ஹாஸ்பிட்டலில் நேத்ராவை அறைக்கு மாற்றி இருந்தனர். அவள் மயக்கத்தில் இருந்தாள். அதிரதன் கோபமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான். எழிலன் அவளருகே அமர்ந்திருந்தான். நளனும் மிதுனும் நேத்ராவை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
பாட்டியும் சிவநந்தினியும் அதிரதனை அழைக்க, அவன் வெளியே வந்து அறைக்கு அழைத்து சென்றான். சிவநந்தினி நேத்ராவை பார்த்து, “பப்பூ இந்த பொண்ணு எனக்கு தெரியும். நீ சொன்ன பொண்ணு இவள் தான? என்னாச்சு இவளுக்கு?” கேட்டார்.
எனக்கும் இந்த பொண்ணை தெரியும். நம்ம வீட்டுக்கு வந்துட்டு கிளம்பும் போது பர்த்திருக்கேன் என்றார் பாட்டி. அதிரதன் தயங்க, எழிலனை சிவநந்தினி பார்த்தார்.
மிதுன் விசயத்தை சொல்ல, இருவரும் அதிர்ந்து அதிரதனை பார்த்தனர். அவனும் கோபமுடன் தான் நேத்ராவை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவர்களை பின் தொடர்ந்து வந்த யசோதாவும் ஆத்வி, தாட்சுவும் ஹாஸ்பிட்டலை பார்த்து, யாருக்கும் ஏதும் ஆகி விட்டதோ? என பயந்து வரவேற்பரை பெண்ணிடம் அதிரதனை பற்றி கேட்டனர். அந்த பொண்ணு அறையை சொல்ல, அவர்களும் நேத்ராவை பார்த்தனர்.
அம்மா, இந்த பொண்ணு தான நம்ம வீட்டுக்கு வந்தா? என்று யசோதா அதிரதனை பார்த்தார்.
அண்ணா லவ் பண்ணதா சொன்ன வினு இவங்க தான மாமா? என்று தாட்சு கேட்க, என்னடா சொல்றா? பாட்டி அதிரதனை நோக்கினார். அவன் ஆத்விகாவை பார்த்தான்.
பின்னே வந்த ரணா, “அண்ணா” என்று அதிரதனை அழைத்துக் கொண்டே வந்து நேத்ராவை பார்த்து, நேத்ராக்காவா? என்னாச்சு? என்று அவள் அண்ணனை பார்த்தாள்.
உனக்கு வினுவை தெரியுமா? அதிரதன் கேட்க, தெரியும். நீ லவ் பண்றது இவங்களையா? ஆனால் அண்ணா இவங்க கர்ப்பமா இருக்காங்க என்றாள்.
இது எப்படி உனக்கு தெரியும்? அதிரதன் கேட்க, ஆத்வி, யசோதா, தாட்சு அதிர்ந்து அதிரதனை பார்த்தனர்.
நானும் காவியனும் தான் முதலில் இவங்கள ஹாஸ்பிட்டலில் சேர்த்தோம். முதலில் எனக்கும் அவனுக்கும் தான் தெரியும் என்று நேத்ராவை பார்த்துக் கொண்டு, அண்ணா..அந்த குழந்தைக்கு ஒன்றுமில்லைல்ல? என்று கேட்டாள்.
“இல்ல ரணா, அக்கா குழந்தை இப்ப இல்லை” என்றான் மிதுன். இல்லையா? என்று கண்ணீருடன் நேத்ரா அருகே சென்று அமர்ந்தாள் ரணா.
அண்ணா, விசயம் தெரிந்தவுடனே காவியன் இந்த குழந்தை வேண்டாம்ன்னு சொன்னான். நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஆனால் இவங்க கேட்கவேயில்லை. குழந்தை வேணும்ன்னு உறுதியா இருந்தாங்க. டாக்டர் கூட யோசிச்சாங்க. அவனும் இதுக்கு மேல எதுவும் சொல்ல வேண்டாம்ன்னு சொல்லீட்டான். விட்டுட்டோம். அடுத்து இவங்களை நான் இப்ப தான் பார்க்கிறேன் என்று ரணா அதிரதனை பார்த்தாள்.
அதீபன், நிதின், செழியன், ரவிக்குமார் வந்தனர். செழியன் தான் முதலில் உள்ளே வந்தார். அவரை பார்த்து அப்பா..என்று ரணா எழுந்தாள்.
நேத்ராவை பார்த்த செழியன், வினு நேத்ராவா? என்னாச்சு? என்று அவர் குடும்பத்தினரை பார்த்து, உங்களுக்கு இந்த பொண்ணை எப்படி தெரியும்? என்று அவர் கேட்க, நிதின் அதிரதனிடம் “என்னாச்சுடா?” என்று கேட்டுக் கொண்டே நேத்ரா அருகே வந்தான்.
பெரிய ஆளுங்க எல்லார் பற்றியும் தெரிந்த எனக்கு இவனோட இருக்கிறவங்க பத்தி தெரியாதா?
நிது, அவளோட சேர்ந்து நீயும் மறச்சுட்டேல்ல? அதிரதன் நிதினிடம் கத்தினான்.
இது நல்ல விசயம் தான. எதுக்கு கத்துற ரதா? நிதின் கேட்க, “அக்காவுக்கு அபாட் ஆகிடுச்சு” என்றான் நளன்.
என்னடா சொல்ற? நிதின் அவன் சட்டையை பிடிக்க, “நிறுத்து நிது, நீ வினுகிட்ட தான் கேட்கணும். அவள் தான் நம்மள நல்லா ஏமாத்தி இருக்கா” அதிரதன் சத்தமிட்டான்.
என்னடா பேசுறீங்க? கல்யாணம்ன்னு தான வினுநேத்ரா வேலையை விட்டு நின்னா. அவளோட புருசன் எங்க? செழியன் கேட்க,
அதிரதன் அருகே வந்த எழிலன், உங்கள ஏமாத்துனாலா? இப்ப அவ உங்க பின்னாடி சுத்தினாலா? அவளா உங்ககூட இருக்கேன்னு சொன்னாலா? உங்க நிலையத்து பசங்களுக்காக தான உதவி கேட்டு வந்தா? நீங்க பணத்தை அவள் கையில் கொடுக்க வேண்டாம். அந்த பையனுக்கு செய்ய வேண்டியதை நீங்களே செய்திருந்தால் அவ உங்கள் பக்கமே வந்திருக்க மாட்டா. ஒப்பந்தம் போட்டது அவளா? நீங்களா? யுவனுக்கு சரியான பின்னும் அவள் என்னுடன் தான் இருக்கணும்ன்னுன் பிடிவாதம் யார் செஞ்சா?
அவ கர்ப்பமா இருந்த ஒரு விசயத்தை மறைச்சிருக்கா. அதுவும் அந்த குட்டிப்பையனுக்காக. இந்த மாதிரி வார்த்தையெல்லாம் கேட்க தான் எல்லாரிடமும் பேச்சு வாங்கினாலா? இப்ப தான சார், சாரு அக்கா சொன்னாங்கன்னு சொன்னீங்க? உங்க மனசு இன்னும் சரியாகல. இதுக்கு தான் உங்களை அப்பொழுதே போக சொன்னேன். அவள விட்டு போக முடியாதுன்னு சொல்லீட்டு நீங்களே எல்லார் முன்னும் அவள் ஏமாத்திட்டான்னு சொல்றீங்க?
சொல்லுங்க..உங்களுக்கு அவளை பத்தி என்ன தெரியும்? இப்படி பேசுறீங்க? இரு வாரமாக உங்களுடன் தான இருக்கா. ஒரு நாளாவது உங்களுடன் தவறாக பேசி இருப்பாலா? நடந்து இருப்பாலா? சொல்லுங்க என்று அதிரதன் சட்டை பிடித்தான் எழிலன்.
எழிலா..என்று நிதின் அவனிடம் வந்து, அவன் கையை எடுத்து விட்டான்.
அதிரதன் பதில் சொல்ல முடியாமல் கண்ணீருடன் அமர்ந்தான்.
என்ன நடக்குது? ரணா கேட்க, அவளை முறைத்த எழிலன், நிது எல்லாரையும் கூட்டிட்டு போயிரு. என்னோட அக்காவை நானே பார்த்துக்கிறேன். இதுக்கு மேல யாராவது அவள பத்தி ஏதாவது சொன்னீங்க? நான் மனுசனா இருக்க மாட்டேன் என்று கத்தியவன் தன் நண்பன் நளனை அணைத்து அழ ஆரம்பித்தான்.
நானும் உங்க பேச்ச அன்று நம்பி தான் விட்டுட்டு போனேன் சார். இப்படி பேசுறீங்க? யுவி மட்டுமல்ல நாங்க இருக்கும் நிலையம் உங்களுடையது. அதற்கு பொறுப்பு நீங்க தான? நீங்களாக செய்ய வேண்டியதை அக்கா அவங்க பெயர் கெட்டாலும் பரவாயில்லைன்னு உங்களுடன் ஒப்பந்தம் போட்டாங்க. நல்லா பேசுறீங்க சார் என்ற மிதுன் கோபமாக,
எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து உங்களை டிவியில் தவிர ஒரு முறை கூட நிலையத்துக்கு யாருமே வந்து பார்த்ததேயில்லை. நாங்களெல்லாம் அநாதைகள் தான? நாங்க இருந்தா என்ன? செத்தா உங்களுக்கென்ன? இப்ப கூட நிதின் சாரால தான எல்லாரும் வந்திருக்கீங்க? உங்களால முடியாதுன்னா எதுக்கு இந்த நிலையத்தை ஆரம்பிச்சீங்க? கேட்டவன் கண்ணை மூடிக் கொண்டு அவனை அவனே அமைதிப்படுத்தினான்.
அதிரதன் முன் வந்த மிதுன், அக்கா உங்களை ஏமாத்தினாங்கன்னு சொன்னீங்கல்ல. உங்க மேல நானும் காவியனும் என்னோட மற்ற நண்பர்களும் வச்சிருந்த நம்பிக்கையை கெடுத்துடீங்க. நீங்க போகலாம். இனி உங்களை நாங்க பார்க்க வேண்டாம்ன்னு நினைக்கிறோம்ன்னு சொன்னவுடன் அதிரதன் மிதுனை அணைத்து அழுதான்.
சாரிடா, ஒரு கோபத்துல சொல்லீட்டேன். அதுக்கு இப்படியெல்லாம் பேசுறீங்க? நாம சேர்ந்து இருந்த போது நான் எப்படி இருந்தேனோ அதே போல தான் இப்பவும் இருக்கேன். நீங்களாவது சொல்லி இருக்காலாமேடா? அவள் தனியா கஷ்டப்பட்டு தான வேலை பார்த்திருப்பாள். இதனால் தான் அடிக்கடி வாமிட்டும் மயக்கமும் இருந்ததா? “இப்பவும் என்னால வினுவை விட்டு செல்ல முடியாதுடா” என்று சொல்லிக் கொண்டே அதிரதன் அழுதான்.
நீ சொன்ன பொண்ணு வினு நேத்ராவா? என்று செழியன் அதிர்ந்து அவளை பார்த்தார்.
நிது, நீ சொல்லவில்லையேடா? அவ என்னிடம் வேலை பார்த்தது தான் உனக்கு தெரியும்ல? ஏன்டா சொல்லலை? என்று செழியன் கேட்டார்.
“என்ன சொல்ல சொல்றீங்க? நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல்ல” என்று அவன் சொல்ல, ரேவதி வந்தார். எல்லாரும் அவளை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
எழிலனும் நளனும் அதிரதனையும் செழியனையும் பார்த்தனர். வேகமாக எழுந்த அதிரதன், இதற்கு மேல் கேட்காமல் இருக்க முடியாது என்று எழிலன் கையிலிருந்த அலைபேசியை பிடுங்கி அவன் அம்மாவிடம் வந்து நேத்ராவின் குடும்ப புகைப்படத்தை காட்டி, இவரை தான் அன்று இரவில் உங்களுடன் பார்த்து தவறாக எண்ணி இதுவரை பேசாமல் இருந்தேன். சொல்லுங்க யாரு இவர்? என்று கேட்டான் அதிரதன்.
சிவநந்தினி புகைப்படத்தை பார்த்து கண்கலங்கி, செழியனிடம் சென்று இங்க பாருங்க. நம்ம பப்பூ கண்டுபிடிச்சிட்டான் என்றாள். ஆனால் பசங்க தனியா..அன்று இவன் சொன்னானே..என்று எழிலனை பார்த்து, பரணி இப்ப இல்லையா? என்று கேட்டார்.
“எங்க அப்பாவை உங்களுக்கு எப்படி தெரியும்? அன்று தான் சொன்னேன்ல்ல. அவர கொன்னுட்டாங்க” என்று கத்தினான் எழிலன்.
சிவநந்தினி செழியனை கட்டிக் கொண்டு அழுதார். சாரிம்மா, நான் ரொம்ப லேட் பண்ணிட்டேன் என்றார் செழியன்.
அப்பா, இவரை உங்களுக்கு தெரியுமா? அதிரதன் கேட்க, பாட்டியும் பார்த்தார்.
“உங்க அம்மாவோட தம்பி பரணி இவர் தான்”. வினு நேத்ராவும் இவனும் உன்னோட தாய்மாமா பிள்ளங்க என்று செழியன் சொல்ல, எழிலன் முகம் மாறியது.
ஓ..அவங்க நீங்க தான? என்று எழிலன் கேட்க, நேத்ரா மெதுவாக கண்ணை திறந்தாள். எல்லாரும் அதிர்ச்சியுடன் செழியன், சிவநந்தினியையும், எழிலன், நேத்ராவையும் பார்த்தனர்.
நேத்ரா முதலில் பார்த்தது ரணாவை.
ரணாவா? நீ..என்று நேத்ரா செழியனை பார்த்து சார்..என எழ, அவளால் நகர முடியவில்லை. இடத்தை பார்த்து, ஹாஸ்பிட்டல்லா? என்று அவள் வயிற்றில் உணர்வில்லாது போக, கண்ணீருடன் வயிற்றை தொட்டு பார்த்து, அருகே இருந்த எழிலன் மிதுனை பார்த்து,
எழிலா, மிதுன்..என்னோட பாப்பா? என்று அழுது கொண்டே எழ, “அக்கா வேண்டாம்” என்று எழிலன் நேத்ரா கையை பிடித்தாள்.
“மிதுன், பாப்பா இருக்கால்ல?” என்று நேத்ரா அவனிடம் கேட்க, “இல்லை” என்று தலையசைத்த மிதுன், “சாரிக்கா நாங்க உங்க பக்கத்திலே இருந்திருக்கணும்” என்று அவன் சொல்ல, படுத்துக் கொண்டு அழுதாள்.
சிவநந்தினியும் யசோதாவும் நேத்ரா அருகே வர, “யார் உதவியும் எங்களுக்கு தேவையில்லை. எல்லாரும் கிளம்புங்க” என்று எழிலன் கத்தினான்.
நேத்ரா பார்வை அதிரதனிடம் செல்ல, அவன் கோபப்படுவான் என்று அவள் எதிர்பார்த்தாள். அவன் கண்ணீருடன், அந்த புகைப்படத்தில் வினு என்னுடன் நீ தான் இருந்தாயா? என்று சிறுவயது புகைப்படத்தை நினைத்துக் கொண்டு ஏக்கமுடன் அவளை பார்த்தாள்.
நேத்ரா, எழிலனையும் மாறி மாறி பார்த்தாள் ரணா. அவளது உயிரை திருப்பி தந்த அம்மாவின் தம்பி பிள்ளைகள் இவர்களா? என பார்த்தார்.
“எழிலா, எதுக்கு நம்மை எல்லாரும் இப்படி பாக்குறாங்க?” என மெதுவாக களைப்புடன் கேட்டாள் நேத்ரா.
“அதெல்லாம் ஒன்றுமில்லைக்கா” என்ற எழிலன், “எல்லாரும் கிளம்புங்க”.
எழிலா, என்ன பண்ற? நேத்ரா கேட்க, “அக்கா நீ அமைதியா இரு. எனக்கு எல்லாமே தெரியும்” என்றான்.
அதிரதனின் பாட்டி நேத்ரா அருகே வர, “என்னோட அக்கா பக்கத்துல யாரும் வரக்கூடாது” என்று எழிலன் கத்தினான். என்னாச்சுடா? நேத்ரா அவனை பார்த்தாள்.
“எழிலா, ப்ளீஸ் நடந்ததை மாற்ற முடியாது தான். அதுக்காக நாங்க மன்னிப்பு கேட்டுக்கிறோம்” என்றான் அதிரதன்.
சார், மன்னிப்பு எதுக்கு கேக்குறீங்க? நேத்ரா எழ, “வினு நீ படுத்துக்கோ” என்று செழியன் பக்கம் திரும்பி, “அப்பா..நீங்க ரொம்ப பெரிய தப்பு பண்ணீட்டீங்க” என்றான்.
கண்ணா, அப்பாவை என்ன சொல்ற?
ஆமா, இவரால தான் எங்க குடும்பத்துல எல்லாரும் எங்களை விட்டு போனாங்க. எங்க அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டாங்க தெரியுமா? என்று எழிலன் கத்தினான்.
எழிலா? என்ன பேசுற? “சேர்மன் சார்கிட்ட பேசுற. பார்த்து பேசு” என்றாள் நேத்ரா.
அக்கா, இவரால் தான் நம்ம தாத்தாவும் பாட்டியும் அப்பாவை தனியா விட்டு செத்து போனாங்க. அப்புறம் அப்பா பட்ட கஷ்டம் உனக்கு தான் தெரியுமே? மறந்துட்டியா? நீ தான் அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்ப.
இவங்க தான் அப்பாவோட அக்கா என்று சிவநந்தினியை காட்டினான்.
“என்னடா சொல்ற?” என்று கண்ணீருடன் வலியோடு படுக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.
என்னப்பா சொல்ற? என்னோட அம்மா, அப்பாவும் இல்லையா? என்று சிவநந்தினி அழுது கொண்டே கேட்டார். நேத்ராவிற்கு புரிய ஆரம்பித்தது. அவள் பார்வை மாறியது.
அதான் நீங்க வீட்டை விட்டு ஓடிப் போகும் போதே அவங்க உயிரையும் எடுத்துட்டு போயிட்டீங்களே? என்றான் எழிலன். சிவநந்தினி உடைந்து அழுதார்.
முதல் முறையாக அதிரதன் “அம்மா”..என்று சிவநந்தினி அருகே சென்று அவரை அணைத்தான்.
எழிலா நிறுத்து. நானே எல்லாவற்றையும் சொல்கிறேன் என்று நேத்ரா அப்பா பட்ட கஷ்டம் அனைத்தையும் சொன்னான் அதிரதன். எல்லாரும் கண்ணீருடன் நேத்ரா, எழிலனை பார்த்தனர்.
நேத்ரா செழியனை கோபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அதிரதன் சொல்லி முடிக்கவும், செழியன் கண்ணீருடன் நேத்ரா அருகே வந்து, என்னை மன்னிச்சிரும்மா. என்னால தான் எல்லாரும் கஷ்டப்பட்டீங்கன்னு புரியுது. ஆனால் எனக்கு எதுவுமே தெரியாது என்றார்.
உங்க மேல நிறைய மரியாதை இருந்தது சார். ஆனால் உங்களால அப்பா மட்டும் இல்லை. நாங்களும் எல்லாவற்றையும் இழந்துட்டோம். இதுக்கு மேல உங்க மன்னிப்பால எங்களுக்கு எதுவும் கிடைக்க போறதில்லை.
உங்க மேல மட்டும் தவறில்லை. உங்க மனைவி மேலும் தவறிருக்கு. உங்க காதலை நான் குறை சொல்லல. காதலிப்பது தப்புன்னு சொல்லலை.
இருபது வருசமா வளர்த்த அவங்களுக்கு ஆசை இருக்கும்ல்ல. சார், அப்படி ஏதும் பெருசா தாத்தாவும் பாட்டியும் எதிர்பார்க்கலை. அவங்க பயம் நியாயம் தானே?
உங்க மனைவிய உயிரா பார்த்துக்கிட்டீங்க. ஆனால் அவங்கள மத்தவங்க பேசும் போது உங்களால ஏதும் சொல்ல முடியலைல்ல. அவங்க என்ன தான் உங்களுக்காக பொறுத்துக் கொண்டாலும் கஷ்டப்பட்டிருப்பாங்க.
மேம், நீங்க உங்கள் கணவன் வீட்டிற்கு போன பின் உங்க அம்மா, அப்பாவை பார்க்க ஒரு முறை கூட வர தோணலைல்ல. உங்க காதலால் ரெண்டு உயிர் போயிருச்சு. உங்களுக்கு உங்க அப்பா பற்றி தெரியாதா? அவருக்கு ஊருக்குள்ள எவ்வளவு மரியாதைன்னு. ஒரே நிமிசத்துல்ல எல்லாத்தையும் தூக்கிப் போட்டு போயிட்டீங்க. அவரை எல்லாரும் பேசியே கொன்னுட்டாங்க. என்னோட அப்பாவை எப்படி எல்லாரும் விரட்டினாங்கன்னு தெரியுமா? ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டிருக்கார்.
இனி அதை பற்றி பேசி என்ன ஆகப் போகிறது? நீங்க உங்க காதல்ல ஸ்ட்ராங்க இருந்தது போல் உங்க அம்மா, அப்பாவிடமும் ஸ்ட்ராங்கா பேசி இருக்கணும். அப்படி பேசி இருந்தா எங்களுக்கு தாத்தா, பாட்டி, மனம் பொருந்தா வாழ்வோடு என்னோட அப்பா கஷ்டப்பட்டிருக்க மாட்டார் என்று நேத்ரா அழுதாள்.
நிதின் அவள் முன் வர, நீ என்னடா சொல்லப் போற? நீ உன்னோட குடும்பத்துக்காக தான பேசுவ? எல்லாரும் சுயநலமா இருந்து என்ன தான் சாதிக்கிறீங்களோ? எல்லாரும் கிளம்புங்க. என்னால பேச முடியல என்று படுத்துக் கொண்டாள் நேத்ரா.
சொல்லுங்க சார், நீங்க என்ன சொல்லப் போறீங்க? நேத்ரா கேட்க, நான் வேறென்ன கேட்க போறேன்?
நானும் என்னோட சுயநலத்துக்காக தான் உன்னை என்னோட வீட்டில் தங்க வைத்தேன். ஆனால் பசங்க எல்லாரையும் தான் தங்க வைக்கலாம்ன்னு நினைத்தேன் என்று மிதுனை பார்த்தான். அவன் அமைதியாக நின்றான். அவனுக்கு ஏதோ கையை விட்டு போனதாக உணர்ந்து வருத்தமாக நின்று கொண்டிருந்தான் மிதுன்.
அவங்க தான் படிக்கிற பசங்களாச்சே. ஆனால் யுவி நம்முடன் தானே இருந்தான். என்னோட தனிமையை போக்க உன்னையும் யுவியையும் பயன்படுத்திக் கொண்டேன். ஆனால் வினு, எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். என்றும் எப்பொழுதும் என்னோட காதல் மாறாது. நீங்க இந்த குழந்தைய மறைக்காமல் இருந்திருக்கலான்னு தான் தோன்றியது என்று எழிலனை பார்த்தான் அதிரதன்.
அவன் கையை எடுத்த நேத்ரா, சார் உங்களுக்கு நிறைய வேலை இருக்கும். போங்க உங்க வேலைய பாருங்க என்றாள்.
ஓ.கே வினு. நான் வெளிய இருக்கேன். எனக்கான பதிலை நீ சொல்லும் வரை உன் அருகே தான் இருப்பேன். ஆனால் தொந்தரவு செய்ய மாட்டேன் என்றான்.
ரணா நேத்ரா அருகே வந்தாள்.
நீயும் இவர்களுள் ஒருத்தி தான. ஆனால் என்னமோ உன்னை பார்த்தாலே எனக்கு சுத்தமாக கோபமே வரலை. ஆனால் வேண்டாமே? ப்ளீஸ் என்றாள் நேத்ரா.
நீங்க உங்க உடம்பை பார்த்துக்கோங்க. எனக்கு அதிரதன் அண்ணா ரொம்ப ஸ்பெசல். அண்ணனுக்காக உங்களோட பதிலுக்காக நான் காத்திருக்கேன். “லவ் யூ” என்று ரணா நேத்ரா கன்னத்தில் முத்தம் கொடுக்க, அவளை நேத்ரா அதிர்ந்து பார்த்தாள்.
ஓய், என்ன பண்ற? எழிலன் சத்தமிட, மாமா ரொம்ப சத்தம் போடாத. நாம அப்புறம் சண்டை போட்டுக்கலாம் என்றாள்.
மாமாவா? நீ யாரோ நான் யாரோ என்றான் எழிலன். பார்க்கலாமா மாமா? என்று நகர்ந்து அதிரதன் அருகே வந்து நின்றாள் ரணா.
தாட்சு நேத்ராவை பார்க்க, தாட்சாயிணி எப்படி இருக்க? நான் உன்னை கல்லூரியில் படிக்கும் போது பார்த்தேன் என்றாள் நேத்ரா.
உங்களுக்கு என்னை தெரியுமா?
தெரியாமலா? நீ தான் நானும் நிதுவும் இருக்கும் இடத்தில் தான் எங்களை கவனிப்பாயே? என்றாள் நேத்ரா.
உங்களுக்கு எப்படி தெரியும்?
தெரியும். நிது எதுக்காக என்னை கூட்டிட்டு போறான்னு கூட தெரியும்?
என்ன அவனுக்கு மூளைல்ல கொஞ்சம் பிரச்சனை. அதான் இப்படி நடந்து கொண்டான் என்று ஆத்வியை பார்த்த நேத்ரா,
உங்களிடம் என்னை பற்றி சொல்வான்னான்னு தெரியாது. ஆனால் மறைமுகமாக அவனோட முதல் காதலை பற்றி சொல்வான். அதுவும் அடிக்கடி. பாவம்..அடிக்கடி முதல் காதலை நினைக்கும் அவனால் வேறு பொண்ணை காதலிக்க முடியாதுன்னு தெரியல என்று நிதினை பார்த்தாள்.
நிதின் கண்ணீருடன் நேத்ரா அருகே வந்து அவள் கையை பிடித்து, என்னிடமாவது சொல்லி இருக்கலாம்ல்ல. “பிரச்சனை நேரத்தில் கூட நான் உனக்கு தெரியலையா வினு?” நிதின் கேட்டான்.
டேய், நீ இப்படி பேசுன? உன்னோட பியான்சே என்னை கொல்ல போறாங்க என்று ஆத்விகாவை பார்த்து விட்டு, நிது..உனக்கே தெரியாமல் நீ, சுஜி, நம்ம ப்ரெண்ட்ஸ் எல்லாரும் உதவி இருக்கீங்கடா.
நான் எங்க ஊர்ல இருந்து அம்மா, அப்பா டிவோர்ஸ், சண்டை வரும் போது ரொம்ப மனஉலைச்சலில் தான் இருப்பேன். நீங்க அடிக்கும் லூட்டி, சேட்டைகள், காமெடி என்னை அதிலிருந்து கொஞ்ச கொஞ்சமாக விடுவித்து என்னை மறந்து சிரித்து உன்னால தான் வெளிய வந்தேன். உனக்கே தெரியலைன்னாலும் அதான்டா உண்மை.
செண்டிமென்டா பேசுறேன்னு அழுதுட்டு நீ நிக்கிறத பார்த்தா..எனக்கு சிரிப்பு தான் வருது என்றாள் நேத்ரா.
வினு, இப்ப நீ என்ன நிலையில் இருந்து இப்படி பேசிட்டு இருக்க? அவன் கேட்க, நேத்ரா கண்ணீருடன் வலிகள் பழகிடுச்சுட்டா. அது எப்படிடா? என்னை மட்டும் இந்த வலிகள் தேடி வருதுன்னு தெரியல..
வினு..என்று அவன் கண்ணீருடன் நேத்ராவை அழைக்க, நீ உன்னோட ப்ரெண்டுக்காக தான வந்துருப்ப? நேத்ரா கேட்க, ஆமா..ரதனுக்காக மட்டுமல்ல வினுவுக்காகவும் என்றான்.
ஓ.ஹோ..வினுவுக்காகவுமா? என்று அவள் கேட்க, “ஆமா நீ கண்டிப்பாக ரதனோட காதலை ஏத்துக்கிட்டு தான் ஆகணும்” என்றான் நிதின்.
முடியாதுன்னா என்னடா செய்வ?
என்ன செய்வேன்னா? களத்துல இறங்கிடுவேன் என்றான் நிதின்.
அக்கா..கொஞ்சம் ஓவரா போகுது மிதுன் சொல்ல, “இல்லையேடா” நான் அவன் சொன்னதை தான விளக்கினேன் நேத்ரா சொல்ல, பாட்டி அவரிடம் வந்து பேச, பாட்டி நீங்களாவது புரிஞ்சுக்கோங்க. உங்க பொண்ணு இந்த வேலைய செஞ்சிருந்தா என்ன பண்ணுவீங்க? என நேத்ரா கேட்டு விட, எல்லாரும் அவளை திகைத்து பார்த்தனர்.
ஆமாம்மா. என்னோட பொண்ணு பண்ணலை. காதலிச்சா. ஆனால் அவன் யாருன்னு அவளை தவிர எங்க யாருக்கும் தெரியாது.
நாங்க ஏத்துக்காம இல்லை. இவள் காதலை அந்த பையன் ஏத்துக்கலை. ஆனால் இவளால் வேறு யாரையும் நினைக்க முடியலை. நாங்க பேசலாம்ன்னு கேட்ட போது தான் அவனுக்கு திருமணம் ஆகிடுச்சுன்னு தெரிய வந்தது. இப்பொழுது வரை அந்த பையனை நினைத்து தனியா தான் இருக்கா என்று கண்ணீருடன் சொல்ல,
“வாவ், கிரேட்” என்றான் எழிலன். நேத்ரா அவனை முறைத்து விட்டு யசோதாவை பார்த்தாள்.
ஏம்மா, என்னோட கஷ்டத்தை எங்க பிள்ளைக்கும் கொடுத்துறாதம்மா. கண்ணா கூட படித்த பொண்ணு தான. அவனோட அடம் தெரியும் தான? என்று கண்ணீருடன் யசோதா கேட்க,
எனக்கு கஷ்டமா இருக்கும்மா. என்னோட அம்மா அப்பா மீதுள்ள காதலால் இருவர் வாழ்வையும் அழிக்கும் படி செஞ்சுட்டாங்க. ஆனால் நீங்க காதலித்தவருக்காக அவரை நினைத்து தனியாவே இருக்கீங்க. உங்களிடம் இருந்த ஒன்று எங்கள் அம்மாவிடம் இருந்தாலும் என் அப்பா சந்தோசமா இருந்திருப்பார் என்று கண்ணீர் வடித்தாள் நேத்ரா.
யசோதா ஏதோ கேட்க வருவதற்குள் அங்கே ஓடி வந்தனர் வெண்பாவும் அருணாவும்.
நேத்ராவை பார்த்து விட்டு, அண்ணா வா..என்று மிதுன் கையை பிடித்துக் கொண்டு, அங்க அண்ணா எல்லாரும் யாரையோ அடி அடின்னு அடிக்கிறாங்க. பாட்டி சொன்னா கேட்கவே மாட்டேங்கிறாங்க. அந்த ஆளும் நகராமல் அடி வாங்குறான் என்றாள் வெண்பா.
அக்கா, அந்த ஆளோட ஒரு பொண்ணும் இருக்காங்க என்றாள் அருணா.
அதிரதன் எழுந்தான். யாரும் எதுவும் செய்ய வேண்டாம். நாங்க பார்த்துப்போம் என்றான் எழிலன். அவனை மறைத்து நின்ற அதீபன், அண்ணா நீ போ பாரு என்று எழிலனிடம் முதல்ல உன்னோட அக்காவை பாரு. அப்புறம் மத்ததை பார்க்கலாம் என்றான்.
சீனியர், நீங்க இருங்க. நான் பார்க்கிறேன் என்று மிதுனும் நளனும் வெளியே செல்ல, வெண்பாவும் அருணாவை சுற்றி இருந்தவர்களை பார்த்து விட்டு நேத்ராவிடம் வந்தனர்.
அதிரதன், அதீபன், நிதின், மிதுன், நளன் வெளியே வந்து பார்க்க, காவியன், ஜீவா, தேவா, சுபிர்தன், காவியன், அருள், கிருஷ்ணன் எல்லாரும் இரத்தம் வரும் வரை செள்ளியனை அடித்துக் கொண்டிருந்தனர்.
அதிரதனும் அதீபனும் அவர்களிடம் வந்து, “டேய் அவள விடு” என்று அதிரதன் சத்தம் கேட்டு அடித்துக் கொண்டிருந்தவர்கள் அவனை பார்த்தனர்.
ஜீவா நண்பன் அஷ்வினியை விட்டான். சார், இவனை என்று கிருஷ்ணன் காலை ஓங்க, “நிறுத்துங்கடா” என்ற அதீபன் அஷ்வினியை முறைத்து பார்த்தான்.
“சார், இவனால் தான் அக்காவுக்கு இப்படி ஆனது” காவியன் சீற்றமாக சொல்ல, அவனை பார்த்த அதிரதன் மனதில், இவன் என்ன செய்யப் போகிறானோ? என்று எண்ணிக் கொண்டு, “பொறுமையா இரு காவியா” என்று மீண்டும் கையை நீட்டினான்.
அதிரதன் ஏதும் பேசாமல், நான் சொல்றதை மட்டும் செய். நீயும் என்னை அடித்துக் கொண்டே வினு இருக்கும் அறைக்கு அழைச்சிட்டு போ. அவளுக்கு தெரியாத முக்கியமான விசயத்தை சொல்லணும். இங்கே அவனோட ஆட்கள் இருக்காங்க என்றான் செள்ளியன்.
சுற்றி இருந்த பசங்க திருதிருவென விழிக்க, “இல்ல.வா நாம போயிடலாம்” என்று அஷ்வினி செள்ளியனை தூக்கினாள். அதிரதன் அவனை அடித்து “வினுகிட்ட மன்னிப்பு கேளுடா” என அவனை உள்ளே இழுத்து செல்ல அஷ்வினியும் உள்ளே சென்றாள். பாட்டியும் மற்றவர்களும் அவர்கள் பின்னே சென்றனர்.
அறைக்கு வந்ததும் செள்ளியனை உள்ளே தள்ளி விட்டு அனைவரையும் உள்ளே விட்டு, அறைக்கதவு, சன்னல் என்று அனைத்தையும் அடைத்தான் அதிரதன்.
முதலில் காவியனை கவனிக்காதவர்கள் பின் அவனை பார்த்து அதிர்ந்தனர்.
சிவநந்தினி செழியனிடம், நான் பார்த்தேன்னு சொன்னேன்ல்லங்க. பாருங்க அப்படியே என்னோட தம்பி பரணி மாதிரி இருக்கானான்ல என்று காவியனை பார்த்துக் கொண்டே சொல்ல, ஆமாம்மா அப்படியே இருக்கான் என்றார் செழியன்.
காவியனை நோக்கி சிவநந்தினி ஓர் அடி எடுத்து வைக்க, யசோதா ஓடிச் சென்று காவியனை அணைத்து அழுதார். அவன் புரியாமல் அனைவரையும் பார்த்தான்.
என்ன பண்றீங்க? அவனை விடுங்க எழிலன் சத்தமிட, “இவன் என்னோட பையன்” என்றார் யசோதா.
அனைவரும் திகைக்க, என்னடி சொல்ற? பாட்டி அவரிடம் வந்தார்.
யசோ, உங்களுக்கு மகனா? காவியனா? என்று அதிரதன் கேட்க, ஆமா கண்ணா, “இவன் என்னோட மகன் தான். அப்படியே அவரை போலே இருக்கான்” என்றார் யசோதா.
அக்கா, என்ன நடக்குது? உங்க தம்பி..அப்பான்னு சொல்றாங்க. இவங்க என்னை அவங்க பையன்னு சொல்றாங்க? என கோபமாக கேட்டான் காவியன். ரணா விழிவிரித்து யசோதாவை பார்த்தார்.
“ஆமா காவியா, நீ எங்களோட தம்பி தான்” என்றாள் நேத்ரா. காவியன் கோபமாக நேத்ராவை பார்த்தான். அவளும் காவியனை எதிர்கொண்டாள். இருவரையும் எல்லாரும் பார்த்தனர்.
யசோ, நீ என்னிடம் சொன்னவன் பரணியா? என்று சிவநந்தினி கேட்க, ஆமா அண்ணி. உங்க தம்பி தான். எனக்கு இப்ப இவங்க குடும்ப புகைப்படத்தை பார்த்ததும் தான் தெரிந்தது.
நீ தான் கல்யாணமே பண்ணிக்கலையே? பாட்டி கேட்க, ஆமாம்மா. நானும் பரணியும் அப்புறம் காந்தாரியும் என்று நேத்ரா எழிலனை பார்த்துக் கொண்டு, ஒரே கல்லூரி தான். எனக்கு தான் அவனை பிடிக்கும். அவன் பின்னே தான் சுற்றிக் கொண்டிருப்பேன். ஆனால் அவன் பெரிதாக எதையும் கண்டுகொள்ளவில்லை.
என்னை போல் காந்தாரிக்கும் அவனை பிடித்திருக்கும் போல. நானும் அவளும் ஒரே வகுப்பு தான். ஆனால் அப்பொழுது எனக்கு அவள் பரணியை காதலித்தது தெரியாது. ஆனால் நான் அவனை காதலிப்பது காந்தாரிக்கு தெரியும் என்று அவள் கல்யாணம் செய்து கொண்ட பின் தான் தெரியும்.
கல்லூரி முடிந்தவுடன் எப்பொழுதும் போல் ஹாலிடே எஞ்சாய்மென்டுக்காக நான் கொடைக்கானல் போனேன். அந்த நேரம் இருவரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. எனக்கு அதுவும் தெரியாது. நான் அவனை பார்க்காமல் ரொம்ப கஷ்டப்பட்டேன்.
ஒரு வருடங்களுக்கு பின் என்னுடன் படித்த பொண்ணு மூலமாக அவனும் காந்தாரியும் திருமணம் செஞ்சுக்கிட்டாங்கன்னு சொன்னாங்க. பின் அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க. அப்ப தான் என்னுடைய காதலை வீட்டில் சொன்னேன். கல்யாணம் முடிந்த பின் என்ன செய்வது? என்று என்னை மேலே படிக்க பாரின் அனுப்பினாங்க. படித்து முடித்தும் எங்கே வீட்டிற்கு வந்தால் திருமண பேச்சை ஆரம்பிப்பாங்கன்னு குன்னூர்ல இருக்கிற எங்க வீட்ல இருந்தேன்.
ஒருநாள் அங்கிருந்த நண்பர்களுடன் வெளியே செல்லும் போது தான் பரணியை மீண்டும் சந்தித்தேன். ஏதோ கம்பெனி விசயமா வந்ததாக சொன்னான். ஒரு வாரம் இருப்பதாக சொன்னதால் தினமும் சந்தித்து பேசினோம். அவன் கிளம்புவதற்கு ஒரு நாள் முன் என்னிடம் ஏதோ சொல்லணும்ன்னு வரச் சொன்னான்.
நான் அவனை சந்திக்க அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு கீழிருந்த கஃபேக்கு காரில் வரும் போது மலைச்சரிவு ஏற்பட்டு காரை எடுக்க முடியாமல் போனது. அதனால் அவன் எனக்கு உதவ வந்து அவனாலும் ஹோட்டலுக்கு போக முடியாமல் தடை போட்டு விட்டனர். விடாத அடை மழை. அதனால் எங்க வீட்டுக்கு அவனை அழைத்து வந்தேன். பேசிட்டு இருந்தோம். அவன் குடும்ப பிரச்சனைன்னு காந்தாரி செய்வதையெல்லாம் சொன்னான். அப்பொழுது தான் அவளுக்கு என் காதல் தெரிந்து அவனை தவறாக புரிஞ்சுகிட்டான்னு தெரிஞ்சது.
நான் அவனிடம் என்ன சொல்ல முடியும்? கடைசி வரை என் காதலை நான் சொல்லவில்லை. ஆனால் நான் காதலித்தவன் வேறு பொண்ணை கல்யாணம் செய்து கொண்டான் என்று புலம்பினேன். அன்று நாங்கள் குடித்ததன் விளைவு தான் இவன் என்று சொல்ல, காவியன் அவரை முறைத்து பார்த்தான். பின் நம் வீட்டிற்கே வந்து விட்டேன். சரியாக ஆறு வருடத்திற்கு பின் கர்ப்பமானேன். அண்ணாவுக்கும் உனக்கும் தெரிஞ்சா பிள்ளையை ஏதும் செய்ய சொல்வீங்களோன்னு தான். அண்ணா..உன்னிடம் பிடிவாதம் செய்து மீண்டும் நாங்க சேர்ந்த இடத்திற்கே போனேன். என்னோட ப்ரெண்ட்ஸ் பார்த்துகிட்டாங்க.
ரணா, அன்று நீ கேட்டேல்ல அந்த ஸ்பெசல் கோவில் பூஜை. அப்படி ஏதுமே இல்லை. அது காவியனோட பிறந்தநாள். அவன் பிறந்தநாள் அன்று அங்கே சென்று விடுவேன். மறுநாள் தான் வருவேன். நந்து அண்ணியிடம் அவங்க தம்பின்னு தெரியலைன்னாலும் எல்லாத்தையும் சொன்னேன்.
அப்புறம் எப்படி என்னை அநாதையா விட்டீங்க? காவியன் சினமுடன் கேட்டான்.
கண்ணீருடன், நீ பிறந்த ஒரு மாதத்தின் பின் என் அம்மா வீட்டுக்கு காரில் வந்து கொண்டிருந்தேன். சென்னையின் எல்லையை நெருங்கிய போது வழிபறி கொள்ளைக்காரர்கள் என்னிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கினர். அவர்களை பார்த்து பயந்து டிரைவர் ஓடி விட்டான். அவர்கள் பணம் எல்லாவற்றையும் இல்லாமல் உன்னையும் என்னிடமிருந்து பறித்துக் கொண்டு ஓடினார்கள். நானும் பின்னே ஓடினேன். என்னால் அவர்களை பிடிக்க முடியவில்லை. உடைந்து போய் மயங்கி விட்டேன். மறு நாள் காலையில் ஹாஸ்பிட்டலில் இருந்தேன். என்னருகே என் குடும்பம் இருந்தாங்க. ஆனால் என் மகனை நான் தொலைத்து விட்டேன். அண்ணா, அம்மாவுக்கு தெரியக் கூடாதுன்னு சின்ன அண்ணாகிட்ட சொல்லி தேடினேன். ஆனால் நீ கிடைக்கவேயில்லை.
வீட்டிலும் கண்ணாவும் நந்து அண்ணியும் ஏதோ பிரச்சனையில் பிரிந்து இருந்தனர். அப்பொழுது இவனை கவனிக்க ஆரம்பித்தேன் என்று அதிரதனிடம் வந்தார். ஆனாலும் உன்னை நான் விடவில்லை. தினமும் விசு அண்ணாவிடம் கேட்பேன். இரு வருடங்கள் கடந்தது. இதற்கு மேலும் முடியாது என்று டிடெக்வ் ஒருவரை சந்தித்து பணம் கொடுத்து கண்டறிய சொன்னேன். அங்கே எந்த கேமிராவும் அன்று கிடையாது. பெரும்பாலான வசதிகள் இல்லாததால் உன்னை கண்டறிய முடியவில்லை என்று அழுதார்.
கதவு தட்டும் சத்தம் கேட்டு அதீபன் திறந்தான். அங்கிள், நீங்க இங்கேயா? என்று அதீபன் கேட்க, உள்ளே வந்தனர் தினகரனும் சங்கீதனும்.
தினா..நீ இங்க என்ன பண்ற? செழியன் கேட்க, “நான் வினுவை பார்க்க வந்தேன்” என்று அவர் சொல்லிக் கொண்டே அவளிடம் வந்தவர் செள்ளியனை பார்த்தது, கோபமாக அவனை அடிக்க ஆரம்பித்தார்.
“சார், அவனை விடுங்க. நடந்த எதுவும் தெரியாமல்” என்று அஷ்வினி வாயை கைகளால் மூடிக் கொண்டே கதவை பார்த்தாள்.
யாரோ நிற்கும் நிழல் தெரிய எழிலன் வெளியே வர, ஒருவன் ஓடினான்.
நில்லுடா, என்று அவன் ஓட அதிரதனும் நிதினும் அவன் பின் ஓடி எழிலனை இழுத்து வந்தனர்.
அறைக்குள் வந்ததும் கதவை அடைத்து அவனை விட்டனர்.
அவனை பிடித்தால் தானே யார்ன்னு தெரியும்? எழிலன் கத்தினான்.
எழிலா, அவன் கொலைகாரன் இல்லை. அவனோட ஆள் தான். அவனை பிடித்து நீ கேட்டால் அவனை அவனே கொன்னுப்பான் என்றான் நிதின்.