உச்சிக்கிளையில் தொங்கும்மாங்காவைகுறி வைத்துக் கல்லைஎறிந்தான். இரு மரங்களின் கிளைகளும்நெருங்கிஅடர்த்தியுடன்அமைந்திருக்க, கீழ்கிளையின் உள் புறமாக இருந்த தேன் கூட்டின் மேல் கல் விழுந்தது.
அடுத்தநொடி தன் மொத்தப் படைகளோடும் தேனீக்கள் இருவரையும்நோக்கிப் படையெடுத்து வந்தது. அதைஇருவருமே எதிர்பாராமல் இருக்க அப்படியே நின்றனர்.
தேனீக்கள்கூட்டமாகப்பெரும் இரைச்சலுடன்அவர்களை நெருங்கி வந்து கொண்டிருக்க, “குமாரு, இந்ததேனீகொட்டுனாபத்து நாளுக்குஉடமெல்லாம்புண்ணாகிடும், ஒருவேளைவிஷத் தேனீயாஇருந்தாரொம்பவேஆபத்துடா, ஓடுலேவேகமா ஓடு” என்று அவள் முடிப்பதற்குள் ஓடிவிட்டான்.
சற்றுப்பயத்திலிருந்தவனுக்குக்கயலின் வார்த்தைகள் மேலும்பயத்தைத்தர, பதறிஓடியவன் அருகே இருந்தமோட்டார்அறைக்குள் சென்று உட்புறமாகதாளிட்டுக்கொண்டான்.
அவன்பின்னே பயத்துடன் ஓடிவந்தவள் அவன் கதவை மூடி விட, என்னசெய்வது என இருபுறமும்கண்களைச்சுற்ற, அன்புவின்வருகையைப்பார்த்தாள்.
சென்ற முறைடவுனுக்குச்செல்லும் போது, சிலபூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி வரச் சொல்லியிருந்தார் வேல்முருகன். வாங்கிவந்தவன், அவர் தோப்பில் இருப்பார்என்றெண்ணிக்கொடுக்க வந்தான்.
நொடியும் தாமதிக்காது, தாவணியைஅவிழ்ந்தவாறு அவனை நெருங்கியவள், அவனைத்தன்னோடு அணைத்து இருவருக்கும்அரணாகத்தாவணியைச்சுற்றித் தரையில் அமர்ந்தாள், அவனையும்அணைத்தவாறு.
எதற்குஅவள் இவ்வாறு தன்னை நோக்கி ஓடிவருகிறாள், ஏன்தன்னை அணைக்கிறாள் என்பது புரியாமல், என்னசெய்வது என்றும் தெரியாமல் நின்றவன், அவள்நெஞ்சில் தன்முகத்தைப்பதித்து இறுகி அணைத்த நொடி தன்னிலை மறந்தான்.
ஓடியதிலும், பதட்டத்திலும்அவள் உடல் முழுக்க வியர்க்க, வேகவேகமாகமூச்சு வாங்கினாள். முகம், கழுத்துஎன முழுவதும் வியர்த்திருக்க, வியர்வைத்துளிகள்துளித்துளியாய்வழிந்தோடியது.
அவனைக்காப்பதிலே அவள் சிந்தனை இருக்க, மேலும்அவனை நெஞ்சோடு அணைத்தவளின் பார்வை, மெல்லிய தாவணியின் வழியாக வெளிப்புறத்தைஆராய்ந்து கொண்டிருந்தது.
மலர்மெத்தையைப்போன்ற அவள் மென்மையில் முகம் பதிய, மலரைவிடச்சுகந்தமான அவள் வாசம் நாசியில் உணர்ந்தான். இதழ்கள்அழுத்தமாய்அவள் மேல் பதிந்திருக்க, அவள்மேனியின் வியர்வை முத்துகளின் ஈரம் அவன் நெற்றி, கன்னத்தில்படர்ந்தது. அந்த நொடி அவளின் வாசமே அவனின் சுவாசமாக மாறியிருந்தது.
தன்னிலைமறந்திருந்தவனை அந்த வாசம் மயக்க, கைகள்அவள் வெற்று இடையில் தழுவி தன்னோடு அணைத்தது. அவளின்வேகமூச்சிக்களில்தன் மீதுபதிந்து மீண்ட அழுத்தத்தைவிழி மூடிரசித்தான்.
வெளிப்புறத்திலிருந்துபார்வையை உட்புறம் மாற்றியவள், தன்னவனைஅருகே கண்ட இன்பத்தில் அவள் சிகைக்குள் கரம் கோர்த்து மென்மையாக, இதமாகவருடினாள்.
அந்தச்சுகத்தை ரசித்தவன் மேலும் அவள் மேல்அழுத்தமாகச்சாய, அவன்கணம் தாங்காமல் அவள் பின்புறம் சரிந்தாள். அவளோடு சரிந்திருந்தவன் மெல்ல விழிதிறந்தான்.
தங்களைமூடியிருந்த தாவணியைஒரு கைப்பற்றிருக்க, மறுகைஅவன் முதுகை வளைத்திருந்தது. அதுவரை தன்னிலையிலிருந்தவள், தன்னவன் தான் என்றஉரிமையில் தடுக்க நினைக்கவில்லை.
வியர்வைபூத்த நெற்றி, கூர்நாசி, சிவந்தஉதடு, ஈரகழுத்து… என அவன் கைகள் பயணித்தது. அவன் வருடலில் தன்னிலை மறந்தவள் தேகம்சிலிர்க்க, உதடுதுடிக்க, உடல்நடுக்க தொடங்கியது.
அவள்நெற்றியில் இதழ் பதித்து, மூக்கு, கன்னம், கழுத்துஎனமுக முழுவதும்சுவைத்தவனை நடுக்கும் இதழ் இழுத்தது.அவழிதலோடுஇதழ் பதித்தவன்அழுத்தமுடன் முத்தமிட்டான். முதல் முறையாக அவன் குண்டூசி மீசையுடன் அவள் ரோஜா இதழ்போரிட்டுச் சிவந்தது.
அவள்தந்த சுகத்தில்,பலவருடங்காலஅவள் நினைவால் நிம்மதியின்றித் தவித்த அவன் மனதிற்கு, இந்தச்சில நிமிடங்கள் சொர்க்கத்தில்மிதந்ததைப்போன்றிருந்தது.
அவளின்அமைதியான அனுமதியும், அந்தச்சுகமும் அவன்வேகத்தைக்கூட்டியது.“செல்லம்மா..செல்லம்மா..” எனப்புலம்பிய உதடுகள்மேலும் முத்தமிட்டது. தன்னிலையில் இல்லாதவன் மேலும் வேகமுடன்முன்னேறத்துவங்கியநொடிகளில் தோப்பிற்கு வெளியே சாலையில் கேட்ட வாகனத்தின் சத்தத்தில் தன்னிலை பெற்று,வேகமுடன் அவளை உதறிஎழுத்தான்.
திரும்பிநின்றவன் ஒருகையால் முகம், தலையைஅழுத்திக் கோதியும், மூச்சிழுத்தும்தன்னைச் சமன்படுத்திக் கொண்டான். அதேநேரம் அவளும் எழுந்து தன்னைசரிபடுத்திக் கொண்டுஅவன் அருகே வந்தாள்.
“மாமா..” என்றவாறு அவன் தோளில் கை வைக்கமுயல, அவள்கையைதட்டிவிட்டுத்திரும்பியவன் அவள் கன்னத்தில் அறைந்தான்.
அவன்முத்தமிட்ட போதும் தடுக்காதவள், அறைந்தபோதும் தடுக்கவில்லை. உதட்டோர உதிரத் துளியோடு, இருவிழிகளிலும் நீர் நிறைந்திருக்க நிமிர்ந்துஅவனைப்பார்த்தாள்.
இதுவரைஅனுபவித்த சுகம் மேலும் வேண்டுமென்று அவன் ஒவ்வொரு அணுவும் துடித்துக் கொண்டிருக்க,மேலும்அவளை உரிமையோடு நெருங்க இயலாத தன் இயலாமை.இத்தனைவருடங்களாக மனதில் பூட்டி வைத்திருந்த கோபம், சந்திரனின்மேலிருந்தவெறுப்பு, தன்னைகாக்கத்தான் அவள் அணைத்தாள் என்ற அறியாமை எல்லாம் சேர்ந்துஅவனைக்கோபத்தின்உச்சியில் நிற்க வைத்தது.
உள்ளமேஉலைக் கலனாய் கொதிக்க, அடக்க முடியாது வார்த்தைகளை வீசினான். அவன் வீசியவார்த்தைகளின் தாக்கம்அவள்புறம்எவ்வாறு இருக்குமென்பதை அவன் உணரவில்லை.
அவன்வார்த்தையின் வீச்சு, வாளாய் மாறி அவள் இதயத்தையே கீறியிருந்தது.
‘சிறுவயதில்அறியாமல் செய்ததவறுக்குத்தான் இவ்வளவு வெறுப்பா? ஆனால்நானோ இத்தனை வருடமாக அவனை மனத்தில் சுமந்துவருகைக்காகக்காத்திருந்தேனே? என்காதலை நடிப்பு என்று எவ்வளவுஎளிதாகக்கூறிவிட்டான்? அதுவும்சந்திரன் சொல்லி நான் நடிக்கிறேனா? நானா அணைத்தேன்? நானாமுத்தமிட்டேன்? நானாநடித்தேன்? என்இத்தனைவருடக்காத்திருப்புஇதற்குத்தானா?’நினைக்கும்போது இதயமே வலிக்க, நெஞ்சைஅழுத்திப்பிடித்தவள், அனைத்து கேள்விகளையும்வார்த்தையில்லாதுவிழிகளில் தாங்கிஅவனைப்பார்த்தாள்.
உள்ளுக்குள்அவள்மேலிருந்தகாதலில், அவள்பார்வையிலும் ஒரு நிமிடம் தடுமாறினான். தன்தடுமாற்றத்தைத்தானே வெறுத்தவன், மேலும்கோபமுடன், “சொல்லுடிஏன் இப்படி அமைதியாநிக்குற? எல்லாம்அவன்திட்டம்தானே? இப்படியெல்லாம்அவன்தானே நடிக்கசொன்னா? எதுக்குஊர் முன்னாடி என்ன அவமானப்படுத்தவா? சிவசுப்பிரமணியன்மகனாஇப்படின்னுஊருக்குள்ள என் அப்பா பேரையும் கேவலப்படுத்தபிளான்பண்ணிருக்கீங்களா? இல்ல, என்னைக் கொல்லுறதுக்குஏதும் சதித்திட்டமா? வாயைத் திறந்துசொல்லுடி?” மனதிற்குள்இருந்தஆதங்கத்தைக்கோபத்தோடு கொட்டினான்.
கயலுக்குவார்த்தைகள் வரவேயில்லை. தன் காதலை நடிப்பு என்று சொல்லும்போது கூட இதயம் வலிக்கதாங்கிக் கொண்டவளால், அவன்பழிச்சொல்லைத்தாங்க முடியவில்லை.இதைக்கேட்கத்தான் நான்காத்திருந்தேனா? இதைக்கேட்டும் நான் உயிரோடு இருக்க வேண்டுமா? நினைத்தவாறுஇரண்டடி பின் எடுத்து வைத்தவள், சற்று தொலைவிலிருந்த கிணற்றை நோக்கி ஓடினாள்.
கிணற்றின்அருகே சென்றவள் குதிக்க முயல, அன்புவின்வலியக்கரங்கள் அவளின்இடை தாங்கித்தன்னோடு இழுத்தணைத்தது. அவனிடமிருந்துமுறுக்கிக்கொண்டு விலக, மேலும்கோபமுடன் அவளின் இரு கன்னத்திலும் மாறி மாறி அறைந்தான்.
“சாகப் போறீயா? வா,ரெண்டு பேரும்சேர்த்துசாகலாம்,வாடி!”பலமுடன் அவள் கையை பிடித்திழுத்தான்.
‘அவனும்சாவதா?’
பிடிவாதமுடன்கைகளை இழுத்தவள்அவனைப்பார்த்து முறைத்தவாறு நின்றாள். உள்ளுக்குள் இதையும்நடிப்பென்று சொல்லி விடுவானோ என்ற தவிப்பிலிருந்தாள்.
நேராகத்தன் தோப்பு வீட்டிற்கு வந்தான் அன்பு. காயப்பட்டவளைவிடக்காயப்படுத்திய அவனுக்குத்தான் அதிகமாக வலித்தது. கத்திஅழ வேண்டும் போலிருந்தது.
‘அவளை ஏன் விட்டுவிட்டு வந்தோம் தன்னுடனே அழைத்துவந்திருக்கலாமோ? ஊர்எதிர்த்தால் என்ன? சந்திரன்எதிர்த்தால் என்ன?’கயலுக்குவிருப்பமில்லை என்றாலும் அவள் தனக்கு வேண்டுமென்று ஏங்கினான்.
மனம்ஒருபுறம் தவிக்க, உடலும் ஒருபுறம் கயல் வேண்டுமென்று தவித்தது. தன்னைத் தாங்கும்சக்தியே அவள்தான், தன்உயிர் சுவாசமாகித்தான் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத தேவையாக மாறி நிற்கிறாள் என்பதைஇன்று முழுதாக உணர்ந்தான்.
இருப்பினும் தன் தேடல் அவளிடம் நிறைவடையாமல் இருப்பதுஅவனை விலகி வரச் செய்தது.
நிம்மதியின்றிதவித்த மனம், இன்று அவளிடம் கண்ட புதுமையை எண்ணியவாறு விழி மூடினான்.
அவன்கொண்ட காதலும் குறையவில்லை, காயமும்குறைவில்லை என்பதை உணர்ந்து கொண்டாள். தன் செயல்அவனுக்குக்காயத்தைத்தான் தருகிறதுஅதுவும் என்னை உயிரோடு கொல்லாதே என அவன் கூறிச்சென்ற பின் அவனை நெருங்கமுயலவில்லை.
அதன்பின் இருநாட்கள் காய்ச்சலில்கிடந்தவள்,மெல்லத்தேறி எழுந்தாள். ஜெயந்தியின் திருமணநாள் வந்தது. மறுநாள் திருமணம் என்றிருக்க, முதல் நாளிலிருந்தேபூங்கோதையும், கயல்விழியும்அவளோடு தான் இருந்தனர்.
தன்கவலைகளைத் தன்னோடு மறைத்துக் கொண்டவள் தோழிகளோடுசிரித்துக்கொண்டிருந்தாள். அடுத்தநாள் தனக்கு வரும் அடுத்த சோதனையை அறியாமல்.