இருவீட்டிலும் திருமண ஏற்பாடுகள் முற்றிலும் நிறைவு பெற்றுவிட்டது, சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அதிலும் இராஜமாணிக்கம் தன் ஒற்றை மகளின் திருமணத்தை ஊர் பிரமிக்கச் செய்து கண்குளிர காணும் ஆசையிலிருந்தார்.
திருமணத்திற்கு இன்னும் பத்தே நாட்கள் இருக்கும் நிலையில், உறவினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு, ஊரில் அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கியிருந்தனர்.
இரவு பால் கிளாஸ் எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தாள் கயல். ஆனால் அன்பு அறையில் இல்லாமல் இருக்க, மொட்டை மாடியில் இருப்பானோ என்றெண்ணி மீண்டும் அறையிலிருந்து வெளியேறி மாடிப்படியை நோக்கிச் சென்றாள்.
ஸ்வேதாவின் அறையைக் கடந்து செல்லும் போதே, அன்பு உள்ளிருப்பதைப் பார்த்தவள் அறையின் வாசலில் சென்று நின்றாள்.
சோபாவில் இருவரும் அருகருகே அமர்ந்திருக்க, எதிரே இருந்த லேப்டாப்பில் எதையோ காட்டியவாறு, “மோர் ஓவர் நயன்டீ பர்சென்ட் ஒர்க் முடிஞ்சது அன்பு, மீதி இருக்குறதும் நாமா நினைச்ச மாதிரி நடக்கும். அண்ட் இதனால கல்யாணத்துல ஏதாவது ப்ராப்ளம் வந்துட்டா?”என்க, “பரவாயில்லை, அது கூட நல்லது தான்!” என உரைத்துக் கொண்டிருந்தான் அன்பு. ஸ்வேதா நிமிர, வாசலில் நிற்கும் கயலைப் பார்த்தாள்.
“உள்ள வா கயல்” ஸ்வேதா அழைக்க, உள்ளே வந்தவள் கையிலிருந்த பால் கிளாஸை அவளிடம் நீட்டினாள். இருவரும் தொழில் பற்றிப் பேசுகையில் அவளும் தான் அங்கு என்ன பேச? கண்களாலே அன்புவை அழைத்துவிட்டு தங்கள் அறைக்குச் சென்றாள்.
ஜன்னலோரம் நின்றிருந்தவளை பின்னிருந்து அழுத்தி அணைத்து கழுத்து பகுதியில் இதழ் பத்தினான். எப்போதும் அவன் அணைப்பில் அழுத்தமிருக்கும், முத்தங்கள் கூட வன்மையாகத் தான் இருக்கும், மென்மை என்பது அவன் அகராதியிலேயே இல்லாத வார்த்தை.
“எதுக்குகூப்பிட்ட செல்லம்?” கொஞ்சலுடன் கேட்க, அவன் கைகளை மெல்ல விலக்கி விலகியவள், “இல்லையே நான் கூப்பிடலையே! நான்எப்போகூப்பிட்டேன்?” என அறியா பிள்ளை போல் கேட்டாள்.
“ஏய் பொய்சொல்லாதடி” என்றவாறு எட்டி அவள்கைகளைப்பிடிக்க முயன்றான் அன்பு. கயலோ அவன் பிடிக்குள்சிக்காமல் கட்டிலின் மறுபுறம் சென்று நின்று கொண்டாள்.
“செல்லம்மாநீயா வந்த நான்நல்லவனாநடத்துப்பேன், நானாபிடிச்சேன்அப்பறம்ரொம்பகெட்டவனாநடந்துப்பேன். உனக்குத்தான் சேதாரம்!”என்றவன்ஒருபுறமாகச்சென்று பிடிக்க முயலமறுபுறமாகஓடிவிட்டாள்.
வேறுபுறம் செல்ல, அவள் மறுபுறம் ஓடினாள். கபடியாவிளையாடுறஇருடி உனக்குஇருக்கு, நினைத்தவன் மறுபுறம்எட்டி பிடிக்க, விலகியோடியவளின் புடவைமுந்தானை அவன் கைகளில் மாட்டியது.
முத்தத்தின் எண்ணிக்கை அதிகரிக்க, அணைப்பின் அழுத்தம் அதிகரிக்க, அவன் வேகமும் அதிகரித்தது. தண்டிப்பதிலும் எப்போதும்கடினமுடன் தான் நடந்து கொள்வான் அன்பு. அதையும் வலியிலும் சுகமாய் தாங்குவாள்கயல்.
கலைந்திருந்த கயலை, தன் நெஞ்சில் சாய்த்து அணைத்தவன் உச்சி முடி கோதிமுத்தமிட்டு, “என்னசெல்லம்மா?” என்றான்.
“உனக்குபோகனுமா? சொல்லுநான்கூட்டிட்டுபோறேன்டா” என்க, மறுப்பாய் தலையசைத்தாள். அத்தை வீட்டிலும் அழைக்கவில்லை, உயிர்தோழியும் அழைக்கவில்லை, அழைக்காதஇடத்திற்குக்கணவனை அழைத்துச் சென்று அவன்மரியாதையைக்குறைக்க வேண்டாமென்று எண்ணினாள். ஆனால் மனதில் அவர்கள் திருமணத்தைபார்க்கும் ஆசை இருந்தது.
“எதையும்யோசிக்காமதூங்குசெல்லம்மா” என்றவாறு அணைப்பின்அழுத்தத்தைச்சற்று தளர்த்தியவாறு, பின் முதுகில்மெல்லத்தட்டிக் கொடுத்து உறங்க வைத்தான்.உறுதியாக நடக்குமா என்று தெரியாத கல்யாணத்துக்கு எப்படி உன்னைஅழைத்துச்செல்ல எனஎண்ணி அவனும் விழிமூடினான். வீட்டில் காலை உணவைஉண்டு கொண்டிருந்தசெல்வாவைதொலைபேசிஅழைக்கஎடுத்துப்பேசிவிட்டு மீதி உணவையும்உண்டு முடித்தான்.
பின் அன்னையிடம்கூறிக்கொண்டு கிளம்பியவன்குடோனுக்குசென்றுவிட்டு சந்திரனின் வீட்டிற்குசென்றான். தெருவிற்குள் நுழையும் போதே எதிரே வந்த மணியிடம், “ஏலேமணி கொஞ்சநில்லு” என்றான்.
சரியெனத்தலையாட்டிய அவன்வாங்கிக் கொண்டுஅன்புவின்வீட்டிற்குள் சென்றுகாரில்வைத்து விட்டு காரை துடைக்கதொடங்கினான்.
செல்வா வீட்டிற்குள் செல்ல, சந்திரன் அப்போது தான் உணவுண்டு எழுந்து வந்தான். “வா செல்வா, சாப்பிடுடா” என்க, மறுப்பாய் தலையசைத்து உணவுண்டுவிட்டதாகப்பதில் கூறினான்.
விடியலில் கோழிப்பண்ணைக்குசென்று வந்த அன்பு காலை உணவை அனைவரோடும் உண்டுவிட்டுரைஸ்மில்லுக்குகிளம்பினான்.
ஸ்வேதாவும்வெளியில்கிளம்பிவிட, கயல் பள்ளிக்குகிளம்பிக்கொண்டிருந்தாள். காலையில் சாப்பிட்ட உணவும் வாந்தியாக வந்துவிட, உடலில் தெம்பெல்லாம் வடிந்தது போன்று தோன்ற, தலைச்சுற்றலோடு கட்டிலில் படுத்தாள். சிறிது நேரம்ஓய்விற்குப்பின்கிளம்பிச்செல்லுவோம் என நினைத்தவள் விழி மூடிக் கொண்டாள்.
நேரம் சென்றும் கயல் பள்ளிக்குகிளம்பிவராததைக்கண்டு சிவகாமி அவள் அறைக்கு வந்தார். கட்டிலில் சோர்ந்து படுத்துகிடப்பதைப்பார்த்தவர் அவள் அருகே சென்றார்.
அதிலே அவள் கண்விழித்துமெல்ல எழ, அவள் முகத்தைபார்த்தவாறு அருகே அமர்ந்தவர், “உடம்புக்கு முடியலையாராசாத்தி?” எனஎதிர்பார்ப்போடுகேட்டார்.
“ஆமா ஆச்சி ஒருமாதிரிகாலையிலஇருந்தே தலைசுத்தலஇருக்குஎன்னனுதெரியலை” என்று சொல்லி முடிப்பதற்குள், அவள் முகம் நிமிர்ந்து முன்னுச்சியில் முத்தமிட்டுகன்னம் வழித்து திருஷ்டி கழித்தவர், “அம்மாடி என் வம்சத்தை வாழவச்சிட்டதாயி, இதுக்குதானே நான் இத்தனை நாளா காத்துக் கிடந்தேன்.காளியத்தாஎன் வேண்டுதலைநிறவேத்திட்டா! என்ராசாத்தி, என் தங்கம், காலையிலபார்க்கும் போதே உன் முகம்ஜொலிக்குச்சதுடி!” எனக்கயலைக்கொஞ்சினார்.
அவர் கூறிய பின்னேகயலுக்கும் அப்படி இருக்குமோ என்று தோன்றியது. அவளின் உடல் மாற்றங்களை அவளும்உணர்ந்திருந்தால்அல்லவா? மெல்ல அடிவயிற்றில் கை வைத்து வருடியவளுக்குநடுக்கத்தோடு உடலில் மெல்லிய பரவச அலைகள் எழுந்தது. ஏழுவருடம் காத்திருந்த காதலுக்குக் கிடைத்த பரிசல்லவோ? அன்புவின் வாரிசு தன் வயிற்றில்,அவன் போன்றே இருப்பானா எங்கள் மகனும்? அவள் கொண்ட சந்தோஷத்தின் அளவை எவ்வாறு அளந்து சொல்ல? முகமெல்லாம் சிவக்க, விழியோரம் கலங்க, ஆனந்த அதிர்வில் அமர்ந்திருந்தாள்.
அவளை விட ஆயிரம் மடங்கு சந்தோஷத்திலிருந்த சிவகாமி அவள் அமைதி கண்டு, “என்னம்மா அப்படி தானே?” என மீண்டும் எதிர்பார்ப்போடு கேட்டார்.
ஆம் என்பது போல் தலையாட்டிய பிறகே நிம்மதி கொண்டவர், “கயலு எதுக்கும் முதல்ல ஹாஸ்பிட்டலுக்கு போய் செக் பண்ணிட்டு வந்துடு. நான் அன்புவைப் போன் பண்ணி வரச் சொல்லுறேன்” என்றவர் கீழே சென்றார்.
அவளுக்குமே அப்போதே அவனை அணைத்துக் கொள்ள வேண்டும், அவனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.
ரைஸ் மில் குடோனில் இருந்த அன்புவிற்கு ஆச்சியிடம் இருந்து அழைப்பு வர, ஆச்சி ஏன் இந்த நேரம் அழைக்கிறார் என்ற குழப்பத்துடனே அழைப்பை எடுத்தவன் என்ன என்று கேட்டான்.
“கயலுக்கு உடம்புக்கு முடியல சீக்கிரம் வீட்டிற்கு வாட, ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும்” என்றார். இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி பார்க்கும் போது கூட நல்ல தானே இருந்தா, அதுக்குள்ள ஹாஸ்பிட்டல் போற அளவுக்கு என்னவாயிற்று என நினைத்துப் பதறினான்.
“அவளுக்கு என்னாச்சு ஆச்சி?” எனப் படபடப்புடன் கேட்க, “அதான் உன்ன வரச் சொல்லுறேன்ல சீக்கிரம் வாடா, உன் வேலையைச் சரவணன் பார்த்துப்பான்” என்ற அதட்டலோடு அழைப்பை துண்டித்தார்.
அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் வீட்டிற்கு வந்தவன், ஹாலில் இருக்கும் ஆச்சியைக் கூட கண்டு கொள்ளாது தங்கள் அறைக்குச் சென்றான். சிவகாமியும் அவன் பின்னே சென்றார்.
அறைக்குள் வந்தவன் நல்லா தானே இருக்கா, என நினைத்தவாறு கட்டிலில் அமர்ந்திருந்தவளின் அருகே அமர்ந்து இழுத்தணைத்தான். அவளோ அணைப்பின் இறுக்கத்தை அதிகரிக்க, கன்னத்தோடு உரசியதில் உடலில் உஷ்ணமுமில்லை என்பதை உணர்ந்து கொண்டவன், “என்னாச்சிடி? உடம்புக்கு முடியலைன்னு ஆச்சி வரச்சொன்னாங்க” என்றான்.
சிவகாமியின் வருகையைப் பார்த்தவள் அன்புவை விலக்கி விட்டு விலகி அமர்ந்தாள். உள்ளே வந்த சிவகாமி, “நீ எதுவும் கேள்வி கேட்க வேண்டாம். கீழ மணி ரெடிய இருக்கான் முதல்ல கயலை ஹாஸ்பிட்டல் கூட்டு போ” என்றார் அதட்டலுடன்.
அதற்கும் மேல் எதுவும் பேசாது அவன் எழுந்து செல்ல, கயல் ரெடியாகி வந்தாள். இருவரையும் மனம் மகிழ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, கோவிலுக்குச் சென்றார் சிவகாமி.
தென்னந்தோப்பு வழியாக நடந்து வந்த கொண்டிருந்த ஸ்வேதா, மணியோசை கேட்டுத் திரும்ப, சற்றே தொலைவிலிருந்து அவளை நோக்கியவாறு ஐந்தரையடிக்கும் மேல் உயரமும், கூர் கொம்புகளையும் கொண்ட கருப்பு நிற காளையொன்று அவளை நோக்கி ஓடிவந்தது.
கண்களில் பயம் பொங்க விழி விரித்துப் பார்த்தவள், ஒரு நொடி என்ன செய்வதென்றே தெரியவில்லை. தோப்பில் அன்று வேலையாட்கள் கூட இல்லாமல் இருக்க உதவிக்கு யாருமில்லை.
முடிந்தளவு முயற்ச்சிப்போம் என எண்ணியவள் ஓடத் தொடங்க, காளையும் அவளை நெருங்கி வந்து கொண்டிருந்தது. மூச்சு வாங்க அவள் ஓட, அவளை விட அதிவிரைவாக ஓடிவந்தது காளை.
என் கடமைகளை இன்னும் முடிக்கலையே! அன்பு வேற என்னைத் தான் நம்பியிருக்கான், அவ்வளவு தான் நம்மை வாழ்க்கை முடிஞ்சது என நினைத்தவாறு கண்களை மூடிக் கொண்டு ஓடிவந்தவள் எதிலோ மோதி கீழே விழவிருந்த நேரம் அவள் இடைக்கு நன்கு பழகிய கரமொன்று அவளைத் தாங்கியது.
விழி திறந்து சந்திரனை நோக்கியவள், விலகி அவன் தோளின் பின் நின்று கொண்டு அவன் தோள்களை இறுகப் பற்றிக் கொண்டு அச்சமுடன் எட்டிப் பார்த்தாள். அந்நிலையிலும் அவன் வேர்வை வாசம் அவள் நாசி விரும்பி நுகர்ந்தது.
தோள்களைக் குலுக்கி அவள் கைகளை உதறியவன், “தள்ளி போம்மா” என்றான் அழுத்தமுடன். அவள் விலகிச் செல்ல, தன் வயிற்றை நோக்கி ஓடிவந்த காளையை ஒரு பார்வை பார்த்தான். எகிறிக் குதித்து காளையின் திமிலை வலது கையால் அணைத்துப் பிடித்துக் கொண்டு, இடது கையால் அதன் கூர் கொம்பை அழுத்திப் பிடித்தான். பிடியை விடாது அழுத்தி பிடித்துக் கொண்டு அதன் வேகத்திற்கு ஓடினான்.
அவன் பிடிக்குள் தலையைத் திருப்பவும் முடியாது. அவன் எடையை தாங்கி ஓடவும் முடியாது திணறிய காளை, அதன் வேகத்தைக் குறைத்தது. பின் அதை இழுத்து வந்து கயிற்றில் கட்டிவிட்டு சென்றான்.
இளைப்பாற வெய்யப்பட்டிருந்த தென்னையோலை குடிலுக்குள் ஒற்றை கயிற்றுக் கட்டில் மட்டும் இருந்தது. அதன் ஒரு ஓரம் ஜெய்சந்திரன் சட்டை கிடந்தது. கட்டிலில் அமர்ந்த ஸ்வேதா சுற்றும் முற்றும் பார்த்தாள். மூச்சு வாங்கியது தொண்டை வறண்டு, நா உலன்று தாகம் எடுத்தது.
அந்த மாடு அதுவா வந்துச்சா இல்ல இவன் தான் ஏவி விட்டானா? செஞ்சாலும் செஞ்சிருப்பான். சரியான நேரத்துக்கு எப்படி வந்தான்? ஆமா இது என்ன இடம் காத்துமில்லை, தண்ணீயும் இல்லை. எங்க ஆளைக் காணும் ஒரு வேளை அவனை மாடு முட்டிரிச்சா! என நினைத்தவள் எழ, காலில் ஏதோ தட்டியது.
குனிந்து பார்க்க, கட்டிலின் அடியில் ஒரு பித்தளை செம்பும், மூன்று கிளாஸும் இருந்தது. தாகத்திற்கு என்று செம்பிலிருந்த மோர் முழுவதையும் விடாது குடித்தாள். ருசியோ சற்று துவர்ப்பும், புளிப்பும் கலந்தது போன்றிருந்தது.
முழுவதையும் குடித்து முடித்தவள் கட்டிலில் அமர்ந்தாள். ஆனால் அதுவரையும் அவள் அறியவில்லை அவள் குடித்தது மோர் அல்ல, தென்னங்கள் என்று!