Advertisement

அத்தியாயம்—-7

தேவி சென்று அரை மணி நேரம் வரை கணினியில் முகம் புதைத்து இருந்தவள். வேலை முடியவும், அதை ஷட்டவுன் செய்து.

“அப்பாடா……” என்று தலை குனிந்தே வேலை பார்த்ததால் உண்டான கழுத்து பிடிப்பை போக்க, தலையை நாலா பக்கமும் சுழற்றி நெட்டி முறிப்பது போல் செய்துக் கொண்டு இருக்கும் போது தான்…..

தான் இருந்த பகுதியில்  யாரும் இல்லாது மிக அமைதியாக இருப்பதை பார்த்து…கொஞ்ச நேரம் முன் கூட அந்த சபர்  வேலை பார்த்துட்டு இருந்தானே….

தன் இருக்கையில் இருந்து மூன்று இருக்கை தள்ளி  அமர்ந்து இருக்கும் ஊழியனை நினைத்துக் கொண்டே தன் கைய் பையை எடுத்துக் கொண்டவள்.

அவன் இருக்கிறானா….?என்று அவன் இருக்கை  நோக்கி சென்றாள். தடுப்பு தடுப்பாக இருப்பதால்…அவன் குனிந்து இருந்தால் தெரியாது. அதனால் பக்கத்தில் பாக்க செல்லும் போது தான்,

இப்பகுதியில் தான் மட்டும் இல்லை. வேறு ஒருவரும் இருக்கிறார். ஒருவரா….?இருவரா……? சுற்றி, முற்றி பார்த்துக் கொண்டே வந்தவளுக்கு யாரும் கண்ணில் படாது போகவே  பயம் பிடித்துக் கொண்டது.

நல்ல எண்ணத்தில் இங்கு இருந்தால், கண்டிப்பாக தன் முகத்தை மறைக்க மாட்டர்கள். பட படப்பு  கூட , தன் கைய்பையில் இருந்து கைபேசி எடுத்து தொடர்பு கொள்ளும் வேலையில் அது தன்னிடம் இருந்து பறிக்கப்பட்டதும்.

பயத்தில் கூடவே கைய்பைய்யும் நழுவி விழ. யார் தன்னிடம் இருந்து கைய்பேசியை பறித்தது என்று நிமிர்ந்து பார்த்தவள், அங்கு தன் பகுதியில் இருப்போருக்கு டீ,காபி கொண்டு வந்து கொடுக்கும் கந்தன் ஒரு மாதிரி இளிப்போடு  தன்னையே பார்த்திருப்பதை பார்த்தவளுக்கு, அவன் எண்ணம் அப்பட்டமாய் தெரிந்தாலும், அதை முகத்தில் காட்டாது.

“வேல முடிஞ்சிடுச்சி கந்தன் அண்ணா. தோ கிளம்பிட்டேன்.” ஏதும் நடக்காது போல அவனிடம் இருக்கும் தன் கைய் பேசிக் கூட வாங்காது  இரண்டடி எடுத்து வைத்தவளை வழி மறித்து நின்றான் சபர்.

அவனை பார்த்து பயம் கூடிய போதும் அதை முகத்தில் இருந்து மறைத்தவள்..,

“என்ன சபர் நீயும் வேல முடிச்சிட்டியா….?

இந்த டைமுக்கு கேப் இருக்குமான்னு தான் தெரியல.” சாதரணம் போல் காட்டி கொள்ள பேசியவளுக்கு, என்ன முயன்றும் தன் குரலில் இருந்த பயத்தை மறைக்க முடியவில்லை.

அவள் பேச்சை காதில் வாங்காது போல அவளை மேலில் இருந்து கீழ் வரை . “வந்ததோட கொஞ்சம் இளச்ச மாதிரி இருக்கியே காயூ.”

இது ஒருவரை பார்த்து பேசும் சாதரண பேச்சு தான். ஆனால் அவன் பார்த்த பகுதி, அவன் கண்ணில் தெரியும் கள்ளத்தனத்தில் தன்னால் முகம் சுளித்து….

“சீ…..” என்று அருவெருத்து அவனை சுற்றிக் கொண்டு செல்ல பார்த்தவளை ஒரே சுழட்டாய் அவள்  கைய்பற்றி தன் முன் கொண்டு நிறுத்தியவன்.

“நாங்க எதுக்கு வழி மறச்சோன்னு தெரிஞ்சே தான் சாதரணமா  பேசிட்டு இருக்க…..?” என்று கேட்டவன்.

பின்….. “சரி அப்போ இங்கு நடந்ததும் சாதரணமா எடுத்துக்கோ….” என்று  சொல்லிக் கொண்டே அவள் முகத்தை தன் முகத்தின் அருகில் இழுத்துக் கொண்டே…

கந்தனை பார்க்க….அவன் சபர் கொடுத்த  உயர்தர கைய்பேசிக் கொண்டு…. காட்சி பதிவு செய்ய தயார் நிலையில் அவர்கள் நோக்கி பிடித்துக் கொண்டு இருந்தான்.

“சபர் நீ செய்வது தப்பு.” என்று  சொல்லிக் கொண்டே அவன் முகத்தின் அருகில் இருந்த தன் முகத்தை இழுத்துக் கொண்டவளின் முகத்தை திரும்பவும் பற்றி இழுத்துக் கொண்டே…..

“தப்ப, சரியா செஞ்சா தப்பே இல்லடா  செல்லம்.” என்று கொஞ்சுகிறேன் என்ற பெயரில் பேசியவன் பேச்சில் மூஞ்சை சுழித்தாள் என்றால் ,அவன் அடுத்து அடுத்து பேசிய பேச்சில்….

————————————————————-

எப்போதும் போல் காயத்ரி செல்லும் நேரத்தில் ஜன்னல் ஸ்கீரினை நகர்த்தி நின்று  கொண்டு இருந்த சார்லஸ் ,சந்தோஷ் மட்டும் செல்வதை பார்த்து….

“என்ன சரத் சந்தோஷ் மட்டும் போறான்.” நெற்றி சுருங்கி கேட்டவனை ஒரு மாதிரியாக பார்த்த சரத்.

“அவங்கலே தனி தனியா போனா கூட ,நீயே ஜோடி  சேர்த்து வெச்சிடுவே போலவே…..” என்று சொன்னவனின் பேச்சில்….

“என்ன பேச்சு சரத்….” என்று அதட்டியவன், திரும்பவும்  அவள் வரும் பாதையைய் பார்த்துக் கொண்டு நின்று இருந்தான்.

சிறிது நேரம் சென்று  தேவி வருவதை பார்த்தவன். “இவளும் வந்துட்டா …இன்னும் அவ என்ன பண்றா….?” இப்போது சரத்திடன் கேட்காது தனக்குள்ளே முனு முனுத்துக் கொண்டான்.

சரத்தோ…..கீழே நின்றுக் கொண்டு இருந்த சார்லஸின் பாதுகாவலன் கைய்பேசியில் தொடர்புக் கொண்டு ஏதோ பேசி விட்டு வைத்தவன்.

“ இங்கேயே நின்னுட்டு இருந்தா வேலைக்கு ஆகாது.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது அவன் கைய்பேசிக்கு அழைப்பு வந்தது.

“ஆ ஓகே….” என்று சொல்லி வைத்தவன்.

“இன்னும் வேல பாக்குறாங்கலாமா…..” என்று சொல்லிக் கொண்டு தன் கைக்கெடிகாரத்தை பார்த்து விட்டு…

“சார்லஸ் ******ஓட்டலில் டின்னர் இருக்கு.” என்று சொல்லியவனிடம்,

“இன்னும் அரைமணி  நேரம் காத்திருப்போம்.” என்று  காத்திருந்தவனுக்கு பொறுமை போயின.

“சரி சரத் போகலாம்.” என்று  சொல்லி விட்டு மின்தூக்கியில் நுழைந்தவன், கீழ் தளம் செல்ல வேண்டிய பட்டன் மேல் கைய் வைத்தவன் ,என்ன நினைத்தானோ….

ஐந்தாம் தளம் செல்ல வேண்டிய பட்டனை

தட்டி விட்டு சரத்தை பார்க்க. …”அப்பா இப்போவாவது நேரே போய் பேச தோனுச்சே, அப்போ கேரளாவில் திரும்ப மழை பெய்யும் என்று  சொன்னது உண்மை தான் போல.” என்று கிண்டல் அடித்து முடிக்க. மின்தூக்கி ஐந்தாம் தளத்தில் வந்து நின்றது.

அந்த தளத்தை சுற்றி, முற்றி பார்த்துக் கொண்டே…. “ என்ன சரத் யாரும் காணும். நாம மதியம் லன்ச்சுக்கு ஓட்டல் போனோமே அப்போ வீட்டுக்கு போய் இருப்பாளா….?” என்று தன் சந்தேகத்தை கேட்டவன், பின் அவனே…

“உடம்பு ஏதாவது சரியில்லையோ……?” இது வரை சந்தியாவை கைய்பேசி மூலம் தொடர்பில் இருந்தவன். மீண்டும் அவளை  அழைக்க தன் கைய்பேசி எடுத்தவனிடம் இருந்த அதை கைய் பற்றிய சரத்.

“மச்சினிச்சி கூட அப்புறம் பேசலாம். காயத்ரி கூட இருக்குற  இரு கொடுக்குல ஒரு கொடுக்கு தான் செக்யூரிட்டியிடம் உன் ஆளு இன்னும் வேல பாக்குறதா சொன்னா. ரெஸ்ட் ரூம் போய் இருப்பாங்க. கொஞ்சம் பொறு.” என்று சொல்லிக் கொண்டே காயத்ரி வேலை செய்யும் இடத்தின் கதவை திறந்தவர்கள்.

அங்கு கண்ட காட்சியில் “ஏய்…..” இருவரும் ஒரு சேர சபர் மீது சீறி  பாய்ந்தனர்.

மற்ற பெண்  மீது கைய் வைத்தாலே ,நம் ஹீரோ சும்மா இருக்க மாட்டாரு. அவன் ஆள் மீது கைய் வைக்க பார்த்தவனை சும்மா பின்னி பெடல் எடுத்துட மாட்டான்.

அவனை அடித்தும் அவன் கோபம் அடங்குவேனா என்று  இருந்தது. ஏதாவது பெருசா செய்யனும். என்ன என்ன…..என்று யோசித்துக் கொண்டே சரத்தை பார்க்க.

சரத் எப்போதும் தன்னுடன் இருக்கும் கைய்துப்பாக்கி எடுக்க.   அதை பார்த்த காயத்ரியின் முகத்தில் பயத்தின் ரேகை கூடியது.

அவள் முகத்தை  பார்த்துக் கொண்டே….. “சரத் சாக கூடாது.” என்று  சொன்னதும் தான் காயத்ரியின் முகத்தில் கொஞ்சம் பயம் விலகியது. ஆனால் முற்றிலுமாக இல்லை.

இவர்கள் வராமல் இருந்து இருந்தால்….?இல்லை நேரம் சென்று வந்து இருந்தால்….?  நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை .

“அப்போ இவன அப்படியே விட்டுடலாமா….?” என்று சரத் கேட்க.

“அது எப்படி…..?” என்று சிறிது நேரம் யோசித்தவன்.

“நம்ம சாரதம்மாவே கூப்பிடு.” சாரதா அவன் அலுவலகத்தில் கழிப்பறை சுத்தம் செய்யும் பெண்மணி.

சார்லஸ் காரணம் இல்லாது எதுவும் செய்ய மாட்டான் என்று எதற்க்கு என்று கேளாது. சாரதாவை அழைத்து வரும் மாறு  பாதுகாவலரிடம் கூற.

சொன்ன சிறிது நேரத்துக்கு எல்லாம் அந்த தளத்துக்கு வந்த சாரதம்மா….அங்கு இருந்தவர்களை பார்த்துக் கொண்டே…

“யென்ன  பெரிய நைனா  கூப்பிட்டியாமே…..” என்று கேட்டாள். சார்லஸிடம் பயம் இல்லாது பேசுபவர் யார் என்றால் அது சாரதாம்மாவாக  தான் இருக்கும்.

“இங்கே சுத்தன் செய்யனும், அது தான் கூப்பிட்டேன்.” என்றதும்,

அங்கு நின்றுக் கொண்டு இருந்த சரத்திடம்…. “யென்ன சின்ன நைனா….  என்ன வான்னு சொன்னதபாவே கக்கூசு கழுவுனுமுன்னு சொல்லி இருந்தா….இந்த  பினாயிலு, துடப்பத்த எத்தாந்து இருப்பேனே…..” சார்லஸை பெரிய நைனா என்றும், சரத்தை சின்ன நைனா என்றும் தான் அழைப்பார் சாரதா…

அவ்வழைப்பில் தன்   நியாயமான கேள்வியை கேட்டவளிடம்…. “இது சுத்தம் பண்ண துடப்பம் இருக்கனுமுன்னு அவசியம் இல்ல சாரதம்மா.” என்று சொன்ன சார்லஸ்.

“ என்ன ஒன்னு இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும்.” என்று சொன்னவனின் பேச்சு புரியாது.

“ யென்ன சொல்லிக்கிறேன்னு புரியல  பெரிய நைனா.” என்று அறியாது கேட்கும் சாரத்தாம்மாவிடம்,

“ சாரதம்மா அசுத்தம் எங்கு இருந்தாலும் சுத்தம் செய்யனும்.  செய்யனுமா ….?வேண்டாமா….?சாரதாம்மா.” என்று கேள்வி கேட்டதும்.

“செய்யனும் பெரிய நைனா….” என்று சொன்னவள்.

“இந்த இடத்த கூட்டனுமா பெரிய நைனா…..” என்று கேட்டவள்.

“நல்லா சுத்தமா தானே இருக்கு….” தனக்கு தானே கேள்விக் கேட்டு கொண்டு அந்த இடத்தை பார்த்தவளிடம்.

“இடம் சுத்தமா தான் இருக்கு சாரதாம்மா….ஆனா சில அசிங்கம் இங்கு இருக்கு அத தான் சுத்தப்படுத்தனும்.” சபரை  கொலை வெறியோடு பார்த்துக் கொண்டே சொல்லும் போது தான் நம் சாரதாம்மாவுக்கு விஷயம் விளங்கியது.

அதுவும்  மழையில் நனைந்த கோழி போல் வெட வெடத்து நின்றுக் கொன்டு இருந்த காயத்ரியைய் பார்த்ததும்  என்ன நடந்து இருக்கும் என்ற விஷயம் அறிந்தவளாய்…

தன் சேலையைய் ஒரு உதறு உதறி தன் இடுப்பில் சொறுகிக் கொண்டே…. “கண்டிப்பா பெரிய நைனா.” என்று சொன்னவள்.

திரும்பவும் சரத்தை  பார்த்து….. “சொல்லி இருந்தா துடப்பத்த மொக்கி எடுத்துட்டு வந்து இருப்பேனே……” என்று சொல்ல.

“அதுக்கு என்ன  சாரதாம்மா அது தான் உங்க காலுல இருக்கே….அத கழட்டி….” அங்கு இருந்த கழிவறை  பக்கம் கை காட்டியவன். “அங்கு போய் முக்கிட்டு வாங்கன்னு சொல்லுவேன். ஆனா ரொம்ப நேரம்  காத்து இருக்க வைக்க கூடாது. அதனால சீக்கிரம் பூஜைய போடுங்க.” என்று சார்லஸ் சொல்லி முடிக்கும் வரை கூட காத்திராது தன் செருப்பால் அவனை விளாச.

தன்னை ஒன்றும் செய்யவில்லையே என்ற நிம்மதியில் நின்றுக் கொன்டு இருந்த கந்தனை பார்த்த சரத்.

“இப்போ எடு.” என்று அவன் கையில் உள்ள கைய்பேசியை சுட்டி காட்டி சொல்ல.

நம்மை ஒன்றும் செய்யாது வரை தப்பித்தோம் என்று அதை வீடியோ எடுத்து முடித்ததும்.

அதை வாங்கி பார்த்த சரத்…”பரவாயில்லை உன் கிட்ட கூட  திறமை ஒளிந்து இருக்கு.

“சரி கழட்டு….” என்று கந்தனை பார்த்து  சொன்னதும்,

“என்ன …என்ன சார்,” என்று திக்கி திணறி கேட்டவனிடம்.

“உன் ட்ரஸை கழட்டுடா…..” சரத் பேச்சில்  அதிர்ந்த கந்தன். “சார் நான் ஒன்னும் பண்ணல சார். இவன் தான்  வீடியோ எடுக்க சொன்னான்.” பெரிய நியாயவான் போல் பேசியவனை, கொலை வெறியோடு  பார்த்த சார்லஸ்.

“உன் தங்கச்சி கிட்ட இப்படி நடந்தா….நீ இப்படி தான் வீடியோ எடுத்துட்டு இருப்பியாடா கம்முனாட்டி…..” தமிழில் தனக்கு தெரிந்த கொஞ்ச கெட்ட வார்த்தையில் திட்டியவன்.

சரத்திடம்…..”சீக்கிரம் சரத்.” காயத்ரியின் முகம் வெளிறி போய் இருப்பதை பார்த்தவன் சீக்கிரம் அவளை இந்த இடத்தை விட்டு கூட்டி செல்ல வேண்டும் என்று  காயத்ரியைய் பார்த்துக் கொண்டே சொன்னவனின் பேச்சை தட்டாத சரத்.

அடுத்து கந்தனை முழு நிர்வாணமாக்க முயலும் போது காயத்ரி…. “வேண்டாம் சர்.” பயத்துடன் சார்லஸை பார்த்து வேண்ட.

காயத்ரி சார்லஸை சில தடவையும், சார்லஸ் காயத்ரியைய் பல தடவையும் பார்த்து இருந்தாலும், நேர்க் கொண்டு காயத்ரி சார்லஸிடம் பேசும் முதல் வார்த்தை வேண்டாம் என்பது.

ஆனால் சார்லஸ் அதை நிறைவேற்றிக் கொடுக்காது…..சாரத்தாம்மாவை பார்த்து…. “இவள என் ரூமுக்கு அழச்சிட்டு போங்க சாரதாம்மா.”

இது வரை தன்னை தவிற பெண்கள் என்று  யாரும் அந்த தளத்தில் நுழைந்தது இல்லை. முதல்  முறை ஒரு இளம் பெண். அதுவும் சார்லஸின் அறைக்கே அழைத்து செல் என்கிறான் என்றால்…

இப்போது சாரதம்மாவின் பார்வை காயத்ரியின் மீது மரியாதையோடு விழுந்த வாறே…

“ சர்தான் பெரிய நைனா.” என்று சொன்னவர்.

காயத்ரியை பார்த்து…. “நீ பயப்படாதே கண்ணு. வா நாம போகலாம். அந்த பேமானிய அவங்க பார்த்துப்பாங்க.” என்று அவளுக்கு தைரியம் அளித்து  கூட்டி சென்றார்.

இருந்தும் மின்தூக்கியில் உள் நுழையும் வரை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு தான் சென்றாள்.

கந்தன் வேலை முடிந்த உடன் சரத்திடன்… “உடனே இது யூடூயூப்பில் ஏத்து.” என்று சொன்னவன்.

அவர்கள் இருவரையும் பார்த்து…. “இத பார்த்தா உங்க வீட்டில் ரொம்ப பெருமையா நினைப்பாங்க. இனி ஒருதரும் காயத்ரி இல்ல. எந்த பெண் மீதும் தப்பான பார்வை விழுந்தது அவ்வளவு தான்.” என்று எச்சரிக்கை செய்ய.

சரத்தோ….அவர்கள் இருவரையும் பார்த்து…..” இனி அவனுங்க அவங்க பொண்டாட்டிய கூட தப்பா பாக்க மாட்டாங்கலே….” சொல்ல. இருவரும் ஒரு சேர…”ஆமாம்…” என்று தலையாட்டியதும்,

“ நான் சொல்லலே….” என்று அவர்கள் மண்டையில் தட்டிய சரத்.

“இனி இந்த பக்கம் உங்க மூஞ்சிய பாக்க கூடாது.” என்று அவர்களை விரட்டியதும் இருவரும் காயத்ரியை பார்க்க விரைந்து  சென்றனர்.

“குடிம்மா….அது தான் எதுவும் நடக்காம நம்ம அய்யாங்க காப்பத்திட்டாங்கலே….” தன் கையில் காபி கோப்பையோடு காயத்ரியிடம் கெஞ்சிக் கொண்டு இருந்த சாரதம்மாவின் கையில் இருந்த காபியைய் வாங்கிய சார்லஸ்.

“நீங்க போங்க சாரதாம்மா. நான் குடிக்க வைக்கிறேன்.” என்ற சார்லஸ் குரலில் விருட்டென்று தான் அமர்ந்து இருந்த இருக்கையை விட்டு எழுந்து நின்ற காயத்ரி அவனை பார்க்க கூசியவளாய் தலை குனிந்த வாறே…

“வேண்டாம். எனக்கு டைமாயிடுச்சி நான் வீட்டுக்கு போறேன்.” குழந்தை ரைம்ஸ் சொல்வது போல் இருந்தது அவளின் பேச்சு.

அதை கேட்டு சரத்துக்கு சிரிப்பு வந்து விட. அதை பார்த்து சார்லஸ் முறைத்த முறைப்பில் வந்த சிரிப்பு தன்னால் அடங்கியது.

சார்லஸ்  ஒரு குழந்தைக்கு சொல்வது போலவே…. “வீட்டுக்கு தானே போகலாம். நானே கூட்டிட்டு போறேன். முதல்ல இதை குடி.” என்றதும்.

அவன் சொன்னதில் நானே கூட்டிட்டு போறேன் என்ற வார்த்தையில்…. “வேண்டாம்.  வேண்டாம். நானே போயிடறேன்.” என்று படப்படப்புடன் சொன்னவள்.

சார்லஸின் கையில் இருந்த காபியைய் பிடுங்காத குறையாக வாங்கி கட கட வென்று  குடித்து விட்டு….

தன் இதழில்  படிந்து இருந்த காபியின்  நுரையை கைக் கொண்டு துடைத்த வாறே…. “நான் போறேன்.” என்று பொதுவாக சொல்லி விட்டு அந்த தளத்தை விட்டு கீழே  வந்து நின்றதும் தான், காயத்ரிக்கு சீராக மூச்சு விட முடிந்தது.

“என்ன சார்லஸ் விட்டுட்ட….”

“விடாம கைய பிடிச்சி நிக்க வைக்கை சொல்றியா….?” என்று  கேட்டவனின் குரலில் என்ன இருந்தது என்று தெரியாத போதும்,

“கைய் பிடிசா கூட தப்பு இல்ல. என்னைக்கு இருந்தாலும் பிடிக்க போற கை தானே…..”

அந்த பேச்சில்….” நீ சொல்றது உண்மை தான் சரத். ஆனா அவ கைய பிடிச்சா அதுக்கு அப்புறம் நான் அந்த கைய விட கூடாது.” ஏதோ தீர்மானம் எடுத்தவன் போல்  சொல்ல.

“உன்ன யாரு விடா சொன்னா…..பிடிச்சி உன் வீட்டுக்கே கூட கூட்டிட்டு போ. உன்னை யாரு தடுக்க போறா…..?”

“தடுக்க யாரும் இல்லேன்னு நாம நம்ம இஷ்டத்துக்கு நடக்க கூடாது சரத். இப்போ பார்த்தலே…என் முகத்த பாக்க கூட அவ்வளவு தயக்கம்.” அப்போது தான் சரத் அதை உணர்ந்தவனாய்…

“ஆமாலே….ஆனா முதல் முறை பாக்கும் போதே….எந்த வித தயக்கமும் இல்லாம உன்னை உத்து பார்த்தாங்கலே…

சரி அப்போ நம்ம பத்தி தெரியாம பார்த்தாங்கன்னு வெச்சிக்கினாலும், அடுத்து நம்ம கையில் கன்ன பார்த்து கூட பயப்படாம என்னம்மா உன்ன லுக்கு விட்டாங்க. இப்போ என்ன ஆச்சி….?” அவனே கேள்வியும் அதற்க்கு பதிலுமாய் கேட்க.

“அவங்க அப்பா செஞ்ச செயலால நம்ம பாக்கவே அவமானமா இருக்கு அவளுக்கு.” காயத்ரியின்  நிலையை தெள்ள தெளிவாக சார்லஸ் சொல்ல.

“அவன் செஞ்சதுக்கு இந்த பொண்ணு என்ன செய்யும்.” தன் நண்பனின் மனம் கவர்ந்தவளின் தந்தை என்றாலும், அவன் செய்த அந்த ஈனகாரியத்தால், மரியாதை  கொடுக்க கூட தோனாது அவன் இவன் என்று பேசினான்.

 

Advertisement