Advertisement

அத்தியாயம்—-2

தன் சிஸ்டமை ஆன் செய்ததில் இருந்து, வேலையே செய்யாது  இருந்த காயத்திரியை பார்த்து தேவி…

“காயூ என்னடி உடம்பு சரியில்லையா….?” என்ற கேள்விக்கு, பதில் கேள்வியாய்…

“என்ன பாத்தா அப்படியா தெரியுது….?”

“அப்போ எதுக்குடி வேல பாக்காம இருக்க….?”

திரும்பவும் அவள் கேள்விக்கு பதில் அளிக்காது. “ ஏன்டி த்ரீ ப்ளோர்ல ஐ.டி கம்பெனி இருக்கா….?” என்று கேட்டதுக்கு.

“ஏன்டி இங்கு ஜாயின் பண்ணி மூனு மாசம் ஆகுது. இன்னும் கோட் எப்படி அtiக்கனும் என்றே  தெரியாது. நம்ம டீம் லீடர் கிட்ட திட்டு வாங்குற, இதில் புதுசா வேறு ஒன்ன பத்தி விசாரிக்குற….?”

“சேச்சே…நான் வேலைக்காக விசாரிக்கல.”

“அத ஏன்டி இப்படி மூஞ்சிய சுழிச்சிக்குனு சொல்ற….? அதான்டி இந்த வேல தேவ படுறவங்களுக்கு கிடைச்சி இருந்தா, வேல கத்துக்கனும். ப்ரமோஷன் வாங்கனும்.  என்று நினைப்பாங்க. நீ தான் ராஜா வீட்டு இளவரசியாச்ச, வேல பத்தி சொன்னா இப்படி தான் மூஞ்ச சுழிப்ப.”

இவர்களின் பேச்சுக்கு இடையுறாய் வந்த சந்தோஷ்…. “காயூ உன்ன லீடர் கூப்பிடுறாங்க.” என்று  சொன்னதும்.

“அய்யோ வந்ததும் கூப்பிடுறாரே….வேலயில் ஏதாவது தப்பு செய்துட்டேனா….?மனுஷன் நாய் மாதிரி  எரிஞ்சு விழுவாரே,

சந்தோஷ்… “கவல படாதே வேலயில குறையெல்லாம்  இருக்காது.”

சந்தோஷ் பதிலில் காயத்ரி கொஞ்சம் நிம்மதி அடைய.

தேவி… “வேலையில தப்பு இருக்காதுன்னு எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற….?”

சிரித்துக் கொண்டே…. “அவ வேல செஞ்சி இருந்து இருந்தா தானே குற இருக்க. இவ தான் இங்கு ஜாயின் செய்ததில் இருந்து தண்டத்துக்கு சம்பளம் வாங்கிட்டு இருக்கால.” என்று சொன்னதும்….

அவர்கள் இருவரையும் முறைத்து விட்டு தன் டீம் லீடரை பார்க்க சென்றால்….அங்கு  இவர்கள் சொன்னது போல் தான் லீடர் அவளின் காது ஜவ்வூ கிழிகிற அளவுக்கு, அவளை கிழித்து தொங்க விட்டான்.

“ மூனு மாசம் ஆச்சி நீ வேலயில் ஜாயின் பண்ணி. நான் கொடுத்த வேல ஒன்னும் உறுப்படியா செய்யல. நீ எல்லாம் எப்படி கேம்பசுல செலக்ட் ஆனேன்னு தெரியல.” என்று அவன் திட்ட, திட்ட ,மனதில் அவனுக்கு  கவுண்டர் கொடுத்துக் கொண்டே வந்தாள்.

“எனக்கே எப்படி செலக்ட் ஆனேன்னு தெரியல. ஆயிட்டேன் என்ன செய்யிறது எல்லாம் உன்னோட கிரகம்.” என.

“என்ன காயத்ரி நான் சொன்னது காதுல விழுந்துச்சா….?” என்று சத்தமாக கேட்கும் போது தான்.

அய்யோ இவன் என்னத்த சொன்னான்னு தெரியலையே, கவனிக்கலேன்னு சொன்னா அதுக்கும் சேர்த்து வெச்சி திட்டுவானே..

தோ பாரு காயூ,  இன்னிக்கி இந்த திட்டு போதும். நமக்கும் கொஞ்சம் ரோஷம் வேணுமுல்ல, அதனால்…

“கவனிச்சேன் சேகர்.” என்று பவ்யமாக சேகர் என்று அழைத்தவள். மனதில் நாய் சேகர், நாய் சேகர், என்று  அவனை வசைப்பாடி கொண்டு இருந்தாள்.

அடுத்த ரவுண்டாக… “ நான் என்ன சொன்னேன்…?” அவளின் முகத்தின் பாவனையில் சந்தேகம் கொண்டு சேகர் கேட்டதுக்கு,

அய்யோ முதலில் இருந்தா….என்று ஆவ்…என்பவளை காப்பாற்றும் தேவ தூதனாக அந்த இடத்துக்கு வந்த சந்தோஷ்….

“சேகர் மீட்டிங்குக்கு நேரமாச்சி…..” என்று சொன்னதும், தன் வாட்ச்சை பார்த்துக் கொண்டே எழுந்தவன், மறவாது காயத்திரியை ஒரு முறை முறைக்கவும் தவறவில்லை.

அப்பா…என்று  ஆசுவாசம் அடைந்தவளை, சந்தோஷ் ஒரு நமுட்டு சிரிப்புடன் கடந்து சென்றாலும், கண்டு கொள்ளாது அவனை பின் தொடர்ந்தவள்.

“சந்து…” என்று பூனை குட்டி போல் அவன் பின் தொடர்ந்தவளை திரும்பி பார்த்த சந்தோஷ்.

“புலி எதுக்கு இப்படி பம்முது….?” என்று கேட்டதுக்கு,

“என்ன சந்தோஷ் வேல இல்லேன்னா, கேன்டினுக்கு போகலாமான்னு கேட்க வந்தா…போ நான் கோபமா போறேன்.” என்று சொன்னவள், போகாமல் அங்கேயே நிற்க.

“என்ன புலி போகலையா….?” என்று கேட்டதுக்கு, ஒன்றும் சொல்லாது அமைதியாக இருப்பவளை பார்த்து…

“ என்ன சேகர் ஏதாவது புது வேல கொடுத்தாரா….? நான் செஞ்சி கொடுக்கனுமா…?” என்று  கேட்க, மறுப்பாய் தலையாட்டியவளிடம்….

“வேல கொடுக்கலையா…?”

“யாருக்கு தெரியும்.”

“ஏய் என்ன சொல்ற. அப்போ  எதுக்கு கூப்பிட்டாரு….?”

“எப்போவும் போல திட்டினாரு, நா எப்போவும் போல அவருக்கு மனசுல கவுண்டர் கொடுக்குறதுக்குள்ள, என்ன புரிஞ்சுதா…?புரிஞ்சுதான்னு  கேட்டாரு, நானும் புரிஞ்சுதுன்னு தலையாட்டி வெச்சன். அத விடு சந்து, தேர்ட் ப்ளோர்ல ஐ.டி கம்பெனி இருக்கா….?” என்று கேட்டவளை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே…

“தேவி கிட்ட கூட வந்ததும் நீ இத தான் கேட்டேன்னு சொன்னா….? என்ன மேட்டரு….?உண்மைய சொன்னா….? எனக்கு தெரிஞ்ச விஷயத்த சொல்லுவேன்.” என்று சொன்னவனின் கை பிடித்து கேன்டினுக்கு நகர்த்தி  சென்று, அவனுக்கும் ,தனக்குமான ஸ்நாக்ஸை வாங்கி வந்து….

“லிப்ட்டுல  இன்னிக்கி சும்மா நச்சுன்னு ஒருத்தன பார்த்தேன் தெரியுமா….?”

“அடிப்பாவி பசங்க சொல்ற டையலாக்க, நீ பேசி வெச்சா நாங்க எத பேசுறது…..?” என்று இடைமறித்தவனின் பேச்சை காதில் வாங்காது.

“போன வாரம் நான் மாலுல ஷாப்பிங் பண்ணிட்டு  இருந்தப்ப இவன் வந்தான். ஒருத்தன அடி வாங்கு வாங்குன்னு வாங்கி சும்மா பின்னி எடுத்துட்டான்.

நான் கூட என்னடா சும்மா இருக்குறவன இப்படி அடிக்கிறானேன்னு பார்த்தா….அப்போ தான் அங்கு இருப்பவங்க பேச்சு காதில்  விழுந்துச்சி. அவன் கூட படிக்கிற பொண்ண ரொம்ப டார்ச்சர் கொடுக்குறான்னு… …” அவள் பேச்சு மொத்தமும் ஒரு படித்த வேலைக்கு வந்த பெண் போல் தோன்றவில்லை. டீன் ஏஜில் இருக்கும் பெண் போல்  தான் இருந்தது.

ஒரு மூத்த சகோதரனாய்…. “காயூ  இந்த பாக்க ஹான்சமா இருக்குறது. இந்த ஹீரோ ஹிசம் பண்றது, எல்லாம்  சினிமாவுல பாக்குறதுக்கு வேனா நல்லா இருக்கும். ஆனா நிஜத்துல முடியாது.” என்று சொல்பவனின் பேச்சு காதில் வாங்காது.

“அய்யோ எனக்கு இந்த அட்வைஸ் எல்லாம் வேண்டாம். தேர்ட் ப்ளோர்ல  என்ன இருக்கு…..?அத மட்டும் சொல்லு.”

இது திருந்தாத கேசு, என்ற முடிவோடு …” நான் இங்கு ஜாயின் செய்து  மூனு வருஷம் ஆகுது. அந்த ப்ளோர்ல ஏதோ லெதர் பிஸினஸ் செய்யிறதா கேள்வி பட்டேன்.

ஆனா அதுக்கு உண்டான எந்த அறிகுறியும் அங்கு தெரியல. அந்த ப்ளோர்ல  லேடீஸ் இறங்கி நான் பார்த்ததே இல்ல. அதுவும் போறவன், வரவன், எல்லாம் கோட்,சூட்டோடு தான் போவாங்க, வருவாங்க.

அதுவும் கார், ஒருத்தன் கூட சதாரண  காரில் வர மாட்டான். எனக்கு என்னவோ அங்கு ஏதோ தப்பு நடக்குதோன்னு ஒரு சந்தேகம்.”

தனக்கு தெரிந்ததை மட்டுமின்றி தன்னுடைய சந்தேகத்தையும்  சேர்த்து சொன்னாலாவது அவளுடைய மயக்கம் தெளியட்டும் என்று விளக்கோ, விளக்கு என்று விளக்க.

எங்கு அவள்  மயக்கம் தெளிந்தது….? அவன் பேச்சில் இன்னும் கூடியவளாய்… “ஈஸிட் பொண்ணுங்க ஒருத்தர் கூட வேல பாக்கலையா….?அய்யோ எவ்வளவு நல்லவன் பாரேன். அவன் தான் அதுக்கு ஓனருன்னு நினைக்கிறேன். லுக் எல்லாம் அப்படி தான் இருக்கு.”

ஏதோ பேச வந்தவனை தடுத்து… “இனி அனைத்தும் யாம் பார்த்துப்போம்.” என்று அபயம் கொடுப்பது போல் பேசியவள்.

இன்னும் அவனுக்கு தேவையானது வாங்கி கொடுத்தவளை பார்த்தால் அவனுக்கு வளர்ந்த குழந்தை போலவே தெரிந்தது.

போன மாதம் தான் அவளின் இருபத்தி ஒன்றாவது பிறந்த நாளை கொண்டாடினாள். அவளின் அழைப்பை ஏற்று  அவள் வீட்டுக்கு சென்ற போது , அவளின் செல்வ நிலையைய் பார்த்து அசந்து தான் போனான்.

இது வரை அவளும் தங்களை போல் ஒரு மிடில் க்ளாஸ் என்று தான் நினைத்து இருந்தான். ஏன் என்றால் காயத்திரியின் செயல் ஒன்றிலும்  பணக்காரத்தனம் தெரிந்தது இல்லை.

கஷ்டமே  தெரியாத பெண். ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொள்வாளோ,பார்க்க நன்றாக வேறு இருக்கிறாள்.

ஆம் சந்தோஷ்  நினைத்தது போல் அவள் அழகு , அன்பு, வசதி, அனைத்தும் நிறைந்த பெண். அவள் கேட்கும் முன் அவள் தேவையைய் நிறைவு செய்யும் தந்தை. அன்பான அன்னை, குறும்பான தங்கை , மொத்தத்தில் கொடுத்து வைத்த வாழ்க்கை வாழ்பவள் எனலாம்.

அன்று மாலை ஆபிஸ் பஸ்ஸில் செல்லும் போது கூட காயத்ரிக்கு அவனின் நியாபகமே, வீட்டுக்கு வந்த பின்னும் அவன் நினைவே தொடர.

தன் தங்கை சந்தியா தன் காலேஜில் தான் பார்த்தவனை பற்றி  சொன்னதை, ஒன்று கூட காதில் விழாது தன் ஆபிசில் செய்வது போல அனைத்துக்கும் தலையாட்டிய காயத்திரி, கொஞ்சம் கூர்ந்து கவனித்து இருந்தாள் தன்னுடைய ஹீரோ பற்றி தான் சொல்கிறாள் என்று அறிந்து இருப்பாள்.

எப்போதும் ஒரு பழமொழி உள்ளதே, முன்னது கோழை, பின்னது காலை என்று. அது போல் தான் சந்தியாவும் சார்லஸை பார்த்து மயங்கி தான் போனாள். ஆனால் அவன் எப்போதும் அனைவரும் பார்க்க அந்த கல்லூரியில் பணிபுரிபவரையே அடிக்கிறான் என்றால்….

கேட்டு தெரிந்து கொண்டதில் , வந்த மயக்கம் பஞ்சாய் பறந்து போனது. தங்கைக்கு  வந்த ஞானம் அக்காவுக்கு வருமா….?

————————————————————-“ஓட்டல பத்தி நீங்க கேட்ட டீடையில்ஸ்….” என்று டேபுல் மேல் வைத்த பைலை புரட்டிக் கொண்டே….

“ சரத் போன மாசம் இந்த ஓட்டலுக்கு தானே நாம  போனோம்.” என்ற சார்லஸின் கேள்விக்கு,

“ஆமா சார்.” என்ற பதிலில் யோசனையுடன்.

“ஓனர் நேம் கோதண்டராமன் தானே….”

“யெஸ் சர், என்ற பதிலில் அனைத்தையும் பார்த்தவன்.

“அமைச்சர் சொன்னத வெச்சி பார்த்தா, அவங்க அங்கு ஏதேச்சையா தான் தங்குனாங்க. ஆனா இங்கு ஒரு நாள் முன்னவே அவங்க பேருக்கு புக் பண்ணி இருக்கு….” என்று இழுத்தவனிடம்.

“ஆமா சார். இது ப்ளான் பண்ணி தான் செய்து இருக்ககாங்க. எனக்கு என்னவோ அவரு மருமகன் மேல தான் சந்தேகம்.”

“எனக்கும் இருக்கு, ஆனா நம்ம கவனம் மொத்தமும் அவன் மேல இருக்க கூடாது. எல்லா வகையிலுமே சந்தேகம் படனும். இன்னும் நமக்கு ஐந்தே நாள்  தான் இருக்கு,” என்று சொல்லிக் கொண்டே வந்தவன்.

“ அந்த ஒட்டல நம்ம பசங்க யாராவது ஒரு பேருல மிஸ்டர் & மிஸஸ் சொல்லி  இன்னிக்கி நைட்டுக்கு ரூம் புக் பண்ணுங்க. டீடையில்ல அட்ரஸ் நம்ம டெல்லி அட்ரஸ்ஸ கொடுத்துடுங்க. ஆ டீடையில் புல்லா ரிச்சா இருக்கனும்.” என்று அவன் சொன்ன அனைத்துக்கும் தலையாட்டியது மட்டும் அல்லாது அவன் சொன்ன வேலை அடுத்த அரைமணி நேரத்தில் முடித்தும் விட.

“சார் பண்ணியாச்சி, ரூம் நம்பர் 206.” என்று நமுட்டு சிரிப்புடம் சொல்ல.

பதிலுக்கு சார்லஸ் முகத்திலும் புன்னகை வந்த அதே வேளை, ஏனோ மின்தூக்கியில் பார்த்த கண், தன் முன் வந்து போயின.

சட்டென்று அவள் நினைவை கலைத்தவன். “தொழில்ல இருக்க ஒரு பெண்ண ஏற்பாடு செஞ்சிடு …”

சரத் அதற்க்கு மேல் சார்லஸை பேச விடாது. “நான் பாத்துக்குறேன் சர்.”

“ஒகே….” என்று அவனின் அடுத்த வேலையை பார்க்க சென்று  விட்டான்.அது தாங்க கட்ட பஞ்சாயத்து.

சார்லஸின் திட்டப்படி அடுத்த நாளே… அந்த ஓட்டலில் தங்கியவனின்  போனுக்கு ஒரு வீடியோவும், போன் அழைப்பும் வர.

அதை ஸ்பீக்கரில் போட்டு கேட்டு முடித்தவனின்  முகத்தில் முழுவதும் சிந்தனை கோடுகளே….

சரத் கேட்ட “சர் வீடியோவை பாக்குறிங்களா….?” அதில் என்ன கசடு இருக்கும் என்று தெரிந்தவனாய், வேண்டாம். என்று மறுத்து விட்டு,

பின் திரும்பவும் பதிவு செய்து வைத்திருந்ததை  ஒரு முறை கவனமுடன் கேட்டுக் கொண்டு இருந்தான்.

“மிஸ்டர் வசந்த், இப்போ நாங்க அனுப்புன வீடியோவ பார்த்து இருப்பிங்க.” என்ற பேச்சில்,

இவர்களின் திட்டப்படி வசந்த்….பதட்டமான  குரலில்…. “பார்த்..தேன்…” தன் குரலில் பயத்தை கூட்டி சொல்லியவன் பேச்சில், அந்த பக்கம் திருப்தியாக,

“ கவல படாதிங்க. நாங்க சொல்றத நீங்க கேட்குற வர. அந்த வீடியோவால உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல. உங்க குடும்ப மானம் உங்க கையில.”

அந்த பக்கம் எதிர் பார்த்தது போலவே வசந்த்….. “நான் என்ன பண்ணனும்.” என்ற வசந்தின் பேச்சில்,

“நல்லது. நல்ல பேச்சு. ஒரு பத்து கோடிய நாங்க சொல்ற இடத்துக்கு எடுத்துட்டு வந்து வைக்கனும்.” என்ற  பேரத்தில்,

“பத்து கோடியா….?” என்று அதிர்ந்து கேட்டவனிடம்.

“உங்களுக்கு இது ரொம்ப குறஞ்ச தொகைத்தான்னு, டெல்லியில் நீங்க இருக்க ஏரியாவே சொல்லுது. அதனால இந்த இழுத்தடிக்கிற வேலை எல்லாம் வெச்சிக்காம, சீக்கிரமா பணத்தை கொடுத்துட்டு, உங்க குடும்ப குத்து விளக்கே காப்பத்திக்கிற வழிய பாருங்க….” என்ற அவன் பேச்சில் அதை கேட்டுக் கொண்டு இருந்த சார்லஸின் பற்கள் அரைப்பட்டாலும், தன்னை அடக்கியவனாய் அவன் பேச்சை தொடர்ந்து கேட்கலானான்.

வசந்தின்… “நீங்க கேட்ட பணத்த கொடுத்துடுறேன் .” என்ற அவசரமான பதிலில்,

“நல்லது. நல்ல முடிவா எடுத்து இருக்கிங்க.” நாளைக்கு நானே உங்கல அழைக்கிறேன். போலீசுக்கு எல்லாம் போக மாட்டிங்கன்னு நினைக்கிறேன்.” என்றதுக்கு,

“ இல்ல,இல்ல.” என்ற வசந்தின் அவசரமான பதிலில்.

“நல்லது. நல்லதே நடக்கும்.” என்ற பேச்சோடு அந்த உரையாடல் முடிவடைந்தது.

கூடவே அந்த பதிவை கேட்டுக் கொண்டு இருந்த சரத்…. “ சர் எனக்கு அந்த ஓட்டல் மேனஜர் மேல சந்தேகமா இருக்கு.”

“இப்போ அமைச்சர் மருமகன் மேல சந்தேகம் போயிடுச்சா….?” என்று கேட்டதற்க்கு,

ஒரு சிரிப்புடன்….. “ நீங்க சொன்னா மாதிரி  இரண்டு நாளா பாலோ செய்ததில் சந்தேகம் படும் படி ஒன்னும் இல்ல சார்.”

“அது எப்படி அவ்வளவு நம்பிக்கையா  சொல்ற. ஒரு சமயம் ஆள வெச்சி செஞ்சிட்டு இருக்கலாம்ல.” சரத்தை அவன்  விடாது கேட்க.

“நேத்து அமைச்சர் கிட்ட பத்து கோடிய கொடுத்துட்டாரு சாரு. அதுவும் இல்லாம இருபது கோடிக்கு அவரு சொத்த விக்க ஏற்பாடு செய்துட்டு இருக்காரு.”

“சரத் நான் சொல்றத நல்லா கவனி. நம்ம கிட்ட வந்த பிரச்சனையில சட்டென்று ஒருத்தன் மேல மட்டும் நம்ம சந்தேகம் விழ கூடாது.

அதே போல் ஒருத்தன் ஏதாவது செஞ்சத பார்த்துட்டு, அவன் இத செஞ்சி இருக்க மாட்டான்னு நல்லவன் என்ற முடிவுக்கும் வந்துட கூடாது.” ஒரு லாயர் தன் ஜூனியரிடம் கேசை அலசுவது போல் விளக்கிக் கொண்டு இருந்தான்.  

 

Advertisement