Advertisement

அத்தியாயம்—-34

“அத்தை உங்க  மக சாப்பிட கூப்பிடுறா….நீங்க அப்படியே நிக்கிறிங்க….?என்ன ரிவெஞ்சா…..?” மஞ்சுளா குழந்தையாய் இருக்கும் போது “அம்மா” மழலை குரலில் அழைத்தது.

பின்…இப்போது “அம்மா….” அதிர்ச்சியில் மட்டும் இல்லை. மகிழ்ச்சியிலும் நெஞ்சு அடித்துக் கொள்ளுமா…..? தன் இதயத்தில் ஓசை அவளுக்கே கேட்கும் அளவுக்கு, பட்…பட் என்று அடித்துக் கொண்டது.

மருமகனின் பேச்சில் தான்….” அய்யோ….” என்று பதறி, பயத்துடன் தன் மகள் முகத்தை பார்க்கோ….

அவளோ தன் கணவனை ஒரு முறை  முறைத்தவள்… “ அவர் இருக்கார்,  நீங்க வாங்க.” கைய் பிடித்து அழைத்து சென்று சாப்பிடும் இருக்கையில் அமர்த்தியதும்….

மலரம்மா என்று அழைக்கும் முன், கண்ணில்  வழிந்த நீரை துடைத்துக் கொண்டே…. “ தோ வெச்சிட்டேன் மஞ்சும்மா….” சுட சுட மெது வடையை  எடுத்து வந்து மகேஸ்வரியின் தட்டில் வைத்ததும்,

அங்கு வந்த ருத்ரன்…. “ என்ன இது….? மெது வடையா….?எனக்கு ஏன் வைக்கல…..?” மனைவியின் தட்டில் இருந்த ஒரு வடையை ருசி பார்த்துக் கொண்டே வினவ….

“ மலரம்மா கிட்ட உளுந்த லேட்டா தான்  ஊர வைக்க சொன்னேன். இப்போ தான் சுட்டு எடுத்தாங்க.”

“ விசேஷம்னா ஸ்வீட் தானே செய்வாங்க…?இது என்ன மெதுவடை.” தாய், மகள் சேர்ந்ததோடு  வேறு பெரிய விசேஷம் இருக்க முடியுமா….? அதை நினைத்து ருத்ரன் சொல்ல…

அவள் மனையாட்டியோ…. “ பாட்டி மெது வடை  சுடும் போது எல்லாம், தாத்தா அம்மாக்கு இது ரொம்ப பிடிக்குமுன்னு சொல்வார்.” மகளின் அந்த வார்த்தையில் வடை தொண்டையில் விக்கி கொள்ள…

“களுக்”  என்று இருமியவரின் தலையில் லேசாக தட்டி, தண்ணீர் கொடுத்த மஞ்சுவின் கைய் பிடித்துக் கொண்ட மகேஸ்வரி…

“ மன்னிச்சிக்கோ….இந்த வார்த்தையால நீ பட்ட கஷ்டம் எல்லாம் இல்லேன்னு ஆயிடாது. ஆனாலும், மன்னிச்சிக்க டா….நா….நான்..இப்படி ஆகுமுன்னு எதிர்பாக்கல.

இந்த கல்யாணம் கட்டாயத்துல இல்ல. எனக்கு பிடிச்சி தான். ஆனா உன்ன விடனுமுன்னு  நினைக்கல. என்ன நம்புவியாடா…..?” கண்ணில் ஏக்கத்தை வைத்துக் கொண்டு கேட்ட தாயின் கையை தன் மறுகைய் கொண்டு சேர்த்து பிடித்த மஞ்சு…

“ விட்டுடுமா…அப்போ கஷ்டமா தான் இருந்தது. அத நினச்சா இப்போவும் தான். ஆனா …..” ருத்ரனை பார்த்துக் கொண்டே…

“ உங்க நிலமையும் புரியுது. விடுங்க பழச பேச பேச இரண்டு பேருக்குமே  கஷ்டம் தான்மா….”

அதற்க்கு மேல் பேசாது இருவரும் ஒருவருக்கு ஒருவர்  பார்த்துக் கொண்டே உணவை உண்டு முடித்தனர்.

மெளனமொழி காதலர்களுக்கு மட்டும் இனியானது இல்லை. ஒரு சில உறவு முறைகளில் , பல விஷயங்கள் பேச முடியும். சில விஷயங்கள் பேச முடியாது. அதை சமன் செய்ய இந்த மெளன மொழி தேவையாகிறது.

மாலையில் வீட்டுக்கு வந்த தயாநிதி ஹாலில்  ருத்ரன் தன் அலைபேசியில் நோண்டிக் கொண்டு இருப்பதை பார்த்து…

“ என்னடா ஆபிசுக்கு போகலையா….?” டையய்  தளர்த்திக் கொண்டே மெதுவாக கேட்டவர், அவன் அருகில்  நெருங்கி அமர்ந்து…

“ என்னடா மனைவிய விட்டு வர மனசு வரலையா….?புதுசுல அப்படி தான்டா இருக்கும். போக போக…..” ருத்ர மூர்த்தியின் ருத்ர விழி பார்வையில் தன் பேச்சு தடைப் பட…

“ என்ன ருத்ரா….?” பெண்ணை கொடுத்து விட்டாரே….அதனால் நையமாக தான் வினாவினார்.

“ எங்களுக்கு ஹனிமூனுக்கு டிக்கெட் போடுவதுக்கு முன், உங்களுக்கு போட்டா தான் நான்  நிம்மதியா போக முடியும் போல…..”

“ ஏன்டா…?” என்று வினவி கொண்டே….. “மஞ்சு  மது எங்கே…..? இவனை டீலில் விட்டு எங்கேயாவது வெளியில்   போயிடட கடுப்பில் தான் பேசுகிறானோ….? என்று வினவியரிடம்,

“ உங்க மனைவிய கேக்கல….”

“அவ இங்கே தான் இருப்பாடா…..” சமையல் அறைப்பக்கம் தயாநிதி பார்வை செலுத்த…

அவர் மனைவியோ  நுழைவாயில் வழியே இருமகள் இருப்பக்கமும் நடந்து வர….

மஞ்சுவிடம்…. “ நீ அந்த ஊதா கலர் எடுத்து இருக்கலாம். உனக்கு எடுப்பா இருக்கும்.” என்று சொல்ல..

“போதும்மா இதுவே அதிகம். வர பிறந்த நாளுக்கு வாங்கி தாங்க போட்டுக்குறேன்.”  தன் இருகையில் இருந்த பிக்க்ஷாப்பரை காட்டி தாயிடம் கொஞ்ச…

மறுபக்கம்  இருந்த மது…. “அப்போ அத்தான் ஊதா கலர்  ரிப்பன் உனக்கு யாரு அப்பான்னு பாடுவாரு….”

“சீ போடி….” தங்கையை அடித்தாலும் முகத்தில் வெக்கத்தின் சாயல் அதிகமாகவே தெரிந்தது மஞ்சுவின் முகத்தில்…

மது திரும்பவும்…..“ அய்யோ வெக்கப்படுறாரே…..” சொல்லியது மஞ்சுவை பார்த்து இல்லை,  ருத்ரனை பார்த்து. தயாநிதி என்ன நடந்தது….?ஏது நடந்தது….? என்று கேட்கவில்லை. நல்லது நடந்து விட்டது. தன்னால் முடியாததை தன் மருமகன் நடத்தி முடித்து விட்டான். பக்கத்தில்  அமர்ந்து இருந்தவனை சேர்த்து அணைத்துக் கொண்டார்.

மஞ்சு இந்த காட்சியை ஆனந்தத்தோடு தான் பார்த்தாள். ஆனால் ருத்ரனோ…. “ மாமா உன் மக  என்னை கொல வெறியோடு பார்க்கிறாள்.” அவர் அணைத்து இருப்பதை சுட்டி காட்டி சொல்ல…

“அவ அம்மா போல மாப்பிள்ளை.” இத்தனை வருடத்தில் இல்லாத பார்வையை தன் மனைவி மீது செலுத்தினார் தயாநிதி.

“மாமா நான் சும்மா தான் ஹனிமூன்  பத்தி சொன்னேன்.”

“ஆனா நான் நிஜமா புக் பண்ண போறேன்டா….”

“அப்பா பிள்ளைங்க இல்லாத வீட்டில் தான் கிழவன் துள்ளி விளையாடனும். இங்கே ஒன்னுக்கு இரண்டா இருக்கோம்.  நியாபகத்தில் வெச்சிக்கோங்க….” சொன்னது மது என்று நினைத்தால் அது உங்கள் தவறு.

“அய்யோ பசங்க முன்னாடி…..” மகேஸ்வரி வெக்கப்படுவது, இந்த வயதிலும் பார்க்க அவ்வளவு அழகாய் இருந்தது.

மகளோடு ஒரு விசேஷத்துக்கு போய் வந்து  ஓய்வு எடுத்த அகிலாண்ட நாயகி, அப்போது தான் தன் அறையில் இருந்து  வெளியில் வந்தார்.

அங்கு கண்ட காட்சியில் … “ இது  எப்போதிலிருந்து…..?” என்று நினைத்தாரே ஒழிய, முன் போல் அந்த ஆக்ரோஷம் அவரிடம் இல்லை.

காரணம் மகள் பேசிய பேச்சி…. “ தோ பாரும்மா…உங்களுக்கு மஞ்சு பிடிக்குதோ இல்லையோ….?ஆனா இப்போ அவ என் மருமகள். புருஷன் இழந்துட்டு  இருக்க எனக்கு இப்போ இருக்க ஒரே உறவு என் மகன் தான். எந்த காரணத்தொட்டும் என்னால அவன் மனசு நோக நடக்க முடியாது.”

“ இது என்னடி பேச்சி….?நான் மட்டும் அவன் மனசு நோக எப்போ நடந்து இருக்கேன்…..?” அகிலான்டநாயகி சொல்வது  ஒரு வகையில் சரி தானே….மஞ்சுவை பிடிக்கவில்லை என்றாலும், ருத்ரனுக்காக இப்போது எல்லாம் அவளிடம் வம்பு பேசுவதில்லையே…..

“அவன் மனசுக்கு பிடிச்சவங்க நோக நடந்தாலும், அது அவனுக்கு பிரச்சனை தான்.”

“இப்போ எல்லாம் நான் அவன் பொண்டாட்டிய  எதுவும் பேசுவது இல்லையே…..”

“அவனுக்கு அது மட்டும் தேவை இல்லேம்மா….”

“ வேறு எது தேவையாம்…..?”

“இது தாம்மா பெத்தவளுக்கும், வளத்தவங்களுக்கும் உள்ள வித்தியாசம்.”

“ என்னடி சொல்ற….?”

“பின்ன அவன் பொண்டாட்டிய மத்தவங்க எப்படி நடத்தனுமுன்னு, என்னை கேக்கிறிங்கலே….. அந்த பொண்ணு இது வரை தனியா தான் வளந்து இருக்கா….

பாசத்துக்காக ஏங்கி இருக்கா, ஒருவகையில் இதுக்கு நாமும் காரணம் ஆயிட்டோம்.” ஏதோ பேச வந்த தாயை தடுத்த சங்கரி…

“அம்மா உங்களுக்கு சொல்றதுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். அந்த பெண்ணோட நிலையில் இருந்து யோசிச்சா தான் அவ நிலமை புரியும்மா…..”

“ அந்த பொண்ணு இங்கு வந்த போது இல்லாத யோசனை இப்போ மட்டும் ஏன்டி…..?”

“இப்போ தானே அவ என் மருமகள் ஆனாள். இனி என் மருமகள் கிட்ட நல்லவிதமா நடந்துக்குங்க. இல்லேன்னா மகன் மருமகளோடு அவன் வாங்கி வெச்சி  இருக்க பங்களாவுக்கு போயிடுவோம்.” முதல்ல பேரன் தான் சொன்னான். இப்போ மகளும்லே சொல்றா….

அகிலாண்ட நாயகி மகன், மகளை விட்டு கூட இருந்து விடுவார். பேரன் பேத்தியை விட்டு…அதிலும் பேரனை விட்டு  முடியவே முடியாது.

தாய் தந்தையாக ஆகும் போது  குழந்தையின் மீது பாசம் இருக்கும். அந்த பாசத்தை காட்டவோ…அதை உணரவோ முடியாத அளவுக்கு  கடமை என்று சிலது வந்து தடுக்கும்.

வேலை டென்ஷன் அந்த பாசத்தை நாம் அனுபவிக்க முடியாது. அதிலும் கணவனை இழந்த அகிலாண்ட நாயகி தன் கணவன் விட்டு சென்ற தொழிலை கட்டு காப்பதிலும், அதை பெருக்குவதிலும், தன் முக்கால் வாசி வாழ்க்கை கடந்து விட… மூச்சு விட்டது தன் மகன் தயாநிதி தலை எடுத்து தான்.

மகள் கடமை முடிந்தது மகனுக்கு பார்க்கலாம் என்ற போது மகள் மகனோடு விதவை கோலத்தில் வீட்டுக்கு வர…

மகள் சோகத்தில் கழிக்க….அகிலாண்ட  நாயகி தன் நேரத்தை பேரனோடு கழித்தார். மகனுக்கு திருமணம் செய்யும் போது மஞ்சு வரக்கூடாது என்று சொன்னது கூட,  இருக்கும் தன் பேரனுக்கும், அடுத்து வரும் தன் சந்ததியருக்கு போட்டியாக வந்து விட கூடாது என்று தான்.

இப்போது தான்  மஞ்சுவோடு காட்டும் துவேசம் எங்கு தன் பேரனை தன்னை விட்டு பிரித்து விடுமோ என்று  இதுவரை அமைதி காத்தவர்.

கடைசியாக  மகள் சொன்ன….. “ இனி இந்த வீட்டு வாரிசு அவள் மூலம் தான் அத மனசுல வெச்சி நடந்துக்குங்க.” என்ற வார்த்தை நன்றாகவே வேலை செய்தது. அதன் எதிரொலி தான் குலதெய்வ பூஜை.

ருத்ர மூர்த்தியின் தந்தை வழியாக அவனின் குலதெய்வமாக மதுராந்தகம் அடுத்து உள்ள ஒரு கிராமத்தில் அம்மன் கோயில் முன் மூன்று செங்கல்  வைத்து புகையால் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தோட அதை அவள் கட்டி இருந்த பட்டு சேலையில் துடைக்க முடியாது என்று பக்கம் அமர்ந்து இருந்த ருத்ரன் தன் கை குட்டை கொண்டு துடைத்துக் கொண்டே….

தன் தாயிடம்….. “ அம்மா எலக்ரிக் ஸ்டவ் வெச்சி இந்த பொங்கல் செஞ்சி இருக்கலாம். பாரு பேபிம்மாவுக்கு முகம் எல்லாம் சிவந்து விட்டது.”

மகனின் பேச்சில் அவனை முறைத்து விட்டு சுற்றியும் முற்றியும் பார்க்க….. மாமியாரா ஆனாலே இந்த லுக்கு தன்னாலே வந்துடும்மா….அம்மா ஏன் இப்படி பாக்குறாஅதற்க்கு  காரணம் தெரியாது அவன் தன் அம்மாவை பார்க்க…

மதுவோ….” பெரிய பெரிய ப்ளைட்ட பறக்க விட்டு என்ன புரியோசனம்…..? ப்ளக் பாயின்ட் இல்லாம எலக்ரிக் ஸ்டவ் வேலை செய்யாதுன்னு தெரியல பார்த்திங்கலா அத்த…..” தன் அத்தையின் கையை தட்டிக் கொண்டே  தன் அத்தானை கிண்டல் செய்தவளின் செயலில் வெக்கி போனவனாய்…

“இது மாதிரி சொன்னா நான் ஏதாவது செய்து இருப்பேன்.”

“ என்ன செய்து இருப்பிங்க….?இங்கு இருந்து உங்க ஹனிமூனுக்கு பதிலா அப்படியே வீட்டில் இருந்து போய் இருப்ப…..” இது சொன்னது அகிலாண்ட நாயகி…

பின்….. “அவள  விட்டு கொஞ்சம் தள்ளி இரு. பொங்கல்  பயபக்தியா வைக்கனும். அப்போ தான் நம்ம வம்சம் நல்லா தழைக்கும்.”

மஞ்சுளா பொங்கல்  வைத்ததால் தழைத்ததோ…இல்லை ருத்ரனின் திறமையால் தழைத்தாதோ…

ஐந்து வருடத்துக்கு பின்…..

கிரேஸி…. “ அது பிச்சா….”

“அது பிச்சி இல்ல அக்கா.  அடி பிடிச்சா…..” கதிரின் அமெரிக்க  மனைவிக்கு அவள் பேசும் மழலை தமிழை திருத்தம் செய்துக் கொண்டு இருந்தால் நம் மஞ்சு….

“ ஆ பிடிச்சா பிடிச்சா……”

கதிருக்கு கேஷ்வரகு களி பிடிக்கும் என்று மலரம்மா சொல்லி விட…. “ கடந்த மூன்று ஆண்டாய் தன் மாமியார், மகேஸ்வரி, பின் கடைசியாக இப்போது மஞ்சுவிடம் கத்துக் கொண்டு இருக்கிறாள். ஆனால் அடி பிடிக்காது ஒரு நாள் கூட சரியாக வரக்காணும்.

கதிர் அமெரிக்கா சென்று இரண்டு வருடம் கழித்த நிலையில்  ஒரு நாள் மதியம் போல்… க்ரேஸியோடு கையில் மூன்று வயது பெண் குழந்தையோடு….தன் தாயின் முன் வந்து நின்றவன்.

“அம்மா நான் இவள  தான் கல்யாணம் செய்துக் கொள்ள போகிறேன்.” அனுமதி கேட்கவில்லை. தன் முடிவை சொன்னான்.

மலரம்மாவும்  சிறிது நேரம் மட்டும் தான் யோசனை பின்….. “ மகராசனா செஞ்சிக்கப்பா….” இது எல்லாம் ருத்ரன் வீட்டில்  தான் நடந்தது.

அன்று ஞாயிறு என்பதால் அனைவரும் வீட்டில் தான் இருந்தனர். அதனால் தான் கதிரும் நேரத்தை கணக்கிட்ட அங்கு வந்தான்.

இதை எல்லாம் பார்த்த அகிலாண்ட நாயகி  மலரம்மாவிடம் “ உனக்கு கஷ்டம்மா இல்லையா…..?” கேட்ட்துக்கு,

“ ரொம்ப கஷ்டம்மா தான் இருந்தது பெரியம்மா. இப்போ இல்ல கையில் குழந்தையோட இவன் என்ன நல்ல மதிரி பாக்குறானா….?கெட்ட மாதிரி பாக்குறானா…..? அக்கா புருஷனே என் கிட்ட அப்படி நடந்த பிறகு யாரை பார்த்தலும் சந்தேகப்பட்டேன்.

கொஞ்சம் தெளிஞ்சி நான் கடை கன்னிக்கி போகும் போது, அந்த காய்காரன் கிட்ட அண்ணேன்னு கூப்பிட்டு தான். கொஞ்சம் போடுங்கன்னு சொல்லி  கேட்டு வாங்குனா….

நான் அடுத்த கடை கூட  கடந்து இருக்க மாட்டேன். என்ன புருஷன் இல்லாதவளுக்கு புருஷனா ஆகுலாமுன்னு பாக்குறியான்னு அவன் மனைவி பேசுவது காதில் விழும் போது ரொம்ப கஷ்ட்டமா இருந்தது பெரிம்மா….

அம்மா கஷ்டத்தை பார்த்து வளந்த என் மகன் என் மனசுக்கு ஏத்த மாதிரி செஞ்சுப்புட்டான். என்ன பொண்ணு வெளிநாட்டு பொண்ணா போயிடுச்சி…..

இது கூட ஒரு வகையில் வசதி தான்மா, அவ பேசுறது எனக்கு புரியாது. நான் பேசுறது அவளுக்கு புரியாது. மாமியார் மருமக  சண்டையே வராது பாருங்க.” எளியவர்களின் வாழ்க்கை அனைத்தும் எளிதாய்.

“ அம்மா சித்த அடிச்சி….” தன் மூன்று வயது குழந்தை தர்ஷினி புகார் வாசிக்க.

பின்னாடி துரத்திக் கொண்டு வந்த மதுவை….. “ ஏன்டி இன்னும் சின்ன பிள்ள போல அவள வம்புக்கு இழுத்துட்டு இருக்க…

“ நானா இழுத்தேன்…?நானா இழுத்தேன்….?” அக்கா மகளிடம் இருந்து அக்காவிடம் சண்டைக்கு கிளம்பி விட்டாள்.

டையினிங் டேபுளில் அமர்ந்து இருந்த ருத்ரன் சாப்பிட்டு  முடித்து…. “ மது சீக்கிரம் அந்த பாரின்காரன் போயிடுவான். அப்புறம் அவன் பின்னால என்னால அலைய  முடியாது.”

“ கவலை படாதிங்க மாமா. அவன் பின்னாடி நீங்க போக வேண்டாம்.”

யோசனையுடன் பார்த்த ருத்ரனிடம்….. “ ஏன்னா அவன் என் பின்னாடி…..” அடுத்து பேச்சு பேசாது கண் அடித்தவளை பார்த்து அய்யோ என்று தான் பார்த்திருந்தான் ருத்ரன்.

மது என்ன தான் விளையாட்டு தனமாக இருந்தாலும், தொழில் என்று  வந்து விட்டால் ருத்ரனுக்கு ஈடு கொடுத்து செய்வாள். புத்திசாலியும் கூட… பிரச்சனையில் மாட்டிக் கொள்ள  மாட்டாள் நம்பிக்கை இருந்தாலும்….

“ பார்த்து குட்டிம்மா வெளிநாட்டு பையன்.”

காந்திய சட்டியை  கையில் எடுத்து வந்த க்ரேஸியை பார்த்து…. “ நம்ம வீட்டுக்கும், வெளிநாட்டு ஆட்களுக்கும் ரொம்ப ராசி போல…..வரா  அவங்க கொடுக்கும் தீஞ்சத ருசி பாருங்க அத்தான்.

“அய்யோ நான் இல்ல.” பறந்து விட்டான் ருத்ரன்.

“ ஏங்க ஏங்க…..” அவன் மார்பில் இருந்த முடியை பிய்த்துக் கொண்டு இருந்தவளின் கையை தட்டி விட்ட ருத்ரன்…

“மஞ்சு சும்மா இரு. இது  கவர்மென்ட் கொட்டேஷன் கவனமா பாக்கனும்.”

“ சும்மாவா சொன்னாங்க ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாளுன்னு. என்னோட உங்களுக்கு….” அதுக்கு மேல் பேச முடியாது மூக்கை சிந்தியவளை அதற்க்கு மேல் காக்கா விடாது அவளை அணைத்தவன்.

“ ஏன்டி எனக்கா உன் மேல ஆசை போயிடிச்சி…இப்போ சொல். இப்போ சொல்.” ஒவ்வொரு சொல்லுக்கும் தன் அணைப்பை கூட்டினான்.

அதில் மெய் மறந்த மஞ்சு அவன் நெஞ்சில் சுகமாய். பகல் முழுவதும் அந்த வீட்டின் தலைவியை அனைத்தும் எடுத்துக் கட்டி செய்யும் மஞ்சு, இரவு ஆனாதும் தன் கணவனின்  மார்பில் குழந்தையை சாய வேண்டும்.

அதற்க்கு இடையூறாய் மகள் இல்லாது மகேஸ்வரி…. “ உன்னை வளர்க்கும் பாக்கியம் தான் எனக்கு கிடைக்கல…உன் பெண்னை நான் வளர்ந்துக் கொள்கிறேன்.” பேத்தியை தன் கூட படுக்க வைத்துக் கொள்ளும் தாய் இருக்கும் போது மஞ்சுவுக்கு கணவன் நெஞ்சே மஞ்சம்.    

                       நிறைவு

 

Advertisement