Advertisement

அத்தியாயம்—5

“சரத்….” என்ற  சார்லஸின் அழைப்பில் கடந்த காலநினைவில் இருந்து வெளியில் வந்தவன். அவனின் முகம் பார்க்க…

ஏதோ சொல்ல வந்து தயங்குவது போல் இருப்பதை பார்த்து…. சார் ஏதாவது பிரச்சனையா……?” அக்கரையுடன்  கேட்க.

“ பிரச்சனை இல்ல.” திரும்பவும் தயங்கிய சார்லஸை  பார்த்த சரத்,

“சார்லஸ் ஏதாவது பிரச்சனையா….?”

நீண்ட வருடத்துக்கு பிரகான இந்த அழைப்பில் சரத்தை நிமிர்ந்து பார்த்த சார்லஸ்….” எனக்கு ஏதாவது பிரச்சனைன்னா தான் என் பெயர வெச்சி கூப்பிடுவலே….” என்று அதட்டியவனின் பேச்சை கண்டு கொள்ளாது,

“சார்லஸ்  என் கிட்ட இருந்து ஏதாவது மறைக்கிறியா…..?” என்று  அதட்டியவனை ஒரு ரசிப்பு தன்மையுடன் பார்த்தவன்.

“ மறைக்கிறேன் தான்.” என்று சொன்னதில் பதட்டமான சரத்.

“என்ன பிரச்சனை சார்லஸ்.”

“ நான் பிரச்சனைன்னு  எப்போ சொன்னேன்.” என்று  விளையாடிய சார்லஸை முறைக்க.

எழுந்து வந்து அவனை அணைத்துக் கொண்ட சார்லஸ்…. “பிரச்சனை தான் ஆனா அதுவா வரல. நானா தான் மாட்டிக்க விரும்புறேன்.” என்ற குழப்பமான பேச்சில் ….

சார்லஸை பார்க்க…. “ அந்த நகை கடை அன்னிக்கு லிப்ட்டுல ஒரு பொண்ண பார்த்தோமே…..” என்று இழுத்தவனின் பேச்சில் விஷயத்தை அறிந்துக் கொண்ட சரத்,

“ நாம இல்ல, நீங்க. நீங்க மட்டும் தான் பார்த்திங்க. அதுக்கு முன்னாடி கூட இதோ இந்த கட்டிடத்தின் லிப்ட்டுல கூட பார்த்திங்க.” என்று நினைவு படுத்தியவனை, அங்கு இருந்த பேப்பர் வெயிட்டால் அடிப்பது போல் பாவ்லா செய்தவன் ,

பின் சிரித்துக் கொண்டே….. “பாக்கல பாக்கலேன்னு  என்னம்மா நோட் பண்ணி வெச்சி இருக்க….” என்று கிண்டல் செயதவனுக்கு பதிலாய்..

“ அந்த காட்சிய நான் மட்டுமா நோட் செய்தேன்.  நம்ம கூட வந்த எல்லோரும் தான் நோட் செய்தோம். அந்த நேரத்திலும் அந்த பொண்ணு என்னம்மா ரொமான்ஸ் பண்ணுது. நீங்க கண்ணு காட்டுறதும், அவங்க புரிஞ்சு அது படி செய்யிறதும், லைலா, மஜூனு கெட்டாங்க போங்க….” என்று வாரியவனின் பேச்சில் சிரிப்பு வந்தாலும் அதை அடக்கியவனாய்…

“நீ கூட தான் என் கண் காட்டலை புரிந்து அவனை சுட்ட.”

“உங்க  கூடவே இருந்து வளந்தவன் நான். உங்க  உடல் மொழிக்கு கூட எனக்கு அர்த்தம் விளங்கும்.” நண்பனாக உன்னை புரிந்துக் கொண்டவன் என்ற திமிரில் சரத் பேச.

அந்த திமிர் பேச்சை ரசித்தவனாய்….. “ இனி கூட வருவது அவன்னு என்  கண் அசைவ கரைக்ட்டா கேச் பண்ணிட்டாளோ…..?” சார்லஸ் பேசிய விளையாட்டு பேச்சிலும், அப்பெண்  மீது வைத்த பிரியம் சரத்துக்கு புரிய தான் செய்தது.

“விசாரிச்சிட்டலாமா….?” சரத் எதை கேட்கிறான் என்று புரிந்த சார்லஸ்.

“அந்த அமைச்சர் பிரச்சனைய முடிச்சிடலாம். ஒன்னும் ஒரு நாள் தான் இருக்கு. மனுஷன் காலையில் இருந்து நாளு போன் பண்ணிட்டாரு.” என்று  சொன்ன சார்லஸிடம்.

“பொண்ணு விஷயம் இல்ல இருக்க தான் செய்யும். ஆனா இந்த அக்கர மத்த  வீட்டு பொண்ணுங்க மேலையும் இருந்தா நல்லா இருக்கும்.

அந்த கட்சியில இருக்க அல்ல கை, நொள்ள கை, எல்லாம் கட்சி பேரு சொல்லிட்டு  பொண்ணுங்க மேல எல்லாம் கை வெச்சி ரொம்ப அக்கிரமம் செய்யிறாங்க.”

சரத் சொன்ன அனைத்துக்கும் ஒரு “ம்….” கொட்டியவன். கடைசியாக….. “உணர வெச்சிடலாம்.” என்று ஒரு மாதிரி கண் சுறுக்கு சொன்னவனிடம், திரும்பவம்…

“அவங்க பத்தி….”

“அமைச்சர் விஷயம் முதல்ல முடிச்சிடலாம் சரத். அப்போ தான் அவ கூட கொஞ்சம் ரிலாக்ஸா பேச முடியும்.”

சார்லஸின் இந்த அவதாரம் சரத்துக்கு புதியது. சிறு வயதில் இருந்தே எதையோ துரத்துவது போல் தான் அவன் வேகம் இருக்கும். வேடிக்கை பேச்சு கூட இருக்காது. ஏதோ ரோபோ என்பார்களே அது போல் தான் நடந்துக் கொள்வான்.

சரத்தே…. “ஏன்டா நாம அநாதை தான் அதுக்குன்னு ஜாலியாவே இருக்க கூடாதுன்னு இருக்கா என்ன….?” என்று கேட்டால்

எதுவும் சொல்லாது சென்று விடுவான். அவனை பற்றி தெரிந்ததில் அவனின் செயலுக்கு உண்டான காரியம் பிடிபட. அனைத்துக்கு அவனுக்கு பக்க பலமாய் இருந்தான்.

சார்லஸின் இந்த மலர்ச்சியான முகத்தை பார்த்து எப்படியாவது அந்த பெண்ணை இவனுக்கு கொடுத்து விட வேண்டும் ஒரு நண்பனாய் ,சார்லஸுக்கு செய்ய வேண்டியதை செய்ய துடித்தான்.

“காயூ வாடி போகலாம்.”  என்று நச்சரித்தவளின் பேச்சை காதில் வாங்காது, அந்த மாஸ் படத்தை வாய் பிளந்து பார்த்துக் கொண்டு இருந்தவளின் மீது தலையணை எடுத்து வீசியவள்.

“இப்போ வர்றியா இல்லையா…?” என்று அவள் தொன தொனப்பில்  …. “கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா!!!!!1டையலாக் கேட்கவே மாட்டேங்குது.” அவள் பார்த்திருந்த படத்தை காட்டி சொல்ல.

“ ஏன்டி உனக்கே நீ பேசுறது அநியாயமுன்னு தோனல. நீ பார்த்து பார்த்து எனக்கே அந்த படத்தின் மொத்த டையலாக் மனப்பாடம் ஆயிடுச்சு.” என்று திட்டுயவள்.

திரும்பவும் “போகலாமா….” கொஞ்சலாக கேட்க.

“ம் போகலாம்.” என்று சொன்னதும் . சந்தோஷத்துடன்…. “ஆ….” என்று  சந்தியா கத்த….

“ஈவினிங் போகலாம்” என்று சொன்னதும் காத்து போன பலூன் மாதிரி மூஞ்சை தொங்க போட்டுக் கொண்டு சரி ஸ்டேடீ  லீவில் சாப்பிடும் வேலையாவது பார்ப்போம் என்று…

“மம்மீ…..” என்று அழைத்துக் கொண்டு சமையல் அறை நோக்கி சென்றாள்.

அங்கு அடை சுட்டுக் கொண்டு இருந்த தேவகியிடம் வம்பு வளர்த்துக் கொண்டே….தவ்வாவில் சுட்டுக் கொண்டு இருந்த அடையைய் நேரிடையாக வாய்க்குள் திணித்தவளின் கையில் தோச கரண்டியால் ஒரு போடு போட்டவள்.

“தட்ல வெச்சி சாப்பிடு. அது என்ன தவ்வாவை எச்ச படுத்துறது.” எல்லா வற்றிலும் சுத்தத்தை பார்க்கும் தேவகி  சந்தியாவை கடிய.

ஷிங்கில்  குவிந்து இருக்கும் பாத்திரத்தை காட்டி….. “ பாவம் வேலக்காரம்மா ஏற்கனவே நிறைய பாத்திரம் இருக்கு. நாமும்  ஏன் ஒரு தட்ட போடனும் என்ற நல்ல எண்ணத்தில் அப்படியே சாப்பிட்டேன். “ தான் செய்த செயலுக்கு நியாயம் கற்பித்தவளை…..

“உன்னை…..” மகளின் பேச்சில் சிரிப்பு வந்தாலும், அதை காட்டாது மிரட்டுவது போல் பேசிவளை…. “மம்மீ உங்களூக்கு இந்த டெரர் லுக்கு எல்லாம் செட்டாகல.”

திரும்பவும் தவ்வாவில் இருந்த அடையை வாய் நிறைய திணித்துக் கொண்டு ஓடும் மகளை மகிழ்ச்சி பொங்க பார்த்தார்.பாவம்  அவருக்கு தெரியவில்லை இந்த குடும்பத்தின் மகிழ்ச்சி இன்னும் கொஞ்ச நேரத்தில் சிதற போவதை.

ஹாலுக்கு வந்த சந்தியா அங்கு தந்தை  வீட்டில் இருப்பதை பார்த்து அவர் அருகில் சென்றவள் அவர் தோளை  கட்டிக் கொண்டு…

“அப்பா இன்னிக்கி ஓட்டலுக்கு போகலையா….?” ஏதோ யோசனையில் இருந்த கோதண்டராமன்,

“இல்லை…..” என்று  தலையாட்ட.

“அப்போ ஈவினிங் ஷாப்பிங்  எங்க கூட நீங்களும் வர்றிங்கலா…..?”

வெளியில் சுற்ற மிகவும் விருப்பமான சந்தியா எப்போது நேரம் கிடைத்தாலும் ஷாப்பிங், பீச், உறவினர்கள் வீடு, என்று எங்காவது போய் கொண்டு இருக்க வேண்டும். இங்கு எல்லாம் குடும்பத்தோடு தான் செல்ல விரும்புவாள். நட்பு காலேஜூடு தான். சந்தியாவுக்கு குடும்பம் தான் உலகம்.

டென்ஷனின் இருந்த கோதண்டராமன்….. “எப்போ பாரு ஊரு சுத்தனும்.” தன்னிடம் முதன் முறையாக கடிந்து பேசிய தந்தையைய் யோசனையுடன் பார்த்த சந்தியா, ஏதோ வாய் திறக்கும் வேளையில்…

திபு ….திபு….வென வந்த ஆட்களை பார்த்து தன்  கணவர் சூடோடு அடை சாப்பிடட்டும் என்று எடுத்துக் கொண்டு வந்த தட்டை அப்படியே கீழே போட்டு விட.

நெற்றியில் வழிந்த வியர்வை துளிகளை துடைக்க கூட தோனாது எழுந்து நின்ற கோதண்டராமனின் அருகில் வந்தவர்கள் பக்கத்தில் சந்தியா இருப்பதை பார்த்து.

“உன் பொண்ணா…..?” கேட்டது சாட்சாத் நம் சார்லஸ் தான்.

லிப்ட்டில் அவன் கவனம் முழுவதும் காயத்ரி மேல் தான் இருந்தது. அதனால் சார்லஸ் சந்தியாவை கவனிக்கவில்லை.

ஆனால் சரத் இந்த பெண்……என்று அவன் சிந்தனை ஓடும் போதே சார்லஸ் அடுத்து…

“உனக்கு இரண்டு பொண்ணுல……” என்று கேட்டவன் கோதண்டராமனின் பதிலைய் எதிர் பாராது.

சரத்திடம்….. “சரத் இப்போ எல்லாம் அடக்குவது போல  B.F தான் வெளிநாட்டில் க்ராக்கி. இந்த கேமிரா வைக்கிறது, அப்புறம் அவங்கல மிரட்டி பணம் வாங்குறது அத விட பணம் சம்பாதிக்க இது ஈசியா இல்ல.” அவன் பேச்சு சந்தியாவுக்கும், தேவகிக்கும், புரியவில்லை.

ஆனால் கோதண்டராமன்  …..முகம் வெளிறி…. “ வேண்டாம் என் குடும்பத்தை விட்டுடூ. அவங்களுக்கு ஒன்னும் தெரியாது.” கைய் கூப்பி கெஞ்சிய கோதண்டராமனின் சட்டையைய் பிடித்து…

“ ஓ உனக்கு வந்தா ரத்தம். மத்தவங்களுக்கு வந்தா தக்காலி சட்னீயா……?”

கோதண்டராமன் நெற்றியில் இருந்த பட்டையை சுட்டு காட்டி….. “செய்வது முள்ளமாறி தனம் ஊரை ஏய்க்க பட்டைய தீட்டுறது.” சார்லஸ் இது வரை யாரிடமும் இப்படி நீட்டி பேசியது கிடையாது.

அவன் பேச்சி வெட்டு ஒன்று துண்டு இரண்டாக தான் இருக்கும். சந்தியாவையும் தேவகியையும் பார்த்து….என்ன மாதிரி குடும்பத்த வெச்சிகிட்டு என்ன மாதிரி காரியம் செய்து இருக்கான்.

அதுவும்  இந்த மரியாதையான தோற்றத்தை வைத்துக் கொண்டு….நினைக்க நினைக்க போட்டு தள்ளி விட தன் ஆட்களுக்கு  சமிஞ்சை காட்ட.

அதற்க்கு ஏற்றார் போல…..ஒருவன் தயார் நிலையில் தன் கன்னை எடுக்க. வேண்டாம் என்று தடுத்த சரத்.

“சார்லஸ்…..” அவன் குரலில் தெரிந்த மாறுபாட்டால் அவனை பார்த்தவன். அவன் மேல் நோக்கி பார்ப்பதை பார்த்து அவனை தொடர்ந்து பார்வை செலுத்தியவனுக்கு……

அதிர்ச்சி…. அந்த வார்த்தை கூட இல்லை. அதற்க்கு மேல் என்று சொல்லலாம். அந்த நிலையில் தான் காயத்ரி இருந்தாள்.

கீழே ஏதோ சத்தம் கேட்டதில் தான் பார்க்கும் படம் தடைப்பட “சீ….நம்ம மாஸு அந்த வில்லன என்னம்மா கேப்பாரு கேள்வி. இந்த நேரத்தில்.” என்று சிலுப்பிக் கொண்டு வந்தவளுக்கு காதில் விழுந்த பேச்சில் அப்படியே விக்கித்து நின்று விட்டாள்.

அதற்க்கு குறையாத நிலை தான் சார்லசுக்கும். கோதண்டராமனுக்கு இரண்டு மகள் சேகரித்த விவரம். அதில்…

அப்போது கூட அவனுக்கு ஒரு நப்பாசை…ஒரு சமயம் இவன் பொண்ணோட பிரண்டா கூட இருக்கலாம் இல்லையா…..?எதிர் பார்ப்போடு கோதண்டராமனிடம்.

மேல் நோக்கி கை காட்டி…. “அது உங்க பொண்ணு இல்லலே…..” சார்லஸின் பதட்டத்தை எல்லாம் பார்க்கும் சூழ்நிலையில் கோதண்டராமன்  இல்லை.

திரும்பவும் கை கூப்பிய கோதண்டம்….. “அவள ஒன்னும் பண்ணிடாதிங்க.” என்ற அவர் குரல் நடுக்கத்தில் பொட்டில் அடித்தது போல் விளங்கியது உண்மை.

எதுவும் சொல்லாது கை நீட்ட…..

தன் அறைக்கு சென்று  எடுத்து வந்த பொருளை கோதண்டராமன் சார்லஸின் கையில் வைத்தது. ஒரு நிமிடம் அதை உற்று பார்த்தவன் பின்….

“வேறு ஏதாவது பிரதி…..”

“இல்ல இல்ல. இது தான்.” பதட்டத்துடன் பதில் அளித்தவனை போட்டு தள்ளும் வேகம் பிறந்தாலும், முதன் முறையாக தன் மனசாட்ச்சிக்கு எதிர் பதமாய் முடிவெடுத்தவன் அவ்வீட்டை விட்டு வெளியேறினான்.

முதல் பார்த்த காயத்திரியின் அதிர்ந்த முகம். பின் அவளை அந்த வீட்டை விட்டு வெளியேறும் வரை நிமிர்ந்து பார்த்தான் இல்லை.

“சார்லஸ் போதும். ரொம்ப ஓவரா போகுது.” அவன் குடித்துக் கொண்டு இருந்த மது பாட்டிலை பிடுங்க.

அதை அவன் கையில் கொடுக்காது…. மேலும் ஒரு மிடர்  தன் வாயில் ஊத்திக் கொண்டவன்.

“சரத் நீ வீட்டுக்கு போ. டைமாகுது பாரு.” தன் வாட்ச்சை பார்த்தவன். அதில் உள்ள நேரத்தை பார்க்க முடியாது மதுவின் போதை கண்ணை மறைக்க.

“அது தான் நானும் சொல்றேன் சரத்.  டைமாயிடுச்சி. நான் இங்கேயே தங்கிக்கிறேன்.”

எதிரிகள் சூழ இருப்பதால் யார் எங்கு இருந்து தாக்குவார்கள் என்பது தெரியாது. அதனால் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

எந்த போதையும் நம் தன்நிலையை மறக்க அடிக்க கூடாது. இதை சார்லஸ் தான் சரத்துக்கு சொன்னது. ஆனால் சொன்னவனே அந்த நினைவு இல்லாது இருக்க.

அவனை தனியாக விட்டு விட்டு செல்ல ஏதோ ஒரு தயக்கம் சரத்துக்கு, அந்த பங்களா சுற்றியே ஐம்பது பேர் எப்போதும் காவல் காத்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

ஆனால் பணம் என்று வந்து விட்டால்,  நம் பக்கத்தில் இருப்பவர்கள் கூட துரோகியாக மாற வாய்ப்பு இருக்கிறது.

போதையில் தன்நிலை மறந்து  வீழ்ந்தவனை துணைக்கு ஒரு ஆளை அழைத்து அவன் படுக்கை அறையில் படுக்க வைத்து விட்டு ஹாலுக்கு வந்தவன் முகத்தில் முழுவதும் சிந்தனையின்  கோடுகள்.

சார்லஸ் சென்றவுடன்  யாரின் முகத்தையும் நிமிர்ந்து பார்க்க முடியாது தன் அறைக்கு செல்ல பார்த்தவரை….

தேவகியின்…. “ B.F னா என்னங்க…..?”

“தேவி…..” கணவனின் அழைப்பு காதில் விழாது போல.

“அத நம்ம பொண்ண வெச்சி எடுக்கனுமுன்னு  வந்தவன் எதுக்கு சொன்னான்…..? அத கேட்டு அவனின் சட்டைய  பிடிக்காம அவன் காலில் விழுவது போல கெஞ்சிட்டு இருக்கிங்க….? அப்போ அதோட பெரிய தப்பு உங்க கிட்ட இருக்கு…..? என்ன தப்பு…..?”

மனைவி கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காது இருந்தவரின் சட்டையை பிடித்த தேவகி….

“என்ன செஞ்சி இருக்கிங்க…..?” ஆவேசத்துடன் கத்த.

தன் சட்டையில் இருந்து மனைவியின் கை எடுத்த கோதண்டராமன்….சிலை போல் அப்படியே விக்கித்து நின்ற  பெரிய மகளை மேல் நோக்கி பார்த்தவர்.

பின் சந்தியா, மனைவியை பார்த்து விட்டு தன் அறைக்கு செல்பவரை தடுக்க பார்த்த தேவகியை தடுத்த சந்தியா…

“வேண்டாம்மா ….பொண்ணுங்க எதிர்க்க சொல்றா மாதிரி அவர் காரியம் செஞ்சி இருக்க மாட்டாரு, விடுங்க.” தன் அறை  கதவை சாத்தும் போது சந்தியாவின் இந்த பேச்சு கோதண்டராமனின் காதில் விழுந்தது.

அன்று நகை கடையில் சரத் சுட்டது அந்த கடை முதலாளி. அடுத்த நாள் பத்திரிக்கையில் பிட்டு பிட்டு  வைத்திருந்தது.

அடையாளம் தெரியாத  மர்மநபர்களால்….*****நகைக்கடை முதலாளி சுட்டு கொலை.

காரணம்…அந்த கடையில் வேலை பார்க்கும் பெண்கள் பெற்றோருக்கு கடிதம் எழுதி விட்டு  தொடர்ந்து காதலனோடு ஓட்டம். ஆனால் உண்மை ….?

தங்கத்தையும்,வைரத்தையும் இறக்குமதி செய்தவன். அதை அணிந்து அழகு பார்க்கும் பெண்களை வெளிநாட்டுக்கு  ஏற்றுமதி செய்து வந்ததே காரணம்.

அதை படித்த காயத்ரி, சந்தியாவிடம்….”பார்த்தியா…பார்த்தியா நான் அப்போவே சொல்லலே ஏதாவது காரணம் இல்லாம சுட்டு இருக்க மாட்டாங்கன்னு. நீ தான் அவர வில்லன் ரேஞ்சுக்கு பேசிட்டு இருந்த.” என்று சிலாகித்து கூற.

அவள் படித்துக் கொண்டு இருந்த பேப்பரை அவளிடம் இருந்து பிடுங்கிய சந்தியா….. “அவன் நல்லவனாவே இருக்கட்டும். அந்த நல்லவன் ஏன் அவனை குறிப்பிடாம மறஞ்சு செய்யிறாரு.” என்று கேள்வி கேட்டவளுக்கு பதில் சொல்லாது திரு திரு என்று முழித்த காயூவின் தலையில் குட்டிய சந்தியா,

“என்ன தான் நியாயம் இருந்தாலும், இவன் செய்தது சட்ட விரோதம்.” என்ற சந்தியாவின் பேச்சில் மற்றதை விட்டு விட்டு…

காயத்ரி…. “அவன்னு மரியாதை இல்லாம சொல்லாத சந்தியா….” அது தான் முக்கியம் என்பது போல் தன்னை திருத்திய காயூவை இது எல்லாம் திருந்தாத கேசு என்று  விட்டு விட்டாலும், சந்தியாவுமே….அன்று கல்லூரியில் கூட ஏதோ பெண் விஷயத்தில் தான் தன் தமிழ் சர் அடிவாங்கியது நியாபகத்தில் வந்தது. இருந்தும் இவர்கள் போல் இருப்பவர்களை  சினிமாவில் பார்த்து ரசிக்கலாமே தவிர நிஜத்தில் …சந்தியாவின் பதில் வேண்டாம் என்பதே…

ஆனால்  தன் தந்தையை  மிரட்டி….கண்டிப்பாக இதுவும் பெண்கள் விஷயம் தான். அதுவும் உனக்கும் பெண் அவன் பேச்சில், பின் கடைசியாக அப்பா கொடுத்த பொருள்.

அவன் கேட்ட வேறு ஏதாவது காபி இருக்கா….? இரண்டு, இரண்டு நான்கு. அது கூட்டினாலும் சரி, பெருக்கினாலும் சரி.

கடவுளே பார்த்தாலே கை எடுத்து கும்பிடும் தோற்றத்தில் இருக்கும் தன் தந்தையா….?

அடுத்து அவள் யோசனை எதிலும் செல்ல விடாது நகை கடையில் கேட்ட அதே ஒலி தந்தையின் அறையில் இருந்து.

 

Advertisement