Advertisement

அத்தியாயம்—-15

“என்னப்பா இளச்சி போய் இருக்க. உடம்ப கொஞ்ச  பாத்துக்க கூடாதா…..?” அனைவரிடமும் கெடு பிடி காட்டும் அகிலாண்ட நாயகி, தன் பேரனிடம் மட்டும் எப்போதும் அன்பு முகம் மட்டுமே,

ருத்ரனின் கை பிடித்து ஆதாங்கத்துடன் கேட்டவருக்கு….. “க்ராண்மா நான் எப்போதும் இருப்பது போல் தான் இருக்கேன்.” தன் பாட்டி வருத்துப்படுவது பிடிக்காது அவரின் தாடை  பிடித்து பேசிய ருத்ரன்.

பின்…. “என்ன க்ராண்மா நான் கண் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனதோட சரியா. இந்த ஒரு வருஷம்  செக்கப்புக்கு போகலையா……?”

தான் வாங்கி கொடுத்த கண்ணாடியே அணிந்து இருக்கிறாரே….என்று பார்த்து விட்டு கேட்க.

“நீ இளச்சிட்டேன்னு சொன்னதுக்கு, என்னை குருடியா ஆக்கிடுவே போலவே…..” தன் பேரனுக்கு ஏத்தப்படி பேசியவன்.

பின் பேரன் கேட்ட கேள்விக்கு பதிலாய்…. “போன  வாரம் தான் உன் மாமன் கூட்டிட்டு

போனான் . பவர் அப்படியேஎ இருக்கவே ப்ரேம் மாத்தலே ருத்ரா.” என்று சொன்னவர்.

“ சரி களைப்பா தெரியற  பாரு. உன் ரூமுக்கு போய் குளிச்சிட்டு வாப்பா, மலரம்மா கிட்ட உனக்கு பிடிச்ச ஆப்பம் சுட சொல்லி இருந்தேன், அது ரெடியாடுச்சான்னு பார்த்துட்டு வர்றேன்.” அப்போது தான் ஊரில் இருந்து வந்த பேரனின் களைப்பை பார்த்து சொல்ல.

“சரி க்ராண்மா….” என்றவன்.

வீட்டை சுற்றி பார்த்தவன்…. “என்ன பாட்டி வீட்டில் யாரும் இல்ல போல.” அவன் யாரை தேடுகிறான் என்று அவனுக்கே தெரியாது கண்ணை சுழல விட்ட வாறு கேட்டான்.

“உன் அம்மா ஊரில் அறுவடைன்னு போய் இருக்கா….” என்று சொன்னவரிடம்….

“நேத்து அம்மா கிட்ட போன்லே பேசும் போது சொன்னாங்க  க்ராண்மா.” அம்மா இல்லை என்பது தெரியும் என்று பேரன் சொன்னதும்.

“ ஓ  உன் மாமனை கேட்குறியா…..?அது தான் புதுசா வந்து இருக்காலே….அவ காலேஜில் ஜூங்கு, ஜக்கான்னு குதிக்க போறாளாம்.  அதுக்கு இவன் வேலை எல்லாம் விட்டுட்டு அவ பொண்டாட்டி பொண்ண கூட்டிட்டு பாக்க போய் இருக்கான்.” அகிலாண்ட நாயகி சொல்வதற்க்கும் அவர்கள் குடும்ப சகிதமாய்  வீட்டுக்குள் அடி எடுத்து வைப்பதற்க்கும் சரியாக இருந்தது.

க்ராண்மா யாரை சொல்கிறார்கள் என்பதை பாட்டி பேச்சை ஆராம்பித்த உடனே ருத்ரன் கண்டு கொண்டான்.

தான் ஏதாவது மறுத்து பேசினால், இன்னும் வார்த்தை கூடுமே தவிர குறையாது. அதனால் பாட்டி பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாது  அமைதி காத்தான்.

ஆனால் மாமா தன் குடும்பத்துடன் வீட்டுக்குள் நுழைவதை பார்த்து….. “க்ராண்மா போதும்.”  ருத்ரன் எப்போதும் தன் கோபத்தை சத்தம் போட்டு எல்லாம் காட்ட மாட்டான்.

பல்லை கடித்து அவன் பேசுவதில் இருந்தே அவன் கோபத்தை கண்டு கொண்டு வந்த அகிலாண்டநாயகி.

எப்போதும் இது போல் பேரன் பேசினால் அமைதி காத்து விடுவார். ஆனால் இன்று அகிலாண்ட நாயகியால் அது போல் அமைதியாக போக முடியவில்லை.

காரணம் தன்னிடம் கோபத்தை காட்டும் தன் ஆசைபேரன், மஞ்சுவை பார்த்த அவன் கண்ணில்  தெரிந்த அதிகப்படியான பாசத்தில்….தன் பேச்சை நிறுத்தாது.

“நான் ஏன்டா பேசாம இருக்கனும். இது என் வீடு. என் மனசுக்கு பட்ட்து பேசுவேன்.” அவர் என்னவோ ருத்ரன் மஞ்சு மனது நோக கூடாது என்று தான் தன் வாயை அடைக்கிறான்.

இது என்ன அவள் வீடா….?என் வீடு. என் விருப்பத்துக்கு பேசுவேன். அதை மனதில் நினைத்து தான் சொன்னார்.

ஆனால் ருத்ரனோ….கோபத்துடன்  வெகுண்டு…. “ஓ உங்க வீடு….உங்க வீடு.” என்று இரண்டு தரம் தனக்கு சொல்வது போல் சொன்னவன்.

பின்….. “ நீங்க சொல்வது சரி தான். இது தாத்தா கட்டிய வீடு. அவருக்கு அடுத்து தயா மாமாவுக்கும், அவர் வாரிசுக்கும் தான். நீங்க சொல்வது சரி தான் க்ராண்மா. உங்க வீடு உங்க விருப்பம் போல் பேசலாம்.

நான் எப்படி தடுக்க முடியும். ஆனா எனக்கு பிடிக்காது பேசினால் என்னால் அமைதியாக இருக்க முடியாதே…என்ன செய்யலாம்.” தன் க்ராண்விடம் கேள்வி எழுப்பியவன்.

பதிலாய் அவனே….. “ என் வீட்டுக்கு போவது தான் அதற்க்கு ஒரே  தீர்வு.” ருத்ரன் நோகாமல், அகிலாண்ட நாயகி மீது குண்டை தூக்கி போட்டான்.

ஆம் அகிலாண்ட நாயகியைய் பொறுத்த வரை. அந்த வார்த்தை  அணுகுண்டுக்கும் மேல் தான்.

ருத்ரன் தலை எடுத்த உடனே….தன் அன்னையிடம்….. “அம்மா நமக்குன்னு ஒரு பங்களா வாங்கிட்டேன் போகலாம்.” என்று தான் அழைத்தான். அவர் தந்தை வழி வந்த வீட்டுக்கு போனால் தந்தை நியாபகம் அவரை வருத்த செய்யும் என்று புது பங்களாவே தன் ரசனைக்கு ஏற்ப கட்டி விட்டான்.

ஆனால் அகிலாண்ட நாயகி தான்.   “நான் உன்னை எப்படி எல்லாம் வளர்த்தேன். நீ போனா அந்த சோகத்திலேயே நான் செத்துடுவேன்.” அகிலாண்ட நாயகி  பேசியது சினிமா வசனமாக இருக்கலாம்.

ஆனால் அவன் மீது அவர் வைத்த பாசம் உண்மையானது. கணவனை இழந்து ஐந்து வயது மகனோடு வந்த மகள், கணவன் இறந்த சோகத்திலும், தன் கணவனை கொன்றவர்களுக்கு தண்டனை வாங்கி தருவதிலுமே முனைப்பாக இருந்தார்.

ருத்ரன் அப்போது தான் ஸ்லோ பாய்சன் கொடுக்க பட்ட காலம். மகளின் சாமார்த்தியத்தில் ஆராம்பத்திலேயே கண்டு பிடிக்க பட்டாலும், அதன் வேலையை அது காட்ட தானே செய்யும்.

அப்போது தான் தன் மார்பிலேயே போட்டு தான் ருத்ரனை தூங்க வைப்பார். அதுவும் தன் பேரனை கொல்ல வேறு ஏதாவது அவர்கள் திட்டம் வைத்து இருந்தால்…

அந்த பயத்தில் தன் மேற்பார்வையில் வைத்திருந்த தொழிலை கூட தன் மகன் வசத்தில் மொத்தமாக ஒப்படைத்து விட்டார்.அந்த அளவுக்கு பேரன் மீது பாசம்.

அப்படி பாசம் வைத்த பேரன் , வீட்டை விட்டு சென்று விடுவானா….என்ற பதட்டத்தில்…. “வேண்டாம் ராசா. இனி உனக்கு பிடிக்காது எதுவும் பேச மாட்டேன்.என் வீடுன்னு சொன்னது தப்பு தான் ராசா.”  இது வரை யாரிடமும் பணிந்து பேசாது, கம்பீரத்தை மட்டுமே முகத்தில் வைத்து ஒரு மிடுக்கோடு வளம் வருபவர். தன் பொருட்டு தன்நிலை மறந்து தன்னிடம் கெஞ்சும் பாட்டி மீது இறக்கம் வந்தாலும், இப்போது இறங்கி போனால் திரும்ப திரும்ப மஞ்சு  மனது புண்படும் படி தான் பேசி வைப்பார்.

அதுவும் தொழிலை வைத்து மஞ்சுவை ஒரு வருடமாக கவனிக்காமல் விட்ட குற்றவுணர்ச்சியைய் ஈடுகட்டும் வகையாக, இனி அவளை குடும்பத்தோடு இணைய வைக்க வேண்டும்.

முக்கியமாய் பாட்டி மஞ்சுவை தன் பேத்தியாய் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்க்கு இந்த கடுமையான முகம்  அவசியம் என்று தன் கோப முகத்தை மறைக்காது…..

“இனி ஒரு தரம் எனக்கு பிடிக்காத விஷயம் இந்த  வீட்டில் பேசினாலோ…இல்லை நடந்தாலோ….நான் வீட்டை விட்டு போவது உறுதி.” என்ற சொல்லோடு தன் பாட்டியிடம் பேச்சை முடித்தவன்.

ருத்ரனின் பேச்சை தடை செய்யாது ஒரு பார்வையாளனாய் மட்டும் அங்கு நடப்பதை பார்த்திருந்த மாமனிடம்…. “என்ன மாமா அங்கேயே நின்னுட்டிங்க.” பேச்சு தன் மாமனிடம் இருந்தாலும், பார்வை மொத்தமும் மஞ்சுவிடம் மட்டுமே….

ஒரு  வருடத்தில் ஒரு பெண்ணிடம் இந்த அளவுக்கு  மாற்றம் வருமா…..? வரும். அதற்க்கு பதிலாய் மஞ்சு எதிரில் இருக்கும் போது உனக்கு சந்தேகமா …..?அவன் மனசாட்சியே அவனுக்கு பதில் அளித்தது.

பார்வை மட்டுமே அவளிடம் செலுத்தினால் நன்றாக இருக்காது என்று…. “ எப்படி இருக்கே மஞ்சு….? ஏதோ காலேஜில் டான்ஸ் பண்ரேன்னு க்ராண்மா சொன்னாங்க. நீ ஆடுவியா…..?”

இந்த ஒரு வருட இடைவெளி எல்லாம் அவனிடம் இல்லை. என்னவோ  தினம் தோறும் அவளிடம் அவன் பேசும் தோரணை போல் தான் அவன்  பேச்சு இருந்தது.

மஞ்சுவுக்கு தான் ஒரு வருடம் முன் ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் பேசியது போல் இப்போது பேச முடியவில்லை. அதுவும் பாட்டியின் முன்நிலையில் நாக்கு பசை  போட்டு ஒட்டியது போல் ஒட்டிக் கொண்டது

அதனால் அவன் கேட்டதுக்கு உடனடியாக பதில் கொடுக்க முடியாது போய் விட “என்ன மஞ்சு நாட்டை விட்டு போன இந்த ஒரு வருடத்தில் இந்த அத்தானை  மறந்துட்டியா …..?” என்று கேட்டவன்.

பின்….. “ இது நல்லதுக்கு இல்லையே……” என்று அவனே பதிலாய் அளித்து விட்டு …..

“ஆனா நான்  உன்னை மறக்கல.” என்று சொன்னதோடு தன் லக்கேஜில் இருந்து ஒரு முத்து சரத்தை எடுத்து அவளிடம் நீட்ட.

அகிலாண்ட நாயகியைய் பார்த்துக் கொண்டே தயங்கிய படி அதை பெற்றுக் கொண்டதும்.

“குட்….” என்று  மெச்சியவன். மாமனின் அடுத்த மகளான மதுவுக்கு….கழுத்தை ஒட்டியது போல் சின்ன  முத்து சரத்தை எடுத்து கொடுத்ததும், அதை ஆசையோடு அப்போதே கழுத்தில் போட்டு தன்  அத்தானிடம்…..

“அத்தான் நல்லா இருக்கா…..?”

“உனக்கு என்ன குட்டிம்மா…எது போட்டாலும் நல்லா இருக்கும்.” மாமன் மகளின் தலை மீது கை வைத்து கொஞ்ச.

இத்தனை நேரம் கட்டுப்படுத்தி வைத்திருந்த வாய்….. “ அது தான் அவளுக்கு சின்னதா வாங்கியாந்தியா…..?” அகிலாண்ட நாயகி  வெடுக்கென்று கேட்டார்.

மதுவுக்கு  நகை எதுவும் வாங்கி வரவில்லை என்றாலும் அவருக்கு கவலை இல்லை.

பரம்பரை வைரம்  இரு பெட்டி நிறைய இருக்கிறது என்றால்…..மது பிறந்ததில் இருந்து….

தான் ஆசைப்பட்ட வடிவில் தங்கள் குடும்ப ஆச்சாரியார் கொண்டு நிறைய வைர நகையைய் தன் ஆசை பேத்திக்கும் மட்டும் அல்லாது தன் பேரனின் வருங்கால மனைவிக்கும் சேர்த்து செய்து குவித்து  வைத்துதிருக்கிறார்.

அவரின் இப்போதைய பிரச்சனை நகை கிடையாது. மஞ்சு…அது எப்படி தன் பேத்திக்கு வாங்கும் போது மஞ்சுவுக்கும் வாங்குவான். அதுவும் அளவில் சிறியதாய்…

அப்போ மதுவோடு மஞ்சு முக்கியமா……? இது இதோடு போனால் பரவாயில்லை.

இந்த குட்டி வேறு பாக்க பளிச்சுன்னு ஜோரா இருக்கா…..என்ன தான் தன் பேரன் தடம் மாற மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தாலும், அதையும் தான்டி என்னவோ….நடந்து விடுமோ அந்த பயம் மஞ்சுவின் அழகு மேன் மேலும் கூடி  வருவதை பார்த்து மனதில் கிலி பிடித்து கொண்டது.

அகிலாண்ட நாயகி பயப்படுவதிலும் ஒரு அர்த்தம் இருக்க தான் செய்தது. பிறப்பிலேயே அழகில் தன் தாயை கொண்டு  பிறந்த மஞ்சு.

இந்த ஒரு வருடத்தில் மேலும் பட்டை தீட்டிய வைரம் போல் ஜொலிக்க கண்டு, அவருக்கு தவறாக ஏதும் நடந்து விடுமோ….?

அதனால் தான் எப்போது வெளிநாட்டுக்கு சென்றால், இந்தியாவுக்கு எப்போது வருவாய் என்று தொல்லை கொடுப்பவர். இந்த தடவை சரி பேரன் வெளிநாட்டிலேயே இருக்கட்டும்.

இன்னும் கொஞ்ச நாளில் அந்த குட்டியோட படிப்பு முடிஞ்சுடும். இந்த சாகர் பையன்  இங்கு வந்தாலே அவன் பார்வை மொத்தமும் இந்த குட்டியிடம் மட்டும் தான்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல்….இந்த குட்டிய அந்த பையலுக்கு கட்டி வெச்சிட்டா…..அவ ஆத்தாக்காரியின் ஆசைக்கும்  முடிவு கட்டிடலாம்.

அண்ணன்  ஆகும் உறவில்  இருப்பனை தன் மகளுக்கு எப்படி கட்டி வைக்க கேப்பாள் என்று  பார்க்கிறேன்.

ஆம் சகுந்தாலுவுக்கு தன் மகளை ருத்ரனுக்கு திருமணம் செய்து வைத்திட வேண்டும் என்பது ஆசை, என்பதை விட பேராசை, என்று தான் சொல்ல வேண்டும்.

அதுவும் அகிலாண்ட நாயகி செய்யும் அவமதிப்பில்….இரு இரு என் பொண்ணு மட்டும் இந்த வீட்டுக்கு வரட்டும் அப்புறம் இருக்கு உனக்கு. மனதோடு மட்டும் தான் சகுந்தலாவால் பேசிக் கொள்ள முடியும்.

தான் நினைப்பது தெரிந்தால் கூட அவ்வளவு தான் அந்தம்மா…. ருத்ரன் தான் அந்த வீட்டின் அச்சாணி என்பது இத்தனை வருட பழக்கத்தில் தெரியும். அந்த வீட்டுக்குள் தன் மகள் நுழைந்து விட்டால் போதும். இது தான் அவருடைய என்னமாய் இருந்தது.

கணவனைய் இழந்து இவ்வளவு பெரிய தொழிலை கட்டி காத்த அகிலாண்ட நாயகிக்கு தெரியாதா மனிதன் மனநிலை. சகுந்தலாவை  பற்றி தெள்ள தெளிவாக கணித்து வைத்திருந்த அகிலாண்டம். அவன் மகனுக்கு மஞ்சுவை திருமணம் செய்து வைத்து விட்டால்…

திருமணம் என்ற பெயரில் மஞ்சுவை ஒட்டு மொத்தமாக தலையும் முழுகி விடலாம். மகனுக்கு கட்டி வைத்த பெண்ணின் அத்தை மகனை தன் மகளுக்கு எப்படி கட்டி வைப்பாள். இவரின் திட்டம் பலிக்குமா…..இல்லை மஞ்சுவின் விருப்பம் நிறைவேறுமா….தொழிலில் அக்குவேறு ஆணி  வேறாக தெரிந்து வைத்திருக்கும் ருத்ரன், தன் மனது தெரியாது தன் வாழ்க்கையைய் நட்ட நடு ஆற்றில் விட்டு விடுவானா….?பார்க்கலாம்.

 

Advertisement