Advertisement

அத்தியாயம்—-9

தன் தந்தையின் மரணத்தில் வேரோடி வீழ்ந்து இருந்த காயத்ரி தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று அறியவில்லை . ஆனால் அது போல் இல்லாது சந்தியா இனி தான் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று தந்தை இறந்த இரண்டாம் நாளே தன்னை சுற்றி  கவனிக்க ஆராம்பித்தாள்.

அப்படி கவனித்ததில் தன் வீட்டை கண்காணித்த படி இருவர் இருப்பதை பார்த்து, அவர்களுக்கே தெரியாது அவனை பார்த்துக் கொண்டு இருக்கும் போது தான், ஒரு நாள் சார்லஸ் அவர்களிடம் பேசி செல்வதை பார்த்தாள்.

மேலும் உதவி செய்ய என்று  தன் வீட்டுக்கு வரும் போது எல்லாம் காயத்ரியின் மீது அவன் பார்வை படிந்து மீள்வதில் ,அவன் எண்ணத்தையும் புரிந்துக் கொண்டாள்.

காயத்ரி எண்ணம் தான் அவளுக்கு முதலிலேயே   தெரியுமே…என்ன ஒன்று முதலில் இவன் குடும்பத்துக்கு செட்டாவானா…? என்ற எண்ணத்தில் தான் சார்லஸ் தன் சகோதரி  வாழ்க்கையில் நுழையக்கூடாது என்று எண்ணியிருந்தாள்.

ஆனால் தன் தந்தையின் செயலில்,  இந்த சூழ்நிலையில் சார்லஸ் மாதிரியான ஆட்கள் தான்  நம் குடும்பத்துக்கு தேவை என்ற முடிவோடு தான் தந்தையின் காரியத்தின் போது சந்தியாவின் பார்வை சார்லஸ் மீது அவ்வபோது மீண்டு வந்தது.

எப்போதும் தன்னை  சுற்றி பார்வை இடும் சார்லஸுக்கு சந்தியாவின் பார்வை பட. யாரும் பாராத போது….. “என்னிடம் ஏதாவது சொல்லனுமா…..?” நேரிடையாக கேட்டு விட்டான்.

சந்தியாவும் எந்த மேல் பூச்சும் இல்லாது…..” அக்கா மீது விருப்பம் இன்னும் அப்படியே தான் இருக்கா…..?” என்ற கேள்விக்கு,

“விருப்பம் அப்போ அப்போ மாறின அது காதல் இல்ல.” சார்லஸ் தன்னுடைய பாணியில் பதில் அளித்தான்.

“இல்ல அப்பா…..” அவர் செய்த செயலை கூட சொல்ல கூச்சமாக இருந்தது சந்தியாவுக்கு,

“அது தான் சொல்ல கூட முடியல்லே….எதுக்கு அந்த பேச்சு.” அவளின் சங்கடத்தை தெரிந்து சொல்ல.

“இல்ல இதால அக்காவ…..” சந்தியா என்ன கேட்ட நினைக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்ட சார்லஸ் ,ஒரு நிமிடம் கண்ணை  மூடி தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன்…

“என்ன பத்தி என்ன  நினச்சிட்டு இருக்க. உன் அப்பன் செஞ்சத வெச்சி  உன் அக்காவ குத்தி காட்டுவேனா…..? அந்த அளவுக்கு சீப்பா நினச்சிட்டு இருக்க என்ன ஏன் உங்க அக்காவ கொடுக்க நினைக்கிற…..?” என்ன தான் கோபத்தை கட்டு படித்தினாலும், தன் மனதில் நினைக்காததை ஒருவர் சொல்லும் போது வரும் நியாயமான கோபத்தில் கேட்டு விட்டான்.

சார்லஸின் கோபத்தை பார்த்து சந்தியா பதட்டத்துடன்…. “இல்ல இல்ல உங்கல தப்பா நினைக்குல. அக்கா அந்த அளவுக்கு விவரம் இல்ல. நாளைக்கி ஏதாவது பிரச்சனைனா…அதே எப்படி ஹான்டில் செய்யனும் என்று  கூட தெரியாது.” ஒரு நல்ல சகோதரியாய் பேசும் சந்தியாவை இப்போது பாசம் பொங்க பார்த்தான்.

“உங்க அக்காவுக்கு மோஸ்லி பிரச்சனையே வராம பாத்துக்குறேன். அப்படி வந்தாலும் நானே ஹான்டில் செய்துக்குறேன் சரியா…..?” என்று கேட்டவன்.

பின்…. “ என் மேல இவ்வளவு சந்தேகம் இருந்தும் ஏன் என் கிட்ட  பேச வந்த…..?” தன் சந்தேகத்தை சார்லஸ் கேட்க.

“ஏன்னா எங்க அக்கா உங்கள  தானே விரும்புறா….” தன் அக்காவின் மனதை போட்டு உடைத்தாள்.

காயத்திரிக்கும் தன் மீது நாட்டம் இருக்கிறது என்பதை ,அவள் பார்வை மூலமே அறிந்து இருந்தாலும், அவள்  சகோதரி அதை தெளிவு படுத்தியதும் முகம் தன்னால் பிராகசிக்க……

“நிஜமாவா…..?” இன்னும் ஒரு முறை சொல்ல கேட்க ஆசையில் கேட்க.

அவன் எண்ணம் புரிந்தவளாய்….. “இன்னொறு முற சொல்லுன்னா சொல்லிட போறேன்.அதுக்கு எதுக்கு சந்தேகமா கேட்பது போல் கேட்குறது.”

நம்ம ஆள் போல் இல்ல இவ. விவரம் தான், என்ற  எண்ணம் தன்னால் மனதில் எழுந்தது. பின் தன் சகோதரியைய் பற்றி அனைத்தும் சொன்னவள்.

“என் படிப்பு இன்னும் கொஞ்ச நாளில் முடிந்து விடும். காயூ அது வரை தான் வேலைக்கு போக வேண்டி இருக்கும்.” தன் வீட்டு நிலையை விளக்கியவளிடம் சார்லஸ் ஏதும் மறுத்து பேசவில்லை.

இது அவர்களின் தன் மானப்பிரச்சனை. பணம் எல்லாம்  அவனுக்கு ஒரு பிரச்சனையே இல்லை.

அப்போது அவர்களின் உரையாடலில் தான்  சார்லஸ் தன் கைய் பேசி எண்ணை கொடுத்து சந்தியாவின் கைய்பேசி எண்ணை வாங்கி கொண்டது.

கொஞ்ச நேரமாக சார்லஸை காணது தேடிய சரத்தின் கண்ணுக்கு இந்த காட்சி பட. அப்போதிலிருந்து தான் புகையோ புகைய்  என்று புகைய ஆராம்பித்தது.

கடைசியா  சந்தியாவிடம் விடை பெறும் போது….. “ உங்க வீட்டில் இனி என்ன நடக்குதுன்னு  ஆள வெச்சி தெரிஞ்சிக்க மாட்டேன். நீ தான் எனக்கு ஏதாவதுன்னா அப்போ அப்போ தகவல் சொல்லனும்.” என்று சொன்னதும்.

சார்லஸ் ஏற்பாடு செய்து இருந்த இரண்டு பேரை காமித்து…. “அப்போ அவங்கலே கூப்பிட்டிப்பிங்கலா…..ஏன்னா இது வீடு இனி நாங்க  போக போவது சின்ன பிளாட். அங்கு இவங்க நின்னா பாக்குறவங்களுக்கு வித்தியாசமா தெரியும்.” என்ற சந்தியாவின் பேச்சில் சிரிப்பு வர.

தன் கையை மேல தூக்கிய வாறே…..” சரண்டர்.” என்பது போல் சொல்ல.

அவ்ச்ன் செயலிலும் , பேச்சிலும் சந்துடாவின் முகத்திலும் புன்னகை தன்னால் மலர்ந்த்து. அன்றில் இருந்து  தினம் தோரூம் இல்லை என்றாலும் சந்தியா சார்லஸை பேசியில் அழைத்து பேசுவாள்.

அது போல் தான் சார்லஸும் சந்தியா இரண்டு நாள் அழைக்கவில்லை என்றால் மூன்றாம் நாள்  தன்னால் சந்தியாவுக்கு அழைப்பு சென்று விடும்.

அப்படி பேசியதில் அக்காவுக்கு சார்லஸ் தான் சரியான ஆள் என்று முடிவே செய்து விட்டாள். அப்படி இருக்கும் போது இப்போது சார்லஸையும், சரத்தையும் திட்டுவதை பார்த்து கோபத்துடன்…

“உன் அறிவு என்ன புல் மேயவா போய் இருக்கு. யார திட்டுற…..?” சார்லஸுக்காக பேசிய சந்தியாவை பார்த்து இப்போது காயத்ரி அதிசயத்து போய் விட்டாள்.

அதன் வெளிப்பாடாய்…. “ ஏன்டி நீ தானே…”சார்லஸ் ,சரத்தை காமித்து…. “இவங்க தப்பானவங்கன்னு சொன்ன.” என்று சந்தியாவை போட்டு கொடுத்து விட.

“எப்போது….?” அய்யோ முறைக்கிறானே….சார்லஸ் சந்தியா முதலில் தங்களை பற்றிய மதிப்பீடு என்ன என்று தெரிந்து இருந்ததால்….. அமைதியாக இருந்தான்.

ஆனால் சரத்தோ சந்தியாவை முறை முறை என்று முறைத்து வைக்க. வேறு யாரோ என்று இருந்தால் போடா என்று விட்டு விடுவாள்.

சார்லஸின் முக்கியமானவன் என்பதால்…. “எப்போது அப்படி சொன்னேன்.” என்று தப்பிக்க பார்க்க.

“அது தான்டி நகை கடையில சுட்டாங்கலே அப்போ….” விம் போட்டு விளக்காத குறையாக சொல்லி விட்டாள்.

“அது…அது …இவங்கல பத்தி அப்போ எனக்கு சரியா தெரியல.”

“இப்போ தெரிஞ்சிடுச்சோ…..?”

இவ்வளவு நேரம் பேசிய விளையாட்டு பேச்சு இப்போது சந்தியாவிடம் இல்லை.

“கண்டிப்பா. இவர் நிலைக்கி இந்ட்ர்ஹியாவுல இருக்க வேண்டிய அவசியமே இல்ல. அதுவும் இது மாதிரி மத்தவங்க பார்வைக்கு தப்பான தொழில் செய்பவனா…..அவர்டுக்கு அந்த தலையெழுத்து இல்லை. அவ்வலவு வசதி இருந்தும் அனாத் ஆசிரமத்தில் வளர்ந்தாரு. அங்கு நடந்த ஒரு பிரச்சனையால் தான் அவர் வாழ்க்கை முறை மாறி போயிடுச்சி.

அப்போ கூட அவர் தப்பானவங்கல தண்டிக்கல. யார யார அவர் தண்டிச்சாரோ ….அவங்க எல்லாம் சாக வேண்டியவங்க தான்.” என்றூ சார்லஸ் யார் என்பதின் முழு விவரத்தையும் தெரிவித்தாள்.

சந்தியா சார்லஸை  பற்றி சொல்ல சொல்ல மலைத்து போனாள் என்றால்…..ஏதோ ஒரு மூலையில் அவர் தனக்கு கிடைப்பார் என்ற அந்த நம்பிக்கை ஆட்டம் கண்டது.

சந்தியா தன்னை பற்றி சொல்லும் போது சார்லஸ் பார்வை முழுவதும் காயத்ரி மீது மட்டுமே இருந்தது. அவள் முகபாவத்தை வைத்து அவள் என்ன நினைக்கிறாள் என்றும் அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

அதனால் பேச்சின்  திசை மாறும் பொருட்டு…… “என்ன இருந்து என்ன பிரயோஜனம்…..? நான் ஒரு கண்காட்சி மாதிரி தான். தூர இருந்து அதிசயத்து பாக்குறாங்கலே தவிர, கிட்ட யாரும் வர மாட்டேங்குறாங்க.”

“ ஏன்….?” சார்லஸ் எதிர் பார்த்த மாதிரி காயத்ரி தான் இந்த கேள்வி கேட்ட்து.

“ஏன்னா நான் செய்யும் தொழில் அப்படி…..”

“நீங்க நல்லது தானே பண்றிங்க. எங்க அப்பா மாதிரி தப்பா செஞ்சிங்க.” தன்னால் தன் தந்தைக்கும், அவனுக்கும் , இடையே மனது எடை போட்டது.

அனைவரின் பார்வையிலும் பெரிய மனித தோரணையில் இருந்த தன் தந்தை செய்தது எல்லாம்  சின்ன தனம்.

ஆனால் வெளிபார்வைக்கு ரவுடி போல் சுற்றிக் கொண்டு இருக்கும்  சார்லஸ் பெண்களுக்கு ஒன்று என்றால்…..தன்னை பற்றி கூட கவலை படாது தன் வாழ்க்கை முறையையே மாற்றிக் கொண்டவன்.

அதனால் அவள் மனதே அவனுக்கு வக்காலுத்து வாங்கியது. கூடவே மனதில் பதிந்த ஹீரோயிசம் அவனுக்கு சாதகமாக தான் நினைக்க தோன்றியது.

அதன் வெளிப்பாடாய்…… “உங்கல கல்யாணம் செய்ய கொடுத்து வெச்சி இருக்கனும்.”

சார்லஸ் நேரிடையாக…… “ எனக்கு அந்த கொடுத்து வெச்சவளாய் நீயே இருக்கனுமுன்னு ஆசை படுறேன்.” நேரிடையாக தன் விருப்பதை தெரிவித்தான்.

தனக்கு அவள் மீது காதல் என்று சொல்லி நேரத்தை விரையம் செய்யாது, நேரிடையாக  திருமணத்தை பற்றி பேசியதில் சந்தியாவும், சரத்தும் ஒன்று போல் கைய் தட்டினர்.

சரத்துக்கோ ஒரு படி போய் விசில் அடிக்க தோன்றியது. ஏற்கனவே தங்களை ரவிடு என்பது போல் நினைத்துக் கொண்டு இருக்கும் சந்தியாவின் மும் இன்னும் கீழ் இறாங்க கூடாது என்ற எண்ணத்தில் தன்னை கட்டு படுத்திக் கொண்டான்.

காயத்ரியோ….இப்படி அனைவரின் முன்நிலையில் இப்படி  கேட்டு வைப்பான் என்று நினைத்துக் கூட பாராது…..அதிர்ச்சியில் நின்று விட்டாள்.

தான் கேட்ட கேள்விக்கு பதி அளீக்காது இருந்தவளை பார்த்து…. “ பார்த்தியா நீயே என்னை கல்யானம் செய்துக்கோன்னா தயங்குற….என்னவோ உங்கல கல்யாணம் செய்துக்க கொடுத்து வெச்சி இருக்கனுமுன்னு சொன்ன….இது தான் கொடுத்து வெச்சி இருக்க லட்சணமா…..” விரைப்பாக பேசியவன்.

தன்னுடைய கடைசி ஆயிதமாய்…..” கடைசி வரை நான் அநாதையாக சாக வேண்டியது தான். என் தலையில் அப்படி எழுதி இருந்தால் யாரால் மாத்தி அமைக்க முடியும்.”

அவன் நினைத்தது போல் அந்த வார்த்தை  சரியாக வேலை செய்தது….. “ஆமா ரொம்ப கண்டுட்டிங்க. எப்போ இருந்து தலை எழுத்து எல்லாம் படிக்க ஆராம்பிச்சிங்க…..அநாதையாம் அநாதை.” அந்த வார்த்தை அவனுடன் நினைத்து பார்க்க கூட முடியவில்லை காயத்ரியால்.

இப்போது …. “ உண்மையா இப்போ நான் அந்த நிலையில் தான் இருக்கேன் காயூ. என் மேல் அக்கறை செலுத்தின அங்கில் போன வருஷம் செத்ததில் இருந்து என் மனசுல இது தான் ஓடிட்டு இருந்த்து.

அன்னிக்கி உன்ன பார்த்த்துல இருந்து ஏதோ …எப்படி சொல்வது. எனக்கு ஒரு புது உறாவு கிடச்சா மாதிரி. உன்னால இன்னும் ஒரு புது உறவு கிடைக்க போவது மாதிரி.” கல்யாணமும் அல்லாது குழந்தைக்கும் அடிபோடும் நண்பனின் பேச்சில்… தன்னால் கைய் வாயைய் பொத்தியது.

“ நான் நான்….” தந்தையின் இழிவான செயலில் அவனுடனான திருமனபந்த்த்துக்கு தயங்க.

“நீயே தான் காயூ. நீயே தான். உங்க அப்பா அவர பத்தியான பேச்சு எப்போதும் நம்முடைய இருக்காது. அவர நம் வாழ்க்கையில் ப்நெச்சின் மூலம் கூட வராம என்னால் பார்த்துக்க முடியும்.

நான் அட்டும் யோக்கியமா….?என்ன தான் காரணம் சொன்னாலும், நான் வாழும் வாழ்க்கையும் ரொம்ப ரிஸ்க்கான வாழ்க்கை தான்.

உன் வாழ்க்கை என்னோடு அமஞ்ச அந்த ரிஸ்க்கு உனக்கு வர சான்ஸ் இருக்கு. அதுக்கு தயங்குறேன்னா….நான் உன்ன எந்த வித்ததிலும் கட்டாய படுத்த மாட்டேன்.

ஏதோஒ வயசு கோலாருல என்ன பார்த்தேன்னு நினச்சிட்டு போறேன். எப்போதும் போல கண்காட்ச்சியாவே என் வாழ்க்கை போகட்டும்.”

அவன் பேச்சில்….. “ நான் ஒன்னும் எனக்காக மறுக்கல…” வீம்புடன் சொல்ல.

“எனக்காக  பாக்குறேன்னா…. நீ என்னை  கல்யாணம் செஞ்சிக்குறது தான் எனக்கு நல்லது  செஞ்சா மாதிரி அர்த்தம்.”

“நானா….?நானா….?”

“கடவுளே திரும்பவும் முதலில் இருந்தா…..” இது சொன்னது  சார்லஸ் இல்லை. சரத்.

கடவுளே விரும்புற பெண்ணை சம்மதிக்க வைக்கவே இப்படி திண்டாட வேண்டி இருக்க. நம்ம நிலமை.

பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த சந்தியாவை பார்த்து ….. “ரொம்ப கஷ்டம்.” சரியாக அந்த வார்த்தை சந்தியாவின் காதில் விழ.

“என்ன கஷ்டம்…..?”

“ஆ உங்க அக்காவே திருமணம் செய்ய சம்மதிக்க வைக்கிறது.” பேச்சை மாற்றி பேச.

“தெரியுதுலே  போய் உதவி செய்யிறது.”

“நானா…..?” சுற்றி முற்றி பார்த்தவள். எப்பொது சார்லஸுக்கு என்று இருக்கும் பாது காவலன் இவர்கல் மீது ஒரு கண்ணை வைத்துக் கொண்டு ஓரமாக  நின்றுக் கொண்டு இருந்தவர்களை காமித்து….

“அவங்கல வேனா கூப்பிட்டு என் அக்கா கிட்ட பேச சொல்லலாமா….?”

சந்தியாவின் பேச்சில், பேசாம சார்லஸுக்கு மச்சினியா மட்டுமே இவளா பாக்கலாமா….? என்ற யோசனைக்கு தள்ளபட்டவன் சந்தியாவையே முராஇத்து பார்க்க.

“என்ன என் முகத்தில் படமா ஓடுது. அப்படி பாக்குற…இரு இரு என் மாமன் கிட்ட சொல்றேன்.”

இது வரை இவலீடம் தன் விருப்பதை சொல்ல்ல்சம என்று யோசனையில் இருந்தவன், அவள் மாமா என்று சொன்னதும்,

“அது எவன்….? என்ற ரீதியில்….

“யாரி அது எங்களோட பெரிய  பருப்பு…..?”

“அது அவர் கிட்டேயே கேட்டு தெரிஞ்சிக்கோங்க.” என்று சொன்னவள்.

சார்லஸை  அழைத்து…..” மாமா இவர் உங்கல பெரிய பருப்பான்னு கேட்குறாரு…..”

“அடிப்பாவீ உங்கக்கா மக்கா….இவ பெரிய தில்லாலங்கடியா இருப்பா போலயே…… சரத்து  இவ வேண்டாம். இவள கல்யானம் செய்கிட்டா சார்லஸ் கையாலேயே நம்மல கொல்ல வைப்பா…..ஆபத்தானவ.

அதன் பிறாகு ஏன் சந்தியா பக்கம் அவன் பார்வை செல்கிறது. முதல்ல சார்லஸ் குடும்பஸ்தன் ஆகட்டும் என்று அவர்கலீன் பேச்சை கவனிக்க ஆராம்பித்தான்.

அது என்பது போல் ஒரு பார்வை பார்த்த சந்தியா இப்போது அவர்கலீன் பேச்சின் இடையே புகுந்து…..

“ காயூ இப்போ எதுக்கு இவர கல்யானம் செய்ய இப்படி யோசிக்கிற….? மூனு மாசம் முன்ன இவர கல்யானாம் செஞ்சிக்க ஆளா பறந்தவ தானே…..” தங்கையின் பேச்சில் மானம் போய்…

“நான்  அப்படி சொன்னேனா….?”

“இதெல்லாம் சொல்லனும் ஆக்கும். அது தான் மூஞ்சிலேயே ஒட்டி வெச்சி திரிஞ்சிட்டு இருந்தியே….” என்று  சொன்னவள்.

பின்….  சார்லஸை காண்பித்து…..  “தோ பாரு நீ கல்யாணம் கல்யானம் செய்துக்கலேன்னா சொல்லு நான் கல்யானம் செய்க்கிறேன்.

எனக்கு நம் குடும்ப பாதுகாப்பு தான் ரொம்ப  முக்கியம். நம்ம அப்பா செத்த்தில் இருந்து அத்தை பைய்யனுக்கு சொல்லிக்கிட்டு அசிங்கமான பார்வையோட வந்து போயிட்டு இருந்தவங்க திடிரென்று  வராம போனாங்க உனக்கு நியாபகம் இருக்கா….?”

சந்தியாவின் நானே கல்யாணம் செய்துக்குகிறேன்  என்றா வார்த்தையிலேயே அதிர்ந்து போய் இருந்த காயத்ரி அவள் கேள்வியில் தன்னால் தலை ஆட.

“ஆ அவங்க வராம இருக்க காரனம் இவர் தான். ஒரே போன் தான் மேட்டர் ஓவர்.”

“ நம்ம அப்பா செஞ்ச காரியத்துக்கு ,எப்போ…. எப்போ…. எவன் வருவான்னு தெரியாது. ஒவ்வொரு தடவையும் இவருக்கு போன் போட்டுட்டு இருக்க முடியாது. அதனால ஒன்னு நீ பண்ணிக்க. இல்ல நாண் பண்ணிக்கிறேன்.”

அதற்க்கு உடனடி பதிலாய்….. “அம்மா ஒத்துப்பாங்கலா……?”

“முதல்லையே பேசிட்டேன். அவங்க ஓகே தான்.”

“இன்னும் என்ன வல வல பேச்சு. ஓகேவா இல்லையா….?”

“ஓகே…ஒகே…..” காயத்ரி சொல்ல.

சந்தியாவும், சரத்தும் ஒன்று  போல் “ஒகே …”என்று முடித்தனர்.

என்ன தான் வேண்டாம் என்று ஒதுங்க நினைத்தாலும் சந்தியாவின் அந்த வாய் தான் சரத்தை அவலை பார்க்க தூண்டியது.

அந்த தூண்டலில்…..சந்தியாவை பார்க்க….சந்தியா தன் ஒற்றை கண்ணை மூடி தன் இருகைய் விரலின் மூலம் சரத்தை பார்த்து சுடுவது போன்ற பாவனை செய்து…. “என்ன ஓகேவா…..” என்று கேட்டு அவனை அதிர வைத்தாள்.

சார்லஸும், காயூவும் இந்த உலகிலேயே இல்லை என்று  தான் சொல்ல வேண்டும். குழந்தை தனமான காயத்ரியின் மென்மையான குணத்தில் , வன்மையான அந்த ஆண்மகன் வீழ்ந்து விட்டான்.

               நிறைந்தது.

 

Advertisement