Advertisement

அத்தியாயம்—-14

மஞ்சுவின் முகநூலை ஹாங் செய்து அவள் யார் யாருடன் தொடர்பு கொள்கிறாள் என்று அறிய ஒரு நிமிடம் போதாது.

முதலில் ருத்ரன் அதை தான் யோசித்தான். யோசித்த மறுநிமிடமே…. “சே வீட்டு பெண்ணை வேவு பார்பதா…..?ருத்ரா வர வர தொழிலையும், குடும்பத்தையும்  ஒன்னா பாக்குற….இது உனக்கு மட்டும் இல்ல உன் குடும்பத்துக்கும் நல்லது இல்லை.

ருத்ரன் சில சமயம் தன் தொழில் பொருட்டு இது மாதிரி செய்து இருக்கிறான். அதே பழக்க தோஷத்தில் மஞ்சுவை பற்றி அறிய அந்த எண்ணம் வந்து விட்டது.

பின் அவள் யார்….?யாருடன் சேட்டிங் செய்கிறாள். அவள்  நட்பு வட்டத்தில் யார் யார் இருக்கிறார்கள் தெரிந்தே ஆகவேண்டும். ஏதோ தவறு நடக்கிறது. அவன்  உள்மனம் அடித்து சொன்னது.

மேலும் அதை பற்றி யோசிக்க விடாது அவன் கைய் பேசி தொடர்ந்து தொல்லை கொடுக்க.

“சே….” என்று சலித்துக் கொண்டே…..கைய்பேசியைய்  உயிர்பித்தவனுக்கு மறுபக்கம் சொன்ன செய்தியில் , மஞ்சு விஷயம் என்ன அனைத்து விஷயமும் பின்னுக்கு தள்ளப்பட்டது.

“தோ வந்துடுறேன்……” என்று  பேசியைய் அணைத்தவன். தங்களுக்கு சொந்தமான தனிவிமானத்தில் ஆஸ்ரேலியாவுக்கு பறந்தான்.

தன் அலுவலக அறையில் தன் தொழில் துறை பங்குதாரர் ஷானிடம்….. (அவர்களின் ஆங்கில உரையாடல் இங்கு தமிழில்.)

“இவ்வளவு தூரம் ஏன் போக விட்டிங்க மிஸ்டர்  ஷான்.” ஷான் என்ன நினைத்துக் கொள்வான் என்று எல்லாம்  நினைக்காமல் நேரிடையா கேட்க.

“நான் இவ்வளவு  தூரம் போகுமுன்னு நினைகல  மிஸ்டர் ருத்ரன்.”

“ஏன் நினைக்கல நினச்சி இருக்கனும்.  எந்த ஒரு விஷயத்தையும் நாம் சின்னதா நினைக்க கூடாது மிஸ்டர் ஷான்.  யானை காதில் போன சின்ன எரும்பு தான் அவ்வளவு கொடச்சல் கொடுக்கும்…..” என்ன இருந்தாலும் இதை முதலிலே பார்த்து இருக்க வேண்டும் என்று சொன்னவனின் பேச்சில் ஷானுக்கு கொஞ்சம்  கோபம் வரப்பார்த்தது.

ருத்ரனும், தானும் சம அளவு பங்குதார்கள். இதில் ஏற்படும் இழப்பு தனக்கும் தான். தான் என்னவோ எப்படியும் போகட்டும் என்று வேண்டும் என்றே விட்டது போல் அல்லவா பேசுகிறான், என்று மனதில் ருத்ரனை வசைபாடியவன்.

எதிரில் தன் கோபத்தின் அளவை கொஞ்ச மேனும் ருத்ரனுக்கு காட்டி விட வேண்டும் என்று…

“எனக்கு என்ன தெரியும்….? ஒரு நடிகன் கிஸ் பண்ணதுக்கு உங்க தமிழ் நாட்டு பொண்ணு அவ்வளவு பெரிய பிரச்சனை  செய்வான்னு.”

இவ்வளவு நேரமும் தொழிலில் கெட்ட பெயர் வந்து விட்டதே…..அதை எப்படி சால்வ் செய்வது என்ற  எரிச்சல் மட்டுமே ருத்ரனின் பேச்சில், இப்போது அவன் பேச்சில்…

“ என்ன நடிகன்னா  தமிழ் நாட்டு பொண்ணுங்க ஈன்னு இளிச்சிட்டு போவாங்கன்னு நினச்சிங்கலா…..?” முதலில் பேசிய பேச்சே கோபம் பேச்சு என்று கருதிய ஷான்….ருத்ரனின்  இந்த மாறுப்பட்ட பேச்சும், குரலில் ஏறிய கடினத்தனையிலும், …

“ இல்ல  இல்ல மிஸ்டர் ருத்ரன். நான் அந்த அர்த்தத்துல சொல்லலே… நான் பேசினத நீங்க தப்பா அர்த்தம் செஞ்சிட்டிங்க. ஒரு வயசுல நடிக்கன்னா ஒரு க்ரேஸி இருக்க தானே செய்யும். நான் அத தான் மென்ஷன் பண்ணேன்.” தன் தப்பான பேச்சை  தன் பேச்சால் பூச பார்க்க.

“தப்பா பேசினா தாப்பா தான் அர்த்தம் புரிஞ்சிப்பாங்க மிஸ்டர் ஷான். எங்க ஊரு பெண்ணுங்களுக்கு ஒருத்தன பிடிச்சி இருந்தா அவனுக்காக என்னவேனா செய்வாங்க.

ஆனா  தன் மனதுக்கு நெருக்கம் ஆகாத எவன் ஒருத்தனையும் ….” தன் மூடியை  தொட்டு காமித்து…. “இத கூட தோட அலோவ் பண்ண மாட்டாங்க.

பார்த்திங்கல….எவ்வளவு பெரிய நடிகன் எந்த பயமும் இல்லாம கம்ப்ளைண்ட் கொடுத்ததை இது தான் எங்க தமிழ் நாட்டு பெண். நீங்க சொன்ன க்ரேஸி இருக்க தான் செய்யும். ஆனா அதுக்காக அவன் தொட்டா  எல்லாம் சும்மா இருக்க மாட்டாங்க.”

தந்தை இழந்து தாயிடம் வளர்ந்து, கண்டிப்பு இருந்தாலும் ஒழுக்கத்தையும், தொழிலையும் சேர்த்து கத்துக் கொடுத்த பாட்டியின் மூலம் பெண்கள் என்றால்  போற்றப்பட வேண்டியவர்கள்.

அவன் வழ்க்கையிலும் மேல் வந்து விழும் ஒரு சில பெண்களை பார்த்து இருக்கிறான். ஆனால் அதற்க்காக ஒட்டு மொத்த பெண்களே….. இப்படி தான் என்ற சாயம் பூச அவன் தயாராய் இல்லை. தன்  தாயும் ஒரு பெண். தனக்கு ஒரு சந்ததியைய் தரப்போகிறவளும் ஒரு பெண்ணே…அந்த பெண்ணினத்தை இழிவு படுத்த அவன் தயாராய் இல்லை.

“இட்ஸ் ஒகே மிஸ்டர் ருத்ரன். நான் அப்படி பேசினது தப்பு தான்.” என்று  தழைந்து பேசியவனை யோசனையுடன் பார்த்தான்.

தொழிலில் அவன் மாமன் அவனுக்கு சொல்லி கொடுத்த முதல் பாடமே…. நெஞ்சம் நிமிர்த்தி பேசுபவனை நம்பி விடு. அவனிடத்தில் தப்பு இருக்காது. எவன் ஒருவன்  உன்னிடத்தில்

அளவுக்கு அதிகமாய் தழைந்து போகிறானோ…..அவனிடம் நீ அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதே….

முதலில் கம்பிளையின் கொடுத்த பெண் பிரச்சனையைய் பார்ப்போம் பிறகு இவனை பார்ப்போம் என்று ….

“அந்த பெண் பெயர் என்ன…..?ஷானிடன் கேட்க.

“செல்வி மிஸ்டர் ருத்ரன்.”

“எடுத்ததும் கம்பிளைண்ட் செய்துட்டாங்கலா மிஸ்டர் ஷான்?”

என்ன தான் தைரியமான பெண் என்றாலும், இது மாதிரி விஷயத்தை நேரிடையாக பத்திரிக்கையிடம் செல்ல வேண்டும் என்று நினைத்து இருக்க மாட்டாள். அந்த  யூகத்தில் தான் கேட்டான்.

அவன் யூகம் சரியே என்பது போல்…… “ முதல்ல ப்ளைட்ல இருந்த விமானப்பணி பெண்ணிடம் தான் சொல்லி இருக்கா…” என்று இழுத்து நிறுத்தியவனிடம்….

“அதுக்கு ரெஸ்பான்ஸ் கிடச்சி இருக்காது. ஏன்னா அவன் பெரிய இடம்.” என்று நக்கலாக சொன்னவன்.

பின்….. “அந்த நடிகன் ஏன் பிஸ்னஸ் க்ளாஸில் வரல.” கேள்வி எழுப்பியவனிடம்…

“அது கேட்கல ருத்ரன்.”

“சரி அந்த பொண்ணு பேரு செல்வி. மத்த  டீடையில்ஸ் சொல்லு ஷான்.”

“B.E சென்னையில் முடிச்சிட்டு மேல் படிப்புக்காக  U.S போகும் போது தான் இந்த பிரச்சனை. அப்பா மத்திய அரசில் வேலை பாக்குறாரு. அம்மா இல்லத்தரசி  அவங்களுக்கு செல்வி தான் ஒரே பெண்.”

அனைத்தையும் பொறுமையாக கேட்ட ருத்ரன்….. “ செல்வி  முதல்ல அனுகிய அந்த விமானப்பணி பெண்ணை வேலையில் இருந்து   தூக்குங்க.” இடையில் பேச வந்த ஷானின் பேச்சை தடுத்து.

“பார்மால்ட்டீசுன்னு எந்த சமாதானமும்  எனக்கு தேவையில்லை. அடுத்தே அந்த பெண் பத்திரிக்கை காரங்களை அனுகிட்டாங்கலா….” இதிலும் அவனுக்கு சந்தேகமே….

மத்தியதர பெண்கள் அவ்வளவு சீக்கிரம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். இதிலும் அவன் யூகம் பொய் உரைக்கவில்லை.

“விமானத்தில்  ஒரு பத்திரிக்கைகாரரும் இருந்து இருக்கார். அதுவும் தமிழ் நாட்டு பத்திரிக்கைகாரர்.” ஷானின் இந்த  தகவலிலேயே ஒரளவுக்கு விஷயம் புரிந்து விட்டது.

நடிகன் என்றாலே…கிசு கிசு எழுதியே அவங்க  சர்குலேஷனை ஏத்தி விட்டுடுவாங்க. கண்ணுக்கு முன்னே லட்டு மாதிரி மேட்டரு….சும்மா விட்டுடுவாங்கலா…..

அந்த பெண்ணும்  இளம் ரத்தம். உடனே  கொதித்து இருக்கும். தான் அந்த பெண்ணை அணுகுவதை விட அவள் பெற்றோர்களை  அணுகுவது தான் புத்திசாலி தனம் என முடிவு எடுத்தவனாய், செயல் படுத்தி அனைத்தையும் ஒரு வாரத்தில் சரிபடுத்தியவன்.

மறக்காது செல்வி பெற்றோரின்  முன்நிலையில் செல்வியிடம் அந்த நடிகனை  மன்னிப்பும் கேட்க வைத்தான்.

அனைத்தும் சரிபடுத்தியவன் ஷானின் கைவசம் இருந்த கணக்கை சரிப்பார்க்க ஆயிரெத்தெட்டு குலருபடிகள். அவன் நாட்டில் அவனை பகைத்துக் கொள்வது அவ்வளவு சரியானதாய்  இராது என்று நினைத்தவன்.

போன பணத்தை கருத்தில் கொள்ளாது. இனி இது போல் நடக்காது இருக்க. ஆஸ்ரேலியாவிலேயே சிறிது காலம் இருக்க வேண்டியதாகி விட்டது.

தயாநிதி…. “என்ன ருத்ரா…எப்போவாவது வீட்டுக்கு வந்து தலையாவது காட்டுவ, இப்போ இந்தியாவுக்கே உன் காலடி பட மாட்டேங்குது. என்ன அங்கு பெண் ஏதாவது பார்த்திட்டியா….?” என்று கிண்டல் செய்த மாமனிடம்…

“ நீங்க வேற இங்கு தூங்கவே நேரம் இல்ல. இதுல ரொமான்ஸ் வேறயா…..அது எல்லாம் எனக்கு செட்டாகாது மாமா.” ருத்ரனின் பேச்சில் கொஞ்சம் விரக்தி எட்டி பார்த்ததோ….என்று தயாநிதி நினைக்கும் படி இருந்தது ருத்ரனின் பேச்சு.

இருந்தும் அதை அவனிடம் கேட்காது…. “உன் மனதுக்கு பிடித்த பெண் பார்த்தால் நேரம் தன்னால் வந்து விடும். கூடிய சீக்கிரமே வேலையாவது ஒன்னாவதுன்னு  என் பெண் பின்னாடியே சுத்த போற…..” என்ற மாமனின் பேச்சில் திடுக்கிட்டு…

“மா…மா  உங்க பெண்ணா…..” அவன் குரலில் என்ன இருந்தது….?  அவனுக்கே அது தெரியாத போது மாமனுக்கு எப்படி தெரியும்.

“நீ  திருமணம் செய்துக் கொள்ளும் பெண் எனக்கு பெண் தானேடா…..”

மாமனின் பதிலில் ருத்ரன் என்ன உணர்ந்தான் என்று அவனுகே தெரியவில்லை. ஏதோ ஒரு இடையூறு மனதில் ஆட்டி படைப்பது போல்.

அதை போக்க…. “மாமா இங்கு இந்த ஷான் நிறைய செய்து இருக்கான். அதெல்லாம் சரிபடுத்திட்டு தான் இந்தியா வரமுடியும். அது வரை அங்கு இருக்கும் பிஸினஸை  நீங்க தான் பார்த்துக்கனும் மாமா.” என்று சொன்னவனுக்கு…

“என்ன ருத்ரா புதுசா பார்த்துக்கோன்னு எல்லாம் சொல்லிட்டு இருக்கே…வழக்கமா அது தானே நடக்கும்.”

ஆம் தயாநிதி சொல்வது போல் மாமன் வெளி ஊர் சென்றால், அவர் சொல்லாமலேயே ருத்ரன் அவர் தொழிலை பார்த்துக் கொள்வான். அதே போல் தான் தயாநிதியும்.

அதை நினைத்து சொன்னவரிடம்…

“இல்ல மாமா இந்த வாட்டி கொஞ்சம் அதிக நாள் இங்கு இருக்க வேண்டியதாய் இருக்கும்.” என்று  சொன்னதும்…

“என்ன ருத்ரா விஷயம் ரொம்ப பெருசா…நான் வேணா அங்கு வரட்டுமா….? அக்கரையுடன் கேட்க.

“வேண்டாம் மாமா.நானே சமாளிச்சிப்பேன். நீங்க அங்கு மட்டும் பார்த்தா போதும்.” என்று சொன்னதும்,

“பார்த்து ருத்ரா…அது அவன் நாடு கொஞ்சம் அடக்கி வாசி.”  ருத்ரன் நினைத்ததையே தயாநிதியும் சொல்ல.

“சரி மாமா…” என்று சொல்லோடு அங்கு பிரச்சனை முடித்து விட்டு இந்தியா வர ருத்ரனுக்கு ஒரு வருடம் பிடித்தது.

அந்த ஒரு வருடமும் மஞ்சுளா தேவி…கதிரோவியனிடம் சேட்டிங்கில் நாள் தவறாது ஈடுபட்டாள்.

ஓவியனுக்கு என்ன பிடிக்கும் …?என்ன பிடிக்காது…..?என்பதை   தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் சொல்லும் அளவுக்கு அவனின் ரசனை அவளுக்கு அத்துப்படி…

அது போலவே ஓவியனும்….தேவிக்கு என்ன என்ன பிடிக்கும்….?  என்ன பிடிக்காது….? என்று அறிந்தவனுக்கு பாவம் அவள் முழுபெயர் மஞ்சுளா தேவி என்பது மட்டும் தெரியாது போனது.

 

Advertisement