Advertisement

பிழை தீர

அத்தியாயம்—-1

பிரமாண்டமான  அந்த J.S மருத்துவகல்லூரி வளாகத்தை சுற்றி வந்த, அந்த கால்லூரியின் டீன் அஷ்வத் தீரன், தன் அறையில் அமர்ந்த  பின் தன் உதவியாளர் சாகயத்திடம், கல்லூரியின் புது மாணவ, மாணவியர் பற்றி பேசிக் கொண்டு இருக்க,

சகாயம் சார் ஏதோ தன்னிடம் பேச தயங்குவது போல் அவர் முகபாவனை பார்த்து …. “ என்ன சகாயம் சார் என்னிடம் ஏதாவது சொல்லனுமா….?”

கேட்டும் தயங்கிய அவரிடம்…. “என்ன சகாயம் சார். உங்க அனுபவம் என் வயசு. காலேஜில் ஏதாவது பிரச்சனையா….?சொல்லுங்க.”

அப்போதும் சகாயம் தயங்க தான் செய்தார். அஷ்வத் சொன்னது போல் அவர் அனுபவம் ஆஷ்வத்தின் வயது.

அறுபது கடந்த பின்னும், அஷ்வத் தான்…. “சகாயம் சார் நான் இப்போ தான் இந்த கல்லூரி பொறுப்பையே எடுத்து இருக்கேன். இது பிடிபடும் வரை நீங்க இருந்தா எனக்கு உதவியா இருக்கும்.” என்று வற்புறுத்தி கேட்கவே தான், ஊரில் தன் பேரன், பேத்தியோடு…. கடத்த வேண்டிய வாழ்க்கையை, கல்லூரியில் கடத்திக் கொண்டு இருக்கிறார்.

என்ன தான் அந்த கல்லூரியில் அவருக்கு அனைத்து உரிமையும் கொடுத்தாலும்,  தன் எல்லை மீறி அவர் இது வரை நடந்தது கிடையாது.

சகாயத்தை எப்போதும் சார் போடாது அஷ்வத் அழைத்தது இல்லை. ஒரு காரணம்  வயது என்றால்…மற்றொரு காரணம் தன் தந்தை ஜானகி ராமனின் நண்பர்.

அஷ்வத் தீரனின்   தாத்தா ஜெயங்கொண்டான்,  சகாயத்தை அழைத்து …. “நான் இறந்தாலும், இந்த கல்லூரி விட்டு நீ செல்ல கூடாது.” என்று வாக்குறுதியோடு தான் அந்த கல்லூரியில் சகாயத்தை இணைத்தார்.

அதற்க்கு காரணம் சகாயத்தின் திறமை என்றால், மற்றொரு காரணம் தன் நண்பனின் மகன். தந்தையின் பேச்சில் இருந்து  அந்த கல்லூரியில் சகாயத்துக்கு இருந்த மதிப்பை அஷ்வத் அறிவான்.

அவன் தலமை ஏற்ற பின்னும்,  அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதை  கொடுத்தாலும், எப்போதும் அவர் ஒதுங்கியே இருக்கிறார்.

அவன் பதவி ஏற்ற நான்கு ஆண்டுகளில்….. “ ஏன் இப்படி ஒதுங்கி கொள்கிறிர்கள்.” இதை பல தடவை எத்தனையோ விதத்தில் அஷ்வத்  கேட்டு விட்டான்.

ஆனால் பதில் ஒரு சிறிய புன்னகை அவ்வளவே…இப்போது கூட தன் மனதில் இருப்பதை சொல்வதற்க்கு என்ன தயக்கம்…..?

என்ன கேட்டாலும் அவர் சொல்ல போவது இல்லை, அவரே சொல்லட்டும் என்று தான் கேட்க வேண்டியதை கேட்டு முடித்த பின்…

அஷ்வத் எதிர் பார்த்தது போல்…அவன் இருக்கை விட்டு எழும் சமயத்தில்…. “தம்பி….” என்று அழைக்க.

எழ பார்த்தவன் அப்படியே அமர்ந்து அவரை பார்த்ததும்….தன் கையில் உள்ள  புது மாணவ மாணவியர்களின்….பெயர் அடங்கிய கோப்பை அவன் டேபுளில் வைத்ததும்…..(இது நீட் தேர்வுக்கு முன் ஆன கதை.)

“என்ன சகாயம் சார்….?” என்று கேட்டதுக்கு,

சம்பூர்ணா தேவி என்ற  பெயர் நேர் தன் விரலை வைத்தவர்….. “ எல்லா சீட்டும் முடிந்த பின்,  இந்த பெண்ணை அப்பா சேர்க்கனுமுன்னு சொல்றாரு தம்பி.”

ஏதோ சொல்கிறார் என்று கேட்டுக் கொண்டு இருந்த அஷ்வத். அப்பா ரெகமெண்ட் செய்த பெண் என்றதும்,

அப்பெண்ணின் விவரம் படித்த வாறே….. “அவருக்கு தெரிந்த பெண்ணாய் இருக்கும். மேனஜ்மென்ட் கோட்டாவில் சேர்க்க சொன்னாரா….?”

“இல்ல எப்போதும் வருஷத்துக்கு மூனு பிள்ளைகளுக்கு பணம் வாங்காம சேர்த்துப்போமே,அதில் சேர்க்க சொல்லி இருக்காரு.”

“ஓ….”இப்போது அவன் ஓ….வில்  ஒரு மாற்றம்.

திரும்பவும் சம்பூர்ணாதேவியின்  மதிப்பெண்ணை பார்த்தான். அவனுக்கு திருப்தி இல்லை. என்ன தான் தெரிந்த பெண் என்றாலும், இந்த பெண்ணுக்கு இலவச மருத்துவ படிப்பு. நோ.

அஷ்வத்தின் தாத்தா  தந்தை, தாய், மூவரும் மருத்துவர்கள். அஷ்வத்தின் தாத்தா தான் இந்த மருத்துவ கல்லூரியை நிறுவியது.

தாத்தாவுக்கு ஒரே  மகள் ஷாலினி. அவர் பெண்ணை ஜானகி ராமன் திருமணம் செய்ததால், இந்த மருத்துவ கல்லூரி தந்தையின் வசம் வந்தது.

அஷ்வத்துக்கு இந்த மருத்துவ படிப்பில்   அவ்வளவு நாட்டம் இல்லை. அதனால் படிப்பும் இதை ஒட்டி படிக்காது டெல்லியில் M.B .A  முடித்து நண்பர்களோடு தொழில் செய்தவனை, தாய் தந்தையரின் விபத்து, அவனை சென்னைக்கு அழைத்து வரப்பட்டது.

தாய் விபத்தின் போது இறந்து விட, தந்தை கால் இழப்போடு வீல் சேரில்  வாழ்க்கை என்றாகி விட, டெல்லி தொழிலை நண்பர்கள் வசம் ஒப்படைத்து விட்டு,

நான்கு  வருடமாக சென்னை தான் அஷ்வத் தீரனுக்கு வாசம் என்றானது. தாத்தா மருத்துவ கல்லூரியோடு  நிறுத்தி விட்டார்.

தந்தை பொறியல் கல்லூரியும் ஆராம்பித்து இரண்டையும் பார்த்துக் கொண்டு இருக்கும் போது தான் அந்த விபத்து.

மாணவர்களின் எதிர்காலம்.  அதனால் தான் தனக்கு விருப்பம் இல்லை என்றாலும், தந்தையின் பொறுப்பை அவர் சொல்லாமலேயே தான் ஏற்றான்.

அஷ்வத்  தீரன் தோற்றத்தில் தந்தை போன்று  ஆறடி உயரமும், அதற்க்கு ஏற்ற உடலையும் கொண்டு இருந்தான் என்றால்,

நிறத்தில் பால் வண்ணதிலும், கண்  கொஞ்சம் பழுப்பு கலந்து தன் அன்னை போல் இருக்கும். மொத்தத்தில் பார்த்தால் அசர வைக்கும்  இருபத்தியெழு வயது ஆண்மகன்.

டெல்லியில்  படிக்கும் போதும், தொழிலில் இறங்கிய பின்னும், பெண்கள் பார்த்தால் இவனும் சலைக்காது பார்ப்பான்.

ஆனால் இந்த நான்கு வருடமாக கல்லூரி பொறுப்பை ஏற்றதில் இருந்து, எங்கு பார்த்தாலும்  இளம் பெண்கள்.

ஆனால் இவன் பார்வை தான் மாறிபோனது. தன் கல்லூரி மாணவியர், நாம் தான் அவர்களுக்கு பாதுகாப்பு  நாமே பார்க்கலாமா…? எந்த பெண்ணையும் உற்று பார்த்தது இல்லை.

ஆனால் சகாயத்தின் பேச்சு சம்பூர்ணாதேவியின்  புகைபடத்தை உற்று பார்க்க வைத்தது. பதிப்பெண் 1158. நல்ல மதிப்பெண் அதில் சந்தேகம் இல்லை.

ஆனால் இலவச மருத்து கல்வி பெறும் அளவுக்கு மதிப்பெண் கிடையாது. இந்த பெண்ணோடு  அதிக மதிப்பெண் பெற்றவர்கள் எல்லாம் மருத்துகல்வி கிடைக்காது காத்துக் கொண்டு இருக்கும் போது…ம் முடியாது.

“நான் அப்பாவிடம் பேசுகிறேன் சகாயம் சார்.” என்று சொல்லியும் அந்த இடத்தை விட்டு அகலாது இருக்க.

என்ன என்பது போல் பார்த்தவனிடம் தயங்கி…. “நான் காலையில பேசிட்டேன். ஆனா அவரு  இந்த பொண்ணுக்கு கொடுத்தே ஆகனுமுன்னு சொல்லிட்டாரு.

அவர் அப்படி சொல்லியும் உங்க கிட்ட ஏன் இத சொல்றேன்னா…..காலேஜில் இதால கொஞ்சம் பிரச்சனை  ஓடிட்டு இருக்கு.

ஏற்கனவே இதுக்குன்னு மூனு பேர செலக்ட் செய்துட்டோம், இப்போ வந்து அதுல இந்த புது பொண்ணு சேர்த்துக்குறது அதுவும் செலக்ட் செய்தவங்கலோட கம்மியான மார்க்கு எடுத்த பெண்ணே….”

சகாயம் சொல்ல சொல்ல பிரச்சனையின் தீவிரம் புரிந்தது. என்ன தான் இந்த கல்லூரியை நிறுவியர் இவர்கள் ஆனாலும், இலவச மருத்துவ பயிலும் மாணவ, மாணவியரை தேர்வு செய்வதற்க்கு என்று ஒரு  குழு இருக்கிறது.

அவர்களின் முடிவை எதிர்ப்பது என்பது கல்லூரி நிர்வாகத்துக்கு  நல்லது இல்லை. நான்கு வருடத்தில் எனக்கு தெரிந்தது தந்தைக்கு தெரியாதா…..?

அவ்வளவு தெரிந்த  பெண் என்றால், மேனஜ்மென்ட் கோட்டாவில் சேர்த்துக் கொள்ளலாமே…..

தன்னையே பார்த்துக் கொண்டு இருந்த சகாயத்திடம்…. “நான் அப்பா கிட்ட பேசுறேன் சகாயம் சார்.” என்று சொன்னாலும் தயங்கிக் கொண்டு…

“பார்த்து பேசுங்க தம்பி. ஏனுன்னு தெரியல, இந்த பொண்ணு விஷயத்துல அப்பா ரொம்ப கோபப்படுறாரு.”

“நான் பார்த்துக்குறேன்.” என்று அனுப்பியவன் கையில்   சம்பூர்ணாதேவியின் புகைப்படப்படம்.

வீல் சேரின் சத்தத்தில் அப்பா வந்து விட்டார் என்று, பார்த்துக் கொண்டு இருந்த ஐபோனை ஒதுக்கி வைத்தவன்…. “உங்களுக்காக தான் வெயிட்டிங்.” என்று சொல்லோடு  தங்களுக்கு உணவு பரிமாறிய வேலையாளை அனுப்பி விட்டு…

“மார்னிங் சகாயம் சார் உங்களுக்கு போன் செய்தார் போல.”

“ம்….” என்ற ஒரு வார்த்தையோடு தன் உணவினை தந்தை தொடர்ந்தார்.

அடுத்து பேசாது அஷ்வத் தந்தையையே பார்த்துக் கொண்டு இருந்தான். இந்த விபத்து அப்பாவை உருவில் மட்டும் அல்லாது, மனதையும்  நிறைய மாற்றி இருக்கிறது. இதை அஷ்வத் நன்கு உணர்ந்தான்.

மகனே என்றாலும், தன் ஆசையை தன் மீது அவர் திணித்தது இல்லை. அப்பாவின் ஆசை கல்லூரி. அதில் நிறைய வருமானம் வருகிறது.

அவனுக்கே அது நன்கு தெரியும். ஆனால் அதில் தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்ததும்  தன்னை வற்புறுத்தாது ….

“உனக்கு என்ன விருப்பமோ ….அதை செய்.” என்று விட்டார்.

மகனே ஆனாலும் ,அவன் தனிப்பட்ட விருப்பு , வெறுப்புகளில் நுழைய கூடாது என்ற கொள்கை உடையவர்.

ஆனால் இப்போது….இந்த விபத்து இவரை ரொம்பவே பாதித்து விட்டது என்பது உண்மை தான்.

ஆனால் இந்த ஒதுக்கம்….அம்மாவின் மறைவிலா….அம்மா, அப்பா காதல் மணம் புரிந்தவர்கள். அது அவனுக்கு  தெரிந்த விஷயம்.

ஆனால் அப்பாவும் ,அம்மாவும் ஆத்மார்த்தமாக குடும்பம் நடத்தினார்கலா….? என்று கேட்டால்….   இவன் பதில் இல்லை தான். எப்போதும் அவர்களின் பேச்சு மருத்துவம், கல்லூரி, இதுவே தான்.

இதை பார்த்து தானோ என்னவோ இது நமக்கு வேண்டாம் என்று அவன் ஒதுங்கியது.   விதி வலியது தான். இதில் இழுத்து வந்து தள்ளி விட்டதே….

திரும்பவும் “அப்பா….” என்று ஆராம்பித்தவனை….

“ அந்த பெண்ணுக்கு இலவச கோட்டாவில்  நான் ஒதுக்கியது ஒதுக்கியது தான்.”

எதை பேச நினைத்தேன் என்று தெரிந்து பேசியவரின் பேச்சில்…. “ அப்பா இதால காலேஜ் நிர்வாகத்தில் பிரச்சனை ஆகும். அந்த பொண்ணுக்கு உதவி செய்யனுமுன்னா மேனஜ்மன்ட் கோட்டாலா ஒதுக்கிடலாம்.” இதோடு விஷயம் முடிந்தது என்று எதிர் பார்க்க.

அவரோ… “முதல்ல மூனு பேர ஒதுக்கினாங்கல. அவங்களில் ஒருத்தர வேனா மேனஜ்மென்ட் கோட்டால போட்டுடு. அதுக்கு உண்டான செலவ நானே ஏத்துக்குறேன்.” இவர் என்ன சொல்கிறார்.

இவர் பணம் கட்டுவது என்றால், அவருக்கு தெரிந்த  பெண்ணுக்கே கட்டலாமே…இது என்ன முகத்தை சுற்றி மூக்கை தொடுவது அதை கேட்டும் விட்டான்.

“ நான் செலவு செய்தால் அவங்க ஒத்துக்க மாட்டாங்க.”

“என்னது….?” சுத்தமாக அவரின் பேச்சு விளங்கவில்லை. இந்த காலத்தில் மருத்துவபடிப்பை இலவசமாக கொடுத்தால் ஒற்றுக் கொள்ள மாட்டார்களா…..?

மகன்  அதை பற்றி மேலும்   துருவும் முன் …. “குட் நைட்…” என்ற சொல்லோடு அந்த இடத்தை விட்டு அகன்று விட்டார்.

மேனஜ்மென்ட் கோட்டாவில் சேர்த்துக் கொள்ளலாம் என்று மகன் சொன்னதும் ஒற்றுக் கொண்டு இருந்தால், இதை பற்றி மேலும் துருவாது விட்டு இருப்பான்.

தந்தை பேச்சில் இருந்து தாங்கள் உதவி செய்வது கூட அந்த பெண்ணுக்கு தெரிய கூடாது. அப்படி அவங்க யாரு….?

கல்லூரி நிர்வாகத்திடம் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு அந்த பெண் சம்பூர்ணாதேவியை இலவச கோட்டாவில் சேர்த்த அஷ்வத்.

தந்தை சொன்னது போல் நிர்வாகம் தேர்ந்தடுத்த மூவரில் ஒருவருக்கு  மேனஜ்மென்ட் கோட்டாவில் தாங்கள் எடுத்துக் கொள்வதாய் சொல்ல. ஒரு மனதாய் அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தன் அறையில் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்த அஷ்வத் முன் சகாயம் வந்து நின்றதும்,

“சகாயம் சார் இலவச   இட ஒதுக்கிட்டில் அந்த பெண்ணுக்கும் கடிதம் அனுப்பிடுங்க.” என்று சொன்னவன்,

மனதில் …… “யாரும்மா நீ. எனக்கே உன்ன பாக்கனும் போல இருக்க.” என்று நினைக்கும் வைக்கும் அளவுக்கு அன்றைய பேச்சு வார்த்தை இருந்தது.

முகவரி எழுதிக் கொண்டு இருந்த சகாயத்தின் முகத்தில் மின்னலாய் கோடுகள். ஜானகிராமன் ஒரு ட்ரைஸ்ட் வைத்தும் நடத்தி வருகிறார்.

அதில் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தாலும், அது ஆராம்பித்ததின்   நோக்கம், இரு கல்லூரியில் மேனஜ்மேன்ட் கோட்டாவில் வரும் பணத்தை அதில் போடுவதற்க்கே ஆகும்.

இதன் பொறுப்பும் சகாயம்  தான். இந்த முகவரி மூன்று ஆண்டுக்கு முன் கூட ட்ரஸ் மூலம் ஒருவனை  படிக்க வைத்து இருக்கிறோம். அதோடு அடுத்த ஆண்டே அதே ஊரில் இருந்து ஒரு இளைஞன். இப்போது அதே ஊர் . அதுவும் ஒரே  செய்த முகவரி இருப்பது போல்…..

அந்த முகவரி  நன்றாக நியாபகம் இருப்பதற்க்கு  காரணம் அந்த ஊர். தெருவின் பெயர். ஊர் வில்லங்கப்பட்டு ஊர். தெரு சகுனி தெரு (கற்பனை ஊருங்க.) ட்ரஸ்ட்டில் முகவரியை  இவர் படிக்க, அங்கு வேலை செய்பவர்கள் கணினியில் அடிக்கும் போதே …

இந்த ஊர் , ஊரின் பெயர் கேட்டு சிரித்து விட்டனர். அதனால் தான் அவருக்கு இந்த அளவுக்கு நியாபகம்  இருக்கிறது.

எப்போதும் சிறுகுழந்தையின் படிப்பு செலவை மட்டும் ஏற்று படிக்க வைத்திருந்த அந்த ட்ரெஸ்ட்டு ,முதல் முறை கிராமத்தில் படிக்கும் ஒரு இளைஞனை தேர்ந்தெடுத்தது,  அதுவும் ஜானகி ராமனால் தான்….

கிராமத்தில் இருப்பவருக்கு உதவி செய்தால் அந்த கிராமதுக்கே உதவி செய்தது போல், சொல்லி ஒரு முகவரியை கொடுத்து ….. “இந்த  பையனுக்கு உதவி செய்.” என்றதோடு ஒதுங்கி விட்டார்.

அப்போது அவருக்கு விபத்து நடந்த புதிது. அஷ்வத்தும் அப்போது தான் கல்லூரி நிர்வாகத்தை ஏற்று இருந்தான்.

அதனால் சகாயம் தான் அந்த ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும், கிராமத்தில் படிக்க விருப்பம் உள்ளவர்களை  தேர்வு செய்து , அந்த ட்ரஸ்ட் மூலம் உதவி செய்து வருகிறார்.

ஒரே ஊரை சேர்ந்தவர்கள் தொடர்ந்தார் போல்…..தான் சொன்ன வேலை செய்யாது அந்த முகவரியையே பார்த்துக் கொண்டு இருந்த சகாயத்திடம்…

“சகாயம் சார்.” என்று  சத்தம் போட்டு அழைத்த அஷ்வத்தை பார்த்த சகாயம்….

“ உங்க அப்பா ஊரு வில்லங்கபட்டா தம்பி…..?” குழம்பி போய் பார்த்தான் அஷ்வத் தீரன்.

 

Advertisement