு வா என்றாள் நேத்ரா.

எல்லாரும் வேலையாக இருக்க, ரவிக்குமாரும் செழியனும் பேசிக் கொண்டிருந்தான். எழிலன் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்க, செழியன் அவனிடம் வந்து, ஏதும் வேணுமா மாப்பிள்ள? என்று கேட்டார்.

“மாமா, நான் நிலையம் வரை போகணும்” என்றான் எழிலன். “சரி, வாங்க போகலாம்” என்றார்.

நீங்க ஆபிஸ் போகணுமே?

பரவாயில்லை. அதை அப்புறம் பார்த்துக்கலாம் என்று அவர்கள் நிலையத்திற்கு சென்றனர்.

நிதின் அதிரதன், காவியனிடம் ரணா அலைபேசியை காட்டினான். இந்த புகைப்படத்தால் தான் பிரச்சனைன்னு நினைக்கிறேன் என்றான் நிதின். காவியனுக்கு துர்கேஷூடன் ரணா எடுத்த புகைப்படத்தை பார்த்ததும் ஒரு மாதிரி ஆனது.

இதுல என்னடா இருக்கு? அதிரதன் கேட்க, அவ கண்ணு முன்னாடி அவனுக இவரை கொன்னுட்டாங்க. ரொம்ப ஹர்ட் ஆகி இருக்கான்னு நினைக்கிறேன் என்று காவியன் வருத்தமாக சொன்னான்.

சரி, நேற்று வந்தவன்? அதிரதன் கேள்வியுடன் நிதினை நோக்கினான்.

ரதா, நேற்று யாருமே வர வாய்ப்பில்லை. நம்ம ரணாவுக்கு அவன் நினைவில் பயத்தில் இருக்கான்னு தோணுது. அவன் அருகே இருப்பது போல் நினைக்கிறாள். ஏசியும் அவளே தான் அதிகப்படுத்தி இருக்கா. அவள் படுக்கையின் அருகே இருந்த லேம்ப் மேசையில் தான் அலைபேசியும், ஏசி ரிமோர்ட்டும் இருந்தது என்றான் நிதின்.

அப்படி என்ன அவனோட நினைவு? என்று அதிரதன் கேட்க, மாமா அவனுக்கு ரணாவை பிடித்தது போல் இருந்தது. அவன் அவ்வாறு தான் நடந்து கொண்டான். அவளுக்கு அது புரியலை. ஆனால் அவனுடன் நன்றாக பேசினாள். அவன் இறந்ததை ரணாவால் ஏத்துக்க முடியலைன்னு நினைக்கிறேன் என்று காவியன் சொன்னான்.

அவனுக்கு ரணாவை பிடித்ததா? நிதின் கேட்க, காவியன் அவனை முறைத்து பார்த்தான்.

ஏன்டா முறைக்கிற?

தெளிவா தான சொன்னேன். அதை மறுபடியும் நீங்களும் சொல்லணுமா? என்று காவியன் எழுந்தான்.

நீ எங்க போற? அதிரதன் கேட்க, எனக்கு டயர்டா இருக்கு. நான் ஓய்வெடுக்கணும்.

நீயும் கல்லூரிக்கு போகலையா? நிதின் கேட்க, அதனால் தான் ஓய்வெடுக்க போகிறேன் என்று காவியன் நகர்ந்தான்.

உனக்கு ரணாவை பிடிக்காதா காவியா? அதிரதன் கேட்க, நின்ற காவியன் அவனை திரும்பி பார்த்தான்.

ரணா கல்லூரிக்கு போகாமல் இருக்க மாட்டாள். நான் கார்ட்ஸ் யாரும் வேண்டாம்ன்னு சொல்லப் போறேன். “நம்ம குடும்பத்தை நாமே பார்த்துக்கிறது தான் நல்லது” என்ற அதிரதன் காவியனை பார்த்தான்.

இதுக்கும் நீங்க கேட்டதுக்கும் சம்பந்தமே இல்லையே? காவியன் கேட்க, நீ சொல்லு என்றான் அதிரதன்.

“பிடிக்கும். ஆனால் ஏத்துக்க முடியல” என்றான் காவியன்.

ஏன் ஏத்துக்க முடியல? நிதின் கேட்க, தெரியல என்றான் காவியன்.

மாயாவை போல் இவளும் ஏதாவது பேசிடுவான்னு பயப்படுறியா? நிதின் கேட்க, ரணா மாயா போல் இல்லை. ஆனால் எனக்கு இப்ப தான் காதல் வலியிலிருந்து வெளிய வந்துருக்கேன். அதுக்குள்ள எப்படி ரணாவை? என்று காவியன் தயக்கமுடன் அதிரதனை பார்த்தான்.

அதிரதன் புன்னகையுடன், நீயும் ரணாவும் ஒரே கார்ல தன் போயிட்டு வரணும். அப்புறம் அவள பாதுகாப்பா பார்த்துக்கணும். இங்க நாம எல்லாரும் இருப்போம். கல்லூரியில் சொல்ல முடியாதுல்ல. அவ பக்கத்துல தான இருப்ப? பார்த்துப்பேல்ல? கேட்டான்.

ஆனால் எல்லாரும் ஒருமாதிரி பார்ப்பாங்களே? காவியன் கேட்க, நீ எவனோ ஒருவன் இல்லையே? அவளோட சொந்த மாமா பையன் தான். சோ..பிராபிளம் இருக்காது என்றான் அதிரதன்.

அதான் யாருக்கும் தெரியாதே? காவியன் கேட்க, தெரிய வச்சிடலாம் என்று நீ போ ஓய்வெடு என்று அதிரதன் சொல்ல, என்ன செய்யப் போறீங்க? காவியன் கேட்டான்.

“வெயிட் அண்டு வாட்ச்” என்றான் அதிரதன்.

வெண்பா எழிலன் வந்திருப்பது தெரிந்து அறையை விட்டு வெளியே வரவேயில்லை. மாமா நீங்க இருங்க. நான் வாரேன் என்று பொண்ணுங்க அறையில் வந்து கதவை தட்டினான்.

அருணா கதவை திறந்து பேச வந்தவளிடம் வெளியே காட்டி இருக்க சொல்ல, மற்ற பொண்ணுங்களும் வெளியே வந்தனர்.

எழிலன் உள்ளே வந்து வெண்பாவை அழைத்தான். அவள் தூங்குவதை போல் நடிக்க, அவளை அலேக்காக தூக்கிய எழிலன், ஓய் நடிக்காத என்றான். அவள் கண்ணை திறக்கவில்லை மாறாக கண்ணீர் வந்தது.

அவளை அன்று போல் அமர வைத்து அவனும் அமர்ந்து, எதுக்கு அழுற? என்று கேட்டான். வெண்பா கண்ணை திறந்து, நீ போ..என்றாள்.

நான் எதுக்கு போகணும்?

நீ தான் இனி வர மாட்டேல்ல. என்னை மறந்துடுவேல்ல. போ..என்று அழுதாள். அவளை தன் மீது சாய்த்து அவள் நகராதவாறு இறுக்கமாக பிடித்தான் எழிலன்.

இங்க பாரு வெண்பா. என்னோட வாழ்க்கையில் என்ன நடந்தாலும் எத்தனை பேர் வந்தாலும் உன்னை மிஸ் பண்ணக் கூடாதுன்னு நினைக்கிறேன். நான் உன்னை ஏமாத்திடுவேன்னு நினைக்கிறியா வெண்பா? எழிலன் கேட்க, அவனை பார்த்த வெண்பா “பயமா இருக்கே” என்றாள்.

எதுக்கு பயம்? எனக்கு நீ உனக்கு நான். இதை என் அக்காவே மாற்ற நினைத்தாலும் நான் மாற மாட்டேன். அக்கா சொல்லி தான் வந்தேன் தெரியுமா? எழிலன் கேட்க, அவங்க என்னை திட்டலையா? கேட்டாள் வெண்பா.

அவளை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்ட எழிலன், அவ திட்டலாம் மாட்டா? திட்டுனா என்னிடம் சொல்லு என்றான்.

அவங்க நல்லா இருக்காங்கலா? வெண்பா கேட்க, ம்ம்..ஓ.கேன்னு தான் தெரியுது. பார்த்துக்கணும்ல்ல என்றான்.

இப்ப உங்க குடும்பம் என்னை ஏத்துப்பாங்களா? வெண்பா கேட்க, யாரும் உன்னை ஏதும் சொல்லவே மாட்டாங்க. நான் பார்த்துக்கிறேன் என்றான் எழிலன்.

நிஜமாகவா?

ம்ம்..

பிராமிஸ்ஸா? அவள் கேட்க, புன்னகைத்த எழிலன் கண்டிப்பாக. ஆனால் தினமும் உன்னை இப்பொழுதைக்கு பார்க்க வர முடியாது . மூன்று நாட்களுக்கு ஒரு முறை வருகிறேன். அக்காவை பார்த்துக்கணும் என்றான்.

ம்ம், நல்லா பார்த்துக்கோங்க.

சாப்பிடலையாமே? எழிலன் கேட்க, பசிக்கலை எழிலா. அதான் சாப்பிடலை என்றாள் வெண்பா.

சும்மா சொல்லாத. நல்லா சாப்பிடு. படிக்கணும். பரிசை மறந்திடாத என்றான் எழிலன்.

சரி என்றாள் புன்னகையுடன்.

நான் தினமும் நளனிடம், “நீ எப்படி படிக்கிறன்னு?” கேட்பேன். ஒழுங்கா படிக்கணும் ஓ.கே வா? எழிலன் கேட்க, ஓ.கே என்று அவள் கையில் ஹாட்டினை காட்டினாள். அவனும் காட்ட, புன்னகையுடன் அவன் கன்னத்தில் வெண்பா முத்தமிட்டாள். எழிலன் அவள் நெற்றியில் முத்தமிட்டு, கவனமா இருக்கணும்.

காவியன் அண்ணா, திட்டுவாங்களோ? வெண்பா கேட்க, அதான் சொன்னேன்ல்ல. உன்னை யாரும் ஏதும் சொல்ல மாட்டாங்க. வா போகலாம் என்று வெண்பாவை அழைத்து வந்தான்.

பாட்டி செழியனுடன் பேசிக் கொண்டிருந்தார். அருகே சுஜியும் மற்றவர்களும் இருந்தனர்.

அதுவரை கையை கோர்த்து வந்த வெண்பா செழியனை பார்த்ததும் கையை எடுத்தாள். செழியனும் அவருடன் இருந்தவர்களும் இருவரையும் பார்த்தனர். பாட்டி செழியனை பார்த்தார்.

கோபமாக வெண்பாவை முறைத்த எழிலன், அவள் கையை பிடிக்க, அவள் செழியனை பார்த்துக் கொண்டே கையை எடுத்தாள்.

வெண்பா..என்று சத்தமிட்ட எழிலனை திகைத்து வெண்பா பார்க்க, அவள் கையை பிடித்து இழுத்து செழியனிடம் வந்து, மாமா..கொஞ்ச நேரம் என்றான்.

“சரிப்பா, போயிட்டு வா” என்று அவர் வெண்பாவின் அழுத முகத்தை பார்த்தார். அவள் பயத்துடன் அவரை பார்த்துக் கொண்டே எழிலனுடன் சென்றாள்.

“இந்த பொண்ணு விவரம் ஏதாவது இருந்தா கொடுங்க?” என்று செழியன் வெண்பா நிலையத்தில் வந்து சேர்ந்த அவளது விவரத்தை பார்த்தார்.

சார், நாங்க வேணும்ன்னா அந்த பொண்ணு எழிலனை பார்க்காமல் பார்த்துக்கவா? மல்லிகா அக்கா கேட்க, சுஜி அவரை முறைத்தார்.

இல்ல..அந்த பொண்ணை பத்தி சொல்லுங்க என்றார் செழியன். அவர்களும் சொல்ல, “என்னோட பொண்ணு மாதிரின்னு சொல்லுங்க” என்றார் செழியன்.

சார்? என்று சுஜி அழைக்க, பிரணவி மாதிரி நடந்துக்கிறால்ல அதை சொன்னேன் என்று புன்னகைத்தார். “ஹப்பாடா” என சுஜி நினைக்க, எழுந்த செழியன் அவர்களை பார்க்க வெளியே வந்தார்.

எழிலன் வெண்பாவிற்கு ஊட்டி விடுவதை பார்த்து நின்று பின் மீண்டும் அவர்களிடம் சென்று அமர்ந்தார். வெண்பா பதட்டமாக வேகமாக எழுந்தாள்.

“உட்காரும்மா” என்ற செழியன், நீ தான அன்று என்னோட பையனோட சண்டைக்கு வந்த? அவர் கேட்க, சார் நாங்க பேசிட்டு தான் இருந்தோம். ஆனால் அவர் தான் என்னிடம் வம்பாக பேசினார் என்று பயமில்லாமல் சொன்னாள் வெண்பா.

உனக்கு என்னோட மாப்பிள்ளையை பிடிக்குமா? கேட்டார். வெண்பா அமைதியாக எழிலனை பார்த்தாள்.

அவன் எழுந்து, “ஆமா மாமா. நாங்க லவ் பண்றோம்” என்றான்.

மாப்பிள்ள, நான் அந்த பொண்ணிடம் தான் கேட்டேன்?

“வெண்பா சொல்லு” என்றான் எழிலன். அவள் அமைதியாக செழியனை பார்க்க, என்ன யோசிக்கிற? என்று எழிலன் கோபமானான்.

சொல்லும்மா, பிடிக்காதா? அவர் கேட்க, அவள் அமைதியாக நிற்க, எழிலன் கோபமானான்.

சொல்லு வெண்பா? என்றான்.

அவளுக்கு அவள் நிலை காதலை சொல்ல விடாமல் தடுத்தது. “வாங்க மாமா போகலாம்” என்று எழிலன் நகர, வெண்பா அழுது கொண்டே மீண்டும் அறைக்கு ஓடினாள்.

“நில்லும்மா” செழியன் அழைக்க, அவள் கேட்காமல் ஓடினாள். அவள் அழுவதை தாங்க முடியாமல் எழிலன் மீண்டும் அவளறைக்கு சென்றான். செழியனும் மற்றவர்களும் பின்னே சென்றனர்.

எழிலா, நில்லுப்பா என்று தடுத்த பாட்டி, இப்ப வேண்டாம். அவளுக்கு நேரம் கொடு. அவள் சொல்வாள் என்று சொல்ல, அவன் கோபமாக வெளியே சென்றான்.

செழியன் அறை முன் வந்து, உன்னோட பேரு என்னம்மா? என்று கேட்டார். அவள் கதவை திறந்து வந்து, அவரிடம் பெயரை சொல்ல, நீங்க காதலிக்கிறதால ஒன்றும் பிரச்சனையில்லம்மா. நானும் லவ் பண்ணி தான் அவரோட அத்தையை கல்யாணம் செய்து கொண்டேன் என்றான்.

வெண்பா கண்ணீருடன் அவரை பார்த்து, என்னிடம் எதுவுமே இல்லையே? என்றாள்.

படிம்மா. அதுவே எல்லாம் கிடைத்தது போல் தான்.

உனக்கு தெரியுமா? எழிலனோட அத்தை படிக்கலை. எனக்கு அவள் மட்டும் போதுமென்று தான் கல்யாணம் செய்து கொண்டேன். இப்ப நாங்க நல்லா இருக்கோம் என்றார்.

அப்படின்னா, நான் படித்தால் மட்டும் போதுமா? வெண்பா கேட்க, நீ படிக்கலைன்னாலும் ஒன்றுமில்லை. அவரை நல்லா பார்த்துக்கிட்டா போதும் என்றார்.

வெண்பா கண்கள் எழிலனை தேட, “போம்மா கார்ல்ல தான் இருப்பான்” என்று செழியன் சொல்லி விட்டு பாட்டியுடன் ஓரிடத்தில் அமர்ந்தார்.

யாரும் ஏதும் பேசிற மாட்டாங்களாப்பா? என்று பாட்டி கேட்க, அதெல்லாம் பார்க்கலாம்மா என்றார்.

காரை நோக்கி ஓடி வந்த வெண்பா காரில் எழிலனை தேட, அவன் காரில் சாய்ந்து கொண்டு அவளை முறைத்து பார்த்தான்.

அவனை பார்த்ததும் ஓடி வந்து அணைத்துக் கொண்டு, சாரி எழிலா எனக்கு பயமா இருந்தது. அதான் பதில் சொல்லலை. அவன் ஏதும் சொல்லாமல் இருக்க வெண்பாவிற்கு பயமானாது.

எழிலா, நான் வேண்டுமென்றே பதில் சொல்லாமல் இல்லை. நம்ம காதலால் அவங்க உன்னை ஏதாவது சொல்லீடுவாங்கன்னு என்று அவள் சொல்லி முடிக்கலை. அவளை காரின் பக்கம் சாய்த்து முத்தமிட்டான் எழிலன்.

எழிலா, நீ தான இதெல்லாம் பண்ணக்கூடாதுன்னு சொன்ன?

ஆனால் உனக்கு தான் நிறைய சந்தேகம், பயம் கிளம்புதே. இனி யாரும் கேட்டு நீ பதில் சொல்லலைன்னா என் நடவடிக்கை மாறும் என்றான்.

புரியுது என்று புன்னகைத்த வெண்பா, எழிலா இங்க வா என்று அவனை அழைத்தாள். அவன் குனிந்து என்ன? என்று கேட்டான். வெண்பாவும் எழிலனுக்கு முத்தமிட்ட, அங்கே வந்த காவியன் நண்பர்கள், வெண்பா தோழிகள் இதை பார்த்து வாயை பிளந்தனர்.

வெண்பா, என்னம்மா பண்ற? கிருஷ்ணன் கேட்க, வெண்பா எழிலன் பின் வெட்கத்துடன் மறைந்து நின்றாள்.

மிதுன், எங்களோட வா என்று அழைத்தான் எழிலன். இல்ல சீனியர். நாங்க அங்க வந்து என்ன பண்றது? அவன் கேட்க, மாமா உங்களுக்கு ஒன்றுமில்லையே? செழியனிடம் எழிலன் கேட்க, வாங்க என்று அவரும் காவியன் நண்பர்களை அழைத்து சென்றான்.

வீட்டிற்கு வந்தவுடன் அவர்களுக்கு காவியன் இருக்கும் அறையை காட்ட, நால்வரும் உள்ளே சென்றனர். அவன் பெரிய அறையில் ஏசியுடன், நிறைய ஆடைகள் அடுக்கப்பட்டு, படுக்கையில் நிம்மதியாக தூங்குவதை பார்த்தனர். மிதுனுக்குள் இவன் இங்கிருப்பது சரி தான் எனப்பட்டது.

“வாங்கடா வெளிய இருப்போம்” என்று வெளியே வந்தனர். அதிரதன் அவர்களை பார்த்து, ஹேய் வாங்கடா சாப்பிடலாம் என அழைத்தான்.

சார், எதுவும் வேண்டாம் என்றான் அருள். “தேங்க்ஸ் சார்” என்றான் மிதுன்.

என்னடா பீடிகை போட்டு பேசுறீங்க?

காவியன் இதுபோல் நிம்மதியாக தூங்கி நாங்க பார்த்ததில்லை. நாங்க பார்க்கும் போதெல்லாம் நடு இரவில் கூட புத்தகத்துடன் தான் பார்த்திருக்கோம். எனக்கு கூட அவன் இங்கே வந்ததும் ரொம்ப கஷ்டமா இருந்தது என்று கண்கலங்கிய மிதுன், “இப்ப இவனை பார்க்க ரொம்ப ரொம்ப நிம்மதியா இருக்கு” என்று கண்ணீரை துடைத்தான்.

இதுக்கெல்லாமா அழுவது? நீங்க அவனோட ப்ரெண்ட்ஸ் தான? எப்பொழுது பார்க்க நினைத்தாலும் வரலாம் என்றான்.

வீட்டின் வேலையாள் ஒருவர் அதிரதனிடம் வந்து, சார் ரிப்போர்ட்டர்ஸ் வந்திருக்காங்க என்றான்.

ம்ம்..வாரேன் என்று குடும்பத்தினர் அனைவரையும் அழைத்தான். காவியனை மிதுன் எழுப்ப, அவனை பார்த்த காவியன் எழுந்து அவனை கட்டிக் கொண்டான்.

“உங்க பாசத்தை அப்புறம் வச்சுக்கோங்க. இதை மாத்திட்டு வா” என்றான் அதீபன்.

எதுக்கு? காவியன் கேட்க, மாத்திட்டு வா. “மிதுன் வா போகலாம்” என்று அதீபன் அவனை அழைத்து வெளியே வந்தான். எழிலனும் காவியனும் கோர்ட்டு சர்ட்டுடன் வந்து நின்றனர்.

“அச்சோ, ரணா இருந்தா நல்லா இருந்துருக்குமே?” நிதின் சொல்ல, காவியன் அவனை பார்த்தான். நேத்ரா, எழிலன், யசோதா, காவியனை முன் நிறுத்தி அவர்களது உறவை அனைவரிடமும் அறிமுகப்படுத்தினான். இது கொஞ்சமும் நேத்ராவிற்கு பிடிக்கவில்லை.

எழிலனை கூட விட்டு விட்டார்கள். யசோதா, காவியனை கேள்விக்கு மேல் கேட்க, காவியன் பயப்படுவானா? என்ன? அவனுக்கென கிடைத்த உறவுகளை விடக் கூடாது என உறுதியாகவும் நன்றாகவும் பதிலளித்தான்.

நேத்ராவிடம் அவர்கள் வர, அவளுக்கு விபத்து என்று அதிரதன் முடிக்க, ரிப்போர்ட்டர்ஸ் மத்தியில் ஒரு சத்தம் கேட்டது. இவளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்தது என்றும் குழந்தை ரிப்போர்ட்டையும் எடுத்து முன் வந்து நின்றாள் தீக்சிதா. நேத்ராவிற்கு குழந்தை என்றதும் தடுமாறினாள்.

மேம், இவங்க சொல்றது உண்மையா? என்று நேத்ராவை அனைவரும் மொய்க்க, ஆமா உண்மை தான் என்று சத்தமிட்ட அதிரதன். இப்ப குழந்தை இல்லை. நடந்து விபத்து ஒன்றில் இவங்களுக்கு கருகலைந்து விட்டது. அதை விட இவங்க வாழ்க்கையில் நடந்த எல்லாமே வெறும் நாடகம் தான். இதை நிகழ்த்தியவன் போலீஸார் தேடுபவன். ஆனால் யாருக்குமே அவனை தெரியவில்லை. போலீஸிடம் இருப்பது கூட அவனது உண்மையான புகைப்படம் இல்லை.

நடந்தவற்றில் பாதியை மட்டும் ரிப்போர்ட்டரிடம் மட்டும் சொல்லி செள்ளியன் தான் இவளது கணவன் என்று இரு மாதம் தான் சேர்ந்து இருந்தாங்கன்னு அதிரதன் சொன்னான்.

அமைதியாக இருந்த நேத்ரா தீக்சியை முறைத்துக் கொண்டே, நான்கே நாட்கள் தான் சேர்ந்து இருந்தோம். மற்றபடி வீட்டிற்கு கூட வர மாட்டான். வேறொரு பொண்ணை காதலிப்பவனை மிரட்டி கட்டாயப்படுத்தி என்னை திருமணம் செய்து வைத்த எங்களுடைய வகுப்பு தோழனுக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன்.

நல்லா கேட்டுக்கோ. நீ என்ன செய்தாலும் உன் பக்கம் கூட வர மாட்டேன். என்னை தேடி நீ வந்தாலும் உன்னை நான் சும்மா விட மாட்டேன். எனக்குரியவர்களை நீ என்னிடமிருந்து பறித்தேல்ல..உனக்கு வேண்டியது உனக்கு என்றுமே கிடைக்காமல் செய்வேன் என்று சொல்லி விட்டு, நீ எந்த தைரியத்துல்ல எல்லார் முன்னும் வந்து நிக்கிறன்னு தெரியல. என்ன கேவலமான காரியம் செஞ்சிருக்க என்று ரிப்போர்ட்டரை பார்த்து,

அன்று இருந்த வீடியோவில் இருந்தவன் செள்ளியனும் அஷ்வினியும் கல்யாணம் ஆனவங்க. அவங்களுக்கு பையனும் இருக்கான். அவனை கொன்றது அதே பாவி தான். அந்த குட்டிப் பையன் எங்களுடன் தான் இருக்கான் என்றாள்.

வினும்மா..போதும் என்ற செழியன் சார், அவங்க ஓய்வெடுக்கணும். விடுங்க. உங்களுக்கு வேண்டிய நியூஸ்ஸை கொடுத்துட்டோம் என்றனர்.

பிரச்சனை முடியலை சார். யார் அவன்? போலீஸ் என்ன செய்றாங்க? ஒரு பொண்ணு கேட்க, வேண்டாம்மா, இந்த பிரச்சனை நாங்களே பார்த்துப்போம். கிளம்புங்க என்றார்.

சார், உங்களுக்கு இந்த பொண்ணை மருமகளாக்கும் எண்ணம் இருக்கா? ஒருவன் கேட்க, நோ..கமெண்ட்ஸ் என்ற அதிரதன் அனைவரையும் உள்ளே அனுப்பி அவர்களை பார்த்து புன்னகைத்து விட்டு சென்றான். எங்கு பார்த்தாலும் செழியன் குடும்பம் பற்றியும், கொலைகாரன் யாராக இருப்பான்? என்று பரவியது.

காவியன் நண்பர்கள் சற்று நேரத்தில் கிளம்ப, ரணா விழித்தாள். சிவநந்தினி அதிரதனுடன் காவியனும் அவள் அறையில் இருந்தான். அவள் விழித்தவுடன் வெளியே செல்ல இருந்த காவியனை நிறுத்திய அதிரதன், ரணா அருகே அமர்ந்து, குட்டிம்மா இப்ப எப்படி இருக்கு? என்று கேட்டான்.

“ஓ.கே அண்ணா” என்று சிவநந்தினியையும் காவியனையும் பார்த்தாள். இவன் என் அறையிலா? என்று அறையை பார்க்க, அவளுக்கு கருப்பாக ஏதோ உருவம் தெரிவதை போல் இருந்தது. அதிரதனை அணைத்துக் கொண்டே அவ்விடத்தை பார்த்தாள்.

புரிந்து கொண்ட காவியன் அங்கு சென்று நின்றான். அவனை பார்த்து விட்டு அதிரதனிடமிருந்து விலகினாள். சிவநந்தினியும் அவர்களது செய்கையை கவனித்துக் கொண்டிருந்தார்.

அம்மா, எனக்கு பசிக்குது? என்றாள். அவளது நெற்றி, கழுத்தை தொட்டு பார்த்து விட்டு, இப்ப தான்டி எனக்கு நிம்மதியா இருக்கு. எழுந்து உட்காரு. சாப்பிட எடுத்து வாரேன் என்றார் சிவநந்தினி.

அதிரதன் காவியனை அமர சொல்ல அவனும் அமர்ந்தான்.

“குட்டிம்மா, நீ ஒரு வாரம் கல்லூரிக்கு போக வேண்டாம்” என்றான் அதிரதன். காவியனை பார்த்த ரணா, “எனக்கு ஒன்றுமில்லை. நான் போவேன்” என்றாள்.

எப்படி? சொன்னேன்ல்ல? என்று அதிரதன் காவியனை பார்த்தான். என்ன சொன்ன? என்று காவியனை ரணா பார்த்தாள்.

அதுவா குட்டிம்மா? உங்க கல்லூரியில் ஒரு பொண்ணுக்கு காவியனை ரொம்ப பிடிச்சு போச்சாம். அதான் என்ன செய்யலாம்ன்னு கேட்டேனா? “ஓ.கே சொல்ல சொன்னேன்” என்று ரணாவை பார்த்தான் அதிரதன்.

ரணா காவியனை பாவம் போல் பார்க்க, காவியனும் ரணாவை பார்த்தான்.

நீ ஓ.கே சொல்லீட்டியாடா? ரணா கேட்க, காவியன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“நீங்க பேசுங்க. எனக்கு ஒரு வேலை இருக்கு” என்று அதிரதன் எழுந்து சிவநந்தினியிடம் சென்றான்.

நான் ஓ.கே சொல்லல ரணா. ஆனால் எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருக்கு. “இந்த ஒரு வாரத்துல்ல சொல்லிடலாம்ன்னு நினைக்கிறேன்” என்றான் காவியன்.

ஓ..அப்படியா? சொல்லப் போறீயா? என்று ரணா ஏமாற்றமுடன் அவனை பார்த்தாள்.

ம்ம்..சொல்லணும். நாளையிலிருந்து நாம சேர்ந்து தான் கல்லூரிக்கு போகணுமாம். உனக்கு பிரச்சனையில்லையே? காவியன் கேட்க, எனக்கில்லை. ஆனால் அந்த பொண்ணு உன்னை தப்பா நினைச்சுக்க மாட்டாலா? ரணா கேட்க, அதான் மாமா நம்மை பற்றி லீக் பண்ணீட்டாரே என்றன்.

ஓ..அப்படியா என்று காவியா, எனக்கு ரொம்ப பசிக்குது. சாப்பிடணும். அம்மாவை சாப்பாடு எடுத்து வர சொல்றீயா? என கேட்டாள்.

சரி என்று அவன் நகர, ரணா அழுதாள். காவியன் வெளியே நின்று அவளை கவனித்து விட்டு சென்றான்.

சாப்பிட்டு ரணா படுக்க, காவியன் அதிரதனிடம் மாமா, நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா நானும் அம்மாவும் ரணா அறைப்பக்கமிருக்கும் அறையில் தங்கலாமா? என்று கேட்டான்.

எதுக்கு? என்று அதிரதன் கேட்க, காவியன் ஏதும் சொல்லாமல் அதிரதனை பார்த்தான். அதிரதன் புன்னகையுடன், “இதுக்கு தான் யாராவது பெரியவங்க அவளுடன் இருக்கட்டும்ன்னு சொன்னேன்”.

“அதுக்கில்லை மாமா. அப்புறம் தனியா இருக்கவே பயப்படுவா” என்றான் காவியன்.

சரி, நீயும் யசோவும் பக்கத்துல இருந்தா பிரச்சனைன்னா எப்படி தெரியும்?

கதவை பூட்ட வேண்டாம்ன்னு மட்டும் அவளிடம் சொல்லீடுங்க. அடிக்கடி யாராவது போய் பார்த்துக்கலாம் என்றான்.

“ஓ.கே நீயே அவளிடம் சொல்லிடு” என்றான் அதிரதன்.

நானா? நான் எப்படி சொல்றது?

“அறையை மாத்த சொல்லிடுறேன்” என்று அதிரதன் உடனே அலைபேசியை எடுத்து இருவர் பொருட்களையும் மாற்ற சொல்லி ஆணையிட்டான்.

அரைமணி நேரத்தில் உங்களுக்கு அறை தயாராகிடும். “நீ குட்டிம்மாவுடன் பேசிட்டு அறைக்கு போ” என்று அதிரதன் காவியனை பார்த்தான்.

நீங்களும் வாங்க? யாராவது பார்த்தால் தவறாக தெரியுமே? காவியன் சொல்ல, அதிரதன் சிரித்தான்.

எதுக்கு சிரிக்கிறீங்க? காவியன் கேட்க, நாம எல்லாரும் ஒரே குடும்பம். நீ அவளோட மாமா தான. அவளிடம் பர்மிசன் கேட்டால் போதும் என்றான்.

ஆனால் மாமா..என்று செழியனை கேட்டான்.

அப்பா எதுவும் சொல்ல மாட்டார். அறையில் தங்காமல் சீக்கிரம் அறைக்கு வந்தால் போதும் என்றான் புன்னகையுடன்.

தங்குவதா? நான் எதுக்கு தங்கப் போறேன்? நான் கிளம்புகிறேன் என்று காவியன் கோபமாக சொல்ல, குட்டிம்மாவோட காதல் இங்க எல்லாருக்கும் தெரியும். என்னோட மச்சானுக்கும் அவளை பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சு போச்சு. அப்புறம் ஓர் அண்ணாவா நான் எப்படி பேசுவது? அதிரதன் கேட்க,

அதுக்காக இப்படியா பேசுவீங்க மாமா?

சரி, போய் பேசிட்டு வா. முடிந்தால் உங்க காதலையும் அவளிடம் வெளிப்படுத்தினால் நல்லா இருக்கும் என்றான் அதிரதன். “இப்பொழுதைக்கு நான் சொல்ல முடியாது” என்று ரணா அறைக்கு வந்தான் காவியன்.

ரணா அறை விளக்குகள் அணைக்கப்பட்டு கதவும் பூட்டியிருந்தது. வெளியிருந்து காவியன் ரணாவை போனில் அழைத்தான். அவள் எடுக்கவில்லை. ஆனால் கதவை திறந்து விட்டு, மீண்டும் போர்வையை முழுதாக போர்த்தி படுத்துக் கொண்டாள்.

உள்ளே வந்த காவியன், “ரணா எழுந்திரு” என்றான். காவியா நீயா? ரணா கேட்க, “நான் தான்” என்று காவியன் போர்வையை இழுத்தான். போர்வையை இறுக பிடித்துக் கொண்டு, “நான் தூங்கணும் நீ போ” என்றாள்.

“நான் பேசணும்” என்றான் அவன்.

வேணாம். நீ போ என்றாள். “சரி போகிறேன்” என்று காவியன் சொன்ன சிலமணி நேரத்தில் போர்வையை விலக்கி பார்த்தாள். அவன் முன்னே இல்லை. அவள் இல்லை என்றவுடன் மேலும் அழுதாள்.

காவியன் பின்னிருந்து வந்து அவளது போர்வையை தள்ளி விட்டு அவளை தூக்கினான்.

காவியா, என்ன பண்ற? ரணா பதறினாள். “வாய மூடு இல்லை கீழ போட்டுருவேன்” என்ற காவியன் பால்கனியில் இருக்கும் தொட்டில் ஊஞ்சலில் அவளை அமர வைத்து பால்கனி கம்பியில் சாய்ந்து அவளை பார்த்துக் கொண்டு நின்றான்.

எதுக்கு இப்படி பாக்குற?

நேற்று இரவு என்ன நடந்தது? காவியன் கேட்க, யாரோ வந்தான். எனக்கு சரியா தெரியல என்று அவள் சொல்ல, கண்டிப்பாக யாரோ ஒருவன் தான் வந்தானா? இல்லை என்று காவியன் ரணாவை பார்த்தான்.

என்னடா சொல்ல வர்றா? யாரோ ஒருவனை நான் வர வச்சேன்னு சொல்றீயா?

“நான் அப்படி சொல்லவில்லை” என்று அவளருகே வந்து போனை காட்டினான். துர்கேஷூம் ரணாவும் இருந்த புகைப்படத்தை பார்த்து வேகமாக கீழே இறங்கினாள்.

நில்லு..சொல்லு..என்று காவியன் அவள் கையை பிடித்தான். ரணா கண்ணீருடன் காவியனை பார்த்தாள்.

ரணா, எதுக்கு அழுற? என்று தெரியாதது போல் கேட்டான்.

காவியா, இவன் என்று அழுது கொண்டே காவியனை அணைத்துக் கொண்டாள்.

“ரணா” காவியன் அழைக்க, அவனை விட்டு விலகி படுக்கையிடம் வந்தாள்.

“நினைக்கிறத சொல்லு ரணா” என்று அவளை தன்புறம் திருப்பினான்.

“அவனுக்கு என்னை பிடிக்கும் காவியா. அவன் என்னால தான் செத்து போயிட்டான்” என்று கதறி அழுதாள்.

இதுவும் இவளுக்கு தெரிஞ்சிருக்கா? என்று காவியன் அவளை பார்த்துக் கொண்டு, இப்ப அவன் உயிரோட வரணும்ன்னு நினைக்கிறியா? காவியன் கேட்டான்.

அது எப்படி நடக்கும்? என்று ரணா அழுது கொண்டே கேட்க, அவன் வரமாட்டான்னு தெரியுதுல்ல. அப்புறம் என்ன? அவனை நினைச்சு அழுற?

காவியா, அவன் என்னால தான் செத்து போயிட்டான். என்னை சிரிக்க சொல்றியா?

உன்னை அவனுக்கு பிடிக்கும்ன்னு சொன்னேல்ல. இப்படி அழுதா நல்லாவா இருக்கு. அவனுக்கு உன்னை பிடிச்சதால தான் அவன் உயிரை பொருட்படுத்தாது உனக்காக செத்து போயிட்டான்.

நான் எப்படி சிரிக்க முடியும்?

அன்று உனக்கு ஏதாவது ஆனால் நம்ம வீட்ல எல்லாரும் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பங்கல்ல. அதை பற்றி உனக்கு கவலையே இல்லைல்ல? காவியன் கேட்க, ரணா அமைதியானாள்.

நம்ம வீடா? அவள் கேட்க, ஆமா நானும் உங்களில் ஒருவன் தான? இல்லையா? அவன் கேட்க, இல்லை..ஆமா என்றாள்.

இல்லையா? ஆமாவா? காவியன் கேட்க, காவியா நீ இப்படியெல்லாம் பேசுவியா? ரணா கேட்க, நானும் அம்மாவும் பக்கத்து அறையில் தான் இருப்போம். ஏதும் பிரச்சனைன்னா கால் பண்ணு என்று அவன் கிளம்பினான். ரணா அறைக்கு வெளியே வந்து, செல்லும் அவனை பார்த்துக் கொண்டே நின்றாள்.

காவியன் புன்னகையுடன் அறைக்கு சென்றான். அங்கே யசோதா தன் மகன் காவியனுக்காக காத்திருந்தார். அவரை பார்த்துக் கொண்டே அவன் உள்ளே செல்ல, அவர் அவன் பின்னே சென்று கொண்டிருந்தார்.

என்ன செய்றீங்க? காவியன் கேட்க, “என்னை அம்மான்னு சொல்லு” என்றார் ஆசையுடன்.

அம்மா, எதுக்கு இப்படி? நான் தான் அழைக்க ஆரம்பித்து விட்டேனே?

உன்னுடன் தனியே பேச நேரமே இல்லையே? யசோதா சொல்ல, வாங்க என்று அவரை அமர வைத்த காவியன், தயக்கமுடன் மடியில் படுத்துக்கலாமா? கேட்டான்.

நான் உன்னோட அம்மா. உனக்கில்லாத உரிமையா? என்று யசோதா கேட்டார்.

காவியன் யசோதா மடியில் படுத்துக் கொண்டு, நிலையத்தில் எப்படி பார்த்துக் கொண்டர்கள் என்றும் நண்பர்கள் அனைவர் பற்றியும் கூறினான். காவியனுக்கு தன்வந்த் நினைவு எழ, அம்மா..இருங்க வாரேன் என்று எழுந்து நகர்ந்து பின் திரும்பி அவன் அம்மாவை பார்த்தான். மீண்டும் அவரிடமே வந்து படுத்துக் கொண்டு, அதிரதனை அழைத்தான்.

ஹலோ, உள்ளே வரலாமா? என்று போனிலும் வெளியிலும் சத்தம் கேட்டது. அதிரதன் நின்று இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஹே கண்ணா, வா..வா..என்று யசோதா அழைக்க, காவியன் எழுந்து அமர்ந்தான்.

கால் பண்ண? அதிரதன் கேட்க, மாமா தன்வந்த்தை கண்காணித்து கொண்டு தானே இருக்கீங்க? அவன் ஏதும் தவறான வழிக்கு சென்று விடாமல் என்று காவியன் அக்கறையுடன் கூறினான்.

அவன் பாதுகாப்பா இருக்கான். அவன் இவ்வளவு பிரச்சனை செய்தும் அவனை பற்றி விசாரிக்கிறாயே? அதிரதன் கேட்க, சிறு வயதிலிருந்து நாங்க ஒன்றாக தானே வளர்ந்தோம் என்றான் காவியன்.

ம்ம்..மிதுன் சரியாகிட்டான் போல? அதிரதன் கேட்க, மாமா செம்ம கோபத்துல இருந்தான். நீங்க தான செய்தீங்க? என்ன செய்தீங்க? காவியன் கேட்க, நான் ஏதும் செய்யலையே? அப்பாவும் எழிலனும் தான் அவர்களை அழைத்து வந்தார்கள்.

அப்படியா? என்ற காவியன் யசோதாவை பார்த்தான். நீங்க இப்ப தான உங்கள் அறையிலிருந்தீங்க? எப்ப கீழ வந்தீங்க? என்று அதிரதனிடம் கேட்டான்.

ஓ..நீ இப்ப தான் குட்டிம்மா அறையிலிருந்து வந்தியா? அதிரதன் கேட்க, காவியன் மணியை பார்த்தான்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாகி விட்டது என்றான் அதிரதன் புன்னகையுடன். காவியா, பிரணா அறைக்கா போயிட்டு வந்த? யசோதா கேட்க, ஏன் யசோ மச்சான் போகக் கூடாதா? அதிரதன் கேட்டான்.

இல்ல, அம்மா ஏதும் சொல்வாங்களோன்னு தான் கேட்டேன்.

மாமா, நம்ம நினைச்சதை விட அவ ஷார்ப் தான். அவனுக்கு இவளை பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சிருக்கு. ரணா, அவளால தான் அவன் செத்துட்டான்னு ரொம்ப கஷ்டப்படுறா மாமா. ஆனால் யாரோ ஒருவன் தான் அறைக்கு வந்துருக்கான்னு தெளிவா இருக்கா.

உங்களுக்கு அவனோட குடும்பத்தை பற்றிய விவரம் தெரியுமா? காவியன் கேட்க, அவனுக்கு அம்மாவும் அண்ணாவும் இருக்காங்க என்றான் அதிரதன்.

மாமா ரணாவை அவங்கள சந்திக்க வைக்கலாமா? காவியன் கேட்க, காவியா என்ன பேசுற? அவங்களும் கஷ்டத்துல்ல இருப்பாங்க. அவங்க இருக்கிற இடமும் சரியில்லாத இடம். ரௌடிகள் வசிக்கும் இடம். குட்டிம்மாவ நாமே பார்த்துக்கலாம். அவளை அங்கே அழைச்சிட்டு போறது சரியா இருக்காது என்றான் அதிரதன்.

ரணா இதிலிருந்து வெளிய வர்றது ரொம்ப கஷ்டம். ரொம்ப அழுதா மாமா.

மாமா அவங்கள வர வச்சு பேசலாம்ல்ல? காவியன் கேட்க, “பார்க்கலாம்” என்று யோசனையுடன் அதிரதன் சொன்னான்.

இருவரும் என்ன பேசிட்டு இருக்கீங்க? யசோதா கேட்டார்.

அம்மா..என்று காவியன் தயங்க, அதிரதன் விசயத்தை சொன்னான்.

சாப்பிட வாங்க ரேவதி அழைத்துக் கொண்டே உள்ளே வந்தார்.

வாரோம் அத்தை. எழிலன் எழுந்துட்டானா? அதிரதன் கேட்க, இந்த நேரத்திலா அண்ணா தூங்குறான்? காவியன் கேட்டான்.

“நான் அவனை பார்க்க சென்ற போது தூங்கிக் கொண்டிருந்தான்” என்று அதிரதன் சொல்ல, நந்து, நேத்ரா, பிரணா தவிர எல்லாரும் வந்துட்டாங்க என்றார் ரேவதி.

வாங்க என்று அதிரதன் எழுந்து செல்ல, மற்றவர்களும் உடன் வந்தனர்.