அத்தியாயம் 42

அதிரதனை தேடிக் கொண்டு நேத்ரா அவனறைக்கு சென்றாள். அவன் அங்கே இல்லை. அதனால் வெளியே வந்தாள். சன் கிளாஸை போட்டுக் கொண்டு யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.

ம்ம்..ஓ.கே. சொல்லு என்று அவனது அலைபேசியில் நம்பரை குறித்தான்.

சார்..நேத்ரா அழைக்க, அவளை பார்த்து ஐந்து நிமிடம் என கையை காட்டி விட்டு ஒரு புட்டேஜ் விடாம தேடுங்க என்றான். விக்ரமின் குழுவினர் அனைவரும் கார்த்திக்கை பற்றி தேட, அவன் கடைசியாக சென்ற இடம் தெரிந்தது. அவன் சென்ற கார் நம்பரை தான் குறித்தான் அதிரதன்.

கார் சென்ற புட்டேஜை அடுத்தடுத்து கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

“சார், கார் எங்குமே நிற்காமல் நேராக செல்லுது” என்றான் ஒருவன்.

ஓ.கே பாருங்க. நான் கால் பண்றேன் என்று அலைபேசியில் வேறொருவரை அழைத்து நம்பரை கூறி காரின் சொந்தக்காரரை பற்றி விசாரிக்க சொன்னான். அவர்களும் பார்த்து, விக்னேஷ் பெயரை சொல்ல அதிரதனுக்கு குழப்பமாக இருந்தது.

வீட்டினுள் வந்தான். அவள் செய்த வடை, சட்னியை எடுத்து வைத்தாள் நேத்ரா. சூடாக இருந்தது.

“வினு, ரொம்ப சூடா இருக்கு” என்றான்.

என்ன சார்? என்று புரியாமல் அவனை பார்த்தாள்.

சூடா இருக்கு என்று வாயை திறந்தான்.

வாட்? நோ..சார். சாப்பிடுங்க என்று அவள் செல்ல, புன்னகையுடன் அவளை பார்த்து கையில் எடுத்து ஊதிக் கொண்டிருந்தான். உள்ளே சென்ற நேத்ரா மெதுவாக தலையை நீட்டி அவன் செய்வதை பார்த்து புன்னகைத்து உள்ளே சென்று வேலையை கவனிக்கலானாள்.

அதிரதன் அலைபேசி அழைக்க, வாட்? என்று எழுந்து அவன் தானா? நிச்சயமா? என்று கேட்டான்.

சார், நியூஸ்லயும் வந்துருச்சு என்றான் விக்ரன்.

அலைபேசியை வைத்து விட்டு டிவியை போட்டுக் கொண்டு வினுவை அழைத்தான். அதிரதன் அலைபேசியில் இருந்த நம்பர் உள்ள காரை பாலத்தின் கீழிலுள்ள ஆற்றிலிருந்து பொக்லைனில் தூக்கினர். உள்ளே இருந்தவனை காட்டினர். அவன் கார்த்திக்.

வினு பதட்டமாக அதை பார்க்க, வினு இவன் தான் கார்த்திக்கா? அதிரதன் கேட்க, அவளும் அவனருகே அமர்ந்து, ஆமா சார் என்று கண்ணீருடன் “இவன் தான் கார்த்திக்” என்று சொல்லிக் கொண்டே அழுதாள். அவன் அவளை அவன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

எப்படி சார்? அவள் கேட்க, அதையும் நேரடி காட்சியாக்கினர். நன்றாக வந்த கார் திடீரென பாலத்தை இடித்துக் கொண்டு கீழே விழுந்தது. இதுவும் தற்கொலை செய்தியாக்கப் பட்டது. இவன் இறந்ததன் காரணம் காதல் தோல்வி என ஒரு பொண்ணை காட்டி இருவரும் இன்று மதியம் சாப்பிட போன ஹோட்டலில் இந்த பொண்ணு பிரேக் அப் செய்ததால் தற்கொலை செய்து கொண்டார் என அறிவிக்கப்பட்டது.

சார், அவனுக்கு யாருமில்லை தான். ஆனால் சிறுவயதிலிருந்தே ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்காது. இதை வைத்து என்னுடன் பேசவே ஆரம்பித்தான். தினமும் அம்மா என்னோட சேர்த்து இவனுக்கு சாப்பாடு செய்து தருவாங்க என்றாள்.

உன்னுடன் பேச, பழக கூட இவன் இதை செய்திருக்கலாம் வினு.

இல்ல சார், நம்ம சாருவுடமும் கூட வாங்குவான். அவளுக்கும் இவனை தெரியும். வேணும்ன்னா அவளிடமும் மத்த பசங்களிடம் கேட்டுக்கோங்க என்றாள்.

அவன் சாப்பிடாமல் கூட இருந்திருக்கலாம் என அதிரதன் மனதில் இருந்தாலும் இதற்கு காரணமும் வினுவை டார்கெட் செய்தவன் என்று புரிந்தது.

நேத்ரா மனதில் குற்றவுணர்வு குடியேற, அதிரதன் அலைபேசி அழைத்தது.

என்னடா அதிரதன், என்னை கண்டுபிடிக்க உனக்கு இவ்வளவு ஆர்வமா? உன்னோட வினுவை காதலித்தவர்களில் இன்னும் இருவர் மட்டும் தான் மிச்சம். யாருன்னு யோசிக்கிறாயா?

விஷ்வா, நிதின் மட்டும் தான் மிச்சம். ஆனால் எனக்கு அதிரதனுடன் என் நேத்து இருப்பது பிடிக்கலையே? என்னோட நேத்துவை நான் தான் எடுத்துப்பேன். அதுவும் அவளே விருப்பப்பட்டு வருவா என்றான் அவன்.

அதிரதன் அலைபேசியை பிடுங்கிய நேத்ரா, யாருடா நீ? உன்னை நான் என்ன தான் செஞ்சேன்? இத்தன பேரை கொல்ற? அது உசுருடா. அவங்க எல்லாரும் பொம்மையா? என்று அவள் கத்தினாள்.

நேத்தும்மா, உனக்காக எத்தனை உயிரையும் எடுப்பேன் என்றான்.

“எனக்கு கொலைகாரனெல்லாம் பிடிக்காது” என்றாள்.

பிடிக்கும் நேத்து. உனக்கு என்னை பிடிக்கும். எனக்கு நீ இருக்கும் அதிரதன் வீடும் பிடிக்கல. அவனும் பிடிக்கல. என்னிடம் வந்திரு என்றான்.

நேத்ரா எழுந்து வேகமாக வெளியே வந்து பார்த்தாள். யாரு நீ? எங்க இடம் உனக்கு எப்படி தெரியும்? என சுற்றி பார்த்து கத்தினாள்.

உங்க இடமா? என்ன நேத்து? அவனிடம் உரிமை கொண்டாடுற? அவன் உன்னை காயப்படுத்தி இருக்கான். மறந்துட்டியா? அவன் கேட்க, அதிரதனுக்கும் அவன் பேசுவதும் கேட்டது.

நான் வினுவை கஷ்டப்படுத்தினேனா? என நினைத்த அதிரதன் மனதில் “அதிரதனிடம் உதவி கேட்டு சென்ற நேத்ராவை தள்ளி விட்டதாக அவளே சொன்னாளே அது நினைவுக்கு வந்தது”. வேறேன்னவெல்லாம் செய்து வைத்தோமோ? என்று சிந்தனையுடன் அவன் பேசுவதையும் நேத்ரா பேசுவதையும் கவனித்துக் கொண்டிருந்தான்.

“எனக்கு உன்னை பிடிக்காது” நேத்ரா கத்தினாள்.

இல்ல நேத்து, என் மனசு முழுவதும் நீ தான் இருக்க? உனக்கு தெரியுமா? உன் அப்பாவிடம் உன்னை கட்டிக்கணும்ன்னு கேட்டேன். முடியாதுன்னு சொல்லீட்டார். எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா? நீ வேணும்ன்னா என்ன வேண்டுமானாலும் செய்யலாம்ன்னு தோணுச்சி..அதான் இந்த கொலை பயணம்.

என்ன? அப்பாவிடம் பேசினாயா? நீ விக்னேஷ் தானா?

ஏன் நேத்து, விக்கிய கூட கட்டிப்ப என்னை கட்டிக் கொள்ள மாட்டாயா? உனக்கு இந்த அதிரதன் செட் ஆக மாட்டான்டா. இப்ப என்னை கட்டிக்கிறேன்னு ஒரு வார்த்தை சொல்லு போதும். உடனே நீ என்னை பார்க்கலாம் என்றான்.

நேத்ரா அழுதாள்.

அழாத நேத்து. எனக்கு நெஞ்சு வலிக்குதடி என்றான்.

நேத்ரா அவள் கண்ணீரை துடைத்து விட்டு, என் அப்பாவே உன்னை மறுத்தால் கண்டிப்பாக நீ தப்பானவன் தான். “கொலை செய்யும் முன்னும் தவறாக தான் உன் வாழ்க்கையை வாழ்ந்திருக்க” என்ற நேத்ரா அதிரதனை பார்த்தாள்.

நீ இப்ப என்னை பார்க்கிறாயா? என கேட்டாள்.

ஆமா நேத்து, உன்னுடைய சிவப்பு புடவை அழகான மயில் நிற ஜாக்கெட்டும் உன் அழகை கூட்டி காட்டுது என்றான் அவன்.

ஓ..அப்படியா? என்று அதிரதன் கையில் அலைபேசியை கொடுக்க, அவன் அதை காதில் வைத்தான். நேத்ரா அதிரதனை நெருங்கி அவன் வலக்கையை அவளது இடையில் வைத்து, அவனை தூக்க சொல்லி கையை தூக்கி காட்ட, அதிரதன் அதிர்ச்சியுடன் அவளை பார்த்தான்.

சார்..என்று சொடக்கிட்டாள். அவன் அவளை பார்க்க, நேத்ரா அழகாக புன்னகைத்தாள். அதிரதன் இரு கைகளையும் அவள் இடையில் வைத்து அவளை தூக்கினான். அவன் முகத்தின் முன் வந்தவுடன் அவன் கண்களை நேராக நோக்கினாள். அவனும் அவளது கண்களை பார்த்தான்.

அதிரதனின் இதழ்களில் நேத்ரா அவளாகவே முத்தமிட, அவனும் முத்தமிட்டான். இவர்களின் முத்தம் நீள, அங்கே ஒருவன் துடித்துக் கொண்டிருந்தான். அதிரதன் தன் நீச்சல்குளத்தின் அருகே போட்டிருந்த நீளவாக்கிலான நாற்காலியில் படுத்துக் கொண்டு நேத்ராவை அவன் மேலே போட்டுக் கொண்டான். அவளும் தோதாக சாய்ந்து கொண்டாள். அவளை நிமிர்த்தி அதிரதன் முகமெங்கும் முத்தமிட்டான். கையிலிருந்த அலைபேசியை நேத்ரா கீழே விட்டாள்.

மெதுவாக, “சார் நீங்க தப்பா எடுத்துக்கலைல்ல” என்று அவன் மார்பில் படுத்துக் கொண்டு தலையை தூக்காமல் கேட்டாள்.

அவனை வெறுப்பேத்த நான் தான் கிடைத்தேனா? இப்படி சூடேற்றி விட்டாய் வினு?

சாரி சார், என்று அவளும் அவனும் மாறி மாறி புன்னகை குறையாது பேசினார்கள்.

அதிரதன் அலைபேசி மீண்டும் ஒலிக்க, சார் அவனாக தான் இருக்கும். எப்படி பேசணுன்னு பார்த்துக்கோங்க என்றாள்.

ம்ம்..என்று அலைபேசியை எடுத்த அதிரதனிடம், டேய் உன்னை கொல்லாமல் விட மாட்டேன். நேத்து என்னுடையவள். எனக்கு சொந்தமாவள் என்று கத்தினான்.

சரிடா, எங்கள தொந்தரவு செய்யாத. நாங்க எவ்வளவு முக்கியமான வேலையில் இருக்கோம் என்ற அதிரதன், வினு எங்கே உன்னோட அதிக்கு முத்தம்? என கேட்டான். அவள் புன்னகைத்தவாறு முத்தமிட்டு, சார் போதும் என்று வாயை அசைத்தாள்.

நோ..என்ற அதிரதன், சரிடா நீ வை. நாங்க உள்ள போய் கண்டினியூ பண்ணனும்.

“நேத்துவிடம் அலைபேசியை கொடு” என்று அவன் கத்தினான்.

அதுக்கு ஏன்டா கத்துற? அதிரதன் நேத்ரா காதில் போனை வைத்தான்.

நேத்தும்மா, வேண்டாம். அவனை இப்பவே கொன்றுவேன் என்று அவன் சத்தமிட, சரிடா அதிய கொன்னுடு. அவர கொன்னுட்டா நான் கிடைச்சிடுவேனா? என்னை இந்த அளவு பின் தொடர்கிறாய்? உனக்கு என்னை பற்றி தெரியும்ல்ல. நான் சொன்னா செஞ்சிருவேன். அவரை நீ கொன்றால் நானும் மறு நிமிடம் அவருடனே போயிடுவேன். எப்படியும் உனக்கு நான் கிடைக்க மாட்டேன் என்றாள் நேத்ரா.

உன்னை இதுக்கு மேல அழ விடாம பார்த்துக்கணும்ன்னு நினைச்சேன். ஆனால் நீ அழுதாலும் பரவாயில்லை. நீ எனக்கு வேணும்? அதுக்காக அவனை மட்டுமல்ல அவன் குடும்பத்தையும் கொல்லுவேன் என்று கத்தினான்.

“முடிஞ்சத பார்த்துக்கோடா” என்று தைரியமாக நேத்ரா சொன்னாலும் அவள் மனம் அடித்துக் கொண்டது. புரிந்து கொண்ட அதிரதன் அவளை அணைத்துக் கொண்டே அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு, “வாழ்ந்தாலும் உன்னுடன் ஒருநாள் போதும்” என்றான்.

அவனை நிமிர்ந்து பார்த்த நேத்ரா கண்கலங்க அவனை பார்த்துக் கொண்டே அவன் கை கோர்த்து அதிரதன் இதழ்களில் காதல் நிரம்பி வழிய முத்தம் கொடுத்தாள்.

உள்ளே சென்றதும் “சாரி சார்”. அவனால் தான் இப்படி நடந்து கொண்டேன். “வெரி சாரி சார்” என்றாள் நேத்ரா.

அவள் ஒதுக்கம் அதிரதனுக்கு கஷ்டமாக இருந்தது. விரக்தி புன்னகையுடன் அதிரதன் அவளை கடந்து உள்ளே சென்றான்.

சட்டக்கல்லூரியில் ஆரா தன் நண்பர்களுடன் அமர்ந்திருந்தாள். இந்த ரணாவ இன்னும் காணோம்? கண்ணன் கேட்டுக் கொண்டே காவியனை பார்த்தான். அவன் எப்பொழுதும் போல் புத்தகத்தில் கவனத்தை செலுத்தி இருந்தான்.

கலர் ஆடையில் வரும் ரணா இன்று அவர்கள் கல்லூரிக்கே உரித்தான ஆடையுடன் போனிடைலில் வந்தாள். பின்னே கார்ட்ஸ் வர, அனைவரும் ரணாவை கிண்டல் செய்ய, ஒருவன் அவள் முன் வந்து

உனக்கெல்லாம் பாடி கார்ட்டா? என்று வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான்.

ஒழுங்கா ஓடிப் போயிடு. நானே கடுப்போட வந்துருக்கேன். அடிச்சிருவேன் என்றாள்.

தம்பி, ஓரமா போய் சிரிங்க என்று துர்கேஷ் சொல்ல, ரணா அவனை பார்த்து விட்டு தன் நண்பர்களிடம் சென்றாள். அவர்களும் அவள் பின் சென்றனர்.

பையை தூக்கி கோபமாக எறிந்து விட்டு ஆரா மீது சாய்ந்து அமர்ந்தாள்.

என்ன இவ்வளவு கோபமா இருக்க?

கோபமா? எரிச்சல்..இடியட்ஸ் என்றாள். “அப்படியே அவங்க அண்ணன் மாதிரியே பேசுறா பாரு” என்று காவியன் நினைத்துக் கொண்டே அவளை பார்த்தான்.

தள்ளி உட்காருடி. இருக்குற கசகசப்புல இவ வேற? ஆரா ரணாவை தள்ளினாள்.

என்னன்னு சொல்லு ரணா? எனக்கு ஆர்வமா இருக்கு என்று ராகவ் சொல்ல, எல்லாரும் அவனை முறைத்தனர்.

“சும்மாவே கதை அளப்பாள் இவன் வேற” என மற்றவர்கள் அலுத்துக் கொண்டனர்.

ஆராவை பார்த்து, ஆரா நான் உன்னோட வீட்டுக்கு வந்திரவா? என்று கேட்டு விட்டு இல்ல..இல்ல.. உன்னோட அம்மா என்னை கடிச்சு விழுங்கிடுவாங்க என்று ராகவ், கண்ணனை பார்த்து, உங்க வீட்டுக்கு வந்தால் சாப்பிட வச்சே கொன்னுடுவாங்க.

சங்கீதா. உன்னோட வீட்டுக்கு வரவா? லட்சுவும் கூட இருப்பா என்றாள் ரணா.

எதுக்கு இப்ப வீட்டை விட்டு வர்ற மாதிரி பேசிட்டு இருக்க? ஆரா கேட்க, அய்யோ இவனுக தொல்லை தாங்க முடியல ஆரா.

யாரை சொல்ற? லட்சணா கேட்க, எல்லாரும் லவ் பண்ற ப்ரெண்ட வச்சிட்டு புலம்புவாங்க. ஆனால் என்னை பாரு. லவ் பண்ற உறவுகள வச்சிட்டு புலம்பிட்டு இருக்கேன் என்றாள் கடுப்பாக.

என்ன? ராகவ் கேட்க, “இவனுக வேண்டுமென்றே செய்ற மாதிரி இருக்குடா” என்று ராகவ்வை பார்த்தாள் ரணா.

ரணா, முதல்ல யார சொல்றன்னு சொல்லு?

நிதுவையும் அண்ணாவையும் தான் சொல்றேன் என்றாள். காவியன் நிமிர்ந்து அவளை பார்த்தான். ஆனால் அவள் கவனிக்க கூட இல்லை.

அதீபன் அண்ணாவா? லட்சணா கேட்க, அதே லூசு, எருமைய தான் சொல்றேன்.

சூப்பர்ம்மா..பேசு பேசு என்றான் கண்ணன்.

இரவு பசிக்குதுன்னு ப்ரூட் எடுக்க கிச்சனுக்கு போனேனா? அங்க எதையோ நிது உருட்டிக்கிட்டு இருந்தான். அருகே சென்று பார்த்தால் செம்மையான ஹனி கேக். வேற லெவல்ல இருந்தது. பார்த்தவுடன் அந்த ஜூஸியான கேக்..ம்ம்ம்..நாக்கால் உதட்டை நனைத்தாள். அனைவரும் அவனை ஆவென பார்த்தனர்.

பார்த்தீங்களா? உங்களுக்கே சாப்பிடணும் போல இருக்குல்ல. கொஞ்சம் மட்டும் குடுடான்னு கேட்டா அவனோட வொய்ஃபுக்காம். இன்னும் கல்யாணமே பண்ணல. அதுக்குள்ள பாரு ஆரா? உன்னோட வொய்ப்ஃபுக்கே குடு. எனக்கு ஒரே ஒரு பீஸ் மட்டும் தாடான்னு? கேட்டேன்.

முடியாது. “இது என்னோட லவ் கேக்” என்றான்.

அது என்னடா லவ் கேக்குன்னு கேட்டா?

ஹார்ட் சேஃப்பை காட்டுறான்டி. ஊட்டி விட்டு சாப்பிடுவானுகளாம். அதெப்படி இருவர் மட்டும் அந்த கேக் முழுவதையும் சாப்பிடுவாங்க? அவள் கேட்க, ஆராவும் லட்சுவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

ரணா நம்ம கிளாஸ்க்கு போவோமா? நேரமாகுது ஆரா கேட்க, நான் கேட்டதுக்கு பதில சொல்லு ஆரா? என ரணா கேட்டாள்.

வேறென்ன? மூஞ்சியில பூசி விளையாடுவாங்க என்றாள் லட்சணா, டேய் இதுக பேச்சு ஓவரா போகுது. சரியில்லை சங்கீதா காவியனிடம் சொல்ல, அவன் மூவரையும் பார்த்தான்.

விளையாடுவானுகளா? சரி அதை விடு. இந்த பக்கி பயபுல்ல காலங்காத்தால தூங்குற தாட்சு அண்ணிய கூட்டிட்டு போய் பியானோ வாசிக்கிறான். எங்க வீட்ல எல்லாம் அரைபைத்தியமா இருக்குக என்றாள்.

ஓ..அவங்க பைத்தியமா? ஆரா கேட்டாள்.

ஆமா, அப்புறம் என்ன நானா? என்ற ரணா, லவ் பண்ணா இப்படியா பைத்தியம் பிடிச்சு திரிவானுக? அச்சோ என் அண்ணா கதி என்னவா இருக்கும்? என்று அதிரதனை கேட்டாள்.

அப்புறம் அவளாகவே என்னோட அண்ணா, இந்த மாதிரி முட்டாள் தனமெல்லாம் பண்ண மாட்டான். ம்ம்ம்..நேரக் கொடுமைடா என்று கண்ணன் தலையில் அடித்தான்.

சரி, லவ் பண்ற எல்லாரும் முட்டான்னா? நீ அறிவாளியா ரணா? என்று ராகவ் கேட்க, அவள் காவியனை பார்த்தாள். அவனும் அவளை நேராக பார்க்காமல் இடையிடையே பார்த்தான்.

நான் எப்படி என்னை நானே ஜட்ஜ் பண்ண முடியும்? நீங்க தான் சொல்லணும் என்று ரணா கேட்க, சங்கீதன் எழுந்து ரணா அருகே சென்று, என்னம்மா இது? புத்திசாலி செய்ற வேலையா இது? என்று கேட்டான்.

அது அம்மா மேல இருந்த கோபம் என்றாள்.

இல்லையே? அவன் சொல்ல, இதுக்கு மேல அமைதியா இங்க இருக்க முடியாது என்று நினைத்த காவியன் எழுந்தான். ரணாவால் காவியனை ஃபேஸ் பண்ண முடியல.

துர்கேஸ் அருகே சென்று, தேங்க்ஸ் “மை லவ்லி கார்டு சார்”. நீங்க மட்டும் அவனை தடுக்கலைன்னா. அவ்வளவு தான். என்னிடம் அடி வாங்கி இருப்பான் என்று விறைத்த அவன் மார்பில் அடித்தான். அவன் அவளை பார்த்து, “இட்ஸ் மை டியூட்டி மேம்” என்றான்.

ஆமா, எப்பப்பாரு இப்படியே தான் இருவரும் இருப்பீங்களா? ப்ளீஸ் கொஞ்சம் கேசுவலா இருங்க.

நோ..மேம் என்றான் மற்றவன்.

போங்கடா டேய்..இப்படி இருந்தால் உங்களோட பேசவே மாட்டேன் என்றாள்.

மேம், ட்ரை பண்றோம் என்றான் துர்கேஷ். பக்கமிருந்தவன் அவனை முறைத்தான்.

வாவ், கிரேட் யா என்று அவன் கையில் குத்தினாள்.

உனக்கு வலிக்கலையா? என்று அவன் கையில் மீண்டும் குத்தினாள்.

மேம், உங்க கை ரொம்ப சாஃப்டா இருக்கு. உங்களால முடியாது என்றான் புன்னகையுடன்.

வாவ், க்யூட்டா சிரிக்கிற? வா..வா..என்று அவமுடன் சேர்ந்து ரணா செல்ஃபி எடுக்க, ஆர்வக்கோளாறு கண்ணனும் சேர்ந்து கொண்டான். காவியன் உள்ளம் கொதித்தது. மற்றவர்கள் அவனை பார்க்க, நான் கிளாஸ்க்கு போறேன் என்று கோபமாக நகர்ந்தான் காவியன்.

ஹேய் ரணா, வா..என்று ஆரா அவளை இழுத்து செல்ல, துர்கேஷ் அவளை பார்த்து புன்னகைத்துக் கொண்டே செல்ல, மற்றவன் அவனிடம், நீ செய்வது சரியில்லை. பிரச்சனையாகி விடாமல் என்றான். துர்கேஷ் போகும் ரணாவை வருத்தமுடன் பார்த்துக் கொண்டு நின்றான்.

காவியனால் வகுப்பை கவனிக்க முடியாமல் அமர்ந்திருந்தான். இதற்கு மேல் முடியாதுப்பா என்று எழுந்து “சார், கேன் ஐ கோ அவுட்சைடு?” என்று கேட்டான். வகுப்பிலிருந்த அனைவரும் அவனை தான் பார்த்தனர்.

என்னாச்சுப்பா?

சார்,..என்று தயங்கினான்.

சீக்கிரம் வந்துருப்பா என்றார். அவன் வெளியே வந்தான். கார்ட்ஸ் இருவரும் வெளியே அமர்ந்திருந்தனர். காவியன் அலைபேசியை ஆன் செய்தான். அடுத்தடுத்து மேசேஜ் அதிரதன் அனுப்பி இருந்தான்.

காவியனுக்கு துர்க்கேஷை பார்த்து கடுப்பானது. அவனை முறைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றான்.

ஆரா, காவியனுக்கு என்னாச்சு? ரணா அவளை சுரண்ட, “சும்மா இருடி” என்று சத்தமிட்டாள் ஆரா. சார் அவளை வெளியே அனுப்பினார்.

“சாரி ஆரா” என்று ரணா கையெடுத்து கும்பிட, “ரணா வெளிய போ” என்றார் சார்.

“தேங்க்யூ சார்” என்று ரணாவும் வெளியே வந்தாள்.

காவியன் கேண்டினில் தேனீரை வாங்கி அமர்ந்திருந்தான். அதிரதனுக்கு இவனும் அனுப்பினான் கோபமாக.

சார், உங்க தங்கச்சிக்கு தான் கார்ட்ஸ் இருக்காங்கல்ல. எதுவாக வேண்டுமானாலும் அவங்ககிட்ட கேட்டுக்கோங்க என்று அவன் அனுப்ப, அலைபேசியை அறையில் போட்டு வந்திருப்பான் அதிரதன். பதில் வராமல் இருக்க காவியனுக்கு கோபம் வந்தது.

கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு தேனீரை பருகிக் கொண்டிருந்தான். அதிரதன் மேசேஜை பார்த்து காவியனை அழைத்து, இப்ப உனக்கு வகுப்பு இல்லையா? எனக் கேட்டான்.

இருக்கு.

எங்க இருக்க? அதிரதன் கேட்டான்.

“நான் எங்காவது இருக்கேன்” என்றான் காவியன்.

என்னாச்சுடா உனக்கு? என்று அதிரதன் கேட்க, காவியன் அருகே வந்த ஆரா அவளது பையை டப்பென வைத்தாள்.

ஆரா, நீ என்ன வந்துட்ட? காவியன் கேட்டான்.

நான் எங்க வந்தேன்? என்னை வெளிய அனுப்பீட்டாங்க என்றாள்.

சாரா அனுப்பினார்? அவன் கேட்க, அதான் கூடவே ஒருத்தியை வச்சிருக்கோமே? ரணா என்னை டென்சன் ஆக்கியதில் சத்தம் போட்டு விட்டேன். சாருக்கு கோபம் வந்துருச்சு. வெளிய அனுப்பீட்டார் என்றாள்.

சார், நாம அப்புறம் பேசுவோம் என்று அலைபேசியை வைத்து விட்டான்.

என்னாச்சு இவனுக்கு? என்று அதிரதன் அதீபன் அனுப்பும் மெயிலை பார்த்துக் கொண்டிருந்தான்.

வெளியே வந்த ரணா செல்ல, அவள் பின்னே கார்ட்ஸ் வந்தனர்.

எங்க போனான்? இவனையும் காணோம். ஆராவையும் காணோம் என இருவரையும் தேடிக் கொண்டே வந்து மரத்தடி கல் இருக்கையில் அமர்ந்தாள். பின் இருவரையும் பார்த்து உடன் அமரச் சொன்னாள்.

நோ..மேம் என்று இருவரும் நின்றனர்.

டேய், உட்காருங்கடா. முடியல என்று அவள் சொல்ல, இருவரும் அமர்ந்தனர். உங்கள பத்தி சொல்லுங்க என்று அவள் பேசி விட்டு, செம்ம ஹாட்டா இருக்குல்ல என்று சுற்றி பார்த்து அவளது கோர்ட்டை கழற்றினாள். வெள்ளை நிற ஆடையில் குட்டி தேவதையாக துர்கேஷ் கண்ணுக்கு ரணா தெரிந்தாள்.

வாங்க, ஜூஸ் குடிக்கலாம் என்று கேண்டினுக்கு அழைத்து வந்து, காவியனையும் ஆராவையும் பார்த்து..ஹே நில்லுங்க என்று மரத்தின் பின் நின்றாள் ரணா.

“ஹே, நீங்க இங்க இருக்கிறத பார்த்தா நான் இங்க தான் இருக்கேன்னு கண்டுபிடிச்சிருவாங்க” என்று இருவர் கையையும் பிடித்து இழுத்து வந்து அவளுக்கு பின் நிற்க வைத்தாள்.

டேய், பின்னாடி வா என்று கார்டு ஜனா சொல்ல, போடா என்று துர்கேஷ் பல்லை காட்டிக் கொண்டு நின்றான். ரணா திரும்பி இருவரையும் பார்த்து, ஷ்..என்றாள்.

ஆரா காவியனிடம், நீ எப்ப தான் சொல்லப் போற? எனக் கேட்டாள்.

என்னத்த சொல்றது? காவியன் கேட்க, அவனது அழகான அரும்பு மீசையின் மீது அவன் குடிக்கும் தேனீரின் தடம் இருந்தது.

ஆரா அவனை பார்த்து புன்னகைத்து, அவனுக்கு துடைத்து விட ரணா கொந்தளித்தாள்.

“பாவி, அவனை நான் காதலிக்கிறேன்னு தெரிஞ்சே என்ன வேலை பார்க்கிறாள் பாரு?” என்று ரணா சொல்ல, துர்கேஷ் முகம் மாறியது.

என்ன பேசுறாங்கன்னு வேற தெரியலையே? என ரணா புலம்பிக் கொண்டிருந்தாள். பின்னிருந்தவன் துர்கேஷை பிடித்து இழுத்தான். துர்கேஷ் இவனை தள்ள, அவன் துர்கேஷை தள்ளினான்.

என்னடா பண்றீங்க? என ரணா திரும்பினாள். அவன் தள்ளியதில் துர்கேஷ் ரணாவை இடித்தான். அவள் நகர்ந்து கீழே விழ அவளது கை கோர்த்து அவளை பிடித்தான் துர்கேஷ். அவள் நேராக அவன் மார்பில் கை வைத்தாள். துர்கேஷ் ரணாவை பார்த்துக் கொண்டிருக்க, சரியாக இதை காவியனும் ஆராவும் பார்த்தனர்.

டேய், என்ன பண்ற? என்று மற்றொரு கார்டு அவனை அடிக்க, அவன் பயத்தில் ரணாவை விட்டான். நல்லா விழு என்று காவியன் மனதில் ஏற்பட்ட ரணத்தோடு ரணாவை பார்க்க, ஒருவன் வந்து ரணாவை பிடித்ததோடில்லாமல் அவளை இழுத்து செல்ல..

ஹே, யாருடா நீ? என்று ரணா அவனை தள்ளி விட, அவன் முதுகில் சொருகி வைத்திருந்த கத்தியை எடுத்தான். அனைவரும் பதற, ரணாவை இழுத்து அவள் கழுத்தில் கத்தியை வைத்தான்.

“எல்லாம் உன்னால் தான்” என்று துர்கேஷை கார்டு திட்ட, துர்கேஷ் முன் வந்தான்.

“யாராவது நகர்ந்தால் இங்கேயே இவளை அறுத்து போட்டிருவேன்” என்று அவன் மிரட்ட, ஓர் வேன் வந்தது. அதில் ரணாவை ஏற்றி செல்ல, ஆரா வகுப்பிற்கு போ. எதற்கும் கவனமா இருங்க என்று காவியனும் கார்ட்ஸூம் பின் ஓடினர்.

ரணா உள்ளே இருந்தவன் கையை கடித்து விட்டு வெளியே செல்ல நினைக்க, அவளை மயக்கமாக்கினார்கள்.

இவனுக பிரமோசன் வீடியோவை செய்யாமல் இருந்தால் இப்படி நடந்திருக்காதே? என்று ஒருவன் சத்தமாக சிரித்துக் கொண்டு, போனை போடுடா என்று சொல்ல, அதீபனை அழைத்தனர்.

அவன் திமிறாக, என்னடா பிரமோசன் வேலை முடிஞ்சிருச்சு போல? ஆனால் பாவம் உன்னோட குட்டி தங்கச்சி. அவள மானம் பறக்கப் போகுது என்று மீண்டும் சத்தமாக சிரித்தான்.

டேய்..டேய்..அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு? செத்தீங்கடா என்று அதீபன் தன் காரை எடுத்தான்.

நீ எங்க தேடினாலும் கிடைக்க மாட்டா..என்று அலைபேசியை அவன் வைத்து விட, காவியனை அழைத்தான். அவன் அந்த வேன் பின் தான் ஓடிக் கொண்டிருந்தான். ஆனால் கார்ட்ஸ் இருவரும் துப்பாக்கியை எடுத்து வேன் டயரில் சுட,வேன் நின்றது.

உள்ளிருந்து ஆறு பேர் இறங்கினர். ஒருவன் உள்ளிருப்பது தெரிந்தது. அவன் தான் ரணா விபத்தில் போது சங்கீதன் பார்த்தவன்.

ஹே, இவனுகள நாங்க பார்த்துக்கிறோம். நீ மேம்மிற்கு உதவு என்றான் துர்கேஷ்.

காவியன் வேனருகே செல்ல, உள்ளிருந்து ஒருவன் துப்பாக்கியை நீட்டினான். ரணா ஆடை களைந்திருக்க கண்ட காவியன் சீற்றமுடன் துப்பாக்கி வைத்திருந்தவன் கையை பிடித்து திருப்பினான். காவியனது அடிபட்ட கையிலே தோட்டா ஒன்று உராய்ந்து சென்றது. அப்படியும் விடாமல் துப்பாக்கி இருந்த கையை காவியன் அடித்தான். பின் மற்றவன் கையிலிருந்த துப்பாக்கி கீழே விழ, கதவை வேகமாக தள்ளினான்.

உள்ளிருந்தவன் காவியனை எத்தி வெளியே தள்ள, இரு கைகளையும் இரு பக்க கதவிலும் பிடித்துக் கொண்டு அவனை பார்க்க முயற்சித்தான். பின் ஒரு கையை விட்டு சாதுர்யமாக உள்ளே சென்றான் காவியன். மற்றவன் மறுபக்க கதவின் வழியாக வெளியே சென்று ஓர் காரில் ஏறி தப்பித்தான்.

கண்ணீருடன் ரணா ஆடையை சரி செய்து அவளை எழுப்பினான். அவள் எழாமல் இருக்க, அவளை தூக்கிக் கொண்டு வெளியே வந்தான் காவியன். இன்னும் சிலர் அங்கே வந்தனர். காவியனால் ரணாவை கையில் வைத்துக் கொண்டு ஏதும் செய்ய முடியவில்லை.

ரணாவை தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தான். அதிரதன் இருக்கும் பீச் பக்கம் வந்தான். அவனை பிடித்து விட்டனர். ஓடும் போதே அதிரதனிடம் சொல்லிக் கொண்டே வந்திருப்பான். அதிரதன் பதறி வந்து கொண்டிருந்தான். நேத்ரா அவளறையில் இருந்ததால் விசயம் அவளுக்கு தெரியாது.

கத்தியை எடுத்து காவியனை குத்த வரும் சமயத்தில் ரணா விழித்தாள். காவியனுக்கு முன் அவள் வந்து நிற்க, என்ன செய்ற? என்று அவளை இழுத்து காவியன் பின் வைத்துக் கொண்டே நடந்தான். அவர்கள் கத்தியை வீச, துப்பாக்கியால் அவர்களை சுட்டுக் கொண்டே அருகே வந்த துர்கேஷூம் ஜனாவும் இருவரையும் பார்த்தனர்.

பின்னிருந்து பத்து பேர் வர அவர்களை நோக்கி இவர்கள் சென்றனர். ரணாவை அழைத்துக் கொண்டு காவியன் செல்ல, ஏற்கனவே கார்ட்ஸூடம் அடி வாங்கியவர்கள் காவியனை நோக்கி வந்தனர். பின்னே பார்த்தனர் யாருமில்லாதது போல் இருந்தது. காவியன் சந்தேகமாக சுற்றி நோக்கினான்.

துர்கேஷ் கத்தும் சத்தம் கேட்டு ரணா திரும்பினாள். காவியன் மீது குத்த வந்த கத்தி துர்கேஷ் மீது பாய்ந்தது. இருவரும் அதிர்ந்து அவனை பார்த்தனர். மற்றொருவனை தேடினர் இருவரும். அவனும் வந்தான் கத்தியுடன். ஆனால் இவர்களை நோக்கி வர, ரணா சீக்கிரம் வா..என்று காவியன் ரணா கையை இழுத்து கொண்டு செல்ல, காவியனை இழுத்து அடிக்க ஆரம்பித்தனர் ஆட்கள்.

ஹே, நீ..என்று ஜனாவை பார்த்து ரணா துர்கேஷை பார்த்தாள். அவன் கையை நீட்டிய படி இறந்து கிடந்தான். அவள் கண்ணீருடன் இல்ல என்னோட காவியனுக்கு ஏதும் ஆகாது என்று அவர்கள் முன் வந்து நானே வாரேன். அவனை விட்ருங்க என்று கதறி அழுதாள். காவியனுக்கு அடி அதிகமாக இருந்தது.

ரணா, போகாத என்று காவியன் கத்தினான். சாரிடா என்று அவனை அணைத்து அவள் நகர, அவள் கையை பற்றிய காவியன் “போகாத” என்றான். அவன் கையை அவள் எடுக்க, காவியன் எழுந்து ரணாவை பிடித்து இழுத்தான்.

வேண்டாம்டா. நான் போறேன் என்றாள். “உன்னை விடுவதும் நான் சாவதும் ஒன்று தான்” என்று காவியன் சொல்ல, “இவனை போடுங்கடா” என்று ஒருவன் கத்தினான்.

கத்தியை எடுத்து காவியனிடம் அவர்கள் வந்தனர். குத்த வந்த சமயம் ரணா அவன் முன் வர அவள் வயிற்றில் கத்தி கீறியது. ரணா..என்று காவியன் முன் வந்தான். ரணா மயங்கினாள்.

அதிரதன் அங்கு வந்து அனைவருடன் சண்டையிட்டு அருகிலிருந்த  ஹாஸ்பிட்டலில் இருவரையும் சேர்த்தான். காவியன் மருந்திட்டு, சார் ரணாவ பார்த்துக்கோங்க. நான் அக்காவை பார்க்க போகிறேன் என்று வெளியேறினான்.

ரணா விழித்து பார்க்கும் போது மொத்த குடும்பமும் இருந்தது. அவள் காவியனை தேடினாள். அழுது கொண்டே காவியன் பெயரை கூறி அழைத்தாள்.

அவனுக்கு ஒன்றுமில்லை ரணா. அவன் மருந்திட்டு அவன் அக்காவை பார்க்க போயிட்டான்.

இல்லண்ணா. அவன் முதுகில் ஒருவன் வெட்டினான். அதனால் தான் மயங்கினேன் என்றாள் ரணா.

இல்ல ரணா..அதிரதன் சொல்ல, அண்ணா..நிஜமாக தான் என்று அவள் உள்ளங்கையில் இருந்த இரத்தத்தை காட்டினாள். ரணாவிற்கு வயிற்றில் கீறல் விழுந்தது உண்மைதான். ஆனால் அவள் கனமான கோர்ட்டை சுற்றி இருந்ததால் அதில் தான் கிழித்து இருந்தது. காவியன் அவளை தூக்கும் போது அவ னுடையதை கட்டி இருப்பான். பயத்தில் மயங்கியதாக தான் டாக்டரும் சொன்னாங்க. அவளுக்கு இரத்தக்காயமே இல்லை. ஆனால் பட்டது காவியனுக்கு.

நேத்ராவை அதிரதன் தனியே விட்டு வந்ததால் நர்ஸிடம் சொல்லி கட்டு போட்டு விட்டு ஓடியிருப்பான்.

ரணா, நிஜமா தான் சொல்றீயா? அதிரதன் கேட்டான்.

அண்ணா, இது அவனோட இரத்தம் என்று அழுதாள். அம்மா, நான் அவனை பார்க்கணும். பயமா இருக்கு என்று ரணா அழுதாள்.

அதிரதன், நிதின், அதீபன், செழியன், ரவிக்குமார் வெளியே வந்தனர்.

ரவிக்குமார் அதிரதனிடம், மாப்பிள்ள அந்த காவியன் பையனை நான் எங்கோ பார்த்துருக்கேன். அப்படி தான் தோணுது. ஆனால் எங்க பார்த்தேன்னு தெரியல என்றார்.

நீ அவனை பார்த்திருக்கிறாயா? செழியன் கேட்க, ஆமாடா நீ அவனை பார்த்தாயா? உனக்கு அப்படி தோணுதா? ரவிக்குமார் செழியனிடம் கேட்டார்.

இல்லை. நான் அவனை பார்க்கவில்லை என்று அதிரதனை பார்த்தார் செழியன்.

ரணா படுக்கையிலிருந்து வெளியே ஓடி வந்து அதிரதனை அணைத்து, அண்ணா அவனுகள சும்மா விடாத. அவனை கொன்னுட்டாங்க என்று அழுதாள்.

பதறி ரணாவை விலக்கி யார கொன்னுட்டாங்க? என்ன சொல்ற குட்டிம்மா? அதிரதன் கேட்க, ரணா அழுது கொண்டு துர்கேஷூடன் எடுத்த புகைப்படத்தை காட்டினாள். அவனுடன் இருந்தவன் என்னை கொல்ல வந்தான் அண்ணா. ஆனால் இவன் எனக்காக..என்று அழுதாள். இப்ப காவியனும் அண்ணா..அவனுக்கு ஒன்றுமாகாதுல்லண்ணா என்று  அதிரதனை கட்டிக் கொண்டு அழுதாள்.

குட்டிம்மா, அவனுக்கு ஒன்றுமாகாது. பயப்படாத என்று அவன் ரணாவை தேற்றிக் கொண்டிருக்க செழியன் தன் மகனையும் மகளையும் பார்த்தார்.

சங்கீதன் அதிரதனை அழைத்தான். அதிரதன் எடுக்கவும், ஏன் சார் அவனை தனியா விட்டீங்க? என கத்தினான்.

சங்கீதன், நீ யாரை சொல்ற?

யாரையா? காவியனை தான் சொல்றேன்.

ரணாவை விலக்கி, அவனுக்கு ஒன்றுமில்லைல்ல? அதிரதன் கேட்டான்.

நானும் எங்க ப்ரெண்ட்ஸூம் அவனை தேடி வரலைன்னா செத்து போயிருப்பான் என கத்தினான் சங்கீதன்.

என்னடா சொல்ற? அதிரதன் பதற, வினு அக்கா கூட தான் இருக்கோம். சீக்கிரம் மருத்துவரை அழைச்சிட்டு வாங்க அவன் சொல்ல, நேத்ரா அழும் சத்தம் அதிரதனுக்கு கேட்டது.

நேத்ரா அலைபேசி அழைக்க, அவள் அழுது கொண்டே எடுத்தாள்.

என்ன நேத்து, காவியன சாவடிச்சுட்டேன்னு நினைச்சேன். உயிரோட தான் இருக்கான் போல. அதிரதனோட தங்கச்சிய தொட்டா இவனுக்கு என்னவாம்? பசங்க சும்மா விடுவாங்களா?

என்னடா சொல்ற? சாரோட தங்கச்சியா? என்ன பண்ண? இவனுக்கு எப்படி அவரு தங்கச்சிய தெரியும்? நீ என்னதான் பண்ற? நீ யாரு? கேட்டுக் கொண்டே அழுதாள்.

நேத்து, எனக்கு நீ வேணும். அவ்வளவு தான். நீ வந்தேன்னா..எல்லாரையும் நான் விட்டு விடுகிறேன். ஆனால் அந்த நிதின் அதிரதனை நான் ஏதும் செய்ய மாட்டேன். அவங்க பிரச்சனைய அவங்க தான் சரி செய்யணும் என்று வர்றீயா? என கேட்டான்.

கண்ணை துடைத்த நேத்ரா, மயக்கத்தில் இருந்த காவியனை பார்த்து மற்றவர்களை பார்த்தாள்.

அதிரதனுடன் பேசிக் கொண்டிருந்த சங்கீதன், அக்கா யார்கிட்ட பேசுறீங்க? என கேட்டான்.

அலைபேசியை காதில் வைத்து, எங்க வரணும் சொல்லு? என்றாள் நேத்ரா.

அக்கா, எங்க போக போறீங்க? சங்கீதன் கேட்க, ஏய் என்ன பண்றீங்க? அவ என்ன சொல்றா? அதிரதன் கத்தினான். ரணாவும் மற்றவர்களும் அவனை பார்த்தனர்.

“இதுக்கு மேல என்னால யாரும் சாக வேண்டாம்டா. நான் போரேன்” என்று நேத்ரா அழுது கொண்டே சொல்ல, எங்க போக போறீங்க? சங்கீதன் சத்தமிட்டான்.

அந்த கொலைகாரன் வரச் சொல்றான். நான் போறேன். முதல்ல காவியனை பாருங்க என்று அவள் அழுது கொண்டே நகர, ராகவ், கண்ணன் அவளை மறித்து நின்றனர்.

அவ என்னடா சொல்றா? அவள வெளிய விடாதீங்க. நான் வாரேன் என்று அதிரதன் டாக்டர் அறைக்கு சென்று அவரை அவசரமாக அழைத்துக் கொண்டு ஓடினான்.

ரதா, என்னாச்சுடா நில்லு. தனியா போகாத என்று நிதின் பின்னே ஓட, அவன் காரில் வேகமாக சென்றான். நிதினால் மேலும் ஓட முடியாமல் நின்றான்.

அலைபேசியில் கார்ட்ஸ்ஸை அழைத்தான். அவர்கள் வரவும் இருவருடன் அவனும் கிளம்பினான்.