Advertisement

அத்தியாயம்—-5

தன்  பின் வந்தவளின் முகம் பார்க்காது…. “அவன் மலரம்மா மகன்.” ருத்ரனின் பேச்சுக்கு, என்ன பதில் சொல்வது என்று அவன் நடைக்கு ஓடி  வந்தவளுக்கு இணையாக தன் நடையின் வேகத்தை குறைத்து அவளுக்கு இணையாக நடந்த வாறே அவள் முகத்தை பார்த்து.

“ஒருத்தவங்க ஏதாவது பேசுனா பதில் சொல்லனும். அது தான் பேசுறவங்களுக்கு நீ கொடுக்கும் மரியாதை.” அவன் பேச்சு என்னவோ சாதரணமாக தான் இருந்தது.

ஆனால் அவனின் உருவமா…?இல்லை அவனின் குரலில் சாதரணமாக இருக்கும் கம்பீரத்தாலோ….? மஞ்சுக்கு அது மிரட்டலாக தான் தெரிந்தது.

“ஆ….” என்று அவளின் ஒரு வார்த்தைக்கு,.

“இந்த ஆ என்றது எதுக்கு….?நான் அவன் மலரம்மா மகன்னு சொன்னனே….அதுக்கா….? இல்ல பேசுனா பதில் சொல்லனும் என்று கேட்டேனே அதுக்கா…..?”

எப்போதும் அளந்து பேசும் ருத்ர மூர்த்தி, மஞ்சுவிடம் அதிகம் பேசினான். அதற்க்கு காரணம் இந்த பெண்ணின் இப்போதைய நிலைக்கு தன் மாமனும் ஒரு காரணம் என்ற எண்ணத்தால் கூட இருக்கலாம்.

மாடியில் உள்ள தன் அறையில் அன்று இரவு ஓட்டல் சோழாவில் ஒரு பார்ட்டிக்கு போக தயாராகி தன் மொபைலில் வந்த மெசஜை பார்த்துக் கொண்டே பால்கனிக்கு வந்தவனின் கண்ணில், மஞ்சு பின் பக்கம் ஓடி போவது தெரிந்தது.

மஞ்சுவின் அறைக்கு நேர் மேல் தான் ருத்ரமூர்த்தியின் அறை. அவன் அறையின் பால்கனியும் பின் பக்கம் பார்ப்பது போல் தான் இருக்கும். அதனால் தான் மஞ்சுவை பார்க்க முடிந்தது.

அவள் ஓடி போய் கதிரின் பக்கத்தில் நின்றதும், நெற்றி சுருங்க யோசித்துக் கொண்டே அவர்கள் அருகில் சென்றவனுக்கு கதிரின் பேச்சு காதில் விழுந்தது.

யார் யாருக்கு கத்துக் கொடுப்பது…..?இது தான் அவனின் எண்ணமாக இருந்தது. அதுவும் கதிரின் ஒருமை பேச்சில் கோபம் வந்தாலும், தன்னை அடக்கிக் கொண்டு இன்னார் என்று சொன்னால் மரியாதை தருவான் என்று  தான் அத்தை மகள் என்று அறிமுகப்படுத்தினான்.

ஏன் என்றால், வயதில் மிக சிறிய மதுவை கூட  கதிர் மரியாதையாக தான் அழைப்பான்.

மலரம்மா மகன் என்றால், இவள் ஏதாவது சொல்வாள் என்று பார்த்தாள். ஓ என்ற ஒத்த வார்த்தையில் முடித்துக் கொண்டாளே என்று தான் இருந்தது அவனுக்கு,

தனக்கு பார்ட்டிக்கு நேரம் ஆகி விட்டதால், இதற்க்கு மேல் அவளை பற்றி ஆராய்ச்சியில் ஈடுபடாது….. “நீ போய் தூங்கு. இந்த நேரத்துக்கு எல்லாம் இப்படி தனியா வரக்கூடாது. என்ன….?” அவன் பேச்சு ஒரு சிறு பெண்ணிடம் பேசும் தோரணை மட்டுமே…..

தன் மாமனின் கடமையில் தனக்கும் பங்கு இருக்கிறது. அதுவும் தங்களை  பார்த்து தான் இவளை மாமன் விட்டு விட்டான் என்று தெரிந்ததில், கூடுதல் பொறுப்பு இது மட்டுமே அவன் பேச்சில் மேலோங்கி காணப்பட்டது.

ருதர மூர்த்தியின் பேச்சு அனைத்துக்கும்.  “சரி சரி.” அதுவும் பேச்சால் அல்ல. தலை அசைவால் மட்டுமே, அவளின் இந்த செயல் பார்க்க மது போலவே காணப்பட்டது.

மது பார்க்க தந்தை போல் இருந்தாலும், அவளின் உடல் மொழி தாய் போல் இருக்கும். மதுவுக்கும், மஞ்சுவுக்கும் இருக்கும் ஒற்றுமையில் அவளின் தலை மீது கை வைத்து “போய் தூங்கு.”  என்று அன்புடன் சொல்ல.

அவன் தோற்றத்திலும், குரலிலுமே பயந்து போய் இருந்த மஞ்சுக்கு. அவனின் அன்பு புரியாது பயந்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடி வந்து  விட்டாள். தன் அறைக்கு வந்து கூட மஞ்சுவின் பயம் குறையவில்லை.

“அம்மா அக்கா  நேத்து வந்தாங்க. நான் இன்னும் பாக்கவே இல்ல. அக்கா கூட சாப்பிடுறேன்.” என்று அடம்பிடித்த சின்ன மகளின் பேச்சு எங்கு தன் மாமியார் காதில் விழுந்து விடுமோ என்ற பயத்தில் மகேஸ்வரி…

“ஏய் சத்தமா பேசாதே, பாட்டி காதில் விழுந்தா பிரச்சனையாகி விடும்.” என்று பயந்து போய் பேசும் அன்னையிடம்..

“ நான் என்ன பாய்பிரண்ட பாக்கவா அடம் பிடிக்கிறேன். என் அக்காவ பாக்கனும் என்பது ஒரு குற்றம்மா….?”

மது தோற்றத்தில் தந்தையையும், உடல் மொழியில் தாயையும் கொண்டவள் என்றால், தைரியத்தில் தன் பாட்டி அகிலாண்ட நாயகி கொண்டு இருப்பவள். மொத்தத்தில் அந்த குட்டி தேவதையிடம், அந்த வீட்டினரின்  அனைத்து அம்சமும் காணப்படும்.

“ஏய் குட்டி உனக்கு  வாய் நீலம் தான்.இந்த வயசுல என்ன பேச்சு இது.” என்று அதட்டியவளின் பேச்சை காதில் வாங்காது.

“உங்களுக்கு வாய் இருந்து இருந்தா….?நான் ஏன் வாய் பேச போறேன். பாட்டிக்கு பயந்து அவங்க  சொன்னதுக்கு எல்லாம் தலையாட்டிட்டு போம்மா…..நான் என்ன கேட்டேன் அக்காவ பாக்கனமுன்னு தானே….?”

தன் சின்ன மகள்  பேசுவதில் தவறு இல்லை என்று  அந்த தாயிக்கு தெரிந்தாலுமே , இந்த வீட்டின் நியாயம், அநியாயத்தை தன் மாமியார் தானே தீர்மானிப்பது. அவரின் தீர்ப்பு தானே இந்த வீட்டின் முடிவு.

“என்ன மதும்மா சாப்பிட்டியா….?” என்று  கேட்டுக் கொண்டே அந்த இடத்துக்கு வந்த தயாநிதி, தட்டில் தன் மனைவி எடுத்து வந்தது அப்படியே இருப்பதை பார்த்து….

“என்னம்மா பிடிக்கலையா…..?” அந்த தட்டில் இருந்த உளுந்து உருண்டை, புட்டு, கேசரியை பார்த்துக் கொண்டே கேட்க.

“என்னப்பா எனக்கு பிடித்த இனிப்பை அம்மா மொத்தமா  தட்ட நிரப்பி கொண்டு வந்து இருக்காங்க. பிடிக்கலையான்னு கேட்குறிங்க….?”

மது தாய் தந்தை என்று பார்க்க மாட்டாள். தன் மனதுக்கு தோன்றுவதை பேசி விடுவாள்.கூடுதலாக பிடிவாதக்காரியும் கூட.

“அப்புறம் ஏன் என் மதுக்குட்டி சாப்பிடல……?” என்று செல்லம் கொஞ்சும் தந்தையின் தோளில் வசதியாக சாய்ந்தவளின் முடி கோத.

“எனக்கு பிடிச்ச பலகாரத்த. எனக்கு பிடிச்ச என் அக்கா கூட சாப்பிட ஆசை படுறேன்.” அந்த பேச்சில் தலை கோதிக் கொண்டு இருந்தவரின் கை தன்னால் நின்று  போனது.

தான் கேட்டதுக்கு பதில் இல்லாது தன்னையே வெறிக்க பார்த்துக் கொண்டு இருந்த தந்தையிடம் ……. “நான் அக்கா கூட தான் சாப்பிடுவேன்.” என்று  அடம் பிடிக்க.

“சாப்பிடலாமே….” என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்துக்கு வந்த ருத்ர மூர்த்தையை  பார்த்ததும் “அத்தான்” என்ற அழைப்போடு …..

தன் தலை தந்தையிடம் இருந்து அத்தானின் தோளுக்கு இடம் பெயர்த்தவள்.

“என் செல்ல அத்தான்னா அத்தான் தான்.” என்று கொஞ்சியவள்.

“அக்கா ரூமுக்கு போகலாமா…?இல்ல அக்காவ இங்கே கூட்டிட்டு வர்றிங்கலா ….?” என்று ஆர்வத்துடன் கேட்டவளின்  முகவாயை பிடித்து…

“நாளைக்கு இந்த பெரிய மனிஷிக்கு ஏதோ விழாவ க்ராண்மா  அமர்க்கலமா ரெடி பண்ணிட்டு இருக்காங்க. தோ இப்போ இப்படி தொங்கிட்டு இருக்கியே,  இத க்ராண்மா பார்த்தா அவ்வளவு தான் . அதனால மத்தவங்க கூட எல்லாம் அந்த விழா முடிஞ்ச பின் தான் நீ  பழகலாம். விழா நாளைக்கு காலையில, மதியம் நீ உங்க அக்கா கூட சாப்பிடு யாரு உன்ன வேண்டாமுன்னு சொன்னா….?” என்று தன் மாமன் மகளிடம் பேசிக் கொண்டே….

தட்டுக்காக தன் மாமன் மனைவியிடம் கை நீட்டினான். ஒரே வீட்டில் இருந்தாலும் ருத்ர மூர்த்தி இது வரை தேவைக்கு மிக மகேஸ்வரியிடம் பேசியது இல்லை. எப்போதும் அதிகம் பேசாத மகேஸ்வரியும் ருத்ரன் இடம் வலிய பேச்சு கொடுத்தது கிடையாது.

தட்டை ருத்ரனிடம் நீட்டியவள் பார்வை முழுவதும் ருதரனின் முகத்திலேயே நிலைபெற்று இருந்தது.

யோசனையுடன் தட்டை வாங்கிக் கொண்ட ருத்ர மூர்த்தி.  மதுவிடம்… “சாப்பிடு.” என்று சொன்னவனுக்கு. முகத்தில் பழிப்பை காட்டிக் கொண்டே…

“ரொம்ப உங்க க்ராண்மாவுக்கு பயப்படுறவரு தான்.” என்று நொடித்துக் கொண்டே தன் அத்தான்  கொடுத்ததை உண்டு முடித்தாள்.

“என்ன மதுவை  சாப்பிட வெச்சிட்டியா….?” பூரியை தன் பேரனின் தட்டில் வைத்துக் கொண்டே கேட்டவருக்கு.

“ம்…” என்ற  மகியின் பதிலில் எரிச்சல் உற்ற அகலாண்டம்…. “என்ன நேத்துல இருந்து ஒரு தினுசா இருக்க….?” என்று கேட்டவருக்கு மகி பதில் அளிக்கும் முன் ருத்ரன்.

“க்ராண்மா இன்னிக்குமா….?” என்று அந்த பேச்சுக்கு முற்று புள்ளி  வைத்தவன். தன்னை பார்ப்பதும், மாமனின் தட்டில் பறிமாறுவது மாய் இருந்த மகி அத்தையை யோசனையுடன் பார்த்துக் கொண்டு இருந்தவனை சங்கரியின்…

“நேத்து கோயில்ல….” என்ற பேச்சு எதை கொண்டு போகும் என்று அறிந்தவனாய்…

“எனக்கு எந்த மகாலட்சுமியும் வேண்டாம்.” என்று எழுந்தவனின் பேச்சில் தயாநிதி சிரிக்க.

“என்ன அண்ணா, அவன் கிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குவேன்னு பார்த்தா சிரிச்சிட்டு இருக்கிங்க,” என்று குறைப்பட்டுக் கொள்ளும் தங்கையிடம்,

“அவனுக்கு தெரியும் சங்கரி.” என்ற சொல்லோடு மாமனும் எழுந்துக் கொள்ள.

“நல்ல மாமன். அவனுக்கு ஏத்த மருமகன்.” என்று  தான் சங்கரியால் நினைத்துக் கொள்ள முடிந்தது.

கார் சாவீயை சுழற்றிக் கொண்டே போர்டிகோவுக்கு வந்த ருத்ர மூர்த்தி தன் பின் வரும் அத்தையின் காலடி ஓசையில் தன் நடையை நிறுத்தி திரும்பி பார்த்தவனிடம், பேச்சை எப்படி ஆராம்பிப்பது என்று தயக்கத்துடன் இருக்கும் மகேஸ்வரியைய் பார்த்து…

“அத்த என் கிட்ட ஏதாவது சொல்லனுமா….?” என்று கேட்டதுக்கு,

மென்று முழுங்கிய வாறே…. “மது கிட்ட  சொன்னிங்கலே அது நடக்குமா தம்பி ….?”  என்று ஆவளுடன் கேட்கும் அத்தையின் கேள்வி புரியாது நெற்றி சுருங்க  தன்னை பார்த்த ருத்ராவின் செயலில் நம்பிக்கை விழுந்தவராய்…

“ஒன்னும் இல்ல தம்பி…” என்று  போக பார்த்த அத்தையை தடுத்து நிறுத்தியது ருத்ரனின்  பேச்சு..

“நீங்க என்ன சொல்ல வந்திங்க….ஒன்னும் இல்லேன்னு சொல்லாதிங்க.” எப்போதும் தன்னிடம் நேருக்கு நேர் பேசாத அத்தை தன்னிடம் என்ன கேட்க வந்தார் என்று தெரிந்துக் கொள்ளும் ஆவல் ருத்ரனிடம்.

“மது கிட்ட நாளைக்கு ம…ஞ்சு கூட சாப்பிடுவேன்னு சொன்னிங்கலே …அது தான்.” என்று இழுத்த அத்தையின்  பேச்சு ருத்ரனுக்கு வேதனையை அளித்தது.

தன் இருமகள்கள் ஒன்றாக  உணவு உண்பது நடக்குமா…?என்று தன்னிடம் கேட்கும் அந்த தாயின் மனது.

சூழ்நிலையின் இறுக்கம் தளர்த்த…. “என்ன அத்த இந்தியா, பாகிஸ்தான் நல்லுறவு ஏற்படுமான்னு சந்தேகமா கேட்பது போல கேட்குறிங்க. நாளைக்கு பாருங்க.” என்ற ருத்ரனின் பேச்சில் நம்பிக்கை ஏற்பட்டது மகிக்கு.

தயாநிதியின் தொழில்துறை இருப்போர்கள் எல்லாம் விழாவுக்கு வர.

“என்ன மாமா இந்த பங்ஷனுக்கு ஏன் இவங்கல  எல்லாம் கூப்பிட்டிங்க….?” என்று கேட்ட ருத்ரனுக்கு,

“இன்னும் உன் க்ராண்மா ஒன் ஆப் பார்ட்னர் தெரியும்ல….”

“அப்போ க்ராண்மா தான் அழச்சதா….?” என்று பல்லை கடித்துக் கொண்டு அகிலாண்ட நாயகியிடம் செல்ல பார்த்தவனின் கை பிடித்து…

“வேண்டாம் ருத்ரா. அவங்க விருப்பப்படியே நடக்கட்டும்.”

“ அதுக்குன்னு எல்லாத்துலேயும் அவங்க விருப்பத்துக்கு விட்டுட  கூடாது மாமா.” என்று பேசியவனின் பார்வை சென்ற இடத்தை தயாநிதியும் பார்க்க.

ஒரு வித தயக்கத்துடன் ஒற்றாத தன்மையுடன் தயங்கி, தயங்கி, அந்த இடத்துக்கு வந்த மஞ்சுவை பார்த்த தயாநிதி….

“கண்டிப்பா விட மாட்டேன்.” என்ற மாமனை…. “ஆ இது தான் என் மாமன் . சும்மா கெத்தா இருக்க வேண்டாம்.”

ருத்ர மூர்த்தியின் சொல்லுக்கு ஏற்ப தயாநிதி வெளியில் தான் சொல்வதை தான் அனைவரையும் கேட்க வைப்பார்.

தந்தை இல்லாது தான் பார்த்து முடித்த இடம் தங்கைக்கு  இப்படி ஆகி விட்டதே என்ற குற்றவுணர்ச்சியும், எதற்க்கும்  விட்டு கொடுக்காத அன்னை தன் திருமண விஷயத்தில் இறங்கி வந்தது, தங்கை வாழ்வை பாழாக்கி விட்டு அவள் எதிரில் தான் வாழ்வது. தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை காப்பற்ற முடியாது போனது. இவை அனைத்துக்கும் மேல் இரண்டு வருடம் முன் தன் மாமனார் தன்னிடம் பேசி சென்றது அனைத்தும் ஒன்றாக சேர்ந்து  தன் இயல்பை இழந்தவர் போல் வீட்டில் நடமாடிக் கொண்டு இருந்தார்.

நடுநாயகமாக  அமர வைத்த மதுவின் கன்னத்தில் சந்தனத்தை பூசி அவளின் மாநிறத்தை மஞ்சள் நிறமாக்க முயன்ற பெண்களிடம்…

சிணுங்கிக் கொண்டே…. “ கொஞ்சமா பூசுங்க. எதுக்கு இப்படி அப்பி வைக்கிறிங்க…..?” என்று தலை நிமிர்ந்து பேசியவளின் தலையில் ஒரு குட்டு  குட்டிய தயாநிதியின் அத்தை மகள் சித்ரா.

தன்னை மணப்பான் என்ற ஆசையில் மண் அள்ளி போட்டு ஒரு விதவையை மணந்துக் கொண்ட ஆற்றாமையில்…..

“அப்படியாவது நிறமா மாறி,அழகா ஆகுறியான்னு தான்.” தன் வஞ்சத்தை அந்த பிஞ்சி நெஞ்சில் விதைத்தவளை செல்ல விடாது தடுத்தது மதுவின் பேச்சு.

“அழகு எது பெரிம்மா….?கலரா….? கண், மூக்கு, வாய், ..?எது அழகா இருக்கனும் பெரிம்மா….? அழகுன்னா நாம பேசுற பேச்சு மத்தவங்களுக்கு எந்த விதத்திலும் கஷ்டத்த கொடுக்க கூடாதுன்னு, பார்த்து பார்த்து பேசுறாங்கலே…அதுல இருக்கு பெரிம்மா அழகு. மனச விட அழகு வேறு  எதுவும் இல்ல. அப்படி பார்த்தா நான் பேரழகு பெரிம்மா.” என்றவளின் பேச்சில்…

கை தட்டிக் கொண்டே வந்த ருத்ர  மூர்த்தி…. “என் அழகு குட்டிக்கு இந்த அத்தான் பரிசு.” என்று சொல்லிக் கொண்டே வைர நெக்லஸை அணிவிக்கும் வேளயில்…

மஞ்சுவை பார்த்த மதி….தன் அத்தானின் பரிசை தன் கழுத்து ஏற்றுக் கொள்ளும் முன் அவள்  முன் நின்றவள்.

“ முதல் பரிசு   என் அக்கா கிட்ட இருந்து தான் வேண்டும்.” என்றவளின் கண்  மஞ்சுவின் கழுத்தில் M என்று மின்னிய மெல்லிய செயினில் நிலைத்து இருந்தது.

மலரம்மாவின் வற்புறுத்தலில் ஒரு வித தயக்கத்துடன் அந்த இடத்துக்கு வந்த மஞ்சுளா, மதுவின் தைரியமான பேச்சில் வாய் அடைத்து நின்றாள் என்றால், தன் முன் கண்ணில் அன்பு பொங்க கேட்ட பரிசு பொருளை, தன்னால் தாத்தா கடைசியாக தன் பிறந்த நாளுக்கு கொடுத்த பரிசை, துளியும் யோசனையின்றி கழட்டி மதுவின் கழுத்தில் மாட்டியதும்…

தன் அக்காவை அணைத்துக் கொண்டவளின், அணைப்பில் மகிழ்ந்து மஞ்சுளா அடங்க. அந்த காட்சி ஒரு கொடியில் பூத்த இருமலர்கள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்வது போல் பார்க்க அவ்வளவு ரம்மியமாக இருந்தது.

 

Advertisement