Advertisement

அத்தியாயம்—-33

“ என்னை  பத்தியும் அவங்களுக்கு தெரியும் தானே…அப்போ என்னை  பத்தி என்ன நினைப்பாங்க……?” சம்மந்தம் இல்லாத மஞ்சுவின் இந்த பேச்சில்…

“ என்ன பேபிம்மா சொல்ற…..?எனக்கு சுத்தமா புரியல……?”

“இல்ல அன்னிக்கி ஓவி…..” அந்த பெயரை சொல்லி முடிக்க விடவில்லை.

“ இப்போ எதுக்கு அந்த பேச்சு…..?” இவ்வளவு நேரம் பேசியது இவனா…..?அந்த குரலில் இழைந்த மென்மை என்ன…..?இப்போது காட்டும்  இந்த கடுமை என்ன…..?

“ இல்ல நான் அப்படி செஞ்சதுக்கு என்ன தப்பா தானே …..”

“போதும், இனி  அந்த பேச்சு உன் வாயில் இருந்து வரக்கூடாது. அந்த பேரும் தான்.  உன் நினைவு மொத்தமும் நான் மட்டுமே தான் இருக்கனும்.”

அந்த பெயரை சொல்லி அது கதிரோவியன் தான் என்று மஞ்சுவுக்கு மட்டும் இல்லை. யாருக்கும் தெரிய அவன் விரும்பவில்லை.

தன்னை போலவே எல்லோரும் இதை சரியான கோணத்தில்  யோசிப்பார்களா…..?சொல்வதற்க்கு இல்லை.

யாராவது தவறாய்…ஒரே வீட்டில் தானே இருந்தார்கள். அப்படி இருக்குமோ….?அந்த பேச்சு வரக்கூடாது. இந்த வீட்டை பொறுத்த மட்டும் அவன் கதிராய் மட்டும் தான்  இருக்க வேண்டும்.

“நீங்க அத பத்தி பேசாதிங்கன்னு சொன்னாலும் மத்தவங்க அத பத்தி தப்பா தானே நினைப்பாங்க…..?”

“நான் எடுக்க கூடாதுன்னு  சொன்ன அந்த பேச்சு இந்த வீட்டில் வராது. இது வரை யாராவது சொல்லி இருக்காங்கலா….? இனியும் சொல்ல மாட்டாங்க. புரியுதா….?”

“யாரும் சொல்ல மாட்டாங்க. ஆனா என் மனசு சொல்லி காமிக்குதே, உங்களுக்கு நான் தகுதி இல்லேன்னு சொல்லி காமிக்குதே, இத்தனை  வயசு வரை யாரையும் பார்க்காம, யாரையும் நினைக்காம, அதுவும் வெளிநாட்டுக்கு எல்லாம் போயிட்டு வந்தவரு.

நீ  இந்த வயசுலேயே…..ஹாஸ்ட்டல் விட்டா பள்ளி . பின் வீடு விட்டா காலேஜ். இப்படி இருக்கும் போதே இப்படி போனவ….

உன் கணவர் மாதிரி வெளிநாட்டுக்கு  எல்லாம் போய் இருந்தா…நீ கெட்டே…..”

“பேபிம்மா…..என்ன பேச்சு இது…..?”

“ இல்ல அத்தான். என் மனசு குத்துது .யாரை  வேணா அடக்கலாம். ஆனா நம்ம மனசு …அடக்க முடியாது அத்தான். நான் கெட்டவ தானே…..?”   இதை சொல்லும் போது மஞ்சுவின் முகத்தில் அவ்வளவு வேதனை.

ஓவியன் பிரச்சனை  நினைத்து தான் ஏதோ குழப்பிக் கொள்கிறாள் என்று ருத்ரன் நினைத்து இருந்தான் தான் . ஆனால் இந்த அளவுக்கு அவன் எதிர் பாராதது.

“தோ பாருடா….என்ன பாரு….யாரு சொன்னா நீ  கெட்டவன்னு. நீ நல்ல பொண்ணுடா…அதனால் தான் உன்ன நான் கல்யாணம் செய்துக்கிட்டேன். நீ நல்ல பொண்ணு.” திரும்ப திரும்ப அவன் அந்த வார்த்தையை  சொல்ல.

“ நல்ல பொண்ணா…..? பாக்கம இருந்தவனை நம்பி….”

“அந்த பேச்சு வேண்டாம்டா……” முதல் போல் ருத்ரனின் குரலில் இப்போது  கோபம் இல்லை.

“ இப்போ பிடிச்ச உங்கல. ஏன் முதல்லையே பிடிக்காம போனது. இப்போ மட்டும் பிடிக்குமுன்னு சொல்றிங்கல…அத முதல்லையே சொல்லி இருந்தா நான்  இப்படி தப்பு பண்ணி இருக்க மாட்டேன்லே…..” இந்த பேச்சு ருத்ரனை பலமாக தாக்கியது.

அவள் சொல்வது  ஒருவகையில் சரி தானே…..? தன் மாமாவிடம் மஞ்சுவை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னேன்.

ஆனால் என்ன செய்தேன்…..? என் தொழிலை பெருக்குவதில் காட்டும் கவனத்தை இச்சிறு பெண் மீது காட்டினேனா…..?

ஒரு விருந்தினர் போல் தான் தன் பாட்டி நடத்தி இருக்கிறார்கள் . அதற்க்கு நான் என்ன செய்தேன்.

அவள் மீது எனக்கு இருக்கும்  விருப்பத்தை யாரோவுடன் அவளுக்கு  திருமணம் பேசும் போது தான் உணர்ந்தேன். அதுவும் எந்த நேரத்தில் அவள் வீட்டை விட்டு வெளியேறிய பின்.

எனக்கு வரப்போகும் மனைவி என்று  ஆன பின் அவள் மீது நான் காட்டிய அக்கறை ஏன் முதலிலேயே காட்டவில்லை. காட்டி இருந்தால்…..? அவளுக்கு இந்த வேதனை இருந்து இருக்காதே……? இப்போது குத்தி கிழிப்பது அவன் மனதானது.

“தப்பு தான்.” ருத்ரன் தப்பு என்றதில் மஞ்சு கலங்கி போய் அவனை பார்த்தாள். இவ்வளவு நேரமும் நல்லவ என்று சொன்னவன் இப்போது தப்பு என்றதில் பேதை நிலை…..?

அடுத்து அவன் பேசிய….. “ நீ நல்லவ தான் மஞ்சு. உன்ன சுத்தி இருக்க நாங்க தான் சுயநலபிண்டமாய் இருக்கோம். அதுவும் நான்…..” இவன் என்ன சொல்கிறான் புரியது பார்த்தாள் மஞ்சுளா.

“ உன்ன எனக்கு பிடித்தம்  என்று என் மனது தெரிஞ்ச பின் தானே…உன் மீது அக்கறை காட்டினேன். அப்போ நான் தானே மோசமானவன். நான் தான் உனக்கு தகுதியானவனோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு. அதுவும்….”  தன் கை அவள் கை மீது வைத்து கலர பாரு….?வயசு….?அதுவும்….? நான் தப்பு செஞ்சிட்டேன் மஞ்சு. என் விருப்பத்தை உன் மீது திணித்தது ரொம்ப தப்பு.”

முதலில் அவன் சுயஅலசிளில் ஈடுபடும் போது தன் மீதே கோபம் கொண்டாலும், நடந்தது நடந்து விட்டது. இது போல் மாறி, மாறி மனதை ரணமாக்குவதில் யாருக்கு லாபம். இருவரின் வாழ்வும் தான் பாழாகும். மாத்தி யோசி என்பது போல்…உனக்கு நான் தகுதியானவனா….?மாத்தி பேசியதில்.. அவனின்  இந்த பேச்சு நன்றாகவே வேலை செய்தது.

“ என்ன  அத்தான் இப்படி பேசுறிங்க….?” அவன் கையை கீழே இறக்கியவள்.

“ எனக்கு  கருப்பு தான் பிடிக்கும். நீங்க எவ்வளவு ஹன்சமா  இருக்கிங்க. அன்னிக்கு நாம கடைக்கு போனோமே அங்கு இருக்க பொண்னுங்க எல்லாம் உங்கல தான் உத்து உத்து பார்த்தாங்க தெரியுமா…..? நீங்க அழகா  இருக்க தொட்டு தானே பார்த்தாங்க. அப்புறம் என்ன என்ன சொன்னிங்க…..?” அவன் முதலில் சொன்ன வார்த்தையை யோசித்து விட்டு…

“ என் மீது வந்ததில் இருந்து பாசமா தான் இருந்திங்க. நான் தான் தத்தி மாதிரி புரிஞ்சிக்கல…..” ருத்ரன் மீது தவறு இல்லை என்று  அவனுக்காக இவள் வாதட…

“ என் மீது தப்பு இல்லேன்னா உன் மீதும் தப்பு இல்ல. இனி நான் கெட்டவ அப்படி பேசினா…நான் இப்படி தான் பேசுவேன். புரியுதா…..?”

புரியுது என்பது போல  தலையாட்டியவளின் தலையை தன் மார்பின் மீது பதிய வைத்தவன்,

“ பேபிம்மா பேசி பேசி நேரத்த நோ…நோ…காலத்த ரொம்ப ஓட்டிட்டோம். அதனால…..”

“ அதனால…..” நிஜமா புரியலையா….? அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தவனுக்கு, அவள் முகத்தில் தெரிந்த  குறும்பில்…

“ தூங்கலாமுன்னு சொன்னேன்டா…..”

“ ஓ…நேரம் கடந்து….நோ…நோ காலம் கடந்து தூங்கலையா….? அப்போன்னா தூங்குங்க அத்தான் தூங்குங்க…..” பேசி விட்டு படுக்கையின் ஒரு ஓரத்தில் படுக்க பார்த்தவளை தன் மீது சாய்த்து இருவரும் ஒரே இடத்தை ஆக்ரமித்து பின் ருத்ரன் மஞ்சுவை ஆக்ரமித்தான்.

விடிய விடிய கதை படிக்கவில்லை என்றாலும் நேரம் கடந்து தூங்கியதால் நேரம் சென்று எழுந்ததும் மஞ்சு…

“ இப்போ அம்மா மீது கோபம் இல்ல. ஆனா அம்மா கிட்ட  பேச என்னவோ போல இருக்குங்க…..” ஒரு மகள் தாயிடம் பேச தயங்குவது எங்கும் நடக்காத்து…ஆனால் சூழ்நிலை…..?

“ இதுக்கு எல்லாம் நான் எல்ப் செய்ய முடியாது பேபிம்மா. இதில் வேணா நான் உதவி செய்யலாம்.” படுக்கையை காட்டி சொல்லவும்,

“ சீ போ…உங்களுக்கு எப்போவும் அதே நினைப்பு தானா…..?” இந்த பேச்சு மரியாதை  குறைவால் வருவது இல்லை. தன்னவன் என்ற உரிமையில் வருவது.

“ ஏன்டி இருந்து இருந்து இப்போ தான் பேசுறேன். நீ என்னவோ  நான் இதே வேலையா சுத்திட்டு இருக்க போல பேசுறே….”

“ நீங்க எப்படியோ….ஆனா எனக்கு இப்போ எல்லாம் உங்க கூடவே இருக்கனும் போல இருக்கு அத்தான்.” மஞ்சுவின் இந்த பேச்சில்….

தன் மீது  சாய்த்துக் கொண்டவன்.

“ அதுக்கு என்னடா நாம மட்டும் எங்காவது போகலாம். அதுக்கு உண்டானத செய்ய ஆராம்பிச்சிட்டேன். இடையில்  க்ராண்மா குலபூஜைன்னு சொல்றாங்க அது முடிச்சிட்டு…..” கையை பறப்பது போல காட்டியவன் போகலாம் என்று சொன்னதும்,

“ ஆனா என்னால  உங்களோடு ஒன்ட முடியுமான்னு தெரியலையே அத்தான்.”

“ ஏன் பேபி. இப்போ  தானே உங்களோடவே இருக்கனுமுன்னு சொன்ன….?”

“ இப்போவும் அதே தான் சொல்றேன் அத்தான். ஆனா அம்மா…பாட்டி…..” இப்போது அவள் மனநிலை தெள்ளி தளீவாக ருத்ரனுக்கு புரிந்தது.

“ அத்தை கிட்ட என்ன தயக்கம்…..?  அவங்க உன் அம்மாடா….நீ பேச கூட வேண்டாம். அவங்க முகத்த பார்த்தாலே போதும். க்ராண்மா கொஞ்சம் கஷ்ட்டம் தான்.” இது வரை ஜொலித்த  மஞ்சுவின் முகம் இந்த பேச்சில் கலை இழக்க.

“ கஷ்ட்டம் தான் சொன்னேன். ஆனா முடியாதுன்னு சொன்னேனா…..? உனக்கு புரியும் படியே  சொல்றேன். உனக்கு ரொம்ப பிடிச்ச தூக்கணாங்கூடு.

அதில் இருக்கும் ஆண் குருவி தன் இணைக்கு கூடு கட்டுது. அந்த இணைக்கி பிடிக்கலேன்னா அத பிச்சி போட்டுடாது. அதுக்கு ஏத்தா மாதிரி சில மாற்றங்கள் செய்யும். அது போல தான் குடும்பமும்.

எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டங்கடா….ஒரு குடும்பமுன்னா ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகமா இருப்பாங்க. அத நமக்கு ஏத்த மாதிரி மாத்தி அதுல நாம சந்தோஷமா வாழ்வது தான் நம் திறமையே இருக்கு. எஅ புரியுதா பேபிம்மா…..?”

கணவனின் பேச்சில் நம்பிக்கை வரப்பெற்றவளாய் தலையை பலமாக ஆட்ட…..

“ நீ தலைய ஆட்டி ஆட்டியே…உனக்கு ஏத்த மாதிரி என்ன ஆட்ட வெச்சிட்ட…..”

“இதுல ரொம்ப வருத்தமா இருக்கா….?”

“சேச்சே….என்ன ஒன்னு இந்த மது என்ன பொண்டாட்டி தாசன்னு சொல்லும். சொன்னா சொல்லிட்டு போகட்டும்.”

மஞ்சுவின் நெற்றியில் இதழ் பதித்தவன் அடுத்த கட்டத்துக்கு ரெடியாகது, அவள் மனநிலை புரிந்தவனாய்…

“ இப்போவே அத்தை நீ இன்னும் வரலியேன்னி மேலேயே பார்த்துட்டு இருப்பாங்க.  போகலாம் வாடா….”

“ இப்படியேவா….?” நாம நல்லவனா இருக்கனுமுன்னு நினச்சாலும் விட மாட்டா போலவே…..”

“ குளிச்சிட்டு வாடி….” பெண் உரிமை என்ற நிலையில் யோசியாது.  டி என்ற அந்த வார்த்தை தனக்கு பிடித்தமானவன் அழைக்கும் போது அதில் உண்டாகும்  நெருக்கமே அலாதியானது தான். அதை அனுபவித்தில் உணர்ந்தவளாய்…

“ தோ…..” இனி அவள் மனதில் வெறுமை என்ற உணர்வே எழாது.  இனி இந்த வீட்டில் இருப்பவர்கள் உன் பொறுப்பு அவர்களை நல்லவிதமய் பார்த்துக் கொள்ள வேண்டியது உன் கடமை. புரிய வைத்துருந்தான் அவள் கணவன்.

கனவன் சொன்னது போல தாங்கள் இறாங்கி வரும் போது தாய் தங்களையே ஒரு வித ஆர்வத்துடன் பார்ப்பதை பார்த்து….பேச மனது நினைத்தாலும் ஏதோஒரு தடுமாற்றம்.

அந்த தடுமாற்றம் பாட்டியிடம் இருக்கவில்லை. அதானால் சாதரணமாக அவருக்கு உணவு பரிமாறியது. ருத்ரனின் கொள்ளு பேரன் பேத்தியும் நன்றாக வேலை செய்ய. இனி அனைத்தும் சரியாகி விடும் என்று கணவனை வழி அனுப்பி  வைத்தால் எப்போதும் சாப்பிடும் அன்னையுடன் இன்று சாப்பிடலாம் என்று இருக்க.

நான் போவேனா என்று  அழிச்சாட்டியம் பேசியவனிடம் கண்ணால் “ ப்ளீச்…ப்ளீஸ்….” என்று இறஞ்ச.

இந்த காட்சியை பார்த்து தாயுள்ளம்  மகிழ்ந்தாலும் கூடவே….அனைவரிடம் ஒன்றா முடிந்த என் மகளால் என்னுடம் ஒன்ற முடியவில்லையே….ஆதாங்கம் நெஞ்சு முழுக்க இருக்க.

மலரம்மா….. “ நீங்க சாப்பிடலையாம்மா….?” வேலைக்கு அனைவரும் சென்ற பிறகு  மகேஸ்வரி தான் கடைசியாக மஞ்சுவை அழைத்து அவர் “ நீங்க சாப்பிடுங்க….” என்ற முனு முனுப்பில் மலரம்மாவுடன் சாப்பிடுபவர் இன்று ஒன்றும் சொல்லாது இருக்க… மலரம்மா மகேஸ்வரியை அழைத்தும்,

“ நீங்க சாப்பிடுங்க மலரம்மா.”  வசதியான வாழ்க்கை அன்பான கணவர். ஊரில்   செல்வாக்கான குடும்பம். பார்ப்போர் அவளுக்கு என்ன….? ஆனால்  என் மனது.

எவ்வளவு துன்பது வந்த போதும் மனது இவ்வளவு சோர்ந்து போகவில்லை. இன்று ஏன்….?இது வரை மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்தால் போதும் என்று இருந்தவள்.

இன்று  கூடவே அவளின் அன்பும் தனக்கு வேண்டும். கடவுள் நாம் கேட்டது ஒன்றை கொடுத்தால்,  மற்றொன்றை எதிர் பார்ப்போமே அந்த மனபோக்கில் இருந்தார் மகேஸ்வரி.

“ அம்மா நீங்க சாப்பிடலாமா….?” அழைத்தது மஞ்சுவா….? மனதின் எதிர் பார்ப்பு குரலாய் எதிர் ஒலிக்கிறதோ…..திரும்பி பார்க்க.

தன் முகம் பார்த்து “சாப்பிடலாமா அம்மா….”  கண்ணீல் நீர் வழியே…

“ஆ…ஆ….” அதை தவிற வேறு வார்த்தை வரவில்லை மகேஸ்வரியின் வாயில் இருந்து.

 

Advertisement