Advertisement

 

அத்தியாயம்—-7

“ஹாய்…ஹாய்….” ருத்ரனை பார்த்து அவன் தோழர்கள் ஒரு மித்து அவனை பார்த்து அழைக்க.

அனைவரையும்  ஒரு சேர …. “ஹாய்….” என்று அவர்கள் அருகில் சென்றவன், எவ்வளவு நண்புக்கள்  இருந்தாலும், அதில் ஒருவரை மட்டுமே மிக நெருக்கமாக உணர தோனும், அப்படி ருத்ரனை உணர வைத்தவன் தான் பாண்டியன்.

அவன் கை பிடித்து தனிப்பட்டு….”எப்படிடா இருக்க…..” என்று விசாரித்தவனின் கையைய் மேலும் இருக்குக் கொண்ட பாண்டியன்…. “நல்லா இருக்கேன்டா….நீ எப்படி இருக்கே….?” அவர்களின் நட்பு அனைவருக்கும் தெரிந்த ஒன்று  என்பதால்…

“ஓ ஓ….” என்று கரகோஷமாக குரல் எழுப்பியவர்கள், அப்போது தான் ருத்ரனோடு வந்த மஞ்சு, மதுவை பார்த்து….

“  யாரு இந்த பாப்பாங்க…..? அந்த இளமை துள்ளலுக்கே இருக்கும் குரும்புடன் விசாரிக்க.

ருத்ரன் பதில் அளிப்பதற்குள்….. “ நாங்க ஒன்னும் பாப்பா இல்ல. “என்று மது வெடுக்கென்று  பதில் அளித்ததுக்கு,

அதில் கல்லூரியிலேயே ப்ளேபாய் என்று பெயர் வாங்கிய ரமேஷ்…..மஞ்சுவை காமித்து…. “அவங்க பாப்பா இல்லேன்னு நான் ஒத்துக்குறேன். ஆனா நீ பாப்பா தான்.” என்று அடித்து கூற…

மேலும் ஏதோ பேச வந்த மதுவை தடுத்த ருத்ரன், தன்னிடம் இருந்த கிரிடிட்  கார்டை எடுத்து மஞ்சுவிடம் நீட்ட…

அதை கையில் வாங்காது கேள்வியுடன் பார்த்த மஞ்சுவின் பார்வைக்கு பதிலாய்… “ டூ ஹவர்ஸ்  இந்த மாலில் ஷாப்பிங் பண்ணுங்க. அதுக்கு தான்.” என்று சொல்லியும் கையில் வாங்காது இருக்கும் மஞ்சுவை முறைக்க.

மது  ருத்ரனின் கையில் இருத கார்டை  பிடுங்கி…. “நான் பார்த்துக்குறேன் அத்தான்.” என்று மது சொல்லியும் மஞ்சுவிடம் தன் முறைப்பை நிறுத்தாது.

“ உன் அக்காவுக்கும் வாங்கி கொடு.” என்பதோடு அவர்களை அனுப்பி வைத்தவனை அவன் நண்பர்கள் ஒரு சேர.

“ என்னடா காலேஜ் படிக்கிறப்ப, பெண்களுக்கு செலவு செய்வது தண்டமுன்னு சொல்லுவ….இப்போ என்ன….?” என்று ஒருவன் கேள்வி கேட்க.

அதற்க்கு மற்றொருவன்….”நாமாவது சில்லறைய தான் செதர விட்டோம். அய்யா கார்டைலே பறக்க விடுறாரு….”கேலியில் இறங்கியவர்களை,

“ஏய் அவங்க என் மாமா பெண்கள்.” என்று சொன்னதும் அனைவரும் அமைதியாகி விட்டனர்.

அவனை தெரிந்த அனைவருக்கும் தெரியும், அவனின் மாமா மீது அவன் வைத்து இருக்கும் மதிப்பு. அவரின் பெண்களை  இதற்க்கு மேல் விளையாட்டுக்கு என்றாலும் இதற்க்கு மேல் கிண்டல் செய்தால் கண்டிப்பாக ருத்ரனிடம் வாங்கி கட்டி கொள்ள வேண்டியது தான் என்று பேசாது இருக்க.

ரமேஷ் மட்டும்….. “உன் மாமாவுக்கு ஒரே பெண் தானேடா…..அதுவும் கொஞ்சம் சின்ன பெண்ணாய் தானே இருப்பா… கார்டை வாங்கியவளை குறிப்பிட்டு அவள் வயது இருக்கும். அந்த பெரிய பெண்ணுமா  மாமா மகள்.” தன் சந்தேகத்தை கேட்டவனுக்கு பதிலாய்…

எந்த வித மறைப்பும் இல்லாது….. “என் அத்தையோட முதல் பெண்.” என்று சொல்ல.

அவன் என்ன சொல்கிறான் என்று புரியாது அவனை பார்த்தவர்களுக்கு விளக்கி சொன்னதும். அனைவரும் அமைதியாகினர்.

அதுல் பாண்டி மட்டும் …. “சாரிடா… நீ மாமா பெண் என்றதும் விட்டு இருக்கனும். நாங்க நோண்டி இருக்க கூடாது.” என்று மன்னிப்பு வேன்டியனிடம்,

“இதில் என்னடா இருக்கு….” தனக்கு இது ஒன்றும் இல்லை என்பது போல் தான் பதில் அளித்தான்.

அவனை பொறுத்தவரை ஆண்கள் மனைவி இறந்த பின், மறுமணம் செய்ய எந்த அளவுக்கு   உரிமை இருக்கிறதோ…அதே அளவு உரிமை பெண்களுக்கும் உண்டு. ஒரு குழந்தையோடு தன் அத்தை தன் மாமனை மணந்தது எந்த விதத்திலும் அவனுக்கு தவறாய் தோன்றவில்லை. அதனால் தான் மஞ்சுவை பற்றி ஒளிவு மறைவு இன்றி சொன்னான்.

திரும்பவும் ரமேஷ் …. “ அந்த பெண்  பெயர் என்ன…..? “என்று கேட்டதுக்கு, ஒரு முறை முறைத்து விட்டு….

“அவ இப்போ தான் ப்ளாஸ் டூ எக்ஸாம் எழுதி இருக்கா…. “அவள் மிக சின்ன பெண் என்று மறைமுகமாக  உணர்த்த.

அப்போதும் தான் அடங்குவேனா என்பது போல்…. “பார்த்தா அப்படி தெரியலையே….?” ரமேஷ்  சொல்வது போல் முகத்தில் வேண்டுமானல் பதினெழு வயதுக்குறிய குழந்தை தனம் ஒளிந்து இருக்கும்.  உடல் அமைப்பு அவளை இருபது வயதிற்க்கே உரிய வளர்ச்சியோடு தான் காணப்பட்டாள்.

மனதில் எதுவும் ஒளித்து வைத்து பேச தெரியாத ரமேஷ், எப்போதும் போல் வெளிப்படையாக சொல்லி விட.

“இங்கே என் அத்தை மகளை பத்தி பேச தான் அழைச்சிங்கன்னா,  சாரி நான் இப்பவே கிளம்பிடுறேன்.” என்று திரும்பியவனின் கை பிடித்து தடுத்து நிறுத்திய  பாண்டியன்…

ரமேஷை முறைத்து பார்த்து…. “ அவன் இருக்கான் விடுடா…..இனி பேசுனா அவனை அனிப்பிடலாம். “என்று சமாதானப்படுத்தி  அமர வைத்த பின் அவர்களின் பேச்சு எங்கு எங்கோ சென்று, கடைசியில் திருமணப் பேச்சில் வந்து நிற்க.

அதில் செங்குட்டுவன் கல்லூரியில் இருந்தே ஒரு பெண்ணை  சின்சியராக காதலித்தது அனைவருக்கும் தெரியும் என்பதால்…அனைவரின் கவனமும் அவன் புறம் திரும்பி…. “ நீ எப்போ தான்டா கல்யாணம் செய்துக்க போற. பாவம்  அந்த பொண்ணு எவ்வளவு நாள் தான் உனக்காக காத்திருப்பா…அவ வீட்டிலும் அவள் சமாளிக்கனும்லே…” என்று செங்குட்டுவனிடம் கேட்டதுக்கு ஒன்றும் சொல்லாது அமைதி காக்க.

அந்த அமைதி ஏதோ உணர்த்துவது போல் தோன்றியது அனைவருக்கும், அதனால் அதற்க்கு மேல் ஒன்றும் கேட்காது இருக்க.

அவனே…. “நாம படிப்பு முடிச்ச  உடனே அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சி. மாப்பிள்ளை வெளிநாடு.” என்று குரலில் எந்த வித உணர்ச்சியும் காட்டாது சொன்னாலும், மனதில் அவன் என்ன மாதிரி அடி வாங்கி இருக்கிறான் என்பதை அவன் முக கசங்கலே காட்டி கொடுக்க.

“ஏய் விடுடா…இதுவும் நல்லதுக்கு தான். அவ புத்தி இப்போவே தெரிஞ்சிதே….உனக்கு ஒரு நல்ல பெண் தான் மனைவியா வரனுமுன்னு இருக்கும் போது இவ எப்படி உனக்கு மனைவியா ஆகமுடியும். “என்று சமாதானம் படித்திய பாண்டியனின் கை  பற்றிய செங்குட்டுவன்,

“வீட்டில் கல்யாணம் செய்துக்கன்னு வற்புறுத்துனாங்கடா. அடுத்த மாசம் எனக்கு கல்யாணம்.” என்று சொல்லிக் கொண்டே தன் கையில் வைத்திருந்த ஒரு கவரில் இருந்து பத்திரிகை எடுத்து அனைவருக்கும்  கொடுக்க.

அதை வாங்கி அவர்கள் படிக்கும் போதே…..மீண்டும் செங்குட்டுவன்… “பெண் என் மாமா பெண்.” என்றதோடு கூடுதல் தகவலாய்…

“ இடது கால் கொஞ்சம் தாங்கி தான் நடப்பா…..” என்ற அவன் பேச்சில் பத்திரிக்கையில் கண் பதித்திருந்த  ருத்ரன் அவனை நேர்க் கொண்டு பார்த்து….

“இந்த கல்யாணம் இறக்கப்பட்டு செய்துக்குறியா….?உன் காதல் தோற்ற விரக்தியில் செய்துக்கிறியா…..?” என்ற அவன் கேள்வியில் அனைவரும்…

“ஏய் என்னடா இப்படி கேட்குற…..” என்று  ருத்ரனிடம் கேட்டவர்களின் பார்வை, செங்குட்டுவனை சங்கடத்துடன் தொட்டு தழுவியது.

அனைவர்களின் பேச்சும் காதில் விழாது போல், திரும்ப செங்குட்டுவனை பார்த்து அதே கேள்வியை எழுப்ப.

அவனுக்கே தெரியாத கேள்விக்கு எப்படி பதில் அளிப்பது என்று  ருத்ரனையே பார்த்திருந்தவனை பார்த்ததுமே தெரிந்து விட்டது அவன் குழப்பத்தில் இருக்கிறான் என்று.

“எது வேணா குழப்பத்தில் செய்திடலாம். ஆனா கல்யாணம் மட்டும் குழப்பத்தோடு செய்துக்க கூடாது.நம்ம குழப்பம் நம்மை நம்பி வர்ற பெண்ணை  பாதித்து விடும். யோசி…”கையில் உள்ள பத்திரிக்கையை காட்டியவன்.

“ ஊருக்கு அழைப்பு கொடுத்து ஒரு நாள் முடிந்து போறது இல்ல கல்யாணம்.

கல்யாணம் என்பது  நாமும் சந்தோஷமா இருந்து, நம்ம கல்யாணம் செய்துக்குறவளும் சந்தோஷமா வெச்சிக்குறது தான். அந்த நம்பிக்கை இருந்தா மட்டும் தான் நம் கை தாலி அந்த பெண் கழுத்தில் ஏறனும்.” என்று சொன்னவனின் பேச்சை அனைவரும் அமைதியாக கேட்டிருக்கும் வேளயில் மஞ்சுவும், மதுவும் ஆளுக்கு இரு பை கவரை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தனர்.

அவர்களை  பார்த்ததும் தன் பேச்சை சட்டென்று  முடித்துக் கொண்டு அந்த இடத்தில் இருந்து எழுந்துக் கொண்டான்.

தன் நண்பர்களே ஆனாலும் அவர்கள் எதிரில், இவர்கள் அதிக நேரம் இருக்க பிடிக்காது போக  எழுந்தவனின் கை பிடித்து தடுத்த ரமேஷ்.

“அவங்களுக்கு ஏதாவது வாங்கி கொடுத்து கூட்டிட்டு போ ருத்ரன்.”என்பவனுக்கு என்ன சொல்லி அந்த இடத்தை விட்டு சீக்கிரம் நகர்வது என்று யோசித்தவனுக்கு அதிகம் சிரமம் கொடுக்காது…

“அதெல்லாம் குடிச்சாச்சி. “என்று ரமேஷை பார்த்து சொன்ன மது, ருத்ரனிடம் தன் கை பையை நீட்டிய வாறே…. “ஐயம் சோ டையட். சீக்கிரம் போகலாம் அத்தான். “என்று அவசரப்படுத்த….

ஒரு புன்னகையுடன் மது கை சுமையைய் வாங்கியது மட்டும் அல்லாது, மஞ்சுவுடையதும் கேட்டு வாங்கிக் கொண்டு, தன் நண்பர்களிடம் விடைப்பெற்றான்.

பாதி வழியில்….அங்கு இருந்த பெரிய ஓட்டலை பார்த்து விட்டு….. “அத்தான் பசிக்குது ஏதாவது சாப்பிட்டு போகலாமா…..?” தன் வயிற்றை தடவி காட்டி பாவமாக கேட்க.

உடனே அவள் காமித்த ஓட்டலுக்கு காரை செலுத்திய ருத்ரன்….. “அங்கே சாப்பிட்டேன்னு சொன்னியே அதுக்குள்ளவே பசி எடுத்துடுச்சி….?” என்று மதுவிடம் கேட்க,

“நான் சாப்பிடவே இல்ல அத்தான். இந்த அக்கா தான்  வீட்டுக்கு போகலாம் வீட்டுக்கு போகலாமுன்னு நச்சரிச்சிட்டே இருந்தாங்க. இல்லேன்னா நான் இவ்வளவு கம்மியாவா வாங்கி இருப்பேன்.” என்று ஆதாங்கத்துடன் சொன்னவளின் பேச்சில் சிரிப்பு மேலிட…

அவள் வாங்கி குவித்து இருந்த பொருட்களை காமித்து … “இது கொஞ்சமா….? “ என்று கேள்வி எழுப்பவனுக்கு,

“ பின் இல்லையா….?நீங்கலே எப்பவாவது தான் இது மாதிரி வெளியில் கூட்டிட்டு வர்றது. இது கூட இல்லேன்னா எப்படி….?”  என்றவளின் பேச்சில் சிரிப்பு மேலிட.

“அப்போ எதுக்கு சாப்பிட்டேன்னு பொய் சொன்ன….?”

“உங்களுக்கு அங்க இருந்து சீக்கிரம் எங்கல அழச்சிட்டு வரனுமுன்னு நினச்சிங்க. அதான்.” என்பவளின் பேச்சில் அந்த அத்தான் பூரித்து தான் போனான்.

இருந்தும் அவளின் வம்பு வளர்க்க….. “இன்னும் கொஞ்சம் பொருத்தா வீட்டிக்கே போயிடலாம். ஆனா என் பர்சை கறைக்கனுமுன்னு கங்கணம் கட்டிட்டு தானே வீட்டில் இருந்து கிளம்பியே வந்த….?”

“ பின்ன இல்லையா…..?உங்க கல்யாணத்துக்கு முன்ன உங்க கிட்ட இருந்து கரந்ததான் உண்டு. அப்புறம் உங்க சம்பாத்தியம் மொத்தமும் உங்க மனைவிக்கு தானே செலவு செய்வீங்க….? “என்று சொன்னவளுக்கு…

“பின் இல்லையா….? கல்யாணம் ஆயிட்டா உன்ன எல்லாம் யாரு வெளியில் கூட்டிட்டு வருவா….? என் டார்லீ  கூட தான் அவுட்டிங்.”

இவ்வளவு நேரம் தலை குனிந்து அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த மஞ்சுளா, கடைசியாக  மது பேசிய உங்க கல்யாணம் என்ற பேச்சில் அவர்களை நிமிர்ந்து பார்த்தவள்.

ருத்ரனின் பேச்சில் அவனையே பார்த்திருந்த மஞ்சுவை பார்த்து….”என் கிட்ட ஏதாவது கேட்கனுமா மஞ்சு….” என்ற கேள்விக்கு,

“இல்லை…..” என்று பதில் அளித்தாலும் அவள் முகம் முழுவதிலும் சிந்தனையின் கோடுகளே….

ருத்ரனின் சிந்தனையோ மஞ்சுவை மட்டுமேவாக இருந்தது. இந்த பெண் ஏன் அவள் வயதுக்கே உறிய கலகலப்பை விட்டு, இப்படி தனக்குள்ளேயே ஒடுங்கிக் கொள்கிறாள்.

இவள் கூட்டை விட்டு வெளியில் வர நாம் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்திருக்க.மஞ்சுவின் நினைவோ செங்கமலம் சொன்ன தூக்கணாங்கூடுவில் இருந்தது.

ஓட்டலில்  மஞ்சுவின் நினைவு எங்கேயோ இருக்க. மது தான் … “அக்கா இது டேஸ்ட்டு பண்ணி பாரு….” என்று அவள் தட்டில் வைக்க.

அவளோ யாருக்கோ வந்த விருந்தென்று உண்டு முடித்தாள். ருத்ரன் அதற்க்கு அடுத்து எதுவும் பேசவில்லை. ஆனால் பார்வை மொத்தமும் மஞ்சுவிடம் மட்டுமே…..

Advertisement