Advertisement

அத்தியாயம்—3

காயத்திரிக்கும், சந்தியாவுக்கும், ஒரு ஆண்டும் சில மாதங்களுமே ஆன வயது வித்தியாசத்தில் சில சமயம் “அக்கா….” என்று காயத்திரியை மரியாதையோடு அழைக்கும் சந்தியா…

பல சமயங்களில்… “ஏன்டி, வாடி ,போடி,” என்று  மிக மரியாதையோடு அழைப்பாள். சந்தியாவுக்கு அன்று மிக நல்ல மூடு  போல….

“ஏன்டி இன்னிக்கி  ஆபிசு லீவு போடேன்.” என்றவளின் பேச்சை கேளாது.

“அய்யோ என்னால லீவு போட முடியாது. நேத்தே அந்த நாய் சேகர், வேல முடிக்காம நான் வீட்டுக்கு கிளம்பினதை பார்த்து  கேவலமா என்னை பார்த்தான்.

இன்னிக்கும் நான் ஆபிஸ் போகலேன்னா, எல்லார் முன்னாடியும் நிக்க வெச்சி திட்டும்.” தன் டீம் லீடரை  பற்றி மிக மரியாதையாக சொல்ல.

“ஆமா, திட்டு என்னவோ உனக்கு புதுசு போல சொல்ற. எப்போவும் போல சந்து தம்பி கிட்ட வேல சொல்லிட்டு வா காயூ.” என்று அவள் தன் சகோதரியிடம் கெஞ்சிக் கொண்டு இருக்கும் போதே, அந்த இடத்துக்கு வந்த அவர்களின் தந்தை  கோதண்டராமன்….

“என்ன சந்தியா அக்கா கிட்ட சொல்லிட்டியா….?” என்ற தந்தையின் பேச்சில்  சந்தியா நாக்கை கடித்துக் கொள்ள.

“என்ன டாட் எனக்கு தெரியாம, நீங்களும் உங்க செல்ல மகளும் என்ன ப்ளான் பண்ணி இருக்கிங்க….?” என்று சந்தேகமாய் கேட்க.

“நானா செல்ல மகள். நீ தான் செல்ல மகள். அதனால தான், உனக்கு வைரநெக்லஸ் வாங்கி கொடுக்க சொல்லி இருக்காரு. அதுவும் ஒரு பெண்  பார்க்க. என் பெண் புதுசு தான் போடனும் என்று சொல்லி.” விளையாட்டாக சொல்வது போல் தந்தை சொல்ல சொன்னதை தன் அக்காவுக்கு தெரிய படுத்தி விட.

சந்தியா சொன்னதில் அர்த்தமே கொஞ்ச நேரம் சென்று தான் காயத்திரிக்கு புரிந்தது. “அப்பா வேலைக்கு சேர்ந்து மூனு மாசம் தான் ஆகுது. ஒரு இரண்டு வருஷம் வேலைக்கு போயிட்டு அப்புறம் கல்யாணம் செய்துக்குறேன்.” என்று அடம் பிடித்தவளின் தலை  கோதிய கோதண்டராமன்,

“நல்ல இடம்டா, தானா வருது. பையனை பத்தி விசாரிச்ச வர தங்கமான பையன். குடும்பமும் ரொம்ப நல்ல மாதிரி.” என்று  கொஞ்சலாக கேட்ட தந்தையிடம் சிறிது நேரம் யோசித்து விட்டு,

கண்ணை சுருக்கி, “ நாளைக்கு வேண்டாம்பா, அடுத்த வாரம் வர சொல்றிங்கலா….?” என்று  கெஞ்சி கேட்கும் மகளிடம் மறுத்து சொல்ல முடியாது,

“சரிம்மா, நான் ஏதாவது காரணம் சொல்லி அடுத்த வாரம் வரச் சொல்றேன். “ என்று தந்தை சொல்லி விட்டு சென்றதும், தன் தங்கையைய் பார்த்த காயத்ரி,

அவளின் சந்தேகமான பார்வையில்…. “என்னடி அப்படி குறு, குறுன்னு பாக்குற” எறு கேள்வி கேட்டவள். அவளே அதற்க்கு பதிலாய்,

“ஓ…உன் லைன் க்ளியர் ஆக இன்னும் ஒரு வாரம் காத்து இருக்கனும் என்று யோசிக்கிறியா….?” என்று சொல்லி விட்டு சிரித்தவளுடன் சிரிக்காது , தன் பார்வையும் மாற்றாது பார்க்கும் சந்தியாவை , இவள் “என்ன….?” என்பது போல் ஜாடையில் கேட்க.

“என்ன விஷயம் காயூ….?” என்ற பேச்சு காயத்திரிக்கு புரியாது,

“என்ன விஷயம்…?” திரும்ப அவளிடமே கேள்வியைய் காயத்ரி திருப்பி விட.

“அடுத்த வாரம் வரை டைம். எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமா…?” தன் சந்தேகத்தை கேட்டதுக்கு,

“ஏன்டி நான் யோசிக்க கூடாதா…..? ஒரு வாரம் டைம் கேட்டது பெரிய குற்றமா…?என்னவோ கிரிமினினல் கிட்ட கேள்வி கேட்குற மாதிரி கேட்குற….?

“இப்போ நீ யோசிக்கனும்னு சொன்ன பாத்தியா…அது தான் எனக்கு சந்தேகத்தை கிளப்புது. உன் வாழ்க்கையில் இது வர செய்யாததை  எல்லாம் செய்ய போறேன்னு சொன்னா எனக்கு சந்தேகம் வராதா….?” என்று துருவி துருவி கேள்வி கேட்பவளை மாற்றும் வகையாக அவளுக்கு பிடித்த…

“இப்போ   ஷாப்பிங் போகலாமா….? வேண்டாமா….? சீக்கிரம் சொல்லு. நான் ஆபிசுக்கு லீவ் சொல்லனும்.” என்றதும் தன் விசாரணையைய் கை விட்டவளாய்,

“ போகலாம்டி, இந்த ஸ்டெடி ஆலிடேல, படிச்சி,  படிச்சி, மண்டை சூடேரி கிடக்கு.” காயத்ரி எதிர் பார்த்தது போல தன்னை குடைவதை நிறுத்தியளுடம் ஷாப்பிங் சென்றாள்.

சார்லஸிடம்…..“சர் இன்னிக்கி ******அந்த நகை கடைக்கு போகனும்.” என்று சொன்ன சரத்திடம்,

“ஆ நியாபகம் இருக்கு சரத்.” என்று சொல்லிக் கொண்டே எழுந்தவனின் பின் பதினைந்து பேர் வர.

அத்தனை பேரை பார்த்த சார்லஸ்….”இத்தன பேரு எதுக்கு….?ஐந்து பேரு மட்டும் போதும் சரத்.”

“ஒரு பத்து பேராவது வேண்டும் சர். ரிஸ்க் எடுக்க வேண்டாம்.” என்று  சொன்னவனை பார்த்த சார்லஸ்,

“என்ன சரத் பயம் வந்துடுச்சா….?நம்ம தொழிலுக்கு பயம் மட்டும் வரக் கூடாது.” என்று சொன்னவன், அவனே தன்னுடன் வரும் ஐந்து பேரை செலக்ட் செய்தான்.

வைரத்துக்கு பேர் போன அந்த தங்க நகை கடையில், சந்தியா….அங்கு இருந்ததில் பாதி தன் கழுத்தில் வைத்து பார்த்து பார்த்து… “ம்…” உதட்டை பிதுக்கி தன்னை பாவமாக பார்த்துக் கொண்டு இருந்த சேல்ஸ் பெண்ணிடம் கொடுத்து விட்டு…. “அதோ தேர்ட் லைனில் செகண்டா இருக்கே….” என்று  சொன்னதுக்கு “இதுவா மேடம்….?” என்று கேட்டவளிடம்,

“ஆ அது இல்ல. கீழே இருந்து தேர்ட் லைன்.” அவள் சொன்னதை  காட்டிய சேல்ஸ் பெண்ணிடம்.

“ஆ அது தான்.” என்று  வாங்கி கழுத்தில் வைத்தவள், காயத்திரியிடம்…”காயூ, காயூ, இது நல்லா இருக்குல்ல….?”

அந்த தங்க நகை  கடையின் வைர செக்க்ஷனில், இவர்களும் அங்கு பணி புரியும் சேல்ஸ் பெண்களை தவிர யாரும் இல்லாததும், அந்த உச்சி வெய்யிலுக்கு இதமான ஏசியிலும் கண்ணை கட்டியது காயத்ரிக்கு, அதுவும் இந்த நேரம் அவள் அலுவலகத்தில் குட்டி தூக்கம் போடும் நேரமுமாக அமைந்து விட. பின் என்ன ….?

சந்தியாவின் அழைப்பில் பாதி தூக்கம் கலைந்த வெறுப்பில்…. “ஏன்டி நீ வாங்க வந்தியா….?இல்ல இங்கு இருக்க எல்லாத்தையும் போட்டு பாக்க வந்தியா….? சீக்கிரம் எடுடி….”

வீட்டில் போனால் நிம்மதியாக படுத்து உறங்கலாம். இப்படி உட்கார்ந்து தூங்கி, தூங்கி, வழிந்து முதுகு வலி ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம், என்ற எண்ணத்தில் கத்த…..

அந்த சேல்ஸ் பெண் காயத்ரியை மனதில் மகராசி நான் மனசுல நினச்சத சொல்லிட்டாங்க. என்று மனதில் மெச்சி ஒரு சிரிப்புடம் நின்ற பெண்ணிடம் ஏதோ பேச சந்தியா முயலும் போது தான் அந்த சத்தம் கேட்டது.

பாதி தூக்கத்தில் இருந்த காயத்ரியும், எழுந்து ஒரு வித பயத்துடன் சந்தியாவின் அருகில் நின்றுக் கொள்ள.  சந்தியா தான் பெரிய பெண் போல் காயத்ரியின் கையைய் கெட்டியாக பிடித்துக் கொண்டு, அந்த ப்ளோர் முழுவதையும் பார்வையில் சல்லடை போட்டு அலசியவளுக்கு, சத்தம் எங்கு இருந்து வந்தது என்று தெரியவில்லை.

ஆனால் அங்கு இருந்த சேல்ஸ் பெண்கள் மட்டும் ஏதோ ஒரு இடத்தில் பார்வை செலுத்துவதை பார்த்து அவளும் உற்று பார்த்தவளுக்கு அது ஒரு அறை என்று  மட்டுமே தெரிந்தது.

அதன் உள்ளே  யார்….? இருக்கிறார்கள் என்று  தெரியவில்லை.

அவளுக்கு அது தெரியவும் வேண்டாம். காயத்ரியின்  கை பிடித்து மின்தூக்கியில் ஏறியதும், அவர்களை பின் தொடர்ந்து மைதா மாவை முகத்தில் அப்பியது போல் கலரில் இருந்த ஒருவன்  ஏறிக் கொள்ளவும் காயத்ரி பயத்துடன் சந்தியாவை பார்க்க.

சந்தியாவுக்கோ அந்த பயம் இல்லை. அந்த மைதாக்கார மூஞ்சே, ஏதோ பார்த்து பயந்து ஓடி வந்தவன் போல் தான் இருந்தான். கீழ் தளத்தில்  மின்தூக்கி நின்றதும்,காயத்ரியும் சந்தியாவும் வெளியேறும் முன், அவர்களை தள்ளிக் கொண்டு போக பார்த்தவனை போக விடாது அந்த முன்தூக்கியை முழுவதும் ஆக்ரமித்தது போல் சார்லஸோடு அவன் கூட்டாளி ஐந்து பேரும் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துக் கொண்டதும்,

அந்த மைதா மூஞ்சிக்காரனை பார்த்துக் கொண்டே, சார்லஸ் அந்த முன்தூக்கியின் பட்டனை கடைசி தளத்துக்கு அழுத்தி விட்டு அப்போது தான் அங்கு இருந்த பெண்களை பார்த்தான்.

முகத்தில் பொட்டு பொட்டாக, வியர்வை துளி பூக்க, தன்னை பார்த்திருந்த காயத்ரியை சத்தியமாக அந்த இடத்தில் அவன் எதிர் பார்க்கவில்லை.

அவன் அதிர்ந்தது ஒரு சில நொடி தான். ஆனால் உடல் பலத்தில் பலவீனமாக இருந்தாலும், மூளை பலத்தில் இத்தனை ஆண்டு தொழில் செய்துக் கொண்டு இருந்த அந்த இந்திக்காரனுக்கு சார்லஸின் அதிர்ந்த முகம் எதையோ உணர்த்த…

சந்தியாவின் கை பிடியில் இருந்த காயத்ரியை தன் பிடிக்கி கொண்டு வந்தவனை சந்தியா அதிர்ச்சியுடன்…. “ஏய்…ஏய் அவள விடு…..” என்று அவளை பிடித்து இழுக்க முயல.

ஒரே இழுவையில் தன் முன் கொண்டு வந்து நிறுத்தி, தன்  ஒரு கையை அவளின் கழுத்து பகுதிக்கு கொண்டு வந்தவன், மறுகையைய் தன் பேன்டினுல் நுழைத்து எடுத்தவன் கையில்  ஒரு சிறு அளவு வைரம் மின்னியது.

அவனின் எண்ணத்தை சடுதியில் புரிந்துக் கொண்ட சார்லஸின் பார்வை மொத்தமும், காயத்திரியிடம் மட்டுமே நிலைப்பெற்று இருந்தது.

தன்னை இழுத்ததும் அதிர்வில் இருந்து பேரதிர்வுக்கு மாறிய காயத்திரி, கண்ணை இருக்கி மூடியவளின் உள்உணர்வு உந்துதலில், கண்ணை திறந்து பார்த்தவளுக்கு, எதிரில் நின்று தன்னையே பார்த்திருந்த சார்லஸின் கண்ணில் எதை கண்டாளோ…..

படிப்படியாக பயம் குறைந்து, அவன் கண்ஜாடையை படிக்க ஆரம்பித்தாள். அந்த இந்திக்கரான் கையில் வைத்திருந்த வைரத்தை அவளின் வாயின் முன் கொண்டு வந்து நிறுத்தியவன்,

சார்லஸிடம்….. “லிப்ட்டு  நீச்சே செல்லோ போலோ….” என்று ஆணையிட்டவனை  பார்க்காது, காயத்ரியை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தவனின் செயலில் சந்தியா அதிர்ந்து நின்றாள்.

அதுவும் காயத்ரியின் பதில் பார்வையில், அய்யோ என்றானது. காயத்ரி சினிமாவில் வரும் மாஸ் ஹீரோவையே ஜொல்லு விட்டு பார்ப்பாள். நாகர்ஜூனன் தெலுங்கில் நடித்து, தமிழில் கொலை செய்த டப்பிங் படத்தை எத்தனை தடவை பார்த்தாள் என்று காயத்ரிக்கே தெரியாத  அளவுக்கு பார்த்து இருக்கிறாள். இவளே அதில் அப்படி என்னடி இருக்குன்னு இப்படி பாக்குற….? அந்த ஊரின் அவ்வளவு பெரிய ரவுடியை ஊரு விட்டு ஊரு வந்த நாகர்ஜூன், ஒட்டு மொத்த ரவுடி கூட்டத்தையும் அழிப்பானா….? இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு….?” என்று கிண்டல் செய்தவளை,

“பாக்க நல்லா இருக்குல பாரு,” என்று சொன்னதோடு விடாது, “ஆனா இது மாதிரி ஒருத்தன் இருந்தா நல்லா இருக்கும்லே,” என்று ஒரு பெரும் மூச்சோடு பேசிய அன்றைய பேச்சு, ஏனோ இப்போது சந்தியாவின் நினைவில் வந்து பயப்பட வைத்தது.

சந்தியாவின் பயத்துக்கு ஏற்ப தான். காயத்ரியின் கண்ணுக்கு, இப்போது சார்லஸ் ஒரு மாஸாகவே  தெரிந்தான்.அவன் இருக்கையில் தனக்கு ஒன்றும் ஆகாது என்ற தைரியத்தில், அந்த இந்திக்காரன் வைரத்தை வாயில் முன் வைத்து பேசியவனுக்கு பதில் பேச்சாய்…

“ஏன்டா மைதா மாவு, அந்த பாக்கு மென்ன வாயால என் மூஞ்சிக்கிட்ட பேசுறேன்னு அந்த எச்சைய மொச்சி மொச்சின்னு என் மூஞ்சில துப்புவதுக்கு   பதிலா, அந்த வைரத்தை என் வாயில போட்டுடுடா, ஆ மறக்காம தன் கழுத்தை இறுக்கி பிடித்து இருந்த கையை காட்டி, இத கொஞ்ச தகர்த்துனா தான் நீ போட்ட வைரத்த முழுங்க முடியும்.”

அவள்  பேசிய பேச்சுக்கு சார்லஸ் முகத்தில் சின்னதாக புன்னகை அரும்ப, சந்தியாவின் வயிற்றிலோ புலி கரையோ, கரை என்று கரைக்க ஆரம்பித்து விட்டது.

காயத்ரியாவது சார்லஸை பார்த்து மட்டும் தான் இருக்கிறாள். சந்தியா அவனின் வீரம், தீரம், பராக்கரமை பார்த்து, மலைத்து, அவனை பற்றி விசாரித்து, கேள்வி பட்டதை தன் சகோதரியிடம் சொல்லவும் முடியாதே…..

சொல்ல அவசியம் இல்லையோ….?அவனை பற்றி முழுவதும் தெரிந்து, அந்த மாஸில் தான் விழுந்தாளோ…. அது தான் பெண் பார்க்க ஒரு வாரம் டைமா…..?தன் சகோதரியின் உயிர் பயத்தை  விட, இப்போது அவளின் எதிர்காலம் குறித்து தான் அவளுக்கு பயம் ஏற்பட்டது.

அந்த இந்திக்காரன் தமிழ் சரியாக பேச தெரியவில்லை என்றாலும், குச்,குச் ஆத்தா அய் என்பது போல், கொஞ்சம் கொஞ்சம் தெரியும். அப்படி தெரிந்ததில் தன் கவனத்தை சார்லஸிடம் இருந்து காயத்ரியிடம் திருப்பிய போது அவள் கழுத்து பகுதியில் பிடித்து இருந்த கை தன்னால் தளர.

அந்த வேளயில் சார்லஸ், காயத்ரிக்கும் சரத்துக்கு ஒரே சமயத்தில்  சமிஞ்சை செய்ய. காயத்ரி அவனின் கண் காட்டலில் கீழே அமர்ந்துக் கொண்டவளுக்கு  வைர செக்க்ஷனில் கேட்ட அதே சத்தம் கேட்டு அது துப்பாக்கியின் தோட்டா வெளியேறி எழுப்பும் சத்தம் என்பதை அறிந்து விக்கித்து தலை நிமிர்ந்து அவனை பார்க்க. அப்போதும் சார்லஸின் பார்வை அவள் மீதே இருந்தது.

சந்தியாவுக்கு உதறலிலும் மீறி, இங்கு இருந்து  வெளியேறிவிட வேண்டும் என்ற உந்துதலில் காயூவை இழுத்துக் கொண்டு ஓடினாள்.

 

Advertisement