Advertisement

அத்தியாயம்—-8

“இதோ இந்த உன் பேச்சு கூட அவளை நம்மிடம் இருந்து ஒதுங்க செய்து இருக்கலாம்.” சார்லஸின் இந்த பேச்சு புரியாது….

“என்ன சொல்ற…..?” என்று சரத் குழப்பத்துடன் கேட்க.

“காயூவின் அப்பாவுக்கு குறஞ்சது ஐம்பது வயதாவது இருக்கும்.. ஆனா நீ அவன். இவன்னு தானே பேசுற….?”

“இப்போ இல்ல எப்போவும் அந்த ஆள  அவன் இவன்னு தான் பேசுவேன். வயசாம் பெரிய வயசு. வயசுக்கு ஏத்தகாரியமா செஞ்சி வெச்சான் அந்த பெரிய மனுஷன். அதுவும் வீட்டிலேயே இரண்டு வயசு பொண்ணுங்கல வெச்சிக்கிட்டு….” அதை நினைக்க நினைக்க இப்போதும் சரத்துக்கும் ஆத்திரம் பொங்கியது.

அது அடங்காதவனாய்…. “நல்லவேள அவனே செத்து தொலஞ்சான். இல்லேன்னா நானே அவன சாகடிச்சிருப்பேன்.”

சரத்தின் ஆக்ரோஷமான பேச்சை பொறுமையாக கேட்ட சார்லஸ்….

“அவள் அப்பாவின் இந்த செய்கையால் தான் நான் அவளிடம் அதிரடியில இறங்கல சரத்.”

சரத்துக்கு சார்லஸின் பேச்சு மேலும், மேலும், குழப்பத்தை தான் ஏற்படுத்தியது.

“அவ அப்பாவால் காயத்ரியை தள்ளி வைக்கிறியா சார்லஸ்…..?” என்று கேட்டவன். பின் அவனே…. “நீ அப்படி செய்யிறவன் இல்லையே, அதுவும் இல்லாம உன் நடவடிக்கையைய் பார்த்தா ஒதுங்கி போறவன் மாதிரி தெரியலையே…..?” குழப்பத்துடன் வினவ.

தன் கையில் கட்டி இருந்த வாட்ச்சை பார்த்துக் கொண்டே…..“மீட்டிங்குக்கு டைமாயிடுச்சி வா போகலாம்.”  என்று அவன் அழைப்பிலேயே போகும் வழியில் காரணத்தை சொல்லுவான் என்று சரத் அதற்க்கு மேல் கேட்காது அவனுடம் சென்றான்.

அதற்க்கு ஏற்ற மாதிரியே மின்தூக்கியில் உள்நுழையும்போதே….. “இப்பவே அவ கைப்பிடிச்சி என் வீட்டுக்கு கூட்டிட்டு போவேன்.

அவ கைய் பிடிச்சா அந்த கைய விட மாட்டேன். இப்போ அவ இருக்கும் சூழ்நிலையில் இது போல் செஞ்சா….

உன் அப்பன் அப்படி தானேன்னு அவளை கீழ் இறக்கமா நினச்சி அவள் கை பிடிச்சி இழுத்ததா தான் அவள் நினச்சிப்பா….”

“ஓ. இதில் இத்தனை இருக்கா….?” சார்லஸின் பேச்சில் தான் சரத் யோசிக்க ஆராம்பித்தான்.

ஆனாலும்… “இதே மாதிரி எவ்வளவு நாள் தான் எட்ட நின்னே பார்த்துட்டு இருக்க போற, அதுவும் இடை இடையில அந்த குட்டி சாத்தன் கூட வேற பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்க.”

“குட்டி சத்தானா யாருடா அது….?” தெரிந்தும் தெரியாதது போல் வினவ.

“ஆ உன் மச்சினிச்சி….”

“ஓ சந்தியாவா…..” உதட்டில் ரகசிய புன்னகை மின்ன.

“சே சந்தியாவை போய் குட்டி சாத்தான்னு சொல்லிட்டு. உனக்கு என்ன கண்ணு நொள்ளையா போயிடுச்சா…..?”

“ என் கண்ணு எல்லாம் நொள்ளையா போகல. உன் மச்சினிச்சி கண்ணு தான் நொள்ளையா போய் இருக்கு. அதுவும் செலக்ட் அம்னீஷீயா மாதிரி,குறிப்பிட்டவங்க மட்டும் தான் அவங்க கண்ணுக்கு தெறிவாங்க போல.”

“இப்போ யார அவ பாக்குறா….?யார அவ பாக்கல….?நேரிடையா நீ விஷயத்துக்கு வா…..” கார் பார்க்கிங் அருகில் வந்து கூட காரை எடுக்காது, இதை பேசி சரி படித்திய பிறகே போக முடியும் என்ற முடிவோடு சார்லஸ் கேட்க.

ஒருநிமிடம்யோசித்தவன். பின் என்ன நினைத்தானோ…. “முதன் முதலா அவ காலேஜ் போய் இருக்கும் போது கூட. அவ உன்ன மட்டும் தான் பார்த்தா….உன்ன மட்டும் தான் பார்த்தா….” என்று அழுத்தி சொல்ல.

“காலேஜா…..?”

“ கொஞ்ச நாள் முன்னாடி ஒரு காலேஜிக்கு போய் ஒரு தமிழ் லெக்சரை அடிச்சோமே…..”

இப்போது தான் நியாபகம் வந்தது போல்….“ஆ நியாபகம் இருக்கு.”

“நியாபகம் வந்துடுச்சா…..அவ அக்கா பாக்குறதுக்கு முன்ன இந்த பிள்ள தான் உன்ன  உத்து உத்து பார்த்தது.” சந்தியா காயத்ரிக்கி சீனியர் என்பது போல் பேச.”

“சீ….சீ…என்ன பேச்சு பேசுற…சின்ன பொண்ணு ஏதோ முதல்ல பாத்துச்சி. அதே போய் பெருசா பேசுற….”

“அது தான் அந்த சின்ன பெண். எங்கல ஏன் பாக்கலா….?”

ஓ அது தான் விஷயமா….பேசுடா ராசா பேசு,என்பது போல் அவனை பேச விட்டு சார்லஸ் வேடிக்கை பார்க்க.

அவனும் வஞ்சனை இல்லாது தன் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டி தீர்த்தான்.

“அன்னிக்கி நானும் கூட தானே உன் கூட இருந்தேன். ஏன் என்னோடு நிறைய பேரு இருந்தாங்க. ஆனா அந்த புள்ள உன்ன மட்டும் தான் பார்த்தா…..”

ஒரு சிரிப்புடன்…..” அந்த புள்ள மட்டும் இல்ல சரத். காலேஜ் இருக்கும் மொத்த பிள்ளைகளும் தான் பார்த்தது. நீ ஏன் சந்தியாவை மட்டும் குறை சொல்ற…..”

“ஓ…ஓ….ராஜா அத எல்லாம் நோட் செய்தாரா…..அதுல ஏக பெருமை வேறு போல.” கடுப்புடன் பேசியவனின் தோளை தட்டிய சார்லஸ்.

“ஏய் நமக்கு இருக்கும் ஆபாத்துக்கு, நம் கண் பின்னாலேயும் இருக்கனும்.உனக்கு தெரியாதா…. ?அப்படி பார்க்கும் போது எல்லாம் பொண்ணுங்க பாக்குறத பார்த்தேன். அது பெரிய தப்பா…..?” தன் நியாயத்தை விளக்கோ…விளக்கு என்று விளக்க.

“தப்பு இல்ல. தப்பே இல்ல. இந்த பொண்ணுங்க பேர்லதான் தப்பு. ஹான்சமா ஒருத்தன் இருந்தா போதும் எல்லோரும் அவனையே பாக்குறது.அப்புறம் எங்கல போல சுமாரா இருக்குறவங்க யார கல்யாணம் செய்துக்குறது….?”  மொத்த பழியையும் பெண்கள் மீது போட்டு விட.

“சேச்சே நீ சுமாரா இருக்கேன்னு யாருடா சொன்னது….?நீ சூப்பரா இருக்கடா…..” சார்லஸ் பேச்சு பொய்யோ….?மொய்யோ….?ஆனால் அந்த வார்த்தையில் சரத்தின் முகம் தன்னால் மலர்ந்தது.

“அப்போ நான் நல்லா இருக்கேலே….?” சரத் திரும்பவும் தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்துக் கொள்ள கேட்க.

“அதுல என்னடா உனக்கு சந்தேகம்…..?”

நேரிடையாக….. “அப்போ ஏன்டா உன் மச்சினிச்சி என்னை அன்னிக்கி பார்க்கல…..?”

இப்போது தான் பூதம் வெளியில் வருகிறது என்று…. “உனக்கு எப்படி தெரியும்…..?அவ உன்ன பாக்கலேன்னு….?”

“நான் தான் அங்கு இறங்கினதுல இருந்து அவளையே பார்த்துட்டு இருந்தேன்னே….”

“அங்கு ஒருத்தன பொண்ணுங்கல பாக்க கூடாதுன்னு சொல்லி அவன அடிக்க போனா…நீ அங்கு இருக்கும் பொண்ணுங்கல பார்த்துட்டு வந்து இருக்கே….”

“நான் ஒன்னும் பொண்ணுங்கல பாக்கல. ஒரே பொண்ணு சந்தியாவை மட்டும் தான் பார்த்தேன்.” தன் மனதில் இருப்பதை சொல்லி விட.

“அது தான் அய்யா நான் எப்போ சந்தியாவுக்கு போன் போட்டாலும் பிடிங்கி பிடிங்கி வெச்சிடுறாரோ….?” சார்லஸ் சரத்தை கிண்டலடிக்க.

“நான் உன்ன தப்பா நினைக்க மாட்டேன் சார்லஸ். அது உனக்கு நல்லா தெரியும்.”

“அது போல நீ சந்தியாவையும் தப்பா நினைக்க கூடாது.” சார்லஸின் பேச்சில் இப்போது விளையாட்டு பேச்சு இல்லாது ஏதோ தீர்மானத்துடன் பேசுவது போல் பேச.

“சே…சே….நான் சந்தியாவை பத்தி தப்பா சொல்லலையே…..”

“விளையாட்டுக்கு கூட தப்பா பேசக் கூடாது. ஏன்னா காயூவாவது தன் சோகத்தை முகத்தில் காட்டிடறா….ஆனா சந்தியா….. காயூவோடு சின்ன பெண்.” அடுத்து ஏதோ சொல்ல வந்த சார்லஸ் சொல்லாது இருக்க.

“சந்தியா உன் கிட்ட என்னடா சொன்னா…..?”  விடுதியில் தங்கி இருக்கும் போது சரத் சார்லஸை டா  போட்டு அழைத்தது.

அந்த நடுயிரவில் சார்லஸின் உயரம் அறிந்ததும் தன்னால் அவனுக்கு மரியாதை தர வைத்தது.

கொஞ்ச நாள் முன் தான் சார்லஸின் மனம் காயத்ரியின் மீது சாய்வதை பார்த்து ஒரு நண்பனாய் அவனுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று, முன் போல் இல்லை என்றாலும், உரிமை எடுத்து பேசியது.

ஆனாலும் டா…என்ற இந்த அழைப்பில் சார்லஸ் அவனை பார்க்க. அவனோ அதை உணராது….. “சந்தியா என்ன சொன்னா…..அவ தைரியமான பொண்ணு. சீக்கிரம் தெளிஞ்சிட்டான்னு தானே நினச்சேன்.” உரிமையுடன் கேட்க.

அவனின் அந்த உரிமை உணர்வை கண்டு கொள்ளாது போல்…..” அவ மனசுக்குள்ள வெச்சி புழுங்கிட்டு இருக்கா….”

“அவ சொன்னாளா…..?” என்று கேட்டவன்.

“அன்னிக்கி ஏதாவது பர்சனல் பிரச்சனைனா….எனக்கு கால் பண்ணுன்னு அவ கிட்ட என் விசிட்டிங் கார்டை கொடுத்துட்டு வந்தேன்னே….அத என்ன அவ சாம்பிராணி போட்டுட்டு இருக்காளா…..?” என்றுசாடியவனின்பேச்சை…

“இது எல்லாம் எந்த உரிமையில் பேசுற நீ…..” தான் என்ன கேட்டால் இவன் என்ன கேட்கிறான். சார்லஸின் வார்த்தை மனதில் பதியாது அவனை பார்க்க.

இப்போது திரும்பவும் அழுத்தம் திருத்தமாக….. “இப்போ சந்தியாவை அவ, இவன்னு பேசுறியே…..எந்த உரிமையில் பேசுற….?”

எந்த வித பயமும் இல்லாது அவனை நேர்க் கொண்டு பார்த்தவாறே…. “ நீ காயத்ரியை எந்த உரிமையில் பேசுறியோ…அதே உரிமை தான் சந்தியா மீது எனக்கு.”

சரத் பேசிய பிறகு கொஞ்ச நேரம் எந்த சத்தமும் இல்லை அங்கு…..

“இது உறுதி தானே சரத்.”

“உனக்கு  அதில் என்ன சந்தேகம்…..?”

“இல்ல அவ அப்பா….”

“அதே ஆளு தான் காயத்ரிக்கும் அப்பா.”

“எனக்கு இந்த விஷயம் நடப்பதற்க்கு முன்னவே காயத்ரிய பிடிக்கும்.”

“எனக்கும் தான்.”

“சரி ஓகே….” சரத்தின் கை பிடித்து இழுத்து காரில் தள்ளி விட்டு அவனை பார்த்து சிரித்துக் கொண்டே காரை எடுக்க.

அவனும் ஒரு மார்க்கமாய் அவனை பார்த்து சிரிப்பதை பார்த்த சார்லஸ்…  “ என்ன சரத் உன் சிரிப்பே சரியில்லையே…..”

மீண்டும் சிரித்துக் கொண்டே…. “ இல்ல ஸ்கூல்ல படிக்கிறச்ச ஒரு பிரன்ஸ் இருப்பாங்க. அப்புறம் காலேஜ் போகும் போது வேற பிரன்ஸ் கூட பழகுவாங்க.

படிப்பு முடிஞ்ச பின் வேற ஒரு பிரன்ஸ் சர்க்குலர் வந்து சேரும். கல்யாணம் ஆயிட்டா இவங்க எல்லோரையும் பாக்கும் போது ஹாய்ன்னு சொல்ற அளவுக்கு வந்து நின்னுடும். ஆனா நாம பத்து வயசில இருந்து…” அதற்க்கு மேல் சொல்லாது ஒரு வெடி சிரிப்பு சிரிக்க.

கூட சேர்ந்து சார்லஸும் சிரித்தவன் வெளி கேட் வரும் போது காயத்ரி கை பிசைந்துக் கொண்டு அங்கேயே நின்றுக் கொண்டு இருப்பதை பார்த்து யோசனையுடன் காரை அவள் அருகில் நிறுத்தியவன்…

“ என்ன காயூ இன்னும் வீட்டுக்கு போகலே….” காயத்ரியின் முகத்திலேயே கண் பதித்து கேட்க.

அவனின் பார்வையைய் சந்திக்க முடியாது….. “சந்தோஷ கூப்பிட்டு இருக்கேன். இப்போ வந்துடுவான்.” போனை காட்டியவாறு சொல்ல.

“ ஓ…” என்று ஒற்ற வார்த்தையில் முடித்தவன். தன் காரை யாருக்கும் இடைஞ்சல் இன்றி ஒரு ஓரமாய் நிறுத்தி விட்டு காயத்ரியை பார்த்தவாறு அமர்ந்த சார்லஸை பார்த்து தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

“ ஏன்டா மேல இருந்து இன்னிக்கி பாக்கலேன்னு, அந்த வேலைய காருல இருந்து பாக்க ஆராம்பிச்சிட்டியா…..?” கடுப்புடன் கேட்க.

“இல்லடா தனியா நிக்குறா….”

“ அப்போ வீட்ல விடலாம். கூப்பிடு.” என்று சொன்னதும்,

“வேண்டாம்டா….சந்தோஷ் வரவரை இருக்கலாம்.” என்று சொல்லி விட்டு காயத்ரியை பார்க்க.

காயத்ரி சாலையை பார்ப்பதும், தன் கைய்கடிகாரத்தை பார்ப்பதும், இடை இடையே….சார்ஸையும் ஓரே விழியில் பார்ப்பதும், அரைமணி நேரமாக இதுவே தொடர.

“ஷாப்பா முடியலடா சாமீ…..” என்று

சொன்னவன்.

ஒரு முடுவு எடுத்தவனாய் காரை விட்டு இறங்கிய சரத்தை  “ஏய் இறங்காதே…..” என்று சொல்லி தடுக்க பார்க்க. அவனோ அவன் பேச்சை காதில் வாங்கதவனாய் இறங்கவும்.

வேறு வழி இல்லாது சார்லஸும் கூடவே இறங்கியதும், கடந்த அரைமணி நேரமாய் மூன்று வேலைகளையும் ஒருங்கே பார்த்து கொண்டு இருந்த காயத்ரி, சரத்தும், சார்லஸூம் இறங்கி வருவதை பார்த்து…

பதட்டம் குடிகொண்டவளாய் தன் கைய்பையை கெட்டியாக பிடித்துக் கொண்டு சாலைமேல் ஒருகண்ணும், இவர்கள் மேல் ஒரு கண்ணுமாய் வைக்க.

திரும்பவுமா….என்று நினைத்துக் கொண்டு விரு…விரு என்று காயத்ரி அருகில் சென்ற சரத்…

“வாங்க வீட்டுக்கு நாங்க கூட்டிட்டு போறோம்.” வருகிறாயா….?இல்லையா…..? என்று அனுமதி கேட்டு நிற்காது, அழைத்த சரத்தை வித்தியமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே சார்லஸை பார்த்து முறைக்க.

“ பார்த்தியாஅம்மணிய காரில் கூட்டிட்டு போக அழிச்சது நான். ஆனா அம்மணி உன்ன பார்த்துட்டு  இருக்காங்க.”

“ஏன்டா அவ என்ன ஆசையா பாக்குற மாதிரி புலம்புற….அவ என்ன முறைக்கிறடா…..”

“என்னது முறைக்கிறாங்களா…அது எப்படி உன்ன முறைக்கலாம்.” எகிறியவனை அடக்காது அமைதியாக பார்த்திருந்தவன்.

காயத்ரி பக்கம் கை காட்டி…. “அது அங்க கேளு.எதுக்கு என் நண்பனை முறைக்கிறேன்னு.”

இவ்வளவு நேரம் பேசிய வீரவசனம் மறைய…. “நான் ஏன்டா கேட்கனும். உன் ஆளு நீயே கேளு.”

கொஞ்ச நேரத்துக்கு முன் நடந்த சம்பவம். கடந்த ஒரு மணி நேரமாக கால் கடுக்க நின்றுக் கொண்டு இருந்த எரிச்சல். அதோடு யாரை மனதில் நினைத்திருந்தாளோ….அவன் முன் அப்பாவால் அவமானப்பட நேர்ந்தது…எல்லாமுமாக  சேர்ந்துக் கொண்டு….

இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த  ஆதாங்கம், இயலாமை, தந்தை இழந்ததில் இருந்து அனைவரும் பார்க்கும் பச்சாதாப பார்வை இவை அனைத்துமாக சேர்ந்து….

“நீங்க இரண்டு பேரும் பேசுறது இருந்தா ஒராம போய் பேசுங்க. ஒரே தலைவலியா இருக்கு. “நிஜமாகவே அவளுக்கு தலை வலிக்க ஆராம்பித்து இருந்தது.

மதியம் அம்மா கட்டி கொடுத்த எலுமிச்ச சாதத்தில் பாதி தான் சாப்பிட்டாள். இது வரை தான் படிப்பில், வேலையில் ஸ்லோ என்ற கவலை அவளுக்கு வந்ததே இல்லை.

ஏதோ நேரம் போக வேலை என்று தான் வந்துக் கொண்டு இருந்தாள்.ஆனால் இப்போது தன் வாழ்வாதாரமே வேலை என்றானவுடன்  தன் மந்த நிலையை நினைத்து தன்னையே வெறுத்தவளாய்…பாதி சாப்பாட்டில் டிபன் பாக்ஸை மூடி வைத்து விட்டு, வேலையாவது பார்ப்போம் என்று அமர்ந்து விட்டாள்.பின் வேலை அவளை இழுத்துக் கொண்டது.வேலை  முடிந்ததும் நடந்த சம்பவம் அவளை மொத்தமாய் வீழ்த்தி விட்டது.

இதில் அவனுங்க வேற….மனதில் பேசுவதாய் நினைத்து தலையை பிடித்துக்  கொண்டே மெல்ல முனு முனுக்க. அது தெளிவாய் இருவர் காதிலும் விழுந்தது.

“என்னது இவனுங்கலா…..”  அதிர்ந்தது சார்லஸோ, சரத்தோ அல்ல.

அப்போது தான் சந்தோஷோடு வண்டில் இருந்து இறங்கிய சந்தியா.

 

Advertisement