Advertisement

அத்தியாயம்—-6

“இதுல ஒரு கையெழுத்து போடுங்க…..” காவல்துறை அதிகாரி நீட்டிய காகிதத்தில்…என்ன ஏது என்று பாராது கையெப்பம் இட்ட தேவகியிடம்.

“பாடியைய்  எடுத்துட்டு போகலாம்.”  நேற்று வரை கோதண்டராமன் என்று அழைத்தவர் இன்று பாடி.

தேவகியின் கண்ணில்  இருந்து ஒரு சொட்டு தண்ணீர் வரவில்லை. நேற்று வரை நல்ல கணவராக,  தந்தையாக இருந்தவர். இன்று மனித இனம் என்று சொல்லிக் கொள்ள கூட தகுதியில்லாது ஆகிவிட்டவரை யார் மெச்சுக் கொள்ள அழவேண்டும்.

அழுது இருக்க வேண்டுமோ….?ஊருக்காக இல்லை என்றாலும், கோதண்டராமனின் சகோதரிக்களுக்காவது அழுது இருக்க வேண்டுமோ….?

நடுக்கூடத்தில் படுக்க வைக்கபட்டு இருந்த கோதண்டராமனின் பூதவுடலை சுற்றி இருந்த உறவுக்காரர்களிடம்….. “அய்யோ மானஸ்த்தனா  வாழ்ந்துட்டு இருந்த ஒரு மனுஷன் இப்படி செத்து இருக்கானே…..?” ஒரு சகோதரி இப்படி கதறி அழ.

மற்றொரு சகோதரியோ…… “அந்த மானத்துக்கு பங்கம் வந்துடுச்சின்னு தான் செத்தானோ…..?என்னவோ…..?”

கல்லூ மாதிரி உட்கார்காந்துக் கொண்டு இருந்த தேவகி இந்தச் பேச்சுக்கு நிமிர்ந்து  தன் நாத்தனாரை பார்த்தவள் ,பின் ஏதும் சொல்லாது குனிந்துக் கொள்ள.

இவ்வளவு பேசுறோமே ஏதாவது வாய திறக்குறளா பாரேன். ஒரு தம்பி செத்து இருக்கான். அதுவும் தற்கொலை. எதுக்குன்னு தெரிஞ்சிக்க நமக்கு உரிமை இல்லையா…..?” தன் ஆதாங்கத்தை கொட்ட.

“நம்மல எங்கே கிட்ட விட்டா. என் மையனுக்கு அவ பொண்ண கேட்டப்ப படிக்கிறான்னு சொன்னா…..சரி காத்து இருக்கோமுன்னு சொன்னதுக்கு, இல்லை நீங்க வேற இடம் பார்த்துக்கோங்கன்னு  சொல்லிட்டா….”

“ஆ நம்ம பையனுங்களுக்கு யாராவது ஒருத்தருக்கு அவ பொண்ண கொடுத்து இருந்தா, நம்ம தம்பி இப்போ உயிரோட இருந்து இருப்பான்.”

அந்த இரு சகோதரிகளும் தம்பி மகள்களில் ஒருத்தி ஏதோ செய்து இருக்காளுங்க, மானஸ்த்தனான தன் தம்பி தற்கொலை செய்து கொண்டான்.  இது தான் அவர்களின் எண்ணமாய் இருந்தது.

இவர்களின் பேச்சை பின் பக்கம் கை கட்டி நின்றுக் கேட்டுக் கொண்டு இருந்த சார்லஸின் உதட்டில் கசந்த புன்னகை.

ஒரு பெண்ணின் மேல் பழி போடுவது இவ்வளவு ஈசியா…..? தவறு மொத்தமும் செத்தவன் செய்து இருக்க…..பழி மற்றவர்கள் மேல்.

ஏன் என்றால் அவன் இறந்து விட்டான். இறந்தால் செய்த தவறு  சரியாகிவிடுமா…..? சார்லஸ் நினைத்து இருந்தால் கோதண்டராமனின்  வண்டவாளத்தை தண்டவாளம் ஏத்தி இருப்பான்.

கோதண்டராமன் விளையாடியது அனைத்தும் பெரும்புள்ளிகளோடு, அவர்களுக்கு விஷயம் தெரிந்தால், பாதிக்கப்படுவது வீட்டு பெண்களாய் தான் இருப்பார்கள்.

நேற்றிலிருந்து  மண்டையை குடைந்த ஒரே கேள்வி…..எப்படி இவ்வளவு தைரியம் வந்தது. அதுவும் பெரும் புள்ளிகளோடு மோத.

விசாரித்த வரை கோதண்டராமன் தன் இருபத்தி ஐந்தாவது வரை ஒரு சாதரண மத்தியதர வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டு இருந்த போது, பெரும் செல்வந்தரின் மகள் தேவகியை காதல் மணம் புரிந்து இருக்கிறார்.

உறவு முறையில் மரியாதை இல்லாது போக. சொந்தத்தை பகைத்துக் கொண்டு ஊரு விட்டு ஊரு வந்து, தன் மொத்த சேமிப்பு, மனைவியின் நகை மற்றும்  வங்கி கடன் வைத்து பங்குதார்ரோடு ஆராம்பித்த இந்த ஓட்டல் ,பின் சூடு பிடிக்க.

பங்குதாரர்  தன் மகனோடு அமெரிக்காவில் செட்டில் ஆவதாக சொல்லி தன்  பங்கு பணத்தை வாங்கிக் கொண்டு சென்ற பின், அந்த ஓட்டலின் ஒரே முதலாளியாய்  கோதண்டராமன்.

இந்த குறுகிய காலத்தில்  அவர் வளர்ச்சியை பார்த்து மலைத்து போனவர்கள் ஏராளம். பாவம்  அவர் எப்படி இவ்வளவு சீக்கிரம் இந்த இடத்துக்கு வந்தார் என்று தெரிந்தால்…..

முடிந்தது இன்றோடு கோதண்டராமன்   இறந்து பதினோராம் நாள் காரியம். தந்தை இறந்ததில் இருந்து வாயே திறக்காக காயத்ரி, சந்தியா….

“என் அம்மா,  பூ மேலேயும் ,பொட்டு மேலேயும் கை  வைக்காதீங்க.” என்று சொன்னதோடு, கழுத்தில் இருந்த தாலியை காயத்ரி கழற்ற, சந்தியா   கால் மெட்டியை கழற்றினாள்.

“என்னடி இது  அநியாயமா இருக்கு….?” மோவாய் மீது கை வைத்து அங்கு இருக்கும் அனைவரும் பேச.

அதை எல்லாம் காதில் வாங்காது….. தன் இரு அத்தைகளையும் பார்த்த காயத்ரி…. “உங்க வேல முடிஞ்சுதா….? முடிஞ்சுதுன்னா இடத்த காலி பண்ணுங்க.” என்று சொன்ன காயத்ரி.

அங்கு சில பேப்பரை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்த  தங்கள் குடும்ப வக்கீல் சங்கரிடம் சென்று…

“ நான் சொன்னத ரெடி பண்ணிட்டிங்கலா…..?” என்று கேட்டவளிடம்.

“ரெடி பண்ணிட்டேன் காயூம்மா…..” என்று சொன்னவர். பின் தயங்கி …… “கொஞ்சம் யோசிச்சி பார்க்கலாமே……”

இவ்வளவு சொத்து அநாதை ஆசிரமத்துக்கும், முதியோர் இல்லத்துக்கும். அதுவும் தாங்கள் ,குடியிருக்கும் பங்களா உட்பட. மாற்றி எழுதி வந்த பேப்பர் தான் தன் கையில் இருப்பது.

கோதண்டராமனின் சொத்து மதிப்பு, குடும்ப வக்கீலாய் சங்கருக்கு தெரியும். கோதண்டராமன் ஏதோ செய்கிறார். அது வரை தான் சங்கருக்கு தெரியும். என்ன ஏது என்று தெரியாது.

எப்படி வந்து இருந்தாலும் இருவயது பெண்கள் எதுவும் வேண்டாம் என்று சொன்னது, ஏதோ சிறுபிள்ளை தனமாய் பட்டது. இப்போது எழுதி விட்டு பின் வருத்தப்பட  கூடாது என்று குடும்ப வக்கீலாய் சொல்ல.

ஒரே வார்த்தையில்….. “ அந்த பாவப்பட்ட பணம் வேண்டாம்.” காயத்ரி வக்கீலிடம் பேசியதை பார்த்த இரு அத்தைமார்களும் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்துக் கொள்ள அவர்கள் அருகில் செல்வதற்க்குள் பேசி முடித்து விட.

“ என் தம்பி செத்த சுவடு கூட இன்னும் போகல. அதுக்குள்ள வக்கீலிடம் சொத்து மதிப்பு பேசிட்டு இருக்கியா….?  இதுக்கு தான் எங்கல போ போன்னு விரட்டினியா…..”

அவர்கள்  சொத்தை பற்றி தான் பேசியிருப்பார்கள் என்ற அனுமானத்தில் பேசினார்கள்.

அவர்கள் பேச்சு காதில் விழாது போல் வக்கீலிடம் இருந்த பேப்பரில் அவர் குறியீடு போட்டு இருந்த இடத்தில் தன் கையெப்பம் இட்டு தன் தங்கையிடம் நீட்ட.

அவளும் கைய்யெப்பம் இட்டு தன் அன்னையிடம் நீட்டினாள். தேவகியும் இட்ட பின் வக்கீலிடம் கொடுத்து விட்டு.

“இனி இது சம்மந்தம்மா எங்கல தொந்தரவு செய்யாதீங்க.”

ஏற்கனவே அடுக்கி  வைத்திருந்த பெட்டியோடு  அந்த வீட்டை விட்டு மூவறும் வெளியேறினர்.

தன் அலுவலக நண்பர் சந்தோஷ் வெளியில் இருப்பதை பார்த்து அவன் அருகில் சென்றவள்.

“என்ன சந்தோஷ் வீடு ரெடியா…..?”

“ஆ  ரெடி. ஆனா வீடு.” பேச்சை முடிக்காது அந்த பெரிய பங்களாவின் பக்கத்தில் இருந்த கெஸ்ட் அவுஸை பார்த்த வாறே…

“உங்களுக்கு வசதி படாதும்மா…..”

“பரவாயில்ல சந்தோஷ். நான் கொடுத்த பணத்துக்கு அது மாதிரி வீடு தான் கிடைக்கும். நாங்க அட்ஜஸ்ட் செய்துப்போம்.” காயத்ரி வேலைக்கு  சென்றே நான்கு மாதம் தான் ஆகிறது.

அவளுடைய வருமானத்தை நம்பி இல்லாததால் இது வரை அலுவலகம் வங்கியில் போட்ட பணம் அப்படியே சேமிப்பில் இருந்தது.

அதை எடுத்து தான்  வீட்டுக்கு கொடுக்க வேண்டிய முன்தொகை, வீட்டுக்கு தேவையான  மளிகை சாமன், அத்தியாவசிய தேவையான படுக்கை அனைத்தும் வாங்கியது.

மீதம்  இருக்கும்   கைய்யிறுப்புக்கு சிறிய வீடு தான் கிடைக்கும்,  என்பது தெரிந்தே தான் அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தனர்.

சார்லஸ் கோதண்டராமனின் தற்கொலையை காவல்துறை  மேலும், மேலும் ,துருவாமல் பார்த்துக் கொண்டதோடு சரி.

பின் ஒரு பார்வையாளனாய் மட்டும் தூர நின்று பார்த்துக் கொண்டு இருந்தானே ஓழிய, காயத்ரியின் அருகில் செல்லவே இல்லை. ஏற்கனவே அவளின் இரு அத்தைகளின் பேச்சை கேட்டுக் கொண்டு தானே இருந்தான்.

தன் சொத்து முழுவதும் அன்று எழுதிக் கொடுக்கும் போது , அவளை அப்படியே இழுத்து அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்த எண்ணத்தை கட்டுப்படுத்தி நின்றுக் கொண்டு இருந்தவனுக்கு , அப்போது காயத்ரி முற்றிலும்  மாறுபட்டவளாய் தான் அவன் கண்ணுக்கு தெரிந்தாள்.

மொத்தமாக அவன் அவளை பார்த்தது மூன்று முறைதான். முதல் இரண்டு முறை மின்தூக்கியில் பார்த்த போது ,அந்த வயதுக்கே உண்டான ஆர்வபார்வையும், ஹீரோ ஹிசத்தில் மயங்கிய பார்வை தான் அவளிடம் கண்டான். மூன்றாவது சந்திப்பில் அதிர்ச்சி,  அவன் பார்த்த அந்த இரண்டு நிமிடத்தில் அவள் கண்ணில் அவன் பார்த்தது.

ஆனால் இப்போது அவள் கண்ணில் தெரியும்  உறுதி, நேர்மை,பிடிவாதம், முற்றிலும் புதுமையான காயத்திரி. முன்னை விட சார்லஸூக்கு இந்த காயத்ரியைய் தான் மிகப் பிடித்தது.

அதுவும் தன் சேமிப்பில் இருந்த சொற்ப பணத்தை வைத்து தன் நண்பனின் உதவியோடு வாழும் அவள் எளிய வாழ்க்கையில் மொத்தமாய் வீழ்ந்து தான்  போனான்.

“சார்லஸ் அவங்க இதே பில்டிங்குல தான் தினம் வந்துட்டு இருக்காங்க.” என்று சொல்லி விட்டு சரத் அவன் முகத்தை பார்க்க.

அவனோ “அதுக்கு என்ன….?”  என்பது போல் தான் அவன் பதில் பார்வையாய் இருந்தது.

“நீ கொஞ்சம் பேசினா அவங்களுக்கு ஆறுதலா இருக்கும்.” என்ற சொல்ல.

“ என்ன பார்த்தா அவளுக்கு அவள் அப்பா தான் நியாபகத்துக்கு வரும். வேண்டாம்.” என்று மறுக்க.

“அப்போ இப்படியே தான் இருக்க போறியா…..?காலை ஒன்பதரைக்கும், ஈவினிங் ஏழு மணிக்கும்,” அங்கு இருந்த ஜன்னலை காட்டி….. “இது வழியா தினம் அவங்கல பார்த்தா மட்டும் போதுமுன்னு,” ஆதாங்கத்துடன் கேட்க.

“அவ தங்கை படிப்பு முடியட்டும் சரத். நான் போய் பேசுறேன்.” சார்லஸின் இந்த பேச்சை சரத் ஏற்பதாய்  இல்லை.

“எனக்கு என்னவோ நீ காலம் கடத்துறியோன்னு தோனுது. அப்புறம் கை மீறி போய்ட்ட பிறகு வருந்திறதுல லாபம் இல்ல.”

சரத் பேச்சில் குழப்பம் உற்று …. “ நீ என்ன சொல்ற……”

“நான் என்ன புதுசா சொல்றதுக்கு இருக்கு….அது தான் நீங்க டெய்லி பாக்குறிங்கலே…. என்னவோ தொடுக்கு மாதிரி எப்போவும் காயத்ரி பின்னாடியே சுத்திட்டு இருக்கான்.” இப்போது சரத் என்ன சொல்ல வருகிறான் என்று புரிய.

“ஏய் சந்தோஷ் அவள் நண்பன்டா….வீடு அவன் வீடு பக்கத்தில் இருக்கு. அதான் ஒன்னா வர்றாங்க. ஒன்னா போறாங்க. அவளுக்கு எல்லா வகையிலும் துணையா இருக்கான்டா…இப்படி தப்பா பேசாதே….” தன் நண்பனை அதட்ட.

“அதே தான்  நானும் சொல்றேன். ஏன் காயத்ரிக்கு வீடு அவன் வீடு பக்கத்தில் பார்த்தான்…..?”

எங்கு தன் நண்பன் ஆசை பட்ட வாழ்க்கை அவனுக்கு கிடைக்காமல் போயிடுமோ என்ற பயத்தில் பேசினான்.

“ஏன்னா அவன் வீடு ஆபிஸ் பக்கத்தில் இருக்கு. அவளும் இதே ஆபிஸ் தானே….அது தான்.”

“நீ என்ன தான் சொன்னாலும் எனக்கு இது சரியா படல.” சரத்துக்கு சார்லஸ் தன் விருப்பத்தை சீக்கிரம் சொன்னால் நன்றாக இருக்கும் என்று கருதினான்.

“உதவி செய்யிறவங்க எல்லோரையும் சந்தேகப்பட்டா…..அப்புறம் யாரும் யாருக்கும் உதவி செய்ய மாட்டாங்க.” சார்லஸின் வார்த்தை முற்றிலும் உண்மை தான்.

இருந்தும்…..“ என்னவோ பண்ணு.” என்று ஒரு நண்பனாய் அவனை கடிந்து விட்டு தான் அகன்றான்.

“வெரி குட்….” என்று காயத்ரியை பாராட்டிய சேகர். அடுத்து செய்ய வேண்டிய வேலையை சொன்னவன்.

“ஏதாவது சந்தேகம் இருந்தா ஈமெயில் பண்ணுங்க காயத்ரி.” என்று சொன்னதுக்கு சரி என்று தலையாட்டி விட்டு சென்ற காயத்திரியின் இந்த இரண்டு மாதமாற்றம் அவனை வியக்க வைக்க தான் செய்தது.

“காயூ கேன்டினுக்கு போகலாமா…..?” சந்தோஷ்  அழைத்ததுக்கு,

“ நீங்க போங்க சந்தோஷ். இது கொஞ்சம் டேலி ஆக மாட்டேங்குது.” கணினியில் இருந்து கண்ணை அகற்றாது சொன்னவளை பார்த்து, சந்தோஷுக்கு மனம் வலிக்க தான் செய்தது.

அவளிடம் இருந்த குழந்தை தனம் மாறி, கொஞ்சம் வயதுக்கு ஏற்ற மாதிரி பக்குவம் வந்தால், நன்றாக இருக்கும் என்று கருதினான் தான்.

ஆனால்  இந்த அதிகப்படியான பக்குவத்தை ஏனோ அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

எப்படி வசதியாக வாழ்ந்த பெண். வேலை சேர்ந்த அந்த மூன்று மாதத்தில் வித விதமாக….

“ எங்க வீடு குக் இதே செய்தாங்க. கொஞ்சம் டேஸ்ட் பண்னி பாருங்க.” என்று வித விதமாய் கொண்டு வந்தது என்ன…..?

அதுவும் இல்லாது கேன்டின் வந்தால் தன்னுடன் வருவோருக்கும் சேர்த்து வைத்து அவள் கொடுத்தது என்ன…..? இப்போது தனக்கே பார்த்து பார்த்து செலவிடுவதை பார்க்கும் போது ,  மனம் கணக்க தான் செய்தது.

தேவி தன்னுடைய கைய்பையை எடுத்து கொண்டு, இன்னும் வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் காயத்ரியை பார்த்து…..

“காயூ டைம் ஆயிடுச்சி…..நீ அதிகப்படியா வேல பார்த்தா  சம்பளம் ஏத்தி கொடுக்க மாட்டாங்க. இது ஐ.டி கம்பெனி.” என்று சொன்னவளிடம்,

“நீ நைன் அவரில் முடிக்கும் வேலைய தான். நான் டென்னவர் ஆக்குறேன். நான் அதிகப்படி வேலை எல்லாம் செய்யல தேவி.”அதை  சாதரணமாக சொன்னாள்.

கேட்ட தேவிக்கு தான் ஒரு மாதிரியாகி விட்டது. காயத்ரி சொன்னது போல் படிப்பதில் இருந்தே அவள் கொஞ்சம் டல் ஸ்டுடெண்ட் தான்.

எல்லோருக்கும் ஒரு தடவை சொன்னால் புரிந்தது என்றால், இவளுக்கு இரண்டு தடவை சொல்ல வேண்டும். வேலை சேர்ந்த புதியதில் கூட இதே தான்.

மற்றவர்கள் கிண்டல் செய்தால்…..டேக் இட் பாலிஸி தான். ஆனால் இப்போது தன்னுடைய அசமஞ்சம் அவளின் வேலைக்கு இடஞ்சலாய் இருந்தது.

அதுவும் போன மீட்டிங்கில் வருடாந்திர சம்பள உயர்வுக்கு அவர்களின் வேலை திறன் பார்த்து தான், சம்பள  உயர்வு வழங்கப்படும் என்று சொன்னதில் இருந்து , வேலையில் தனக்கு ஏற்படும் சந்தேகத்தை சந்தோஷ், தேவி ,இவர்களிடம் கேட்டு கேட்டு முடித்து விடுவாளே தவிர, வேலையில் பெண்டிங் வைத்தது கிடையாது. அது தான் அவள் வேலை முடிக்க இந்த அதிகப்படியான நேரம்.

எப்போதும் கூட இருந்து அழைத்து செல்லும் சந்தோஹுக்கு இன்று அவனின் தங்கையைய் பெண்பார்க்க வருவதால், சீக்கிரமாக கிளம்பி விட்டான். கிளம்பும் முன் தேவிடம் காயூவை கூட  அழைத்து செல் என்று.

“வா காயூ…..” தேவி தன் வாட்ச்சை பார்த்து சொல்ல.

கணினியில் இருந்து பார்வையை உயர்த்திய காயத்ரி…..

“  என்ன சந்தோஷ் சொல்லிட்டு போனாரா…..நீ போ தேவி. என் வீடு பக்கம் பத்து நிமிஷத்தில் போயிடுவேன். உனக்கு ஒன்ஹவர் ஆகும்.” அவளை கிளம்ப சொன்னாள்.

தேவிக்கு கூட அதே தான். அப்போ நான் தூரம் போகனுமே…இந்த சந்து பக்கி வேற கூட அழச்சிட்டு போக சொன்னான். இவள் என்னனா…..இப்போ தான் மாங்கு மாங்குன்னு வேலை பாக்குறா…..

நாம உதவி செய்யலாமுன்னா….இது புது ப்ராஜெக்ட் நமக்கு எதுவும் புரியல. முழித்துக் கொண்டு இருப்பவளிடம், இப்படி  சொன்னதும்.

“நீ பத்துறமா போயிடுவியா…..?”

“ நான் என்ன சின்ன குழந்தையா…..?போ தேவி.”

காலம் இருக்கும் இருப்பில் சின்ன குழந்தைக்கே பாதுகாப்பு இல்லாத உலகில், வயது பெண்ணுக்கு என்ன பாதுகாப்பு…..? பாவம் அவள் அறியாது தேவியை அனுப்பி விட்டு தான் மட்டும் தனித்து இருந்தாள்.

 

Advertisement