Advertisement

அத்தியாயம்—4

“சர் …” என்ற அழைப்புக்கு, ஏதோ கனவுலகில் இருந்தது போல விழித்த சார்லஸ், “என்ன சரத்…?” என்று கேட்க,

“அந்த அமைச்சர் பிரச்சனை….” என்று இழுத்தவனிடம், “ம்…” நியாபகம்  இருக்கு .” என்ற பதிலே சரத்துக்கு போதுமானதாக இருக்க , அதனால் தன்னிடத்துக்கு போக பார்த்தவனிடம்…

“சரத்….” என்று அழைத்து விட்டு ஒரு வித தயக்கத்துடன் தன்னை பார்த்த சார்லஸின் இந்த தோற்றம் சரத்துக்கு புதியது.

சரத் தான் வளர்ந்த அநாதைவிடுதியில் தான், சார்லஸை  தன் எட்டாவது வயதில் பார்த்தான். அந்த வயதிலேயே அவனின்  தோற்றத்தில் பணக்காரத்தனமே மிகுந்து காணப்பட்டது. ஒரு விபத்தில் தன் பெற்றோர் இறந்து விட்டனர், என்று அவனே வந்து தான் சேர்ந்தான்.

சரத்துக்கும், சார்லஸுக்கும் ஒரே வயது என்றதினாலா…இல்லை இருவரும் பயம் என்பதே அறியாது அங்கு நடக்கும் அக்கிரமத்தை தட்டி கேட்டதாலோ, இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் ஏற்பட்டது.

சார்லஸ் அடிக்கடி சரத்திடம் சொல்லும் வார்த்தை …. “நான் போகும் போது உன்னையும் கூட்டிட்டு  போவேன்.” என்று,

அப்போது எல்லாம்  “இங்கு இருந்து நம்ம கூட்டி போக ஒரு சாம்ராஜ்ஜியம் இருப்பது போல என்ன ஒரு பில்டப்பு. படிப்பு முடிஞ்சா ஏதோ வேல தேடி இங்கு இருந்து போக வேண்டியது தான்.

என்ன ஒன்னு நீயும், நானும், ஒன்னா வேனா தங்கலாம்.” என்ற சரத்தின் பதிலில் ஒரு மர்மபுன்னகை மட்டுமே சார்லஸ் முகத்தில் தோன்றும்.

சார்லஸ்  சேர்ந்த அடுத்த நாளே, அவனின் படிப்பு, அவன் விரும்பும் எந்த செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று ஒரு ஸ்பான்ஸர் சொல்லி விட.

சார்லஸ் படிப்போடு , துப்பாக்கி சுடுதல், அனைத்து சண்டை பயிற்ச்சியும் கற்றான். அவன் கூடவே இருந்த தன்னையும் பயல வைக்க முயல.

அந்த இல்லத்தின் நிர்வாகி “உனக்கு மட்டும் தானே ஸ்பான்ஸர் இருக்கு அவனுக்கு இல்லை.” என்று மறுத்ததும், தன் முக வாடலை பொறுக்க முடியாது, “கவலை படாதே நாளையில் இருந்து நீயும் என்னுடன் கத்துப்ப.” என்ற சொல்லுக்கு ஏற்ப.

சார்லஸின் ஸ்பான்ஸர் அடுத்த நாளே… “சார்லஸின் நண்பனுக்கும் நானே ஸ்பான்ஸர் செய்கிறேன்.” என்று சொன்னதும், அன்று அவன் கூட நிழல் போல தொடர்ந்தவன் இன்று வரை அவனின் அனைத்து விஷயத்துக்கும் துணையாக நிற்கிறான்.

சரத் கிண்டலாக நினைத்தது போல, சார்லஸுக்கு ஒரு பெரிய சாம்ராஜ்ஜியம் தான் காத்துக் கொண்டு இருந்தது.அந்த ஆசிரமத்தை விட்டு வரும் போது சரத்தின் கை பிடித்து தான் வெளியேறினான்.

ஆனால் வெளியேறிய சூழ்நிலை, இன்று நினைத்தால் கூட சரத்தின் ரத்தம் கொதிக்கும், எப்படி…? சிறுமியர்களை இவர்களால் சீரழிக்க முடிகிறது….?

அவன் வளர்ந்த ஆசிரமத்தில் இருபாலரும் இருந்தனர். ஐந்து வயது வரை ஒன்றாக இருக்கும் ஒரு கட்டித்தில் வளர்ந்தாலும், ஆறுவயதுக்கு மேல் தனி தனியாக தங்க  ஒரு பெரிய கட்டிடம் இருந்தது.

இரு கட்டிடத்துக்கு நடுவில் பெரிய சுவர்.அந்த சுவர் அவர்கள் மனதில் இல்லை. எந்த வேற்றுமையும் இல்லாமல் தான் வளர்ந்தார்கள்.

அந்த நாள்…..சார்லஸும், சரத்தும் பி.காம் கடைசியாண்டு படித்துக் கொண்டு இருந்த சமயம். அடுத்த நாள் தேர்வுக்கு  பன்னிரெண்டு வரை படிக்கலாம் என்ற முடுவோடு படித்து விட்டு படுக்கும் சமயத்தில், பெண்கள் தங்கும் பகுதியில் இருந்து ஏதோ சத்தம்.

தனக்கு மட்டும் தான் கேட்கிறதா….?என்று சார்லஸை பார்த்தவனுக்கு, டார்ச் லைட்டோடு வெளியேறும் சார்லஸை பார்த்து அவனோடு பக்கத்து கட்டிடத்துக்கு போக.

அந்த காவலாளி… “தம்பி இந்த சமயத்தில் பசங்க போக கூடாது.” என்று உள்ளே விட மறுத்தவனிடம்.

“அண்ணா ஏதோ சத்தம் கேட்குதுன்னா…?” அதற்க்கு அசால்ட்டாய்… “பொம்பள பிள்ளைங்கலே ஏதோ பூனை பாத்து கூட பயந்து கத்துங்க. நீ போங்க தம்பி.” இரண்டு பேரை விரட்டுவதிலேயே குறியாக இருந்தான்.

கேட்டுக்கு உள்ளே விலை உயர்ந்த கார்களின் எண்ணிக்கையை பார்த்த வாறே, தங்கள் இடத்துக்கு நோக்கி நடந்துக் கொண்டு இருப்பவனோடு வந்த சரத்.

“சார்லஸ் அங்கு நிறைய காரு இருக்கு.”

“ஆ நானும் பார்த்தேன்.” என்று தங்கள் கேட்டை அடைந்ததும் ,இரண்டு சுவருக்கும் இடையில் இருந்த மரத்தில் ஏறியவனின் நோக்கம் புரிந்து , அவனும் அவன் பின் ஏறி  பெண்கள் பகுதிக்கு சென்றான்.

சத்தம் படுக்கும் இடத்தில் இருந்து வராது, வரவு, செலவு, பார்க்கும் அறையில் இருந்து வரவும் அந்த அறையின் ஜன்னலில் பார்த்தவர்களுக்கு அங்கு ஒருவரும் காணப்படவில்லை.

ஆனால் சத்தம் இங்கு இருந்து அதிகமாக கேட்கிறதே, என்று இருவரும் யோசிக்கும் வேளையில், கணக்கு புத்தகம் வைக்கும் பீரோவை தள்ளி அந்த பக்கம் இருந்த கதவின் வழியே விட்டு வந்தவனை, தோட்டத்தில் இருந்த விளக்கின் மங்கிய ஒளியில் தெரிந்த உருவம் அவனை அந்த ஏரியா கவுன்சிலர் என்று காட்டி கொடுத்தது.

அவன் கதவு திறக்கவும், அவன் பின் ஓடி வந்த பதிமூன்று வயது சிறுபெண் …. “வேண்டாம் அய்யா வலிக்குது. ரொம்ப வலிக்குது.” என்று அழுதவளின் கன்னம் தொட்டவன்.

“இப்போ தானே புதுசா பூத்து இருக்க. வலிக்க தான் செய்யும். போக போக சரியா ஆயிடும்.” என்று சொல்லிக் கொண்டே அக்குழந்தையின் அந்தரங்க பகுதியை  தொட.

அந்த அறையில் இருந்து வந்த இன்னொருவன், “ போதும், போதும் எங்களுக்கும் கொஞ்சம்  கொஞ்சம் மிச்சம் மீதி வைப்பா….”

“இன்னோ இரண்டு குட்டி உள்ளே இருக்கேப்பா, எப்போவும் நான் பாக்குறது தான் உனக்கு வேண்டுமா…?”

“ஆ அது சமஞ்சி இரண்டு வருஷம் ஆனதுங்க. அதுவும் பத்து பதினைஞ்சு தடவ வந்து போயிட்டேன். இது போன மாசம் மலர்ந்த புது பீசு இல்லையா….?” என்று சொல்லிக் கொண்டே  அந்த பெண்ணை திரும்பவும் வந்த கதவு வழியே தூக்கிக் கொண்டு சென்றவனை பார்த்து…

“பார்த்துடா பதுசா நடந்துக்க. போன வருஷம் போல செத்துட்டா,  அந்த மறைக்க வேற ரொம்ப கஷ்டப்படனும்.” என்று அறிவுரை கூறியவன், அந்த பீரோவை முன் இருந்தது போல் நகர்த்தியவனுக்கு என்ன தோன்றியதோ…..

சார்லஸ், சரத், இருந்த ஜன்னல் பக்கம் பார்வை செலுத்தியவன் இவர்களை பார்த்து விட்டு….

“டேய் கந்தா ,கந்தா….” என்று கத்தியதும், வாட்ச் மேன் ஓடி வரும் சத்தத்தில் சரத்தும், சார்லஸும் தப்பிக்க பார்க்க, அதற்க்குள்  அந்த கந்தன் இவர்களை பார்த்து குரல் கொடுத்ததுக்கு எங்கு இருந்து தான் ஆட்கள் வந்தார்களோ, வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் ,அடியாட்களின் உருவம் கொண்டு இவர்களை துரத்த,

சரத் இன்று நாம் செத்தோம் என்று நினைக்கும் போது துப்பாக்கியின் சத்தம் கேட்டு “அய்யோ சார்லஸ்.” என்று அலறி திரும்பியவன் அதிர்ச்சியுடன் அப்படியே சமைந்து நின்றான்.

அவன் பயந்த்து போல் அவர்கள் சார்லஸை சுட வில்லை. சார்லஸ் தன்னை துரத்தியவர்களின் ஒருவனின் காலை குறி பார்த்து சுட்டதில் மற்றவர்கள் பயந்து போய் அப்படியே நின்று விட.

சார்லஸ் இழுத்த இழுப்புக்கு ஓடி வந்தவனுக்கு மனதில் இது தான் ஓட்டியது. எப்படி சார்லஸ் கையில் துப்பாக்கி வந்தது….? அதுவும் இரவு  நேரத்திலும் வைத்துக் கொண்டு இருக்கிறான் என்றால்….

 

அடுத்த அதிர்ச்சியாக, அவனிடம் இது வரை பார்த்தே இராத போனை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தவன்.

“அங்கிள்” என்று அழைத்து தாங்கள்  ஓடி வரும் இடத்தின் பெயரை சொல்லி விட்டு வைத்தவனின்    இழுத்தவனின் கை உதற ,

“சரத் சொல்ற எல்லாம் உன் கிட்ட சொல்றேன். ஆனா இப்போ அதுக்கான நேரம் இல்ல. நாம தாமதிக்கிற ஒவ்வொரு நொடியும் நம் உயிருக்கு ஆபாத்து என்பதை விட, இந்த அக்கிரமம் இன்னும் தொடர்ந்து நடந்துட்டு இருக்கும். சின்ன சின்ன பசங்க.”

அந்த பேச்சில் இருந்த உண்மையில் எதுவும் பேசாது சார்லஸோடு கொஞ்சம் நேரம் ஓடும் முன்பே அவர்கள் அருகில் படகு போல் கார் வந்து நிற்க.

பின் பக்கம் தன்னை தள்ளி  விட்டு ,தானும் ஏறியதும்… ட்ரைவரிடம்…. “அடையார் பங்களாவுக்கு போங்க.” என்று சொல்லி விட்டு கண்ணை மூடியவனிடம், சரத்  அதற்க்கும் மேல் எதை பற்றியும் கேட்காது, ஏதோ மர்ம கதை பார்ப்பது போல் பார்க்க ஆராம்பித்தான்.

அவன் சொன்ன இடம் வந்ததும் அந்த பங்களாவை பார்த்து, சென்னையில் இது போல் ஒரு இடமா….? அவ்வளவு காஸ்ட்லியான இடத்தில் அவ்வளவு பெரிய தோட்டத்தோடு  ஒரு பங்களா…யாரோடது….?

சந்தேகத்துடன் சார்லஸை பார்த்தவனுக்கு விடையாக உள்ளே இருந்து தன் வயதையும் மறந்து ஓடி வந்த அந்த பெரியவர்.

“உன் சொந்த வீட்டுக்கு வர உனக்கு இத்தனை வருஷம் தேவைப்பட்டுச்சே….?” என்று சொல்லிக் கொண்டு தன் கண்ணீரை துடைத்தவரை கட்டி பிடித்த சார்லஸ்.

“  அங்கிள் இது பத்தி நாம அப்புறம் பேசலாம்.” என்றவனின் முகத்தில், குரலில் , இருந்த பதட்டத்தில் அவரும்.

“உள்ளே போய் பேசலாம்.” என்று சார்லஸிடம் சொன்ன அந்த பெரியவர். சரத்தை பார்த்து… “சரத் நீயும் உள்ளே வாப்பா….” என்று அழைத்தவரின் பின் சாவீ கொடுத்த பொம்மை போல் சென்றான்.

அதற்க்கு அடுத்து, அடுத்து, அவன் பார்த்ததில், ஒரு த்ரில்லர், ஜேம்ஸ் பாண்ட் கலந்த கதை பார்த்த எபெக்ட்  கிடைத்தது சரத்துக்கு,

அந்த பெரியவர் அழைப்புக்கு, இரவு நேரம் என்று கூட பாராது, ஐ.ஜீ ,கலெக்டர், அந்த இடத்துக்கு வந்ததும், தன்னால் எழுந்த சரத் அவர்களை விட்டு இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றான்.

ஐ.ஜீ சார்லஸை பார்த்து விட்டு கை குலுக்கியவர்….. “மிஸ்டர் சார்லஸ் அபிமன்யூ உங்களுக்கு நாங்க என்ன உதவி செய்யனும்….?” என்று பணிவுடன் கேட்க.

அந்த ஆசிரமத்தில் நடந்த அக்கிரமத்தை  சொல்லி விட்டு… “அவங்கல சும்மா விடக்கூடாது. இதுக்கு யார் யார் துணை போனாங்க. அவங்களையும் சேர்த்து தண்டிக்கனும். நீங்க கொடுக்குற பனிஷ்மென்டில் இது போல் செய்ய யாருக்கும் துணிவு வரக்கூடாது.

ஆ சட்டப்படி படி எல்லாம் வேண்டாம். ஜெயில்ல நல்லா சாப்பிட்டு இன்னும் கொஞ்சம் உடம்ப தேத்தி விட்டு பணமும் கையில கொடுப்பாங்க. அதனால…..நான் சொல்றது… புரியுதுங்கலா….?”

புரியுது என்பது போல் தலையாட்டி விட்டு சென்ற மறுநாள் செய்தி தாளில்,  அந்த ஆசிரமத்தின் நிர்வாகி முதல் கொண்டு, அந்த ஏரியா கவுன்சிலர், எம்.எல்.ஏ,  வரை நட்பு ரீதியாக ஒரு சுற்றுலா சென்ற போது விபத்துக்கு உள்ளாகி இருந்து விட்டதாக செய்தி  வந்தது.

அதை படித்த அனைவருக்கும் தெரிந்து தான் இருந்தது. இது விபத்து இல்லை. திட்ட மிட்ட கொலை  என்பது. ஆனால் யாரும் வாய் திறக்க வில்லை பெரிய இடத்து விவகாரம் நமக்கு எதுக்கு வம்பு….?

ஆம் உண்மையில்  பெரிய இடம் தான்.  க்ரக்கோஷியா அரசவம்சத்தை சேர்ந்த ஸ்மீத் சார்லஸுக்கும், இந்தியவம்ச வழி வந்த  மகாராஷ்ட்ரா ரஜப்புத்திர வழி வந்த சுமித்ராவுக்கும் பிறந்த சார்லஸ் அபுமன்யூ பெரிய இடம் தானே….

“ஏன் சார்ல… ” பெயர் அழைக்க வந்து. “சொல்லி இருக்கலாமே….” எப்போதும் தோள் மேல் கை  போட்டு பேசும் சரத். கொஞ்சம் தள்ளி நின்று பணிவுடம் கேட்டதுக்கு,

“இதோ இதுக்கு தான்.” அவன் கை கட்டி பேசியதை சுட்டி காட்டி சொன்ன சார்லஸ்.

“என் அப்பா, அம்மாவை இந்தியாவை சுற்றி பாக்க வந்த இடத்தில், பார்த்து ஆசை பட்டு இருதரப்பு எதிர்ப்புக்கும் இடையில் என் அம்மாவை போராடி கை பிடித்தார்.

அப்பா வீட்டில் தான் பலமான எதிர்ப்புன்னு சொல்லலாம். எந்த அளவுக்கு எதிர்ப்புன்னா, சொந்த மகன்  இறந்தால் கூட பரவாயில்லை. வேறு ஒரு நாட்டை சேர்ந்தவளும், அவளுக்கு பிறந்த குழந்தையும் தங்கள் வாரிசாக இருக்க கூடாதுன்னு நினச்சி திட்ட மிட்டு என் அம்மாவின் அப்பா இறந்த பின் என் எட்டாவது வயதில்.” பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த பெரியவரை  காட்டி “இவர் பெயர் வர்ஷிங்டங். இவர் மகனும், அப்பாவும், ஒன்னா படிச்சவங்க. ஹாலிடே செலபரேட் செய்ய இரண்டு குடும்பமும் பிக்னிக் போகும் போது திட்ட மிட்டு அவங்க போன வாகனத்தில் பாம் வெச்சி வெடிக்க வெச்சிட்டு.

அது மத்த நாட்டு சதி வேலைன்னு சொல்லிட்டாங்க. அவங்க திட்டமிட்ட படி தான் எல்லாம் நடந்தது.

ஒன்ன தவிர…..அன்னிக்கி காலையில எழுந்ததுல இருந்தே கொஞ்சம் பீவரா இருந்ததாலா, நானும் அங்கிளும் போகல. இந்த விபத்து கேள்வி பட்டு என் கிட்ட ஒன்னும் சொல்லாம அந்த இடத்துக்கு அங்கிள் போனப்ப.

என் அப்பாவோட அப்பா முகத்துல தன் மகன் மருமகள் இறந்துட்டாங்கலேன்னு வருத்தம் கொஞ்சம் கூட இல்ல. மாறா ஏதோ சாதிச்சிட்ட திருப்தி பார்த்துட்டு என்ன பத்தி ஒன்னும் சொல்லாம வந்தவரு என்னை இந்தியா கூட்டிட்டு வந்துட்டாரு.

நாங்க இந்தியா வந்த பிறகு அவங்களுக்கு எதோ சந்தேகம் வந்துடுச்சி போல. அங்கிள் கூட யார் யார் வந்தாங்கன்னு அவரு கிட்ட துருவி துருவி கேட்டதுக்கு, நான் மட்டும் தான்னு அடிச்சி சொல்லிட்டாரு, முன் ஏற்பாடா என்னை தனிவிமானத்தில் இந்தியா அனுப்பி வெச்சதால அவங்கலால கண்டு பிடிக்க முடியல.

என்ன அவர் கூட தங்க வெச்சா என் உயிருக்கு ஆபாத்து. அதே போல என் அம்மா வீட்டு கிட்டேயும் விடக்கூடாது.

அதான் அநாதை ஆசிரமத்துல தங்க வெச்சி அவர் ஸ்பான்சர் செய்வது போல செஞ்சாரு. அந்த ஆசிரமத்துக்கு மட்டும் செஞ்சா அவங்களுக்கு சந்தேகம் வருமுன்னு, சென்னையில் உள்ள எல்லா ஆசிரமத்தில் இருந்தும் ஐந்து குழந்தைக்கு ஸ்பான்ஸர் செஞ்சார்.” என்று சொல்லி முடித்தவனை சரத் பிரமிப்போடு பார்த்து நின்றான்.

அதன் பின் தன் குடும்பத்தை அழித்தவர்களை பழவாங்கியதில் கூடவே இருந்தாலும், சார்லஸின் குடும்ப பிண்ணனி கேட்டதில் இருந்து, முன்பு போல் நட்பாக அவனிடம் நெருங்க முடியவில்லை. சார்லஸ் எவ்வளவு வற்புறுத்தியும் அவன் நிலை உணர்ந்து கொஞ்சம் தள்ளியே நின்றான்.

 

Advertisement