Advertisement

வன்மையில் மென்மை

அத்தியாயம்—-1

அந்த மகளிர் கலை கல்லூரியின் ஆண்டு விழாவை  முன்னிட்டு அனைத்து மகளிரும், விசேஷமாக தன்னை அலங்கரித்துக் கொண்டு அந்த ஆடிட்டோரியத்தையே விளக்கே இல்லாமல் வண்ணமயமாக்கிக் கொண்டு இருந்தனர்.

விழா ஆராம்பிக்க இன்னும் நேரம் இருப்பதால், எப்போதும் மேக்கப்புடன் சுற்றும் சந்தியா, தன் தோழிகளை பார்த்து….. “ஏய் ப்ரோகிராம் ஸ்டாட் பண்ண இன்னும் நேரம் இருக்கு. அதுக்குள்ள கொஞ்சம் டச்சப் பண்ணிட்டு  வந்துடலாமா….?” என்று கேட்க.

தான் இத்தனை அலங்காரம் செய்தும் அங்கு பார்க்க  ஒரு ஆண்மகனும் இல்லையே என்று வெறுப்பில் இருந்த சுதா…. “வேண்டாம் ஓடிடு நானே கடுப்புல இருக்க.”

“ஏன்டி நான் டச்சப் செய்ய தானே கூப்பிட்டேன். என்னமோ உனக்கு எத்தன அரியஸ்  இருக்குன்னு கேட்டப்பல. இப்படி பொங்குற….?” என்று கேட்டவளை இன்னும் கொலை வெறியுடன் பார்க்க.

“ஏய் சத்தியமா நீ எதுக்குடி முறைக்கிற….?” அவள் முறைக்கும் காரணம் தெரியாது கேட்டவளின் முகத்தை, தன் பலம் கொண்ட மட்டும் அப்படி, இப்படி,  என்று அந்த ஆடிட்டோரியம் மொத்தமும் தெரியும் படி காட்டிவள்.

“இங்கு யாரு இருக்கான்னு நீ போட்டது பத்தாதுன்னு இன்னும் பட்டி பாக்க போற….?” என்றதும் தான் சந்தியாவுக்கு அவளின் கோபத்துக்கு உண்டான காரணம் புரிந்தது.

“ஒ அம்மணிக்கு அந்த கோபமா….?” என்று இன்னும் வெறுப்பேத்த …. “ஏன்டி உங்க வீட்டில் இருந்து வரும் போது கூடவா ஒரு பையனும்  கண்ணுல மாட்டல….?”

சந்தியா கேட்டதும் தன்  சோகத்தை பிழிய ஆராம்பித்தாள் சுதா….“அத ஏன்டி கேட்குற, வீட்ல காலேஜ் தான் பொண்ணுங்கலா படிக்கிறதுல சேர்த்துட்டாங்கன்னு பார்த்தா, இன்னிக்கி பார்த்து பார்த்து ட்ரஸ் செய்துட்டு வெளிய வந்தா ….. என் அண்ணன் எனக்கு முன்னாடி சாவீய சுத்திட்டு … “நான் உன்ன ட்ராப் பண்றேன்னு நிக்குது. எனக்கு எப்படி இருக்கும்….?”

அதற்க்கு மற்ற தோழிகள், கோரசாக…. “ரொம்ப கஷ்டமா தான் இருக்கும்.” என்று சொல்ல.

சந்தியாவோ…. “உங்க அண்ணன் கிட்ட நானே போயிடுறேன்னு சொல்ல வேண்டியது தானே….” என்று சொன்னதுக்கு.

“ ஏன்டி நான் சொல்லாம இருந்து இருப்பேனா….? அதுக்கு என் பாச மலரு. இன்னிக்கு ரொம்ப அழகா ட்ரஸ் பண்ணிட்டு இருக்க. பஸ்சுல போனா கசங்கிடுமுன்னு என்னை கூட்டிட்டு வந்து இங்கே தள்ளிடுச்சி.”

“அய்யோ உன் நிலமை  ரொம்ப பாவம் தான்டி.” இன்னும் ஒரு முறை கோரஸ் ஒலிக்க.

அப்போது தான் சந்தியாவின் கவனம் இங்கு இல்லை என்பதை புரிந்துக் கொண்ட பெண்கள் அவள் பார்த்த பக்கத்தில் பார்வை செலுத்த. பாலைவனத்தில் மழை கொட்ட கொட்டு என்று  கொட்டினால் எப்படி இருக்குமோ…? அப்படி நிலையில் இருந்தனர் பெண்கள் அனைவரும்.

இது வரை பார்த்திராத வடிவமைப்புக் கொண்ட காரில் இருந்து இறங்கிய இளைஞனை அனைவரும் அதிசயத்து பார்த்தனர். சந்தியா காரையும் சேர்த்து பார்த்திருந்தாள்.

கார் பைத்தியமான சந்தியாவிடம் சுதா…. “ ஏன்டி அட்டகாசமா ஒருத்தன் வந்து இறங்குறான். நீ அவன பாக்காம அவன்  இறங்கி வந்த கார பாக்குறியே….” என்று கேட்டவளை, இப்போது பைத்தியகாரி போல் பார்ப்பது சந்தியாவின் முறையானது.

“என்னடி….?”

“அந்த காரின் விலை என்னன்னு தெரியுமா…?”

“என்ன ஒரு ஒரு கோடி” என்று  சொல்லும் போதே அவள் முகத்தை பார்த்து … “இரண்டு, மூன்று, நான்கு,” என்று நீட்டிக் கொண்டே போனவள் அவளின் இல்லை என்ற பதிலில்  இப்போது அவளும், மற்ற பெண்களும் அந்த காரையே பார்த்திருந்தனர்.

“ இந்த கார் ரோல்ஸ் ராய்ஸ்.  இந்த காரை பணம் இருந்தா மட்டும் கொடுத்துட மாட்டாங்க. சமூகத்தில் அந்தச்த்து இருக்குறவங்களுக்கு மட்டும் தான் கொடுப்பாங்க.என்று அந்த காரை பற்றி சொன்னவள்.

கடைசியா அதன் விலை சொன்னதும்,  அனைவரும் வாயின் மீது கை வைத்துக் கொள்ள.

ஒருத்தி மட்டும் தன் பேகில் இருந்து இன்விடெஷனை எடுத்து அதில்  சீப் கெஸ்ட்டின் பெயரை பார்த்து. அந்த பெயரை தன் மொபைலில் கூகுல் ஆண்டவரிடம் விவரம் வேண்ட.

அவள் எதற்க்கு பார்க்கிறாள் என்று தெரிந்துக் கொண்ட மற்றோரு பெண்ணோ….  “ சந்தானம் மீன் வளத்துறை அமைச்சர். வயது அறுபத்திரெண்டு .கூடுதல் தகவல் அவருக்கு பையனே இல்ல. இரண்டும் பொண்ணு தான்.” அந்த தகவலில் ஆர்வம் குறைந்து மொபைலை ஆப் செய்து விட்டு மற்றவர்கள் செய்வது போல் அந்த இளைஞனை பார்வையிட.

அப்போது தான் அவன் மட்டும் இல்லாது இன்னும் நான்கு கார் நிற்பதையும், ஒவ்வொரு காரின் அருகிலும் இரண்டு பேர் நிற்பதை பார்த்து…. “யாருடி இவனுங்க. யூனி பாம் மாதிரி எல்லோரும் கருப்பு சூட், கோட், போட்டுட்டு இருக்கானுங்க.”  பெண்களில் ஒருத்தி கேட்டதுக்கு,

“யாருக்கு தெரியும். பாருங்க.”

“என்னத்த பாக்குறது…?”

“ஏன் அவங்கல தான். சும்மா சைட் அடிக்க கூட அவனுங்க ஜாதகம் மொத்தமும் வேண்டுமா….?”

குளத்தில் ஓடும் தண்ணி ,இது யாரு குடிச்சா என்ன….? என்பது போல் மொத்த பெண்களின் பார்வை முழுவதும் அந்த இளைஞனிடம் இருந்தது.

 

அதுவும் குறிப்பாய்…ரோக்ஸ் ராய்ஸ் காரில் இருந்து இறங்கியவனிடமே அனைவரின் பார்வையும் நிலைத்து இருக்க.

அவனோ சுற்றும் முற்றும் பார்வை இடுவதிலேயே இருந்தான். ஆனால் தவறி ஒரு பெண்கள் மீது கூட அவன் பார்வை அழுத்தமாக பதியவில்லை. அவன் அலைபுறுதலுக்கு தீர்வு கிடைத்தது போல் ஒரு இடத்தில் அவன் பார்வை நிலைப்பெற்று நிற்க.

எவ அவ…? என்பது போல் அனைத்து பெண்களும் அபோட்டானில் திரும்ப, அவள் இல்லை அவன்.

ஆனா நம்ம தமிழ் சார எதுக்கு இப்படி உத்து பாக்குறான், என்று அவர்கள்  யோசிக்கும் போதே மற்றகார்களின் அருகில் இருந்தவர்களுக்கு அவன் கண்காட்ட.

இதற்க்கு தான் காத்துக் கொண்டு இருந்தது போல் தமிழ் சார் அருகில் சென்றவர்கள், அவர் என்ன ஏது என்று உணரும் முன் அடி பின்னி எடுக்க.

அந்த ரோக்ஸ் ராய்ஸ்  கார்க்காரன் அவர்கள் அருகில் வந்ததும், அடித்தவர்கள் அவனுக்கு வழிவிட்டு விலகி நின்றதும்,

அந்த ஆறுபேரின் அடியில் விழுந்து இருந்தவனின் காலரை பிடித்து தனக்கு நேர் நிறுத்தியவன்.

“அண்ணலும் நோக்கினால். அவளும் நோக்கினால். என்று பாடம் மட்டும் தான் நடத்தனும். இடையில நீ நோக்க கூடாது.அப்படி நோக்கினால்….?” என்று பேசிக் கொண்டே இருந்தவன், தன் காலின் முட்டியை அவனின் இடுப்புக்கு கீழே பதம் பார்த்து விட்டு, தன் விரலை காட்டி மிரட்டி விட்டு சென்றவனை இப்போது அனைவரும் பயம் கொண்டு பார்த்தனர்.

அதில் நம் சந்தியா மட்டும்…. “இனிமே அவன் மனைவிய கூட பாக்க முடியாது போலவே.” என்று சொன்னவளின் பேச்சை கேட்டு எப்போதும் போல்  அனைவரும் கோரசாக “உஸ்…” என்று பயத்துடன் தங்களின் விரலை உதட்டின் மீது வைத்தனர்.

அண்ணா சாலையில் உள்ள அந்த ஏழு அடுக்கு மாடி கட்டிடத்தின் முன் தன் ரோல்ஸ் ராய்ஸ் காரை நிறுத்திய சார்லஸ், அது வரை கழட்டி வைத்திருந்த கூலிங்கிலாஸை எடுத்து மாட்டிக் கொண்டு தன் பார்வையை மறைத்து விட்டு சுற்றும் முற்றும் தன் கூர்மையான பார்வையுடன் எடைப்போட்டுக் கொண்டே அந்த கட்டித்தில் மூன்றாம் மாடியில் இருக்கும் தன் அலுவலகத்துக்கு மின்தூக்கியில் நுழைய, கூடவே அவனை பின் தொடர்ந்து மற்ற ஆறுபேரும் நுழைந்ததும் கதவு அடைக்கும் வேளயில்….

“வெயிட், வெயிட்.” என்று சொல்லிக் கொண்டே அவளும் அந்த மின்தூக்கியில் நுழைந்ததும் கதவு அடைத்துக் கொள்ள.

“அப்பா….” என்று ஆசுவாசம் அடைந்தது போல் மூச்சி வாங்கி நிறுத்தியவள். பின் தன் கைபையில் உள்ள அடையாள அட்டையைய் எடுத்து  தன் கழுத்தில் மாட்டிக் கொண்டு, சாவுகாசமாய் அப்போது தான் அந்த மின் தூக்கியில் இருப்பவர்களை சுற்றி பார்த்தவளின் கண் பெரியதாக விரிந்தது.

வந்ததில் இருந்து அவளையே பார்த்திருந்த சார்லஸ், அவள் தங்களை  பார்த்ததும் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டாலும், தங்களை பார்த்த உடன்  கண்கள் விரிந்ததை நினைத்து “யப்பா எவ்வளவு பெரிய கண்.” என்று மனதில் நினைத்த வேளை நம்மை  தெரியுமா இந்த பெண்ணுக்கு என்று திரும்பவும் அவளை பார்த்த போது, அவள் பார்வை திருப்பாது அப்போதும் அவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

இவன் தான் பார்வை திருப்ப வேண்டியதாக போய் விட்டது. என்ன இந்த பெண் இப்படி வெச்ச கண்ணு மாறம பாக்குது, அதுவும் ஆம்பிளையா இருக்க லிப்டுல, எதுன்னா நடக்கலாம். அந்த பயம் இல்லாம இருப்பதோடு, இப்படி பார்த்தும் வைக்குதே….என்று நினைக்கும் வேளயில் அவர்கள்  இறங்க வேண்டிய மூன்றாம் தளம் வந்து விட.

அவர்கள் போகும் போது … “ இந்த ப்ளோரிலும் ஐ.டி கம்பெனி இருக்கா…..?” என்ற இனிமையான குரலில், சார்லஸ் அப்படியே நின்று  விட.

அவனின் எடுபிடியும்  பின் தூக்கியின் கதவின் நடுவில்  நின்று விட்டதால் மின்தூக்கியில் பதிவு செய்து இருந்த பெண் குரல் “கதவை சாத்தவும், கதவை சாத்தவும்.” என்று சொன்னவுடன் தான் தாங்கள் வழியில் நின்று இருக்கிறோம் என்று உணர்ந்து அவர்கள் ஒதுங்கியதும், மின்தூக்கி தன்னால் அவள் பணிபுரியும் ஐ.டி கம்பெனியான  ஐந்தாம் தளத்தை நோக்கி உயர்ந்தது.

அப்போதும் அந்த பெண்ணின் பார்வை தன் மேல்  இருப்பதை பார்த்த வாரே அவன் அறைக்கு நுழைந்ததும், அவன் வேலை  வேறு எதுவும் நினைக்க விடாது அவனை இழுத்துக் கொண்டது.

மதியம் வேளை  அவனின் அஸிஸ்டெண்ட் “சார் உங்கல பாக்க அமைச்சர்  சந்தானம் வந்து இருக்காரு….” என்று சொன்னதும்.

“அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா….?”

“இல்ல சார். ஆனா….”

“இந்த ஆனா எல்லாம் வேண்டாம்.” என்று அமைச்சரை பார்க்க முடியாது என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, அந்த அமைச்சர் வந்து விட.

தன் அஸிச்டெண்டை முறைத்த சார்லஸ்….அந்த அமைச்சரை பார்த்து மையமாக ஒரு புன்னகை புரிந்தவனிடம்.

“சாரி உங்கல அப்பாயிம்மெண்ட் இல்லாம பாக்க முடியாதுன்னு தெரியும். ஆனா இது ரொம்ப அவசரம் அதான் நானே வந்துட்டேன்.” என்று மன்னிப்பு வேண்டியவரிடம்.

பரவாயில்லை என்பது போல் கை காட்டியவன். “இது என் லன்ச் டைம், வித் யூ ஜாயின்.” என்று கேட்டவனிடம் மறுப்பாய் தலை அசைத்த அந்த அமைச்சர்.

“நீங்க சாப்பிடுங்க சார்.” என்று சொன்னவர். தான் சாப்பிட்டேன் என்று சொல்லவில்லை. அதில் இருந்து அவர் இன்னும் சாப்பிடவில்லை என்று அறிந்துக் கொண்டவன்.

“சாப்பிடாம இருந்தா பிரச்சனை தீர்ந்திடாது. சாப்பிட்டு நிதானமா யோசிச்சா தான் தீரும்.”

“கம்…” என்று அவரையும் உணவு உண்ண அழைத்து விட்டு உணவு எடுத்துக் கொண்டு வந்தவனிடம்,  அவருக்கும் சேர்த்து பரிமாறும் மாறு சொன்னதும்.

மறுக்க முடியாது அமர்ந்த அமைச்சருக்கும், சார்லசுக்கும் உணவு பரிமாறுயதும், அவனை போகும் மாறு சொல்லி விட்டு இரண்டு வாய் உண்ட பின்….

“என்ன விஷயம்….?” நேரிடையாக பிரச்சனையை கேட்க.

ஏற்கனவே சாப்பிட முடியாது உணவை வாயில் திணித்தவர், சார்லஸின் இந்த கேள்வியில் உணவு தொண்டை குழியில் சிக்கி கொண்டு இருமியவரின் அருகில் தண்ணீரை  நகர்த்தி விட்டு தன் உணவை தொடர்ந்தான்.

தண்ணீர் குடித்து விட்டு இப்போது கேட்பார் என்று உணவை எடுக்காது அவனையே பார்த்திருக்க, அவனோ கைக்கும், வாய்க்கும் சண்டை இடுவதிலேயே முனைப்பாக இருந்தான்.

பின் அந்த அமைச்சரே…. “ எனக்கு இரண்டு பெண்கள்.” என்று அவர் பேச ஆராம்பித்ததும், தான் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு அவரின் பேச்சை கவனித்தான்.

“இரண்டு பெண்களுக்குமே கல்யாணம் ஆயிடுச்சி. இரண்டு மருமகனுமே பிஸ்னஸ் தான் பண்றாங்க.

முதல் பொண்ணும், மாப்பிள்ளையும், போன வாரம்  ஈ.ஸி.ஆரில் இருக்கும் ஒரு ஓட்டலுக்கு பார்ட்டிக்கு போனவங்க, ரொம்ப டைமானதால அங்கயே தங்கி ,காலையில் தான் வீட்டுக்கு வந்தாங்க” இது வரை தங்கு தடையின்றி சொல்லிக் கொண்டு வந்தவர்.

பின்  தயக்கத்துடன்…. “  அடுத்த நாள் மாப்பிள்ளைக்கு ஒரு வீடியோ வந்து இருக்கு, அத ஓபன் பண்ணி பார்த்தா….அன்னிக்கு அந்த ஓட்டல தங்குனப்ப மாப்பிள்ளையும், பொண்ணையும்,” அதற்க்கு மேல் ஒரு தகப்பனாய் சொல்ல முடியாது நிறுத்தியவரின் நிலை புரிந்து, அதை பற்றி கேளாது.

“எவ்வளவு டிமாண்ட்….”

“பத்து கோடி…”

“எங்க வந்து எப்போ  கொடுக்க சொன்னாங்க. …?”

“கொடுத்தாச்சி…” என்று சொன்னதும், “ஓ…” என்று நிறுத்தியவன்.

பின்… “தொடருதா..?”

“ஆமாம். இப்போ இருபது கோடி கேட்குறாங்க.”

“ம்….” என்று நிறுத்தியவன்.

“இதை கொடுத்துட்டா, அவங்க அடுத்த வாட்டி நாப்பது  கோடி கேப்பாங்க.”

“அதுக்கு தான் உங்க கிட்ட வந்தேன்.”

“அந்த பத்து கோடி மாப்பிள்ளையோடதா…? உங்களோடதா…?”

“என்னோடது தான். இப்போ மாப்பிள்ளைக்கு கொஞ்சம் பிஸினசுல லாஸ்.”

“மாப்பிள்ளை எப்படி…?”

“அய்யோ தங்கமானவரு …”

“உரசி பார்த்துடலாம்” என்று சொன்னவன். அவர் ஏதும் பேசும் முன் “அவங்க திரும்ப பணம் கேட்டா ஒரு வாரத்துக்கு இழுத்தடிங்க.”

“இதலா என் பொண்ணு.”

“கவல படாதிங்க. அந்த வீடியோவ அவ்வளவு சீக்கிரம் கசிய விட மாட்டாங்க. அதுவும் ஒரு தடவ பணம் பார்த்த பின். கவல படாம போங்க. ஒரு வாரத்துக்குள்ள  பிரச்சனை முடிஞ்சி இருக்கும்.” என்று சொன்னதும்.

“ உங்க பீஸ் எவ்வளவு …?” என்று கேட்ட அமைச்சருக்கு….

“அவங்க கேட்ட அமொண்ட்ட  என் அக்கவுண்டுல போட்டுடுங்க.” அந்த தொகை மிக அதிகம் என்றாலும் அந்த அமைச்சர் ஒத்துக் கொண்டார்.இவனிடம் கொடுத்தால் பிரச்சனை தீர்ந்தது என்று நிம்மதியாக இருக்கலாம்.

 

Advertisement